Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

May be an image of animal

அன்பால் வீழ்ந்த, விலங்கினம்... நாய்!

ஏன் “தெரு நாய்கள்” மட்டும் எங்கும் உள்ளது..?
இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே 
தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும்.

ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள... 
புற்கள், இலை, தளைகளை  வழங்கி விடுகிறது.

ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏன் மனிதன் கொடுத்தால் தான் 
உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது.?

உங்கள் வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிக் கொண்டிருக்கும் போது 
உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றிச் சுற்றி ஏன் வருகிறது??
வீட்டிற்குள் இருந்து யாராவதும் வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் 
ஒரு சிறு பங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..?

சாலையோர கடையிலோ தள்ளு வண்டிக் கடையிலோ நீங்கள் திண்பண்டங்களை 
ருசித்துக் கொண்டிருக்கும் போது கல்லைத் தவிர வேறெதாவதும் வந்து விழாதா 
என வெறித்து வெறித்து பார்த்து ஏன் இடையூறு செய்கிறது..?

குறிஞ்சி, முல்லை என நகர்ந்து மருத நிலத்திற்க்கு மனிதகுலம் இடம் பெயருகிறது. 
மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்கி வேளாண்மை செய்து 
தனக்கான உணவை தானே உற்பத்தி செய்கிறது. 

குகையில் வாழ்ந்து பழகியவன் வீடு கட்டி வாழப் பழகுகிறான். 
சிந்து சமவெளி மனித நாகரீகம் பிறக்கிறது. காடுகளில் இருந்து வந்த மனிதன் 
இன்று நாகரீக, பொருளாதார, சிந்தனை, அறிவியல், குற்ற வளர்ச்சியில் 
உச்சத்தை எட்டி விட்டான்.

“தெரு நாய்களுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்” என்ற கேள்வி இந்நேரம் 
உங்கள் மூளையில் கசிந்திருக்கும்.
சொல்கிறேன்….

ஆதிமனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி வரும் போதும் 
அவன் மட்டும் வரவில்லை.தனக்கு பயன்படக்கூடிய தன்னால் அடக்கி ஆளக்கூடிய 
காட்டு விலங்குகளான ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளையும் 
தன்னோடு அழைத்தே வந்தான்.

அவற்றுள் முதன்மையான விலங்கினம் “நாய்”.
”ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய் தான்”.
நரி, ஓநாய், செந்நாய் குடும்ப வகையை சேர்ந்தது தான் நாயும். 
அவற்றைப் போல நாயும் ஒரு வேட்டையாடும் காட்டு விலங்கு தான். 
அவைகளுக்கு இருந்த எல்லா குணமும் நாய்க்கும் இருந்தது.

ஒரு குணம் மட்டும் அதிகமாக இருந்தது. 
அது தான் நாயை இன்று தெருவில் அலைய விட்டிருக்கிறது. 
அது தான் அன்பும் நன்றியுணர்வும்….. அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்…

எலித் தொல்லைகள் நமக்கு இருக்கும் வரை பூனை பாக்கியசாலி தான். 
ஆனால், அன்பைத் தவிர வேறு எதையுமே கொடுக்க முடியாததால் 
கை விடப்பட்டு தெருவில் அலையும் தகுதியை நாய் பெற்று விட்டது.

வேளாண்மை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் முயல், காட்டுப் பூனை  போன்றவற்றை 
மனிதன் வேட்டையாட பொழுது போக்கிற்காக நாய் தேவைப்பட்டது. 

இன்று வேளாண் செய்வதே போராட்டமாகவும் மீத்தேன், கெயில், ஹைட்ரோ கார்பன், 
காவிரி உரிமை என போராட்டமே வேளாண்குடிகளுக்கு பொழுது போக்காக ஆகி விட்டது.

வீட்டைக் காவல் காக்கும் இடத்தை சீ.சீ.டீவிகள் நிரப்பியதால் வீட்டின் மதிப்பிற்கேற்ப 
சில வீடுகளில் நாய் வீட்டிற்கு உள்ளேயும் சில நாய் வீட்டிற்கு வெளியேயும் போனது. 
பல நாய்களுக்கு தெருவே வீடாகிப் போனது.

