Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்நூலக எரிப்பின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

31 MAY, 2023 | 12:39 PM
image
 

யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட 42 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

IMG_20230531_102436.jpg

வவுனியாவில் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள பந்தலில் குறித்த நிகழ்வு புதன்கிழமை (31) இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள் யாழ் பொதுநூல் நிலைய எரிப்பானது தமிழ் இன அழிப்பின் ஒரு வடிவம் என குறிப்பிட்டனர்.

https://www.virakesari.lk/article/156581

  • கருத்துக்கள உறவுகள்

 நம்ம யாழ்ப்பாணம் - 1981 மே 31 - யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நள்ளிரவில்  இலங்கைக் காவல்துறையினரின் வன்முறைகள் ஆரம்பமாயின. :'( 1981 ஜூன் 1 - யாழ் ... யாழ் நூலக எரிப்பு : அரங்கேற்றப்பட்ட இனவாதம் – 39 வருடம் நிறைவு – குறியீடு யாழ் நூலக எரிப்பு ஒரு கலாச்சார தாக்குதல் - சோமிதர‌ன்! - | Webdunia Tamil 

 

Das Portal der Königin - Berlin - Kaiser-Wilhelm-Gedächtnis-Kirche   Kaiser Wilhelm Gedächtniskirche in Berlin  

 

ATOMWAFFEN: Bomben auf Hiroshima und Nagasaki - Alles Geschichte - History  von radioWissen | BR Podcast  Metropolen der Erinnerung - news.ORF.at

சிங்கள அரசால் எரிக்கப் பட்ட... யாழ். நூலகத்தை, அதே அடையாளத்துடன் நாம் திருத்தாமல், 
வருங்கால சந்ததி அதனை பார்த்து எமக்கு நடந்தவற்றை தெரிந்து கொள்ள  
வைத்திருந்திருக்க வேண்டும். 
அது எம் மீது நடந்த, அடக்கு முறையின் சின்னமாக.. காலா காலத்துக்கும்  இருந்திருக்கும்.
அதனை திருத்தி... எரிந்த  அந்த அடையாளங்களையே அழித்ததன் மூலம் 
பெரும் தவறை செய்து விட்டோம்.  

ஜேர்மனியில் (பேர்லின்) தேவாலயம் மீது நடந்த குண்டுத் தாக்குதல் நடத்திய இடத்தை சுற்றி 
நவீன கட்டிடங்கள் வந்த போதும். அந்த உடைந்த தேவாலயத்தை திருத்தாமல்,  
அப்படியே எதிர்கால சந்ததியின்  பார்வைக்கு விட்டுள்ளார்கள்.
 
அதே போல் ஜப்பானில்... ஹிரோஷிமா, நாகசாக்கி யில் போடப் பட்ட அணுகுண்டின் நினைவாக 
இன்றும் அங்கு  சில கட்டிடங்கள் நினைவுச் சின்னங்களாக உள்ளன.

இப்படி... உலகின் பல நாடுகளும், தமது இனம் சந்தித்த கொடுமைகளின் அடையாளமாக 
சில அழிவு   சின்னங்களை.. நினைவிற்கும், பார்வைக்கும்  விட்டு வைத்திருக்கின்றன.  

நாம் தான்... எதிரி, புது கட்டிடம் கட்டித் தருகிறேன் என்றவுடன்...
அதன் பின் உள்ள சூழ்ச்சிகளை அறியும், புத்தி இல்லாமல் 
தலை ஆட்டும் குணம் கொண்டவர்களாச்சே.    

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

 

 

யாழ் பொது நூலகத்தின் வாயிலில் இருக்கும் சரஸ்வதி சிலை பேசுகிறேன்!

பதிவேற்றுனர்: திரு வேந்தனார்

திகதி: 31 May, 2023
வணக்கம் உறவுகளே,
Bild
 

யாழ் பொது நூலகத்தின் வாயிலில் இருக்கும் சரஸ்வதி சிலை பேசுகிறேன்!
பதிவேற்றுனர்: திரு வேந்தனார்
திகதி: 31 Mஅய், 2023

ப்ரெஅகிங்
வணக்கம் உறவுகளே,

நான் தான்  வட தமிழீழம் ,யாழ்ப்பாண பொது நூலகத்தின் வாயிலில் இருக்கும் சரஸ்வதி சிலை பேசுகிறேன்.

என்னை கட்டாயம் உங்களிற்கு ஞாபகம் இருக்கும், ஏனென்றால் யாழ்ப்பாணம் வாற சிங்கள சுற்றுலா பயணிகள் தொட்டு வெளிநாட்டிலிருந்து வாற எங்கட சனம் வரை, எனக்கு முன்னால் நின்றுதான் செல்ஃபியும் படமும் எடுத்து பேஸ்புக்கில் போடுறவை.

நான் இந்த இடத்தில் உட்கார்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது, உண்மையாக சொல்லப் போனால் இன்றோடு 58 ஆண்டுகளாகிறது. 1933ல் K.M. செல்லப்பா என்பவரின் முயற்சியால், முதலில் அவரது இல்லத்திலும் பின்னர் யாழ் ஆஸ்பத்திரி வீதியிலும் யாழ்ப்பாண பொது நூலகம் இயங்கத் தொடங்கியதாம். செல்லப்பா அந்தக் காலத்தில் வெளியான “இந்து சாதனம்” பத்திரிகையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டு பொது நூலகம் நடாத்த நிதியும் புத்தகங்களும் சேர்த்ததாக கதைப்பார்கள்.

1981 ஜூன் முதலாம் திகதியை நாங்கள் மறக்கவே ஏலாது, நீங்கள் மறந்தாலும் என்னால் மறக்க முடியாது. அன்றைக்கு அந்த அறுவான்கள் செய்த அநியாயம் எங்கள் இனத்தின் அறிவுக் கருவூலத்தையே நாசமாக்கிய நாள். எங்கள் வரலாற்றில் இடம்பிடித்த ஒரு சோக நாள். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கியமான நாள் ஜூன் 1, 1981. அந்த நாளில் தான் சிங்கள இனவாதம் நிர்வாண கோலம் கொண்டு, வெறியாட்டம் ஆடி, அரிய புத்தகங்களோடு ஒரு அருமையான நூலகத்தை எரித்து தனது தமிழினப் படுகொலை நோக்கத்தை பறையறிவித்த நாள்.

