Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடரும் மழையுடனான வானிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
03 SEP, 2023 | 10:09 AM
image
 

மத்திய, சப்ரகமுவ, மேல்,தென்  மற்றும் வடமேல்  மாகாணங்களில்  அடிக்கடி  மழை பெய்யக்கூடுமெனவும் சப்ரகமுவ, மேல் மற்றும் தென்  மாகாணங்களின்  சில இடங்களில்  100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.  

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும் அத்துடன் சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடமத்திய  மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 - 45 கிலோ மீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக  இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் வங்கதெனிய, வாரியப்பொல, மடவெல மற்றும் கொக்கட்டிசோலை  போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. 

புத்தளம் தொடக்கம் கொழும்பு,  காலி, மாத்தறை  ஊடாக  அம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி, ஹமபாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோ மீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

https://www.virakesari.lk/article/163728

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கொழும்பு!

Published By: NANTHINI

03 SEP, 2023 | 02:43 PM
image
 

நாட்டின் பல பாகங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கிறது. ஆனாலும், சில பிரதேசங்களில் வறட்சியால் மக்கள் நீரின்றி கஷ்டப்படுகின்றனர்.

இன்றைய தினம் (03) மேல் மாகாணத்தில் பெய்த கடும் மழையால் கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

அடைமழை மற்றும் வீசிய கடும் காற்றினால் கொழும்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வீதிகளில் வெள்ளம் நிரம்பியுள்ளது.

இந்நிலையில், வீதிகளில் தேங்கிக் கிடக்கும் வெள்ள நீரை அகற்றும் நடவடிக்கையில் கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

372303412_611465717724846_48896593783625

372300771_1023014928942839_4390211464484

372296907_1046828256731313_8632013456832

372293316_954124952552804_56626308511666

372156810_3203492859946976_4041865721792

372271651_191844397127530_59591473490440

372298703_2036917816667950_5813667840475

372292230_685926676393786_45601464407246

372271645_1064740578235687_1451007764631

372259205_767119638519015_53289329160166

372264952_1289814798563041_5045316701508

https://www.virakesari.lk/article/163753

  • கருத்துக்கள உறவுகள்

தத்தளிக்கிறது கொழும்பு: மரமும் முறிந்து விழுந்தது

 

twitter sharing button
print sharing button
livejournal sharing button
googlebookmarks sharing button

image_130135ffbb.jpg

கொழும்பில் சனிக்கிழமை (02) இரவு முதல் பெய்த அடைமழை காரணமாக, பிரதான வீதிகள் உள்ளிட்ட தாழ்நிலபிரதேசங்கள் வௌ்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சில இடங்களில் முழங்கால்கள் வரைக்கும் வெள்ளநீர் தேங்கி நின்றது.

இந்நிலையில், ஒரு சில நேரங்களில் மழையுடன் காற்றும் வீசியது. இதனால், விளம்பர பலகைகள் முறிந்து விழுந்துள்ளன. மரங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்துள்ளன.

கொழும்பு – புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, அந்த பிரதேசத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஒல்கெட் மாவத்தை பகுதியின்  போக்குவரத்து ஒரு வழியாக மட்டுப்படுத்தப்பட்டது. கொழும்பு நகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து மரத்தை அகற்றும் பணிகுளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/தததளககறத-கழமப-மரமம-மறநத-வழநதத/95-323721

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலத்த காற்றுடனான மழை தொடரும் : 04 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு : கடலுக்குச் செல்ல வேண்டாம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை : அவதானத்துடன் செயற்படுங்கள் - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

03 SEP, 2023 | 05:52 PM
image
 

 

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் புதன்கிழமை (6) வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களில் இன்று பலத்த காற்றுடன் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

களுத்துறை, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிறத்தினாலான மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அனர்த்தம் இடம்பெறும் சாத்தியம் உள்ள பகுதிகளில் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் இப்பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், கடலுக்கு செல்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பில் அதிக மழைவீழ்ச்சி

நாட்டில் கடந்த ஒன்றரை மாதமான நிலவிய கடும் வறட்சியான காலநிலைக்கு மத்தியில் கொழும்பு உட்பட பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடனான மழைவீழ்ச்சி பதிவானது.

