Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி தொடர்பாக இந்தியா 4வருடமாக நோர்வேயுடன் மோதல். - நடந்து முடிந்த நாடகத்தை அம்பலப்படுத்தும் சி.பி.ஜ.

Featured Replies

கே.பி தொடர்பாக இந்தியா 4வருடமாக நோர்வேயுடன் மோதல். - நடந்து முடிந்த நாடகத்தை அம்பலப்படுத்தும் சி.பி.ஜ.

ஜ செவ்வாய்கிழமைஇ 18 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் என்று சந்தேகிக்கபடும் கே.பி என்பவர் தொடர்பாக 2003ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டுவரை இந்தியாவிற்கும் நோர்வேக்கும் இடையே பாரிய மோதல் மற்றும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாக சி.பி.ஜயுடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. இது தொடர்பாக சி.பி.ஜ உளவாளியாக இருக்கும் றயேஸ் கே.சிங் என்பவர் வெளியிட்டுள்ள தகவல்களை இங்கு தருகின்றோம். கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் எனப்படுபவர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக கருதப்பட்டுபவர். 2003ம் ஆண்டில் இருந்த 2004ம் ஆண்டுவரை நோர்வேயில் தங்கி இருந்தார். பல்வேறு ஒழுக்காற்று கண்கானிப்பு அமைப்பு எனப்படும் எம்.டி.எம்.ஏ எனப்படும் அமைப்பு சி.பி.ஜக்கு குறித்த தகவலை வழங்கி இருந்தது. 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் திகதி கே.பி என்பவர் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் மருத்துவமனை ஒண்றில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் சி.பி.ஜ க்கு அனுபப்பட்டிருந்தது. 2003ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 17ம் திகதி மருத்துவ சிகிச்சை பெறுபவரை கைது செய்யுமாறும் அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறும் சி.பி.ஜ நோர்வேயை கோரியது. நோர்வே மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்ட கே.பியை கைது செய்யவோ அல்லது அவர் தொடர்பான தகவலை இந்தியாவிற்கு கொடுக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ தவறிவிட்டதுடன் இந்தியாவின் கோரிக்கைக்கு இணங்க மறுத்தது. 2004ம் ஆண்டு ஜெனவரி மாதம் 14ம் திகதி சி.பி.ஜ இந்திய வெளியுறவு செயலாளருக்கு கே.பியின் நோர்வே நடமாட்டம் தொடர்பாக அறிவித்தது. நோர்வே அரசை உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரியது. உத்தியோக பூர்வமாக இந்திய அரச பிரதிநிதி நோர்வே நாட்டிற்கு வந்த கே.பியை நாடு கடத்துவது தொடர்பான இரகசிய பேச்சுகளில் ஈடுபட்டனர் எனவும் கூறப்படுகிறது. 2004 மாச் மாதம் 24ம் திகதி நோர்வே அரசு இந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்ததுடன் விடயத்தை தாம் பார்பதாக கூறி இந்திய அரசின் கோரிக்கையை குப்பைக்குள் போட்டது. இந்திய அரசின் கடும் அழுத்தம் காரணமாக நோர்வே ஒரு முடிவுக்கு வந்தது. அப்படிப்பட்ட ஒருவர் வந்திருக்கலாம் அத்துடன் மருத்தவ உதவி பெற்றிருக்கலாம் ஆனால் அவர் வேறு பெயரில் வேறு கடவுச்சீட்டில் நடமாடி இருக்கலாம் என்று நோர்வே இந்தியாவிற்கு பதில் கொடுத்து விடயத்தை முடித்துக்கொண்டது. ஆனாலும் இந்தியா நோர்வேயை விட்டபாடில்லை.

