Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4/21 தாக்குதல்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: செனல்-4 அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரத்திற்காக ராஜபக்ஷக்கள் மேற்கொண்ட சதித்திட்டத்திற்கு உதவிய பிள்ளையான், சுரேஷ் சலே மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : தேசிய மக்கள் சக்தி

06 SEP, 2023 | 08:15 PM
image
 

(எம்.வை.எம்.சியாம்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ராஜபக்ஷக்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சதித்திட்டம் என்பது நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூறியது தற்போது உண்மையாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் பிள்ளையானுக்கும், சுரேஷ் சலேவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என சனல் 4 இன் ஆவணப்படம் உறுதிப்படுத்தியுள்ளது. 

ஆகவே செனல் 4 வெளியிட்ட காணொளியை விமர்சிப்பதை விடுத்து குறித்த இருவரையும் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 04 வருடங்கள் கடந்துள்ளன. இருப்பினும் இன்றளவிலும் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படவில்லை. ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூறினோம். 

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக குறித்த ஒரு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட மிலட்சத்தனமான தாக்குதல் என முன்னாள் சட்டமா அதிபரும் கூறினார். 

மிகவும் திட்டமிட்டு, அதிகாரத்தின் மீது கொண்ட பேராசை காரணமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட முன்னரும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரும் இடம்பெற்ற நிகழ்ச்சி நிரல்களை பார்க்கும் போது உண்மைகளை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி மூலம் இந்த உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அதில்  முஸ்லிம் அடிப்படைவாதிகளை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதே தாக்குதலின் நோக்கம் எனவும் இந்த தாக்குதலின் பின்னணியில்  இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சாந்திரகாந்தனுக்கும் (பிள்ளையான்) மற்றும் புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலேவுக்கும் இடையில்  நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காணொளி வெளிவர முன்னர் பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்கள் சிலர் அன்ஷிப் அசாத் மௌலானா தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். எவ்வாறாயினும் உண்மைகளை வெளிக்கொணரும் நபர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிள்ளையானுடன் நெருங்கி பழகியுள்ளதுடன் அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் ஆதராமாக அமைந்துள்ளது. உண்மையில்  தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நீதியாகவும், நேர்மையாகவும் முன்னெடுக்கப்படவில்லை. 

இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் இன்றும் பொதுவெளியில் சுதந்திரமாக சுற்றி திரிகிறார்கள். பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் சலே கோட்டபய பதவி பொறுப்பேற்றவுடன் புலனாய்வு பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டார். நாட்டு மக்களுக்கு இந்த தாக்குதலின் பின்னணியில் சுரேஷ் சலே எந்தளவு முக்கியத்துவம் வகித்துள்ளார் என்பது தற்போது தெளிவாகிறது. 

கோட்டபாய ராஜபக்ஷவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டுள்ள சுரேஷ் சலே இன்னமும் பிரதானியாக செயற்படுகிறார். இவ்வாறு இருந்து கொண்டு உண்மைகளை வெளிக்கொணர முடியாது. உடனடியாக சுரேஷ் சலே பதவியில் இருந்து  நீக்கப்பட வேண்டும். பிள்ளையானுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

காணொளி மூலம் வெளிக்கொணரபட்டுள்ள விடயங்கள் தொடர்பில்  ஜனாதிபதி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். சனல் 4 ஐ விமர்சிக்காமல் பிள்ளயான், சுரேஷ் சலேயிடம் விசாரணைகளை நடத்துங்கள். உயிர்த்த தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுப்பதன் மூலமே  நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தை இல்லாமல் செய்ய முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/163977

  • Replies 50
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

”சுதந்திரமான விசாரணை நடாத்தப்பட வேண்டும்”

இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரு வருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டங்களை கருத்தில் கொண்டு, வரலாற்று மாற்றத்தின் சவால்களை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கான  நீதி, நியாயம், உண்மை என்பன நிறைவேற்றப்படாமல் வேதனையுடன் வாழ்ந்து வருவதாக உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்று அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அவ்வாறானதொரு பொறிமுறைக்காக உண்மையான பின்னணியை தயார் செய்ய வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச கொள்கைக்கு முரணானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் 19-3 பிரிவு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிமனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை போன்றே இதுவும் அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/சுதந்திரமான-விசாரணை-நடாத்தப்பட-வேண்டும்/175-323957

  • கருத்துக்கள உறவுகள்

சேனல்-4: ஈஸ்டர் குண்டுவெடிப்பு ராஜபக்ஸ ஆட்சிக்கு வர செய்த சதியா?

ராஜபக்ஸ சதியா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 செப்டெம்பர் 2023

இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சேனல் 4 இன்று அதிகாலை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த வீடியோவில் ஈஸ்டர் தாக்குதலுடன் ராஜபக்ஸ குடும்பம் உள்ளிட்ட சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்ஸ வெற்றி பெறுவதற்காக புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து இதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டடதாக சேனல்-4 ஆவணப்படம் கூறுகிறது.

சேனல்-4 ஆவணப்படம் - சாட்சிகள் யார்?

ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய அசாத் மௌலானா இந்த வீடியோவின் பிரதான சாட்சியாளராக விளங்குகின்றார். அசாத் மௌலானா தற்போது சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தெரிய வருகின்றது.

அத்துடன், வெள்ளை வேன் விவகாரத்தில் நாட்டிலிருந்து வெளியேறிய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதானியான நிஷாந்த சில்வா கந்தப்பா, ஊடகவியலாளராக பேட்ரிகா ஜென்ஸ், கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரன் லால் விக்ரமதுங்க, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், முன்னாள் ராஜதந்திர அதிகாரி சரத் கொன்காகே, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை ஆகியோர் இந்த வீடியோவில் சாட்சி வழங்கியுள்ளனர்.

ராஜபக்ஸ குடும்பத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர நாட்டிற்குள் பாதுகாப்பற்ற நிலையொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற விதத்தில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் ராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிற்கும், தௌஹித் ஜமாத் அமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விவகாரம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அசாத் மௌலானா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

அத்துடன், ராஜபக்ஸ குடும்பத்தின் குற்றங்கள் என அடையாளப்படுத்தி மேலும் சில தகவல்களையும் சேனல் 4 வெளியிட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் ஊடகவியலாளர் பேட்ரிகா ஜென்ஸ் மற்றும் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரன் லால் விக்ரமதுங்க ஆகியோர் இந்த வீடியோவில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மறுப்பு

இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிடம், சேனல் 4 ஆவணப் படம் எழுத்து மூலம் கேள்விகளை எழுப்பியுள்ளது.

