Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய இந்தியா - அஸ்வின் அரிய சாதனை

அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வெளிநாடுகளில் சிறப்பான பந்துவீச்சு, 5 விக்கெட் வீழ்த்தியது, 700 விக்கெட்டுகளைக் கடந்தது என அஸ்வின் தனது இருப்பை மீண்டும் நிரூபித்துள்ளார்.

அஸ்வினின் அபாரமான பந்துவீச்சால் டோமினிகாவில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது.

அற்புதமாகப் பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரின் டெஸ்ட் வாழ்க்கையில் 33-வது முறையாக 5-வது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

24.3 ஓவர்கள் வீசிய அஸ்வின் 6 மெய்டன்கள் எடுத்து, 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வினுக்கு துணையாகப் பந்துவீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

 

இந்தியா வலுவான தொடக்கம்

ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல்நாள் ஆட்டத்தின் பிற்பகல் தேநீர் இடைவேளைக்குப்பின் முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 23 ஓவர்களில் 80 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும், மேற்கிந்தியத்தீவுகள் அணியைவிட 70 ரன்கள் குறைவாக இந்திய அணி இருக்கிறது.

அறிமுக வீரராகக் களமிறங்கிய ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும், கேப்டன் ரோஹித் சர்மா 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

சொதப்பல் பேட்டிங்

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கு தகுதிபெறாமல் வெளியேறிய நிலையில் நம்பிக்கையற்றநிலையில் மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்த டெஸ்டை எதிர்கொண்டது. அதற்கு ஏற்றார்போல் அந்த அணியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக பேட் செய்தனர்.

31 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த மேற்கந்தியத்தீவுகள் அணி அடுத்த 35 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதேபோல 117 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த அந்த அணி, அடுத்த 33 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது.

 

நம்பிக்கையளித்த அறிமுக வீரர்

இளம் வீரர் அலிக் அதானேஸ்(47) ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோராகும். அதானேஸ் பேட்டிங்கில் ஒருவிதமான ஆக்ரோஷம், ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடியது, மோசமான பந்துகளை பவுண்டரி, சிக்ஸருக்கு விரட்டியது என அனுபவமிக்க பேட்டர்போல் ஆடினார். ஆனால், அஸ்வின் பந்துவீச்சில் பேட்டில் எட்ஜ் எடுத்து கேட்ச்கொடுத்து அதானேஸ் ஆட்டமிழந்தார்.

ஏற்கெனவே ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்து சாதனை படைத்த அதானேஷ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இந்த ஸ்கோரை அடித்துள்ளார்.

அதற்கு அடுத்தார்போல் கேப்டன் பிராத்வெய்ட் சேர்த்த 20 ரன்கள்தான் அதிகபட்சமாகும். ஒட்டுமொத்தமாக மேற்கிந்தியத்தீவுகள் பேட்டிங் பல்இல்லாத நிலையில் இந்தியப் பந்துவீச்சை எதிர்த்து விளையாட திராணியற்று இருந்தது.

கணிக்கத் தவறிய பிராத்வெய்ட்

பிராத்வெய்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த மேற்கிந்தியத்தீவுகள் கேப்டன் பிராத்வெய்ட், ஆடுகளத்தின் ஈரப்பதத்தை கணிக்கவும் தவறிவிட்டார். ஒருவேளை பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்திருந்தால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் நெருக்கடி அளித்திருப்பார்கள். முதல்நாள் ஆட்டம் ஸ்வாரஸ்யமாக நகர்ந்திருக்கும்.

ஆனால், ஆடுகளத்தின் ஈரப்பதத்தை இந்தியப் பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்தி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு நெருக்கடி அளித்தனர்.

ஜெய்ஸ்வால் நிதானம்

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை டி20 போட்டிகளில் பிரமாதப்படுத்திய ஜெய்ஸ்வாலுக்கு அறிமுக ஆட்டமாக இருந்தது. நிதானமாகத் தொடங்கிய ஜெய்ஸ்வால், முதல் ரன்னை அடிக்க 16 பந்துகளை எடுத்துக்கொண்டு, அல்ஜாரி ஜோஸப் ஓவரில் பேக்வர்ட் பாயிண்ட் திசையில் பவுண்டரி அடித்து தனது ரன்கணக்கைத் தொடங்கினார். அதன்பின் தனது வழக்கமான பாணியில் ஜெய்ஸ்வால் ஆடத் தொடங்கி, ரன்களைச் சேர்த்தார்.

ரோஹித் சர்மா கடந்த பல டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை, 30 ரன்கள் சராசரியைக் கூட எட்டவில்லை என்று முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்திருந்தனர்.

அதற்குப் பதிலடியாக இந்த டெஸ்டில் ரோஹித் சர்மா நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்துள்ளார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தநிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்த ஜோடி நீடிக்குமா அல்லது பிரிக்கப்படுமா என்பது தெரியும்.

ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நெருக்கடி தரும் பந்துவீச்சு

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ரக்கீம் கார்ன்வால், வாரிகன் இருவரும் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மாவுக்கு பெரிதாக நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீசவில்லை. ஆடுகளத்தில் ஈரப்பதம் காய்ந்தபின் பந்து நன்றாக சுழன்றாலும், அதை விக்கெட் ஆக்கும் முயற்சியில் பந்துவீச்சு அமையவில்லை.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பிராத்வெய்ட், சந்தர்பால் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆடுகளத்தின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி முகமது சிராஜ் நெருக்கடி அளிக்கும் விதத்தில் பந்துவீசினார். பிராத்வெய்ட்டுக்கு 3 முறை பந்து பேட்டில் அவுட்சைட் எட்ஜ் எடுத்தாலும் அது கேட்சாகவில்லை.

வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். தனது முதல் 4 ஓவர்களில் 4 ரன்கள் கொடுத்து 2 மெய்டன்களையும் எடுத்தார்.

 

தந்தையும், மகனும்-அஸ்வினும்

9-வது ஓவரில் அஸ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார். அதற்கு ஏற்ற பலனும் கிடைத்தது. சர்வதேச அளவில் பெருத்த அனுபவம் கொண்ட அஸ்வின், மேற்கிந்தியத்தீவுகளுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டிருந்ததால் ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்திருந்தார்.

அரவுண்ட் தி விக்கெட்டில் இருந்து அஸ்வின் வீசிய பந்தை தடுத்து ஆட சந்தர்பால் முயன்றார். ஆனால், ஆடுகளத்தின் ஈரப்பத்தில் பந்து மெதுவாக வந்து சுழன்று பேட்டின் நுனையில் பட்டு க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

சந்தர்பாலின் தந்தை ஷிவ்நரைன் சந்தர்பாலை இதற்குமுன் 4 முறை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தநிலையில் அவரின் மகனையும் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தையையும், மகனையும் ஆட்டமிழக்கச் செய்த 5-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.

அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் கேப்டன் பிராத்வெயிட் பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு எக்ஸ்ட்ராகவர் திசையில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அஸ்வினை பந்துவீச அழைத்தமைக்கு 2 விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே வீழ்த்திக்கொடுத்து நெருக்கடியளித்தார்.

ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரிலேயே ரேமன் ரீபர் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் அருமையாக கேட்ச் பிடிக்கவே ரீபர் 2 ரன்னில் வெளியேறினார்.