கணிப்பு

இறுதியில் நோர்வேயின் இந்த முடிவால் ஆத்திரம் அடைந்த இந்தியா, இலங்கையில் சமாதானம் பேச வந்த நோர்வே அரசை ஓரங்கட்டும் வேலைகளில் இறங்கியதாகவும் தெரியவருவதுடன் இந்திய உளவுத்துறையான சி.பி.ஜக்கும் றஸ்சிய உளவுத்துறையான கே.ஜி.பிக்கு இடையே 100 வருட உறவு இருப்பதை அறிந்து வைத்துள்ள றஸ்சிய எதிர்பு நாடான நோர்வே.

றஸ்சிய உளவுத்துறையான கே.ஜி.பிக்கும் அமெரிக்க உளவுத்தறையான சி.ஜ.ஏக்கும் இடையில் நடக்கும் பனிப் போரின் நடுவே கே.ஜி.பிக்கு எதிரியாக தென்படும் நோர்வே நாட்டு இரகசிய சேவையும் இவற்றை கவனித்தகொண்டிருக்கும் இஸ்கன்டிநேவிய நாடுகளில் , இந்தியாவின் நண்பனாக செயற்படும் பின்லாந்தும் , இவற்றுக்கு சவாலாக ஆசியக் கண்டத்தில் அமெரிக்க ஆலோசனைபடி நோர்வேயால் வளத்தெடுக்கப்படும் பாகிஸ்தான் இராணுவ கட்டமைப்பும் , தமது உளவுச் சதுரங்க நகர்வுகளை முடிவுக்கு கொண்டு வரும்வரை , இந்திய உளவுத்துறைகளின் கோரிக்கைக்கும் மிரட்டலுக்கும் நோர்வே செவிசாய்க்காது என்றே தெரியவருவதுடன் இந்தியாவிற்குள் தரையிறங்கும் வேலைகளில் இந்த சதுரங்க மேடையில் சிவப்பு - நீல நிறமுடைய சதுரங்க கட்டை திட்டமிட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

முதன் முதலாக கே.பி தொடர்பானசெய்தியின் தொடக்கம் பாங்கொங் போஸ்ரில் ஏஜென்சி றிப்போட்டர் என்ற பெயரிலை கே.ரி.றாஜசிங்கத்தால் எழுதி வெளியிட்டது.

இதனை தொடர்ந்து இந்திய பார்ப்பனிய ஊடகங்கள் கே.பி தொடர்பான செய்திகளுக்கு தூசு தட்ட ஆரம்பித்தன.

பல்வேறு பட்ட ஆய்வுகளை பார்பனியம் செய்ய தொடங்கியது , ஆனாலும் கே.பிக்கும் றாஜிவ்காந்தி விடயத்திற்கும் தேடப்படுவோர் பட்டியலில் கே.பியின் பெயர் இல்லை

1990ம் ஆண்டு காலப்பகுதியில் சர்வதேச கடற்பரப்பில் சிக்கலுக்கு உள்ளான சரக்கு கப்பல் தொடர்பான விடயத்திலேயே இந்தியாவில் இவருக்கு எதிரான விசாரனை தற்போது பதிவில் உள்ளது.

மொத்தத்;தில் உலகபந்தில் கே.பியை தேடும் கே.ரி.ஆர் எந்த பருந்தின் கையில் தீனியாகுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி

நிதர்சனம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான கே.பி. கைது என்கிற குளறுபடியான பரப்புரை மூலம் மகிந்த அரசாங்கம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது என்று கொழும்பு ஆங்கில ஊடகமான "சண்டே லீடர்" சாடியுள்ளது.

மேலும் வாசிக்க

விடுதலைப் புலிகளின் ஆயுத எழுத்து!

சர்வதேச அளவில் திடீரென பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது ஒரு பெயர்...