சேனல் 4 தொலைக்காட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் முன்னாள் ராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நிராகரித்துள்ளதாக சேனல் 4 ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்கு கொண்டு வர நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமையொன்றை ஏற்படுத்த வேண்டும் என ராஜபக்ஸ குடும்பம் எண்ணியதா எனவும், தௌஹித் ஜமாத் அமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதா எனவும் சேனல் 4, முன்னாள் ராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிடம் வினவியுள்ளது.

இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளது.

தௌஹித் ஜமாத் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படும் காலப் பகுதியில் தான் மலேசியாவில் தங்கியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடத்தப்படும் தருணத்தில் தான் இந்தியாவில் இருந்ததாகவும் அவர் சேனல் 4 தொலைக்காட்சிக்கு பதிலளித்துள்ளார்.

ராஜபக்ஸ சதியா?

அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மறுப்பு

இந்த ஆவணப் படத்தில் தன் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாக ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தன்னுடன் இருந்த அசாத் மௌலானா போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான பொறுப்பை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். எனினும், அசாத் மௌலானா இந்த சம்பவத்தை வேறு திசையை நோக்கி நகர்த்த முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் காணப்படும் சர்வதேச சக்திகளை அசாத் மௌலானா காப்பாற்ற முயற்சிக்கின்றாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தான் சிறைச்சாலையில் இருந்ததாகவும், குறுகிய காலத்தில் தற்கொலை குண்டுதாரியை தயார்படுத்த முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

குறுகிய காலத்தில் இவ்வாறான ஒன்றை தயார்படுத்த முடியாது. எதிர்கட்சித் தலைவர் கூறுகின்ற விதத்தில் இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும். அதேபோன்று அசாத் மௌலானா தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஸ சதியா?

பட மூலாதாரம்,SIVANESADURAI CHANDRAKANTHAN

எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

உள்நாட்டு விசாரணை தோல்வியடைந்துள்ள தருணத்தில், சர்வதேச விசாரணைகளில் மாத்திரமே உண்மையை கண்டறிய முடியும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.

இந்த விடயத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் அரசாங்கத்திற்கு, இதற்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயத்தை மூடி மறைக்காது, உள்நாட்டு மற்றும் சர்வதேசங்களை இணைத்ததாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் இந்த அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதா என கண்டறியப்பட வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ராஜபக்ஸ சதியா?

பட மூலாதாரம்,SAJITH PREMADASA

நாமல் ராஜபக்ஸ கருத்து

''ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தொடங்கிய பிறகு, ஈஸ்டர் தாக்குதலுக்கு ஓராண்டுக்கு முன்பாக நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் 70 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை வென்றோம். ஆகவே, தேர்தல் வெற்றிக்காக இதுபோன்ற வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என அவர் கூறினார்.

விசாரணைக் குழு - இலங்கை அரசு அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சேனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் இடம் பெற்ற அம்சங்கள் தொடர்பாக விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

"சேனல்-4 குழுவினர் இலங்கை வந்து ஆதாரங்களை தர முடியாவிட்டாலும், அங்கிருந்த படியே ஜூம் மூலமாக ஆதாரங்களை அளிக்கலாம்" என்று அவர் கூறியுள்ளார்.

ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவும் தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.

"ஸ்ரீலங்கன் பொதுஜன பெரமுனா கட்சியை தொடங்கிய பிறகு, ஈஸ்டர் தாக்குதலுக்கு ஓராண்டு முன்பாக நடைபெற்ற கவுன்சில் தேர்தலில் 70 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை வென்றோம். ஆகவே, தேர்தல் வெற்றிக்காக இதுபோன்ற வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை." என்று அவர் கூறினார்.

ராஜபக்ஸ சதியா?

பட மூலாதாரம்,BISHOP HOUSE

சேனல் 4 ஆவணப்படம் - கொழும்பு பேராயர் கருத்து

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சேனல்-4 ஆவணப்படம் குறிப்பிடும் விஷயங்களை விசாரணைக்குப் பிறகே ஏற்போம் என்று கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் தெரிவித்துள்ளார். எந்தவொரு விசாரணையும் இல்லாமல் அந்த ஆவணப்படத்தை அப்படியே ஏற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

சேனல்-4 ஆவணப்படத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முறையான, வெளிப்படையான விசாரணை நடப்பதை உறுதி செய்ய நாட்டு மக்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடையும் போது, சேனல்-4 போன்ற சர்வதேச ஊடகங்களின் அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. சில உண்மைகளை கண்டுபிடிக்க வேண்டியிருப்பதாக அது கூறியுள்ளது" என்று கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், "சேனல்-4 ஆவணப்படம் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான விஷயங்கள் தொடர்பாக நேர்மையான, வெளிப்படையான முழுமையான விசாரணையைத் தொடங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே விசாரித்த குழுக்கள் கண்டுபிடித்த விவரங்கள் மீது முறையான விசாரணை நடத்தப்படவில்லை. தற்போதைய அரசும் சரி, முந்தைய அரசும் சரி, நாடாளுமன்றம் நியமித்த குழு அளித்த பரிந்துரைகள் மீது அலட்சியமே காட்டியுள்ளன. சேனல்-4 ஆவணப்படத்தில் உள்ள விவரங்கள் தன்னிச்சையான சர்வதேச குழு மூலம் விசாரணையில் தெரியவந்தவை.

குற்றவியல் புலனாய்வுத் துறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட விசாரணை அதிகாரிகள் மீண்டும் உள்நாட்டுக் குழுவில் இடம் பெறவேண்டும். அந்தக் குழு சர்வதேச புலனாய்வுக் குழுவுக்கு உதவியாக இருக்க வேண்டும்." என்று அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cyxdpyq2gdpo

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

உள்நாட்டு விசாரணை தோல்வியடைந்துள்ள தருணத்தில், சர்வதேச விசாரணைகளில் மாத்திரமே உண்மையை கண்டறிய முடியும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

குண்டுத்தாக்குதல் நடந்த கால கட்டத்தில் சர்வதேச விசாரணை செய்ய முன்வந்தன, ஆனால் அது தமக்கு இழுக்கு என அதை ஏற்க மறுத்தவர் கோத்தா. இன்றுவரை அவர்களால் சரியான விசாரணை அறிக்கையை வெளியிட முடியாததும் சணல் நான்கு வெளிப்படுத்தியதும் இழுக்கல்லவே அவர்களுக்கு. கண்டிப்பாக தாங்கள் மாட்டுப்படுவோம் என்பதற்காகவே தடுத்திருந்தார்.

5 hours ago, ஏராளன் said:

கிய காலத்தில் தற்கொலை குண்டுதாரியை தயார்படுத்த முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

ஐயோ...ஐயோ! அவர்கள் ஐ .எஸ் அமைப்பினர். அவர்களுக்கு ஏற்கெனவே தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். சிறையில் எதற்காக இருந்தார்கள்? அதைவிட தற்கொலை குண்டுதாரிக்கு அப்படியென்ன பயிற்சி தேவை? அவர்கள் என்ன எதிரியின் பாசறையிலா தாக்குதல் நடத்தினர்? அல்லது போரிட்டா இறந்தனர்?  