நானறிந்த மட்டில் மாதம் 25 ரூபாய்கள் வாடகைக் கட்டிடத்தில் இயங்கிய யாழ்ப்பாண பொது நூலகத்தை 1935ல் யாழ்ப்பாண நகர சபை (ஊர்பன் cஒஉன்cஇல்) பொறுப்பேற்றது. 1949ல் யாழ்ப்பாண நகர சபை இலங்கையின் இரண்டாவது மாநகர சபையாக (Mஉனிcஇபல் cஒஉன்cஇல்) தரமுயரத்தப்பட, மேயராக பதவியேற்ற சாம் சபாபதி, நூலகத்திற்கென தனியான கட்டிடம் கட்ட வேண்டும் என்ற திட்டத்தை முன்மொழிந்து செயலிலும் இறங்கினார்.

1981 மே மாதம் இறுதியிலிருந்து யாழ்ப்பாணத்தில் ஒரு பதற்ற நிலை உருவாகியிருந்ததை, நூலகத்திற்கு வந்து போவார் கதைப்பதிலிருந்து அறிந்து கொண்டேன். தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைக்கான தேர்தலை யாழ்ப்பாணத்தில் நடாத்திக் காட்ட, இரு சிங்கள இனவெறி அமைச்சர்களான காமினி திசநாயக்காவும் சிறில் மத்தியூவும், காடையர்களும் குண்டர்களும் அடங்கிய பரிவாரங்களுடன் வந்து, யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருக்கிறார்கள் என்று சனம் கதைத்தது காதில் விழுந்தது. தமிழர்களிற்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற வெறியோடு திசநாயக்கவும் மத்தியூவும் யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கினாங்களாம்.

1950களில் மேயர் சாம் சபாபதி மற்றும் புனித பற்றிக் கல்லூரியின் றெcடொர் Fர் ளொங்ன் இணைத்தலைமையில் யாழ்ப்பாண பொது நூலத்திற்கான கட்டிடம் அமைக்க நிதி திரட்டும் முயற்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. கப்பல் மூலம் தனது சொந்த நாடான அயர்லாந்து வரை சென்று நிதி திரட்டினாராம் Fர் ளொங். அமெரிக்க தூதவராலயம் யாழ்ப்பாணத்தில் வைத்திருந்த நூலகத்தை மூடி, நூல்களை யாழ்ப்பாண நூலகத்திற்கு அன்பளிப்பு செய்தது. அமெரிக்க அரசும், இந்திய அரசும், கிறிஸ்தவ திருச்சபைகளும், இந்து ஆலயங்களும் நிதிப்பங்களிக்க கட்டிடப் பணிகள் வலு மும்மரகாக நடந்தன.

தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த அமைச்சர்களின் காடையர்கள் துரையப்பா விளையாட்டரங்கில் தான் தங்கியிருப்பதை நான் இருந்த இடத்திலிருந்து பார்க்கக் கூடியதாகவிருந்தது. காமினியும் சிறிலும், பிரதான வீதி முடக்கிலிருந்த யாழ் வாடி வீட்டில் (Jஅffன Gஉஎச்ட் Hஒஉசெ) தங்கினவையாம். இரவில் துரையப்பா விளையாட்டரங்கில், ஒரே குடியும் கும்மாளமும்தான். காடையரோடு ஆமிக்காரன்களும் பொலிஸும் சேர்ந்து யாழ் நகரத்தில் அட்டகாசம் செய்து விட்டு, இரவில் கூத்தாடுவதை இரண்டு நாட்களாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

மார்ச் 29, 1954ல் யாழ் நூலகத்திற்கான அடிக்கல்லை யாழ்ப்பாண மேயர் சாம் சபாபதியோடு Fர் ளொங்ம் அமெரிக்க, பிரித்தானிய இந்திய உயர்ஸதானிகர்கள் இட்ட நாளில், அமெரிக்க அரசு 22,000 அமெரிக்க டொலர்களை (அன்றைய பெறுமதியில் ரூ 104,000) நன்கொடை செய்ததாம். அன்றைய மதராஸ் அரசின் தலைமை கட்டிடக் கலைஞரான VM நரசிம்மன், திராவிட கட்டிட பாரம்பரியத்திற்கமைய வடிவமைத்த கட்டிட வரைபிற்கமைய கட்டப்பட்ட கம்பீரமான யாழ்ப்பாண பொது நூலக கட்டிடம், ஒக்டோபர் 11, 1959ல், அன்றைய யாழ்ப்பாண மேயரான அல்பிரட் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்டபோதுதான், என்னையும் இந்த இடத்தில் நிர்மாணித்தார்கள்.

ஜூன் 1, 1981 அன்று, துரையப்பா விளையாட்டரங்க பக்க மதிலிற்கு மேலால் பாய்ந்து வந்த சிங்கள காடையர்கள், Fர் ளொங்ன் சிலையைத் தாண்டி, என்னருகில் வரும்போது இரவு பத்து மணியிருக்கும். பொது நூலக வாயிலில் காவல் கடமையிலிருந்த காவலாளி அரை நித்திரையிலிருந்தான். சிங்களத்தில் கத்தி சிரித்துக் கொண்டு வந்த கூட்டத்தை பார்த்து டோர்ச் அடித்த காவலாளியை, காடையர் கூட்டம் அடித்துக் கலைத்தது. காடையர் கூட்டத்தில் சீருடையணிந்த பொலிஸ்காரன்களும் இருந்ததை அப்பத் தான் கவனித்தேன். காவலாளி சுப்ரமணிய பூங்காப் பக்கம் தலைதெறிக்க ஓட, நிறை வெறியிலிருந்த அறுவான்கள் நூலகத்தின் பிரதான கதவை அடித்து திறந்தார்கள்.

யாழ்ப்பாண நூலகத்தை சர்வதேச தரத்தில் இயங்க வைக்க, டெல்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்.K ரங்கனாதனின் சேவையையும், யாழ்ப்பாண மாநகரசபை பெற்றுக் கொண்டதாம். நரசிம்மன் வடிவமைத்த கட்டிட வரைபு நான்கு பகுதிகளைக் கொண்டமைந்திருந்ததாம். நடு மைய கட்டிடத்தில் ஒரு குவிமாடத்தையும் (டொமெ) அதன் இரு புறமும் பின்புறமும் இரு மாடிகளையுடைய கட்டிடத் தொகுதிகளையும் உள்ளடக்கியிருந்ததாம். நிதிப் பற்றாக்குறை காரணமாக, முன்புற கிழக்கு மற்றும் மேற்கு கட்டிடத் தொகுதிகளையும், குவிமாடத்தை உள்ளடக்கிய நடு மைய கட்டித்தையும் மட்டும் தற்பொழுது கட்டுவதாக முடிவெடுக்கப்பட்டதாம். பின்புற மேற்குத் தொகுதி கட்டிடம் கட்டுவதை பிற்போட்டார்களாம்.

