Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடல் நீர் நடுவே கட்டுமரத்தில் ஒருபயணம் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையில் இது அதிசயம்தான். ஒரு ஆங்கிலப் படத்துக்குத் தேவையான கதை ஒன்று அவரிடம் இருக்கிறது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது நாயுடன் பாய்மரக் கட்டுமரத்தில் பயணித்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த  Tim Shaddock (51) பசிபிக் கடலில் காணாமல் போயிருந்தார். இப்பொழுது அவரும் அவரது பெல்லா என்ற நாயும்   கண்டு பிடிக்கப்பட்டு ஆழ்கடலில்  இருந்து காப்பாற்றப் பட்டுள்ளனர்.

சிட்னியை வாழ்விடமாகக் கொண்ட Tim Shaddock (51) பல வாரங்கள் கொண்ட,  நீண்ட கட்டுமரக் கடல் பயணம் ஒன்றைத் திட்டமிட்டிருந்தார். அது மெக்ஸிக்கோ  La Paz என்ற இடத்தில் இருந்து பிரான்சின்  Polynesien வரையான 6000 கிலோ மீற்றர்  கடற்பயணம்.

பயணம் தொடங்கிய சில கிழமைகளிலேயே புயலில் சிக்கி அவரது படகில் இருந்த எலெக்ரோனிக் கருவிகள் செயலிழந்து போனதன் பின்னால் அவரைப் பற்றிய தகவல்கள் வெளி உலகுக்குக் கிடைக்கவில்லை.

"காப்பாற்றப் படுவேன்" என்று அவர்  உறுதியாக நம்பி இருந்தார். கடலில் பிடித்த மீனும், சேகரிக்கப்பட்ட மழை நீரும்தான் அவருக்கும் அவரது நாயான பெல்லாவுக்கும் வாழ்வாதாரமாக இருந்திருக்கின்றன.

காப்பாற்றப் பட்டதன் பின்னர், “தனிமையாகக் கடலில் நீண்ட நாட்கள் இருந்து விட்டேன். இப்பொழுது எனக்குத் தேவைப்படுவதெல்லாம் நல்ல உணவும், ஓய்வுமேஎனக் கூறியிருக்கிறார் Tim Shaddock.

விமான விபத்து நடந்து 40 நாட்களுக்குப் பின்னர் அடர்ந்த காட்டில் காப்பாற்றப்பட்ட நான்கு சகோதரர்களுக்குப் பின் நடந்த ஒரு அதிசயம்தான் இப்பொழுது Tim Shaddockவும் அவரது நாயும் காப்பாற்றப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

 

Image

எப்பிடி இருந்த நான், இப்பிடி ஆயிட்டேன்.  😂

Image

Image

மூன்று மாதம், பாய்மரக் கப்பலில், தூக்கி அடிக்கும் அலைகள் நிறைந்த   
பசிபிக் சமுத்திரத்தில் தனிமையில் பயணம் செய்து, 
Tim Shaddock உயிருடன் காப்பாற்றப் பட்டது அதிசயம் தான்.

கவி அருணாசலம் அவர்களே... உங்கள் முயற்சியில்  சுவராசியமான செய்திகளை 
தேடி  இணைக்கும் இணைக்கும் உங்களுக்கு ஒரு சபாஷ். 👍

  • கருத்துக்கள உறவுகள்

Cast Away போல, Life of Pi போல இதுவும் படமாகலாம்.. 

  • கருத்துக்கள உறவுகள்

உணவாக மீன், குடிநீராக மழைநீர்: தனது நாயுடன் 2 மாதங்களாக நடுக்கடலில் தத்தளித்தவர் உயிர்பிழைத்த அதிசயம்

Australian Man And Dog Rescued After 3 Months Lost At Sea | HuffPost Latest  News

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்தவர் 51-வயதான டிம் ஷேட்டாக்.

பெல்லா எனும் தனது நாயுடன் டிம், மெக்சிகோவின் லா பாஸ் பகுதியிலிருந்து பிரென்ச் பாலினேசியா பகுதிக்கு ஒரு படகில் கடற்பயணம் மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவரின் படகு புயலால் சேதமடைந்தது.

இதனால் பல நாட்கள் அவரும், பெல்லாவும் கடலில், பச்சை மீனை உண்டும், மழை நீரை குடித்தும் தன்னந்தனியே பல நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கின்றனர்.

டியூனா எனப்படும் பெரிய மீனை பிடிக்கும் ஒரு இழுவை படகோடு இணைந்து ஒரு ஹெலிகொப்டர் சென்றிருக்கிறது.

அதிர்ஷ்டவசமாக அதில் உள்ளவர்கள் இவர்களை காண, உடனே மீட்புக்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். டிம் மற்றும் பெல்லா நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் இருவரின் உடல் இயக்கங்கள் சீராக இருப்பதாகவும், அவர்களை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்திருக்கிறார். தனியாக கடலில் பல நாட்கள் இருந்ததால் தற்போது நல்ல உணவும், ஓய்வும் மட்டுமே தான் பெற விரும்புவதாக டிம் கூறியுள்ளார்.

Tim Shaddock: Key elements that helped Aussie sailor and dog survive months  lost at sea

Tim Shaddock: Key elements that helped Aussie sailor and dog survive months  lost at sea

கடலில் தனித்து வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சிகளில் வல்லுனரான பேரா. மைக் டிப்டன் இதுகுறித்து கூறியிருப்பதாவது:-

டிம்மிற்கு அதிர்ஷ்டம் மட்டுமே உதவவில்லை. அவர் திறமையையும், மனோதிடத்தையும் நாம் பாராட்ட வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் நீர் வறட்சியால் உடல் பாதிக்காமல் இருக்க உடலிலிருந்து மிகக் குறைந்த அளவே வியர்வை வெளியேறும்படி பார்த்து கொள்ள வேண்டும். பசிபிக் பெருங்கடலில் டிம் சென்ற மிக சிறிய படகை கண்டுபிடிப்பதே கடினம். கிடைப்பதை உண்டு நேர்மறை சிந்தனையோடு இரவில் பெருங்கடலில் தனியாக உயிர் வாழ்வதற்கு கற்பனை செய்ய முடியாத மன உறுதியும் துணிச்சலும் வேண்டும். டிம் மட்டுமன்றி அவரின் நாய் பெல்லாவும் பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

https://thinakkural.lk/article/263891

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை விதமான மனிதர்கள், எவ்வளவு சாகசங்கள்.......கிம்முக்கும் பெல்லாவுக்கும் பாராட்டுக்கள்......! 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

எத்தனை விதமான மனிதர்கள், எவ்வளவு சாகசங்கள்.......கிம்முக்கும் பெல்லாவுக்கும் பாராட்டுக்கள்......! 

அண்ணை நீங்க வடகொரிய அதிபர் கிம்மையா சொல்கிறீர்கள்?!

இவற்றை பெயர் டிம் சட்டோக்.(Tim Shaddock)

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

அண்ணை நீங்க வடகொரிய அதிபர் கிம்மையா சொல்கிறீர்கள்?!

இவற்றை பெயர் டிம் சட்டோக்.(Tim Shaddock)

அட....டிம் என்று அடிக்க கிம் என்று வந்துட்டுது.....அதுவும் பொருந்துது......மகிழ்ச்சி ......!  😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.