Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • திகதி: 11/09/1990

 

  • நாளேடுஉதயன்
  • பக்கம்: 1

 

வந்தாறுமூலை அகதி முகாமில் 101 தமிழரைக் காணவில்லை!

கொழும்பு, செப்; 11 

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ள கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக அகதி முகாமில் தஞ்சம் புகுந்திருந்த 101 அப்பாவித் தமிழர்களைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்க் குழு ஒன்றை மேற்கோள்காட்டி ஏஜென்ஸி செய்திகள் இவ்வாறு தெரிவித்தன.

இவர்களைத் தவிர மேலும் 148 அப்பாவித் தமிழர்களை இராணுவத்தினர் அகதி முகாமிலிருந்து கைதுசெய்து கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 


 

  • பக்கம்: 4

 

படுகொலைகள் - பட்டினிச்சாவு: அம்பாறைத் தமிழர் அவல நிலை

அம்பாறை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சிறிலங்காப் படையினராலும், முஸ்லிம் கும்பல்களினாலும் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கடந்த முதலாம் திகதி விடுத்த அறிக்கை முழு விவரம் வருமாறு:-

ஆகஸ்ட் 1 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை அம்பாறை மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் விசேட அதிரடிப்படையினராலும், முஸ்லிம் கும்பல்களாலும் கொல்லப்பட்டுள்ளனர். தமிழீழ - சிறிலங்காப் போர் ஜுன் 11இல் ஆரம்பித்ததில் இருந்து ஆகஸ்ட் 27 வரை 1879 அப்பாவித் தமிழ் மக்கள் அம்பாறை மாவட்டத்தில் கொல்லப்பட்டு உள்ளனர்: கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் பட்டினிச்சாவை சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

மட்டக்களப்பில் கடந்த மாதம் 10 குழந்தைகளுக்கு மேல் போதிய உணவின்றி உயிரிழந்தன இதுவரை எந்த சர்வதேச அமைப்பும் இந்த மக்களுக்கு உதவ முன்வரவில்லை. அதேவேளை இந்த மக்களுக்கு உணவுகூட கிடைக்கவில்லை. அரச பயங்கரவாதிகள் இவர்களுக்கு உணவு கிடைப்பதை திட்டமிட்டு தடைசெய்து வருகின்றனர்.

இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உணவு கிடைக்காமல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் சிறிலங்காப் படை நடவடிக்கை மூலம் ஊர்காவல்துறை, புங்குடுதீவு, மண்டைதீவு ஆகியவற்றைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை ஏறத்தாழ 14 நாட்களாக இப்பகுதியில் வாழும் மக்களுக்கு சரியான முறையில் உணவோ, மருத்துவ வசதிகளோ கிடைக்கவில்லை.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் அங்கு சென்று காயமடைந்தவர்களை அழைத்து வந்து வைத்திய வசதி செய்ய சிறிலங்காவிடம் அனுமதி கேட்ட போது சிறிலங்கா இதுவரை அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அதேவேளை அப்பகுதிக்கு உணவு கொண்டு செல்வதையும் தடைசெய்துள்ளது. 

சர்வதேசத்தை ஏமாற்ற பெரிய அளவில் பொய்ப்பிரசரங்களைச் செய்து வரும் சிறிலங்கா திட்டமிட்டு மறைமுகமாக தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்து வருகின்றது.

இப்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[இ]

 

 



 

 

செய்திகள்

 

  • நாளேடுஈழநாதம்
  • பக்கம்: 2

அம்பாறை மாவட்டத்தில் படுகொலை நிகழ்ந்த கிராமங்களும் திகதியும்

அம்பாறை மாவட்டத்தில் 1/8/1990 இருந்து 27/8/1990 து வரை படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் கிராம ரீதியானதும், திகதி ரீதியானதுமான விபரம் கீழே தரப்படுகிறது.

5-8-90இல் சாகமம் எனும் இடத்தில் இரு தமிழ் மக்கள் விசேட அதிரடிப்படையினரால் வெட்டிக் கொளுத்தப்பட்டனர்.

4-8-90இல் ஆலையடி வேம்பைச் சேர்ந்த தமிழ் மக்கள் மூவர் அக்கரைப்பற்றில் சிங்கள காவல் துறையினராலும் முஸ்லிம் கும்பலாலும் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

6-8-90இல் சங்கமான் கண்டி என்னும் இடத்தில் 19 தமிழ் மக்கள் விசேட அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களைக் கொலை செய்தபின் விடுதலைப்புலிகள் கொலை செய்ததாக அரசு அறிவித்தது.

07-08-1990இல் இராக்கேணி என்னும் கிராமத்தில் 47 தமிழ் மக்கள் முஸ்லிம் கும்பலால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர்.

08-08-1990இல் அலிகம்பையில் 10 தமிழ் மக்கள் விசேட அதிரடிப்படையால் கொல்லப்பட்டனர். 5 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டனர்.

11-08-1990 சம்மாந்துறை அகதி முகாமில் இருந்து 37 தமிழ் மக்கள் முஸ்லிம் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

12-08-199 0இல் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரு தமிழ் மக்கள் விசேட அதிரடிப்படையால் அம்பாறை வீதி 3 ஆம் கட்டையில் சுட்டு எரிக்கப்பட்டனர்.

13-08-1990 அகதி முகாமில் இருந்த 30 அப்பாவித் தமிழ் மக்கள் முஸ்லிம் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர். 

14-08-1990இல் அக்கரைப்பற்றில் விசேட அதிரடிப் படையால் கைதுசெய்யப்பட்ட 46 தமிழர்களின் நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது.

15-08-1990இல் கோமாரியில் 8 தமிழர்கள் விசேட அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

16-08-1990இல் அக்கரைப்பற்றில் தமிழர் ஒருவர் முஸ்லிம் கும்பலால் கொலைசெய்யப்பட்டார். 

