Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்" எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்" எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: DIGITAL DESK 3

15 JUL, 2023 | 02:15 PM
image
 

"பிரிப்பதற்கு இடங்கொடோம்  ஒன்றாய் நாம் பறந்திடுவோம்" எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று சனிக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது.

20230715_125654.png

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் துண்டுப் பிரசுர விநியோகமும் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

20230715_125713.png

இதன்போது, சிங்கள தமிழ் முஸ்லீம் நல்லிணக்கம் நீடுழி வாழ்க, இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், தேசிய ஒற்றுமைக்காக போராடுவோம், இனவாதத்தில் சிக்காமலிருப்போம், மீண்டும் ஒருமுறை வேண்டாம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம், தேசிய நல்லிணக்கத்தை மீண்டும் பிரிப்பதற்கு இடமளிக்க வேண்டாம், தோல்வியால் ஆட்சியாளர்களின் ஆயுதம் இனவாதம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை  தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

20230715_125814.png

“பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்" எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இது வடக்கில் இருந்து செய்யப்படுகின்றதா , இல்லை தெடகிலிருந்து இறக்குமதியா?

இந்த ஆர்ப்பாடத்தை சரத் வீரசேகரா, வீரவங்கச, கம்மன்பில போன்றவர்களின் வீட்டின் முன்னால் செய்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். இதை போய் யாழ்ப்பாணத்தில் ............

  • கருத்துக்கள உறவுகள்

வசனத்தை பாருங்கள் விளங்கும் எங்கிருந்து வந்ததென்று?  மீண்டும்! எப்போ நாம் ஒன்றாய் பறந்தோம் மீண்டும்  பறப்பதற்கு? மீண்டும் இனக்கலவரம் வெடிக்கும்,  மீண்டும் இரத்த ஆறு ஓடும் என்பவர்கள், அவர்கள் அங்கிருக்க, இங்கு வந்து இவர்கள் சொல்லும் செய்தியென்ன? வடக்கில் உள்ளோர் நல்லிணக்கத்தை கெடுக்கின்றனரா? தெற்கில் இருந்து வந்து எமது அமைதியை சந்தோஷத்தை கெடுப்பது யார்? அவர்கள் முன்னாலல்லவா இதை சொல்ல வேண்டும்? தேர்தல் காலங்களில் இப்படியான பசப்பு வார்த்தைகள், ஏமாற்று நாடகங்கள் தமிழரை குறிவைத்து நடப்பது வழமைதான். அதென்ன பறந்திடுவோம்? அதுவே ஒரு நாடகம், பயணிப்போம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். நல்லிணக்கம், சமாதானம் இல்லாத நாட்டில் அது கெடுகிறது என்று சொல்லிக்கொண்டே அதை ஏற்படுவதற்கு இடம் கொடாமல் தடுத்துக்கொண்டு தமிழ் மக்களின்,  கேள்வி  கேட்ப்போரின்  குரல்வளையை நசுக்கும் வார்த்தையது.

15 hours ago, nochchi said:

மீண்டும் ஒருமுறை வேண்டாம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம், தேசிய நல்லிணக்கத்தை மீண்டும் பிரிப்பதற்கு இடமளிக்க வேண்டாம்,

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.