Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் இராணுவத்தினால் பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை : சாள்ஸ் நிர்மலநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

22 MAY, 2023 | 05:36 PM
image

மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க இராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த பெளத்த விகாரை அமைக்கும் நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக இராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து எம்.பி. இன்று திங்கட்கிழமை (22) மதியம் அப்பகுதிக்கு விஜயம் செய்தார்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

WhatsApp_Image_2023-05-22_at_2.15.13_PM.

நாட்டின் பல பாகங்களிலும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப்பிரிவினால் அப்பகுதியில் புதிதாக ஒரு பௌத்த விகாரையை அமைக்க இராணுவத்தினால் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை நான்  வன்மையாக கண்டிக்கிறேன். 

WhatsApp_Image_2023-05-22_at_2.15.11_PM_

தொடர்ச்சியாக, மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படாமைக்கு இவ்வாறான செயற்பாடுகளே காரணங்களாக உள்ளன.

மன்னாரில் 5 பௌத்த விகாரைகள் உள்ளன. மடு, முருங்கன், திருக்கேதீஸ்வரம், சௌத்பார், தலைமன்னார் ஆகிய இடங்களில் அவை உள்ளன. ஆனால், இங்கே பௌத்த குடும்பங்கள் ஐம்பது கூட இல்லை.

பௌத்த மக்கள் இல்லாத பிரதேசத்தில் இராணுவம் புதிதாக பௌத்த ஆலயங்களை அமைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. 

இவ்விடயம் குறித்து உடனடியாக நான் புத்த சாசன அமைச்சரது கவனத்துக்கும், மாவட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துகிறேன்.

மக்களிடம் இருந்து எனக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அப்பிரதேசத்தில் இராணுவத்தினால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால்தான் நேரடியாக அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன் என்றார். 

https://www.virakesari.lk/article/155880

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்போம், மன்னார் கிறீத்துவர்கள் என்ன செய்கிறார்கள் என்று  

😉

  • கருத்துக்கள உறவுகள்

50 பௌத்த குடும்பங்கள் உள்ள இடத்தில் 5 விகாரைகள்.
அதுகும் போதாது என்று, இராணுவம் புதிய விகாரையையும் கட்டும் அக்கிரமத்தையும்
சிங்களவனின் கொழுப்பு எடுத்த செயலையும் பார்க்க அருவருப்பாக உள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இவ்விடயம் குறித்து உடனடியாக நான் புத்த சாசன அமைச்சரது கவனத்துக்கும், மாவட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துகிறேன்.

இதை அரசியலாக்கி லாபம் தேட நினைக்கிறார் சாள்ஸ்! இது இராணவத்தினரின் தேவைக்காக கட்டப்பட்டது, இதை விளங்காமல் இனவாத மதவாத கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டாம். எனப்பதில் வரும்! தெரிந்துகொண்டும் வேறிடம் தேடி முறையிடாமல் அவர்களை சுற்றுவதே உங்கள் வேலையாய்ப்போச்சு.

3 hours ago, Kapithan said:

பார்ப்போம், மன்னார் கிறீத்துவர்கள் என்ன செய்கிறார்கள் என்று  

😉

வங்காலையான், றொபின்சன் குருசோ, குருசோ  உங்களுக்கு வேலை வந்திருக்கு, உங்கள் திறமை என்னவென்று காட்டுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

Published By: NANTHINI

22 MAY, 2023 | 05:36 PM
image

மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க இராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த பெளத்த விகாரை அமைக்கும் நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக இராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து எம்.பி. இன்று திங்கட்கிழமை (22) மதியம் அப்பகுதிக்கு விஜயம் செய்தார்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

WhatsApp_Image_2023-05-22_at_2.15.13_PM.

நாட்டின் பல பாகங்களிலும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப்பிரிவினால் அப்பகுதியில் புதிதாக ஒரு பௌத்த விகாரையை அமைக்க இராணுவத்தினால் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை நான்  வன்மையாக கண்டிக்கிறேன். 

