Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகலிடம் தேடி பயணித்த கப்பல் கவிழ்ந்ததில் பலர் பலியாகி இருக்கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4142.jpg

கிரேக்க நாட்டின் பெலோபொன்னீஸ் தீபகற்பத்தின் கடற்கரையிலிருந்து 47 கடல் மைல்தூரத்தில் உள்ள சர்வதேசக் கடலில்  கப்பல் கவிழ்ந்ததில்  பலர் இறந்துள்ளதாக கிரேக்கஅதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. லிபியாவில் உள்ளடோப்ரூக்கில் இருந்து இத்தாலிக்கு நோக்கிப் புறப்பட்ட அந்தக் கப்பலில்500பேர்வரையில் இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவிக்கிறார்கள்.  

இதுவரையில்104 பேர்  மட்டுமே மீட்க பட்டிருக்கிறார்கள் இந்தக் கப்பலில் பயணம்செய்தவர்கள்  பெரும்பாலும் சிரியா, எகிப்து மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர்கள்என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

செவ்வாயன்று, சர்வதேசக் கடலில் பயணித்த இந்தக் கப்பலைப் பற்றிய தகவலைஇத்தாலிய அதிகாரிகள்  கிரேக்க நாட்டுக்குக்   கொடுத்திருக்கிறார்கள். Frontex விமானமும் பெலோபொன்னீஸ் தீபகற்பத்தின் தென்மேற்கே 47 கடல் மைல் தூரத்தில்இந்தக் கப்பலை கண்டு தகவல் கொடுத்திருக்கிறது.

இந்தக் கப்பலை அவதானித்த  கிரேக்க கடலோர காவல்படை அவர்களுக்கு உதவிகள்ஏதாவது  தேவையா என ஒலிவாங்கியின் மூலம் கேட்ட போது பயணிகள் உதவியை மறுத்து விட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல் அவர்களது கப்பலை கடந்து சென்ற ஒரு சரக்குக் கப்பலும் உதவ முன்வந்தபோது அதுவும் மறுக்கப்பட்டிருந்தது. பயணிகளது இலக்கு இத்தாலி என்பதாலும் அகதிகள் தொடர்பாக ஐரோப்பிய யூனியனில் சமீபத்தில் எடுக்கப்பட்ட முடிவும் கிரேக்க நாட்டின் அகதிகள்தொடர்பான செயற்பாடுகளும் அவர்கள் அந்த உதவிகளை மறுத்ததற்கான காரணங்களாக இருக்கலாம் என்ற கருத்து வைக்கப்படிருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

 

AFP9662139613056187932505586982574600107

79 பேர் இறந்துள்ளார்கள். நூறு பேர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 79 பலி

2-7.jpg

கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

தகவலறிந்து கடற்படைக் கப்பல்களுடன் இராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்த விபத்தில் சிக்கி 59 அகதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து பலத்த காற்றினால் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கிரேக்க கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணமால் போன பலரை தேடி வருகின்றோம் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 

 

https://thinakkural.lk/article/258470

  • கருத்துக்கள உறவுகள்

கிரேக்க கடற்பரப்பில் மூழ்கிய படகிலிருந்த 500 குடியேற்றவாசிகள் காணாமல்போயுள்ளனர்- ஐநா

Published By: RAJEEBAN

17 JUN, 2023 | 07:21 AM
image
 

கிரேக்க கடற்பரப்பில் மூழ்கிய படகிலிருந்த 500 குடியேற்றவாசிகள் காணாமல்போயுள்ளனர் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவகம் தெரிவித்துள்ளது.

பெருமளவு பெண்களுக்கும் குழந்தைகளிற்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை என மனித உரிமை அலுவலக பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்..

பெரும்வேதனையை அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த உயிரிழப்புகள் ஆள்கடத்தல்காரர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களிற்கான ஐநா மனித உரிமை ஆணையாளரின் அனுதாபச்செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.

குடியேற்றவாசிகள் பயணம் செய்வதற்கான வழிகளை திறக்கவேண்டும்,பொறுப்பை பகிரவேண்டும்,கடலில் மீட்கப்பட்ட அனைத்து மக்களும் பாதுகாப்பாக இறங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளரின் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிரேக்கத்தின் தென்பகுதியில் குடியேற்றவாசிகளுடன் மூழ்கிய படகில் 100 சிறுவர்கள் பயணித்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

greece_boat1.jpg

78பேர் உயிரிழந்துள்ளமை இதுவரை உறுதியாகியுள்ளது.750 பேர்வரை குறிப்பிட்ட மீன்பிடிபடகில் பயணித்தனர் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.

 

ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் பல எகிப்தியர்கள் உட்பட 9 பேர் கைதுசெய்ய்பபட்டுள்ளனர்.ஆபத்தினை தடுக்க முயலவில்லை என கிரேக்க கடலோரகாவல்படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன - எனினும் உதவிகள் மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

படகுகவிழ்ந்த பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

எகிப்திலிருந்து ஆட்கள் இன்றி புறப்பட்டபடகு லிபியாவின் டொபுருக் துறைமுகத்திலிருந்து குடியேற்றவாசிகளை ஏற்றியுள்ளது - இந்த குடியேற்றவாசிகள் இத்தாலிக்கு செல்லும் நோக்கி பயணித்துள்ளனர்.

படகில் பெருமளவு பெண்கள் சிறுவர்கள் காணப்பட்டமை குறித்த விபரங்களை உயிர்தப்பியவர்களிற்கு சிகிச்சைஅளித்த வைத்தியர்கள்  வெளியிட்டுள்ளனர்.

படகில்100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காணப்பட்டனர் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

greece_boat2.jpg

சிறுவர்கள் படகின் உட்பகுதியில் காணப்பட்டனர் என உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர் என  மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருவர் சிறுவர்களின் எண்ணிக்கையை தெரிவித்துள்ளனர் ஒருவர் 100 பேர் என தெரிவித்தார் மற்றையவர் 50 பேர் என தெரிவித்தார்  உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை என வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 600 பேர் உயிரிழந்திருக்கலாம் என தான் கருதுவதாக வைத்தியர் மகாரிஸ் தெரிவித்துள்ளார்- படகிலிருந்தவர்களின் எண்ணிக்கை 750 எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்- அனைவரும் இந்த எண்ணிக்கையையே தெரிவித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/157886

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.