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 புலம்பெயர் அமைப்புகளிற்கு ஆதரவானது- விஜயதாச

07 SEP, 2023 | 05:26 PM
image
 

சனல் 4 புலம்பெயர்ந்த அமைப்புகளிற்கு   ஆதரவானது என நீதியமைச்சர் விஜயதாச தெரிவித்துள்ளார்.

2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனல் 4 இன் ஆவணப்படம் குறித்து நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ள அமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் முன்னாள் புலம்பெயர்ந்த அமைப்புகள் இலங்கை குறித்து  சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிடுவது வழமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/164046

  • கருத்துக்கள உறவுகள்

Channel 4 இன் சமீபத்திய திரைப்படமானது அது முன்னர் வௌியிட்ட படங்களைப் போலவே பொய்களின் திணிவு – கோட்டாபய

gota-news.jpg

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் Channel 4 தொலைக்காட்சி வௌியிட்டுள்ள ஆவணப்படம் குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் வௌியிட்டுள்ள முதல் அறிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையில் தம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

Channel 4 இன் சமீபத்திய திரைப்படமானது அது முன்னர் வௌியிட்ட படங்களைப் போலவே பொய்களின் திணிவு என்றும் 2005 ஆம் ஆண்டு முதலே ராஜபக்ஷ பாரம்பரியத்தை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் Channel 4 செயற்பட்டு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் குழு தற்கொலை தாக்குதல்களை நடத்தியதாகக் கூறுவது அபத்தமானது என அவர் கூறியுள்ளார்.

எனக்கு எதிராக சில அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், நான் பதவியில் இருந்தபோது ரோமன் கத்தோலிக்க சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். போர் முடிவுக்கு வந்த பின்னர், மடு தேவாலயத்தின் மறுசீரமைப்பிற்கும் முள்ளிக்குளம் தேவாலயத்தின் புனரமைப்பிற்கும் நான் உதவினேன். புனித பாப்பரசரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளுக்கு நான் உதவியதுடன், விஜயத்தின் ஒருங்கமைப்பு குழுவிற்கும் தலைமை தாங்கினேன். பொலவலனையில் 16 ஆவது ஆசிர்வாதப்பர் கத்தோலிக்க உயர் கல்வி நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளிலும் நான் முக்கிய பங்காற்றினேன். அக்காலப் பகுதியில் பேரருட்திரு கர்தினாலுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளேன்” என கோட்டாபய ராஜபக்ஷ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை ராஜபக்ஷ விசுவாசி என கூறப்படும் கூற்றுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, மேஜர் ஜெனரல் சாலே பல ஜனாதிபதிகளின் கீழ் சேவையாற்றிய ஒரு தொழில்முறை இராணுவ அதிகாரி என்றும் அனைத்து இராணுவ அதிகாரிகளுமே அரசுக்கு விசுவாசமானவர்கள் என்றும் தனிப்பட்ட நபர்களுக்கு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் 2015 இல் பாதுகாப்புச் செயலாளர் பதவியை விட்டு விலகிய பின்னர் 2019 இல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நானும் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி, அவரைப் போலவே நானும் பல்வேறு அரசாங்கங்களின் கீழ் பணியாற்றினேன். 2015 இல் பாதுகாப்பு செயலாளர் பதவியை விட்டு விலகி, நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் வரை, மேஜர் ஜெனரல் சாலேக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2016 இல் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து மேஜர் ஜெனரல் சலே நீக்கப்பட்ட பின்னர், அவர் மீண்டும் அப்பிரிவில் பணியாற்றவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் ஜனாதிபதியான பிறகுதான் அவர் 2019 டிசம்பரில் இருந்து புலனாய்வு சேவையின் தலைவராக உளவுத்துறை பிரிவில் அவர் மீண்டும் இணைந்தார். எனவே மேஜர் ஜெனரல் சாலே 2018 பெப்ரவரியில் தற்கொலை குண்டுதாரிகளை சந்தித்ததாகக் கூறப்படுவது ஒரு கட்டுக்கதை என்பது தெளிவாகிறது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/272258

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 காணொளிக்கு எதிராக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முன் ஆர்ப்பாட்டம்

07 SEP, 2023 | 05:34 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி அடிப்படையற்றது என்றும், விசாரணைகள் இன்றி போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முன் இன்று வியாழக்கிழமை (06) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய இயக்கத்தால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் கடிதமொன்றும் கையளிக்கப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அங்குனுகல்லே ஸ்ரீ வினாநந்த தேரர், 

சனல் 4 செய்தி சேவையால் வெளியிடப்பட்டுள்ள காணொளியின் ஊடாக இலங்கை புலனாய்வுப்பிரிவை இலக்கு வைத்து போலியான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறித்த காணொளியில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் போலியானவை என்பதைக் கூட உறுதிப்படுத்தாமலேயே அவை வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பாதுகாப்புத்துறையின் பிரதானிகளுக்கும் தெரிவித்துள்ளதோடு, போலியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் இவ்வாறான தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம்.

அத்தோடு, போலி தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சுயாதீன நாட்டின் புலனாய்வு பிரிவினர் மீது சுமத்தப்பட்டுள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்தையும் வலியுறுத்துகின்றோம். இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையே பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திலும் கையளித்துள்ளோம் என்றார். 

375767912_1033155737876235_6225804539670

373395632_135101396341457_26045718426632

373463825_1456923415142914_7695145645921

375013637_1436307253816053_1662873434357

375021102_951708736633233_91810312478973

375628092_292056120193043_21727228993639

https://www.virakesari.lk/article/164048

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2023 at 00:54, ஏராளன் said:

 

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.jpg

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும் ஹன்சீர் அஷாட் மௌலானா வெளிநாட்டில் தஞ்சம் கோருவதற்காக இதனை மறுபக்கம் திருப்புவதற்கு முயற்சிப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மதத்திற்காக மரணிப்போம் என சத்தியபிரமாணம் செய்த சிலர் சிறையிலும் வெளியிலும் இருக்கின்றார்கள். அவர்களை மரணிப்பதற்கு ஊக்குவித்த  அரசியல் சக்திகள்,  காணப்படுகின்றன. இதனை காப்பாற்றுவதற்கான ஹன்சீர் அஷாட் மௌலானா மேற்கொண்டுள்ள பலத்த முயற்சியே செனல் 4 நிறுவனத்திற்கான சாட்சியமளிப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் மீண்டும் ஒரு அச்சுறுத்தலான சூழலை உருவாக்க முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

.மேலும் ஹன்சீர் அஷாட் மௌலானா போன்றவர்கள் தங்கள் வாழ்விற்காக காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் சில தமிழ் அரசியல்வாதிகள் அதில் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/272002

ஆமா ..... இவர் பெரிய புகழின் உச்சிக்கொம்பில் இருக்கிறார், இவரை விழுத்துவதற்காக இவரின் பெயரை பயன்படுத்துகின்றனர், இவருக்குள் ஒரு நினைப்பு. இதுக்கே இப்படியென்றால்; இன்னம் பல சாட்சியங்களும் வாக்குமூலங்களும் தொடர்ந்து வரும்போலிருக்கிறதே. கோத்தா சாட்சியங்களை அழிக்காமல் உறங்க மாட்டார். இவர் முக்கியமான சாட்சி, இவர் எடுப்பார் கைப்பிள்ளை. தன் தலைவனையே காட்டிகொடுத்தவருக்கு, அதை நிஞாயப்படுத்தியவருக்கு இது ஒன்றும் புதிதில்லையே.

