Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவை விட வீரியமான வைரஸ்கள்; சீன Virologist எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

world-news-18.jpg

கொரோனாவைவிட மிகக் கொடிய வைரஸ்கள் விரைவில் உலகைத் தாக்க வாய்ப்பிருப்பதாக சீனாவின் வூஹான் ஆய்வுக்கூட விஞ்ஞானி ஷி ஸெங்லி எச்சரித்துள்ளார்.

கொவிட் 19 பாதிப்பிலிருந்து உலகம் இன்னமும் முழுமையாக விடுபடவில்லை. அதற்குள் அடுத்த எச்சரிக்கை கிளம்பியிருக்கிறது. கொரோனா வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்ட சீன தேசத்தின் வூஹானிலிருந்து புதிய அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வூஹானின் வைராலஜி ஆய்வுக் கூடத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஷி ஸெங்லி என்ற பெண் விஞ்ஞானி, ’சீனாவின் பேட்வுமன்’ என்று மேற்குலத்தினரால் அழைக்கப்படுகிறார். இவர் தலைமையிலான குழுவினர், உலகில் பரவி வரும் மற்றும் பரவக் காத்திருக்கும் தொற்று நோய்கள் மற்றும் அவற்றை உருவாக்கும் நுண்ணுயிரிகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தற்போது பேட்வுமன் குழு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை குறித்து ’சவுத் சைனா போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, 40 வகையான கொரோனா வைரஸ்கள் மனிதர்களை குறிவைத்து தாக்கவிருப்பதாக பேட்வுமன் குழு பீதியைக் கிளப்பி இருக்கிறது. இதில் பெரும்பாலானவை கடும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்று ஷி ஸெங்லி எச்சரித்திருக்கிறார்.

மாறும் காலநிலை, அதையொட்டி பரவ வாய்ப்புள்ள வைரஸ் தொற்றுகள், மனிதர் – மனிதர் தொற்றுகளுக்கு அப்பால் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு தொற்றும் வாய்ப்பு அதிகரித்து வருவது உள்ளிட்டவற்றின் அடிப்படையில், சர்வதேசளவில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இவற்றினூடே புதிய வைரஸ் பரவல்களின் சாத்தியங்களை குறிவைத்து ஷி ஸெங்லி குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அவ்வப்போது அவசியமான எச்சரிக்கைகளையும் உலகுக்கு தந்து வருகின்றனர். இந்த வரிசையில் பேட் வுமன் தலைமையிலான குழு தற்போது வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவு, கொரோனாவுக்கு நிகரான அல்லது அதனை விட வீரியமான வைரஸ் தொற்றுகள் விரைவில் உலகைத் தாக்கும் என அறிவித்திருக்கிறது.

இதனிடையே பேட்வுமன் தலைமையிலான ஆய்வுக்கூடம் குறித்தும் சர்வதேச விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். வூஹானில் செயல்படும் இந்த சீன ஆய்வுக்கூடத்தின் விபரீத ஆய்வுகளே புதிய நுண்ணுயிர் திரிபுகளை உருவாக்கி, கொரோனா போன்ற வைரஸ் பரவல்கள் வெளிப்பட காரணமாவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

நன்றி – காமதேனு

https://thinakkural.lk/article/274648

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட் 19 எப்படி உருவானது என்பது தொடர்பான சதிக்கதைகளினால், இந்த வுஹான் ஆய்வுகூடத்தின் பல நல்ல பணிகளைக் கொச்சைப் படுத்தி விட்டார்கள். வுஹான் ஆய்வுகூடத்திலிருந்து கோவிட் 19 வைரஸ் பரவியது என்று சதிக்கதைகள் பரப்பிய பெரும்பாலான online sleuths, வைரஸ் என்றால் என்னவென்றே தெரியாத சில்லறை ஆய்வாளர்கள், ஒரு சிலர் அரைகுறை நுண்ணுயிரியலாளர்கள்.