முன் கதவை உடைத்து திறந்து கொண்டு உள்ளே நுழைந்த சிங்கள காடையர்களும் பொலிஸ்காரன்களும், புத்தகங்களையும் அரிய ஓலைச் சுவடுகளையும் அள்ளிக் கொண்டு வந்து நடுக் கட்டிட விறாந்தையில் போடுவதை பார்க்க எனக்கு நெஞ்சம் பதைபதைத்தது. கிழக்கு பக்க கட்டித்திலிருந்தும் மேற்குப் பக்க கட்டிடத்திலிருந்தும் ஓடி ஓடி பெறுமதியான புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்து கொட்டினார்கள். புத்தகங்களை கொண்டு வந்து கொட்டி என்ன செய்யப் போறாங்கள் என்று நான் ஏங்கி நிற்க, ஒருத்தன் நெருப்புப் பெட்டியை எடுத்து நெருப்பு பற்ற வைத்தான்.

நானறிய யாழ்ப்பாண நூலகத்தில் இருந்த அரிய புத்தகங்களுள், 1660ல் றொபெர்ட் Kனொx எழுதிய Hஇச்டொர்ய் ஒf Cஎய்லொன், யாழ்ப்பாண வரலாற்று நூலான முதலியார் ராஜநாயகத்தின் பண்டைய யாழ்ப்பாணம், தமிழில் முதல் முதலாக வெளிவந்த இலக்கிய கலைக்களஞ்சியமான முத்துத்தம்பிப்பிள்ளையின் அபிதான கோசம், அதன் பின் வந்த சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணி, சித்த வைத்தியம் சம்பந்தமான பனையோலையில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் என்பன இருந்தன. ஆசியக் கண்டத்திலேயே தலைசிறந்த நூலகங்களில் ஒன்றாக யாழ்ப்பாண நூலகம் திகழ்ந்தது. இலங்கைத் தீவில் கல்வியில் தமிழர்கள் அடைந்திருந்த உச்ச நிலையும் சிங்கள இனவெறியர்களின் கண்ணைக் குத்தியிருக்க வேண்டும்.

புத்தகங்களை நெருப்பிட்டு கொளுத்திவிட்டு வெளியே ஓடிவந்த காடையர் கூட்டம், எனக்கு முன்னால் பைலா பாட்டுப் பாடி ஆடத் தொடங்கியது. இருந்தால் போல, கிழக்கு பக்க கட்டிடத்தில் நெருப்பு பிரவாகம் எடுத்தது. காக்கி களுசான் அணிந்த ஒருத்தன் கையில் பெற்றோல் கானோடு கிழக்கு பக்க கட்டிட பக்கத்திலிருந்து மேற்கு பக்கமாக ஓடிய சிறிது நேரத்தில், மேற்குப் பக்க கட்டித்தையும் தீச்சுவாலைகள் சூழத்தொடங்கியது. தீயில் கருகிக் கொண்டிருந்த யாழ் நூலகத்தின் குவிமாடத்தின் கண்களிற்கு, யாழ் வாடி வீட்டு வாசலில் நின்று நூலகம் எரிவதை பார்த்து ரசித்த காமினி திஸநாயக்காவையும் சிறில் மத்தியூவும் தெரிந்திருக்கும்.

1960களிலும் 70களிலும் படிக்கிற பெடி பெட்டைகள் என்னைத் தாண்டி நூலகத்திற்குள் நுழையும் போது மனதாரா வாழ்த்துவேன். அவர்களின் கடின உழைப்பும் என்னுடைய ஆசீர்வாதமும் சேர, அள்ளு கொள்ளையாக கட்டுபெத்தை, பேராதனை, கொழும்பு பல்கலைக்கழகங்களிற்கு என்ஜினியராகவும் டொக்டராகவும் எங்கட பிள்ளைகள் போவினம். பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளின் பெற்றோர், எனக்கு பொங்கல் காய்ச்சி படையல் செய்வீனம். இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நூலகத்திற்கு படிக்க வாற ஆட்களை விட, நூலகத்தை பார்க்க வாற ஆட்கள் தான் கூடவாக இருக்கீனம். யாழ்ப்பாண மாவட்டமும் கல்வியில் பின்தங்கி, எந்த நோக்கத்திற்காக எதிரி நூலகத்தை எரித்தானோ, அந்த நோக்கத்தை எதிரியை அடைய வைத்து விட்டது.

யாழ்ப்பாண நூலகம் எரிந்ததை தாங்கொண்ணா அதிர்ச்சியில் Fர் டேவிட், கொழும்புத்துறையிலிருந்த அவரது செமின்றியில் மாரடைப்பு வந்து இறந்து போனார். 35ற்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்த, உலகப்பிரசித்தி பெற்ற மொழியியல் அறிஞரான தனிநாயகம் அடிகாளரின் ஆராய்ச்சிக் களமாக யாழ்ப்பாண நூலகமே திகழ்ந்தது.

எரிந்த நூலகத்திற்கு காவல்காரி போல நான் நிற்க, எரிந்த நூலகத்தை மீண்டும் உடனடியாக கட்டியெழுப்பி, தமிழர்களின் கல்வியை நாசமாக்கும் இனவாதிகளின் எண்ணத்தை நிறைவேற்றக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, அன்றைய யாழ்ப்பாண மேயரான ராஜா விஸ்வநாதனும் மாநகர சபை ஆணையாளர் CVK சிவஞானமும் களமிறங்கினார்கள். அவர்களோடு ஒட்டு மொத்த தமிழினமும் அணிதிரள கட்டிட கலைஞர் Vஸ் துரைராஜா, எரிந்த நூலக கட்டிடத்தை அதே போல் மீண்டும் கட்ட, கட்டிட வரைபுகளை வரைய முன்வந்தார். யாழ்ப்பாண நூலகத்தை மீளக் கட்டுவதில் முன்னின்று உழைத்த இன்னுமொருவர் அன்றைய ஸ்ட் Pஅட்ரிcக் கல்லூரியின் றெcடொர்ம், 2009ல் வட்டுவாகலில் போராளிகளோடு இணைந்து இராணுவத்திடம் சரணடைந்தது காணாமல் போகடிக்கப்பட்டவருமான, Fர் பிரான்ஸிஸ் சேவியர்.