அதுசரி .... ஹன்சீர் அஷாட் மௌலானா எதற்காக வெளிநாட்டில் தஞ்சம் கோரவேண்டும்? அதற்காக, ஏன் இவரின் பெயரை பயன்படுத்தவேண்டும்? வெளிநாட்டில் தஞ்சம் கோருவோரெல்லாம் இவரின் பெயரை பாவித்தா பெறுகின்றனர்? அப்போ ..... இவரால் ஹன்சீர் அஷாட் மௌலானாவுக்கு பாதுகாப்பு பிரச்சனை இருந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறார் இவர். அதை ஏன் அவர் இலங்கையில் முறையிட விரும்பவில்லை? தனக்கு பாதுகாப்பு கிடைக்காது என்பதை அவர் உணர்ந்துள்ளளார். அப்படி ஒரு உணர்வு அவருக்கு  ஏற்பட காரணம் என்ன?

அவர்களை (ஐ. எஸ்) உங்கள் எஜமானரின் அரசியல் நோக்கத்திற்காக மரணிக்க ஊக்குவித்ததாகவே தனது சாட்சியத்தில் கூறியிருக்கிறார், உங்கள் கூற்றும் அவரின் சாட்சியமும் ஒத்து வருகின்றது. 

தாங்கள் நினைத்ததை சாதிப்பதற்கும் தங்கள் அடாவடிகளை மறைப்பதற்கும், அதிலிருந்து தப்பிப்பதற்கும் வன்முறைகளை தூண்டுவதும், பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்துவதும் இந்த நாட்டின் கலாச்சாரம், அது இந்த நாட்டுக்கு ஒன்றும் புதிதில்லை, அதனாலேயே இந்த நாடு அழிந்து குட்டிச்சுவரானது, ஆனால் அதை செய்பவர்கள் செய்ய வேண்டும், தெரியாதவங்க செய்ய வெளிக்கிட்டால் அதனாலேயே அழிவர். பன்றியோடு சேர்ந்த கன்றும் ஏதோ தின்னுமாம், சேர்ந்த இடம், அவர்களுக்காக செய்யுந்தொழில் அப்படி பேச வைக்குது. கூட இருந்தவனாலேயே காட்டிக்கொடுக்க முடியும். எதற்காக காட்டிக்கொடுத்தார் என்பது நன்றாகவே இவருக்குத் தெரியும், தெரியாவிட்டால் தன் கடந்த அனுபவங்களை மீட்டிப்பார்க்கலாம். துரோகி துரோகத்தாலே அழிவான். கூலிக்கு கொலை செய்பவனை கொலை செய்ய, இன்னொருவன் கூலிக்கு அமர்த்தப்படுவான். இன்னும் நிறைய துரோகங்களையும் பரபரப்புச் செய்திகளையும் மாற்றங்களையும் எதிர் பார்க்கிறோம். சவேந்திர சில்வா அடுத்த சாட்சியாளராக மாறவும் இடமுண்டு. எதுவும் எந்த நேரத்திலும் இடம்பெறலாம் யாக்கிரதையாக நடமாடவும், முடிந்தால்........? தஞ்சமும் கோரலாம் வெளிநாட்டில்!  

 

  • கருத்துக்கள உறவுகள்

 

சனல் 4- கேள்விகள் - சந்தேகங்கள்
----------- -------------- -----
ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான
நிரந்த அரசியல் தீர்வு பற்றிய உரையாடல் எல்லாமே தற்போது ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் ஜனநாயக உரிமை அல்லது மனித உரிமைப் பாதுகாப்பு விவகாரமாக மாறி வருகிறது.
2015 ஜனவரியில் நல்லாட்சி என்று கூறிக் கொண்டு பதவிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசாங்கம் இதனைக் கன கச்சிதமாகச் செய்திருக்கிறது. அதற்கேற்ப 2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழி சமைத்துமுள்ளது.
இதனையே சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த ஆவணப்படம் சித்தரிக்கிறது.
தேவாலயங்கள், ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 269 பேரின் உறவினர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் முப்பது வருட போரிலும் அதற்கு முன்னர் 1958 இல் இருந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொலைகள், வன்முறைகள் பற்றிப் பேசுவதைவிடவும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிக் குரல் கொடுப்போரின் பின்னணி பற்றியே அதிகளவு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சந்தேகங்கள் வருமாறு—
1) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் சிலரினால் கையாளப்பட்ட தமிழ் - முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் 2009 முள்ளிவாய்க்கல் போருக்கே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டனர் என்ற உண்மையை சனல் 4 தொலைக்காட்சி முறைப்படி வெளியிட்டதா?
2) ஜே.ஆர் ஜயவர்த்தனாவில் இருந்து ரணில் வரையும் தமிழர்களின் போராட்டத்தைப் பயங்கரவாதமாகத் திசை திருப்பி முறியடிக்க, தமிழ்-முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இலங்கை இராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டன. இதற்கு அமெரிக்க - இந்திய அரசுகளும் ஒத்துழைத்த உண்மைகளை சனல் 4 ஆதாரங்களுடன் வெளியிட விரும்பியதா?
3) இலங்கைப் புலனாய்வுத்துறையிடம் தமிழ் - முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் சம்பளத்துக்குப் பணியாற்றினர் என்பது பரகசியம். (Revealing or Publishing Secrets)
4) ஜெனீவா மனித உரிமைச் சபை ஆரம்பமாகவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் அவ்வப்போது போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காடசிக்கு, 2009 இற்குப் பின்னரும் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்கில் மேற்கொண்டு வரும் அச்சறுத்தல்கள் மற்றும் காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் பற்றி ஏதேனும் விபரங்கள் தெரியாதா?
4) போர்க் குற்றம் பற்றியும் 2019 இல் நடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்தும் வெளிப்படுத்திய ஆர்வம், 2009 மே மாதத்திற்குப் பின்னரும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் தொடர் அநீதிகள் பற்றி ஏன் இல்லாமல் போனது?
ஆகவே மேற்குலக நாடுகளின் தேவைக்கும் புவிசார் அரசியல் - பொருளாதார நோக்கிலும் சனல் 4 தொலைக்காட்சி செயற்படுகிறது என்று கூறலாமா?
ஏனெனில்,
ஆவணப் படத்தின் பின்னர், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கிறார்.
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரியுள்ளார்.
ஆகவே சிங்கள அரசியல் தலைவர்கள், சிங்கள மதத் தலைவர்கள் எல்லோருமே 2009 போரையும் ஈழத் தமிழர்களின் எண்பது வருட அரசியல் விடுதலைப் போராட்டத்தையும் எப்படிப் பார்க்கின்றனர் என்பது புரிகின்றதல்லவா?
மேற்கு நாடுகளின் தேவையென்ன?
இலங்கை சிறிய அரசு. ஊழல் மோசடி அதிகாரத் துஸ்பிரயோகம் நிறைந்த அரசு. அங்கு இன ஒடுக்கல் நடக்கிறது. இவை பற்றியெல்லாம் தெளிவாகத் தெரிந்தாலும், தமது புவிசார் அரசியல் - பொருளாதார நோக்கில் தெரியாதது போன்று இயங்குகின்றன.
வல்லரசுகளின் இந்த அணுகுமுறைதான் சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த யோகம்.
ஆனால் வல்லரசுகளின் இந்தப் பிழையான அணுகுமுறைகள் பற்றி சனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்துமா?
ஏனெனில் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்தான் இங்கு பிரதானமாகிறது.
தமிழர்களின் அரசியல் நியாயத்தை முடக்க எண்பது வருடங்களாக வெவ்வேறு வியூகங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளை வெளிப்படுத்தக் கூடிய ”மூலங்கள்” சனல் 4 தொலைக் காட்சிக்குத் தெரியாததல்ல. ஆனால்?
அ. நிக்ஸன்-
பத்திரிகையாளர்.
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