மனிதன் social animal (சமூக விலங்கு) என்றால் நாய் கிட்டத்தட்ட semi social animal ஆகி விட்டது. 
உங்களோடு அதற்கு பேச மட்டும் தான் தெரியாது. 
உங்கள் மொழியைப் புரிந்து கொள்ளும்,. நீங்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளும்.
உங்கள் நண்பர் யார் பகைவர் யார் எனத் தெரியும்,. 
உங்கள் வண்டியின் சத்தத்தை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே கணித்து 
வாலாட்டத் தெரியும். உங்கள் குழந்தை அழுதால் ஓடிவந்து சன்னல் ஓரத்தில் 
அவ்,….அவ்,…அவ்,…என சிணுங்கத் தெரியும்.

உங்கள் வீட்டு வாண்டுகள் அடித்தால் திருப்பித் தாக்காமல் விளையாட்டு காட்டத் தெரியும்.
உங்கள் வீட்டில் அக்காவோ தங்கச்சியோ அவள் வரைந்த கோலத்தை 
மிதித்து திட்டு வாங்கியிருக்கும் ஆனால் அவள் திருமணமாகி சென்று விட்டால் 
மூலையில் படுத்து கவலைப்படும்.

வெளியூருக்குப் போய் வந்த நம் அப்பாவை பார்ததும் முன்னங் கால்களைத் தூக்கி 
மாரில் வைத்து தாடையை நக்கும். வாலை ஆட்டிக் கொண்டு மளிகைக் கடைக்கு 
அம்மாவோடு கூடவே போய்ட்டு வரும். 

உங்களுக்கு யாரின் மூலமாவதும் தீங்கா?.. ஒரு கை பார்த்து விடும். 
இவை அத்தனையையும் செய்ய அடைக்களமாக ஒரு வீடு எல்லா 
நாய்களுக்கும் கிடைப்பதில்லை.

அப்போ, வீடு இல்லாத நாய்களின் நிலை???
வீடு கிடைத்தவை செல்லப் பிராணியாகி விடுகிறது. 
வீடு கிடைக்காதவை சமூகத்தால் தொல்லை என பார்க்கப்படுகிறது. 
பார்க்கும் இடமெல்லாம் கல்லடி படுகிறது.

தெருநாய்கள் அடி வாங்குவதற்காகவும் வண்டியில் அடிபட்டு சாகவும் 
படைக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது. பெரிய நாய் தெருவில் அடிபட்டுச் சாக, 
நாய்க்குட்டிகள் அதைத் தேடி அலைந்து கொண்டேயிருக்கும்.

வியர்வையை விட இரத்தமே அதன் உடம்பின் மீது வழிகிறது. 
உணவுக்கு வழியின்றி பசியில் ஏங்கி ஏங்கி எச்சிலே 
அதற்கு இரத்தமாக உடம்பில் ஓடுகிறது.

இது அத்தனையும் நடந்து கொண்டிருக்கும் அதே தெருவில் காட்டிலிருந்து 
அது நம்பி வந்த மனிதகுலம் எந்த சம்மந்தமும் இல்லாமல் பரபரப்பாக 
போய்க் கொண்டிருக்கும். 

அவர்களுக்கு ஏறெடுத்து பார்க்கக் கூட நேரமில்லை என்பதை விட ஏறெடுத்து 
பார்த்தாலும் அலட்சியமே மறுமொழியாக இருக்கும் என்பதை உணரும் 
தெரு நாயின் நிலை என்னவாக இருக்கும்?..

ஒரு விலங்கை வேறோடு இடம் பெயர்த்து அடியோடு அதன் குணத்தை 
உணவு முறையை மாற்றி வைத்தது யார் தவறு?..
அதற்கும் மாட்டுப் பாலுக்கும் என்ன சம்மந்தம்?. அதை அவைளுக்கு உணவாகக் கொடுத்தது யார்??.. தற்போது அவைகளுக்கு அதைத் தர மறுப்பது யார்??