ரவிந்திர ஜடேஜா தனது பங்கிற்கு பிளாக்வுட் விக்கெட்டை வீழ்த்தினார். மிட்ஆப் திசையில் முகமது சிராஜ் ஒற்றைக்கையில் அருமையாக கேட்ச் பிடித்து பிளாக்வுட்டை பெவிலியன் அனுப்பினார். உணவு இடைவேளைக்குச் செல்லும்போது மேற்கிந்தியத்தீவுகள் அணி 4 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் சேர்த்திருந்தது.

அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிரூபித்த அஸ்வின்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாய்ப்புக் கிடைக்காமல் இருந்த அஸ்வின் இந்த டெஸ்டில் தனது இருப்பை தொடக்கத்திலேயே நிரூபித்தார். 2 செசன்களிலும் அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத்தீவுகளுக்கு நெருக்கடி அளித்தார்.

முதல் செசனில் அஸ்வின் சந்தர்பாலையும், பிராத்வெய்டையும் வீழ்த்தினார். 2வது செசனில் அல்ஜாரி ஜோஸப், அலிக் அதானேஸ், ஜோமல் வாரிக்கன் ஆகியோர் விக்கெட்டுகளை சாய்த்து அஸ்வின் நிரூபித்தார்.

ஹோல்டர் ஏமாற்றம்

உணவு இடைவேளைக்குப்பின், 2-வது செசன் தொடங்கியது. அஸ்வின், ஜடேஜா தங்கள் ராஜ்ஜியத்தை தொடர்ந்தனர். ஜோஷ்வா டி சில்வா 2 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அஸ்வினின் கூக்ளி, கேரம்பால் போன்றவை ஹோல்டர், அதானேஷுக்கு பெரிய குடைச்சலாக இருந்தது. அதேநேரம் அஸ்வின் ஏதேனும் தவறான பந்தை வீசினால் அதை பவுண்டரிக்கு அனுப்பவும் இருவரும் தவறவில்லை.

சிராஜ் பந்துவீச அழைக்கப்பட்டார். ஹோல்டரின் பலவீனம் அறிந்து அவருக்கு ஷார்ட் பந்தை சிராஜ் வீசவே அதை ஹோல்டர்(18) டீப்-பேக்வார்ட் திசையில் தூக்கி அடித்தார். ஆனால், அங்கு நின்றிருந்த தாக்கூர் கேட்ச் பிடித்து அவரை வீழ்த்தினார்.

அடுத்துவந்த அல்ஜாரி ஜோஸப் 4 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். விக்கெட்டுகள் சரிந்தாலும் அரைசதம் நோக்கி நகர்ந்த இளம் வீரர் அதானேஷ் 47 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி வரிசையில் களமிறங்கிய கீமர் ரோச்(1) ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார், வாரிகன் ஒரு ரன்னில் அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தார்.

3வது செசன் தொடங்கிய 25 நிமிடங்களில் மேற்கிந்தியத்தீவுகளின் முதல்இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 64.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி ஆட்டமிழந்தது.

அஸ்வின் சாதனை

இந்த டெஸ்டில் அஸ்வின் புதிய சாதனையைப் படைத்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அனைத்திலும் சேர்த்து 700 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர்களில் 3வது இடத்துக்கு அஸ்வின் முன்னேறி மைல்கல் எட்டியுள்ளார்.

தற்போது அஸ்வின் 702 விக்கெட்டுகளுடன் இருக்கும் நிலையில், 2வது இடத்தில் இருக்கும் ஹர்பஜன் சிங்கின் 707 விக்கெட்டுகளை முறியடிக்க இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த டெஸ்டிலோ அல்லது அடுத்த போட்டியிலோ அஸ்வின் முறியடித்து 2வது இடத்துக்கு முன்னேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cv2j70px0deo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெய்ஸ்வால்: மேற்கிந்தியத் தீவுகளை மிரள வைத்த இளைஞன்

ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இளம் வீரர் ஜெய்ஸ்வால், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் அபாரமான சதத்தால் டோமினிக்காவில் நடந்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்துள்ளது.

2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 113 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்து 162 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

அறிமுக டெஸ்டில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

ஜெய்ஸ்வால் சாதனை சதம்

அறிமுக ஆட்டத்திலேயே தொடக்க வீரராக களமிறங்கி சதம் அடித்த 3வது இந்திய பேட்டர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். இதற்கு முன் பிரித்வி ஷா, ஷிகர் தவண் பெற்றிருந்தனர். ஒட்டுமொத்தத்தில் அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்த 17-வது இந்திய பேட்டராக ஜெய்ஸ்வால் இடம் பெற்றார்.

 

இந்தியாவுக்கு வெளியே அறிமுகப் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பேட்டராக செளரவ் கங்குலி இருந்து வந்தார். கடந்த 1996ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி அடித்த 131 ரன்கள்தான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஜெய்ஸ்வால் 27 ஆண்டுகளுக்குப்பின் முறியடித்து, 143 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார். ஆசியாவுக்கு வெளியே கங்குலிக்கு அடுத்தபடியாக, அறிமுக ஆட்டத்தில் சதம் அடித்த வீரராக ஜெய்ஸ்வால் இடம் பெற்றார்.

 

ஜெய்ஸ்வால் 2வது நாள் ஆட்ட இறுதிவரை 350 பந்துகளைச் சந்தித்து 143 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அறிமுக டெஸ்ட் போட்டியில் ஒரு இந்திய பேட்டர் இந்த அளவு அதிகமான பந்துகளைச் சந்தித்தது இதுதான் முதல்முறையாகும்.

ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கு முன் கடந்த 1984ம் ஆண்டில், ஈடன் கார்டனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசாருதீன் அறிமுக ஆட்டத்தில் 322 பந்துகளைச் சந்தித்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அதையும் ஜெய்ஸ்வால் முறியடித்துவிட்டார்.

ரோஹித், ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்

ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதாவது, விக்கெட் இழப்பின்றி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 79 ரன்கள் முன்னிலை பெற்றபின் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தார்.

 

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்தியா முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி, முன்னிலை பெற்றதும் இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன் கடந்த 1978ம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சுனில் கவாஸ்கர், சவுகான் இருவரும் முதல் இன்னிங்ஸில் 97 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அதை ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் முறியடித்துவிட்டனர்.

 

அது மட்டுமல்லாமல் ஆசியக் கண்டத்துக்கு வெளியே, இந்திய அணியின் தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். இதற்கு முன் கடந்த 1979ம் ஆண்டு ஓவலில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுனில் கவாஸ்கர், சவுகான் ஜோடி 213 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் தொடக்க ஜோடி இந்தியாவுக்கு வெளியே சேர்த்த 3வது அதிகபட்சமாக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரும் இதுவாக அமைந்தது. இதற்கு முன் கடந்த 2002 வான்ஹடேவில் நடந்த டெஸ்டில் சேவாக், சஞ்சய் பங்கர் ஜோடி 201 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்து.

 

ஜெய்ஸ்வால், ரோஹித் அரைசதம்

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வி்க்கெட் இழப்பின்றி 80 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் நேற்றைய 2வதுநாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆடுகளத்தின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி, வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசினர்.

