Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்களோடு ராஜபக்ச அதிகாரிகளுக்கு தொடர்பு – முக்கிய தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்களோடு ராஜபக்ச அதிகாரிகளுக்கு தொடர்பு – முக்கிய தகவல்

ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்களோடு ராஜபக்ச அதிகாரிகளுக்கு தொடர்பு – முக்கிய தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பின்னனியில் அரச புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இருந்ததாக லண்டன் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலி மற்றும் ஐ.எஸ். அமைப்பு இடையே ஒரு சந்திப்பு 2018 இல் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையை சீர்குலைக்கவும் ராஜபக்சர்களை மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு சதித்திட்டம் தீட்டும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறத்தாக பிரித்தானிய ஊடகமான த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

“கூட்டம் முடிந்தது, சுரேஷ் சாலி என்னிடம் வந்து ராஜபக்சேக்களுக்கு இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் தேவை, அதுதான் கோட்டாபய ஜனாதிபதியாவதற்கு ஒரே வழி” என ஹன்சீர் ஆசாத் மௌலானா கூறுகிறார்.

தாக்குதல் என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல, திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் 6 மாதங்களில் பாதுகாப்பை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்து கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பிடித்தபோது சாலி இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

இவர் இதற்கு முன்னர் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

மௌலானா கடந்த ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறி ஐரோப்பிய புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் தனது சாட்சியத்தை முன்வைத்துள்ளார்.

இதேவேளை பெயரிடப்படாத மூத்த அரசாங்க அதிகாரி, இரண்டாவது விசில்ப்ளோயர் தாக்குதல் தரிகளுடன் சாலியின் உறவுகள் பற்றிய மௌலானாவின் கருத்தை ஆமோதித்துள்ளார்.

மேலும் குண்டுவெடிப்புகளுக்கு முன்னும் பின்னும் இராணுவ புலனாய்வு, பொலிஸ் விசாரணைகளை மீண்டும் மீண்டும் தடுத்ததாகவும் கூறியுள்ளார்.

2019ல் ஆட்சிக்கு வந்ததும், விசாரணையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர், விசாரணை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது என்றும் அந்த அதிகாரி கூறுகிறார்.

2021 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்ட போதும், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ அதை வெளியிட மறுத்துவிட்டார்.

மேலும் மௌலானா பல ஆண்டுகளாக ராஜபக்சக்களுக்கு விசுவாசமான அரசியல்வாதியான பிள்ளையானுக்கு உதவியாளராக பணியாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1348219

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வெடித்த காலம், இடம், தெரிவு செய்யப்பட்ட இனம், நோக்கம் எல்லாம் உடனே யாழ்களத்தில் அலசி ஆராய்ந்து குற்றவாளியை உடனே இனங்கண்டு அறிவித்துவிட்டோம். எங்களை நம்பாமல் இத்தனை ஆண்டுகள் இலங்கை மற்றும் சர்வதேச புலனாய்வாளர்கள் செலவழித்திருக்கின்றனர்.....

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, satan said:

குண்டு வெடித்த காலம், இடம், தெரிவு செய்யப்பட்ட இனம், நோக்கம் எல்லாம் உடனே யாழ்களத்தில் அலசி ஆராய்ந்து குற்றவாளியை உடனே இனங்கண்டு அறிவித்துவிட்டோம். எங்களை நம்பாமல் இத்தனை ஆண்டுகள் இலங்கை மற்றும் சர்வதேச புலனாய்வாளர்கள் செலவழித்திருக்கின்றனர்.....

இந்த ஜம்பம் எல்லாம் இருக்கட்டும்.

அந்த தினேஷ் ஷாப்டர் வழக்கை துப்பு துலக்கினீர்களா இல்லையா?

பாவம் உங்களை மலை போல் நம்பி இருந்தார் @தமிழ் சிறி அண்ணா🤣 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இந்த ஜம்பம் எல்லாம் இருக்கட்டும்.

அந்த தினேஷ் ஷாப்டர் வழக்கை துப்பு துலக்கினீர்களா இல்லையா?

பாவம் உங்களை மலை போல் நம்பி இருந்தார் @தமிழ் சிறி அண்ணா🤣 

எங்கள் அறிக்கையை நீங்கள் சரியாக வாசித்து தெரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறன். அரச புலனாய்வுத்தகவல்கள் வரும்போது, இது ஏற்கெனவே யாழ்களத்தில் வந்ததே என உணர்ந்து கொள்வீர்கள். இலங்கை புலனாய்வாளர் (களத்திலே  இருப்பதால்) விசாரணை செய்வதால் அவர்களின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் எங்கள் முடிவுகளை தற்போது வெளியிட முடியாமைக்கு வருந்துகிறோம். தொடர்ந்து முன்னெடுத்தால், நீங்களும் சிக்கிகொள்வீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, satan said:

அரச புலனாய்வுத்தகவல்கள் வரும்போது,

அப்படி வராது என்ற நம்பிக்கையில் நீங்கள் இப்படி எழுதியதாக நான் நினைக்கவே இல்லை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, satan said:

நீங்களும் சிக்கிகொள்வீர்கள்!

இதையா குறிப்பிடுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

இந்த ஜம்பம் எல்லாம் இருக்கட்டும்.

அந்த தினேஷ் ஷாப்டர் வழக்கை துப்பு துலக்கினீர்களா இல்லையா?

பாவம் உங்களை மலை போல் நம்பி இருந்தார் @தமிழ் சிறி அண்ணா🤣 

இவர் ஒரு தமிழ் கிறிஸ்தவர் என்பதால் கருதினாலும் கதைக்க மாடடார் , மற்றவர்களும் கதைக்க மாடடார்கள்.

2019 ஜனாதிபதி  தேர்தலின்போது இந்த ராஜபக்சேக்களின் அழுக்கு துணிகளை தோய்த்து வெள்ளையாக்கினவர்கள்தான் இந்த சிங்கள கர்தினால். தமிழர்களை சிங்களவர்கள் யுத்தத்தில் வென்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அப்படி செய்தார். குண்டு வெடிப்பிலும்கூட கிடைத்த பணத்தில் தமிழர்களுக்கு சரியாக கொடுக்கவும் மறுத்தவர்.