WhatsApp_Image_2023-05-22_at_2.15.11_PM_

தொடர்ச்சியாக, மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படாமைக்கு இவ்வாறான செயற்பாடுகளே காரணங்களாக உள்ளன.

மன்னாரில் 5 பௌத்த விகாரைகள் உள்ளன. மடு, முருங்கன், திருக்கேதீஸ்வரம், சௌத்பார், தலைமன்னார் ஆகிய இடங்களில் அவை உள்ளன. ஆனால், இங்கே பௌத்த குடும்பங்கள் ஐம்பது கூட இல்லை.

பௌத்த மக்கள் இல்லாத பிரதேசத்தில் இராணுவம் புதிதாக பௌத்த ஆலயங்களை அமைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. 

இவ்விடயம் குறித்து உடனடியாக நான் புத்த சாசன அமைச்சரது கவனத்துக்கும், மாவட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துகிறேன்.

மக்களிடம் இருந்து எனக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அப்பிரதேசத்தில் இராணுவத்தினால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால்தான் நேரடியாக அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன் என்றார். 

https://www.virakesari.lk/article/155880

இவர் சும்மா பம்மாத்து காட்டுறார். இவருக்கும் , கஞ்சா அடைக்கலத்துக்கும் இது நல்லாகவே தெரியும். எத்தனையோ விகாரைகள் கட்டி விடடார்கள்.

திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு அண்மையிலேயே மாபெரும் விகாரை கட்டி விடடார்கள். நூற்று கணக்கில் விகாரைகள் இருக்கும்போது இப்போதுதான் நித்திரையில் இருந்து எழும்பி இருக்கிறர் போல தெரியுது.

இதை எல்லாம் பெரிதாக கணக்கில் எடுக்க வேண்டாம். ஒருவருக்கு கருவாட்டு வியாபாரம். மற்றவருக்கு கஞ்சா வியாபாரம். இவர்களுக்கு மக்களின் பிரச்சினை, ஊர் பிரச்சினை எல்லாம் எங்கே தெரியப்போகுது.

பாவம் மன்னார் மக்கள். இருந்தாலும் என்ன, மீண்டும் இந்த கும்பலைத்தான் தெரிவு செய்வார்கள் மடையர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Cruso said:

பாவம் மன்னார் மக்கள். இருந்தாலும் என்ன, மீண்டும் இந்த கும்பலைத்தான் தெரிவு செய்வார்கள் மடையர்கள்.

ஓ ,,,,உங்கள் கையையும் மீறிப்போய்விட்டதோ? அவர்களுக்கும் வேறு புகலிடம் இல்லாததால் அதை இவர்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். இல்லையென்றால் சிங்களத்தின் முகவர்களுக்குத்தான் கொண்டாட்டம். தெரியாத தேவதையை விட தெரிந்த பேய் பரவாயில்லை என்று நினைக்கிறார்களோ? எல்லாமே இரத்தம் உறிஞ்சும் காட்டேரிகள் என்பதே யதார்த்தம்! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

வங்காலையான், றொபின்சன் குருசோ, குருசோ  உங்களுக்கு வேலை வந்திருக்கு, உங்கள் திறமை என்னவென்று காட்டுங்கோ!

நிச்சயமாக இங்கே எழுத்துவதட்கு ஒன்றும் இல்லை. மடுவில் பெரிய விகாரை கடடப்பட்டு மறைந்த ஆயர் யோசேப்பு அடிகளாரின் ஆசீவாதத்தோடுதான் திறந்து வைக்கப்பட்ட்து. திருக்கேதீஸ்வரத்தில் பெரிய விகாரை கடடப்பட்டு இந்துக்களின் ஆசீவாதத்தோடுதான் திறக்கப்பட்ட்து.

இதையும் விட நூற்றுக்கணக்கான விகாரைகள் நெடுகிலும் கடடபட்ட்து என்பதை நான் முன்னரே இதில் பதிவு செய்திருக்கிறேன். இப்போது இதை பெரிது படுத்தி குய்யோ , முய்யோ எண்டு சத்தம் போடுவதில் பயனில்லை.

