Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்பா, ஜிம், அழகு சாதனங்கள் …! புட்டினுக்காக தயாரிக்கப்பட்ட சொகுசு ரயில் பெட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளி உலகம் அதிகம் அறியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

லண்டனில் உள்ள ரஷ்ய துப்பறியும் நிறுவனம் டோசியர் சென்டர் (Dossier Center). நாடு கடத்தப்பட்ட ஒரு முன்னாள் ரஷ்ய எண்ணெய் அதிபரும், தற்போதைய ரஷ்ய விமர்சகருமான மைக்கேல் கோடோர்கோவ்ஸ்கி என்பவரால் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் புட்டினின் ரகசிய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில பல ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பினை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறது.

ரஷ்ய ரயில்வேத்துறை, புட்டின் பயணம் செய்யும் ரயிலில் அவர் உபயோகிக்கும் பெட்டியின் வடிவமைப்பு வேலைகளை ஜிர்கான் சர்வீஸ் எனும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இவர்களிடமிருந்து டோசியர் சென்டர் இந்த தகவல்களை பெற்றுள்ளது.

16.jpg

அந்த ரயிலின் விவரங்களில், பெட்டி எண் 021-78630 முக்கியத்துவம் பெறுகிறது. இது புட்டினுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அனைத்து உயர்ரக வசதிகள் அடங்கியது.

இதில் ஆடம்பரமான உடற்பயிற்சி கூடம் மற்றும் ஸ்பா போன்றவை உள்ளது. இந்த பெட்டி தயாரிக்கும் பணிகள் 2018 இல் நிறைவடைந்திருக்கிறது.

உடற்பயிற்சிக்கான இத்தாலிய தயாரிப்பான டெக்னோஜிம் எடைகள் மற்றும் உடற்பயிற்சி கருவிகள் இதில் முதலில் பொருத்தப்பட்டிருந்தது. பின்னர், அமெரிக்காவின் ஹாய்ஸ்ட் கருவிகளால் இவை மாற்றியமைக்கப்பட்டது.

அந்த பெட்டியில் ஒரு முழு அழகுசாதன மையத்தில் மசாஜ் டேபிள் மற்றும் உடல் தோலின் இறுக்கத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் உயர்ரக ரேடியோ அதிர்வெண் இயந்திரம் உட்பட அனைத்து விதமான சிறப்பு அழகு சாதனங்களும் இருக்கின்றன.

உளவு பார்க்கும் மற்றும் ஒட்டுகேட்கும் கருவிகள் பயன்படுத்துவதைத் தடுக்க உதவும் வகையில் அந்த பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுவதுமாக சிறப்பான முறையில் டைல்ஸ் ஒட்டப்பட்ட ஒரு முழு துருக்கி நாட்டின் நீராவி குளியல் மற்றும் ஷவர் உள்ள குளியலறை புட்டின் பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தான் கண்காணிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக புட்டின் ரயில் பயணத்திற்கு அதிகளவில் திரும்பியுள்ளார் என ரஷ்யாவை விட்டு வெளியேறிய ரஷ்ய பெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் முன்னாள் கெப்டனான கிளெப் கரகுலோவ் கூறுகிறார்.

ரஷ்ய- உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து மொஸ்கோவிற்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குமிடையே உள்ள தொலைதூர ரஷ்ய பகுதியான வால்டாய் அருகே புட்டினின் ரயில் கணிசமான நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.

ஊழியர்கள் இந்த சிறப்பு ரயிலுக்காக தனிமைப்படுத்தப்பட்டு வேலை செய்கின்றனர். ரயில் புறப்படாமல் இருக்கலாம், ஆனால் பணியாட்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள் என கரகுலோவ் கூறியுள்ளார்.

மேம்பட்ட தகவல்தொடர்பு ஆண்டெனாவைக் குறிக்கும் ஒரு வெள்ளை டோம் புட்டினின் ரயிலின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை கொண்டுதான் இந்த ரயிலை அடையாளம் கண்டுகொள்கின்றனர். பிற ரயில்களில் இது இருக்காது எனபது குறிப்பிடத்தக்கது.

