Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றச் செயல்களோடு தொடர்புடையவர்களிடம் பொலிஸார் காட்டிக்கொடுக்கின்றனர் - கிராம அலுவலர்கள் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
24 JUN, 2023 | 07:05 PM
image
 

யாழில் சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்களை கிராம சேவையாளர்கள் பொலிஸாருக்கு வழங்கினால், தகவல்களை வழங்கிய அந்த கிராம சேவையாளர்களின் பெயர்களை சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு பொலிஸார் வழங்குவதாக கிராம அலுவலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (23) அமைச்சரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாவட்ட கிராம அலுவலர்களுக்கு இடையிலான சந்திப்பின்போதே அலுவலர்கள் மேற்படி கருத்து தெரிவித்தனர். 

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

IMG-20230624-WA0144.jpg

கிராமத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளோடு தொடர்புடையவர்களின் பெயர்கள் மற்றும் சில விபரங்களை கிராம சேவையாளர்கள் பொலிஸாருக்கு வழங்குகின்றனர்.

பொலிஸாருக்கு தகவல் வழங்கும் கிராம சேவையாளரின் பெயரை சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள், சில மணித்தியாலங்களுக்குள்ளேயே அந்த பொலிஸார் மூலமாக அறிந்துகொள்கிறார்கள்.

யாழ். மாவட்டத்தில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி மற்றும் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவது போன்ற குற்றச் செயல்கள் தொடர்கின்றன.

இச்சம்பவங்களோடு தொடர்புடைய கிராம மட்டத்தில் இருக்கும் நபர்களின் பெயர் விபரங்களை பொலிஸ் நிலையத்துக்கு வழங்குகிறோம். 

குற்றச் செயல்களோடு தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்களை வழங்கிய பின்னர், சில மணித்தியாலங்களில் எந்த கிராம சேவையாளர், யாருடைய பெயரை கொடுத்தார் என்ற விபரம் சந்தேக நபர்களிடம் செல்கிறது.

இந்த தகவல்களை கிராம சேவையாளர்கள் பொலிஸாருக்கு வழங்கும்போது அவற்றை பொலிஸார் சந்தேக நபர்களுக்கு, இவர்தான் கூறினார் என தெரிவிக்கிறார்கள். 

இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களால் கிராம சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கூறப்படுகிறது என தெரிவித்தனர்.  

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

தகவல் வழங்கும் கிராம சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமானால், எனக்கு விபரங்களை அனுப்புங்கள். அல்லது உங்கள் பிரதேச செயலாளர் ஊடாக அரசாங்க அதிபருக்கு தகவல்களை அனுப்புவதன் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

IMG-20230624-WA0145.jpg

IMG-20230624-WA0147.jpg

IMG-20230624-WA0146.jpg

https://www.virakesari.lk/article/158499

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

இந்த தகவல்களை கிராம சேவையாளர்கள் பொலிஸாருக்கு வழங்கும்போது அவற்றை பொலிஸார் சந்தேக நபர்களுக்கு, இவர்தான் கூறினார் என தெரிவிக்கிறார்கள். 

தமிழர் பிரதேசத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கும், தடுக்க முடியாமைக்கும், சிலர் சமூக நலன்களிலிருந்து விலகி இருப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குவதற்கும் இதுதான் முக்கிய காரணம். இரண்டு பக்கமும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதும், லஞ்சம் பெறுவதுமே பொலிஸாரின் வேலை.இதற்கு சீருடை, அதிகாரம், சம்பளம் வேற. இதில் நலிந்த பக்கமுடையோரை, லஞ்சம் கொடுக்க மறுப்போரை  போட்டுத்தாக்கி தம் வீரத்தைகாட்டுவர். இதில நம்ம சட்டத்தரணிகள் மட்டும் குறைந்தவர்களல்ல.  

7 hours ago, ஏராளன் said:

அமைச்சரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாவட்ட கிராம அலுவலர்களுக்கு இடையிலான சந்திப்பின்போதே அலுவலர்கள் மேற்படி கருத்து தெரிவித்தனர். 

