Jump to content

மனைவியை பிரிகிறார் கனடா பிரதமர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Justin Trudeau and Wife Sophie Grégoire Trudeau Will Take a Family Vacation  Amid Separation

தனது மனைவி சோஃபியை பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்த தம்பதியரின் 18 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

51 வயதான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் 48 வயதான அவரது மனைவி சோஃபி கடந்த 2005இல் மண வாழ்க்கையில் இணைந்தனர். இந்த தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தங்களது பிரிவு முடிவை சார்ந்து இருவரும் சட்டப்படியான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

“அனைவருக்கும் வணக்கம். சோஃபியும் நானும் இந்த உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நீண்ட ஆலோசனைக்கு பின்னர் நாங்கள் இருவரும் கலந்து பேசி பிரிவதாக முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தி கொண்டுள்ளோம். அது தொடரும். எங்கள் குழந்தைகளின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி” என தனது பதிவில் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/266526

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் ட்ரூடோ விவாகரத்து: ‘திருமணம் முறிந்தாலும் குடும்பமாக இருப்போம்’

ஜஸ்டின் ட்ரூடோ விவாகரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

திருமண முறிவு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டிருந்தாலும், இருவரும் இணைந்து பொதுவெளியில் தோன்றுவார்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெஸ்ஸிக்கா மர்ஃபி
  • பதவி, பிபிசி நியூஸ், டொரோண்டோ
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபியும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துள்ளனர். கடினமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் "ஆழ்ந்த அன்பும் மரியாதையும் கொண்ட நெருக்கமான குடும்பமாக" இருப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

2005-ஆம் ஆண்டு மாண்ட்ரீல் நகரில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

திருமண முறிவு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டிருந்தாலும், இருவரும் இணைந்து பொதுவெளியில் தோன்றுவார்கள் என்று ஜஸ்டின் ட்ரூடோவின் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"அவர்கள் திருமண முறிவு தொடர்பான அனைத்து சட்ட மற்றும் நெறிமுறை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய அவர்கள் முயன்றிருக்கிறார்கள். தொடர்ந்து அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அவர்கள் குடும்பமாக விடுமுறையைக் கழிப்பார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

 
ஜஸ்டின் ட்ரூடோ விவாகரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சமீப ஆண்டுகளில் சோஃபியும் ஜஸ்டின் ட்ரூடோவும் பொதுவெளியில் அதிகமாக சேர்ந்து காணப்படவில்லை.

15 வயதான சேவியர், 14 வயதான எல்லா-கிரேஸ், 9 வயதான ஹாட்ரியன் ஆகிய தங்களது 3 குழந்தைகளையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ட்ரூடோ தம்பதி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

"நாங்கள் இதுவரை கட்டியெழுப்பி குடும்பத்துக்காக ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பும் மரியாதையும் கொண்ட ஒரு நெருக்கமான குடும்பமாகவே இருக்கிறோம்.” என்று சோஃபியும், ஜஸ்டின் ட்ரூடோவும் கூறியுள்ளனர்.

சமீப ஆண்டுகளில் சோஃபியும் ஜஸ்டின் ட்ரூடோவும் பொதுவெளியில் அதிகமாக சேர்ந்து காணப்படவில்லை. இருப்பினும் அவர்கள் மே மாதம் அரசர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் ஒன்றாக கலந்து கொண்டனர். மார்ச் மாதம் கனடாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இருவரும் இணைந்து விருந்தளித்தனர்.

ட்ரூடோ தம்பதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தங்களது 3 குழந்தைகளையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ட்ரூடோ தம்பதி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ட்ரூடோ 2015 இல் முதன்முதலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, வோக் இதழுக்கு இருவரும் பேட்டியளித்தனர். அப்போது பேசிய சோஃபி "எனக்கு 31 வயதாகிறது, உங்களுக்காக 31 வருடங்களாக காத்திருக்கிறேன்" என்று தனது முதல் டேட்டின் போது கூறியதாகத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு திருமண நாளுக்காக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சோஃபி ட்ரூடோ, நீண்ட கால உறவுகளின் இருந்த சவால்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். "கொதிக்கும் நாள்கள், புயல் வீசிய நாள்கள் என அனைத்தையும் நாங்கள் கடந்து வந்துள்ளோம்" என்று அதில் பதிவிட்டிருந்தார்.