பொதுமக்களிடமும் அரசாங்கத்திடமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சேகிரிக்கப்பட்ட நிதியுதவியிலும் புத்தகங்களைக் கொண்டும் யாழ் நூலகம் எரிந்த சாம்பலிலிருந்து மீண்டும்

புத்துயிர் பெற திட்டங்கள் தயாராகின. எரிந்த கிழக்கு மேற்கு கட்டிடங்களை நினைவுச் சின்னங்களாக பேணிக் கொண்டு, நரசிம்மனின் திட்டத்தில் இருந்த மேற்குப் பகுதி கட்டிடத்தை மையமாகக்கொண்டு, பழைய கட்டிடத்தை போல புதிய கட்டடத்தை கட்டிடக் கலைஞர் துரைராஜா வடிவமைத்தார். புதிய கட்டிட வரைபிலிருந்த ஒரு வித்தியாசம், அது மேற்குப் புறமாக, அதாவது முனியப்பர் கோயில் மற்றும் யாழ் கோட்டையை நோக்கி காங்கேசன்துறை வீதிப் பக்கமாக அமைந்திருந்ததே. நானிருந்த இடத்தை மட்டும் அவர்கள் மாற்றவில்லை.

எரிந்த நூலகத்தின் ஓரு பகுதியில், அன்பளிப்பாக கிடைத்த புத்தகங்களைக் கொண்டு, உலக மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10, 1982ல் நூலகம் மீள இயங்கத் தொடங்க நானும் பெருமிதம் அடைந்தேன். புதிய கட்டிட வேலைகள் மளமளவென நடந்து, ஜூன் 4, 1984ல் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தால் யாழ்ப்பாண பொது நூலகம் மீண்டும் திறக்கப்பட்டது. புதிய கட்டித்தில் மிளிர்ந்த இன்னொரு வித்தியாசம் குவிமாடத்தின் அமைப்பு, யாழ் இசைக்கருவியின் வடிவிலிருந்தது. மீள இயங்கத் தொடங்கிய நூலகத்திற்கு மெல்பேர்ண் தமிழ் சங்கமும் லண்டனிலிருந்து புலம்பெயர் உறவுகளும் புத்தகங்கள் அனுப்பியிருந்தார்கள்.

ஏப்ரல் 10, 1985ல் இயக்கம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைத்தை தாக்கியதுடன் ஆரம்பமான யாழ் கோட்டை முற்றுகை, யாழ் பொது நூலகத்தையும் என்னையும் யுத்த வலயத்திற்குள் உள்வாங்கியது. துப்பாக்கி ரவைகளும், ஷெல்களும், மோட்டார்களும், விமான குண்டுகளும் எங்களை நாளொரு வண்ணம் தாக்க, நாங்கள் போராடிய எங்கட பெடியளிற்கு காப்பரணானோம்.

இன்னுமொரு இருண்ட காலம் யாழ்ப்பாணத்தைச் சூழ்ந்து கொள்ள, நூலகமும் நானும் தனித்து விடப்பட்டோம். 1996ல் யாழ்ப்பாணம் மீண்டும் ஆமிக்காரன்களால் ஆக்கிரமிக்கப்பட, 1997ல் யாழ் பொது நூலகத்தை மீள கட்டியெழுப்பும் திட்டம் மங்கள சமரவீரவின் வெள்ளைத் தாமரை (சுது நெலும்) அமைப்பால் “போக் & ப்ரிcக்” என்ற தலைப்போடு முன்னெடுக்கப்பட்டது. மங்கள சமரவீரமிடமிருந்து யாழ் நூலக மீள்நிர்மாண திட்டத்தை பொறுப்பேற்ற லக்‌ஷ்மண் கதிர்காமர், இடிந்து எரிந்த கட்டிடங்களை மீளவும் அதே இடத்தில் அதே மாதிரி கட்டி, முன்னர் நிகழ்ந்த நூலக எரிப்பு சம்பந்தமான அடையாளங்களை அழிப்பதில் முனைப்பாக செயற்பட்டு வெற்றியும் கண்டார்.

இன்னும் யாழ்ப்பாண நூலகம் ஒரு காட்சிப் பொருளாகவும் சுற்றுலா தளமாகவும் மாறி விட்டதோ என்று நினைக்க நினைக்க எனக்கு நெஞ்சு வலிக்கிறது. நூலக எரிப்பு நடந்ததற்கான எந்த வரலாற்றுத் தடங்களும் இல்லாத இடத்தில், வெளிநாட்டு தமிழர்கள் தங்கள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்து “திச் லிப்ரர்ய் நச் புர்ன்ட் நித் போக்ச்” என்று விளக்கம் கொடுக்க அந்த மழலைகள் “”ந்க்ய் நொஉல்ட் சொமெஒனெ புர்ன் அ லிப்ரர்ய்” என்று கேட்க, எங்கட பழைய தலைமுறை, நாங்கள் ஏன் உயிரையும் வியர்வையையும் உழைப்பையும் விதைத்து விடுதலைக்காக போராடினோம் என்று விளக்கம் சொல்ல தொடங்குவினம்.

என்னைக் கேட்டால், நூலகம் எரிக்கப்பட்டது பற்றிய ஒரு நினைவுச் சின்னம் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். வரலாற்றை யாரும் பூசி மொழுக ஏலாது. அதே நேரம், அந்தக் காலத்தில் தமிழர்கள் கல்வியில் அடைந்திருந்த உச்சத்தின் வெளிப்பாடாய் திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்பியது போல், தமிழினம் மீண்டும் கல்வியில் முன்னனிக்கு வரவேண்டும். கல்வி தர வரிசையில் ஏழாம் எட்டாம் இடங்களில் இருக்கும் கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் முதலிரு இடங்கள் பிடிக்க வேண்டும். இருபத்தோராவது இடத்தில் இருக்கும் யாழ்ப்பாண மாவட்டமும் பதினேழாவது இடத்தில் இருக்கும் மட்டக்களப்பு மாவட்டமும் முதலிரு மாவட்டங்களாக மிளிர வேண்டும்.