17-08-1990இல் திருக்கோயிலில் விசேட அதிரடிப்படையால் 2 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

18-08-1990இல் கண்ணகி கிராமத்தில் 3 தமிழ் மக்கள் விசேட அதிரடிப்படையால் கொல்லப்பட்டனர்

 19-08-1990 இல் 13ஆம் கிராமத்தில் விமானக் குண்டு வீச்சால் 13 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

20-08-19909 டில் தமிழர் ஒருவர் விசேட அதிரடிப்படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

22-08-1990 இல் கோணாவிலில் கைது செய்யப்பட்ட 40 தமிழ் மக்கள் குறித்த விபரம் இல்லை.

23-08-1990 இல் தம்பிலுவில் திருக்கோயிலில் அகதிகளாக இருந்த 9 தமிழ் மக்கள் விசேட அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

24-08-1990இல் திருக்கோயிலில் 8 தமிழ் மக்கள் விசேட அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

 

*****

 

  • தொகுப்பாளர் குறிப்பு: ஐப்பசி- கார்த்திகை 1990இல் வெளியான விடுதலைப்புலிகள் இதழின், பக்கம் 6 & 7 இந்நிகழ்வு குறித்து விரிக்கப்பட்டுள்ளதாவது:
  • "5.9.90 அன்று வந்தாறுமூலை பல்‌கலைகழகத்துள் அமைந்திருந்த அகதிகள்‌ முகாமினுள்‌ புகுந்த சிங்களப்‌படைகளும் முஸ்லிம்‌ காடையர்களும், இளவயதினரைத்‌ தேர்ந்தெடுத்து 142 தமிழர்களைக் கைது செய்தனர்‌. இவர்களில்‌ 6 பேரின்‌ கைகளில்‌ வகை- 56 ரக துப்பாக்கிகளைக்‌ கொடுத்து புகைப்படம்‌ பிடித்தனர்‌. பின்‌னர்‌ இந்த 6 இளைஞர்களின் கழுத்தில்‌ சைக்கிள்‌ ரயர்களை மாட்டி உயிருடன்‌ எரித்தனர்‌. ஏனையவர்கள்‌ தடயங்கள்‌ இல்லாதவாறு அழிக்கப்பட்‌டுள்ளனர்‌."

Edited by நன்னிச் சோழன்

  • Replies 168
  • Views 13.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    முன்னுரை     தமிழீழத்தின் சுதந்திரத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசின் படைத்துறை இயந்திரத்தின் கைகளால் தென் தமிழீழ தமிழ் மக்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் சொல்லொணாதவை. 

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இலங்கை  முஸ்லீம்கள்… ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட அட்டூழியங்களை ஆவணப் படுத்தும் உங்கள் செயலுக்கு மிக்க நன்றி  நன்னிச்சோழன். 🥰 👍🏽 🙏

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    நிகழ்படங்கள் படுகொலை சாட்சிகள்    முஸ்லிம்களாலும் சிங்களப் படையினராலும் வீரமுனையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான கண்கண்ட மற்றும் பிற சாட்சிகளின் வாக்குமூலப் பதிவு: இதில் தோன்றி நல்லவர் வேடமிட்டு முஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 13/09/1990
  • பக்கம்: 1

 

சத்துருக்கொண்டானில் 150 தமிழர் படுகொலை! 
செவ்வாயன்று நடந்த கொடூரம்

யாழ்ப்பாணம், செப். 13 

நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் பகுதியில் 150 அப்பாவித் தமிழர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் வட்டாரங்களில் இருந்து இத்தகவல் தெரிய வந்தது.

மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு மைல் தூரத்தில் உள்ளது சத்துருக்கொண்டான்.

நேற்று முன்தினம் அப்பகுதியை இராணுவம் சுற்றி வளைத்து நிற்க-

ஊருக்குள் புகுந்த முஸ்லிம் ஊர்காவற் படையினர் அகப்பட்ட அப்பாவித் தமிழர்களை வெட்டிக் கொலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதேபகுதியில் கடந்தவார இறுதியிலும் சுமார் 50 தமிழர்கள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு "டயர்" போட்டு எரித்ததாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தது தெரிந்ததே.

(உ)

*****

 

  • தொகுப்பாளர் குறிப்பு:  ஐப்பசி- கார்த்திகை 1990இல் வெளியான விடுதலைப்புலிகள் இதழின், பக்கம் 6 & 7 இந்நிகழ்வு குறித்து விரிக்கப்பட்டுள்ளதாவது:
  • "11/09/1990 அன்று மட்டக்களப்பிலுள்ள தன்னாமுனை, பிள்ளையாரடி, சத்துருக்‌கொண்டான்‌ ஆகிய தமிழர்‌ பகுதிகளைச் சிங்களப்‌ படையினரும், முஸ்லிம்‌ ஊரர்காவற்‌ படையினரும் சுற்றி வளைத்‌தன. பால்குடிக்கும்‌ குழந்தையிலிருந்து குடுகுடு கிழவர்கள்‌ வரை ஆண்கள்‌, பெண்‌கள்‌ அனைவரும்‌ சுட்டும்‌ வெட்‌டியும் குத்தியும்‌ கொல்லப்‌ பட்டனர். இதில் மொத்தம் 217 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதே போன்று அம்பாறை மாவட்டத்திலிருந்த சவளக்கடை, புதுக்‌குடியிருப்பு, பாட்டாளிபுரம்‌, நல்லூர், வீரமாநகர்.... திருக்கோணமலை மாவட்டத்திலிருந்த இலக்கந்தை, கூனித்திவு, சம்பூர்‌ மூதூர், கட்டைபறிச்சான்‌ போன்ற இடங்களில்‌ தமிழர்‌கள்‌ குவியல்‌ குவியலாகக்‌ கொன்றொழிக்கப்பட்டனர்‌. இதில்‌ முக்கியமான விடயம்‌ என்னவென்றால்‌ இப்படுகொலைகள்‌ இடம்‌பெற்றதற்கான சான்றுகள்‌ ஏதாவது அகப்பட்டு, அது சரித்திரத்தில்‌ பொறிக்கப்பட்டுவிடக்‌ கூடிய நிலைமைகள்‌ ஏற்படாமல்‌ மிகக்‌ கவனமாகத்‌ திட்டமிட்டு இப்படுகொலைகள்‌ செய்யப்பட்டுள்ளன."