அந்தப் பெயருக்கு சொந்தக் காரர் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன்!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்படும் குமரன் பத்மநாதனை, கடந்த 10&ம் தேதி சர்வதேச போலீஸ் அமைப்பான ‘இன்டர்போல்’ தாய்லாந்தில் கைது செய்திருப்பதாக ஒரு இணையதளத்தில் செய்தி வெளியானது. அடுத்த நிமிடமே, கே.பி&யின் பெயர் அனைத்து மீடியாக்களிலும் அடிபட ஆரம் பித்தது. ‘முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கே.பி&க்கும் தொடர்புண்டு. அவரை, இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும்’ என்று சி.பி.ஐ. கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாக, தமிழகத்திலும் பஞ்சமில்லாமல் பரபரப்பு ஏற்பட்டது!

‘குமரன் பத்மநாதனை நாங்கள் கைதுசெய்யவே இல்லை...’ என தாய்லாந்து அரசுத் தரப்பில் அறிவிப்பு வெளியாகி விட, அவரைப் பற்றிய பரபரப்பு மெள்ளக் குறைய ஆரம்பித்தன. ஆனால், கே.பி. உண்மையில் கைது செய்யப்பட்டாரா? இல்லையா? இது இன்னும் புதிராகவே இருக்கிறது.

யார் இந்தக் கே.பி?

கே.பி., இலங்கையின் துறைமுக நகரான காங்கேசன் துறைக்கு அருகில் உள்ள மைலிட்டி என்ற இடத்தில் பிறந்தவர். கே.பி&க்கு இப்போது வயது 52. ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் 1983&ல் கட்டவிழ்த்து விடப்பட்ட நேரத்தில், பல நூறு இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் ஈழத்தை வென்றெடுக்கலாம் என்கிற கனவோடு பல அமைப்புகளிலும் இணைந்தனர். அப்போது, ‘தமிழ் புதிய புலிகள்’ அமைப்பில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்கிற இளைஞருக்கு நம்பிக்கை தரும் இன்னொரு இளை ஞராகக் கிடைத்தவர்தான் கே.பி. ஆயுதங்கள் கிடைப்பது அரிதாக இருந்த எண்பதுகளிலேயே புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்த்தவர் குமரன் பத்மநாதன். சிங்களக் காவலர்களைத் தாக்கி அவர்களது ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு வருவது இவருடைய பாணி.

புலிகளின் பல பிரிவுகளும் போர்க்களத்தில் வெற்றிச் சிகரத்தைத் தொட்டிருந் தாலும், பாய்ச்சலோடு பல சாதனைகளை நிகழ்த்தியதில் ‘கடற்புலி’கள் பிரிவுக்கு முக்கியத்துவம் உண்டு. கடற்புலிகளின் மூளையாக இருந்தவர் கே.பி. கப்பல் கட்டுமானப் பணியில் நிபுணத்துவம் வாய்ந்த இஸ்ரேலுக்கு இணையாக கப்பல் கட்டுவதில் புலிகளும் சளைத்தவர்கள் இல்லை என்கிறார்கள் சர்வதேச ஆய்வாளர்கள்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம், ஃபிரெஞ்ச், ஜெர்மன் மொழி களில் சரளமாக உரையாடும் கே.பி., சர்வதேச அளவில் ஆயுதங்களைக் கொள்முதல் செய்து அவற்றை புலிகளிடம் சேர்ப்பதில் கைதேர்ந்தவர். தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்கி பாங்காக் வரை பல நாடுகளில் பல பெயர்களில் சரளமாக நடமாடியுள்ளார் கே.பி.