இப்போதும்கூட சிங்கள ராஜபக்சேக்கள் இதில் சிக்குவதையாவர் விரும்பவில்லை. இனி என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

2019 ஜனாதிபதி  தேர்தலின்போது இந்த ராஜபக்சேக்களின் அழுக்கு துணிகளை தோய்த்து வெள்ளையாக்கினவர்கள்தான் இந்த சிங்கள கர்தினால்.

தாமதித்தேனும் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

 

May be an image of one or more people, television and text

 

May be an image of text

 

May be an illustration of ‎slow loris, television and ‎text that says '‎CHANNEL4 VIDEO EASTERATTACK the daily morning ااد CHANNELY CHANNEL VIDEO ON EASTERATTACK CHANNELY VIDEO ON EASTER ATTACK שرك EASTER ATTACK INVESTIGATIONS EASTER ATTACK INVESTIGATIONS Sudeep 2023.09.060 EASTER ATTACK INVESTIGATIONS‎'‎‎

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2023 at 07:33, satan said:

தாமதித்தேனும் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!

நான் எந்த காலத்திலும் இந்த சிங்கள கர்தினாலை ஏற்றுக்கொண்டவன் அல்ல. இதட்கு முன்னர் இவரது எந்த ஒரு கருத்தையும் செயட்பாடடையும் ஏற்றுக்கொண்டவுனுமல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் - சஜித் சபையில் கோரிக்கை

Published By: VISHNU

05 SEP, 2023 | 06:09 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இந்த நாட்டில் விசாரணை நடத்தி ஒருபோதும் தீர்வுகாண முடியாது. அதனால் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் நானும் போடியிட்டேன். இதன்போது கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு வாக்களிக்குமாறு தெரிவித்த விடயத்தை பேராயர் கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

நாட்டில் அப்போது தேசிய பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை  இருந்தது. ஈஸ்டர் தாக்குதல் காரணமாக கர்தினால் மாத்திரம் அன்றி கத்தோலிக்க மக்கள்  மிகவும் மனவேதனையிலேயே இருந்தனர்.

என்றாலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையால் நாங்கள் தோல்வியுற்றோம். கோத்தாபய ராஜபக்ஷ்  வெற்றிபெற்றார் என்ற  நம்பிக்கையிலேயே நியமிக்கப்பட்டார்.

ஆனால் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க விசாரணை நடத்துமாறு வெளிநாட்டு புலனாய்வு பிரிவு எமக்கு தெரிவிப்பது தொடர்பில் நாங்கள் வெட்கப்பட வேண்டும்.

வெளிநாட்டு ஊடகமொன்று விசாரணை நடத்துமாறு தெரிவிக்கும் வரை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா என கேட்கிறேம்? இதற்கு வெளிநாடுகளின் ஆலாேசனை தேவையா? இந்த தாக்குதலின் உண்மையை தேடுவதற்கு ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லையா?

கர்த்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை எனக்கு எதிராக வாக்களிக்குமாறு தெரிவித்தமையை நான் பொருட்படுத்தவில்லை. அது அவரின் மனதில் இருக்கும் வேதனையிலேயே தெரிவித்திருப்பார். கத்தோலிக்க மக்களின் உள்ளங்களில் அந்த வேதனை இன்றும் இருக்கிறது.

அதனால் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இந்த நாட்டில் விசாரணை நடத்தி கண்டுபிடிக்க முடியாது. அதனால் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கிறோம். அதனால் கர்தினால் உட்பட கத்தோலிக்க மதத் தலைவர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை நிந்தனை செய்ய வேண்டாம்.

அவர்கள் மன வேதனையிலேயே கதைக்கின்றனர். ஆனால் அரசாங்கத்துக்கு அதிகாரத்துக்கு வரும் வேதனையே இருந்தது. ஈஸ்டர் தாக்குதலை இவர்கள் பயன்படுத்திக்கொண்டு, முதலைக்கண்ணீர் வடித்தனர். தாக்குதலை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திக்கொண்டு வாக்கு பெற்றுக்கொண்டனர்.

அதனால்  கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை உட்பட கத்தோலிக்க மதத் தலைவர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை நிந்தனை செய்யாமல், இந்த தாக்குதல் தொ்டர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/163886

  • கருத்துக்கள உறவுகள்

திரிபோலி என்ற கொலைக்குழுவை உருவாக்குமாறு கோட்டாபய எங்களை கேட்டார் -ஆசாத் மௌலானா

Published By: RAJEEBAN

06 SEP, 2023 | 11:22 AM
image
 

நானும் அவ்வேளை எனது தலைவராக காணப்பட்ட பிள்ளையானும்  கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த வேளை  அவர் திரிபோலி என்ற கொலைகுழுவை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார் என  ஆசாத்மௌலானா சனல் 4 வீடியோவில் தெரிவித்துள்ளார்.

திறமைசாலிகளை தெரிவு செய்து இணைந்து செயற்படுங்கள் என கோட்டாபய கேட்டுக்கொண்டார், ஆகவே பிள்ளையான் தனது நபர்களை வைத்து திரிபோலி கொலைக்குழுவை உருவாக்கினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திரிபோலி பிளாட்டுன் கோட்டாபய ராஜபக்சவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட்டது எனவும்  ஆசாத் மௌலானா  சனல்4 வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான நபர்களை தெரிவு செய்து இலக்குவைத்து திரிபோலி பிளட்டுன் கொலை செய்தது என ஆசாத் மௌலானா சனல்4க்கு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/163932

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Cruso said:

நான் எந்த காலத்திலும் இந்த சிங்கள கர்தினாலை ஏற்றுக்கொண்டவன் அல்ல. இதட்கு முன்னர் இவரது எந்த ஒரு கருத்தையும் செயட்பாடடையும் ஏற்றுக்கொண்டவுனுமல்ல. 