பொலவலனையில் 16 ஆவது ஆசிர்வாதப்பர் கத்தோலிக்க உயர் கல்வி நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளிலும் நான் முக்கிய பங்காற்றினேன். அக்காலப் பகுதியில் பேரருட்திரு கர்தினாலுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளேன்” என கோட்டாபய ராஜபக்ஷ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதை விடுங்கோ.... அது உங்களுக்கும் கருதினாலுக்கும் இடையில் செய்யப்பட்ட இரகசிய உடன்பாடு கொடுக்கல் வாங்கல். உங்களுக்கு அரசியல் கதிரையை உறுதி செய்துவிட்டு சென்ற பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன செய்தீர்கள்? அல்லது இந்த கருதினால்தான் என்ன செய்தார் என பட்டியலிடுங்கள் முதலில்! 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2023 at 15:59, ஏராளன் said:

இந்த ஆவணப் படத்தில் தன் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாக ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

 

On 7/9/2023 at 15:59, ஏராளன் said:

சேனல் 4 தொலைக்காட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் முன்னாள் ராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நிராகரித்துள்ளதாக சேனல் 4 ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் எல்லோரும் தங்கள் குற்றத்தை ஏற்றுகொண்டால் காவற்துறை எதற்கு? சட்டமும் நீதிமன்றமுந்தான் எதற்கு?

On 7/9/2023 at 15:59, ஏராளன் said:

தான் சிறைச்சாலையில் இருந்ததாகவும், குறுகிய காலத்தில் தற்கொலை குண்டுதாரியை தயார்படுத்த முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்! சிறைச்சாலையில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தனை, சிறைச்சாலை வரை சென்று மஹிந்தா சந்திப்பு நடத்த காரணமென்ன? கதைத்ததுதான் என்ன? அவ்வளவு பெரிய புள்ளியா இவர்? அல்லது மஹிந்தவின் உடன் பிறப்பு, உறவு, நட்பு? பதவியிழந்தவர் ஆட்சியை பிடிக்காவிட்டால் சிறை செல்வது உறுதி, இவரோ சிறையில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவித்தவர் இரண்டுபேரும் சந்தித்து தீட்டிய திட்டம், ஒருவர் விடுதலை பெற்றார் மற்றவர் ஆட்சியை பிடித்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மீள் விசாரணையை ஷானி அபேசேகரவிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை

08 SEP, 2023 | 01:04 PM
image
 

தற்போது கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் பல நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று வெள்ளிக்கிழமை (08) பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

சமகாலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை நசுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக இங்கு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஊடகங்கள் சுயக்கட்டுப்பாட்டைப் பேணுவது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறே, அரசாங்கம் ஊடகங்களை நசுக்குவது சர்வாதிகார இயல்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைத் தன்மை மீண்டும் மீண்டும் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், உயிர்த்த ஞாயிறு தொடர்பான மீள் விசாரணையை இது தொடர்பான அறிவும் அநுபவமும் உள்ள ஷானி அபேசேகரவிடம் ஒப்படைக்குமாறும், 2019 பொதுஜன பெரமுனவுக்கு இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்கவே மக்கள் ஆணை வழங்கினர் என்றும் அவர் தெரிவித்தார்.

எமது நாட்டில் வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பயன்படுத்தி ஜனாதிபதி பதவியைப் பெற்று,அரசாங்கம் அமைத்து, அமைச்சுப்பதவிகளையும் பெற்று இன்று இது பற்றி தவறான கருத்துக்களை வெளியிடுவதில் அர்த்தமில்லை என்றும், எங்களுக்கு உண்மை மட்டுமே வெளிப்பட வேண்டும் என்றும்,சேறுபூசும் அரசியலில் ஈடுபட நாங்கள் தயாராக இல்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்திய ஷானி அபேசேகர சிறையிலடைக்கப்பட்டதன் மூலம் சில விடயங்கள் பற்றிய உண்மை புலப்படுவதாகவும், இந்த தாக்குதல் தொடர்பான மீள் விசாரணையை கைவிலங்குகள் இல்லாமல், கழுத்தில் கயிறுகள் பிணைக்கப்படாமல் ஷானி அபேசேகரவிடம் வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

https://www.virakesari.lk/article/164093

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழர்களும், மத தீவிரவாதிகளும் சணல் 4 நிகழ்ச்சிக்கு பின்னால் - பிள்ளையான்.

ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மேல் கண்டவாறு திருவாய் மலர்ந்து அருளினார். மொவ்லானா நான் புலிகளுடன் இருக்கும் போது எம்முடன் இல்லை. நான் கிழக்கு முதலமைச்சராக இருந்த போது வந்து சேர்ந்தார். குடும்பத்தில் பிரச்சனைகள் என்று சில வருடங்களுக்கு முன்னர் சொல்லி, போன வருடம் நாட்டினை விட்டு வெளியேறி, இப்போது ஒரு நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்.