 

இதனால் முதல் 10 ஓவர்களில் ரோஹித், ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து 19 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ஹோல்டர் வீசிய ஓவர்களில் 5 முறை தோள்பட்டையில் அடி வாங்கி ஜெய்ஸ்வால் நிதானமாக பேட் செய்து 104 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மாவும் 106 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

மந்தமான ஆடுகளத்தால் திணறல்

ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் இருவரையும் விரைவாக இந்திய பந்துவீச்சாளர்களால் வெளியேற்ற முடிந்தது.

 

ஆனால், ஜெய்ஸ்வால், ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து மிகுந்த பொறுமையாக ஆடி, ஷாட்களைத் தேர்வு செய்து ஆடினார். ரோச் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து, ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். 2வது நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் சந்தித்த 80 பந்துகளில் வெறும் 19 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் கார்ன்வால், வாரிகன் இருவரும் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தாலும் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கிறது என்றாலும், பந்து பேட்டர்களை நோக்கி மெதுவாகச் செல்வதால் விக்கெட் வீழ்த்துவது குதிரைக் கொம்பாக இருந்து வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஜோடியை வீழ்த்த முடியாமல் கேப்டன் பிராத்வெய்ட் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு பீல்டிங்கை பலமுறை மாற்றி அமைத்தார்.

2 ஆண்டுகளுப்பின் 100 ரன்கள்

இந்திய அணி 100 ரன்களைக் கடந்தபோது புதிய மைல்கல்லை எட்டியது. இந்திய தொடக்க ஜோடி கடந்த 2021, டிசம்பர் மாதத்துக்குப்பின் டெஸ்ட் போட்டியில் 100 ரன்களைக் கடந்தது இல்லை. 2021 டிசம்பரில் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிராக மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் இருவரும் 117 ரன்கள் சேர்த்திருந்தனர்.

 

ஜெய்ஸ்வாலுக்கு ரோஹித் அறிவுரை

ஜெய்ஸ்வால் டி20 போட்டிகளில் ஆடி பழக்கப்பட்டவர் என்பதால், ஒரு கட்டத்துக்கு மேல், ஜெய்ஸ்வால் அதிரடியைக் கையாண்டார். பீல்டர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியைக் கண்டு, அதற்கு ஏற்றார்போல் ஷாட்களை ஆடினார், அது மட்டுமல்லாமல் சில நேரங்களில் டெஸ்ட் போட்டிகளுக்கான மரபு ஷாட்களைக் கடந்து ‘அப்பர்-கட் ஷாட்’, ‘ஸ்வீப் ஷாட்’, ‘ரிவர்ஸ் ஸ்வீப்’, ‘ஸ்விட்ச் ஹிட்’ ஷாட்களையும் ஜெய்ஸ்வால் ஆடி ரன்களைச் சேர்த்தார்.

 

ஜெய்ஸ்வாலின் ஆட்டம் வேகம் எடுப்பதைப் பார்த்த கேப்டன் ரோஹித் சர்மா, நிதானமாக ஆடக் கோரி அறிவுரை கூறியதையடுத்து, ஜெய்ஸ்வால் ஆட்டம் சிறிது மந்தமாகியது. இதனால், அடுத்த 50 ரன்களை எடுக்க ஜெய்ஸ்வால் 106 பந்துகளை எடுத்தார், தனது முதலாவது சதத்தை 215 பந்துகளில் நிறைவு செய்தார்.

ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

9 பந்து வீச்சாளர்களாலும் பயனில்லை

ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரையும் பிரிக்க கேப்டன் பிராத்வெய்ட் 9 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பயனில்லை. பிற்பகலுக்குப்பின் மார்பில் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக கார்ன்வால் பெவிலியன் சென்றார்,அதன்பின் கடைசிவரை அவர் பந்துவீச வரவில்லை.

 

ரோஹித்,ஜெய்ஸ்வால் ஜோடியை பிரிக்க வேறு வழிதெரியாமல் வேகப்பந்துவீ்ச்சாளர்கள் மூலம் ஷார்ட் பந்து ஆயுதத்தை பிராத்வெய்ட் பயன்படுத்தத் தொடங்கினார். இதனால் ஜெய்ஸ்வால், ரோஹித் இருவரும் ஜோஸப், ஹோல்டர் பந்துவீ்ச்சில்உடலில் அடிவாங்கினர்.

 

இருப்பினும் ஷார்ட் பந்துகளை அருமையாக ஆடிய ஜெய்ஸ்வால் அவ்வப்போது பவுண்டரிகளாக மாற்றி ரன்களை சேர்த்தார். ரோஹித் சர்மாவும் ஷார்ட் பந்துகளில் 2 பவுண்டரிகள் அடித்ததால் ஷார்ட் பந்து திட்டமும் தோல்வி அடைந்தது.

ரோஹித் 10வது சதம்

கேப்டன் ரோஹித் சர்மாவும் நீண்டகாலத்துக்குப்பின் டெஸ்ட் அரங்கில் தனது சதத்தை நிறைவு செய்தார். ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் போட்டியில் இது 10-வது சதமாக அமைந்தது, அவரின் 27 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு வெளியே ரோஹித் சர்மா அடித்த 2வது சதம்.

 

ரோஹித் சர்மா சதம் அடித்தபின் நீண்டநேரம் நிலைக்கவில்லை, அலிக் அதானேஷ் பந்தில் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டி சில்வாவிடம் கேட்ச் கொடுத்து 103 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுப்மான் கில் ஏமாற்றம்

இந்த டெஸ்ட் போட்டியில் புஜாரா இல்லாதநிலையில் 3வது வீரராகக் களமிறங்க பயிற்சியாளர் திராவிட்டிடம் விருப்பம் தெரிவித்து, ஆசையாக சுப்மான் கில் களமிறங்கினார். ஆனால், வாரிகன் பந்துவீச்சில் கில்லின் பேட்டின் நுனினியில் பந்துபட்ட ஸ்லிப்பில் இருந்த அதானேஷிடம் கேட்சாக மாறியது. இதனால் 6 ரன்னில் கில் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

 

வெஸ்ட் இண்டீஸ் அணி புதிய பந்தை 101-ஆவது ஓவர்வரை எடுக்காமல் தாமதித்து பழைய பந்தையே பயன்படுத்த விரும்பினர். பழைய பந்தில் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் நடுவரிடம் இருமுறை ரிவியூ சென்றும் பலன் இல்லை.

பவுண்டரி அடித்து சிரித்த கோலி

விராட் கோலியும் வழக்கத்துக்கு மாறாக மந்தமாக பேட் செய்தார். 80 பந்துகளைச் சந்தித்த நிலையில், ஒருபவுண்டரி கூட அடிக்காமல் ரன்களை சேர்த்திருந்தார். வாரிகன் பந்துவீச்சில் கவர்-ட்ரைவ் ஷாட்டில் கோலி பவுண்டரி அடித்து தனது கணக்கை தொடங்கியவுடன், மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார். ஜெய்ஸ்வால், கோலி ஜோடி 72 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/ckrj9y70rdpo

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யசஸ்வி ஜெய்ஸ்வாலின் முதலாவது சதம் - ஒரு தேவதை கதையை பார்த்த அனுபவம்

Published By: RAJEEBAN

14 JUL, 2023 | 05:39 PM
image
 

(கிரிக்இன்போ)

தேவதை கதைகள்  தவிர்க்க முடியாதவை என கருதவேண்டியதில்லை. ஆனால் வியாழக்கிழமை மேற்கிந்திய இந்திய அணிகளுக்கு இடையிலான  டெஸ்டை பார்க்கும்போது அந்த முரண்பாடான வார்த்தைகள் உங்கள் மூளையில் உதித்திருக்கலாம்.

