Jump to content

வேட்டையாடும் மானானேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒருமுறை கூட்டுப் பாலியல் வன்முறை  நடந்திருக்கிறது. இம்முறை பரிசில் உள்ள ஈபிள் கோபுரத்துக்கு அருகே அமைந்துள்ள பூங்காவில் அது நடந்திருக்கிறது.

Marsfeld என்றும் அழைக்கப்படும் Parc Champ de Mars இல், மெக்சிக்கோ நாட்டுச் சுற்றுலாப் பயணி (27) ஒருவரை, சிலர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறதுஇந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு ஆண்களைத் தாங்கள் கைது செய்ததாக பொலிஸார் அறிவித்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட   பெண்,  நள்ளிரவு 1 மணியளவில்   மது அருந்திவிட்டு பூங்கா வழியாக நடந்து கொண்டிருந்தபோது, ஐந்து பேர் திடீரென அவளைத் தாக்கி, பின்னர் பாலியல் வன்புணர்வு செய்ததாக பாரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்திருக்கிறது

கூட்டுப் பலாத்காரம் காரணமாக தற்போது விசாரணை நடத்தப்பட்டுள்ளது.  Le Parisien செய்தித்தாளின் அறிக்கையின்படி மொத்தம் ஐந்து ஆண்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்பாதிக்கப்பட்ட பெண் சுற்றுலாப் பயணி இப்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதே இடத்தில்  இந்த வருடம்  ஏப்ரலில் ஒரு யேர்மனிய இளம் பெண் மீது இப்படியான முயற்சி நடந்ததுஇருப்பினும், அந்த இளம் ஜெர்மனியச் சுற்றுலாப்பயணி கூச்சலிட, அதைக் கேட்ட  ஒரு வீதியோர வியாபாரி உடனடியாக பொலிஸுக்குத் தகவல் கொடுத்ததால் அந்த இளம் பெண்மணி காப்பாற்றப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டார். பின்னர்  நடந்த வழக்கில் அவருக்கு  இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இப்படியான நிகழ்வுகளின் விளைவாக, இனி இரவு நேரங்களில் பூங்காவை மூடி விடும்படி,பாரிஸின் மேயராக இருக்கும் Rachida Dati அறிவித்திருக்கிறார்.

சமீபத்தில் மயோர்க்கா நாட்டில் சுற்றுலாவுக்கு வந்த ஐந்து யேர்மனிய இளைஞர்கள், ஒரு பெண்ணைக்(18) கூட்டுப் பாலியல் வன்முறை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அடுத்த பாலியல் வன்முறை பேர்லின் -யேர்மனியில் நடந்திருக்கிறதுபேர்லின் Goerlitzer Park பூங்காவில்  நடந்து சென்று கொண்டிருந்த ஒரு  ஜோடியைத் தாக்கி, பெண்ணை(27) பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி அவர்களிடம் இருந்த உடைமைகளையும் கொள்ளையிட்டிருந்தார்கள். இப்பொழுது நடந்திருப்பது பரிஸில்.

 

  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.