Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை வானில் சுப்பர் புளூ மூன் எனும் அரிய நிகழ்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளை புதன்கிழமை (30) சுப்பர் புளூ மூன் (பெரும் நீல நிலவு) எனும் அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளது. நாளைய தினத்துக்குப் பின் அடுத்த சுப்பர் புளூ மூன் 14 ஆண்டுகளுக்குப் பின்னரே வரும் என்கிறது நாசா.

சுப்பர் மூன் தினத்தில், சந்திரனானது வழக்கமான பௌர்ணமி தினங்களில் தென்படுவதைவிட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் தென்படும்,

சுப்பர் மூன் எப்படி ஏற்படுகிறது??
பூமியை சந்திரன் சுற்றிவருவதற்கு 29.5 நாட்கள் செல்லும், அதாவது 29.5 நாட்களுக்கு ஒரு தடவை பௌர்ணமி (முழு நிலவு) தென்படும். ஆனால், சீரான வட்டப்பாதையில் பூமியை சந்திரன் சுற்றிவருவதில்லை. அது நீள்வட்டச் சுற்றுப்பாதையிலேயே சுற்றி வருகிறது. அதாவது மாதத்தின் சில நாட்களில் பூமிக்கு அண்மையாகவும் சில நாட்களில் அதிக தொலைவிலும் சந்திரன் இருக்கும்.

பூமிக்கு நெருக்கமாக சந்திரன் இருக்கும் நாட்களில் வரும் பௌர்ணமி தினத்தில் முழு நிலவானது மிகப் பிரகாசமாக இருக்கும். இதுவே பெரும் நிலவு (சுப்பர் மூன்) என அழைக்கப்படுகிறது.
இந்த வருடம் ஜூலை 3 முதல் செப்டெம்பர் 27 வரை தொடர்ச்சியாக 4 சுப்பர்மூன்கள் வருகின்றன. இவற்றில் 3 ஆவது சுப்பர் மூன் நாளை தென்படுகிறது.

நாசாவின் ஓய்வு பெற்ற விஞ்ஞானி பிரெட் எஸ்பனாக் இது தொடர்பாக விளக்குகையில், பூமியிலிருந்து 382,900 கிலோமீற்றர் (238,000 மைல் ) தொலைவில் இருக்கும் சந்திரன், கடந்த ஜூலை 3 ஆம் திகதி சுப்பர் மூன் தினத்தில் 361,934 கி.மீ. தூரத்துக்கு நெருங்கி வந்தது.

ஆகஸ்ட் 1 ஆம் திகதி சுப்பர் மூன் தினத்தில் 357,350 கி.மீ. (222,158 மைல்) தொலைவுக்கு நெருங்கி வந்தது. ஆகஸ்ட் 30 ஆம் திகதி சுப்பர் புளூ மூன் தினத்தில் மேலும் நெருக்கமாக பூமியிலிருந்து 357,444 கி.மீ. தொலைவுக்கு சந்திரன் வரும் எனத் தெரிவித்துள்ளார்.

சுப்பர் புளூ மூன்
சுப்பர் மூனும் புளூ மூனும் இணைந்து சுப்பர் புளூ மூன் தோன்றும் நிகழ்வுகள், இரு தடவைகள் ஏற்படுவதற்கு இடையிலான காலம் 2 மாதங்கள் முதல் 20 வருடங்கள் வரை இருக்கலாம் எனவும் சராசரியாக 10 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு சுப்பர் புளூ மூன் ஏற்படுவதாகவும் நாசா கூறுகிறது.