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 16/09/1990
  • பக்கம்: 4

 

மட்டு. -கல்முனை வீதியில் 7 சிறிலங்கா ராணுவ முகாம்கள்

மட்டக்களப்பு. செப்.16

26 மைல்கள் நீளமுடைய மட்டக்களப்பு கல்முனை - வீதியில் ஏழு சிறிலங்கா இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்லடி, ஆரையம்பதி, செட்டிபாளையம், ஒந்தாச்சி மடம். கல்லாறு, துறைநீலாவணை, கல்முனை ஆகிய இடங்களிலேயே இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரப்பகுதியிலும் பரவலாக முகாம்கள் உள்ளன.

முஸ்லிம் கிராமங்களில் ஊர்காவல்படையினர் முகாம்களை அமைத்துள்ளனர். இவர்கள் இராணுவத்தினரின் உதவியுடன், தமிழர்களின் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களைக் கொலை செய்தும், துன்புறுத்தியும் வருகின்றனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெருமளவு தமிழர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது.

(ஒ)

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 17/09/1990
  • பக்கம்: 4

 

காத்தான்குடி: தமிழர் கொலை

கொழும்பு, செப் 17

காத்தான்குடியில் தமிழர் ஒருவர் முஸ்லிம் கோஷ்டி ஒன்றினால் கொல்லப்பட்டார்.

இப்படி பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்திய வானொலி அறிவித்தது.

(ஒ-எ)

 

*****

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 20/09/1990
  • பக்கம்: 1

 

3 தமிழர்கள் தாக்கப்பட்டனர்

யாழ்ப்பாணம். செப் 20

கடந்த வாரம் மூதூரிலிருந்து தோப்பூருக்கு பொருள்கள் வாங்கச் சென்ற மூன்று தமிழர்கள் முஸ்லிம் ஊர்காவலரினால் அடித்துக் காயப்படுத்தப்பட்டனர்.

க.வைரமுத்து [வயது 65], மகந்தையா (வயது 76), வைரவன் முத்துக்குமார் (வயது 46) ஆகியோரே காயமுற்றனர்.

[உ]

 

*****

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 21/09/1990
  • பக்கம்: 1

 

சவளக்கடையில் 35 தமிழர் கொலை!

யாழ்ப்பாணம், செப். 21

சவளக்கடை இராணுவ முகாமில் வைத்து கடந்த திங்களன்று 35 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதாக விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

அன்றைய தினம் மட்டக்களப்பு சொறிகல்முனை என்ற கிராமத்தை சுற்றி வளைத்த இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் அங்கிருந்த 35 தமிழ் இளைஞர்களைக் கைது செய்து சவளக்கடை முகாமுக்குக் கொண்டு சென்று சுட்டுக் கொன்றதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதே சமயம் - 

சவளக்கடைப் பகுதியில் கோயில்கள் மற்றும் பாட சாலைகளில் தஞ்சம் புகுந் திருந்த 35 தமிழ் பெண்களை இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் கடந்த செவ்வாயன்று கைது செய்து கொண்டு சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர் என்றும் -

இந்தப் பெண்கள் தற்போது தப்பி வந்து மண்டூரில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

[உ- 5]

 

*****

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 23/09/1990
  • பக்கம்: 1

 

மட்டக்களப்பில் தொடரும் தமிழர் இனப்படுகொலை! 
பெண்கள், குழந்தைகள் உட்பட 54 பேர் இரு சம்பவங்களில் பலி!

யாழ்ப்பாணம், செப். 23

அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் மட்டக்களப்பு மாவட் டத்திலும் தமிழர்களை அழிக்கும் இனப்படுகொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களில் மட்டும் இரு வேறு சம்பவங்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 54 தமிழர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, தாளங்குடா, கன்னங்குடா ஆகிய பகுதிகளில் 6 பெண்கள் உட்பட 19 தமிழர்கள் - முஸ்லிம் தீவிரவாதக் கோஸ்டி ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை இரவு அக்கிராமங்களுக்குள் புகுந்த 20 பேர் கொண்ட தீவிரவாதிகள் கோஷ்டி ஒன்று தமிழர்களைக் கடத்திச் சென்று பின்னர் கடற்கரையில் வைத்துக் கொன்றதாக அதிகாரபூர்வமான செய்திகளை மேற்கோள்காட்டி இந்திய வானொலி அறிவித்தது.

இது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று விடுத்த அறிக்கையில் -

புதுக்குடியிருப்பு என்னுமிடத்தில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பெண்கள் உட்பட பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் பத்துப் பேர் காயமடைந்தனர் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இந்தச் சம்பவங்களை அடுத்து புதுக்குடியிருப்பு, தாளங்குடா, கன்னங்குடா ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் அச்சம்காரணமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதே சமயம் -

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தளவாய் என்ற மீனவர் கிராமத்தில் கடந்த வியாழனன்று பெண்கள், குழந்தைகள் உட்பட 35 தமிழர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இராணுவத்தினரும் சேர்ந்து இப்படுகொலைகளைச் செய்ததாக விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

கிராமத்திலிருந்த ஐந்து வீடுகள் மற்றும் கிராமத்தவர்களின் வள்ளங்கள், கரைவலைகள் என்பன தீயிட்டுக் கொழுத்தப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

[உ]

 


 

  • பக்கம்: 2 & 4

 

சவளக்கடைப் படுகொலைகள் தற்செயலாக நடந்த சம்பவம் அல்ல
அம்பாறை பிராந்திய பொறுப்பாளர் அறிக்கை

தமிழின அழிப்பையே நோக்கமாகக் கொண்டுசெயற்பட்டு வரும் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட செயலினால்- கடந்த 17 ஆம் திசுதி அம்பாறை மாவட்டத்திலுள்ள சொறிக்கல்முனை என்னும் இடத்தில் இருந்த 35 ஆண்கள் சவளக்கடை இராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவற் படையினராலும் படுகொலை செய்யப்பட்டனர். 

