Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் குடியுரிமை வழங்குவதில் பாரபட்சம்

Featured Replies

சுவிஸ் குடியுரிமை வழங்குவதில் பாரபட்சம்

_44113509_swissfansap203body.jpg

சுவிஸில் வெளிநாட்டவர் குடியுரிமை பெறுவது வெகு சிரமம்

சுவிட்சர்லாந்து நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற குடியுரிமை பெறுவதற்கான நடைமுறைகள், பெரிதும் பாரபட்சமானவை என்றும், பலரது கருத்தில் அவை, இனவாதத் தன்மை கொண்டவை என்றும் ஒரு புதிய அறிக்கை கூறுகின்றது.

இந்த அறிக்கையை வெளியிட்ட அந்த நாட்டின், இனப் பாகுபாடு குறித்த சமஸ்டி ஆணைக்குழு, குடியுரிமை வழங்குவதற்கான சுவிஸின் நடைமுறைகளில் பெரும் மாற்றங்கள் தேவை என்று பரிந்துரைத்துள்ளது.

குறிப்பாக ஒருவரது குடியுரிமைக்கான விண்ணப்பத்தை முடிவு செய்வது தொடர்பில், ஒரு சமூகத்தின் வாக்கெடுப்புக்கு அவற்றை விடும் நடைமுறையில் மாற்றங்கள் தேவை என்று அது கூறுகிறது.

_42123490_get203bodyqueue.jpg

சுவிஸில் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள்

ஐரோப்பாவிலேயே சுவிட்ஸர்லாந்துதான் மிகவும் கடுமையான குடியுரிமை பெறுவதற்கான சட்டங்களை கொண்டிருக்கிறது.

வெளிநாட்டவர்கள் அங்கு குடியுரிமையை பெறுவதற்கு முன்பாக 12 வருடங்கள் அங்கு வாழ்ந்திருக்க வேண்டும்.

சுவிட்சர்லாந்தில் பிறந்த காரணத்துக்காக மாத்திரம் வெளிநாட்டவர் ஒருவர் குடியுரிமை கோரமுடியாது.

இந்த நிலையில், குடியுரிமைக்கான முடிவுகள் எடுக்கப்படும் வழிமுறைகளை அந்த நாடு மாற்ற வேண்டும் என்று அந்த புதிய அறிக்கை கூறுகிறது.

- BBC

ஓ சுவிசில் இப்படியும் ஒரு பிரச்சனை இருக்கோ? :rolleyes:

மனித உரிமைகள், மனிதாபிமானத்திற்கு தாய் நாடாக இருக்கும் சுவிசுக்கு இவ்வாறான குடியுரிமை கொள்கைகள் அழகாகவா உள்ளன?

அப்படியென்றால் எங்கட ஆக்கள் எப்படி சுவிசில குடியுரிமை எடுக்கிறீனம்? இப்படியான நிலையில் எப்படி சுவிஸ் அரசியலில் எம்மவர்களால் குதிக்க முடியும்?

சுவிசில் உள்ள வாக்குரிமை பெற்ற தமிழர்களின் எண்ணிக்கை யாருக்கவது கிட்டத்தட்டவா தெரியுமா? சுவிசில் உள்ள குடியுரிமை பெற்ற தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு? சுவிசில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் வாழ்கின்றார்கள்?

அதெப்படி, ஒருவரது குடியுரிமைக்கான விண்ணப்பத்தை முடிவு செய்வது தொடர்பில், ஒரு சமூகத்தின் வாக்கெடுப்புக்கு அவற்றை விட முடியும்? அது என்ன சமூகம்? அங்கு எத்தனை பேர் விண்ணப்பத்தை பரிசீலனை செய்வார்கள்?