ஓ ..... மன்னித்துக்கொள்ளுங்கள் குருசோ. முன்பொருதடவை கோத்தா ஜனாதிபதியாவதற்க்கு முன், தேர்தல் களம் களை  கட்டியிருந்தவேளை, யாழ்களத்தில் ஒரு விவாதம் சூடாக  போய்க்கொண்டிருந்த போது, ஒரு கள உறுப்பினர் வங்காலையானோ, றொபின்சன் குருசோவோ ஒருவர் கருத்து பதிவிட்டிருந்தார், அதாவது; தேர்தலில் கத்தோலிக்கர் தனித்து போட்டியிடப்போவதாகவும், இந்த மல்கம் என்றவர் தங்களுக்காக வரப்போகும் அரசியற் தலைவர்களுடன் சேர்ந்து உதவப்போவதாகவும் கூறியிருந்தார். அந்த கள உறவின் பெயர் காரணமாக குழம்பி உங்களுக்கு கருத்தை கூறியதற்காக, நீங்கள்  அவராக இல்லாதவிடத்து, நான் உங்களுக்காக இட்ட பதிவுக்காக வருந்துகிறேன்!

17 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி தேர்தலில் நானும் போடியிட்டேன். இதன்போது கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு வாக்களிக்குமாறு தெரிவித்த விடயத்தை பேராயர் கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

ஏன் மல்கத்துக்கு உந்த வேண்டாத வேலை? இவருக்கு எதுக்கு அரசியல்? கோத்தா ஆட்சிக்கு வந்தவுடன் அவரை தமது நிகழ்வுகளுக்கு அழைப்பதும், சிறப்பிப்பதும் பாராட்டுவதும் தமது செயற்திட்டங்களை சுற்றிக்காட்டுவதுமாக திரிந்தாரே,எதற்கு இந்த வழமைக்கு மாறான செயற்பாடு? தமிழர் பிரதேசங்களில் எத்தனையோ ஆலயங்கள் குண்டுபோட்டு அழிக்கப்பட்டன, தஞ்சமடைந்த மக்கள் கொடூரமாகக்கொல்லப்பட்டனர் அப்போவெல்லாம் வாய் திறக்காத மனிதர், முந்திக்கொண்டு முதலைக்கண்ணீர் வடித்ததன் காரணம் என்ன? தமிழர் முஸ்லிம்கள் தமக்கு வாக்குப்போட மாட்டார்கள் ஏ ன்பது ராஜபக்ஸாக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே சிங்கள மக்களின் ஒட்டுமொத்த  வாக்குகளை அபகரிப்பதற்கு, மீண்டும் அந்தமக்களிடையே  கதானாயகர்களாக காட்டப்படவேண்டும், அதிலும் கிறிஸ்தவ சிங்கள மக்களின் ஆதரவையும் தக்க வைக்க வேண்டும். ஆனால் சிங்கள கிறிஸ்தவர்களை இலக்கு வைக்க விரும்பவில்லை, அதேநேரம் கர்தினாலை வைத்து சிங்கள கிறிஸ்தவர்ளை தன்பக்கம் இழுக்க வைக்க, அசிங்கமான செயலை அரங்கேற்றினர். இந்த மல்கம் கர்தினாலாகவல்ல மனிதனாக இருக்கவே லாயக்கற்றவர். வெள்ளை உடை போர்த்த, அதிகார ஆணவ ஆசை பிடித்த சாத்தான்! தன்னை நீதிமானாக காட்ட போடும் வேஷமே இது இடும் கூக்குரல். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஓ ..... மன்னித்துக்கொள்ளுங்கள் குருசோ. முன்பொருதடவை கோத்தா ஜனாதிபதியாவதற்க்கு முன், தேர்தல் களம் களை  கட்டியிருந்தவேளை, யாழ்களத்தில் ஒரு விவாதம் சூடாக  போய்க்கொண்டிருந்த போது, ஒரு கள உறுப்பினர் வங்காலையானோ, றொபின்சன் குருசோவோ ஒருவர் கருத்து பதிவிட்டிருந்தார், அதாவது; தேர்தலில் கத்தோலிக்கர் தனித்து போட்டியிடப்போவதாகவும், இந்த மல்கம் என்றவர் தங்களுக்காக வரப்போகும் அரசியற் தலைவர்களுடன் சேர்ந்து உதவப்போவதாகவும் கூறியிருந்தார். அந்த கள உறவின் பெயர் காரணமாக குழம்பி உங்களுக்கு கருத்தை கூறியதற்காக, நீங்கள்  அவராக இல்லாதவிடத்து, நான் உங்களுக்காக இட்ட பதிவுக்காக வருந்துகிறேன்!

 

தமிழ் கத்தோலிக்கர்கள் தனித்து போட்டியிடலாம். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த கர்தினால் உதவப்போவதுமில்லை, தமிழர்கள் அவரிடம் உதவி கேட்க போவதுமில்லை. அப்படி யாரும் எழுதினத்ததாக தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Cruso said:

தமிழ் கத்தோலிக்கர்கள் தனித்து போட்டியிடலாம். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த கர்தினால் உதவப்போவதுமில்லை, தமிழர்கள் அவரிடம் உதவி கேட்க போவதுமில்லை. அப்படி யாரும் எழுதினத்ததாக தெரியவில்லை. 

 

1 hour ago, satan said:

கோத்தா ஜனாதிபதியாவதற்க்கு முன், தேர்தல் களம் களை  கட்டியிருந்தவேளை, யாழ்களத்தில் ஒரு விவாதம் சூடாக  போய்க்கொண்டிருந்த போது,

உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Cruso said:

நான் எந்த காலத்திலும் இந்த சிங்கள கர்தினாலை ஏற்றுக்கொண்டவன் அல்ல. இதட்கு முன்னர் இவரது எந்த ஒரு கருத்தையும் செயட்பாடடையும் ஏற்றுக்கொண்டவுனுமல்ல. 

ரொம்ப சந்தோசம், இந்தக்கொள்கையிலேயே நிலைத்திருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை: இலங்கை உள்நாட்டு போர் குறித்து விசாரிக்கப்படுமா?