இவரது சாதுர்யத்தைப் புரிந்துகொள்ள ஒரு சம்பவம் போதும். ஒரு முறை, ஆசிய நாடு ஒன்றிடமிருந்து இலங்கை அரசு நவீனரக ஆயுதங்களை வாங்கியது. அவற்றை கொழும்புக்குக் கொண்டு சேர்ப்பதற்கான டெண்டர் விடப்பட்டது. ஓர் அரசாங்கத்தின் பிரமாண்டமான கண்ணிலேயே மண்ணைத் தூவி, அந்த டெண்டரை எடுத்தவர்... கே.பி! தெற்காசிய நாட்டில் இருந்து ஆயுதங்களோடு கிளம்பிய கப்பல், கொழும்பின் காலே துறைமுகத்துக்கு செல்வதற்கு பதிலாக ஒரு டர்ன் அடித்து முல்லைத் தீவுக்குப் போய்விட்டது. சில மணி நேரங்களில் அந்த ஆயுதங்கள் புலிகளின் முகாமில் இறக்கப்பட்டது! அங்கே கப்பல் இன்னும் வந்து சேரவில்லையே என எதிர் பார்த்திருந்த இலங்கை அரசு, விஷயத்தைக் கேள்விப்பட்டு ஆடிப்போனது. அதிலிருந்து இன்றுவரை ஆயுதக் கொள்முதல் செய்தால் அதை டெண்டர் எதுவும் விடாமல் ராணுவத்தின் மூலமே கொழும்புக்குக் கொண்டுவருகிறது இலங்கை அரசாங்கம்.

இப்போது புலிகளிடம் வான்படையும் இருக்கிறது. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு காலம் போராடி செக்கோஸ்லோ வேகியா நாட்டிலிருந்து இந்த விமானங்களை வன்னிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது கே.பி&தான். ஆனால், இது எப்படிக் கொண்டு செல்லப்பட்டது என்பதோ, யார் மூலம் இதை வாங்கினார்கள் என்பதோ இதுவரை வெளிப்படாத பிரம்ம ரகசியம்.

2000&ம் ஆண்டில் தாய்லாந்து தென் பகுதித் தீவு ஒன்றில் கப்பல் கட்டும் தளம் ஒன்றில் முழுமையாக கட்டி முடிக்கப் படாத சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைத் தாய்லாந்து போலீஸார் மீட்டனர் (பிணீறீயீ -தீuவீறீt விவீஸீவீணீtuக்ஷீமீ ஷிuதீனீணீக்ஷீவீஸீமீ). இந்தத் தகவலறிந்த சிங்கள ராணுவத்தினர் தாய்லாந்து சென்று அதைப் பார்த்தனர். இரண்டு அல்லது மூன்று பேர் மட்டும் அமர்ந்து செல்லக் கூடிய இந்த நீர்மூழ்கிக் கப்பல் புலிகளுக்குச் சொந்தமாக இருக்கலாம் என அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் இப்படிச் சொல்லக் காரணம், 1990&ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்ட சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வடமராட்சி கடல் பகுதியில் சோதனை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இலங்கை அரசிடம் கிடைத்திருந்ததுதான்.

1989&ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27&ம் தேதியை ‘மாவீரர் தின’மாகக் கொண்டாடுவது புலிகளின் வழக்கம். சிங்கள ராணுவத்திடம் உயிருடன் சிக்கக்கூடாது என்பதற்காக அந்த தினத்தில்தான் சங்கர் என்ற போராளி சயனைடு தின்று உயிர்விட்டார். 90&ம் ஆண்டுகளில் ஒரு மாவீரர் தினத்தில்தான் போராளிகளின் கல்லறையில் விமானங்கள் மூலம் பூத்தூவி தங்கள் வான் பலத்தை புலிகள் நிரூபித்தனர். அதைப் போல் இந்த ஆண்டு வரப்போகும் மாவீரர் தினத்தில் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல் படையை, ஈழ மக்கள் விடுதலைப் போராட்டத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பது பிரபாகரனின் ஆசை. அந்தப் பொறுப்பை ஏற்று தாய்லாந்திலேயே தங்கியிருந்து பணியாற்றிக் கொண்டிருந்தார் கே.பி.