குடியுரிமை பெறுவதில் மாத்திரம் தானா இந்த சிக்கல் அல்லது லாண்டட் எடுப்பதிலும் இதே சிக்கலா? இதை பற்றி அஜீவன் அண்ணா அல்லது சுவிசில் உள்ள யாராவது விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

ஓ சுவிசில் இப்படியும் ஒரு பிரச்சனை இருக்கோ? :rolleyes:

அது மட்டுமல்ல... இனத்துவேசம் கூடிய நாடுகூட. முகத்துக்கு நேராகவே "சுவாற்ச சுவைன்" எண்டு சொல்லுவாங்கள். நீங்கள் அங்கு பதியும் (refugee claim) போது நீங்கள் விரும்பிய மாவட்டத்தில் வசிக்க முடியாது. அவர்கள் தரும் இடத்தில் தான் இருகக் முடியும்.

அஜீவன் அண்ணாக்கு வின்ரதூர் இல் இருந்து புகையிரதத்தில் றப்ஸ்வில் போற பாதையில் ப்பிஸ்ஸெந்தால் எண்ட இடம் தெரியுமோ (கிராமம்). சூரிச் இல் ஒர்லிகோன் ஞாபகம் இருக்கு.

கனடாக்கு வரமுதல் அங்கையும் ஒரு வருசம் குப்பை கொட்டின்னான். அப்ப அந்த நாடு பெரிசா பிடிக்க இல்லை. அந்த நேரம் சிறு வயது, உலக அறிவு இல்லை, மற்றைய கலாச்சாரங்கள் பற்றி தெரியாது, அதைவிட சொந்த பிரச்சனையள் வேற. அதனால அந்த நாட்டையோ மக்களையோ சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இப்ப போய்ப் பார்க்க விருப்பம்.

இப்ப போனால் அதுகும் tourist ஆ போனா வித்தியாசமான பார்வை இருக்கலாம். அஜீவன் அண்ணா, நான் உங்கு இருந்ததனால் (15 வருசத்துக்கு முதல்) அங்கு வரும் போது ஏதாவது சட்டசிக்கல்கள் பிரச்சனைகள் இருக்குமா?

நான் ஐரோப்பாவிற்கு குடிபெயரலாம் என யோசித்தபோது எனது முதலாவது தெரிவாக வந்தது சுவிஸ் நாடு. ஆனால், நீங்கள் அங்கு இனத்துவேசம் இருப்பதாக சொல்லுறீங்கள்? :D வார்த்தையால் பேசினால் பிரச்சனை இல்லை. ஜேர்மன் போல் வீட்டுடன், காருடன் வைத்து கொளுத்தினால் தான் ஆபத்து. qualified professionals category இல் நான் போகும்போது பிரச்சனை வராது என்று நினைக்கின்றேன். அமெரிக்காவில் கிறீண் கார்ட் லொத்தரி வீசாவில் போகின்றவர்களையும் குறிப்பிட்ட ஓர் இடத்திலேயே தங்கவைப்பார்கள் என்று கேள்விப்பட்டேன். உண்மை, பொய் தெரியாது. அகதிகளை சுவிசில் இவ்வாறு ஓர் மாவட்டத்தில் தங்கவைப்பது பிழையாக தெரியவில்லை. எல்லா நாடுகளிலும் பெரும்பாலும் இவ்வாறுதானே செய்கின்றார்கள்?

  • தொடங்கியவர்

சுவிஸ் எவருக்கு கீழும் இல்லை .

home01.jpg

http://www.unog.ch/

ஐநா கட்டிடம்சுவிஸின் ஜெனிவாவில் இருந்தாலும்

10 September 2002

(திருத்தம் செய்திருக்கிறேன்)

சுவிஸ் ஐநாவில் உறுப்பினர் ஆகியது.

http://news.bbc.co.uk/2/hi/europe/4612281.stm

கட்டிடம் மட்டுமே ஜெனிவாவில் இருக்கிறது.

பல நாட்டு ராஜதந்திரிகளும் இங்கு வாழுகிறார்கள்.

ஆனால்அங்கு உருவாகும் சட்டங்கள் உலகுக்கே தவிரசுவிஸுக்கு அல்ல :lol:

இதுதான் மேலே உள்ள செய்திக்கான பிரச்சனை.

உலகெங்கும் யுத்த மேகம் சூழ்ந்தாலும்

அக் காலத்தில் மட்டுமல்லஇன்றும் யுத்த மேகம் சூழாத

அமைதியான நாடாக சுவிஸ் இருப்பதால்

இக் காரியாலயங்கள் இங்கே அமைக்கப்பட்டன.