இச்சம்பவத்தை தற்செயலாக நடந்த ஒரு சம்பவமாக எடுத்துக் கொள்ள முடியாது. 

அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ் மக்களை அழித்தும் விரட்டியடித்தும் அப்படியே தொடர்ச்சியாக கிழக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தமிழ் மக்களை விரட்டியடித்து கிழக்கு மாகாணத்தில் தமது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவது இதன் பின்னால் உள்ள பாரிய செயற் திட்டமாகும்.

இன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல தமிழ் மக்களும் வெளியேறி விட வேண்டும் என்று எச்சரித்துள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 1714 தமிழ் மக்கள் முஸ்லிம் காடையர்களினாலும், சிங்களப் படைகளினாலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

முன்பு இல்லாதவாறு இன அழிப்பு

இதுவரை காலமும் இல்லாதவாறு இம்முறை மிகப் பெருமளவில் அழிப்பிலும், தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறையைப் பிரயோகத்திலும் முஸ்லிம் காடையர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இனப்படுகொலைகளை சிங்கள அரசின் தொலைத் தொடர்பு சாதனங்களும் நியாயப்படுத்தி வருகின்றன. இதேவேளை அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல நிர்வாக இயந்திரங்களும் சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே "புனிதநகர்" திட்டத்தின் கீழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகள் சுவீரிககப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுவிட்டார்கள். தமிழ் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகள் சிங்களக் குடியேற்றங்களினால் முழுச் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன. தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை விரும்பாத தீய சக்திகளின் நோக்கம் தற்காலிகமாக வெற்றி பெறுவது குறித்து எவரும் மகிழ்ச்சி அடையமுடியாது.

 

இன்று தமிழர்கள் நாளை -முஸ்லிம்கள்

குறுகிய அரசியல் இலாபத்தைத் தேடும் முஸ்லிம் மிதவாத சக்திகள் இப்படியான இனப்படுகொலைகளை ஊக்குவித்து வருகின்றன.

இன்று தமிழ்மக்கள் மீது இனப்படுகொலைகளை ஊக்குவித்துவரும் இப்பேரினவாத சிங்கள அரசு தனது இந்தத் திட்டம் திருப்திகரமாக நிறைவேறியதும் தனது இனப்படுகொலைகளை முஸ்லிம் மக்களை நோக்கித் திருப்பும்.

தனது சொந்த இன மக்களையே ஆயிரக்கணக்கில் இரவோடு இரவாக வீதியில் சுட்டும் எரித்தும் கொன்ற சம்பவங்களை எவரும் மறந்து விட முடியாது. இவ்வரசு தமக்குப் பாதுகாப்பாக இருக்குமென எவராவது நினைத்தால் அது வீணான பகல் கனவே ஆகும்.

தமிழ் பேசும் மக்களின் விடிவுக்காக ஆயுதம் தாங்கிப் போராடும் எமது தேசியப் படை, இவ்வாறான இனப்படுகொலைகளை பொறுத்துக் கொண்டு இருக்குமென இவர்கள் எதிர்பார்ப்பது மடமை ஆகும். 

இப்படுகொலைகளுக்கு துணை போகிறவர்களும் கண்டிக்க தவறியவர்களுக்கும் தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப்போடுபவர்கள் ஆவார்கள். 

[இ]

 

*****

  • தொகுப்பாளர் குறிப்பு: இங்கு குறிக்கப்பட்டிருப்பது தான் புதுக்குடியிருப்பு படுகொலை ஆகும். இதற்கொரு நினைவுத்தூண் புதுக்குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 25/09/1990
  • பக்கம்: 4

 

முஸ்லிம் ஊர்காவல் படையை கலைக்க அரசிடம் வற்புறுத்து

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் முஸ்லிம் ஊர்காவல் படைகளைக் கலைத்து விடும்படி அரசாங்கத்தை தமிழ் அரசியல் கட்சிகள் கேட்டுள்ளன.

ஆறு தமிழ் அரசியல் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டி.எல்.எப்., ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூட்டாக நேற்றுக் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இத்தகவல் வெளியிடப்பட்டது.

"பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஊர்காவல் படையினர் பயங்கரவாதிகளாக மாறி ஒன்றுமறியாத அப்பாவித் தமிழ் மக்களை கொன்றுவருகின்றனர்.

"முஸ்லிம் ஊர்காவல் படையினரால் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்து அரசு பாராமுகமாக இருந்து வருகின்றது"

என்று செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழர்களைக் கொலை செய்வதை நிறுத்துவதற்கான பொது ஒழுங்கு ஒன்றை ஏற்படுத்துவதற்காக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் முஸ்லிம் தலைவர்களு டன் பேச்சுக்கள் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

[அ-எ]

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: ஈழநாதம்
  • திகதி: 27/09/1990
  • பக்கம்: 1

 

ஐந்து தமிழ் விவசாயிகள் சவளக்கடையில் சுட்டுக்கொலை

(மட்டக்களப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சவளக்கடைப் பகுதியில் ஐந்து தமிழ் விவசாயிகள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்,

சவளக்கடையிலுள்ள நெல் வயலுக்கு கடந்தசனிக்கிழமை (22-9-90) அறுவடைக்காகச் சென்ற தமிழர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும் ஊர்காவற்படையினரும் தாக்குதல் நடத்தியதில் ஐந்துபேர் கொல்லப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் தமிழ் விவசாயிகள் தமது விளைவுகளை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

(க)

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 09/10/1990
  • பக்கம்: 1

 

பாடசாலை அதிபர் ஒருவர் ஊர்காவற்படையால் கொலை

(அம்பாறை)

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அட்டப்பள்ளம் தமிழ் பாடசாலை அதிபரை முஸ்லிம் ஊர்காவற்படையினர் கொலை செய்துள்ளனர்.