வள்ளுவரின் வரிகளோடு விடை பெறுகிறேன்

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும். (நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்)

அப்ப நான் போய்ட்டு வாறன் என்ன… 

 

https://www.thaarakam.net/news/47ae5102-acca-49c7-885d-f560fc58f38d

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் பொது நூலகத்தை வெற்றிகரமாக எரிப்பது பற்றி காமினி திசாநாயக்கவிடம் கேட்டபோது, "இலங்கையில் இருந்து அனைத்து தமிழர்களையும் துரத்த முடிந்தால் நான் அதை செய்வேன். ஆனால் இதை எப்படி செய்வது என்பது எனது கேள்வி. அனைத்து தமிழர்களையும் கொல்வது சாத்தியமில்லை. பின்னர் நாம் ஒருவராக மாறலாம். தூய சிங்கள தேசம்."
ஒரு இன மக்களை அவர்களின் மூதாதையர் நிலங்களில் இருந்து வேரோடு பிடுங்குவதும் இனப்படுகொலையே - 1930 ஆம் ஆண்டு அனைத்து வகையான இனப்படுகொலைகளையும் எதிர்த்துப் போராடத் தொடங்கிய ரபேல் லெம்கின் கூறுகிறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

யாழ் பொது நூலகத்தை வெற்றிகரமாக எரிப்பது பற்றி காமினி திசாநாயக்கவிடம் கேட்டபோது, "இலங்கையில் இருந்து அனைத்து தமிழர்களையும் துரத்த முடிந்தால் நான் அதை செய்வேன். ஆனால் இதை எப்படி செய்வது என்பது எனது கேள்வி. அனைத்து தமிழர்களையும் கொல்வது சாத்தியமில்லை. பின்னர் நாம் ஒருவராக மாறலாம். தூய சிங்கள தேசம்."
ஒரு இன மக்களை அவர்களின் மூதாதையர் நிலங்களில் இருந்து வேரோடு பிடுங்குவதும் இனப்படுகொலையே - 1930 ஆம் ஆண்டு அனைத்து வகையான இனப்படுகொலைகளையும் எதிர்த்துப் போராடத் தொடங்கிய ரபேல் லெம்கின் கூறுகிறார்.

 

 

இவர் ஒரு இன துவேஷம் பிடித்த மிருகம் என்று எல்லோருக்கும் தெரியும். யாழ் நூலகத்தை எரிப்பதில் முன்னின்ற ஒரு முக்கிய நபர் என்றும் தெரியும். இந்த வீடியோவை முழுவதுமாக கேட்ட்டேன். அதில் இலங்கையில் இருந்து தமிழர்களை அகற்றுவதென்றால் தனக்கு முழு விருப்பம் என்றும் அதை எப்படி செய்வதென்பதுதான் பிரச்சினை என்றும் கூறுகிறார்.

மற்றப்படி எல்லா தமிழர்களையும் கொல்லே வேண்டுமென்றோ, தூய சிங்களமாக மாற்றுவதென்பதோ பற்றி ஏதும் கூறவில்லை. மேலும் யாழ் நூலகம் பற்றி கேள்வி கேட்ட்தாகவும் தெரியவில்லை. முழு விடீயோவும் பதிவேட்படவில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

அதனை திருத்தி... எரிந்த  அந்த அடையாளங்களையே அழித்ததன் மூலம் 
பெரும் தவறை செய்து விட்டோம்.

நாங்கள்  செய்யாவிட்டாலும் அவன் செய்து மாற்று வடிவில் தான் செய்ததை மறைப்பான்.. சிங்களத்துக்கு தான் செய்த அடூழியங்களின் சின்னங்கள் எச்சங்கள் எமது மண்ணில் மிஞ்சியிருப்பது  கசப்பு தான். நம்மை அடக்கிய சின்னங்களை தனது மண்ணில் நிறுவி மகிழவே விரும்புவான். இங்கே தான் நல்லது செய்வதுபோல் தனது சின்னங்களை நிறுவி தனது கோரத்தாண்டவத்தை மறைத்து பெருந்தன்மையாளனாக காட்டவே விரும்புகிறது. இங்கே மாவீரரின் கல்லறைகளை அழித்துக்கொண்டு அங்கே நினைவுத்தூபியாம். எங்கள் வீடுகளை குண்டு போட்டு தகர்த்துவிட்டு தரமில்லாத வீடுகளை சர்வதேசத்தின் உதவியோடு செய்துவிட்டு புனர்நிர்மாணம் என்று பிரச்சாரம். தான் இடித்த கோவில்களை புனரமைப்பு செய்துகொண்டு தாம் சைவ ஆலயங்களை மிகுந்த அழகுடன் கட்டுவதாக அண்மையில் அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார். இனத்தின் வரலாற்றை அழிப்பது, மாற்றியமைப்பது. வரலாற்றுச்சின்னங்களை அழிப்பது, நிலங்களை பறிப்பது, நிர்கதியாக்கி விரட்டுவது. சிங்களவருக்கு ஒரு பகுதியினருக்கு வீரக்கதை சொல்வது, இன்னொருபகுதியினருக்கு தாம் தமிழருக்கு நல்லது செய்யும் உபகாரிகள் போல் சொல்வது, புலிகளை அழித்தது தமிழரை புலிகள் கொடுமைப்படுத்துகின்றனர் அவர்களை மீட்கவே  போர், இன்னொருபகுதியினருக்கு இது சிங்கள நாடு, தமிழருக்கென்று உரிமையில்லை. அவ்வாறே எங்கள் ஆலயங்களை இடித்துக்கொண்டு இது பவுத்த நாடு, இன்னொரு கதை பவுத்த சின்னங்களை தமிழர் அழித்து கோவில்களை கட்டியிருக்கிறார்கள் அவர்களிடம் இருந்து பவுத்தத்தை காக்கிறோம். சிங்கள மக்கள் போலிக்கதைகளை நம்பி, சிந்திக்காமல் இருக்கும் வரை இது தொடரும். அவர்கள் உண்மையான வரலாற்றை அறியச்செய்ய வேண்டும். மகாவம்சம் மொழிபெயர்ப்பு செய்து எல்லோரும் வாசித்தறியச்செய்ய வேண்டும்.    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நூலகம் தீக்கிரையாகி 42 ஆண்டுகள் ! – இன்று நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பொதுஜன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (01) இடம்பெற்றது.

நினைவேந்தலின் போது யாழ்ப்பாண பொதுஜன நூலகத்தை உருவாக்குவதற்கு காரண கர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவுக்கும், நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், பழைமையான ஏடுகள் என்பவை பெரும்பான்மையின வன்முறை கும்பலால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

குறித்த நூலகமே தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

jaffna-news-01-300x200.jpg jaffna-news-02-300x200.jpg jaffna-news-03-1-300x200.jpg

https://thinakkural.lk/article/256460

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அருட் தந்தை தனிநாயகத்தைத்தான் தாவீது அடிகள் என்கிறார்களா? அல்லது அவருக்கு மறு பெயர் தாவீதா? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

அருட் தந்தை தனிநாயகத்தைத்தான் தாவீது அடிகள் என்கிறார்களா? அல்லது அவருக்கு மறு பெயர் தாவீதா? 