முன்னாள் உறுப்பினர்  துரைராசா  ரவிகரன்
 
படக்குறிப்பு,

இலங்கை தமிழர் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையீடு செய்யத் தவறும் பட்சத்தில், தமிழர்களை எலும்புக்கூடுகளாகவே பார்க்க வேண்டிய நிலைமை ஏற்படும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்புகளைப் பெற்று விசாரணைகளை நடத்தத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ இதைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று, மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளைக் குறிவைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதல்களில் சுமார் 270 பேர் வரை உயிரிழந்திருந்ததுடன், 400க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் நீதிக்காக குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் ராஜபக்ஸ குடும்பத்திற்கும், பிள்ளையான் என அழைக்கப்படும் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திர காந்தனுக்கும் தொடர்புள்ளதாக சேனல் 4 தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது.

ஆட்சி பீடம் ஏறுவதற்காக ராஜபக்ஸ குடும்பத்தினர் நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமையை ஏற்படுத்தும் நோக்கில், இந்தத் தாக்குதலை நடத்திய விதமாக சேனல் 4 ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான பேச்சு மீண்டும் பேசுபொருளாக மாறியிருந்தது.

 

என்ன சொல்கிறார் நீதி அமைச்சர்?

ஈஸ்டர் குண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஈஸ்டர் அன்று நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 270 பேர் வரை உயிரிழந்திருந்ததுடன், 400க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இதன்படி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடாத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். இந்நிலையில், இந்த ஆவணப்படத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் அதை ஏற்றுக்கொண்டிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நடத்தத் தயார் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, ஊடக சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

''சேனல் 4 ஊடக நிறுவனமானது, பிரசாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக முயலும் ஊடக நிறுவனம். எனினும், அதைச் சாதாரணமாக நினைப்பது நியாயமற்றது. அந்தத் தகவல்கள் குறித்து நாம் ஆராய்வோம்.

அந்தத் தகவலை வழங்கிய மௌலானா தொடர்பிலான தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். ஐரோப்பிய நாடொன்றிற்கு சென்று குடியுரிமையைக் கோரி நிற்கும் ஒருவர். இவ்வாறான தகவல்களை வெளியிடுகின்றமையும், குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளப் போதுமானது.

எனினும், இந்த விஷயம் தொடர்பில் நாம் முழுமையான விசாரணை ஒன்றை நடத்துவோம். யாரேனும், இன்று சேனல் 4 தொடர்பிலோ வேறு எந்தவொரு விடயம் தொடர்பிலோ தகவல்களை வழங்குவார்களாயினும், உள்நாட்டு ரீதியில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் ஒத்துழைப்புகளைப் பெற்றேனும் விசாரணைகளை நடத்தத் தயார்," என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

 

சர்வதேச விசாரணை வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

பட மூலாதாரம்,SAJITH PREMADASA/ FACEBOOK

 
படக்குறிப்பு,

உள்நாட்டு விசாரணை தோல்வியடைந்துள்ள தருணத்தில், சர்வதேச விசாரணைகளில் மாத்திரமே உண்மையைக் கண்டறிய முடியும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு விசாரணை தோல்வியடைந்துள்ள தருணத்தில், சர்வதேச விசாரணைகளில் மாத்திரமே உண்மையைக் கண்டறிய முடியும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

இந்த விஷயத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அரசாங்கத்திற்கு, இதற்குத் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விஷயத்தை மூடி மறைக்காது, உள்நாட்டு மற்றும் சர்வதேசங்களை இணைத்ததாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் இந்த அரசாங்கத்திற்குத் தொடர்புள்ளதா என கண்டறியப்பட வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

''ஈஸ்டர் தாக்குதலை முன்னிலைப்படுத்தி, இந்த நாட்டில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இனவாத, மதவாத தாக்குதல்களை நீங்கள் மறந்து விட்டீர்களா?

இதைக் காண்பித்தே ஜனாதிபதி, பிரதமர் பதவிகளைப் பெற்றுக்கொண்டீர்கள். மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டறிய உங்களால் முடியாது போயுள்ளது.

இந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதலில் உண்மையைக் கண்டறிய இன்று சர்வதேச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மையைக் கண்டறிய இந்த அரசாங்த்திற்கு முதுகெலும்பு இல்லை.

ஈஸ்டர் தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகள் அரசாங்கத்திற்குள் இருக்கின்றார்களா? இந்தச் சம்பவம் தொடர்பான நியாயமான விசாரணை நடாத்தப்பட வேண்டும். ஈஸ்டர் தாக்குதலை பிரசாரம் செய்து, அந்த ரத்தத்தின் மீது உருவான ஆட்சியாளர்களுக்கு, உண்மையை வெளிப்படுத்த இயலுமை கிடையாது.

அதனால், உள்நாட்டு விசாரணை வெற்றியளிக்காத இந்தத் தருணத்தில், சர்வதேச விசாரணைகளின் ஊடாகவே இந்த பிரச்னையைத் தீர்க்க முடியும்," என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறுகின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவிக்கின்றார்.

''எது பொய் எது உண்மை என்பதைக் கண்டறிய வேண்டும்; இந்தக் குரூரமான தாக்குதலில் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகள் யார் என்பதை இனங்கண்டு, அவர்களுக்கு அதிகபட்ச தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு இருக்கின்ற எங்களைக் கொண்டு வந்து பழி சுமத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்த விசாரணைகளில் அசாத் அவர்கள் தான் சஹரான் குழுவுடன் முதலாவது கூட்டத்தை நடத்தியதாக ஒத்துக்கொண்டதன் அடிப்படையில், சர்வதேச விசாரணை வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் சொன்னார். சர்வதேசத்திடம் சொல்லி அவரையும் விசாரித்து இதில் உள்வாங்கிக் கொள்ளவேண்டும்," என ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவிக்கின்றார்.

 

யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை?

உள்நாட்டு போர்
 
படக்குறிப்பு,

இறுதிக்கட்ட போரின்போது, பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக தமிழர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இலங்கையில் 30 ஆண்டுக்காலமாக இடம்பெற்ற உள்நாட்டு போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த இறுதிக்கட்ட போரின்போது, பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக தமிழர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

அத்துடன், இறுதிக்கட்ட போரில், முள்ளிவாய்க்கால், ஓமந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பிடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகள் இன்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைத் தேடி, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் தொடர் போராட்டங்களை போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடத்தி வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெண்களின் உள்ளாடைகள், துப்பாக்கித் தோட்ட்க்கள் என சந்தேகிக்கப்படும் உலோகங்கள், மனித எலும்புக்கூடுகள் என போர் இடம்பெற்ற பகுதியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் மனித புதைக்குழி அகழப்பட்டு வருகின்றது.