கொழும்பு மாவட்டத்தில் 77 மில்லி லீற்றருக்கும் அதிகளவில் பதிவான மழை வீழ்ச்சியினால் மருதானை, புறக்கோட்டை, தெமட்டகொட, ஆமர் வீதி உள்ளிட்ட பெரும்பாலான சிறு நகர்ப்பகுதிகளின் வீதிகள் நீரில் மூழ்கின.

மழையுடனான காலநிலை தொடரும்

மேல், சம்பரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலி மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

எதிர்வரும் புதன்கிழமை (06) வரை மழையுடனான காலநிலை தொடரும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

மழையுடனான காலநிலை நீடிக்கும் நிலையில்  காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிலையிலான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிறத்திலான மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை காலப்பகுதியில் நிலத்தில் வெடிப்பு உருவாகுதல், ஆழமாகும் வெடிப்புகள் மற்றும் தரை உள்ளிறங்கள், மரங்கள், மின் கம்பங்கள், கட்டடங்கள் சாய்வடைதல், சாய்வுகளில் அமைந்துள்ள கட்டடங்கள் தரை மற்றும் சுவர்களில் வெடிப்புகள் உருவாகுதல், நிலத்திலிருந்து திடீரென நீரூற்றுக்கள், சேற்று நீர் தோன்றுதல் என்பன குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொதுக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடலுக்கு செல்ல வேண்டாம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் இப்பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், கடலுக்கு செல்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/163778

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதும் விகாரைகளை கட்டி   4 ஆம் 5ஆம் வகுப்புகள் படித்தவர்களை புத்த பிக்குகளாக்கி  குடியிருந்துகள். மழை நன்றாக பெய்யும்  ..சீனா இடம் சொன்னால்  கடலிருந்து. மண் எடுத்து   கொழும்பு இல் போட்டு   நிலமட்டத்தை உயர்த்தி விடுவார்கள்    🤣🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற காலநிலை 13 ஆம் திகதி வரை தொடரும் : இயற்கை அனர்த்தங்களால் 5994 பேர் பாதிப்பு : 204 வீடுகள் பகுதியளவில் சேதம்

07 SEP, 2023 | 05:31 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த இரு வாரங்களாக நிலவும் தென்மேல் பருவ பெயர்ச்சி காலநிலையால் ஏற்பட்டுள்ள மழை காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 5000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மரம் முறிந்து விழுந்தமை, கடும் காற்று, கடும் மழை, மணிசரிவு என்பவற்றின் காரணமாகவே இந்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

காலி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகல், நுவரெலியா, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 1648 குடும்பங்களைச் சேர்ந்த 5994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இம்மாவட்டங்களில் 204 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இந்த சீரற்ற காலநிலை எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடரக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றும் மழை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நேற்றைய  தினம் புளத்சிங்கள பிரதேசத்தின் வீதிகள் நீரில் மூழ்கிக் காணப்பட்டன.

அத்தோடு மக்கொட மற்றும் பேருவளை புகையிரத நிலையங்களுக்கிடையில் மாகல்கந்த பிரதேசத்தில் புகையிரத வீதியில் மண்மேடு சரிந்து விழுந்தமையால் புகையிரத போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து காலி செல்லும் இரவு தபால் புகையிரதமும் , மருதானையிலிருந்து அழுத்கம செல்லும் புகையிரதமும் பயாகல பிரதேசத்தில் சுமார் 2 மணித்தியாலங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

மேலும் அதிக மழை காரணமாக பெலியத்த - கஹவத்த பிரதேசத்தில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த வயல்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. அறுவடை செய்யப்படவிருந்த சுமார் 175 ஏக்கருக்கும் அதிக வயற்பரப்பில் காணப்பட்ட நெற்பயிர் செய்கையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.

இக்காலநிலை தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாரத்னவிடம் வினவிய போது , தென்மேற்கு பருவப் பெயர்ச்சி கால நிலையின் இரண்டாம் கட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலையே நிலவும். இதன் காரணமாக வழமையாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்படக் கூடும். மழையுடனான காலநிலையின் போது காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும். இம்மாதம் 13ஆம் திகதியின் பின்னரே இந்த காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/164042

இங்க ஒரு துளியாவது பெய்யுதா? கிணறுகளும் வற்றிக் கொண்டு போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.