இது எதோ மன்னாரில் மட்டும் நடப்பதில்லை. வட கிழக்கில் நடப்பவை எல்லோருக்கோமே தெரிந்த விடயம். இனி நடக்கப்போவது இதையும் விட மோசமாக இருக்கும். 

என்னில் ஒரு திறமையும் இல்லை. திறமை உள்ளவர்கள் வட கிழக்கில் உங்கள் திறமையை செயலில் காடடலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விகாரைகள், வழிபாட்டுத்தேவைகளுக்காய் கட்டப்படுவதில்லை. இது அவர்களின் பலத்தை, தான்தோன்றித்தனத்தை வெளிப்படுத்தும் வெற்றியின் சின்னங்கள். பயங்கரவாதத்தை முறியடித்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்து, தங்கள் பயங்கரவாதத்தை அரங்கேற்றுகிறார்கள். தமிழரின் பலம் அழிக்கப்பட்டதேயொழிய போராட்டம் இன்னும் தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

நிச்சயமாக இங்கே எழுத்துவதட்கு ஒன்றும் இல்லை. மடுவில் பெரிய விகாரை கடடப்பட்டு மறைந்த ஆயர் யோசேப்பு அடிகளாரின் ஆசீவாதத்தோடுதான் திறந்து வைக்கப்பட்ட்து. திருக்கேதீஸ்வரத்தில் பெரிய விகாரை கடடப்பட்டு இந்துக்களின் ஆசீவாதத்தோடுதான் திறக்கப்பட்ட்து.

இதையும் விட நூற்றுக்கணக்கான விகாரைகள் நெடுகிலும் கடடபட்ட்து என்பதை நான் முன்னரே இதில் பதிவு செய்திருக்கிறேன். இப்போது இதை பெரிது படுத்தி குய்யோ , முய்யோ எண்டு சத்தம் போடுவதில் பயனில்லை.

இது எதோ மன்னாரில் மட்டும் நடப்பதில்லை. வட கிழக்கில் நடப்பவை எல்லோருக்கோமே தெரிந்த விடயம். இனி நடக்கப்போவது இதையும் விட மோசமாக இருக்கும். 

என்னில் ஒரு திறமையும் இல்லை. திறமை உள்ளவர்கள் வட கிழக்கில் உங்கள் திறமையை செயலில் காடடலாம். 

மன்னார்வாசிகள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டலாமே? 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

மன்னார்வாசிகள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டலாமே? 

வேண்டுமென்றால் இங்கே காடடலாம். அங்கெ காட்டி ஒன்றுமே செய்ய முடியாதென்று எல்லோருக்கும் தெரியும். பத்தோடு பதினொன்றாவதாக இருந்துவிட்டு போக்கட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் குரூஸோ கர்தினாலுக்கு ஒரு மகஜர் அனுப்பினாலென்ன?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

ஏன் குரூஸோ கர்தினாலுக்கு ஒரு மகஜர் அனுப்பினாலென்ன?

எந்த கர்தினால்? வடக்கு கிழக்கு மக்கள் அவரை கர்தினாலாக ஏற்கவில்லை என்பது உங்களுக்குத்தெரியாதா? இலங்கை பவுத்த சிங்கள தேசம் எண்டு கூறும் கார்த்திநாலுக்கு எழுதுவதில் எதாவது பிரயோசனம் இருக்கா? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