காரைதீவைச் சேர்ந்த திருமதி மங்கையற்கரசி என்ப வரே கொலை செய்யப்பட்டவர் ஆவர். இவரை முஸ்லிம் ஊர்காவற்படையினர் கழுத்தில் கயிறு ஒன்றைப் போட்டு நெரித்துக் கொலை செய்துள்ளனர்.

இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப் பாடசாலையின் அதிபராகக் கடமை ஆற்றியுள்ளார்.

(க)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: ஈழநாதம்
  • திகதி: 02/11/1990
  • பக்கம்: 1

 

முஸ்லிம் காடையர் வவுனியாவில் அடாவடித்தனம்

(வவுனியா)

வவுனியா நகரப்பகுதி இராணுவ சோதனை முகாம்களில் இராணுவத்தினருடன் இணைந்து முஸ்லிம் காடை யர்கள் அடாவடித்தனம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினர் தமிழ்ப் பொதுமக்களின் பொருள்களை சோதனை செய்த பின்னர் முஸ்லிம் கும்பலொன்று மீண்டும் தமிழ் மக்களின் பைகளை பரிசோதனை செய்வதாகவும் பைகளில் காணப்படும் பெறுமதி வாய்ந்த பொருள்களை அபகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து வந்த ஜீவகுமார் என்ற இளைஞரிடமிருந்து 2000 ரூபா பணத்தை முஸ்லிம் காடையர் பறித்தெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

(த)

******

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 03/11/1990
  • பக்கம்: 1

 

ஆரையம்பதி ராணுவ முகாமினுள்
முப்பது அப்பாவித் தமிழர்கள் ரயர் போட்டு உயிருடன் எரிப்பு
ராணுவத்தினதும் முஸ்லிம் ஊர்காவல்படையினதும் வெறித்தனம்

(மட்டக்களப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி இராணுவ முகாமிற்குள் வைத்து முப்பது அப்பாவித் தமிழரைச் சிறிலங்கா இராணுவமும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் சேர்ந்து உயிருடன் ரயர் போட்டுக் கொளுத்தினர். இச் சம்பவம் நேற்று முன்தினம் காலை இடம்பெற்றது.

இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: ஆரையம்பதி, கல்லடி, தாளங்குடா, புதுக்குடியிருப்பு, கிரான்குளம் ஆகிய இடங்களை கடந்த முப்பத்தோராம் திகதி சுற்றிவளைத்த சிங்கள இராணுவத்தினரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் அக்கிராமங்களில் இருந்த அப்பாவிப் பொது மக்களான முப்பது பேரை ஆரையம்பதி இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து அன்று இரவு முழுவதும் முகாமிற்குள் வைத்து முப்பது பொதுமக்களையும் அடித் துத் துன்புறுத்தியதன் பின் னர் அடுத்த நாட் காலை நவம்பர் முதலாம் திகதி அன்று முகாமிற்குள்ளேயே வைத்து உயிருடன் துடிக்கத் துடிக்க ரயர் போட்டு சிறிது சிறிதாக எரித்துக் கொலை செய்துள்ளனர்.

 

புலிகள் தாக்கு

இதனைத் தொடர்ந்து நேற்றுக் காலை ஆறு பதினைந்து மணியளவில் விடுதலைப் புலிகள் அதே ஆரையம்பதி இராணுவ முகாம் மீது தாக்குதல் தொடுத்தனர். இத்தாக்குதல் சம்பவங்களின் போது அருள் 89 ரக ரொக்கட் ஷெல் தாக்குதலில் முகாமின் பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டிருந்த காவல் அரண்கள் சேதமாயின. அதற்குள் இருந்த இராணுவத்தினரின் சேத விபரங்கள் எதுவும் தெரியவில்லை.

பின்பு ஆத்திரம் கொண்ட இராணுவத்தினர் அகோர ஷெல் தாக்குதல்களையும், துப்பாக்கி வேட்டுக்களையும் தீர்த்த வண்ணம் வெளியே வந்தனர். இவ்வாறு வெளியே வந்த இராணுவத்தினரை நோக்கி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் துப்பாக்கித் தாக்குதல்களில் மீண்டும் படையினர் முகாமிற்குள் ஓடி முடங்கிக்கொண்டனர்.

(க)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: ஈழநாதம்
  • திகதி: 10/11/1990
  • பக்கம்: 1

 

அகதி முகாமிலிருந்து 60 தமிழர் இழுத்துச் செல்லப்பட்டனர்

(திருமலை)

சென்ற மாத கடைசிப் பகுதியில் கிழப்பன்பே அகதி முகாமிலிருந்து பிடித்துச் சென்ற தமிழர்கள் இருபத்திமூன்றுபேரை சுட்டுக் கொன்றுவிட்ட சிறிலங்கா ஆயுதப்படையினரும், முஸ்லிம் ஊர்காவற் படையினரும் மீண்டும் அதே முகாமினுட் புகுந்து அறுபது அப்பாவி ஆண்களை இழுத்துச் சென்றுள்ளனர். இந்த ஆட்கடத்தல் பற்றி தெரியவருவதாவது: கடந்த ஏழாம் திகதி சீனன் குடாப் பகுதியில் கிழப்பன்பே என்ற இடத்தில் அமைந்துள்ள அப்பாவிப் பொதுமக்களின் முகாமை சிங்கள இராணுவ அணியினரும், முஸ்லிம் ஊர்காவற்படையினரும் சுற்றி வளைத்தனர். இவ்விரு படையினரும் ஏற்கனவே அயற் கிராமங்களில் குடியிருந்த மக்களின் வாழ்விடங்களில் அட்டகாசம் புரிந்து கொடுமைகள் பல செய்ததால் தமது வீடுவாசல்களை விட்டு மக்கள் எல்லோரும் ஒன்றாக இந்த முகாமில் வந்து தங்கியிருந்தனர்.

