Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

15 ஏக்கர் அரச காணியை இரவோடு இரவாக துப்பரவு செய்ய முயன்ற நபர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15 ஏக்கர் அரச காணியை இரவோடு இரவாக துப்பரவு செய்ய முயன்ற நபர்கள்

adminSeptember 1, 2023

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில்   சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள் நேற்று வியாழக்கிழமை (31) இரவு ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்பரவு செய்த நிலையில்,    காவல்துறையினா் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்குச் சென்ற நிலையில் ,இயந்திரங்கள் கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் உள்ள அரச காணியை இனம் தெரியாத நபர்கள் சிலர் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி காடுகளை அழித்து காணியை துப்புரவு செய்து கொண்டு இருப்பதாக இலுப்பைக்கடவை  காவல்துறையினா்   மற்றும் இராணுவத்தின் 541 வது படைப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவம் மற்றும்  காவல்துறையினா்  அப்பகுதிக்குச் சென்றனர்.

இதன் போது ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்புரவு செய்து கொண்டிருந்த நபர்கள் இராணுவம் மற்றும்  காவல்துறையினா்   கண்ட நிலையில் ஜே.சி.பி இயந்திரங்களை அங்கேயே கை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் காணியை துப்பரவு செய்ய பயன்படுத்திய 3 ஜே.சி.பி இயந்திரங்களை      மீட்டுள்ள காவல்துறையினா்  மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.

spacer.png

https://globaltamilnews.net/2023/194707/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் அங்கு புகுந்து இப்படி செய்வதட்கு சந்தர்ப்பம் இல்லை. முனாக்களின் வேலையாகத்தான் இருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

சிங்களவர்கள் அங்கு புகுந்து இப்படி செய்வதட்கு சந்தர்ப்பம் இல்லை. முனாக்களின் வேலையாகத்தான் இருக்க வேண்டும். 

இவர்கள் தொட்டதை, விட்டதை பிக்குகள் தொடர்வார்கள். நாங்கள் செய்தால்; வன இலாகா, தொல்பொருள் இலாகா தடுத்து தத்தெடுக்கும். மற்றவர்கள் செய்தால்; வரவேற்று ஊக்குவிக்கும். விசித்திரமான சட்டமும் விளக்கமும் இந்த நாட்டிலே எங்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, satan said:

இவர்கள் தொட்டதை, விட்டதை பிக்குகள் தொடர்வார்கள். நாங்கள் செய்தால்; வன இலாகா, தொல்பொருள் இலாகா தடுத்து தத்தெடுக்கும். மற்றவர்கள் செய்தால்; வரவேற்று ஊக்குவிக்கும். விசித்திரமான சட்டமும் விளக்கமும் இந்த நாட்டிலே எங்களுக்கு.

எனக்கு தெரிந்த வரைக்கும் இந்த நாட்டில் சடடம் ஒழுங்கு என்பது கிடையாது. ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு சடடம். பெரும்பான்மையினர் யாரும் எப்படியும் இனவாதமாக பேசலாம். நீதி துறையை அவமதிக்கலாம். தோல்வியடைந்த ராணுவ ஆட்சிகளில்கூட இப்படி நடப்பதில்லை. கேடடால் தங்கள் இனத்தை விட மேலான ஆட்கள் உலகத்தில் இல்லை என்பார்கள். சாபக்கேடு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

எனக்கு தெரிந்த வரைக்கும் இந்த நாட்டில் சடடம் ஒழுங்கு என்பது கிடையாது. ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு சடடம். பெரும்பான்மையினர் யாரும் எப்படியும் இனவாதமாக பேசலாம். நீதி துறையை அவமதிக்கலாம். தோல்வியடைந்த ராணுவ ஆட்சிகளில்கூட இப்படி நடப்பதில்லை. கேடடால் தங்கள் இனத்தை விட மேலான ஆட்கள் உலகத்தில் இல்லை என்பார்கள். சாபக்கேடு. 

அதுதான் அந்த இனத்துக்கு அழிவின் முதற்படி. எல்லோரிடமும் கைநீட்டுவது  அறிவுரை சொன்னால் தானே அரசன் மாதிரி அவர்களை எச்சரிப்பது. எல்லோராலும் தனிமைப்படுத்தப்படப்போகிறார்கள். மட்டுமல்லாமல் தங்களின் அடாவடிகளை தாங்களே காட்டியும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலிருந்துகொண்டு, அதன் பயன்களை அனுபவித்துக்கொண்டு, தமது பிழைகளுக்கு எதிராக ஏற்படும் கலகங்களை, புலிகள், புலப்பெயர் பணம், சர்வதேசத்தின் சதி என்று அவர்களின் தலையில் போட்டு உலகமே இருண்டு விட்டது என தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.