தாவீது அடிகளார் நூலகம் எரியுண்டதை கேள்விபட்டவுடன் அதிர்ச்சியில் காலமானார். தனிநாயகம் அடிகளார் தமிழுக்காக பணியாற்றிய ஓர் தமிழ் அறிஞ்சர். இங்கு அஞ்சலி செலுத்தப்பட்ட்து தாவீது அடிகளாருக்கே. இருவரும் வேறான நபர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நூலகம் எரியுண்டதை கேள்வியுற்று மாரடைப்பினால் மரணமடைந்தவர் தனிநாயகம் அடிகளார்! இவர் பல அரிய தமிழ் நூல்களை சேகரித்து யாழ் நூலகத்தில் சேர்த்திருந்தார். நான் நினைக்கிறன், முதல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும் நடத்தியிருந்தார் என்று படித்த ஞாபகம் சரியாக நினைவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1981 யாழ்ப்பாண நகரம் எரிப்பு அல்லது பொதுவாக யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு (Burning of Jaffna Public Library) என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணப்_பொது_நூலக_எரிப்பு#:~:text=1984 இல் நூலகக் கட்டடம் மீளப்,இதனால் நூலகம் நிரந்தரமாக மூடப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு : தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிஷம் ஏன் அழிக்கப்பட்டது?

News

எரிக்கப்பட்ட யாழ் நூலகம்

உலகில் வேறு எங்கும் இல்லாத நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், நூல்கள், வரலாற்று ஆவணங்கள், 1800-களில் யாழ்ப்பாணத்தில் வெளியான பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என மிகப் பெரிய எண்ணிக்கையிலான பொக்கிஷங்களை யாழ்ப்பாண நூலகம் தன்னகத்தே கொண்டிருந்தது.

 

தமிழ் இனத்தின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த ‘பொதுசன நூலகம்’, சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு எரிக்கப்பட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன.

இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981-ம் ஜூன் 4 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையின் பல இடங்களிலிருந்து காவல்துறையினர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம்
 
யாழ்ப்பாணம்

1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது; ஜூன் ஒன்றாம் தேதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்த ஈழநாடு தினசரி அலுவலகமும், அதற்கு அருகிலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது; அதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங்கேறியது. ஆம், சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத்தியது. தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது.

இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன!

தொடக்கம்

1930-களில் யாழ்ப்பாணத்தின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராகத் திகழ்ந்த கே.எம்.செல்லப்பாவின் மனதில் உதித்த எண்ணம்தான் யாழ்ப்பாண பொது நூலகத்துக்கான அடிப்படை. தன்னுடைய சொந்த சேகரிப்பிலிருந்த நூல்களையும், பத்திரிகைகளையும் கொண்டு, 1933-ல் வாடகை நூலகம் ஒன்றை தன்னுடைய வீட்டிலிருந்தே தொடங்கிய செல்லப்பா, அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல விரும்பினார்.

அதைத் தொடர்ந்து நகரின் மற்ற முக்கியப் பிரமுகர்களின் ஆலோசனையின் பேரில், 1934 ஆகஸ்ட் 1 அன்று யாழ்ப்பாண பொது மருத்துவமனை சாலையில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்கள் மற்றும் 36 பருவ வெளியீடுகளுடன் யாழ்ப்பாண பொதுசன நூலகம் தொடங்கப்பட்டது; ஒருகட்டத்தில் இங்கு இட நெருக்கடி ஏற்படவே, 1936-ல் நகரக் கட்டடம் அமைந்துள்ள டவுன் ஹாலுக்கு அருகே நூலகம் மாற்றப்பட்டது.

யாழ் நூலகம்
 
யாழ் நூலகம்

தொடங்கப்பட்ட தினத்திலிருந்தே நூலகம் மிக வேகமாக வளரத் தொடங்கியது. பாதிரியார்கள் லோங், டேவிட் உள்ளிட்ட யாழ்ப்பாணச் சமூகத்தின் முக்கியப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் எனப் பல தரப்பினரும் நூலகத்துக்கான நிரந்தமான நவீனக் கட்டடம் ஒன்றை உருவாக்க முயன்றனர். கட்டடக் கலைஞர் வி.எம். நரசிம்மன் கட்டிடத்தை வடிவமைத்துக் கொடுக்க, யாழ் நூலகம் சர்வதேசத் தரத்தை எட்டுவதற்கான ஆலோசனைகளை இந்திய நூலகர் எஸ்.ஆர். ரங்கநாதன் வழங்கினார். 1953-ல் நூலகத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, திராவிடக் கட்டடக் கலையில் அமைந்த புதிய நூலகக் கட்டடம் 1959 அக்டோபர் 11 அன்று திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது யாழ்ப்பாணத்தின் மேயராக இருந்த ஆல்ஃபிரட் துரையப்பா நூலகத்தைத் திறந்துவைத்தார்.

நூலகத்தில் குழந்தைகளுக்கான பகுதி 1967-ல் தொடங்கப்பட்டது; உரைகள், கருத்தரங்கங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக நிகழ்வரங்கம் ஒன்று 1971-ல் திறக்கப்பட்டது. உலகம் முழுவதும் தனி நபர்கள், அயல் தூதரகங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் குவியத் தொடங்கின; நூலகக் குழுவும் அரிய நூல்களைச் சேகரிக்கத் தொடங்கியது.

உலகில் வேறு எங்கும் இல்லாத நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், நூல்கள், வரலாற்று ஆவணங்கள், 1800-களில் யாழ்ப்பாணத்தில் வெளியான பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என மிகப் பெரிய எண்ணிக்கையிலான பொக்கிஷங்களை யாழ்ப்பாண நூலகம் தன்னகத்தே கொண்டிருந்தது; யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடமும் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் போன்றவை இங்குப் பத்திரப்படுத்தப்பட்டிருந்தன.

ஓலைச்சுவடிகள்
 
ஓலைச்சுவடிகள்
1585-ல் கத்தோலிக்க மதத் தலைவர்களால் தமிழில் எழுதப்பட நூல்கள், கண்டி சிறையிலிருந்தபோது ராபார்ட் க்னாஸ் எழுதிய ‘History of Ceylon' நூலின் பிரதி, முதலியார் ராசநாயகத்தின் 'பண்டைய யாழ்ப்பாணம்', தமிழின் முதல் இலக்கியக் கலைக்களஞ்சியமான முத்துத் தம்பிப் பிள்ளையின் ‘அபிதான கோசம்', சிங்காரவேலு முதலியார் தொகுத்த ‘அபிதான சிந்தாமணி’ ஆகியவற்றின் பிரதிகள், சித்த வைத்திய ஓலைச்சுவடிகள் போன்ற எண்ணிடலங்காதவை இந்நூலகத்தின் சேகரிப்புகளாக விளங்கின.
 