இவர்களை சுற்றிவளைத்ததுடன் அப்பாவிகளான அறுபது பேரை தெரிந்தெடுத்து தமது இராணுவ முகாம்களுக்கு இந்த அறுபது பேரின் உறவினர்களும் கதறி அழஅழ இழுத்துச் சென்றுள்ளனர். இவர்கள் பற்றிய விபரம் எதுவும் இன்னும் தெரியவரவில்லை.

(க)

 



 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 10/11/1990
  • பக்கம்: 3

 

மட்டக்களப்புப் பகுதியில் மட்டும் 1,115 பேர் காணாமற் போயினர்!

மட்டக்களப்பு, நவ.10

கடந்த ஜூன் மாதத்தின் பின்னர், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 1,115 பேர் காணாமற்போயுள்ளார்கள் என இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வந்தாறு மூலை அகதிகள் முகாமில் இருந்து 158க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் 32 பேரை மட்டுமே கைது செய்ததாகப் பாதுகாப்புப் படையினர் இப்போது தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களில் சரி அரைப்பங்கினருக்கு மேல் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் 90சத வீதத்தினர் நிவாரணப் பொருள்களைக் கொண்டே காலத்தைக் கழிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை திருகோணமலையிலும் 278 பேர் படையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமற்போயுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. முஸ்லில் ஊர்காவல் படையினரால் கூட்டிச் செல்லப்பட்டுக் காணாமற் போனவர்களின் எண்ணிக்கை இன்னமும் சரியாக ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

மலையில் தமிழர் பகுதிகளில் உள்ள கோவில் காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படுவதாகவும் அறியவந்துள்ளது. 

(அ)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: ஈழநாதம்
  • திகதி: 12/11/1990
  • பக்கம்: 1, 4

 

17 வீதமான முஸ்லிம்களுக்கு 30 வீதத்தை நாம் கொடுக்க முன்வந்தோம்; 
அவர்கள் காட்டிக்கொடுத்தனர்
மக்கள் முன்னணி செயலாளர் யோகி தெரிவிப்பு

(கிளிநொச்சி)

முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு வடக்கு கிழக்கு மக்கள் தொகையில் பதினேழு வீதம் மட்டுமுள்ள அவர்களுக்கு முப்பது வீதத்தை விட்டுக் கொடுப்பதாக அவர்களுடன் நல்ல முறையில் அணுகி பேச்சுவார்த்தை நடாத்தினோம். அப்படியிருந்தும் கிழக்கில் அவர்கள் செய்த துரோகத்தினால் நாம் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது.

இவ்வாறு கிளிநொச்சியி லுள்ள அரச உயர் அதிகாரிகள் மத்தியில் பேசிய விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணிச் செயலாளர் திரு. யோகரட்ணம் யோகி கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் வன்னி மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு. சீலன் தலைமையில் கிளிநொச்சி இந்து மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் திரு. யோகி மேலும் பேசுகையில்:

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நாலாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். திருமலையிலிருந்து நான்கு இலட்சம் தமிழ் மக்கள் தமது சொத்துக்களை, உயிர்களை, கற்பை இழந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து ஒரு இலட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நாலாயிரம் தமிழர்களில் இரண்டாயிரம் தமிழர்கள் முஸ்லிம்களாலும், மிகுதி இரண்டாயிரம் பேர் இராணுவத்தினராலும் கொலை செய்யப்பட்டனர்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தைக் கண்டுபயப்படுவதிலும் பார்க்க முஸ்லிம்களைக் கண்டே தமிழ் மக்கள் கூடுதலாகப் பயப்படுகிறார்கள்.

கிழக்கு மாகாணத்திலுள்ள அகதி முகாம்களிலிருந்து தமிழ்ப் பெண்கள் முஸ்லிம்களால் கடத்திச் செல்லப்பட்டு மானபங்கப்படுத்தப்படுகிறார்கள். அண்மையில் தமிழ்ப் பெண் ஒருத்தி முஸ்லிம்களால் மானபங்கப்படுத்தப்பட்ட பின் கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டிருக்கிறாள். 

எமது இயக்கத்திலிருந்த பல முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இயக்கத்தை விட்டு ஓடி இராணுவத்துடன் சேர்ந்து எமது முகாம்களைக் காட்டிக் கொடுப்பதிலும், எம்மை அழிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழருக்கு எதிராகச் செயற்படும் முஸ்லிம்களுக்கு அரசு சகல உதவிகளையும் செய்து வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் நிலங்கள் அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டன. அப்போதும் முஸ்லிம்களோ, அன்றி அவர்களின் தலைவர்களோ அரசிற்கு எதிராகப் போராட்டம் ஒன்றை நடாத்த முன்வரவில்லை. போராட் டத்திற்குப் பதிலாக முஸ்லிம் தலைவர்கள் சிங்களக் கட்சிகளின் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்தார்கள். இன்று அவர்களின் பின்னால் நின்று கொண்டு தமிழர்களைப் படுகொலை செய்து அவர்களை கிழக்கு மாகாணத்தில் இல்லாது செய்வதற்காக ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

 


 

  • பக்கம்: 1

 

புத்தளத்தில தமிழர் லொறிகள் முஸ்லிம்களால் கொள்ளை

(கிளிநொச்சி)

தமிழர்களின் லொறிகளை வழிமறிப்பதிலும், பணங்களைக் கொள்ளையடிப்பதிலும் தற்போது முஸ்லிம்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஆயுதப்படையினரும் இம் முஸ்லிம்களுக்கு உதவியாகச் செயற்படுகிறார்களாம்.

யூரியா பசளையைக் கொள்வனவு செய்வதற்காகக் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு சென்ற லொறி ஒன்று முஸ்லிம்களால் வழிமறிக்கப்பட்டுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இச்சம்பவம் புத்தளத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சியில் பசளை, கிருமிநாசினி முதலியவற்றை விற்பனை செய்யும் ஸ்தாபனம் ஒன்று சிளிநொச்சியில் பசளை, உரம் ஆகியவற்றிற்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால் அப்பொருள்களைக் கொழும்பில் இருந்து கொண்டுவருவதற்காகச் சென்றதாம்.