உலக தொழிலாளர் சம்மேளன தலைமையகம் கூட

ஜெனிவாவில்தான் இருக்கு

ஆனால் இங்கு வேலை நிறுத்தங்கள் நடப்பதில்லை?

uno-ilo.gif

http://en.wikipedia.org/wiki/International...ur_Organization

இங்கு பெரும்பாலான தமிழர்களுக்கு பிரஜா உரிமை கிடைத்திருக்கிறது.

குறிப்பாக கறுப்பர்களுக்கும் (காப்பிரியர்)

இஸ்லாமியர்களுக்கும்

யூகோஸ்லாவியர்களுக்கும்

கொடுக்கப்படும் பிரஜா உரிமை குறித்த பிரச்சனை உண்டு.

அதற்கு காரணம்

போதைப் பொருள்

கொள்ளை போன்ற

பல்வேறு கிரிமினல்களில்

இவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

விரல் விட்டு எண்ணக் கூடிய தமிழர்களே

இப்படியான தவறுகளில் ஈடுபட்டிருப்பது ஆறுதலான விடயம்.

ஒரு நாட்டுக்குள்

அந் நாட்டு சட்டங்களை மீறும் போது

பிரச்சனைகளில் மாட்டுவது இயல்புதானே?

தவிர சுவிஸ் ஒரு சிறிய நாடு

அடுத்து போலீஸாரின் கட்டுபாட்டில் இயங்கும் ஒரு நாடு.

அரசியல்வாதிகளால் தமது கருத்துகளை மட்டுமே முன் வைக்கலாம்

அதை நடைமுறைப்படுத்துவதா

நடைமுறைபடுத்தாமல் விடுவதா என தீர்மானிப்பது

சுவிஸ் மக்கள்தான்!

மக்கள் கருத்து கணிப்பு வாக்கெடுப்பில்

பாராளுமன்றம் கொண்டு வரும் சட்டத்தை

அதன் பின்னர்அதிகாரிகள் பின்பற்றுகின்றனர்

நடைமுறைப்படுத்துகின்றனர்.

பின்னர் அங்கே அரசியல்வாதிகளுக்கு வேலை கிடையாது.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

கனடாக்கு வரமுதல் அங்கையும் ஒரு வருசம் குப்பை கொட்டின்னான். அப்ப அந்த நாடு பெரிசா பிடிக்க இல்லை. அந்த நேரம் சிறு வயது, உலக அறிவு இல்லை, மற்றைய கலாச்சாரங்கள் பற்றி தெரியாது, அதைவிட சொந்த பிரச்சனையள் வேற. அதனால அந்த நாட்டையோ மக்களையோ சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இப்ப போய்ப் பார்க்க விருப்பம். இப்ப போனால் அதுகும் tourist ஆ போனா வித்தியாசமான பார்வை இருக்கலாம். அஜீவன் அண்ணா, நான் உங்கு இருந்ததனால் (15 வருசத்துக்கு முதல்) அங்கு வரும் போது ஏதாவது சட்டசிக்கல்கள் பிரச்சனைகள் இருக்குமா?

5 வருடத்துக்கு பின்னர் அது பிரச்சனை இல்லை.

இருந்தாலும்

இங்கு வர விரும்பினால்

அது குறித்து எவரிடமும் கூறுவதை இத்தோடு விட்டு விடுங்கள்.

ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால்

என்னை தொடர்பு கொள்ளுங்கள்!

இருந்தாலும் தேவையில்லாத செலவும்

மன உளைச்சலும் ஏன்?

அது நானில்லை என்ற பதிலை மனதில் வைத்திருங்கள். :)

Edited by AJeevan

நன்றி அஜீவன் அண்ணா விரிவான பதில்களிற்கு..

சுவிஸ் போனவருடம் தான் ஐ.நாவில் உறுப்புரிமை பெற்றதா? :)

  • தொடங்கியவர்

நன்றி அஜீவன் அண்ணா விரிவான பதில்களிற்கு..

