Jump to content

வெம்பக்கோட்டையில் பழங்காலத்தில் இருந்த தொழிற்சாலை: அகழாய்வில் தெரியவந்த புதிய தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

17 ஜூலை 2023

வெம்பக்கோட்டை


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்துள்ளது.

சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மை, யானை தந்தத்தான் ஆன பதக்கங்கள், சூதுபவள மணிகள் போன்ற பல்வேறு பொருட்கள் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடியில் தொழிற்சாலை இருந்ததற்கான சான்று பொருட்கள் கிடைத்துள்ளது போன்று வெம்பக்கோட்டையிலும் சங்கு தொழிற்சாலை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார் வெம்பக்கோட்டை அகழாய்வு இயக்குநரான பாஸ்கர்.

தங்கம், செப்பு நாணயங்கள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறும் அவர், இதுவரை எழுத்து குறியீடு எதுவும் தென்படவில்லை என குறிப்பிடுகிறார்.

வெம்பகோட்டை அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் கலைநயத்துடன் இருப்பதால் அக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

இப்பகுதியில் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் வைப்பாற்றங்கரையில் இருந்து தூத்துக்குடி கடல் வழியாக வணிகம் நடந்ததற்கான சான்று தெரிய வருகிறது. (முழு தகவல் காணொளியில்)

தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு: பிரபுராவ் ஆனந்தன்

எடிட்டிங்: ஜனா

https://www.bbc.com/tamil/articles/c2jrnx7k510o

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.