அலிக் ஆதனாசேவின் பந்தை அடித்து ஆடி யசஸ்வி ஜெய்ஸ்வால் 99லிருந்து 100க்கு சென்றார், அது ஸ்வீப்சொட்டும புல்சொட்டும் சேர்ந்த ஒரு கலவை.

yaswaal.jpg

தனது ஹெல்மெட்டை கழற்றி கைகளை உயரத்தூக்கி 18வயது இளைஞனை போல அவர் சிரித்தவேளை அந்த தேவதை கதை மனதுக்குள் தோன்றியது.

இந்த இளைஞன் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றான்  என்ற உண்மை அந்த தருணத்திலேயே மனதில் தோன்றியது.

அதுவரை நீங்கள் ஒரு அனுபவ வீரரின் இனிங்சையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள் - அவர் சதமடிப்பது தவிர்க்க முடியாதது என்பது அவரின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த வேளை தோன்றியது.

இந்த சதம் மிகச் சிறப்பானது ஏனென்றால் டொமினிகாவில் சதங்களை அடிப்பது சாத்தியமான விடயம், ஆனால் முதல் டெஸ்டில் அடிப்பது மிகவும் கடினமான விடயம்.

ஆடுகளம் மிகவும் மெதுவானதாக காணப்பட்டது பந்துடேர்னாகியது பவுன்சும் காணப்பட்டது அடித்த பந்துகளும் மெதுவாகவே காணப்பட்டது.

80பந்துகளை எதிர்கொண்ட பின்னரே விராட்கோலி முதலாவது நான்கு ஓட்டங்களை பெற்றார்.

அது அனுபவமிக்க வீரர்களிற்கான சூழ்நிலை.

ஆனால் ஜெய்ஸ்வால் சதத்தை பெறுவது  தவிர்க்க முடியாதது என்ற கருத்து காணப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்புகளுடனும் அதிகளவு வெற்றிகளுடனும் சர்வதேச அரங்கிற்கு வந்துசேர்ந்த பல வீரர்கள் உள்ளனர், அவர்கள் தங்கள்  நம்பிக்கையை பூர்த்தி செய்திருக்கலாம் அல்லது  நிறைவேற்ற தவறியிருக்கலாம், ஆனால் அவர்களை ஏனைய வீரர்களிடமிருந்து பிரித்துக்காட்டும் விடயமொன்றுள்ளது.

பட்கமின்சை பொறுத்தவரை  அவர் வேகப்பந்து வீச்சாளருக்கான உடல் உள திறமைகளை கொண்டுள்ளார் என்ற கருத்து காணப்பட்டது, ரோகித் சர்மாவை பொறுத்தவரை 18 வயதிலேயே அவர் தனது சொட்களை விளையாடுவதற்கு ஏனைய வீரர்களை விட மேலும் சில செகன்ட்கள் எடுத்துக்கொள்கின்றார் என கருத்து நிலவியது.

ஜெய்ஸ்வாலின் துடுப்பாட்டத்தில் ஒரு மகிழ்ச்சியான இயல்பான தன்மை காணப்பட்டது.

அவர் துடுப்பாட்டத்தின் இயக்கவியலை ஓட்டங்களை குவிப்பது எப்படி என்பது குறித்த உள்ளார்ந்த புரிதல் கொண்டவராகவும் காணப்பட்டார்.

F0_K6-caQAAe22W.jpg

அவரது முதல் தரப்போட்டி சாதனைகளை பார்த்தால் இது புரியும். இந்திய அணிக்காக தனது முதலாவது டெஸ்டை விளையாடும் வரை அவரது சராசரி 80 ஆக காணப்பட்டது. 26 இனிங்ஸ்களில் 11 அரைசதங்களையும் ஒன்பது சதங்களையும் பெற்றிருந்தார்.

https://www.virakesari.lk/article/160012

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஸ்வின் காட்டிய மாயாஜாலம், ஜெய்ஸ்வாலின் சதம் - மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இந்திய அணி - டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வெற்றிக்கு வித்திட்ட ஜெய்ஸ்வால்- அஸ்வின்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 15 ஜூலை 2023, 04:48 GMT
    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜெய்ஸ்வாலின் சிறப்பான பேட்டிங், ரவிச்சந்திர அஸ்வினின் மாயாஜால பந்துவீச்சு ஆகியவற்றால் டோமினிகாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

மூன்று நாட்களிலேயே முதல் டெஸ்ட் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான(2023-25) சுற்றை இந்திய அணி 12 புள்ளிகளுடன் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

ஷேன் வார்னே சாதனையை முறியடித்த அஸ்வின்

பந்து மெதுவாக வரும் ஆடுகளத்தில் மாயஜால பந்துவீச்சை வெளிப்படுத்திய அஸ்வின் 2வது இன்னிங்ஸில் 21.3 ஓவர்கள் வீசி 7 மெய்டன் 71 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஏற்கெனவே முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து ஒரே டெஸ்டில் 12 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.

 

அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 23வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 22 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மறைந்த முன்னாள் வீரர் ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்தார்.

இந்த டெஸ்ட் போட்டி தொடங்கும் முன் அஸ்வின் 473 விக்கெட்டுகள் என்ற கணக்கில் இருந்தார். தற்போது 485 விக்கெட்டுகளை எட்டியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் முடிவதற்குள் 500 விக்கெட்டுகளை அஸ்வின் நெருங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஜெய்ஸ்வால்

ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன்

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 152.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 271 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50.3 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 141 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. அந்த முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தரப்பில் அறிமுக வீரராகக் களமிறங்கிய ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 171 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விராட் கோலி 76 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 103 ரன்களும் சேர்த்து இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

பிரமாதமான பந்துவீச்சு

வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றை வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கிறோம். இந்திய அணியின் பந்துவீச்சு பிரமாதமாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணியை 150 ரன்களில் சுருட்டியபோதே ஆட்டம் எங்கள் பக்கம் வந்துவிட்டது.

மெதுவான ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. இருப்பினும் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். 400 ரன்களுக்கு மேல் அடித்த நிலையிலும் எங்கள் பந்துவீச்சு 2வது இன்னிங்ஸிலும் சிறப்பாக அமைந்தது.

ஜெய்ஸ்வாலுக்கு அருமையான தொடக்கம் கிடைத்திருக்கிறது. அவரது பொறுமை களத்தில் பரிசோதிக்கப்பட்டது. எந்தவிதமான பதற்றமும், அச்சமும் இல்லாமல் ஆடினார். இதேபோலத்தான் இஷான் கிஷனும் முதல் 20 பந்துகளுக்குப் பின்புதான் முதல் ரன் சேர்த்தார். முதல் டெஸ்ட் எப்போதும் பதற்றம் கொண்டதாக இருக்கும்.

ஜடேஜா, அஸ்வின் கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டியது. அவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்த்தோமோ அதை அளித்தனர். அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதால் அதிகமாக எதையும் கேட்க வேண்டியதில்லை. இருவரின் முதிர்ந்த அனுபவம் இதுபோன்ற ஆடுகளங்களில் நன்கு உதவும்,” எனத் தெரிவித்தார்.