2018 உள்ளுராட்சி தேர்தலிகளிலேயே SLPP மக்கள் ஆதரவினை உறுதிப்படுத்தி இருந்தது. ஆகவே, 2019 ஜனாதிபதி தேர்தலில் யாரை நிறுத்தி இருந்தாலும் வெல்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆகவே இப்படி ஒரு சதியினை செய்து தான் வென்றார் என்பது, மேலை நாடுகளின் சதி திட்டமாகும். சிறையில் இருந்த நான் எப்படி இந்த சதியில் பங்கு கொண்டிருக்க முடியும். பாராளுமன்றில் எனது பெயரை சொல்லி, குப்பை அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் இதை விடுத்து, நாட்டின் பாதுகாப்பினை, அபிவிருத்தியினை குறித்து பேச வேண்டும். ஒரு யுத்தத்தில் நாட்டு மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டார்கள். இப்படி குற்றசாட்டுகளை விசாரித்து, உண்மைகளை அறிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.  

https://www.dailymirror.lk/opinion/Tamil-Diaspora-backed-by-other-religious-extremists-behind-Channel-4-Pillayan/231-266868

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

2018 உள்ளுராட்சி தேர்தலிகளிலேயே SLPP மக்கள் ஆதரவினை உறுதிப்படுத்தி இருந்தது. ஆகவே, 2019 ஜனாதிபதி தேர்தலில் யாரை நிறுத்தி இருந்தாலும் வெல்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

அப்போ..... அவர்கள் 2022ம் ஆண்டு துரத்தப்படுவார்கள் என்றும் எல்லோரும் தெரிந்து வைத்திருந்தார்களா? அப்படியெனில் ஏன் அவர்களை வெல்ல வைத்தார்கள் மினிஸ்ரர் சந்திரகாந்தன்?  

12 hours ago, Nathamuni said:

குடும்பத்தில் பிரச்சனைகள் என்று சில வருடங்களுக்கு முன்னர் சொல்லி, போன வருடம் நாட்டினை விட்டு வெளியேறி, இப்போது ஒரு நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்.

அப்போ..... குடும்பப்பிரச்சனை உள்ளவர்களுக்கு உள்நாட்டில் தீர்வில்லை  வெளிநாட்டிற்த்தான் தீர்வு என்கிறார் இவர். பாவம் இந்த சந்திரகாந்தன்! புலிகளுக்குதுரோகம் செய்து வீழ்ச்சியை கொடுத்து இன்று அதே துரோகாத்தால் மாட்டுப்பட்டு  முழிக்கிறார். இவரை சிறையிலும் இருக்க விட மாட்டார்கள், வெளியிலும் இருக்க விடமாட்டார்கள். இவருக்கு அரசியல் அந்தஸ்து கொடுப்பதே தமக்காக கொலை செய்வதற்கே. இவர் மாட்டேன் என்றும் சொல்ல முடியாது, இவரின் குற்ற பட்டியல் அவர்களின் கையில். அதை காட்டியே சகல கொலைகளும் நடக்கின்றன, முடிவும் அவர்கள் கையாலேயே. அதனாற்தான் சொல்கிறேன் இது போராட போகாமல் இருந்திருக்கலாம், இல்லை பேசாமல் சிறைக்கு போயிருந்தால் மரியாதையோடு வெளியே வந்திருக்கலாம். எப்போதுமே இவர் ஒரு சிறைகைதியே அவர்களின். சர்வதேச விசாரணை என்று வந்தால்; சிக்கப்போவது, இவர் தன் வாயாலேயே மாட்டுவார். என்ன செய்வது அவரின் விதி அப்படி. இந்த சர்வதேச விசாரணை நாட்டுக்குள் வந்தால்; உயிர்த்த ஞாயிறு விசாரணையோடு மூடிக்கொண்டு போகப்போவதில்லை. தங்களை விடுவிக்க வெளிக்கிட்டு தாங்களாகவே சிக்கிகொள்ளப்போகிறார்கள். விதி வரையும் பாதை விசித்திரமானது ஆனால் நேர்த்தியானது! 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2023 at 01:08, ஏராளன் said:

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை பொதுஜன பெரமுன தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது

ஆனால் உங்கள் மீது குற்றச்சாட்டு வந்திருக்கிறது, உங்கள் கூற்றை நாங்கள் நம்ப வேண்டுமானால் இந்த குற்றச்சாட்டிலிருந்து உங்களை விடுவிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி.... சர்வதேச விசாரணையை ஏற்று உங்கள் கூற்றை, வெற்றியை நிரூபியுங்கள். இல்லையேல்.... குற்றச்சாட்டு உண்மையானது என உறுதிப்படுத்தப்படும்.

On 7/9/2023 at 01:08, ஏராளன் said:

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்காகவே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்ற தவறானதொரு நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

அதுதான் சொல்கிறோம்.... அவர்களின் முயற்சியை முறியடிக்க வேண்டுமானால் சர்வதேச விசாரணையை ஏற்க தாங்கள் முன்வரவேண்டும். இல்லையென்றாலும் தாங்கள் விட்ட பெருந்தவறோ அன்றி ஒப்படைக்கப்பட்ட தரகர் விட்ட தவறோ.... சுற்றுலா விடுதிமேல் தாக்குதல் நடத்தியது. நீங்கள் மறுத்தாலும் அந்த மக்களின் அரசாங்கங்கள் சும்மா விடப்போவதில்லை உங்களை.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2023 at 01:28, ஏராளன் said:

2005 ஆம் ஆண்டு முதலே ராஜபக்ஷ பாரம்பரியத்தை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் Channel 4 செயற்பட்டு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் அப்படி? ராஜபக்ச பாரம்பரியத்துக்கும் சணல் 4 குமிடையில் அப்படி என்ன கொடுக்கல் வாங்கல் பிணக்கு?

On 8/9/2023 at 01:47, ஏராளன் said:

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி அடிப்படையற்றது என்றும், விசாரணைகள் இன்றி போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு

சரி... அவர்களுடையது போலியானவை. உங்கள் விசாரணைகளின் அடிப்படைத்தன்மையை வெளிப்படுத்துங்கள் முதலில் பார்க்கலாம்? அவற்றின் மூலம் சணல் நான்கு போலியானது என்பதை நிரூபித்து அதை தடை செய்யுங்கள் பார்க்கலாம் முடிந்தால்!         

On 8/9/2023 at 01:47, ஏராளன் said:

சனல் 4 செய்தி சேவையால் வெளியிடப்பட்டுள்ள காணொளியின் ஊடாக இலங்கை புலனாய்வுப்பிரிவை இலக்கு வைத்து போலியான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கை கொடுத்தும் தடுக்க முடியாத, நான்கு ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க முடியாத இலங்கை புலனாய்வுப் பிரிவை குறி வைப்பதால் யாருக்கு என்ன நன்மை? 