சுவிஸ் போனவருடம் தான் ஐ.நாவில் உறுப்புரிமை பெற்றதா? :)

தவறாக சொல்லிவிட்டேன் கலைஞன்

மன்னிக்கவும்

10 September 2002ல்

UNE516.jpg

SWITZERLAND BECOMES THE 190TH STATE TO JOIN THE UNITED NATIONS

(10 September 2002)

UNE515.jpg

மேலதிக விபரங்களுக்கு:

http://www.un.org/av/photo/unhq/switzerland.htm

http://news.bbc.co.uk/2/hi/europe/1852461.stm

நன்றி அஜீவன் அண்ணா...

வேறு நாடுகளில் இருந்து படிப்பு, தொழில் பெற்று சுவிசுக்கு வருபவர்களிற்கு சுவிசில் நீண்ட காலம் இருப்பவர் என்ற முறையில் நீங்கள் கூறக்கூடிய அறிவுரை என்ன? சுவிஸ் நல்ல நாடுதானே?

அகதிகள் என்ற பிரிவுகள் தவிர்ந்து மற்றைய தொழில்தகமைகள் பிரிவுகளில் வருவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

நான் அங்கு பணியாற்றிய ஒரு சேர்ஜனுடன் உரையாடிய போது சுவிஸ் வாழ்க்கை செலவு கூடியது என்று மட்டும் சொன்னார்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிநபர் வருமானம் அதிகமானதாயிருக்கின்ற போது வாழ்க்கைச் செலவும் அதிகமாகத் தான் இருக்கும் போல.

ஆயினும் பிற ஐரோப்பிய நாடுகளில் யூரோவில் பெறும் சம்பளத்தை சுவிஸ் பிராங்கிற்கு மாற்றினால் வரும் பெறுமதியை விட அதிகமாக சுவிசில் சம்பளம் கிடைக்கிறது. :)

வெளிநாட்டவருக்கெதிரான புறுபுறுப்புக்கள் ஓர் பக்கம் நடக்கின்றன தான். அதிலும் ஸ்நோ கொட்டத் தாமதித்தாலே அதற்கு வெளிநாட்டார் தான் காரணமெனச் சொல்கின்ற சில வயது போனவர்களும் உண்டு.

அதே நேரம் மிக அன்பாகப் பழகுவர்களும் உண்டு. தவிர இலங்கைத் தமிழர்கள் மீது நல்ல அபிப்பராயம் உண்டென சொல்லும் பலரையும் சந்தித்துள்ளேன்.

  • தொடங்கியவர்

நன்றி அஜீவன் அண்ணா...

வேறு நாடுகளில் இருந்து படிப்பு, தொழில் பெற்று சுவிசுக்கு வருபவர்களிற்கு சுவிசில் நீண்ட காலம் இருப்பவர் என்ற முறையில் நீங்கள் கூறக்கூடிய அறிவுரை என்ன? சுவிஸ் நல்ல நாடுதானே?

அகதிகள் என்ற பிரிவுகள் தவிர்ந்து மற்றைய தொழில்தகமைகள் பிரிவுகளில் வருவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

நான் அங்கு பணியாற்றிய ஒரு சேர்ஜனுடன் உரையாடிய போது சுவிஸ் வாழ்க்கை செலவு கூடியது என்று மட்டும் சொன்னார்.

கல்வி எனும் போது Hotel Manegement க்கு மாத்திரம்தான் பொதுவாக வருகிறார்கள்.

http://www.ritz.edu/

ஜெர்மன் - பிரென்ஞ் - இத்தாலிதானே பிரதான கல்வி மொழி.

சில பகுதிகளில் ஆங்கில கல்வி நிலையங்கள் உண்டு.

http://www.american-college.com/front_content.php?idcat=9

http://www.learn4good.com/great_schools/sw...age_courses.htm

வேலை என வரும் பட்சத்தில்

அதை நீங்கள் இருக்கும் நாட்டிலிருந்துதான் உறுதி செய்ய வேண்டும்.

இது ஆங்கில அறிவைக் கொண்டு பணி செய்யக்கூடியவை.

இல்லை என்றால்

இங்கு மணமுடித்து வந்து

பின்னர் தொழில் தேட வேண்டும்.