இந்திய அணி வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

8 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்த 50 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. 100 முதல் 130 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியில் முடிந்தது.

சொதப்பல் பேட்டிங்

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் அதிகபட்சமாக அதானேஷ் 28 ரன்கள் சேர்த்தார். முதல் இன்னிங்ஸிலும் இவர் 47 ரன்கள் சேர்த்தது தான் அதிகபட்சமாகும்.

மற்ற வகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை. 8 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்த 50 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. 100 முதல் 130 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியில் முடிந்தது.

இரண்டு மணிநேரம் தடை

இரண்டாவதுநாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்திருந்தது. கோலி 36 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 143 ரன்களிலும் நேற்றைய 3வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பமே சோதனையாக இருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது அல்சாரி ஜோசப் ஆட்டம் முடிவதற்கு 28 நிமிடங்களுக்கு முன்பே பெவிலியனுக்கு சென்றுவிட்டார்.

கார்ன்வால் மார்பு எரிச்சல் காரணமாக ஆட்டத்தைத் தொடரமுடியவில்லை. இதனால், முதல் 2 மணிநேரத்துக்கு பந்துவீச ஐசிசி விதிப்படி அனுமதிக்கப்படவில்லை.

அஸ்வின் - ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 150 ரன்களுக்கு மேல் அடித்த 3வது இந்திய பேட்டராக ஜெய்ஸ்வால் இடம் பிடித்தார்

ஜெய்ஸ்வால் மைல்கல்

ஏற்கெனவே பந்துவீச்சில் திணறிவந்த மேற்கிந்திய தீவுகள் அணி 2 முக்கியப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் தடுமாறியது. ஆடுகளத்தின் மெதுவான தன்மையைப் பயன்படுத்திய ஜெய்ஸ்வால், ஹோல்டர் வீசிய ஓவரில் ஆஃப்சைடில் பவுண்டரி அடித்து டெஸ்ட் அரங்கில் 150 ரன்களை எட்டினார்.

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 150 ரன்களுக்கு மேல் அடித்த 3வது இந்திய பேட்டராக ஜெய்ஸ்வால் இடம் பிடித்தார். இதற்கு முன் ஷிகர் தவண்(187), ரோஹித் சர்மா(177) இந்த சாதனையைச் செய்திருந்தனர்.

கோலியின் மந்தமான பேட்டிங்

இரண்டு மணிநேரத்துக்குப்பின் ஜோஸப், கார்ன்வால் பந்துவீச அனுமதிக்கப்பட்டனர். விராட் கோலி 147 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார்.

ஆட்டம் தொடங்கியவுடனே 6வது ஓவரில் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்ய மேற்கிந்திய தீவுகள் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வாரிகன் வீசிய ஓவரில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை கேப்டன் பிராத்வெயிட் தவறவிட்டார். அப்போது கோலி 40 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார்.

டெஸ்ட் வரலாற்றில் 147 பந்துகளில் அரை சதம் என்பது மிகவும் மந்தமான ஸ்கோராகும். விராட் கோலி தனது வழக்கமான பாணியில் ஆடியிருந்தால், இந்திய அணி இன்னும் வேகமாக ரன்களைச் சேர்த்திருக்கும்.

டெஸ்ட் தொடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் என்னும் மைல்கல்லை எட்ட அஸ்வினுக்கு இன்னும் 15 விக்கெட்கள் மட்டுமே தேவை

ரஹானே ஏமாற்றம்

ஜெய்ஸ்வால் வேகமாக ரன்களை சேர்க்கத் தொடங்கி ஜோஸப் ஓவரில் ஒரு பவுண்டரி, வாரிகன் ஓவரில் ஒரு சிக்ஸரும் அடித்தார். ஜெய்ஸ்வால், கோலி கூட்டணி 100 ரன்களை எட்டியது.

ஆனால், ஜோஸப் ஓவரில் லென்த்தில் வீசப்பட்ட ஷார்ட் பந்தை தொட்டு ஜெய்ஸ்வால் 171 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 16 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும்.

அடுத்து வந்த துணை கேப்டன் ரஹானே நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஆடுகளத்தின் மெதுவான தன்மைக்கு ஏற்றாற்போல் தனது ஆட்டத்தை நிலைப்படுத்திக் கொள்வதற்குள் ரோச் பந்துவீச்சில் ரஹானே 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

20 பந்துகளில் முதல் ரன்

நண்பகல் உணவு இடைவேளைக்கு முன் கோலியும், ஜடேஜாவும் தலா ஒரு பவுண்டரி அடிக்க இந்திய அணி 400 ரன்களை எட்டியது. உணவு இடைவேளைக்குப் பிறகு வந்த விராட் கோலி நீண்டநேரம் நிலைக்கவில்லை. கார்ன்வால் வீசிய ஓவரில் கல்லியில் நின்றிந்த அதானேஷிடம் கேட்ச் கொடுத்து 76 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.

அடுத்து இஷான் கிஷன் களமிறங்கினார். அறிமுக வீரராகக் களமிறங்கிய ஜெய்ஸ்வால் முதல் ரன்னை அடிக்க 16 பந்துகள் எடுத்துக்கொண்டார். இஷான் கிஷன் 20 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் முதல் ரன்னை அடிக்க, முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார்.

ஜடேஜா 37 ரன்களுடனும், இஷான் கிஷன் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்களில் டிக்ளேர் செய்தது.

இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

4வது ஓவரில் இருந்து அஸ்வின், ஜடேஜாவுக்கு பந்துவீச வாய்ப்பு அளிக்கப்பட்டதற்கு கைமேல் பலன் கிடைத்தது.

ஜடேஜா, அஸ்வின் ராஜ்ஜியம்

இதையடுத்து 2வது இன்னிங்ஸை மேற்கிந்திய தீவுகள் அணி தொடங்கியது. ஆடுகளம் மெதுவான தன்மையுடன், சுழற்பந்துவீச்சில் பந்து அதிக பவுன்ஸ், சுழலும் தன்மை இருக்கிறது என்பதை கேப்டன் ரோஹித் புரிந்து கொண்டார். இதனால், 4வது ஓவரில் இருந்து அஸ்வின், ஜடேஜாவுக்கு பந்துவீச வாய்ப்பு அளிக்கப்பட்டதற்கு கைமேல் பலன் கிடைத்தது.

ஜடேஜா வீசிய 10வது ஓவரில் சந்தர்பால்(7) எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். அஸ்வின் வீசிய 16வது ஓவரில் பிராத்வெய்ட் 7 ரன்னில் ஸ்லிப்பில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிலும் அஸ்வின் 'அரவுண்ட் தி விக்கெட்டில்' பந்துவீசி மேற்கிந்திய தீவுகள் டாப் ஆர்டரை நிலைகுலையச் செய்தார்.

பிராத் வெயிட்(7), பிளாக்வுட்(5) இருவரும் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேற இடதுகை பேட்ஸ்மேன்களான சந்தர்பால்(7), ரேமன் ரீபர்(11) ஆகியோர் ஜடேஜா ஓவரில் சரிந்தனர். 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்திய தீவுகள் அணி திணறியது.

