Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுமாறன் ஐயாவின் உண்ணாநிலைப் போராட்டம்.

Featured Replies

உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்: இரா.சம்பந்தன் வேண்டுகோள்.

Written by Pandaravanniyan - Sep 14, 2007 at 09:32 PM

இலங்கைத் தமிழினத்தின் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள், தொடர்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் துன்ப துயரங்கள் தொடர்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது எமது மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பராளுமன்ற தலைவர் திரு.இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையின் முழுவடிவமும் உள்ளே.

http://www.sankathi.net/index.php?option=c...31&Itemid=1

  • Replies 53
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையாக, உணர்வலை தோற்றுவித்ததை விட, எம் மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். என்று சொல்ல முடியும்.

தன் உடல் வதைத்து எம் மக்களின் உணர்வுகளை தூண்டும் "அய்யா" வுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திலீபண்ணா, பூபதியம்மா இருவரும் இந்திய ஆக்கிரமிப்பின்போது சாகும்வரை உண்ணாவிரதமிருந்தவர்கள். அவர்களை இத்தருணத்தில் நினைவுகூர்வது பொருத்தமாயிருக்குமென நினைக்கின்றேன். B)

  • கருத்துக்கள உறவுகள்

20 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிடம் நீதி கேட்ட திலீபனும் இண்று அதே இந்தியாவிடம் நீதிகேட்கும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன்.

ஜ வெள்ளிக்கிழமைஇ 14 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ

தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி விடுத்த வேண்டுகோளை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் ஏற்க மறுத்துள்ளார். 3 ஆம் நாளாக இன்றும் உண்ணாநிலைப் போராட்டத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:

முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

13.09.2007 நாளிட்ட தங்கள் மடல் கிடைக்கப்பெற்றேன்.

என் உடல்நிலை குறித்த அக்கறையுடனும் என் கோரிக்கை குறித்த பரிவுடனும் தாங்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளுக்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்கள அரசின் அறிவிக்கப்படாத பொருளாதார முற்றுகைக்கு உள்ளாகி பட்டினியிலும், நோயிலும் அல்லற்படும் 5 லட்சம் யாழ்ப்பாண தமிழர்களுக்கு வழங்கிட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரட்டப்பட்ட சற்று ஏறக்குறைய 1 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதில் தராமல் இந்திய அரசு 7 மாத காலமாக இழுத்தடித்து வருவதனை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.

தாங்கள் சேலம், ஈரோடு சுற்றுப்பயணத்தை முடித்து தலைநகரம் திரும்பிய பின்னர் இது குறித்து ஆவண செய்வீர்கள் என நம்புகிறேன்.

இந்த அணுகுமுறை அடிப்படையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தங்களை சந்தித்து பேச அணியமாக உள்ளது.

எனவே இந்நிலையில் என் கால வரம்பற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடர வேண்டிய தேவை உள்ளது என்பதனை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள

பழ.நெடுமாறன்.

உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பில் போராட்டக் குழுவினருடன் கலந்து பேசி இன்று வெள்ளிக்கிழமை காலை முடிவை அறிவிப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.

போராட்டக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை உண்ணாநிலைப் போராட்ட இடத்திற்கு அருகாமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோவும் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்துக்குப் பின்னர் மாலை 3.30 மணியளவில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பழ.நெடுமாறன் தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.

http://nitharsanam.com/?art=24321

முதல்வர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்க மறுப்பு- உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்கிறார் பழ.நெடுமாறன்!

தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி விடுத்த வேண்டுகோளை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் ஏற்க மறுத்துள்ளார். 3 ஆம் நாளாக இன்றும் உண்ணாநிலைப் போராட்டத்தை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:

முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

13.09.2007 நாளிட்ட தங்கள் மடல் கிடைக்கப்பெற்றேன்.