 
ஜஸ்டின் ட்ரூடோ விவாகரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இருவரும் 2003 இல் டேட்டிங் செய்யத் தொடங்கினர், சோஃபி ஒரு தொலைக்காட்சி நட்சத்திரமாக இருந்தார்.

ஜஸ்டின் ட்ரூடோவும் திருமணத்தில் உள்ள சவால்கள் குறித்து தனது 2014 ஆம் ஆண்டு சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

"எங்கள் திருமணம் கச்சிதமானது அல்ல. ஏற்ற தாழ்வுகள் இருந்தன. இருப்பினும் சோஃபி எனது சிறந்த தோழியாக, என் துணையாக, என் அன்பாக இருக்கிறார். புண்படுத்தினாலும் கூட நாங்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்கிறோம்" என்று அவர் கூறியிருந்தார்.

இருவரும் 2003 இல் டேட்டிங் செய்யத் தொடங்கினர், சோஃபி ஒரு தொலைக்காட்சி நட்சத்திரமாக இருந்தார். மனநலம், உணவுக் கோளாறுகள் தொடர்பான தன்னார்வாப் பணிகளுக்காகவும் அவர் அறியப்படுகிறார்.

திருமண முறிவை பதவியில் இருக்கும்போது அறிவித்த இரண்டாவது கனடா பிரதமர் ட்ரூடோ. அவரது தந்தை மறைந்த பிரதமர் பியர் எலியட் ட்ரூடோ, தாயார் மார்கரெட் ட்ரூடோ ஆகியோர் 1977 இல் தங்களது திருமண முறிவை அறிவித்தனர்.

https://www.bbc.com/tamil/articles/c97v4eqyz7zo

Link to comment
Share on other sites

ரூடோவையும், மக்ரோனையும் இணைத்து   சமூக வலைத்தளங்களில் அசுர வேகத்தில் பரவி வருகிறது.
ரூடோவையும் அமைச்சர் ஜோலியையும் இணைத்தும் வதந்திகள் பரவுகின்றன.

Link to comment
Share on other sites

" இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் "ஆழ்ந்த அன்பும் மரியாதையும் கொண்ட நெருக்கமான குடும்பமாக" இருப்போம் என்று தெரிவித்துள்ளனர்." 

........ஒரே  குழப்பம்.  ஒரே வீட்டில் திருமண உறவில் இருந்த போது இந்த "ஆழ்ந்த அன்பும் மரியாதையும்"     இருந்திருந்தால் , தற்போது இப்பிரிவு நேர்ந்திருக்காதே.  இனித் தனித்தனியாக  இருந்து கொண்டு எப்படி "ஆழ்ந்த அன்பும் மரியாதையும் கொண்ட நெருக்கமான குடும்பமாக" இருக்கலாம் ....." Deep Love in Separate Lives "    என்ற "குடும்ப நாவல்" வெளிவந்தாலும் ஆச்சரியமில்லை. 

Edited by kayshan
  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புகையிரத வண்டிகள்மீது யானைகள் மோதுவதுதான் சரியான வசன நடை.   தனது வழிதடத்தை பக்கவாட்டில் எந்த பக்கமும் திருப்பமுடியாத நேர்கோட்டில் செல்லும் இயந்திரத்தின்மீது தேடி சென்று தம்மை மோதிக்கொள்வது விலங்குகளோ அல்லது மனிதனோதான்.
    • வணக்கம் வில்லவன்.உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ 😀
    • ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பு  பாராளுமன்றம் சென்று ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்ய அனைத்து தீவிர தமிழர தேசியவாதிகளுக்கிடையில் கடும் போட்டி.  தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இரு தேசம் கோஷ்டிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஒற்றையாட்சிக்கு விசுவாசம் தெரிவிக்க இவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள் என்று பார்ததால் புலம் பெயர் தேசிய  வியாபாரம. செய்யும் கும்பலும் தமது விசுவாசிகளை ஒற்றையாட்சிக்கு விசுவாசம் தெரிவிக்க அனுப்ப கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். 😂😂
    • யானைகள் மீது புகையிரத வண்டிகள் மோதிய காலம் போய் தற்போது புகையிரத வண்டிகள்  மீது யானைகள் மோதுகின்றன.  அத்துடன் புகையிர வண்டிகளும் தடம் புரள்கின்றன.  ஆதவா,.....🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.