இந்த மனித புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளவர்கள், போர் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளாக இருக்கலாம் என அச்சம் வெளியிடுகின்றனர்.

இலங்கையில் இதுவரை 20க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பிலான உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு நிறைவடையவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையை இழந்த தமிழர்கள், சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்கள்.

 

'உள்நாட்டு போரிலும் சர்வதேச விசாரணை வேண்டும்'

போர் தொடர்பில் சர்வதேச விசாரணை
 
படக்குறிப்பு,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்புகளைப் பெற்று விசாரணைகளை நடத்தத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான சர்வதேச விசாரணையை வரவேற்கும் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள், அதேபோன்று உள்நாட்டுப் போர் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் சர்வதேச தலையீடு செய்யத் தவறும் பட்சத்தில், தமிழர்களை எலும்புக் கூடுகளாகவே பார்க்கவேண்டிய நிலைமை ஏற்படும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.

''ஈஸ்டர் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான சாட்சியங்கள் சேனல் 4 ஊடகத்தோல் அறியப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதை நாங்கள் மறுக்கவில்லை.

ஆனால், அதற்கு முதல் 2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் அல்லது தமிழினம் அழிக்கப்பட்ட நடவடிக்கை வடக்கு, கிழக்கில் நடைபெற்றுள்ளது. இது உலகத்திலுள்ள அனைவருக்கும் தெரியும்.

தமிழர்களுக்கு தற்போது கொடூமையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்களை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னர் போரினாலேயே அந்த அழிவுகள் ஏற்பட்டன.

இப்போது நிலப் பறிப்பு, மத திணிப்பு, கலாசார அழிப்புகள் என்று மிக மோசமான நிலைமை காணப்படுகின்றது. இன்று கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்கூட, தமிழர்களுக்கு சாதகமாக வரும் என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொடூரமான அரசாங்கத்தின் கீழ் எமது தமிழினம் சிக்குப்பட்டுள்ளது. உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்ற விஷயத்தில் உறுதியாக இருக்கின்றோம்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதேபோன்று, லட்சக்கணக்கான தமிழர்கள் அழிக்கப்பட்ட விஷயத்தில் தீர்வையும் உடனடியாக எல்லோரும் பார்க்க வேண்டும். முக்கியமாக எங்களுடைய விஷயத்திலும் சர்வதேச தலையீடு வேண்டும்.

இல்லையென்றால், இவர்கள் எங்களை அழித்து, இப்படியாக எலும்புக் கூடுகளாகவே பார்க்க வேண்டும் என்ற நிலைமைதான் ஏற்படும்," என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

 

"அனைத்து தலைவர்களின் கைகளிலும் ரத்தம் உள்ளது"

பிரிட்டோ பெர்ணான்டோ

பட மூலாதாரம்,BRITO FERNANDO

 
படக்குறிப்பு,

நாட்டை ஆட்சி செய்த அனைத்து தலைவர்களின் கைகளிலும் ரத்தம் காணப்படுவதாக பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாட்டை ஆட்சி செய்த அனைத்து தலைவர்களின் கைகளிலும் ரத்தம் காணப்படுவதாலேயே, சர்வதேச விசாரணைகளுக்கு தயக்கம் காட்டப்படுவதாக காணாமலாக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

''71, 83, 89 மற்றும் போர் உள்ளிட்ட அனைத்து சிவில் வன்முறைகள் தொடர்பிலான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அலுவலகமொன்று அமைக்கப்படவேண்டும். நட்ட ஈடு செலுத்தப்பட வேண்டும்.

ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கூறலுக்கான ஐபிரிட் நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். மீண்டும் இடம்பெறவுள்ள வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு 2015ஆம் ஆண்டு ஐநாவிடம் இலங்கை இணங்குகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தேர்வான மைத்திரிபால சிறிசேன காணாமல் ஆக்கபட்டோருக்கான அலுவலகத்தை ஸ்தாபித்தார். எனினும், அவர்களுக்குப் பதிவான முறைப்பாட்டின் உண்மைத்தன்மை இன்று வரை வெளிப்படுத்தப்படவில்லை.

ராணுவத்தை காட்டிக் கொடுக்க முடியாமையாலேயே பொறுப்புக்கூறல் முறையை நடைமுறைப்படுத்த முடியாது என மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் எதுவும் நடக்காததாலேயே வடக்கிலுள்ள பெற்றோர் உள்நாட்டுப் பொறிமுறை வேண்டாம் எனக் கூறினார்கள்.

அதனாலேயே சர்வதேச விசாரணைகளை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்கள். எனினும், அரசாங்கம் அதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதிலளிக்கவில்லை. சேனல் 4 ஆவணப்படத்திறகுப் பின்னர் சர்வதேச விசாரணைக்குத் தயார் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்திலுள்ள எதிர்கட்சிகளும் சர்வதேச விசாரணையைக் கோருகின்றன. எனினும், நாடாளுமன்ற தேர்வுக்குழு ஒன்றை அமைத்து, இந்த விசாரணைகளை அந்த இடத்திலேயே முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கம் முயல்கின்ற விதமே எமக்குத் தெரிகின்றது.

இலங்கையில் இடம்பெறும் வன்முறைகளை நிறுத்த பொறுப்புக்கூறல் அவசியமாகின்றது. காணாமல் ஆக்கப்பட்ட விஷயம் தொடர்பில் சர்வதேச விசாரணை குறித்து யாரும் பேச மறுப்பதற்கான காரணம், நாட்டை ஆட்சி செய்த அனைவரும் தொடர்புபடுகின்றார்கள்.