இதில் பிராத்வெய்ட் ரன் கணக்கைத் தொடங்காத நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த கேட்சை இஷான் கிஷன் கோட்டைவிட்டார். அதைப் பிடித்திருந்தால், பிராத்வெயிட்டின் விக்கெட் தொடக்கத்திலேயே வீழ்ந்திருக்கும்.

அதானேஷ் ஆறுதல்

அதானேஷ், ஜோஷ்வா டி சில்வா இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவை சரி செய்ய முயன்று நிலைத்து ஆடினர். ஆனால், சிராஜ் பந்துவீச்சில் சில்வா 13 ரன்கள் சேர்த்த நிலையில் எல்பிடபிள்யூ ஆகி பெவிலியன் திரும்பினார்.

அதானேஷ் ஒரு ரன் சேர்த்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை ஜெய்ஸ்வால் நழுவவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திய அதானேஷ் இரு பவுண்டரிகளை அஸ்வினின் முதல் சுற்று ஓவரில் அடித்தார்.

30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்

அஸ்வினின் 2வது சுற்று ஓவரில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து அதானேஷ் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் மேற்கிந்திய தீவுகள் அணியின் பின்வரிசை வீரர்கள் யாரும் அஸ்வினின் மாயஜாலப் பந்துவீச்சுக்கு முன் நீண்டநேரம் நிலைக்கவில்லை.

அல்சாரி ஜோஸப்(13), கார்ன்வால்(4), ரோச்(0), வாரிகன்(18) என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. கடைசி 30 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்டுகளையும் மேற்கிந்திய தீவுகள் அணி இழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

வெஸ்ட் இண்டீஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அதானேஷ், ஜோஷ்வா டி சில்வா இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவை சரிசெய்ய முயன்று நிலைத்து ஆடினர்

தோல்விக்குக் காரணம் என்ன?

மேற்கிந்திய தீவுகள் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் அவர்களின் நம்பிக்கைக்குரிய சுழற்பந்துவீச்சாளர் கார்ன்வால் உடல்நலக் குறைவால் 3 செஷன்களில் பந்துவீச முடியாமல் போனதுதான். மேற்கிந்திய தீவுகள் அணியில் காரல் ஹூப்பர், நரேன் ஆகியோருக்கு அடுத்தபடியாக தரமான சுழற்பந்துவீச்சாளராக கார்ன்வால் இருந்து வருகிறார்.

இரண்டாவது நாளின்போது பந்துவீசிக் கொண்டிருந்த கார்ன்வாலின் மார்பில் லேசான வலியும், எரிச்சலும் ஏற்பட்டது. இதனால், 2வது மற்றும் 3வது செஷனில் பந்துவீசாமல் கார்ன்வால் டக்அவுட்டில் ஓய்வெடுக்கச் சென்றார்.

மூன்றாவது நாளான நேற்று கார்ன்வால் பந்துவீச ஐசிசி விதிப்படி 2 மணிநேரம் தடைவிதிக்கப்பட்டது. ஐசிசி விதிப்படி ஒருவீரர் அதிகபட்ச நேரத்தை களத்தில் செலவிட்டிருந்தால்தான் அவரை பந்துவீச அனுமதிக்க முடியும்.

இல்லாவிட்டால் அதற்கு நடுவர் அனுமதிக்கமாட்டார். அந்தவகையில் கார்ன்வால் நேற்று முதல் இரண்டு மணிநேரம் பந்துவீச அனுமதிக்கப்படவில்லை. இதில் ஒரு வீரருக்கு உடலில் காயம் ஏற்பட்டால் மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆதலால், ஏறக்குறைய 3 செஷன்களில் கார்ன்வால் பந்துவீச முடியாமல் போனது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. முதல்நாளில் மேற்கிந்திய தீவுகள் அணி 46 ஓவர்கள் பந்துவீசியபோது அதில் 11 ஓவர்களை கார்ன்வால் வீசியிருந்தார். அப்போது இந்திய அணி 128 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

ஆடுகளத்தின் மெதுவான தன்மையில், கார்ன்வால் போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடுவது மிகவும் சிரமமானது. 3வது நாளான நேற்று கார்ன்வால் பந்துவீச வந்த சிறிதுநேரத்தில் கோலி விக்கெட்டை வீழ்த்தினார். ஒருவேளை கார்ன்வால் 3 செஷன்களிலும் பந்துவீசியிருந்தால் இந்திய அணி இந்த அளவு ஸ்கோர் செய்திருக்குமா என்பதும் சந்தேகம்தான்.

கார்ன்வாலின் உடல்நலக் குறைவு மற்றும் அவருக்கு விதிக்கப்பட்ட 2 மணிநேரம் தடை ஆகியவை மேற்கிந்தியத் தீவுகள் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானதாகும்.

https://www.bbc.com/tamil/articles/cmj4380156xo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோலி சதம்: 500வது போட்டியில் வரலாற்றுச் சாதனை - சச்சினுடன் ஒப்பிடும் புள்ளி விவரம் உணர்த்துவது என்ன?

500-வது போட்டியில் கோலி சதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

21 ஜூலை 2023, 15:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த 5 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்து வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி, அதற்கு முறறுப்புள்ளி வைத்திருக்கிறார். அதுவும், சர்வதேச அளவில் 500-வது போட்டியில் ஆடும் போது சதம் அடித்ததன் மூலம் அவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடவுளாக கொண்டாடும் சச்சின் டெண்டுல்கரை பல விதங்களிலும் அவர் முந்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளும் மோதும 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

ரோகித் - ஜெய்ஸ்வால் ஜோடி தொடர்ந்து 2-வது முறையாக சதம்

'டாஸ்' ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு இம்முறையும் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேப்டன் ரோகித் சர்மா ஜோடி அருமையான தொடக்கம் தந்தது.

சில ஓவர்கள் நிதானமாக ஆடிய ரோகித் சர்மா 5-வது ஓவரில் சிக்சருடன் ரன் வேட்டையை ஆரம்பித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ரோகித் சர்மா சிக்சருடன் அரைசதத்தை கடந்தார். சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வாலும் அரைசதத்தை எட்டினார். இந்தியாவுக்கு முதல் இன்னிங்சில் வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த ஜோடி, அணியின் ஸ்கோர் 139 ஆக உயர்ந்த போது பிரிந்தது.

74 பந்துகளில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் அவுட்டானார். சுப்மான் கில் 10 ரன்களில் வெளியேற சதத்தை நெருங்கிய கேப்டன் ரோகித்தும் 80 ரன்களில் வெளியேறினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

500-வது போட்டியில் கோலி சதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெஸ்டில் பிராட்மேனுக்கு இணையாக 29-வது சதம்

2-வது நாள் ஆட்டம் தொடங்கியது முதலே விராட் கோலி - ஜடேஜா ஜோடி விக்கெட்டுகளை தற்காத்துக் கொண்டதுடன் ரன்களைவும் தொடர்ந்து குவித்த வண்ணம் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களால் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை.

சிறப்பாக ஆடிய விராட் கோலி 180-வது பந்தில் பவுண்டரி அடித்து சதம் கண்டார். இது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் 29வது சதம் ஆகும். இதன் மூலம் 500 வது சர்வதேச போட்டியில் சதம் அடித்துவீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அத்துடன், சதங்கள் எண்ணிக்கையில், டெஸ்டில் 99.96 சராசரி வைத்துள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் இணைந்துள்ளார்.