என் உடல்நிலை குறித்த அக்கறையுடனும் என் கோரிக்கை குறித்த பரிவுடனும் தாங்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளுக்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

http://www.eelampage.com/?cn=33392

  • தொடங்கியவர்

கடந்த மூன்று நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டத்தினை கைவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க

கூட்டணியின் கோரிக்கையில் நியாயம் உள்ளது. காந்தியம், அகிம்சாவாதம் எல்லாம் இந்தக் காலத்தில் பயனற்றவை. நெடுமாறன் ஐயா அவர்கள் அடையாள உண்ணாவிரதம் இருப்பதே போதுமானது. ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் தேவையற்ற ஒன்று. அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுதான் சாட்டு என்று இப்படியே தியாகி திலீபனை சாகடித்ததுபோல் அகிம்சாவாதிகளை கொல்லுவதற்கு தயங்கமாட்டார்கள். எனவே, நெடுமாறன் ஐயா எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் மேற்கொண்டு வரும் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

யாழ். தமிழர்களுக்கு உணவு-மருந்துப் பொருட்களை அனுப்ப மத்திய-மாநில அரசுகள் விரைந்து செயல்படவேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

சிங்கள தேசத்தின் வன்கொடுமைகளாலும், அனைத்துலகத்தின் புறக்கணிப்புக்களாலும் துயருற்றிருக்கும் தமிழீழ மக்களின் துயர்போக்க உங்களது உயிரினைப் பணயம் வைத்து நீங்கள் புரியும் அறப்போர் கண்டு எமது தேசம் நெஞ்சம் நிறைந்துள்ளது என்று சென்னையில் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு வரும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறனுக்கு அனைத்துலக தமிழீழ மாணவர் பேரவை அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர்களுக்காக எழும் குரலை தமிழகத்தில் நசுக்கும் முயற்சி ஏன்? என்ற தலைப்பில் இன்று சனிக்கிழமை வெளியாகியுள்ள "உதயன்" நாளிதழின் தலையங்கம்:

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

யாழ். தமிழர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தினூடே அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 4 ஆம் நாளாக இன்று சனிக்கிழமையும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் 74 வயது பெரியவர் பழ.நெடுமாறன் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு வரும் பழ.நெடுமாறனின் கோரிக்கையை தமிழக அரசின் சார்பில் வெற்றிபெற வைத்திட முயற்சிகள் எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளமைக்கு சுவிஸ் தமிழர் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறனின் உண்ணாநிலைப் போராட்டம் ஈழத் தமிழ் மக்களுக்கு மனநிறைவும் கவலையும் அளிக்கிறது என்று தமிழீழத் தாயகத்திலிருந்து வெளியாகும் "ஈழநாதம்" நாளிதழின் இன்றைய (15.09.07) வெளியீட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் தொடர்ந்தும் உண்ணாநிலைப் போராட்டத்தை நீட்டிப்பது வருத்தம் தருகிற செய்தியாகும் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தொடர்ந்து போராட்டத்தை நடத்துவது கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் மத்திய அரசு அவசரமாகத் தலையிட்டு பொருட்களை அனுப்புவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

(3 ஆம் இணைப்பு) 4 ஆம் நாளாக பழ.நெடுமாறன் உண்ணாநிலையைத் தொடர்கிறார்.

யாழ். தமிழர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தினூடே அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி 4 ஆம் நாளாக இன்று சனிக்கிழமையும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் 74 வயது பெரியவர் பழ.நெடுமாறன் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

மேலும் வாசிக்க

Edited by yarlpriya

எமினத்தின் தந்தையின் குரலாக, தன்னையிழந்தாவது தன்னினத்திற்கு விடிவு தேடித்தருவதற்கு முயன்று நிற்கும் ஒரு தமிழன். இந்த சாத்வீகத்திற்கு உலகம் என்ன பதில் தரப்போகின்றது. அரசியல் வங்குரோத்துத்தனம் என்ற புள்ளேயின் கண்கள் பிதுங்குவதை என் மனக் கண்களில் காண்கின்றேன்.

ஈழத்தமிழர் மீது கொண்டுள்ள பற்றுக்கு தமிழக உறவுகளுக்கு நன்றி - யாழ் பொது அமைப்புகள்