அனைவரது கைகளிலும் ரத்தம் காணப்படுகின்றது. அதனால், சர்வதேசத்திற்கு காண்பிக்க உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை தயார்ப்படுத்துகிறார்கள். ஆனால், எதுவும் நடக்காது.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் நம்பிக்கையைக் கொடுக்கும் வகையிலான சர்வதேச நிபுணர்களின் பங்குப்பற்றுதலுடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்," என்று காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பிரிட்டோ பெர்ணான்டோ பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

 

போர் தொடர்பில் சர்வதேச விசாரணை - அரசாங்கம் பிபிசி தமிழுக்கு வழங்கிய பதில்

ஈஸ்டர் குண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,WIJEYADASA RAJAPAKSHE

 
படக்குறிப்பு,

போர் குற்றம் தொடர்பாக தாம் ஜெனீவா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

இந்த விஷயம் தொடர்பில் தாம் ஜெனீவா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையை நடத்த இணங்குவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ கூறிய நிலையில், போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் சர்வதேச விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பில் பிபிசி தமிழ் வினவிய போது, நீதி அமைச்சர் இதைக் குறிப்பிட்டார்.

''இந்த நாட்டில் போர் இடம்பெறவில்லை என்றால், எந்தவொரு மக்களும் உயிரிழந்திருக்க மாட்டார்கள். ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் அப்பாவி மக்களே கொல்லப்பட்டார்கள்.

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், அவர்கள் சர்வதேச விசாரணைகளைக் கோரியிருக்க மாட்டார்கள். பிரபாகரன் உயிரிழந்தமையாலேயே சர்வதேச விசாரணைகளைக் கோருகின்றார்கள்.

நாம் கூறவேண்டிய விஷயங்களை சர்வதேசத்திடம் கூறி, பல்வேறு இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம். மனித உரிமை பேரவையிடமும் நாம் இணக்கப்பாடுகளை எட்டியுள்ளோம். நாங்கள் சர்வதேசத்துடன் இணைந்து செயல்படுகின்றோம்.

சர்வதேசத்துடன் இணைந்து செயல்படுமாறே கூறுகின்றார்கள். அதனால், நாம் ஜெனீவா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றோம். சர்வதேச விசாரணையையே கோருகின்றார்கள். ஜெனீவாவும் சர்வதேசம்," என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ பிபிசி தமிழுக்குப் பதிலளித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c0dgk9dey4lo

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழு பொறுப்பையும் மைத்திரி ஏற்க வேண்டும்!

diana-gamage.jpg

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழுமையான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டுமென சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இந்தியாவும் புலனாய்வு பிரிவினரும் தகவல்களை வழங்கிய போதிலும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எதற்காக விசாரணை நடத்தப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

அத்துடன், குறித்த சந்தர்ப்பத்தில் தமது பொறுப்புக்களை தமக்கு பதிலாக மற்றுமொருவரிடம் கையளிக்காது நாட்டின் ஜனாதிபதி வெளிநாட்டிற்கு செல்கிறார். இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளமை தெளிவாகுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குற்றம்சாட்டியுள்ளார்.

https://thinakkural.lk/article/272386

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு மறுப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 விடுத்த குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் குற்றச்சாட்டை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீதும், தற்போதைய சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வன்மையாகக் கண்டித்துள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து, அரசாங்கம், சட்ட அமலாக்க அமைப்புகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக, உள்ளூர் மற்றும் சர்வதேச விசாரணைகள், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐச் சேர்ந்த குழு உறுப்பினர்களை இந்த பயங்கரமான சோகத்தின் சிற்பிகளாக தொடர்ந்து சுட்டிக்காட்டியதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் முழு உண்மையை வெளிக்கொணருவதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளன.

உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணத்துவ நிறுவனங்களால் நடத்தப்படும் வெளிப்படையான விசாரணைகளை எளிதாக்குவதன் மூலம் அவர்கள் அவ்வாறு செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாத எதிர்ப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு (PCoI) ஆகியவற்றின் உன்னிப்பான பணி உட்பட இந்த விசாரணைகள், தாக்குதலுக்கான தீவிர தீவிரவாதக் குழுவின் பொறுப்பை தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளன. கூடுதலாக, தேசிய பாதுகாப்பிற்கான துறைசார் மேற்பார்வைக் குழு தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்மொழிவதில் முக்கிய பங்கு வகித்தது.

மேலும், அவுஸ்திரேலிய ஃபெடரல் பொலிஸ் (ஏஎஃப்பி) மற்றும் அமெரிக்காவில் உள்ள ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) ஆகியவற்றால் நடத்தப்பட்ட விரிவான விசாரணையையும், அமெரிக்க நீதித்துறை வழங்கிய தீர்ப்பையும் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டியது அவசியம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச புலனாய்வு அமைப்பின் இந்த உறுதியான ஒப்புதல் விசாரணையின் துல்லியம் மற்றும் நேர்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து, புலனாய்வுப் பத்திரிகையின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்தும் அதே வேளையில், சனல் 4 அவர்களின் ஆதாரமற்ற, தீங்கிழைக்கும், மற்றும் எதிர்பாரா செயல்கள் அல்லது பின்விளைவுகளுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி பொறுப்பேற்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

உண்மை, நீதி மற்றும் தேசத்தின் நல்வாழ்வுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துவதாக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/272433

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை எச்சரிப்பதையும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதையும் விடுத்து விசாரணையின் முடிவுகளை வெளிப்படுத்துங்கள். ஒத்தூதும் கருதினாலே சர்வதேச விசாரணையை கோருகிறார். 

