Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய நாடாளுமன்ற கட்டடம்: பிரதமர் கையில் செங்கோலை ஒப்படைத்த திருவாவடுதுறை ஆதீனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரதமர் நரேந்திர மோதியிடம் செங்கோலை வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

பிரதமர் நரேந்திர மோதியிடம் செங்கோலை வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்

27 மே 2023

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைக்கிறார். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தயாரிக்கப்பட்ட செங்கோல் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்காக, அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த செங்கோலை பிரதமரிடம் வழங்க திருவாவடுதுறை ஆதீனம் தலைமையிலான குழு டெல்லி சென்றது.

செங்கோல், பிரதமர் நரேந்திர மோதி, திருவாவடுதுறை ஆதீனம்

பட மூலாதாரம்,ANI

இந்நிலையில், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தலைமையிலான குழு இன்று மாலை பிரதமர் நரேந்திர மோதியிடம் செங்கோலை வழங்கியது.

இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

செங்கோல், பிரதமர் நரேந்திர மோதி, திருவாவடுதுறை ஆதீனம்

பட மூலாதாரம்,ANI

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் இங்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். சிவபெருமானின் ஆசீர்வாதத்தால், சிவ பக்தர்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது,” என்று ஆதீனம் மற்றும் குழுவினரிடம் தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டடம்

செண்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த மொத்த திட்டத்திற்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

ராஜ்பத்திற்கு அருகேயுள்ள பகுதி சென்ட்ரல் விஸ்டா என அழைக்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டடம்

பட மூலாதாரம்,ANI

குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், நார்த் பிளாக், சவுத் பிளாக், துணை ஜனாதிபதி இல்லம் ஆகியவையும் சென்ட்ரல் விஸ்டாவின் கீழ் வருகின்றன.

புதிய நாடாளுமன்றம்

பட மூலாதாரம்,ANI

புதிய நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை கட்டடம் தேசிய பறவையான மயில் என்ற கருப்பொருளிலும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை என்ற கருப்பொருளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழைய மக்களவையில் அதிகபட்சமாக 552 பேர் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில், புதிய அவையில் 888 இருக்கைகள் உள்ளன.

புதிய நாடாளுமன்றம்

பட மூலாதாரம்,ANI

பழைய மாநிலங்களவை கட்டடத்தில் 250 உறுப்பினர்கள் மட்டுமே அமர முடியும் நிலையில், புதிய அவையில் 384 பேர் அமர முடியும்.

நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வின்போது 1272 பேர் அமரும் வகையில் புதிய கட்டடம் உள்ளது.

புதிய நாடாளுமன்றம்

பட மூலாதாரம்,ANI

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வேறு சிறப்புகள்

'காகிதமில்லா அலுவலகங்கள்' என்ற இலக்கை நோக்கி நகரும் வகையில், நவீன டிஜிட்டல் வசதிகளுடன் புதிய கட்டடத்தில் அனைத்து எம்.பி.க்களுக்கும் தனி அலுவலகம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய கட்டடத்தில் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை சித்தரிக்கும் வகையில் பிரமாண்ட அரசியலமைப்பு மண்டபம் இருக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் அங்கு வைக்கப்படும்.

புதிய நாடாளுமன்ற கட்டடம்

பட மூலாதாரம்,ANI

எம்.பி.க்கள் அமர பெரிய அறை, நூலகம், சாப்பாட்டு அறைகள் மற்றும் அதிகப்படியான பார்க்கிங் வசதிகள் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும்.

இந்த முழு திட்டத்தின் கட்டுமானப் பகுதி 64,500 சதுர மீட்டர். புதிய நாடாளுமன்றத்தின் பரப்பளவு தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்தை விட 17,000 சதுர மீட்டர் அதிகம்.

புதிய நாடாளுமன்ற கட்டடம்

பட மூலாதாரம்,ANI

புதிய நாடாளுமன்றம் கட்டடம்

பட மூலாதாரம்,ANI

புதிய நாடாளுமன்ற கட்டடம்

பட மூலாதாரம்,ANI

இதற்கு முன் குஜராத்தின் காந்திநகரில் உள்ள மாநில செயலகம், அகமதாபாத் சபர்மதி நதி முகப்பு மேம்பாடு, மும்பை துறைமுக வளாகம், வாரணாசியில் மந்திர் வளாக மறுவடிவமைப்பு, ஐஐஎம் அகமதாபாத்தின் புதிய வளாக மேம்பாடு போன்ற திட்டங்களில் ஹெச்.சி.பி. டிசைன்ஸ் பணியாற்றியுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை யார் கட்டியது?