இவ்வளவு பராக்கிரமங்களுக்கு சொந்தக் காரரான குமரன் பத்மநாதன், எந்த வகையில் ராஜீவ் கொலையுடன் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்று ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ&யின் சிறப்புப் புலனாய்வு குழு தலைவர் கார்த்திகேயனிடம் பேசினோம். கடந்த 1991&ல் டோங்நோவா கப்பல் மூலம் குமரன் பத்மநாதன் புலிகளுக்கு ஆயுதம் கடத்தினார். அப்போது, இந்தியக் கடலோர காவல் படை அந்தக் கப்பலைச் சுற்றி வளைத்தது. இந்தச் சம்பவத்தில் பத்து விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர். அந்தக் கடத்தலில் கே.பி&க்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் மீது தமிழக க்யூ பிரிவு போலீஸில் ஒரு வழக்கு உள்ளது.

ÔÔராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் கே.பி. பெயரை நாங்கள் சேர்க்கவில்லை. விசாரிக்கப்படவேண்டியவர்கள் பட்டியலில் தான் அவர் இருந்தார். ராஜீவ் கொலைக்கு முன்பு, Ôஒரு இந்தியத் தலைவரைக் குறிவைப்போம்Õ என்று கே.பி. சென்னையில் யாரிடமோ சொன்னதாகத் தகவல் உண்டு. அவருக்கு சதியின் பின்னணி தெரிந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் அவரைத் தேடினோம். ராஜீவ் கொலை சம்பவம் நடந்த சமயத்தில், அவர் மும்பையில் இருந்ததாகக் கேள்விப்பட்டோம். பிறகு, எங்கே போனாரென்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளுக்கு தாய்லாந்திலிருந்து கப்பலில் ராணுவத் தளவாடங்கள் வருவதாகவும், கே.பி&யும் தாய்லாந்தில்தான் இருக்கிறார் என்றும் கேள்விப்பட்டோம்ÕÕ என்றார். டி.அருள் எழிலன்

நன்றி: விகடன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா இலங்கையில் நடப்பது

உள்நாட்டு யுத்தமா

உலக யுத்தமா?

  • தொடங்கியவர்

கே.பி.யை பிரித்தானிய உளவுப்பிரிவான எம்.ஜ.5ம் அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஜ.ஏயும்; பின் தொடர்ந்ததாக நோர்வே பத்திரிகைகள் தகவல். - நோர்வே இந்திய இரகசியப் பேச்சை நோர்வே அரசு தமது ஊடகங்கள் ஊடாக உறுதிப்படுத்தியது.

ஜ புதன்கிழமைஇ 19 செப்ரெம்பர் 2007 ஸ ஜ றஞ்சன் ஸ

கே.பி என்பவர் தொடர்பாக நோர்வே நாட்டின் இரண்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது தொடர்பாக மேலும் தெரியவருகையில் கே.பி தொடர்பாக சி.பிஜ நோர்வே நாட்டுடன் பேச்சுகளில் ஈடுபட்டது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ள நோர்வே நாட்டு ஊடகங்கள் அது தொடர்பாக நோர்வே தரப்பால் சி.பி.ஜக்கு கொடுக்கபட்ட பதிலையும் சுருக்கமாக (நோர்வே ஊடகங்கள்); தமது செய்தியில் சி.பி.ஜக்கு பதிலடியாக வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தூதுவரிடம் நோர்வே ஊடகவியலாளர் கருத்து கேட்டதாகவும் அவர்கள் பதிலளிக்க மறுத்ததாகவும் செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியினை இந்திய தூதுரக வட்டாரத்துடன் தொடர்புடையவரும் பல்லின நடவடிக்கைகளை அவதானித்து செய்தி வெளியிடும் நோர்வே நாட்டு செய்தியாளன் ஒருவர் வெளியிட்டுள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இது முன்னய செய்தி.

hவவி:ஃஃறறற.niவாயசளயயெஅ.உழஅஃ?யசவஸ்ரீ24352

நன்றி

நிதர்சனம்

எந்த ஊடகம் மூலம் என்று சொல்லலியே....

Edited by வாசகன்

***********

Edited by harikalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.