30 minutes ago, ஏராளன் said:

குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து, அரசாங்கம், சட்ட அமலாக்க அமைப்புகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்? எடுத்துக்காட்டுங்கள் பாப்போம்! கருதினாலும் கேட்டு கேட்டு களைத்துப்போய் சர்வதேசத்தை கூப்பிடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷர்களே அடிப்படைவாதிகளை போசித்தார்கள் - சம்பிக்க

09 SEP, 2023 | 05:18 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

சிங்கள பௌத்தர்கள் மத்தியில் அடிப்படைவாதம் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தி ராஜபக்ஷர்கள் தௌஹீத் ஜமாதே அமைப்பை தமது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

தௌஹீத் அமைப்பு ராஜபக்ஷர்களுக்கு சார்பாக செயற்படவில்லை என்பதை ராஜபக்ஷர்களால் நாட்டு மக்களிடம் குறிப்பிட முடியுமா, ராஜபக்ஷர்கள் தமது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சர்வதேச மட்டத்தில் தேசிய புலனாய்வு பிரிவை பலவீனப்படுத்தியுள்ளார்கள்  என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க  தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ராஜபக்ஷர்கள் குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கெடம்பே ரஜமஹா விகாரைக்கு ஒருமுறை சென்று 'தாங்கள்  அடிப்படைவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அந்த அடிப்படைவாத  உறுப்பினர்கள் யார் என்பதை தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே, கபில ஹெந்த விதாரண, முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நாட்டு மக்களுக்கு குறிப்பிட வேண்டும்.

தேசிய தௌஹீத் ஜமாதே அமைப்பு யாருடையது, தேர்தல் காலத்தில் தௌஹீத் அமைப்பு ராஜபக்ஷர்களுக்கு செயற்படவில்லையா, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷர்களுக்கு வாக்களிக்குமாறு தௌஹீத் அமைப்பு குறிப்பிடவில்லையா, பௌத்தர்கள் மத்தியில் அடிப்படைவாதம், கருத்தடை தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தி விட்டு மறுபுறம் தௌஹீத் அமைப்பை தமது அரசியல் நோக்கத்துக்காக பயன்டுபடுத்திக் கொள்ளவில்லையா என்பதை ராஜபக்ஷர்கள் நாட்டு மக்களுக்கு குறிப்பிட வேண்டும்.

இராணுவ புலனாய்வு பிரிவு, தேசிய புலனாய்வு பிரிவு என்பனவற்றின் கவனத்துக்கு அப்பாற்பட்ட வகையில் சஹ்ரான் செயற்பட்டுள்ளான். சர்வதேச மட்டத்தில் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் தீவிரமடைந்த பின்னணியில் 2010 முதல் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தௌஹீத் அமைப்பு அரசியல் நோக்கத்துக்காக அரச அனுசரனையுடன் பாதுகாக்கப்பட்டது.

உலகில் எந்த நாட்டு புலனாய்வு பிரிவும் குண்டுதாரியின் வீட்டுக்கு செல்லாது. தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டுத்தாக்குதலை நடத்த சென்ற ஜமீலை புலனாய்வு அதிகாரி ஒருவர் சந்தித்துள்ளார்.

அத்துடன் புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் மாத்தளைக்கு சென்று பிறிதொரு அடிப்படைவாதியிடம் இந்த தாக்குதலை இதனை ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் என்று ஏற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார். உலகில் எந்த நாட்டிலும் இவ்வாறான புலனாய்வு பிரிவு கிடையாது.ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியதாகவே பலவிடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளது. ஆகவே தற்போது எவரும் தப்பிக்க முடியாது.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல விடயங்களை வெளிக்கொண்டு வர முயற்சித்த சானி அபேசேகரவை ராஜபக்ஷர்கள் கொல்லாமல் கொன்றார்கள். மனசாட்சியில்லாமல் அவரை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள். ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் தேசிய புலனாய்வு பிரிவு தற்போது அபகீர்த்திக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஷ குடும்பம் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள செய்த விடயங்கள் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகிறது. இதனால் தேசிய புலனாய்வு பிரிவு சர்வதேச மட்டத்தில் மலினப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையை திருத்திக் கொள்ளாவிட்டால் ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/164186

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளிநாட்டு அமைப்புக்கள் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் -நாமல்

பயங்கரவாதத்தை கையாளும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு அமைப்புக்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“இங்கிலாந்து, இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து பயங்கரவாதத்தை கையாளும் அமைப்புகள் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பதிலாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய விசாரணையை நடத்த வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு பயங்கரவாத அமைப்புகளை விசாரிக்கும் திறன் இல்லை.

“ நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த தெரிவுக்குழுவில் சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். அடுத்த கட்டமாக, பயங்கரவாதக் குழு விசாரணையில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச அமைப்புகளை புதிய விசாரணை நடத்த வேண்டும்,” என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/273141

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளிநாட்டு அமைப்புக்கள் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் -நாமல்

பயங்கரவாதத்தை கையாளும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு அமைப்புக்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“இங்கிலாந்து, இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து பயங்கரவாதத்தை கையாளும் அமைப்புகள் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பதிலாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய விசாரணையை நடத்த வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு பயங்கரவாத அமைப்புகளை விசாரிக்கும் திறன் இல்லை.

“ நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த தெரிவுக்குழுவில் சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். அடுத்த கட்டமாக, பயங்கரவாதக் குழு விசாரணையில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச அமைப்புகளை புதிய விசாரணை நடத்த வேண்டும்,” என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/273141

நிலைமை கை மீறி போய் விடட படியினால் நாமல் அப்படி கூறுகின்றார். இருந்தாலும் அவர்களுக்கு அதில் பயங்கரவாத நிபுணர்களை கொண்ட குழுவை நியமிக்க வேண்டுமென்று கூறுகிறார். அதாவது அவர்களது சார்பான பேராசிரியர் (?) குணரட்னவையும் இணைக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. அவர் இது இஸ்லாமிய தீவிரவாதத்தின் தாக்குதலே ஒழிய ராஜபக்ஷேக்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தொலைக்காட்சிகளில் அடிக்கடி தோன்றி வாதாடும் ஒருவர். பொறுத்திருந்து பார்ப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : கோட்டாவைப் போன்று ரணிலும் உண்மையை மறைக்கிறார் - சஜித்