சுமார் 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிவுச் சமூகத்தால் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுப் போற்றப்பட்டது; அதைவிட முக்கியமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வெளியாக யாழ் நூலகம் விளங்கியது.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஓர் இனத்தின் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்ந்த நூலகத்தைத்தான் சிங்களப் பேரினவாதிகள் திட்டமிட்டு அழித்தனர். யாழ்ப்பாணம் நூலக எரிப்பு என்பது ஒரு தனி சம்பவமல்ல; அது இலங்கைத் தமிழர் பிரச்னையில், தமிழர்களை உளவியல் ரீதியாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய ஒரு வரலாற்று நிகழ்வு!

எரியும் நினைவுகள்

தமிழர் பண்பாட்டு வரலாற்றின் துயரங்களில் ஒன்றான யாழ் நூலக எரிப்பு பற்றிய ‘எரியும் நினைவுகள்’ என்ற ஆவணப்படத்தை எடுத்த ஈழத் தமிழரான சோமிதரன், நூலகம் எரிக்கப்படுவதற்கு 19 நாட்களுக்கு முன்பு பிறந்தவர். தன்னுடைய பத்து வயதிலேயே முதல்முறையாக இதுபற்றி அறிய நேர்ந்த சோமிதரன், ஓர் ஊடகவியலாளராக உருவாகி யாழ்ப்பாண நூலக எரிப்பு பற்றிய ஆவணப்படத்தை பல்வேறு இடர்களுக்கு மத்தியில் எடுத்து முடித்தார்.

எரிந்து நிற்கும் யாழ் நூலகம்
 
எரிந்து நிற்கும் யாழ் நூலகம்

“1991-ல் யாழ்ப்பாணக் கோட்டையை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். அப்போது கோட்டையில் துப்புரவுப் பணிக்காக உயர்நிலைப் பள்ளியளவில் இருந்த மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடை இருந்ததால், பெட்ரோல் டீசல் எதுவுமின்றி வாகனங்கள் ஓடவில்லை. புலிகளின் தேவைக்காக மட்டும் மண்ணெண்ணெய் கொண்டு சில வாகனங்கள் இயக்கப்பட்டன. அப்படியான ஒரு பேருந்து மாணவர்களை அழைத்துச் செல்ல வந்தபோது, என்ன ஏதென்று அறியாமல் பேருந்தில் பயணிக்கும் ஆசையில் நானும் என் நண்பனும் ஏறிக் கொண்டோம்.

நாங்கள் கோட்டைக்குள் சென்றோம். நாங்கள் அப்போது சிறுவர்களாக இருந்ததால் எங்களைத் துப்புரவு பணியில் ஈடுபடுத்தாமல், மரத்தடியில் போராளிகள் அமரச் செய்தனர். அப்போதுதான் அருகிலிருந்த மாளிகையைப் பார்த்தேன். அது என்ன என்று போராளி ஒருவரிடம் கேட்டபோது, ‘அதுதான் இயக்கத்தின் படைத்தளம்’ என்றார். நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன். வீட்டுக்கு வந்து அம்மாவிடம், ‘இங்கெல்லாம் வீடுகளில் தான் இயக்கத்தின் தளங்கள் இருக்கின்றன... யாழ்ப்பாணத்தில் மாளிகையில் தளம் அமைத்திருக்கிறார்கள்’ என்றேன். அதுதான் ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகமாக இருந்தது என்று அம்மா அப்போது எனக்குச் சொன்னார். யாழ்ப்பாண நூலகம் பற்றி நான் முதன்முறையாக அறிந்தது அப்போதுதான்!” என்று யாழ் நூலகம் பற்றி முதன்முறையாகத் தான் அறிய நேர்ந்த கதையை விவரிக்கிறார் சோமிதரன்.

சோமிதரன்
 
சோமிதரன்

“என்னுடைய பத்தாம் வயதில்தான் எரிந்து நின்ற யாழ்ப்பாண கட்டடத்தை முதன்முதலாகப் பார்த்தேன். எங்கள் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை, அது எரிக்கப்பட்டுப் பல ஆண்டுகளுக்குப் பிறகே தெரிந்துகொண்டேன்” என்கிறார்.

“யாழ் நூலக எரிப்பு என்பது ஓர் இனப்பிரச்னையின் பகுதி கிடையாது; உலக தமிழர்களின் சொத்தாகத் திகழ்ந்த அந்த நூலகத்துக்குப் பெரும் வரலாறு இருக்கிறது. 15-ம் நூற்றாண்டில் மதுரையில் முகமதிய படையெடுப்பின்போது, அங்கிருந்த சுவடிகளைப் பாதுகாப்பதற்காக அவற்றை வல்லங்களில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்; சிலப்பதிகாரத்தின் மூலப் பிரதியை உ.வே.சாமிநாதர் யாழ்ப்பாணத்திலிருந்துதான் எடுக்கிறார்; பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டபோது, யாழ்ப்பாணத்தில் அவை பாதுகாக்கப்பட்டன. அது தமிழர்களின் பண்பாட்டு மையம், அறிவுத் தேடலின் அடையாளம்” என்று யாழ்ப்பாணத்தின், அதன் நூலகத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைச் சோமிதரன் விளக்குகிறார்.

யாழ் நூலகம்
 
யாழ் நூலகம் MAHI
“1983 கருப்பு ஜூலை கலவரத்துக்கு முன்பே தமிழர்களின் உளவியல் மீதான தாக்கம் தான் யாழ்ப்பாண நூலக எரிப்பு. 1983-க்குப் பிறகுதான் ஏராளமான இளைஞர்கள் ஆயுதப் போராட்டக் குழுக்களில் இணைந்தார்கள். ஆனால், அதற்கு முன்பே இளைஞர்களின் உளவியலில் ஆழமாகத் தாக்கத்தை இந்த நூலக எரிப்பு ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள்; கைகளிலிருந்து புத்தகங்கள் பறிக்கப்பட்டு எரிக்கப்படும்போது, அவர்கள் ஆயுதம் ஏந்துவதன் நியாயத்தை அந்த நூலக எரிப்பு சொல்லியது. எரிந்து நின்ற அந்தக் கட்டடம் ஈழப்போராட்டத்தின் நியாயத்தைச் சொல்லியது; அதற்குச் சாட்சியாக நின்றது!” என அச்சம்பவத்தின் அரசியல் வெளிப்பாடுகளாகச் சோமிதரன் பார்க்கிறார்.