புதிய நாடாளுமன்ற கட்டடம்

பட மூலாதாரம்,ANI

புதிய கட்டடத்தை கட்டும் ஒப்பந்தத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் பெற்றது. 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ. 861.90 கோடிக்கு இந்த ஒப்பந்தத்தை அவர்கள் ஏலம் எடுத்திருந்தனர்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் வரைபடத்தை குஜராத்தை சேர்ந்த கட்டடக்கலை நிறுவனமான ஹெச்.சி.பி. டிசைன்ஸ் உருவாக்கியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு - மக்களவையில் தமிழ்நாடு செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா
28 மே 2023, 02:22 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. சர்வ மத பிரார்த்தனைகளுக்குப் பின்னர் அதற்கான கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். பின்னர், தமிழ் மறைகள் ஓத மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே தமிழ்நாட்டு செங்கோலை பிரதமர் மோடி நிறுவியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காலை 7.30 மணிக்கு பூஜையுடன் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன் நாராயண்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் உள்ளிட்ட சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

அதனைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உடனிருக்க, புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

பின்னர், தமிழ் மறைகள் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. செங்கோலை கையில் ஏந்தியபடி ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.

பின்னர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

செங்கோலை நிறுவிய பின்னர் பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமையில் 20 ஆதீனங்கள் பங்கேற்றனர்.

19 எதிர்க்கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோதிக்குப் பதிலாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ திறந்துவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதால் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை கூட்டாக புறக்கணித்துள்ளன. கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் டெல்லியில் வேகமாக மாறும் அரசியல் காட்சிகளின் நீட்சி, புதிய நாடாளுமன்ற திறப்பு விழா விவகாரத்திலும் பிரதிபலிக்கிறது.

பாரதிய ஜனதாவுக்கு எதிரான தேசிய அரசியலில் காங்கிரசுடன் சேராமல் விலகியே நின்ற ஆம் ஆத்மியும், திரிணாமுல் காங்கிரசும் இம்முறை சத்தமின்றி ஒரே அணியில் இணைந்துள்ளன. திமுக, வி.சி.க., மதிமுக, சிவசேனா, சமாஜ்வாதி, மத சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் என 19 கட்சிகள் நாடாளுமன்ற புதிய கட்ட திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன.

புதிய நாடாளுமன்ற கட்டடம்

செண்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த மொத்த திட்டத்திற்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

ராஜ்பத்திற்கு அருகேயுள்ள பகுதி சென்ட்ரல் விஸ்டா என அழைக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், நார்த் பிளாக், சவுத் பிளாக், துணை ஜனாதிபதி இல்லம் ஆகியவையும் சென்ட்ரல் விஸ்டாவின் கீழ் வருகின்றன.

புதிய நாடாளுமன்றம்

புதிய நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை கட்டடம் தேசிய பறவையான மயில் என்ற கருப்பொருளிலும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை என்ற கருப்பொருளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழைய மக்களவையில் அதிகபட்சமாக 552 பேர் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில், புதிய அவையில் 888 இருக்கைகள் உள்ளன.

பழைய மாநிலங்களவை கட்டடத்தில் 250 உறுப்பினர்கள் மட்டுமே அமர முடியும் நிலையில், புதிய அவையில் 384 பேர் அமர முடியும்.

நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வின்போது 1272 பேர் அமரும் வகையில் புதிய கட்டடம் உள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா

பட மூலாதாரம்,CENTRALVISTA.GOV.IN

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வேறு சிறப்புகள்

'காகிதமில்லா அலுவலகங்கள்' என்ற இலக்கை நோக்கி நகரும் வகையில், நவீன டிஜிட்டல் வசதிகளுடன் புதிய கட்டடத்தில் அனைத்து எம்.பி.க்களுக்கும் தனி அலுவலகம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய கட்டடத்தில் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை சித்தரிக்கும் வகையில் பிரமாண்ட அரசியலமைப்பு மண்டபம் இருக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் அங்கு வைக்கப்படும்.

எம்.பி.க்கள் அமர பெரிய அறை, நூலகம், சாப்பாட்டு அறைகள் மற்றும் அதிகப்படியான பார்க்கிங் வசதிகள் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும்.

இந்த முழு திட்டத்தின் கட்டுமானப் பகுதி 64,500 சதுர மீட்டர். புதிய நாடாளுமன்றத்தின் பரப்பளவு தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்தை விட 17,000 சதுர மீட்டர் அதிகம்.

உட்கட்டமைப்பு

புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறப்பு - யாக சாலையுடன் திறப்பு விழா தொடங்கியது

சுதந்திரத்திற்கு முன் பாராளுமன்ற கட்டடம் கட்டப்பட்டபோது, பாதாள சாக்கடை, குளிரூட்டும் வசதி, தீ பாதுகாப்பு, சிசிடிவி, ஆடியோ வீடியோ ஆகியவை கவனத்தில் எடுக்கப்படவில்லை என அரசு கூறுகிறது.

தற்போது மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நாடாளுமன்ற வளாகத்தில் அவை சேர்க்கப்பட்டாலும், கட்டடத்தில் ஈரப்பதம் போன்ற பிரச்னைகளால் தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு - சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்ட போது, நில அதிர்வு மண்டலம்-2இல் டெல்லி இருந்தது. ஆனால் தற்போது நான்காம் நிலையை டெல்லி எட்டியுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டியது யார்?