  • கருத்துக்கள உறவுகள்

ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள ஆதாரபூர்வமற்ற விடயங்களால் ஏற்படும் விளைவுகளிற்கு சனல் 4 பொறுப்பேற்கவேண்டும் - பாதுகாப்பு அமைச்சு

Published By: RAJEEBAN

09 SEP, 2023 | 09:45 AM
image
 

சனல் 4 இன் உயிர்த்தஞாயிறு குறித்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

சனல் 4 தெரிவித்துள்ள விடயங்களை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு உண்மை நீதி மற்றும் தேசத்தின் நலன் ஆகியவற்றிற்கான தனது அர்ப்பணிப்பையும் வலியுறுத்தியுள்ளது.

கருத்துசுதந்திரம் புலனாய்வு செய்தியறிக்கையிடல் ஆகியவற்றிற்கான சுதந்திரத்தை மதிப்பதாக தெரிவித்துள்ள இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு  ஆதாரமற்ற தீங்கிழைக்கும் மற்றும் ஆவணப்படத்தில் கூறப்பட்ட மோசமான ஆதாரபூர்வமற்ற கூற்றுக்களால் ஏற்படும் விளைவுகளிற்கு சனல்4 பொறுப்பேற்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

சனல் 4 இன் ஆவணப்படம் இலங்கையின் சமூக கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/164157

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா... எச்சரிக்கை கொடுத்தும் அப்பாவிமக்களை பலிகொடுத்த அமைச்சு, அதுக்கு பாதுகாப்பு என்று பெயர். குற்றவாளிகளை பாதுகாக்கும் அமைச்சு, இவர்களின் அச்சுறுத்தலுக்கு ஒன்றும் குறைவில்லை. தெருவிலே நின்று ஊளையிடும் பிக்குகளை அடக்கத்தெரியவில்லை, உண்மைகளை வெளிபடுத்துவோருக்கு அச்சுறுத்தல் விட மட்டும் தெரியும். நிஞாயத்தை கேட்போரை அழிப்பது, அச்சுறுத்தல் விடுவது, காணலாலாக்குவது இந்த நாட்டின் அரசியலின் பாரம்பரியம். அதை இன்று உலகமே அனுபவிக்கிறது. நல்ல வேளை..... இந்த அமளியில் குமார் கஜேந்திரன் தப்பினார்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

ஆதாரமற்ற தீங்கிழைக்கும் மற்றும் ஆவணப்படத்தில் கூறப்பட்ட மோசமான ஆதாரபூர்வமற்ற கூற்றுக்களால் ஏற்படும் விளைவுகளிற்கு சனல்4 பொறுப்பேற்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

நாட்டிலே தீங்கொன்றும் நிகழவில்லை, சணல் நான்காற்தான் நிகழப்போகுது. தமிழருக்கு உரிமை வழங்கினால் கலவரம் வெடிக்கும், தனியார் காணிகளில் விகாரை கட்டுவதை தடுத்தால் இரத்த ஆறு ஓடும், தமிழருக்கு ஏதாவது வழங்கினால் நாட்டை கொழுத்துதல் இப்படியே உருவான, பழக்கப்பட்ட இனம். இதுகளை மாற்ற முடியாது. நன்மைகளை சிந்திப்பதுமில்லை, செய்வதுமில்லை. துறவிகளில் இருந்து அரசியல்வாதிகள், குடிமக்கள்,  பாதுகாப்பு அமைச்சு வரை முன்னேறவில்லை,  அழிவையே சிந்திப்பது. இனி நாட்டில் ஒரு அழிவு ஏற்பட்டால்; அதற்கு தங்கள் பொறுப்பை தட்டிக்கழித்து மற்றவர்களை அச்சுறுத்தும்இலங்கை பாதுகாப்பு அமைச்சே பொறுப்பேற்க வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா குற்றச்சாட்டுக்களையும் மறுக்கலாம் மறைக்கலாம் கூறுவோரை அச்சுறுத்தலாம் ஆனால் தொடர்ந்து வெளிவரப்போகும் ஆதாரங்களையும் வாக்குமூலங்களையும் மறுக்க முடியுமா? முடிந்தால்; தங்களையே மறுப்பது போலவும் ஏமாற்றுவது போலவும் ஆகும்.  அமெரிக்கா போர்க்குற்ற ஆதாரங்களை சற்றலைட் மூலம் வைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள், அது உண்மையானால்; ஈராக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கொண்டு உள்நுழைந்தது, ஆப்கானிஸ்தானில், லிபியாவில் நடந்ததுபோல் இங்கும் வந்து இவர்களை இழுத்துக்கொண்டு போக முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

‘சேனல் 4’ குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால் குழு நியமனம்

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானிய ஊடகமான “சேனல்-4” மூலம் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு படி, இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் தலைமை தாங்குவார்.

ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஏ.சி.எம். ஜயலத் வீரக்கொடி & ஹர்ஷ ஏ.ஜே. சோசா பிசி ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

செப்டெம்பரில் ஒரு காணொளியை வெளியிட்டு, ‘சேனல் 4’ சில இலங்கை அரசாங்க அதிகாரிகள் குண்டுவெடிப்புகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டும் உயர்மட்ட தரப்பினருடன் பிரத்தியேக நேர்காணல்கள் இருப்பதாகக் கூறியது.

இந்த காணொளியின் படி கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் (TMVP) முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானாவும் உள்ளார்.

‘சேனல் 4’ காணொளியில் தோன்றிய ஆசாத் மௌலானா, ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் கிழக்கில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சல்லே ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர் பிள்ளையான், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் அல்லது குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என மறுத்துள்ளார்.

இதற்கிடையில், 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் சதித்திட்டம் குறித்து விரிவான சுதந்திரமான சர்வதேச விசாரணையைத் தொடங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கத்திற்கு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.

“சுதந்திரமான, பாரபட்சமற்ற, நியாயமான, வெளிப்படையான மற்றும் பரந்த” விசாரணையின் அவசியத்தை கொழும்பு பேராயர் வலியுறுத்தியுள்ளதுடன், இது ஒரு சுயாதீன சர்வதேச குழுவால் நடத்தப்பட வேண்டும் என்றும் கொழும்பு பேராயர் வலியுறுத்தியுள்ளார்.

2019 நவம்பரில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவிக்கு வருவதற்கான சூழலை உருவாக்குவதற்காக, ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக சனல் 4 காணொளியில் முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டு.

குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ , Chanel 4 இன் சமீபத்திய காணொளி 2005 இலிருந்து ராஜபக்சவின் பாரம்பரியத்தை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் ராஜபக்சவுக்கு எதிரான கோஷம் என்றும், அதே சேனல் ஒளிபரப்பிய முந்தைய படங்களைப் போலவே பொய்களின் திணிவு என்றும் தெரிவித்துள்ளார்.