எந்த கர்தினால்? வடக்கு கிழக்கு மக்கள் அவரை கர்தினாலாக ஏற்கவில்லை

ஆனால் அவர் அப்படி ஏற்கவில்லை, வத்திக்கானும் அதை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை. தானே, இலங்கை முழுவதிலுமுள்ள கத்தோலிக்கருக்கு கர்தினால் என்று கருத்து வெளியிடுகிறார்.  வட கிழக்கு வாழ் கத்தோலிக்க மக்கள் எதிர்க்காவிட்டாலும் ஏற்க மறுக்கிறார்கள். அவர் தான் ஏற்ற பணியை சரிவர செய்யவில்லை. பதவிக்கு ஒரு மதம், உரிமைக்கு வேறு ஒரு மதம். எங்காவது ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட, உரிமையிழந்த மக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறாரா இவர்? ஈஸ்ரர் குண்டுவெடிப்பில் எதிர்ப்பு வெளியிட்டதற்கான காரணம்; புலிகள் தலையில் கட்ட முடியவில்லை, முழுக்க பாதுகாப்பான பிரதேசத்தில் நடந்தது, சர்வதேசமே கண்டித்திருந்தது, அதன்பிறகும் மவுனமாய் இருக்கவோ நிஞாயப்படுத்தவோ அவரால் முடியவில்லை. கஷ்ரப்பட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். கோத்தாவை அரசியல் மேடையில் ஏற்றியதில் இவருக்கும் பெரும்பங்கு உண்டு. அவர் ஜனாதிபதியானதும் இவர் வெளியிட்ட கருத்துகள் வரவேற்புகள் யாரும் அறிந்ததே. மறைந்த இராயப்பு ஜோசவ் அவர்களின் இறுதி நிகழ்வில் இவர் ஓர் அந்நியர் போலல்லவா நடந்து கொண்டார். அவ்வளவும் வெறுப்பு. தன் மந்தைகளுக்காக உயிரை கொடுப்பவனே நல்ல ஆயன். உயிரை கொடுக்க வேண்டாம், துடித்தாரா இவர்? சந்தித்தாரா அவர்களை? ஆறுதல் சொன்னாரா? அவர்களோடு இருந்தாரா? நான், வடகிழக்கில் நடந்த அழிவை சொல்கிறேன்!

10 hours ago, Cruso said:

இலங்கை பவுத்த சிங்கள தேசம் எண்டு கூறும் கார்த்திநாலுக்கு எழுதுவதில் எதாவது பிரயோசனம் இருக்கா?

சிலருக்கு இப்போதாவது புரிந்திருக்கிறதே என்பதில் எனக்கு மகிழ்ச்சியே!         

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஆனால் அவர் அப்படி ஏற்கவில்லை, வத்திக்கானும் அதை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை. தானே, இலங்கை முழுவதிலுமுள்ள கத்தோலிக்கருக்கு கர்தினால் என்று கருத்து வெளியிடுகிறார்.  வட கிழக்கு வாழ் கத்தோலிக்க மக்கள் எதிர்க்காவிட்டாலும் ஏற்க மறுக்கிறார்கள். அவர் தான் ஏற்ற பணியை சரிவர செய்யவில்லை. பதவிக்கு ஒரு மதம், உரிமைக்கு வேறு ஒரு மதம். எங்காவது ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட, உரிமையிழந்த மக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறாரா இவர்? ஈஸ்ரர் குண்டுவெடிப்பில் எதிர்ப்பு வெளியிட்டதற்கான காரணம்; புலிகள் தலையில் கட்ட முடியவில்லை, முழுக்க பாதுகாப்பான பிரதேசத்தில் நடந்தது, சர்வதேசமே கண்டித்திருந்தது, அதன்பிறகும் மவுனமாய் இருக்கவோ நிஞாயப்படுத்தவோ அவரால் முடியவில்லை. கஷ்ரப்பட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். கோத்தாவை அரசியல் மேடையில் ஏற்றியதில் இவருக்கும் பெரும்பங்கு உண்டு. அவர் ஜனாதிபதியானதும் இவர் வெளியிட்ட கருத்துகள் வரவேற்புகள் யாரும் அறிந்ததே. மறைந்த இராயப்பு ஜோசவ் அவர்களின் இறுதி நிகழ்வில் இவர் ஓர் அந்நியர் போலல்லவா நடந்து கொண்டார். அவ்வளவும் வெறுப்பு. தன் மந்தைகளுக்காக உயிரை கொடுப்பவனே நல்ல ஆயன். உயிரை கொடுக்க வேண்டாம், துடித்தாரா இவர்? சந்தித்தாரா அவர்களை? ஆறுதல் சொன்னாரா? அவர்களோடு இருந்தாரா? நான், வடகிழக்கில் நடந்த அழிவை சொல்கிறேன்!