எரிக்கப்பட்ட யாழ் நூலகக் கட்டடத்தை இலங்கை அரசாங்கம் 2003-ல் புதுப்பித்து, திறக்க முயன்றது. ஆனால், மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு எந்த விழாவும் இன்றி, எதிர்ப்புகளை மீறி நூலகம் செயல்படத் தொடங்கியது. கண் முன்னே ஒரு வரலாறு அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு சோமிதரன் அதை ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

“அது வெறும் நூலகக் கட்டடம் மட்டுமல்ல; 25 ஆண்டுக்கால ஈழப் போராட்டத்தின் சாட்சி. 97 ஆயிரம் புத்தகங்களை இழந்து நின்ற அந்த நூலகம் பிறகு புலிகளின் தளமாகவும் இருந்திருக்கிறது. யாழ் நூலகம் இருந்தபோதும் ஓர் அரசியல், எரிக்கப்பட்டதிலும் ஓர் அரசியல், அதைப் புதுப்பிப்பதிலும் அரசியல் என இன்றுவரை அதைச் சுற்றி அரசியல் இருக்கிறது. இந்த வரலாறு, அரசியல் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினேன். அப்போது பத்திரிகையாளராக இருந்த நான், ‘கலாசார படுகொலை’ என்று இதுபற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதினேன். தொடர்ந்து ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினேன்.

ஆவணப்படம் எடுக்கத் தயாரானபோது ஈழத்தில் மறுபடியும் போர் மூண்டுவிட்டது. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் வேறு வழியே இல்லாமல் போய்விடும் என்பதால், என்ன நடந்தாலும் சரி எனச் செயலில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்தேன். எதிர்காலத்தில் யாராலும் அந்த வரலாற்றை மீட்டெடுக்க முடியாமல் போய்விடலாம் என்ற அச்சத்தில் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் ‘எரியும் நினைவுகள்’ ஆவணப்படத்தை எடுத்து முடித்தேன். அது இப்போது யூடியூப்பில் காணக்கிடைக்கிறது” என்று ஆவணப்பட அனுபவங்களைப் பகிர்கிறார் சோமிதரன்.

யாழ் நூலகம் இன்று
 
யாழ் நூலகம் இன்று Anton Croos
“வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நூலகத்தைப் புதுப்பித்து மீண்டும் செயல்பாட்டுக் கொண்டுவந்திருப்பது நல்ல நோக்கமாக இருந்தாலும், தமிழர்களின் அடையாளம் அழிக்கப்பட்டுவிட்டது. இன்று யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் எவரும், புதுப்பிக்கப்பட்ட நூலகத்தின் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், எரிந்து நின்ற கட்டடம் அப்படியே பாதுகாக்கப்பட்டிருந்தால் காலத்துக்கும் வரலாற்றுச் சாட்சியமாக இருந்திருக்கும். தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள்” என மௌனமாகிறார் சோமிதரன்!
https://www.vikatan.com/government-and-politics/40th-anniversary-of-jaffna-tamil-library-burning-incident
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்ப்பானத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாக ஆகி விட்டிருக்கிறது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன், குருசோ , யாழ் நூலக எரிப்பு பற்றி கதைக்கும்போது, எமது ஊரில் தனிநாயகம் அடிகளார், அவர் நூலகத்தில் சேர்த்த பல அரிய நூல்களை சேர்த்ததுபற்றியும்  கூறுவார்கள். நான் தனிநாயகம் அடிகளாரே இந்தச்சம்பவத்தில் உயிரிழந்ததாக பலமாக இதுநாள்வரை நம்பியிருந்தேன். இது எனது ஆழ்மனதில் படிந்த விடயம். ஆனால் இங்கு தாவீது அடிகளார் என்று கூறப்பட்டுள்ளது. குரூசோவும் அதை உறுதிப்படுத்தியுள்ளார். என்னால் அதை நம்ப முடியவில்லை, இருந்தாலும் இருவரும் தமிழுக்காக வாழ்ந்து மடிந்த அருட்தந்தையர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். மாற்றுக்கருத்தில்லை.  தப்பான கருத்தை நம்புவதும், தெரிந்தே பரப்புவதும் சரியல்ல. தவறுக்காக மன்னிப்பு கேட்க்கிறேன். தயவு செய்து தனிநாயகம் அடிகளார் எப்போ, எப்படி இறந்தார் என்பதை தெரிந்தால், எனக்கு அறியத்தாருங்கள். நீண்ட காலமாக இதை நான்  நம்புவதால் அந்த நம்பிக்கையில் இருந்து மாறுவது கடினம். எனது சந்தேகத்தை  தீர்ப்பதற்காவே கேட்க்கிறேன்!  

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, satan said:

ஏராளன், குருசோ , யாழ் நூலக எரிப்பு பற்றி கதைக்கும்போது, எமது ஊரில் தனிநாயகம் அடிகளார், அவர் நூலகத்தில் சேர்த்த பல அரிய நூல்களை சேர்த்ததுபற்றியும்  கூறுவார்கள். நான் தனிநாயகம் அடிகளாரே இந்தச்சம்பவத்தில் உயிரிழந்ததாக பலமாக இதுநாள்வரை நம்பியிருந்தேன். இது எனது ஆழ்மனதில் படிந்த விடயம். ஆனால் இங்கு தாவீது அடிகளார் என்று கூறப்பட்டுள்ளது. குரூசோவும் அதை உறுதிப்படுத்தியுள்ளார். என்னால் அதை நம்ப முடியவில்லை, இருந்தாலும் இருவரும் தமிழுக்காக வாழ்ந்து மடிந்த அருட்தந்தையர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். மாற்றுக்கருத்தில்லை.  தப்பான கருத்தை நம்புவதும், தெரிந்தே பரப்புவதும் சரியல்ல. தவறுக்காக மன்னிப்பு கேட்க்கிறேன். தயவு செய்து தனிநாயகம் அடிகளார் எப்போ, எப்படி இறந்தார் என்பதை தெரிந்தால், எனக்கு அறியத்தாருங்கள். நீண்ட காலமாக இதை நான்  நம்புவதால் அந்த நம்பிக்கையில் இருந்து மாறுவது கடினம். எனது சந்தேகத்தை  தீர்ப்பதற்காவே கேட்க்கிறேன்!  

தனி நாயகம் அடிகளார் ஒரு தமிழறிஞர். பல மொழிகள் அறிந்த பேராசான். பல நாடுகளாலும் கவுரவிக்கப்படடவர். தமிழுக்காக பெரும் சேவையாற்றி உள்ளார். எனக்கு தெரிந்த வரைக்கும் வெளி நாட்டில் அவர் இறந்ததாகவே அறிகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிலுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.