யாழ். குடாவை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் ஏ-9நெடுஞ்சாலை சிறிலங்கா அரசாங்கத்தினால் மூடப்பட்டுள்ளதால் சகிக்க முடியாத மனிதப் பேரவலத்தை நாளாந்தம் அனுபவித்து பட்டினிச்சாவை எதிர்நோக்கும் சகோதர தமிழ் உறவுகளுக்காக தமிழக உறவுகளிடம் சேகரித்த உணவு மற்றும் மருந்துப் பொருட்களை யாழ்ப்பாணம் அனுப்ப கடந்த ஏழு மாதகாலமாக முயற்சி செய்தும் அதற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் உதவாத நிலையில் யாழ்ப்பாணம் நோக்கிய தியாகப் பயணத்தை தமிழர் தேசிய இயக்கத்தலைவரும் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான பழ.நெடுமாறன் மேற்கொண்டபோது தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி எம்மை வந்து தாக்கிய போது இடி விழுந்துபோனோம். தங்களின் ஈழத்தமிழர் மீது கொண்டுள்ள பற்றிற்குத் தலைவணங்குகிறோம்.

பழ.நெடுமாறன் உட்பட தமிழக உறவுகளுக்கு எம்நன்றிகள்" என்ற தலைப்பில் தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் அவர்களுக்கு யாழ்.மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் நேற்று முன்தினம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்திய அரசு மற்றும் தமிழக அரசு மனிதாபிமான ரீதியில் யாழ்குடா மக்களுக்கு உதவியிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு உதவாமல் இருப்பது மனிதாபிமானத்தைக் கேள்விக்குரியதாக்கியுள்ளது. இந்தியாவிற்கு அழகல்ல. அது.

ஏழுமாத கால முயற்சி தோற்றுப்போன நிலையில் படகுகள் மூலம் உணவுப்பொருட்களைக்கொண்டுவர முன்னேற்பாடாக மதுரை, திருச்சி நகரங்களில் இருந்து தியாக பயணத்தை ஆரம்பித்தபோது வழி நெடுகலிலும் நின்று தமிழஉறவுகளை வாழ்த்தி அனுப்பியது ஈழத்தமிழர் நெடுஞ்சாலைகளைக் குளிர வைத்துள்ளது.

இந்த நேரத்தில் கடந்த ஏழுமாத காலத்தில் யாழ்ப்பாணக் குடா மக்களுக்குரிய உணவு, மருந்து எடுத்துவரப்போராடிய தங்களுக்கும், தமிழக உறவுகளுக்கும் ஈழத்தமிழர் சார்பில் நன்றியைத் தெரிவிக்கின்றோம். எனவும் அடிக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்கள் துயர் துடைக்கப் புறப்பட்ட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழக மக்களின் உணர்வுகளையும், அவர்கள் எம்மீது கொண்டுள்ள நியாயபூர்வமான அக்கறையினையும், உணர்வுபூர்வமாக நெஞ்சில் இருத்திக் கொள்வதொடு எமக்காக அவர்கள் பட்ட துன்பங்களுக்கு எமது உயர்வான ஆதரவினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/

  • தொடங்கியவர்

யாழ். தமிழர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தினூடே அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 4 நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வந்த தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசுவின் உறுதிமொழியை ஏற்று தற்போது தனது உண்ணாநிலையை கைவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

(2 ஆம் இணைப்பு) பழ.நெடுமாறனின் உண்ணாநிலைப் போராட்டம் நிறுத்தம்

தமிழ்நாடு முதல்வர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அளித்த உறுதிமொழிகளை ஏற்று தனது சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் நிறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க

Edited by yarlpriya

  • தொடங்கியவர்

யாழ். மக்களுக்காக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் உண்ணாநிலை மேற்கொண்டமையும் அதனைத் தொடர்ந்து தமிழகம் எழுச்சி கொண்டிருந்தமையும் குறித்து தமிழீழ தேசம் பெருமையும் நிறைவும் கொள்கிறது என்று திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

பழ.நெடுமாறன் போன்றோரின் தமிழகக் குரலை இந்தியா நசுக்குவது ஏன்?: "உதயன்" தலையங்கம் விளக்கம்.