500-வது போட்டியில் கோலி சதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சச்சின் - கோலி ஒப்பீடு

இந்திய அணியைப் பொருத்தவரை சச்சின் டென்டுல்கர், ராகுல் டிராவிட், மகேந்திர சிங் தோனி ஆகியோர் மட்டுமே 500 சர்வதேச போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர். அதே நேரத்தில் 500வது போட்டியில் விளையாடும் விராத் கோலி, ரன்கள், சதம், சராசரி, ஸ்ரைக் ரேட் ஆகிய அனைத்திலும் தனது முன்னோடியான சச்சினை விட முன்னணியில் இருக்கிறார்.

500வது போட்டியில் கோலி பதற்றத்துடன் இருந்தாரா?

500-வது போட்டியில் கோலி சதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெஸ்ட் போட்டிக்கு ஒரு நாள் முன்பு கோலி பயிற்சிக்கு வரவில்லை, ஆனால் அதற்கு முந்தைய நாளே அவர் வியர்த்துவிட்டார். அவர் பெரிய ரன்கள் குவிப்பதில் தடுமாறிவந்தது குறித்து ஊடகங்களில் தொடர்ச்சியாக பேசப்படுவது குறித்து அவர் உணர்ந்துள்ளார். சமீப நாட்களாக கோலி பயிற்சியின் போது ராகுல் டிராவிட்டுடன் மட்டுமே பேசுகிறார். பயிற்சியாளருடன் கூட, அவர் அடிக்கடி சிரிப்பதையும் கேலி செய்வதையும் காணலாம்.

ஆனால் மேற்கிந்தியத் தீவுகளில் தற்போது அவரின் உடல்மொழியில் இது போன்ற விஷயங்களின் சிறிய அழுத்தம் கூட தெரிவதில்லை.

வழக்கமான வர்ணனையாளராக இல்லாமல், இந்த போட்டியை பார்ப்பதற்கு சிறப்பு அழைப்பாளராக சுனில் கவாஸ்கர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த மைதானத்தில் சுனில் கவாஸ்கர் 4 சதங்களை அடித்துள்ளார். இந்த மைதானத்திற்கோ, மைதானம் அமைந்துள்ள நகருக்கோ வந்து கிரிக்கெட் பற்றி யாரிடமாவது பேசினால், சுனில் கவாஸ்கர் பற்றி கேட்காமல் அவர்கள் பேச்சை தொடங்க மாட்டார்கள்.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் கவாஸ்கருக்கு கிடைக்கும் புகழும் மரியாதையும் மும்பையில் உள்ளவர்கள் கூட கொடுத்து இருக்க மாட்டார்கள்.

https://www.bbc.com/tamil/articles/c3ge54rzgveo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா 438 ; மேற்கிந்தியத் தீவுகள் 229 - 5 விக்

23 JUL, 2023 | 03:15 PM
image
 

(நெவில் அன்தனி)

போர்ட் ஒவ் ஸ்பெய்ன், ட்ரினிடாட், குவீன்ஸ் பார்க் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கும் மேற்கிந்தியத்தீவுகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இப்போதைக்கு சம அளவில் மோதிக்கொளப்பட்ட வண்ணம் உள்ளது.

விராத் கோஹ்லி குவித்த சதம், யஷஸ்வி ஜய்ஸ்வால், அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கிளின் உதவியுடன் இந்தியா முதல் இன்னிங்ஸில் 438 ஓட்டங்களைக் குவித்தது.

நான்கு ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் விராத் கோஹ்லி சதம் குவித்துள்ளார். இது அவரது 29ஆவது டெஸ்ட் சதமாகும்.

போட்டியின் 3ஆம் நாளான சனிக்கிழமை (22) தனது முதல் இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள், ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

டேஜ்நரேன் சந்தர்போல், க்ரெய்க் ப்றத்வெய்ட் ஆகிய இருவரும் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த போதிலும் அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன.

க்ரெய்க் ப்றத்வெய்ட் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார்.

இரண்டு அணிகளுக்கும் இடையில் டொமினிக்கா விண்ட்சர் பார்க், ரூசோ விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்தியா, 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: 438 (விராத் கோஹ்லி 121, ரோஹித் ஷர்மா 80, ரவிந்த்ர ஜடேஜா 61, யஷஸ்வி ஜய்ஸ்வால் 57, ரவீந்த்திரன் அஷ்வின் 56, ஜொமெல் வொரிக்கன் 89 - 3 விக்., கெமர் ரோச் 104 - 3 விக்., ஜேசன் ஹோல்டர் 57 a- 2 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: (3ஆம் நாள் ஆட்டநேர முடிவில்) 229 - 5 விக். (க்ரெய்க் ப்றத்வெய்ட் 75, அலிக் அதானேஸ் 37 ஆ.இ., டேஜ்நரேன் சந்தர்போல் 33, கேர்க் மெக்கென்ஸி 32, ரவிந்த்ர ஜடேஜா 37 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/160706

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெஸ்ட் தொடரை வென்றும் இந்தியாவுக்கு ஏன் இந்தச் சிக்கல்?

அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

20 நிமிடங்களுக்கு முன்னர்

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றபோதிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2-ஆவது இடத்துக்குச் சரிந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பாகிஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் 100 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், இந்திய 16 புள்ளிகள் பெற்றபோதிலும் வெற்றி சதவீதம் 66.67 ஆக இருப்பதால் 2ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதலிடம்

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வென்று முழுமையாக 12 புள்ளிகளைப் பெற்று 100 சதவீதத்துடன் இந்திய அணி முதலிடத்தில் பாகிஸ்தானுக்கு இணையாக இருந்தது. ஆனால், போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நேற்று மழையால் கைவிடப்பட்டது.

இதனால் இந்தியா-மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் டிராவில் முடிந்ததால், இரு அணிகளுக்கும் ஐசிசி விதிப்படி தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டன. இதனால் இந்திய அணியின் புள்ளிக்கணக்கு 12-லிருந்து 16 ஆக மட்டுமே உயர்ந்தது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றாலும் முழுமையாக 12 புள்ளிகளைப் பெற முடியவில்லை.

 
விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மழையால் ஆட்டம் தடை

2ஆவது டெஸ்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு 365 ரன்கள் இலக்கு நிர்ணயத்திருந்தது இந்திய அணி. 4ஆவது ஆட்டநேர முடிவில் 76 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த மேற்கிந்தியத்தீவுகள் அணி கடைசிநாளில் வெற்றி பெற 289 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தன.

கடைசி நாள் ஆட்டம் நடந்திருந்தால் அஸ்வின், ஜடேஜா சுழற்பந்துவீச்சில் இந்திய அணி நிச்சயம் வென்றிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று இடைவிடாது மழைபெய்தால் ஆட்டம் நடத்துவதற்கான சாத்தியம் இல்லை. இதனால் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.50 மணிக்கு ஆட்டம் கைவிடப்பட்டு, 2வது டெஸ்ட் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஏன் 2-ஆவது இடம்?