போக இடமில்லாமல் ஓநாயிடம் போய் முறையிட்டதாம் ஆட்டுக்குட்டியொன்று! இன்னுமா இந்தக்கொலைஞனை நம்புகிறார்கள்? ஒரு வேலையும் உருப்படியாய் செய்வதில்லை, எல்லாவற்றுக்குள்ளும் மூக்கை நுழைத்து கருத்து சொல்வதும், அறிக்கை விடுவதும், வெற்று வாக்குறுதி கொடுத்து மக்களை தம் பக்கம் வைத்து சிங்களத்துக்கு வக்காலத்து வேண்டவுமே சிங்களம் இவரை அவசரமாக அழைத்து, அமைச்சுப்பதவி கொடுத்து வைத்திருக்கு. எஜமான் எதை செய்கிறாரோ, அவர்களின் அடிமை அதை பிரதி எடுக்கும்.  .

7 hours ago, ஏராளன் said:

தகவல் வழங்கும் கிராம சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமானால், எனக்கு விபரங்களை அனுப்புங்கள்.

இவர் தனக்குள் தான் பெரிய அரிச்சந்திரன் என்கிற நினைப்பு. ஒட்டுக்குழுத்தலைவன்! தகவலை இவர்களிடம் பெற்று பொலிஸாருக்கும் தனது கட்டளையை நிறைவேற்றும் அடாவடிகுழுக்களுக்கும் அனுப்புவார் என்றது கூட முறையிட்டவர்களுக்கு தெரியாதது பெரும் கவலைக்குரிய விசயமே! தமிழன் பலவழிகளிலும் பந்தாடப்படுகிறான். சிங்களம் தான் நினைத்ததை சாதிப்பதற்கு, தமிழனுக்கு கொடுக்கும் நெருக்கடி, நீதி கிடைக்காமல் செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவது, ஆனால் ஒரு பச்சோந்தியை தலைவனாக்கி, நாம் நல்லிணக்கத்தை உருவாக்குகிறோம் என பிரச்சாரம் செய்வது. இவர்கள் நியமிக்கும் ஏஜெண்டுகளின் காரணம், முகத்திரையையும் சேர்த்துக்கிழிக்க வேண்டும். காலமதை செய்யும். அப்போ, இப்போ பெறும் போலி மரியாதையை விட, பெருத்த அவமானமும் இழப்பும் தண்டனையும் பெறுவர். காலம் கொடுக்கும் அவகாசத்தை சரியாக பயன்படுத்தாவிட்டால்; அது தன் கடமையை சரியாக, கொடுமையாக செய்யும். இருபகுதிக்குந்தான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

தமிழர் பிரதேசத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கும், தடுக்க முடியாமைக்கும், சிலர் சமூக நலன்களிலிருந்து விலகி இருப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குவதற்கும் இதுதான் முக்கிய காரணம். இரண்டு பக்கமும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதும், லஞ்சம் பெறுவதுமே பொலிஸாரின் வேலை.இதற்கு சீருடை, அதிகாரம், சம்பளம் வேற. இதில் நலிந்த பக்கமுடையோரை, லஞ்சம் கொடுக்க மறுப்போரை  போட்டுத்தாக்கி தம் வீரத்தைகாட்டுவர். இதில நம்ம சட்டத்தரணிகள் மட்டும் குறைந்தவர்களல்ல.  

கசிப்பு காய்ச்சுவோர் விடயத்தில் முறைப்பாட்டாளரை போட்டுக் கொடுப்பது வழமை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். தகவல் கொடுத்துவிட்டு வீட்டுக்கு போகுமுன்னரே அவர்களுக்கு தகவல் போய் விடுகிறது. எப்படி இவர்களை நம்பி தகவல்கொடுப்பது. 

இப்போது சடடவிரோத ஆயுதம் தொடர்பாக தகவல் கேட்க்கிறார்கள். இப்பவே ஒவ்வொருநாளும் தெடகில் இரண்டு , மூன்று கொலைகள் நடக்குது. இனி எத்தனை தலைகள் உருளப்போகுதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.