ஆனா பாருங்க நன்றி கெட்ட நாய் என்ற சொல்லாடலை “நாம்” வைத்திருக்கிறோம். 
என்ன ஒரு முரண்?அவைகளுக்கு ஆதரவா இருக்க வேண்டியது யார் கடமை?..
சுற்றுலாவிற்க்கு செல்லும் போது அங்குள்ள விலங்குகளுக்கு 
உணவு காெடுக்க வேண்டாம் என சொல்வது இதற்காகத் தான்.

தெரு நாய்களால் இன்று காட்டிற்குச் சென்று வாழவும் முடியாது. 
நாட்டிற்க்குள் வாழ ஆதரவும் கிடையாது. தனக்கான உணவை அடைந்து கொள்ளவும் தெரியாது.
அதனால் தான் நீங்கள் சாப்பிடும் போதும் தெருவில் நின்று 
உங்கள் தட்டையே வெறித்துப் பார்த்து நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டிருக்கிறது. 

அதன் நாக்கில் இருந்து சொட்டச் சொட்ட வழிவது எச்சில் அல்ல. 
கைவிடப்பட்ட ஓர் விலங்கின் கண்ணீர். 
உங்கள் உணவை பரிமாறி அதைத் துடையுங்கள். 
அனைத்து உயிரினங்களுக்கும் சேர்ந்தது தான் இந்த பூமி...

P Baskar Uadangudi  

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென்னிந்திய பார்வையில் அவரின் அழுகை  இங்கு நாய் வளர்த்து அதன் மலம் அள்ளுவது பெருமைக்குரிய விடயம் ஆனால் பெற்றவர்களின்  பம்பர்ஸ்  கழட்ட ஆள் வைத்து இருப்பார்கள் .ஆண்டாண்டு காலம்  நாயை விட கொஞ்சி கொஞ்சி வளர்த்தவர்களை முதியோர் இல்லத்தில் விட்டு விடுவார்கள் . கிழடாகி போன நாயை வீட்டுக்குள் வைத்து இருப்பார்கள் .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/6/2023 at 19:26, பெருமாள் said:

தென்னிந்திய பார்வையில் அவரின் அழுகை  இங்கு நாய் வளர்த்து அதன் மலம் அள்ளுவது பெருமைக்குரிய விடயம் ஆனால் பெற்றவர்களின்  பம்பர்ஸ்  கழட்ட ஆள் வைத்து இருப்பார்கள் .ஆண்டாண்டு காலம்  நாயை விட கொஞ்சி கொஞ்சி வளர்த்தவர்களை முதியோர் இல்லத்தில் விட்டு விடுவார்கள் . கிழடாகி போன நாயை வீட்டுக்குள் வைத்து இருப்பார்கள் .

இதில் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்; பெற்றோரை எங்கு அமைதியாக வைத்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..??



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடேங்கப்பா… படத்தை பார்க்க  பகீரென்று இருக்குது. மன்னர் ஆட்சியில் நடப்பது போல், மக்களின் வரிப் பணத்தில் ராஜ வாழ்க்கை நடத்தி உள்ளார்கள். மகிந்தவுக்கு பல வாகனங்கள், இரண்டு நோயாளர் வண்டி என்றும் வைத்திருந்தவர்.  அங்காலை ரணிலுக்கு… 16 சமையல்காரர் தேவையாம். நாடு இருக்கும் நிலையில் அதனைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டாமோ… இதற்குள்…. மக்களின் சேவகர்கள் என்று, அந்த மக்களின் தலையிலேயே சம்பல் அரைத்திருக்கின்றார்கள்.
    • சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரை       சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கமைய,  பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக, அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் எட்டும். முன்னதாக சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பட்டியின் பெயர் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/சபாநாயகர்-பதவிக்கு-மூன்று-பெயர்கள்-பரிந்துரை/175-348719
    • தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம்!  தமிழரசுக்கட்சி சார்பாக  கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது.  தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தேசியத்துடன் பயணிக்கும் தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம் எனினும் நாளை (15) நடைபெறும் மத்திய குழுவில் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.   -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=197279
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.