இறுதியாக 2018 ஜனவரியில் சுப்பர் புளூ மூன் ஏற்பட்டது. நாளைய தினத்தின் பின் அடுத்த சுப்பர் புளூ மூன், 14 வருடங்களின் பின்னர் அதாவது, 2037 ஜனவரியிலேயே ஆண்டிலேயே ஏற்படும் என நாசா தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/270825

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, ஏராளன் said:

ஆகஸ்ட் 30 ஆம் திகதி சுப்பர் புளூ மூன் தினத்தில் மேலும் நெருக்கமாக பூமியிலிருந்து 357,444 கி.மீ. தொலைவுக்கு சந்திரன் வரும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் நெருக்கமாக  பூமியிலிருந்து 357,444  357,181 கி.மீ. தொலைவுக்கு சந்திரன் வரும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நிகழும் ‘சூப்பர் ப்ளூ மூன்’ – இது அவ்வளவு அரிதான நிகழ்வா?

நிலவு, வானியல், சந்திரயான், ப்ளூ மூன்

பட மூலாதாரம்,REUTERS

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இன்று (ஆகஸ்ட் 30, 2023) தெரியும் நிலவுக்கு ‘சூப்பர் ப்ளூ மூன்’ (Super Blue Moon).

இது சூப்பர் மூன், மற்றும் ப்ளூ மூன் ஆகிய இரண்டு நிகழ்வுகள் ஒன்றாக நிகழ்வதைக் குறிக்கிறது.

இந்த சூப்பர் ப்ளூ மூன் என்றால் என்ன?

இதற்கு வானியல் மற்றும் புவியியல் ரீதியான முக்கியத்துவம் ஏதெனும் உண்டா?

 

சூப்பர் மூன் என்றால் என்ன?

நிலவு பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்தப் பாதையில், நிலவு பூமியில் இருந்து மிகத் தொலைவான புள்ளியில் இருக்கும்போது சற்று சிறியதாகத் தோன்றும். இந்தப் புள்ளி பூமியில் இருந்து சராசரியாக 405,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அதுவே நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது சற்றே பெரிதாகத் தெரியும். இந்தப் புள்ளி பூமியில் இருந்து கிட்டத்தட்ட 363,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஆனால், இந்த வித்தியாசங்கள் மிகச் சிறியவை. வெறும் கண்களால் இதைக் கண்டறிவது கடினம். ஒரு தொலைநோக்கியின் மூலம் அதைப் படம் பிடித்தால்தான் அதன் வித்தியாசத்தை நாம் காண முடியும் என்கிறார், விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

நிலவு, வானியல், சந்திரயான், ப்ளூ மூன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஓர் ஆண்டுக்கு மொத்தம் 12 முழுநிலவுகள். 168 முழுநிலவுகள் நடந்தால்தான் ஒரு ‘சூப்பர் ப்ளூ மூன்’ நிகழும்

ப்ளூ மூன் என்றால் என்ன?

ப்ளூ மூன் என்பது, ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு.

இது அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுவதால், ஆங்கிலத்தில் ‘ப்ளூ’, அதாவது அரிதான நிகழ்வு என்ற அர்த்தத்தில் மேற்குலகில் அழைக்கப்படுகிறது.

இதற்கான காரணம் ஆங்கில மாதங்களின் அமைப்புதான் என்கிறார் வெங்கடேஸ்வரன்.

ஐரோப்பிய காலண்டர் அமைப்பில் ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்டஸ் சீசர் ஆகிய ரோமானிய மன்னர்களின் பெயரில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் அடுத்தடுத்து 31 நாட்களுடன் இணைக்கப்பட்டதால், மாதங்களின் நாட்கணக்குகள் கூடக் குறைய மாறின.

உதாரணத்துக்கு பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள். ஆனால், நிலவு பூமியைச் சுற்றிவர 29.5 நாட்கள் ஆகிறது.

இதனால், ஆங்கில நாட்காட்டியின் படி, ஒரே மாதத்தில் இரண்டு முழுநிலவுகள் வருவது அரிதானது. அதைக் குறிக்கவே இதை ‘ப்ளூ மூன்’ என்று அழைத்தனர் என்கிறார் வெங்கடேஸ்வரன். இது நாட்காட்டிகளைப் பொறுத்து மாறும்.