மேற்படி ஸ்தாபன லொறி புத்தளத்தில் வைத்து வழிமறிக்கப்பட்டு ஒன்றரை இலட்சம் ரூபா ரொக்கப்பணமும் காசோலைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாம். இது சம்பந்தமாகப் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

(49)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 14/11/1990
  • பக்கம்: 1

 

ஊர்காவலர் உதவியுடனேயே முஸ்லிம் மீளக் குடியேற்றமாம்

கொழும்பு, நவ. 14

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை ஊர்காவல் படையினாாக முதலில் அனுப்பிவிட்டே, அகதிகளாக இருக்கும் முஸ்லிம் மக்கள் சொந்த கிராமங்களுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படுவர்.

அமைச்சர் பெரேரா, புத்தளம் கற்பிட்டி பகுதிகளில் தங்கியுள்ள மன்னார் முஸ்லிம் அகதிகள் மத்தியில் பேசுகையிலேயே முன் கண்டவாறு கூறி உள்ளார்.

(இ-எ)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 21/11/1990
  • பக்கம்: 4

 

ராணுவ முகாமில் முஸ்லிம்களுக்கு ஆயுதப் பயிற்சி

கொழும்பு, நவ. 21

மன்னாரில் உள்ள தள்ளாடி இராணுவ முகாமில் வைத்து 58 முஸ்லிம் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சி முடிந்ததும் இவர்கள் ஊர்காவலர்களாகக் கடமை புரிவார்கள் என்று அமைச்சர் பெஸ்டஸ் பெரேரா கூறியுள்ளார்.

 

******

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 07/12/1990
  • பக்கம்: 1

 

300 முஸ்லிம் இளைஞருக்கு தொண்டர் படை பயிற்சி

கொழும்பு, டிச. 7 

முந்நூறு முஸ்லிம் இளைஞர்கள் தேசிய பாதுகாப்புப்படை தொண்டர்களாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்களில் முதலாவது தொகுதியினரின் பயிற்சி முடி வடைந்து விட்டது.

பயிற்சி முடிந்து இரண்டாவது தொகுதித் தொண்டர்கள் இம்மாதம் 10 ஆம் திகதி வெளியேறுகின்றனர்.

இவர்கள் மன்னார் மாவட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்று அமைச்cஅர் ரஞ்சன் விஜேரத்தின சொன்னார்.

(உ-எ)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: ஈழநாதம்
  • திகதி: 14/12/1990
  • பக்கம்: 1

 

திருமலையில் தமிழர்கள் கடத்தல்
படுகொலைகள் தொடர்கின்றன

(யாழ்ப்பாணம்)

திருமலை நகரில் தமிழர்கள் பதின்நான்குபேர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார்கள். இவர்களில் மூதூர் தபால் நிலைய அதிபரும், கட்டைபறிச்சானைச் சேர்ந்த குணசீலதாஸ், தம்பலகாமத்தைச் சேர்ந்த ராஜி என்பவரும் கு றிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் பற்றிய தகவல் ஒன் றும் இதுவரை தெரியவில்லை.

மேலும் திருக்கோணமலை நகரப்பகுதியில் பொலிஸார் அடிக்கடி சுற்றி வளைத்து இளைஞர்களையும், யுவதிகளையும் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றார்கள். 

அதேவேளை கிண்ணியா உப்பாறு பகுதியில் மூன்று தமிழர்களும், கிண்ணியா இறங்குதுறையில் ஒரு தமிழரும் ஊர்காவல்படையால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளனர்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 17/12/1990
  • பக்கம்: 1

 

இரு தமிழர்கள் வெட்டிக்கொலை

திருகோணமலை மாவட்டம் தோப்பூரில் கடந்த 14 ஆம் திகதி முஸ்லிம் ஊர்காவல் படையினர் இரு தமிழர்களை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

உப்பூறல் பகுதியைச் சோர்ந்த ந. தம்பிராஜா (24 வயது) த.விஜயசிங்கம் (40 வயது) ஆகிய இருவருமே வெட் டிக் கொல்லப்பட்டுள்ளனர்.

[உ-5]

******

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஈழநாதம்
  • திகதி: 20/12/1990
  • பக்கம்: 1

 

3 தமிழர் ஊர்காவற்படையால் ஆலையடிவேம்பில் கொலை

(அம்பாறை)

அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா ஊர்காவற்படையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த திங்களன்று காலை ஐந்துமணியளவில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு என்னுமிடத்தில் வைத்து சிறிலங்கா ஊர்காவற்படையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

(மு)

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஈழநாதம்
  • திகதி: 25/12/1990
  • பக்கம்: 1

 

தமிழர் சுட்டுக் கொலை

(அம்பாறை)

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப்பொதுமகன் ஒருவர் சிறிலங்கா ஊர்காவற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள வினாயகபுரம் என்ற இடத்தைச் சேர்ந்த தவம் என்பவரையே ஊர்காவற் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

(மு)

******

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஈழநாதம்
  • திகதி: 29/12/1990
  • பக்கம்: 1

 

ஊர்காவற்படை கைது செய்த இருபத்தொரு தமிழர்கள் பொலிஸில் ஒப்படைப்பு

(மட்டக்களப்பு)

மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள வாழைச்சேனைப் பகுதியில் முஸ்லிம் ஊர்காவற் படையினரால் கைது செய்யப்பட்ட இருபத்தொரு தமிழர்கள் சிறிலங்காப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் முஸ்லிம் ஊர்காவற்படையினரால் பலமாகத் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்களை 20 ஆம் திகதியன்று சிறிலங்காப் பொலிஸார் விடுவித்திருப்பதாகத் தெரிகின்றது.