சிலருக்கு இப்போதாவது புரிந்திருக்கிறதே என்பதில் எனக்கு மகிழ்ச்சியே!         

போப்பாண்டவர் இலங்கைக்கு வந்தபோது மடுவில் வைத்து வட கிழக்கு ஆயர்களினால் இது விரிவாக எடுத்துரைக்கப்பட்ட்து. இப்போதும்கூட வட கிழக்கு ஆயர் மன்றம் தனியாகத்தான் இயங்குகிறது. இந்த பிரச்சினை நீறு பூத்த நெருப்பாக இருந்தாலும் வெளியில் பெரிதாக தெரிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Cruso said:

இந்த பிரச்சினை நீறு பூத்த நெருப்பாக இருந்தாலும் வெளியில் பெரிதாக தெரிவதில்லை.

    அதுதான் கத்தோலிக்கம் என்பது!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

    அதுதான் கத்தோலிக்கம் என்பது!

இங்குள்ள உள் குத்துவெட்டுகளை எழுதினால் நாற்றமெடுக்கும். எனவே அவைகளை நான் இங்கு பதிவிட விரும்பவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

 நாங்கள் திருந்தினால் சிங்களத்துக்கு வேறு வழியிருக்காது. அவர்களின் வெற்றி மூலதனமே சுயநலமிக்க, திறமையற்ற, காட்டிக்கொடுக்கும் தமிழரே! அது எதுவும் செய்யத்தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2023 at 10:49, Cruso said:

போப்பாண்டவர் இலங்கைக்கு வந்தபோது மடுவில் வைத்து வட கிழக்கு ஆயர்களினால் இது விரிவாக எடுத்துரைக்கப்பட்ட்து.

நான் படிக்கிற காலத்தில் சிங்கள அரசின்,  இராணுவத்தின்அடாவடிகளை எதிர்த்து நடக்கும் சாத்வீக போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் கலந்து கொள்வதுண்டு. அப்படியான தருணங்களில் அனுராதபுர இன்னும் தெற்கைச் சேர்ந்த பிஷப்மாரை அழைத்து இங்குள்ள பாதிரிமார் தங்கள் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்து, சிங்கள அரசுக்கு தெரிவிக்கும்படி கோரிக்கை விட்டார்கள். அப்போ, அவர்கள் கூறியது; நாங்கள் சொல்வதை அவர்கள் செவிமடுக்க மாட்டார்கள், அவர்கள் செவிமடுப்பதெல்லாம் பிக்குகளுக்கே என்று கூறி கை விரித்தார்கள். ஆனால் மல்கம் ஒருதடவை, பெரிய அண்ணா சொல்வதை மற்றவர்கள் கேட்டு நடக்கவேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தார்.   

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

அவரது இனத்தின் பால் கொண்ட இனவாதமானது மிகவும் ஆழமானது. இலங்கை சிங்கள பவுத்த நாடு என்பதில் மிகவும் தீவிர பற்று கொண்டவர். அவரது மதத்தை , அல்லது அந்த மதத்தின் , அன்பின் போதனையைவிட சிங்கள பற்று அதி தீவிரமானது. இதனால்தான் தமிழ் கத்தோலிக்கர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை அவரும் அந்தப்பக்கம் போவதில்லை.

எனது நண்பர் ஒருவர் கொழும்பு பல்கலையில் கத்தோலிக்க மாணவர் அமைப்பின் தலைவராக இருக்கும்போது அவரை சந்திக்க எத்தனையோ தடவை கேட்டும் அனுமதி வழங்கவில்லை என்று கூறினார். இவைபற்றி எல்லாம் அவர் கேள்வி எழுப்புவதட்காகவே இருந்தார். இவர் மத தலைவர் இல்லை, சிங்கள இன தலைவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.