இங்கே மொழி பிரச்சனை சற்று தலை தூக்கலாம்.

அதிஸ்டம் ....................இருந்தால் பிரச்சனை வராது.

அகதியாக வந்தால்

போராடி நிலைக்க வேண்டும்.

நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது.

நானும் அனுபவித்ததுதானே!

திறந்த சிறை என்ற நிலை

கல்வி கற்றவர்கள்

இங்கு அகதியாக வருவது போல

முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.

அதை அனுபவித்தவன் நான். :)

செலவு என்பது:-ஒவ்வொரு நாட்டின் வருவாய்க்கு ஏற்ற விதத்தில்தான்

வாழ்கை செலவு இருக்கும்.

அதை மாற்ற யாராலும் முடியாதுதானே?

இங்கு வேலை வாய்ப்பு குறித்து தேடுவதற்கு:-

http://www.learn4good.com/jobs/language/en...ry/switzerland/

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

அஜுவன் அண்ணா வேலை வாய்ப்பு சம்மந்தமாக தந்த இணைப்பை பார்த்தால் அவ்வளவுக்கு அதிக சம்பளம் மாதிரி தெரியவில்லை. கணனி பொறியியல் மற்றும் கணனி விஞ்ஞானம் போன்றவற்றுக்கு பார்த்தபோது. 45000 euro இல் இருந்து 65000 euro வரை போட்டிருக்கு. அனேகமான job postings க்கு ஜேர்மன் மொழி வேற தெரிஞ்சிருக்க வேண்டுமாம். அச்சம்பளத்தை இங்கையே இலகுவாக பெறமுடியும். ஜக்கிய அமெரிக்காக்கு போனால் அதைவிட கூட எடுக்கலாமே (சம்பளம் தான் முக்கியமெனின்). கலைஞன் என்ன துறை படிக்கிறிங்கள் (சொல்றது பிரச்சனை இல்யெண்டால் சொல்லுங்கள்)

Edited by Sabesh

  • தொடங்கியவர்

தவிர

நேற்று ஒரு கலைஞரோடு பேசிக் கொண்டிருந்த போது

அவரிடம் எமது திருமண முறை குறித்த பேச்சு வந்தது.

அப்போது

அவர் சொன்னார்

ஆரம்ப காலத்தில்

உங்கள் நாடுகளில் இருப்பது போல

சுவிஸிலும் திருமணம் புரியும் வரை

ஆணும் பெண்ணும் ஒன்றாக இருக்கவோ

பேசவோ கூட முடியாதாம்.

அப்படியானவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்க

  • தொடங்கியவர்

அஜுவன் அண்ணா வேலை வாய்ப்பு சம்மந்தமாக தந்த இணைப்பை பார்த்தால் அவ்வளவுக்கு அதிக சம்பளம் மாதிரி தெரியவில்லை. கணனி பொறியியல் மற்றும் கணனி விஞ்ஞானம் போன்றவற்றுக்கு பார்த்தபோது. 45000 euro இல் இருந்து 65000 euro வரை போட்டிருக்கு. அனேகமான job postings க்கு ஜேர்மன் மொழி வேற தெரிஞ்சிருக்க வேண்டுமாம். அச்சம்பளத்தை இங்கையே இலகுவாக பெறமுடியும். ஜக்கிய அமெரிக்காக்கு போனால் அதைவிட கூட எடுக்கலாமே (சம்பளம் தான் முக்கியமெனின்). கலைஞன் என்ன துறை படிக்கிறிங்கள் (சொல்றது பிரச்சனை இல்யெண்டால் சொல்லுங்கள்)

இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து வருவோருக்கு இது பெரிய சம்பளம் சுபேஸ்.

இது ஆரம்ப சம்பளம்தானே?

3 மாதத்துக்கு பின் அதிகரிக்கிறதே?

சுவிஸ் மொழி குறித்து ஏற்கனவே சொன்னேன்.

வெளிநாட்டு ஏஜன்சிகளில் இருந்து வருவோருக்கு இது தடையாவதில்லை.

வந்த பின்னர் இவர்கள் சுவிஸிலுள்ள மொழி கற்கிறார்கள்.