ஒருவேளை மழை நின்று ஆட்டம் நடந்து இந்திய அணி வென்றிருந்தால் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ‘ஒயிட்வாஷ்’ செய்திருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முழுமையாக 12 புள்ளிகள் பெற்று 24 புள்ளிகளுடனும், 100 சதவீத வெற்றியுடனும் முதலிடத்தைப் பிடித்திருக்கும். பாகிஸ்தான் அணியை 2-வது இடத்துக்கு தள்ளியிருக்கும்.

ஆனால், 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, இந்திய அணிக்கு 4 புள்ளிகள் மட்டுமே கிடைத்ததால், 16 புள்ளிகளுடன் வெற்றி சதவீதமும் 66.67 சதவீதமாகக் குறைந்தது. அதாவது, 100 சதவீதம் வர வேண்டிய நிலையில் 33.33 சதவீதப் புள்ளிகள் மட்டுமே இந்திய அணிக்கு 2வது டெஸ்டில் கிடைத்தது.

மாறாக 12 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் 100 சதவீதத்தை கைவசம் வைத்திருப்பதால், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரலிய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி,ஒரு டிராவுடன் 26 புள்ளிகளுடன் 54.17 சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவுடன் 14 புள்ளிகளுடன், 29.17 சதவீதத்துடன் 4வது இடத்தில் இருக்கிறது.

இந்திய அணிக்கு எதிரான 2வதுடெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால் மே.இ.தீவுகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 4 புள்ளிகளுடன், 16.67 சதவீதத்துடன் கணக்கைத் தொடங்கி, 5-ஆவது இடத்தில் இருக்கிறது.

சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சிராஜ்

சவாலாகும் டெஸ்ட் தொடர்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றிருந்தால், இந்திய அணி 24 புள்ளிகள், 100 சதவீதத்துடன் ஓரளவு பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். ஆனால், தற்போது 16 புள்ளிகள் மட்டுமே கிடைத்திருப்பது 66.67 சதவீதமாகக் குறைந்திருப்பதால் அடுத்துவரும் டெஸ்ட் தொடர்களில் போட்டிகளில் தோற்காமல் தொடரை வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.

ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை ஆகிய தொடர்களுக்குப்பின், 5 மாத இடைவெளியில்தான் அடுத்ததாக இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் விளையாட இருக்கிறது.

வரும் டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடந்த 2021-22 ஆண்டில் டெஸ்ட் தொடரை இழந்தநிலையில் இந்த முறை டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய நிலையில் இந்திய அணி இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கத் தொடர் 2024 ஜனவரி முதல் வாரத்தில் முடிந்தபின், ஆஸ்திரேலியா செல்கிறது இந்திய அணி. அங்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது இந்திய அணி. ஏற்கெனவே தொடர்ச்சியாக 2 முறை இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றிருப்பதால் ஹாட்ரிக் வெற்றிக்காக முயற்சிக்கலாம்.

இந்த இரு தொடர்களும் இந்திய அணிக்கு சவால் நிறைந்த தொடராக இருக்கும். இந்த இரு டெஸ்ட் தொடர்களிலும் ரோஹித் சர்மா அணி பெறும் வெற்றிகள், தோல்விகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின் பயணத்தை முடிவு செய்யும்.

ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தென் ஆப்பிரிக்கத் தொடர் 2024 ஜனவரி முதல்வாரத்தில் முடிந்தபின், ஆஸ்திரேலியா செல்கிறது இந்திய அணி.

இந்திய அணிக்குச் சாதகம்

இதைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டில் இந்தியாவுக்கு இங்கிலாந்து, வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளனர்.

2024 பிப்ரவரியில் இந்தியா வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 முறை இந்திய அணி வென்றிருப்பதால் ஹாட்ரிக் வெற்றிக்கு முயற்சிக்கும். மேலும் உள்நாட்டில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம் என்பதால், இந்த டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செய்யும்.

இங்கிலாந்து அணி கடைசியாக 2012-13ம் ஆண்டில் இந்திய அணியை உள்நாட்டில் டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது. அதன்பின் இந்திய அணியை உள்நாட்டில் வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து தொடர் முடிந்தபின் வங்கதேசம் அணி இந்தியாவுக்கு வருகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் வங்கதேசம் விளையாடுகிறது.

அதன்பின் அக்டோபர் இறுதியில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு பயணமாகிறது. இந்திய அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. இந்த டெஸ்ட் தொடர்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்திய அணி விளையாடும் கடைசி தொடராகும்.

ஆதலால், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்தான் இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். உள்நாட்டில் இந்திய அணியை வீழ்த்துவது எளிதானது அல்ல, என்பதால் இங்கிலாந்து, வங்கதேசம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செய்து புள்ளிகளைப் பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சில சாதகமான அம்சங்களுடன் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றியுடன் இந்திய அணி நிறைவு செய்திருக்கிறது.

டெஸ்ட் தொடரில் கவனம் ஈர்த்தவை

சில சாதகமான அம்சங்களுடன் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றியுடன் இந்திய அணி நிறைவு செய்திருக்கிறது.

• முதலாவதாக இந்திய டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் அடையாளம் காணப்பட்டுள்ளார். வலிமையான மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சை சமாளித்து ஆடக்கூடிய திறமை மிகுந்த பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

• 2வதாக விராட் கோலி டெஸ்ட் தொடரில் ரன் குவிக்க பல ஆண்டுகளாக தடுமாறிவந்தார். அதிலும் வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளாக சதம் அடிக்காமல் கோலி திணறினார். அந்த தடுமாற்றத்திலிருந்து மீண்ட கோலி சதம் கண்டு இழந்த ஃபார்மை மீட்டுள்ளார்.

• அதேநேரம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய துணைக் கேப்டன் ரஹானே இந்தத் தொடரில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்துள்ளார். ரஹானே மீது அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தநிலையில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ரஹானேவுக்கு ஏமாற்றமாக மாறியது.

• ரிஷப் பந்துக்குப்பின் அதிரடியான பேட்ஸ்மேன், விக்கெட்கீப்பராக இஷான் கிஷன் இந்த டெஸ்ட் தொடரில் அடையாளம் காணப்பட்டுள்ளார். ரிஷப் பந்துக்குப்பின் கேஎஸ் பரத் மட்டுமே டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக அடையாளம் காணப்பட்டநிலையில் இப்போது இஷான் கிஷனும் உருவெடுத்துள்ளது வலிமையான அம்சமாகும்.

• அஸ்வினைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் அவரின் பந்துவீச்சை குறைசொல்லவே முடியாதவகையில் தனித்துவமாகவே இருக்கும். அதேபோலத்தான் இந்தத் தொடரிலும் அஸ்வினின் மாயஜாலப் பந்துவீச்சு இருந்தது. முதல் டெஸ்டில் அஸ்வின் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியது வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

• முகமது ஷமி, பும்ரா இல்லாத நிலையில் வேகப்பந்துவீச்சுப் பிரிவுக்கு முகமது சிராஜ் தலைமையை நம்பி இந்திய அணிவந்தது. தன் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் 2வது டெஸ்டில் 5 விக்கெட் வீழ்த்தி சிராஜ் திறமையை வெளிப்படுத்திவிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cpdj4ge51jmo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நோர்மலாய் ஜெஸ்வாலை ரெஸ்ற் மட்ச் விளையாட விட்டிருக் கூடாது.அவர் 20 க்குரிய வீரர்.நாம சொல்லி என்ன பயன்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.