உதாரணத்துக்கு வட இந்தியப் பஞ்சாங்கத்தின்படி ஒரு மாதத்துக்கு 29 அல்லது 30 நாட்கள் இருப்பதால், ப்ளூ மூன் என்னும் நிகழ்வு சாத்தியப்படாது. ஆனால் தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டவை.

சில நேரங்களில் தமிழ் மாதங்களுக்கு 32 நாட்கள்கூட இருக்கும். அதனால் தமிழ் மாத அமைப்பின்படி, ‘ப்ளூ மூன்’ சாத்தியப்படும். ஆனால் தமிழ் கலாசாரத்தில் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, என்கிறார் வெங்கடேஸ்வரன்.

முக்கியமாக, ‘ப்ளூ மூனு’க்கும் நீல வண்ணத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

 
நிலவு, வானியல், சந்திரயான், ப்ளூ மூன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கடந்த சூப்பர் ப்ளூ மூன் 2009ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அடுத்த முறை இது 2037ஆம் ஆண்டு தான் நிகழும்.

சூப்பர் ப்ளூ மூன்

மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளும் ஒன்றாக நடக்கும் நிகழ்வே ‘சூப்பர் ப்ளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது.

அதாவது நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது, அதுவே மாதத்தின் இரண்டாவது முழுநிலவாக அமைந்து விட்டால், அது சூப்பர் ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.

இது மிக அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சூப்பர் ப்ளூ மூன் 2009ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அடுத்த முறை இது 2037ஆம் ஆண்டு தான் நிகழும்.

ஓராண்டுக்கு மொத்தம் 12 முழுநிலவுகள். 168 முழுநிலவுகள் நடந்தால்தான் ஒரு ‘சூப்பர் ப்ளூ மூன்’ நிகழும்.

நிலவு, வானியல், சந்திரயான், ப்ளூ மூன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இது மனித வரலாற்றில் நாட்காட்டிகள் கடந்து வந்த மாற்றத்தால் நிகழும் ஒரு சகநிகழ்வு மட்டுமே.

இதற்கு ஏதாவது முக்கியத்துவம் உண்டா?

இல்லை, என்கிறார் வெங்கடேஸ்வரன்.

இது மனித வரலாற்றில் நாட்காட்டிகள் கடந்து வந்த மாற்றத்தால் நிகழும் ஒரு சகநிகழ்வு மட்டுமே, என்கிறார் வெங்கடேஸ்வரன்.

இதனால் எந்த பெரிய வானியல் மாற்றங்களும் நிகழாது,” என்கிறார் அவர்.

ஆனால், நிலவை பார்த்து ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கக்கூடும்.

https://www.bbc.com/tamil/articles/c2x41kn3kzvo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் புளூ மூன் - அரிய காட்சிகள்

Published By: DIGITAL DESK 3

31 AUG, 2023 | 10:16 AM
image
 

சுப்பர் புளூ மூன் (பெரும் நீல நிலவு) எனும் அரிய நிகழ்வு நேற்று புதன்கிழமை (30) இடம்பெற்றது.

372919942_690592636447050_58389917410748

இதனை பொதுமக்கள் வெறும் கண்களில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி மக்கள் புளூ மூனை கண்டுகளித்ததோடு, அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

372922634_690592626447051_50102366569344

இந்த சூப்பர் புளூ மூன் அடுத்து 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 2037 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழும்.

373316629_690592689780378_42496388819145

372978411_690592609780386_72104151298721

371824668_6556907107726325_8667771153601

371793351_6556906827726353_8780843630193

371798668_6556906914393011_8546844105160

371867287_6556906731059696_4052150483148

xyz16934091273.jpgஇம்மானுவேல் யோகினி, தீபக்

xyz16934091272.jpg

இம்மானுவேல் யோகினி, தீபக்

https://www.virakesari.lk/article/163544

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.