அதற்கான பணத்தை பல நிறுவனங்கள் கொடுக்கின்றன.

சில கொடுப்பதில்லை.

அது அவரவர் பிரச்சனை என்று இருந்து விடுகிறது.

இங்கு வாழ இந்த மொழிகளை ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும்.

அகதிகளாக வந்த எமக்கு

மொழி கற்கவோ அல்லது

ஏதாவது ஒரு துறையில் கற்கவோ

சுவிஸ் அரசு தடையாகவே இருந்தது.

அது யாருக்கும் வெளிப்படையாக தெரியவில்லை.

அதற்கு காரணம்

இலங்கையர் சுவிஸில் தொடர்ந்து வாழ மாட்டார்கள்

பிரச்சனை தீர்ந்ததும் போய் விடுவார்கள் என்றே நினைத்தார்கள்.

எனவே

அகதிகளை விசாரிக்கும் போது

"உங்கள் நாட்டு பிரச்சனை முடிந்தால் திரும்பிச் செல்வீர்களா?"

எனும் கேள்வியை கேட்பார்கள்.

அனைவரும் ஆம் என்றுதான் சொல்வார்கள்.

திரும்பி போகப் போகும் ஒருவருக்கு

கல்விக்காக செலவழிப்பது முட்டாள்தனம் என்றும்

கல்வி கற்றுக் கொண்டிருக்கும் ஒருவரை

பிரச்சனை தீர்ந்தால் இடையில் திருப்பி அனுப்புவது முடியாது என்றும்

முடிவு செய்தார்கள்.

காரணம்

இலங்கையில் இதே மொழியில் அவரது கல்வியை தொடர முடியாதே?

என்றும் யோசித்து அதை ஊக்கப்படுத்தாமல் விட்டு விட்டார்கள்.

அதை பலர் விரும்பவே இல்லை.

ஒரு சிலர் மட்டும்

தனது விருப்பத்தின் பேரில் கற்றார்கள்.

மற்றவர்கள் மொழி பேசுவதோடும்

அரை குறையாக வாசிப்பதோடும் சரி

இது ஒரு பெரும் கொடுமை.

பல தவறுகள் மொழி புரியாத நிலையில்தான்

எம்மவர்கள் செய்திருக்கிறார்கள்.

மொழி புரியாமல்

சிலர் கூறுவதை நம்பி

கையெழுத்து போட்டு ஏமாற்றப்பட்டவர்கள் அநேகர்.

அவற்றை பலர் வெளியே சொல்லிக் கொள்வதில்லை.

இங்கு கல்வி கற்கும் எமது குழந்தை செல்வங்கள்தான்

தமிழர்கள் அறிவு ஜீவிகள் என்பதை நிரூபித்து வருகிறார்கள்.

அந்த வகையில்

ஐரோப்பாவின் பல அண்டை நாடுகளை மெச்சலாம்.

அங்கு கல்வி கற்க அந்த நாடுகள் வழிகாட்டின.

கற்றுக் கொள்ளாமல் இருந்தது அவர்களது தவறு.

  • தொடங்கியவர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நீல அட்டை

September 15th, 2007

அமெரிக்காவின் கிரீன் கார்ட் போலவே இங்கிலாந்து உட்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடிபுக 2 கோடி நீல அட்டைகளை தகுதியுள்ள ஆசியர்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தரவுள்ளது. இந்ததிட்டம் அடுத்தமாதம் வெளியிடப்படும்.

International

Europe mulls 'blue card' for Asian migrants

London, Sept. 15 (PTI): Good news for those planning to emigrate to Europe. The European countries, including Britain, may soon open their borders to an extra 20 million workers from Asia.

Yes, the European Union is planning to introduce a new 'blue card' scheme modelled on the American 'green card' work permit, the media reported here on Friday, quoting EU's Justice Commissioner Franco Frattini as saying.

According to Frattini, the 'Blue EU Labour Card' would allow qualified migrants from Asian and African countries the right to live, work and travel in the 27 member states. "The plan will be unveiled next month," he said.

http://www.hinduonnet.com/thehindu/holnus/...00709150302.htm

Edited by AJeevan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.