ஜ சனிக்கிழமைஇ 15 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

ஈழத்தமிழர்களுக்காக எழும் குரலை தமிழகத்தில் நசுக்கும் முயற்சி ஏன்? என்ற தலைப்பில் இன்று சனிக்கிழமை (15.09.07) வெளியாகியுள்ள "உதயன்" நாளேட்டின் தலையங்கம்:இலங்கையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உணர்வும் உயிருமாகக் குரல் எழுப்பி வரும் தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் போராட்டம் தமிழக அரசுக்கு மட்டுமல்ல இந்திய மத்திய அரசுக்கும் தலையிடி கொடுக்கும் விவகாரமாக மாறிவருகிறது.1980-90களில் இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு கையைச் சுட்டுக்கொண்ட பட்டறிவோடு, சற்று ஒதுங்கி நின்று நோட்டமிடும் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த புதுடில்லி, இப்போதுதான் மீண்டும் தனது தென்முனை அயல்நாட்டில் வலுவாகத் தலைநீட்டும் இராஜதந்திரத்தை மெல்ல முன்னெடுக்க முயல்கின்றது.மீண்டும் "வெண்ணெய் திரண்டு வரும் சமயம் தாழியை உடைத்த' கதைபோன்று, அயல் வல்லாதிக்கம் தனது அதிகாரச் செல்வாக்கை இலங்கைக்குள் திரும்பவும் செலுத்துவதற்கான வாய்ப்புக் கிட்டும்போது அதைத் திசை திருப்புமாற் போல நெடுமாறன் போன்றோர் குழப்புகின்றார் என்றே புதுடில்லி சிந்திக்கத் தலைப்படுகின்றது.- இலங்கையில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளாக அரசின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் சகோதரர்களான அவரின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் புதுடில்லி சென்று அங்குள்ள அதிகாரத் தலைமையோடு "குசுகுசு' பேச்சு நடத்தியமை - அதையடுத்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை இந்தியத் தரப்பு புதுடில்லிக்கு அழைத்து பேச்சுகளில் ஈடுபடுகின்றமை - அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் உட்பட ஏனைய எதிரணிப் பிரமுகர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேச புதுடில்லி தீர்மானித்திருப்பதாக வந்துள்ள தகவல்கள் - ஆழ்கடலில் இலங்கையின் தெற்குக் கரையோரத்தில் இருந்து சுமார் ஆயிரத்து 200 கிலோமீற்றருக்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து மூன்று சரக்குக் கப்பல்களை புலிகளினுடையவை என இனம் கண்டு அங்கு வைத்துத் தாக்கி அழிக்கும் தகைமையையும் திறமையையும் பெற்றுக்கொண்டு அதை இலங்கைக் கடற்படையால் ஒப்பேற்ற முடிந்தமை போன்ற இன்னோரன்ன காரணங்களினால் இலங்கை விவகாரத்தில் இந்தியத் தரப்பின் தலையீடு எவ்வளவு தூரம் முற்றி வருகின்றது என்பதை ஊகித்தறிவது அவ்வளவு ஒன்றும் கஷ்டமான விடயமல்ல.

இன்னமும் பத்து நாட்களுக்குள் நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக அங்கு செல்லவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தனியாகச் சந்திக்கிறார். அப்போது இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தமது அரசு மனம் கொண்டிருக்கும் உத்தேசத் தீர்வுத் திட்டத்தின் நகல் பிரதி ஒன்றை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமரிடம் நேரில் எழுத்தில் கையளிப்பார் எனவும் தகவல் வெளியாகியிருக்கின்றது.அதாவத

அயுதகப்பலில் தீப்பிடித்தால் அது கண்டதுண்டமாக வெடிக்கும்.......?

எதற்காகவும் ஈழத்தமிழரை விட்டுக் கொடுக்காதவர். அகிம்சை காந்தி பெரியவரோடு முடிந்து போன கதை. அவரை இந்த உண்ணா நோம்பில் இருந்து மீட்டு வர ஈழதமிழா உலகலாவியரீதியில் முயற்சி செய்ய வேண்டும்.

உந்த ஜநா அது இதுகளுக்கு ஒரு பிரியோசனமும் இல்லாமல் கையெழுத்து வேட்டை நடத்துறம். ஈழத்தமிழருக்கு ஜயா அவசியம் அவர் நீடூடி வாழ வேண்டும் என்ற இலங்கை தமிழரின் விருப்பத்தை கையெழுத்தாக்கி அவருக்கு அனுப்பினால் என்ன?

வலைஞன் அண்ணா போன்றறவர்கள் இந்த முயற்சியை செய்தால் என்ன?

ஏன் நீங்கள் செய்ய கூடாது என்று கேக்குறீங்களா? தெரிஞ்சா செய்ய மாட்டேனா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.