தன்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் குழு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாக கூறுவது அபத்தமானது என்றும் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/273315

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 கயிறு மரண கயிறாக மாறும் - உதய கம்மன்பில எச்சரிக்கை

Published By: VISHNU

21 SEP, 2023 | 07:12 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தை தாக்குவதாக கூறி எமது இராணுவத்தினரை தாக்குவதற்கும் தாய்நாட்டை தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது. சனல் 4 கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரத்தம் மற்றும் கண்ணீரை அரசியல் லாபத்திற்காக மாற்றுவதற்கு கீழ்த்தரமான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2001 - 2004 காலப்பகுதி மற்றும் 2015 காலத்தை போன்றும் புலனாய்வுத்துறையை வீழ்ச்சியடைய செய்து இராணுவத்தினரை பலவீனமாவர்களாக்கி மீண்டும் நாட்டை இரத்த வெள்ளத்திற்குள் தள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது.

அரசாங்கத்தை தாக்குவதாக கூறி எமது இராணுவத்தினரை தாக்குவதற்கு இடமளிக்க முடியாது. எமது தாய்நாட்டுக்கு தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது. இதனால்செனல் 4 கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என்ற எச்சரிக்கையை  விடுகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோருபவர்கள் சில விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவின் எப்.பி.ஐ அமைப்பு இங்கே வந்தது, அவுஸ்திரேலியா பெடரல் பொலிஸ் வந்தது. அவர்கள் இங்கே விசாரணை நடத்தி அறிக்கையை முன்வைத்துள்ளனர். ஏன் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கேட்கின்றோம். இதேவேளை இந்த பிரச்சினைகளை மேற்குலக நாடுகளில் இருந்து கொண்டு இங்கே பிரிவினை வாதத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது.

https://www.virakesari.lk/article/165145

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அமெரிக்காவின் எப்.பி.ஐ அமைப்பு இங்கே வந்தது, அவுஸ்திரேலியா பெடரல் பொலிஸ் வந்தது. அவர்கள் இங்கே விசாரணை நடத்தி அறிக்கையை முன்வைத்துள்ளனர். ஏன் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கேட்கின்றோம்.

இதுவரைகாலமும் எந்த விசாரணை அறிக்கையும் வெளிவராததனாலேயே பாதிக்கப்பட்டவர்கள்  சர்வதேச விசாரணையை கேட்கிறார்கள். இவ்வளவுநாளும் இதைப்பற்றி வாயை திறக்கவுமில்லை, அறிக்கையை வெளியிடவுமில்லையே, அது ஏன் இப்போ பதறிக்கொண்டு அறிவிக்கிறீர்கள்? அவர்கள் அப்படி என்னதான் சொன்னார்கள்? அந்த அறிக்கையில் வெளியிடாமல் ஏற்றக்கொள்ளக்கூடாதோ என்றால், எதை என்று சொல்லவேண்டும். சரி... பத்தோடு பதினொன்றாக அவர்களும் விசாரணை செய்துவிட்டு போகட்டுமேன், அதற்கு ஏன் இப்போ பதறுகிறீர்கள், மறுக்கிகிறீர்கள்? திட்டம் போட்டவர்களில் இவரும் ஒருவராக இருப்பார், இல்லையென்றால் ஏன் இப்போ பதறுகிறார், இரானுவம் என்கிறார்? குண்டு வெடிப்பில் இருந்து அப்பாவி மக்களை பாதுகாக்க தவறியுள்ளது இராணுவமும் அதன் புலனாய்வும் இதில, இவர்களை காட்டிக்கொடுப்பதற்கு என்ன இருக்கிறது என இவர் விளக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதியான விசாரணை வேண்டும் எனகேட்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது, அதை தடுப்பதற்கு இவருக்கு எந்த அதிகாரமுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 விவகாரம் - மனித உரிமை ஆணையாளருக்கு விபரங்களை அனுப்பிவைத்தார் ஆசாத் மௌலானா

Published By: RAJEEBAN

24 SEP, 2023 | 11:17 AM
image
 

சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

அதன் பிரதியை அவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் அனுப்பிவைத்துள்ளார்.

இதேவேளை சனல் 4 இன் ஆவணங்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிராகரித்து புலனாய்வு பிரிவின் அதிகாரிசுரேஸ் சாலே ஐக்கியஇராச்சியத்தின் ஒளிபரப்பு  ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்த  முறைப்பாட்டை ஒவ்கொம் எனப்படும் அந்த அமைப்பு நிராகரித்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை சனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில்  சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்திற்கு நேரடியாக விடுக்கப்பட்ட வேண்டுகோள்களும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.

இந்த வேண்டுகோள் குறித்து ஆராயுமாறு  லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் கொழும்பை கேட்டுக்கொண்டுள்ளது - இவ்வாறான சட்ட நடவடிக்கையில் தனியார் சட்டஅமைப்பொன்றை ஈடுபடுத்தினால்  அதற்காக ஐந்துமில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட் செலவாகலாம் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/165303

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு கோர வேண்டும் - எஸ்.எம்.சந்திரசேன

Published By: VISHNU

27 SEP, 2023 | 03:54 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தால் ராஜபக்ஷர்களின் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நட்டஈடு கோர வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம்.

மக்களை கொன்று ஆட்சிக்கு வர வேண்டிய தேவை ராஜபக்ஷர்களுக்கு இல்லை என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில்  சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட ஆவணப்படத்துக்கு எதிர்க்கட்சியினர் அதிக முக்கியத்துவம்  வழங்கினார்கள். குண்டுத்தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ஷர்கள் உள்ளார்கள், பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றிக்காக குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்கள்.

அரச பாதுகாப்பு பிரதானி சுரேஷ் சலேவுக்கும் பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இடையில் எவ்வித சந்திப்பும் இடம்பெறவில்லை என்று சனல் 4 தொலைக்காட்சி சேவையின் முக்கிய தரப்பினர் தற்போது குறிப்பிட்டுள்ளார்கள். இதுவே உண்மை.

ராஜபக்ஷர்களினால் தான் நாட்டு மக்கள் இன்று சுதந்திரமாக வாழ்கிறார்கள். மக்களை கொன்று ஆட்சிக்கு வரும் கொள்கை ராஜபக்ஷர்களுக்கு இல்லை என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளிப்படுத்திய ஆவணப்படுத்தால் ராஜபக்ஷர்களின் கௌரவத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இதற்காக ராஜபக்ஷர்கள் சனல் 4 விடம் நட்டஈடு கோர வேண்டும் என்பதை கட்சி என்ற அடிப்படையில் வலியுறுத்துவோம்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் கனடா உட்பட நாடுகள் தலையிடுவது ஒன்றும் புதிய விடயமல்ல, வழமையானதே. எந்த நாட்டையும் பகைத்துக் கொள்ள வேண்டிய நோக்கம் இலங்கைக்கு இல்லை. நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு சகல நாடுகளுடன் இணக்கமாக செயற்படுவது அத்தியாயசியமானது என்றார்.

https://www.virakesari.lk/article/165578

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.