Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடல்

இந்தியா – கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே ஆதரவு : மொராகொட

இந்தியா கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே தாம் ஆதரவை வழங்குவோம் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

 

சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளதாக கனடா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

கனடா முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா வழங்கியுள்ள பதில் உறுதியானது என மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில், பயங்கரவாதம் குறித்து சிறிதளவு கூட சகிப்புத் தன்மையை வெளிப்படுத்தக் கூடாது எனவும் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1351200

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவை ஆதரிக்கிறோம் எண்டு சொல்லி இருந்தால்தான் அது ஒரு செய்தியாக இருக்கும். இதெல்லாம் தெரிந்த விடயம்தானே. இல்லாவிட்ட்தால் என்ன நடக்கும் என்றும் தெரியும்தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் தமிழருக்கு நடந்தத அடக்குமுறையே  இந்தியாவில் சீக்கியருக்கு நடக்கிறது. அப்படியிருக்க, எப்படி இந்தியாவை இவர்களால் எதிர்க்க முடியும் அது தங்களையே எதிர்ப்பது போலாகும். அத்தோடு சிங்களம் தமிழரை அழிக்க பெரும் பங்கு கொடுத்து, பாராட்டியது இந்தியா. கனடாவோ அதுபற்றி இலங்கையிடம் கேள்வி எழுப்புகிறது. ஆகவே இவர்கள் இந்தியாவுக்கு ஆதரவளிப்பதுதான் சரி. கனடா இவர்களின் ஆதரவை கோரப்போவதுமில்லை என்பதை மிலிந்த மொரகொட விளங்கிக்கொண்டு கருத்து சொல்வது நல்லது. முந்திக்கொண்டு கருத்து வெளியிட்டு மூக்குடைபடாமல் இருக்க. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆதே போல்..

சீன - ஹிந்திய விவகாரத்தில்.. தாங்கள் யார் பக்கம் என்பதையும் சொல்லி விடுவது நல்லது.

அதுபோக.. சொறீலங்கா சனாதிபதியிம் ரஷ்சிய சார்ப்பு.. மற்றும் இவரின் ஹிந்திய சார்பு.. சீனச் சார்பு விடயங்களை மையப்படுத்தி.. ஈழத்தமிழர்கள் மேற்குலக கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு தெளிவை ஊட்ட வேண்டும்.

அப்போது தான் அவர்களுக்கு ஈழத்தமிழரின் இருப்பும் விடுதலையும் உரிமையும் ஏன் அவசியம் என்பது புரிய நேரிடும். 

இது ஈழத்தமிழினத்துக்கு பூகோள ராஜதந்திர செயற்பாடுகளுக்கான நல்ல நேரம் என்பதே எங்கள் கணிப்பு.

இதையும்.. ஹிந்திய சிங்கள விசுவாசத்திற்கு.. சாதமாக்கிவிட்டு குறட்டை விட்டால்.. ஈழத்தமிழனம்.. தேற வாய்ப்பே இருக்காது. 

Edited by nedukkalapoovan


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.