 

******

 

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஈழநாதம்
  • திகதி: 15/2/1991
  • பக்கம்: 3

 

திருமலை மாவட்டத்தில் முஸ்லிம் ஊர்காவற்படையினரின் அடாவடித்தனங்கள் அதிகரிப்பு

திருக்கோணமலை மாவட்டத்ததி வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
விவசாயம் கால்நடை மற்றும் கைத்தொழிய என்பனவற்றில் பொருளாதார ரீதியாகவும் இவர்க்ள் அழிக்கப்பட்டு வருகின்றனர். சிறிலங்கா ராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவற்படையினராலும் இம் மாவட்ட மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

திருக்கோணமலை நகரில் இரகசிய கொலைகள் நடந்த வண்ணமே உள்ளன. இந்த வேளை மூதூர், கிண்ணியா, கந்தளாய். தம்பலகாமம். நிலாவெளி ஆகிய இடங்களிலும் பெரும் சுற்றிவளைப்புகளும் கைதுகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. 

குறிப்பாக நிலாவெளி 8ஆம் கட்டை முஸ்லிம் சமூகவிரோதிகள் அங்குள்ள தமிழர்களை சைதுசெய்துகொண்டு செல்கின்றனர். பின்பு இவர்கள் அடித்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். 

கடந்த இரண்டாம் திகதி திருகோணமலை நகர மீன் சந்தைக்கு அருகே 18 வயது கொண்ட இரண்டு தமிழ் மாணவர்களை முஸ்லிம்கள் கடத்தி சென்றுவிட்டனர். 

சாம்பல்தீவிலும் இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையும் இணைந்து பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். 

இதை போலவே சாம்பல் தீவிலும் கடந்த 3.2.91 இல் சிறிலங்கா இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் என்ற பெயரில் அப்பாவித் தமிழ் மக்களை கைது செய்து கொண்டிருக்கும் அதே நேரம் நிலாவெளி 8 ஆம்கட்டையைச் சேர்ந்த முஸ்லிம் காடையர்கள் பாவியல் வன்முறையிலும் கொள்ளையிலும் ஈடுபட்டனர். 

சாம்பல் தீவு கிராமம் சுற்றி வளைக்கப்பட்டபோது மைக்கல் சென்றியான்பிள்ளை (65 வயது). செல்லையா கந்தசாமி (55 வயது). தங்கவேல்(40 வயது), தம்பிஐயா சந்திரன் (35 வயது), பரமானந்தம் அருரை???? (18 வயது). லூத்தராசா (45வயது), நகேந்திரன் (15 வயது), சுந்தரலிங்கம் சதீஸ் (15வது) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பற்றிய தகவல்கள் 10.02.1991 வரையிலும் கிடைக்கவில்லை. 

அத்துடன் கடந்த 6-2-91 அன்று திருமலை நகரில் கடற்படையினர் 4 தமிழ் இளைஞர்களை கைது செய்ய முனைந்த போது மூவர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டார். 

இவ்வாறாக திருமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்கள் அனைத்தும் சிங்கள இராணுவத்தாலும், முஸ்லிம் ஊர்காவல் படைகளினாலும் கொலை பயமுறுத்தல் செய்யப்பட்டு வருகிறது.  

******

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 22/2/1991
  • பக்கம்: 1,4

 

ஏறாவூரில் தமிழர்கள் உயிருடன் எரிப்பு

கொழும்பு, பெப். 22 

ஏறாவூரில் தமிழ்ப் பயணி கள் பலர் முஸ்லிம் காடையர் கும்பலினால் நேற்று உயிருடன் எரிக்கப்பட்டதாக அஞ்சப்படுகிறது.

மட்டக்களப்பு நோக்கி தமிழ்ப் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றை முஸ்லிம் 

காடையர் கும்பல் வழிமறித்துத் தாக்கி பயணிகளை உயிருடன் எரித்தது.

முதலில் சாரதியையும் சில பயணிகளையும் வெளியே இழுத்துப் போட்டு வெட்டிய காடையர்கள் பின்னர் அவர்களை பஸ்ஸுக்குள் போட்டு எரித்தனர்.

இந்தச் சம்பவத்தில் இரண்டு பயணிகள் உயிருடன் எரிக்கப்பட்டனர் என்பது கொழும்பில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. மேலும் பத்து, பன்னிரண்டு தமிழர்கள் எரிகாயங்களுடன் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டனர்.

இருபத்தாறு தமிழ்ப் பயணிkaளுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்று கிழக்கு மாகாண எம்.பி. ஒருவரை மேற்கோள் காட்டி பி. பி.ஸி. அறிவித்thathu.

இதேவேளை தமிழ்ப் பயணிகள் பயணம் செய்த மற்றொரு பஸ் காடையர் கும்பலினால் எரிக்கப்பட்டதாகவும், சாரதி சாதுர்யமாக பஸ்ஸை கும்பலினூடே வெட்டிச் செலுத்தி பாதுகாப்பாக பஸ்ஸைக் கொண்டு வந்து சேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

******

  • தொகுப்பாளர் குறிப்பு: 22/02/1991 அன்று வெளியான ஈழநாத செய்தியின் படி, இப்பேரூந்து ஏறாவூருக்கு அருகிலுள்ள "சதாம் ஹுசைன்" என்ற பெயருடைய கைவிடப்பட்ட ஊருக்கு ஊடாக சென்ற போதே இத்தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 22/02/1991 அன்று வெளியான உதயனின் செய்தியின் படி இவ்வூர் அக்காலதிய ஈராக்கிய அரசின் உதவியுடன் நிறுவப்பட்டதாகும்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 13/3/1991
  • பக்கம்: 1

 

முஸ்லிம் ஊர்காவலரால் 14 தமிழர்கள் கைது!

யாழ்ப்பாணம், மார்ச் 13

கடந்த ஞாயிறன்று திருகோணமலை மாவட்டம் தோட்பூரில் உள்ள முஸ்லிம் ஊர்காவல் படையினர் பள்ளிக்குடியிருப்புப் பகுதியில் 14 தமிழ் பொதுமக்களைக் கைது செய்தனர்.

அவர்களுக்கு என்ன நடந்தது என்று குறித்து தகவல் ஏதும் தெரியவரவில்லை.

[உ]

******

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.