Published By: VISHNU

18 SEP, 2023 | 07:45 PM
image
 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்படாத வரை நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமையிலேயே காணப்படும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று தற்போதைய அரசாங்கமும் உண்மைகளை மறைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும் அரசியலாக்காது முழுமையான உண்மையைத் தேடுவதே எதிர்க்கட்சியின் நோக்கமாகும். அரசாங்கம் உண்மைகளையும் தரவுகளையும் மறைப்பதால் எதிர்க்கட்சி என்பதால் எமக்கு உண்மைகள் தெரியாது. இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இங்கு உண்மையை மறைப்பது என்பதிலிருந்து கைகளில் இரத்தம் தோய்ந்த நபர்களின் சதியோ என்று சந்தேகம் எழுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு உண்மை மறைக்கப்படுவது மாத்திரம் இடம்பெற்றுள்ளதால் அரசியல் சாதகங்களைப் பொருட்படுத்தாமல், முழுமையான உண்மையை இங்கு வெளிக்கொணர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளையும் ஏனைய காரணத்தை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பதாக அளித்த வாக்குறுதிகளின் பிரகாரமே ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் மக்கள் ஆணை கிடைத்தது. அவர் அந்த உண்மையைத் தேடாது, உண்மையைக் கண்டறியாமல் பயங்கரவாத செயலை விசாரித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் பலரையும் அந்த நடவடிக்கைகளில் இருந்து நீக்கினார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு செயற்பாடுகளை பார்க்கும் போது உண்மையை தேடுவதை விட உண்மை மறைக்கப்பட்டுள்ளதையே மேற்கொண்டுள்ளதாக தோன்றுகிறது. இதன் காரணமாக உண்மையைக் கண்டறியும் பொறுப்பைக் கூட கோட்டாபய ராஜபக்ச புறக்கணித்துள்ளார். அவ்வாறே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகிறது.

கோட்டாபய ராஜபக்சவைப் பின்பற்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை இந்த அரசாங்கமும் மறைத்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நேர்மையான, நம்பகமான, பக்கச்சார்பற்ற தேசிய  விசாரணையைகை கோருகின்றேன். கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது தேசிய விசாரணைகளில் அதிக நம்பிக்கை இல்லை. இவ்வாறான நிலையில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முதல் பாகம் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் குறைந்தபட்சம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எதிர்க்கட்சித் தலைவரால் பரிசீலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் மேற்பார்வையில் மாத்திரம் அதனை பரிசீலிக்க சந்தர்ப்பம் வழங்குவதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் கூட மீறப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்த அரசாங்கம் நியமித்துள்ள புதிய குழுவிற்கு இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களும் கர்தினாலும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இவ்வாறு புதிய குழுக்களை நியமிப்பதாலும் கூட உண்மை மூடி மறைக்கப்படுகிறது.

மேலும் இவ்வாறான தாக்குதலுக்கு இந்நாட்டில் உள்ள அனைத்து மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த தீவிரப்போக்குடையவர்களும் பொறுப்பாளிகளாவர். இந்த தீவிரவாதிகளால் இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு பறிபோனது. தாக்குதலின் உண்மை கண்டறியப்படாத வரை, இது தேசிய பாதுகாப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையில் காணப்படும் நம்பமகற்ற தன்மையையும் சந்தேகத்தையும் நீக்க உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

https://www.virakesari.lk/article/164898

  • கருத்துக்கள உறவுகள்

சஹ்ரானை மிகுந்த திறமைசாலியான ஒருவர் இயக்கினார் : உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் குறித்து சந்தேகங்கள் உள்ளன - சி.ஐ.டி.யின் முன்னாள் தலைவர் பரபரப்பு தகவல்

Published By: RAJEEBAN

19 SEP, 2023 | 05:08 PM
image
 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதாக  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை சிஐடிக்கு பொறுப்பாக காணப்பட்ட அதிகாரி சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரவிசெனிரட்ண  தெரிவித்துள்ளார்.

டிஎன்எல் தொலைக்காட்சிக்கு திங்கட்கிழமை இரவு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அமைப்புகள் மற்றும் புலனாய்வு முகவர்களின் நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு தலைமை வகித்த ஜஹ்ரான் ஹாசிமை  கட்டுப்படுத்திய மற்றுமொரு நபர் காணப்பட்டார். அந்த நபர் மிகவும் புத்திசாலி - இலங்கையில் முதலாவது ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை ஒருங்கிணைக்கும் திறன் அவரிடம் காணப்பட்டது-விடுதலைப்புலிகள் கூட அதனை செய்யவில்லை என செனிவரட்ண தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் ஹாசிம் முறையான கல்வியறிவற்ற ஒருவர் அவருக்கு அவ்வாறான ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொள்வதற்கான திறமையிருந்திருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு மேல் யாரோ இருந்தார்கள் - மிகவும் திறமையும் பயிற்சியும் அனுபவமும் மிக்க ஒருவர் அவரிடம் ஒருங்கிணைந்த தாக்குதலிற்கு பலரை ஒருங்கிணைக்கும் திறன் இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் இராணுவபுலனாய்வு பிரிவினர்களிற்கு ஜஹ்ரான் ஹாசிமை தெரிந்திருந்தது. அவர்கள் அவருடன் இணைந்தும் செயற்பட்டுள்ளனர். தாக்குதலிற்கு முன்னரும் தாக்குதலின் போதும் அதன் பின்னரும் அவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர் எனவும் சிஐடியின் முன்னாள் தலைமை அதிகாரி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு முன்னாள் விடுதலைப்புலிகள்  இயக்க உறுப்பினர்களே காரணம் என்ற கருத்தினை உருவாக்குவதற்கு புலனாய்வு பிரிவினர் கடுமையாக முயற்சித்தனர். அவர்கள் சில ஆதாரங்களை திட்டமிட்டு உருவாக்கினார்கள். இது குறித்து சிஐடிக்கு பெரும் சந்தேகம் காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் தொடர்புள்ளதா என கண்டறிவதற்கான விசாரணைகளை தேசிய புலனாய்வு பிரிவின் இன்ஸ்பெக்டர் பண்டார முன்னெடுத்தார். எனினும் இந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன. ஐஎஸ் அமைப்பிடமிருந்து ஜஹ்ரானிற்கு உதவிகள் கிடைத்தன என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.

தேசிய புலனாய்வு பிரிவின் தற்போதைய தலைவர் சுரேஸ் சாலேக்கும் சிஐடியினருக்கும் சுமூகமான உறவு காணப்படவில்லை. சனல் 4 இன் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

economy next

https://www.virakesari.lk/article/164963

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.