வாக்னர் அமைப்பின் கிளர்ச்சிக்கு பிறகு புட்டின் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் கலந்து கொள்கிறார். ஆனால், அதற்கு இந்த ரயிலை பயன்படுத்தினாரா? என்பது ஊர்ஜிதமாகவில்லை.

https://thinakkural.lk/article/262497

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய ஜனாதிபதி  புதினின் ‘கோஸ்ட் ட்ரெயின்’ : கசிந்த புதிய தகவல்கள்

1046471.jpg  
 

 ரஷ்ய ஜனாதிபதி  புதின் பயன்படுத்தும் ஆடம்பர ரயில் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதினின் குற்ற நடவடிக்கைகள், போர்க் குற்றங்கள் என்று தொடர் செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனம் ஒன்று, உக்ரைன் போருக்குப் பின்னர் விமான பயணங்களை தவிர்த்து ஆடம்பர ரயிலில்தான் புதின் பயணங்களை மேற்கொள்கிறார் என்று ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. ‘கோஸ்ட் ட்ரெயின்’ (GHOST TRAIN) என்று அழைக்கப்படும் அந்த ரயிலில் உடற்பயிற்சிக் கூடங்கள், மசாஜ் நிலையங்கள், அழகு சாதன மையம் , ஆடம்பர குளியலறைகள் உள்ளிட்டவை உள்ளன.

அந்தத் தகவலின்படி , புதினின் இந்த ரயில் தற்போது 60 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ரயிலில் ‘ஆன்டி ஏஜிங் மெஷின்கள்’, நுரையீரல் வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் உள்ளன. மேலும், ரயிலின் சில பகுதிகள் துப்பாக்கிக் குண்டுகளை தாங்கும் வகையில் கவசத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

 

1689064709355.jpg

 

ஆடம்பர வசதிகளை தாண்டி புதின் இந்த ரயிலை பயன்படுத்துவதற்கு காரணம், விமானங்களைப் போல் இந்த ரயிலை கண்காணிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. புதின் பயன்படுத்தும் இந்த ரயிலை போல் ரஷ்யாவில் இன்னும் சில ரயில்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

 

1689064725355.jpg

இந்த நிலையில், புதின் உயிர் பயத்தின் காரணமாக விமான பயணங்களை தவிர்த்து வருவதாகவும், அதனால்தான் இந்த ஆடம்பர ரயிலை அவர் பயணிப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://thinakkural.lk/article/262568

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Buy Air Force One Bedroom | UP TO 58% OFF

Air force one shower, fuera de 63% venta de liquidación - nmdbonline.com

அமெரிக்க சனாதிபதி ஆடம்பர,அதியுச்ச பாதுகாப்புடன் விமானத்தில் உலகம் சுற்றினால் பெருமையாம். ஆனால் புட்டின் ஆடம்பர ரயிலில் பயணம் செய்தால் கேவலமாம்,பயமாம்.:grinning_face_with_sweat:

அமெரிக்க சனாதிபதிகள் போகும் நாடுகளுக்கெல்லாம் தங்கள் சொந்த வானூர்திகளையும், பாதுகாப்பு மிகுந்த கார்களையும் ஏன் பயன்படுத்துகின்றார்கள் என்று கேட்டால் குதர்க்கம் என்பார்கள்.
:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

Buy Air Force One Bedroom | UP TO 58% OFF

Air force one shower, fuera de 63% venta de liquidación - nmdbonline.com

அமெரிக்க சனாதிபதி ஆடம்பர,அதியுச்ச பாதுகாப்புடன் விமானத்தில் உலகம் சுற்றினால் பெருமையாம். ஆனால் புட்டின் ஆடம்பர ரயிலில் பயணம் செய்தால் கேவலமாம்,பயமாம்.:grinning_face_with_sweat:

அமெரிக்க சனாதிபதிகள் போகும் நாடுகளுக்கெல்லாம் தங்கள் சொந்த வானூர்திகளையும், பாதுகாப்பு மிகுந்த கார்களையும் ஏன் பயன்படுத்துகின்றார்கள் என்று கேட்டால் குதர்க்கம் என்பார்கள்.
:rolling_on_the_floor_laughing:

நீங்கள் ஒரு இன்பச் சுற்றுலா செய்தால் என்ன புகையிரதத்தில்😛😛

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.