புதிய கட்டடத்தை கட்டும் ஒப்பந்தத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் பெற்றது. 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ. 861.90 கோடிக்கு இந்த ஒப்பந்தத்தை அவர்கள் ஏலம் எடுத்திருந்தனர்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் வரைபடத்தை குஜராத்தை சேர்ந்த கட்டடக்கலை நிறுவனமான ஹெச்.சி.பி. டிசைன்ஸ் உருவாக்கியது.

இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் சிபிடபிள்யூடி மூலம் டெண்டர் கோரப்பட்டது. இதற்கான செலவினம் ரூ.229.75 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், ஹெச்.சி.பி. டிசைன்ஸ் இந்த ஏலத்தை வென்றது.

இதற்கு முன் குஜராத்தின் காந்திநகரில் உள்ள மாநில செயலகம், அகமதாபாத் சபர்மதி நதி முகப்பு மேம்பாடு, மும்பை துறைமுக வளாகம், வாரணாசியில் மந்திர் வளாக மறுவடிவமைப்பு, ஐஐஎம் அகமதாபாத்தின் புதிய வளாக மேம்பாடு போன்ற திட்டங்களில் ஹெச்.சி.பி. டிசைன்ஸ் பணியாற்றியுள்ளது.

பழைய நாடாளுமன்றம் என்னவாகும்?

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா

பழைய நாடாளுமன்றக் கட்டடம் பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் 'கவுன்சில் ஹவுஸ்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டது. இதை உருவாக்க ஆறு ஆண்டுகள் (1921-1927) ஆனது. அக்காலத்தில் ஆங்கிலேய அரசின் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் இந்தக் கட்டடத்தில் செயல்பட்டுவந்தது.

பழைய நாடாளுமன்றக் கட்டடம் 83 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட நிலையில், புதிய கட்டிடம் சுமார் 862 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது கவுன்சில் ஹவுஸ் நாடாளுமன்ற கட்டடமாக மாற்றப்பட்டது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, பழைய நாடாளுமன்றக் கட்டிடம் நாடாளுமன்ற நிகழ்வுகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படும்.

https://www.bbc.com/tamil/articles/cx8p82jnvn3o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீரங்கனைகள் இன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவிருந்த நிலையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வீராங்கனை சாக்ஷி மாலிக், காவல்துறையினர் தங்களை அப்புறப்படுத்தியது மட்டுமல்லாமல் தங்களின் கூடாரங்களை அழித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

Image

மரியாதை வரிசை, உயரம் என அனைத்திலும் வேதயாகம் நடந்ததற்கு 
ஒரு படி கீழே தான் செங்கோலும் ஆதீனமும்! இது எல்லாருக்கும் தெரியும்! 

ஆனால் அந்த இடத்திற்கே வரமுடியாத முர்முகளின் நிலையை நினைத்து, 
இவர்கள் எல்லாம் ஆர்கஸம் அடைந்து கொள்வார்கள்!

Droupadi Murmu official portrait, 2022.jpg
இந்திய ஜனதிபதி திரௌபதி முர்மு... கணவனை இழந்தவர், விதவை என்பதால்...
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க கூப்பிடவும் இல்லை,
அந்த நிகழ்வில்  கலந்து கொள்ள  அழைப்பிதழ் கூட கொடுக்க வில்லையாம்.
இவ்வளவிற்கும் அவர்  நாட்டின் முதல் குடிமகள்.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Image

Image

Image

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா  🤣

  • கருத்துக்கள உறவுகள்

Image

Image

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோடி  சார்! ஏன் இப்ப தமிழுக்கும் சைவர்களுக்கும் முக்கியத்துவம் குடுக்கிறார்? தமிழ்நாட்டில் தாமரை மலரச்செய்யவா?

தமிழ்நாட்டில் திராவிடம் இல்லாமல் போனால் சிலவேளை ஈழத்தமிழருக்கு விமோசனங்கள் கிடைக்கலாம் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch?v=636382821355042 👈

மக்களவையில் நிறுவப்பட்டது தமிழ்நாட்டின் செங்கோல்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்த பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோதி பேசியது இதுதான்...

PM Modi Speech: “MP-க்களின் எண்ணிக்கை உயரும். New Parliament India-வின் எழுச்சிக்கான அடையாளம்”

சர்வ மத பிரார்த்தனைகளுக்குப் பின்னர் புதிய நாடாளுமன்ற கட்டட கல்வெட்டை பிரதமர் மோதி திறந்து வைத்தார். பின்னர், தமிழ் மறைகள் ஓத மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே தமிழ்நாட்டு செங்கோலை பிரதமர் மோதி நிறுவினார்.

New Parliament: சாஷ்டாங்கமாக விழுந்து செங்கோலை வணங்கிய PM Modi; இன்னும் என்னவெல்லாம் நடந்தன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.