வௌவால், மிக விசித்திரமான ஒரு பாலூட்டி: இதன் உடல் வெப்ப நிலை எங்களைப் போலவே கட்டுப் பாட்டில் இருக்கும், இதனால் பல வைரசுகள் உடலில் பெருகும். வெகு தொலைவிற்குப் பறக்கும் வௌவால் மிக அதிக உடற்பயிற்சி செய்வதால், இதன் உடலில் இருக்கும் வைரசுகள் வௌவாலுக்குத் தீங்கு செய்யாமல் உடற்றொழிலியல் உதவுகின்றது. ஆனால், வைரசுகள் வௌவாலில் உடலினுள் பல்கிப் பெருகுவதால் இது ஒரு "பெருப்பிக்கும் விருந்து வழங்கி - amplifying host". இதனால் தான் இந்த வுஹான் ஆய்வுகூடம், சில சந்தர்ப்பங்களில் மேற்கு நாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து வௌவால்களில் ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கோவிட் 19 எப்படி உருவானது என்பது தொடர்பான சதிக்கதைகளினால், இந்த வுஹான் ஆய்வுகூடத்தின் பல நல்ல பணிகளைக் கொச்சைப் படுத்தி விட்டார்கள். வுஹான் ஆய்வுகூடத்திலிருந்து கோவிட் 19 வைரஸ் பரவியது என்று சதிக்கதைகள் பரப்பிய பெரும்பாலான online sleuths, வைரஸ் என்றால் என்னவென்றே தெரியாத சில்லறை ஆய்வாளர்கள், ஒரு சிலர் அரைகுறை நுண்ணுயிரியலாளர்கள்.

வௌவால், மிக விசித்திரமான ஒரு பாலூட்டி: இதன் உடல் வெப்ப நிலை எங்களைப் போலவே கட்டுப் பாட்டில் இருக்கும், இதனால் பல வைரசுகள் உடலில் பெருகும். வெகு தொலைவிற்குப் பறக்கும் வௌவால் மிக அதிக உடற்பயிற்சி செய்வதால், இதன் உடலில் இருக்கும் வைரசுகள் வௌவாலுக்குத் தீங்கு செய்யாமல் உடற்றொழிலியல் உதவுகின்றது. ஆனால், வைரசுகள் வௌவாலில் உடலினுள் பல்கிப் பெருகுவதால் இது ஒரு "பெருப்பிக்கும் விருந்து வழங்கி - amplifying host". இதனால் தான் இந்த வுஹான் ஆய்வுகூடம், சில சந்தர்ப்பங்களில் மேற்கு நாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து வௌவால்களில் ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தது.

அண்ணை ஆய்வுகூட பாதுகாப்பு சம்பந்தமாகவே பலரும் கரிசனை கொண்டிருந்தனர். மேற்கு நாட்டு ஆய்வகங்களுடன் ஒப்பிடுகையில் வுகான் ஆய்வுகூடம் பாதுகாப்பற்றதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5,00,00,000 பேர் இறக்க நேரிடும்… கொரோனாவை விட 7 மடங்கு கொடிய வைரஸ் அபாயம்!

x-1.jpg

உலகம் முழுவதும் மக்களைக் கொன்று குவித்த கொரோனா வைரஸைக் காட்டிலும் 7 மடங்கு ஆபத்தான எக்ஸ் என்ற வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 3 ஆண்டுகளாக மக்களை ஆட்டிப் படைத்தது. உலகம் முழுவதும் சுமார் 70 இலட்சம் பேர் அதன் விளைவாக உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸைக் காட்டிலும் பல மடங்கு வீரியமிக்க புதிய வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அந்த வைரஸ் ஏற்படுத்தும் தொற்றுநோயால் சுமார் 5 கோடி மக்கள் இறக்க நேரிடும் என்றும், கடந்த 1918-1920ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய ‘ஸ்பானிஷ்’ காய்ச்சலைப் போலவே ஆபத்தானது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணரும், இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான டேம் கேட் பிங்காம்,
“விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வகை வைரஸ்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்முடிவில் புதியதாக அடையாளம் காணப்பட்டுள்ள ‘எக்ஸ்’ என்ற வைரஸ் பரவினால் குறைந்தது 5 கோடி மக்களை கொல்லக் கூடியதாக இருக்கும்.

இந்த தொற்றுநோயைச் சமாளிப்பது பெரிய சவாலாக இருக்கும். கொரோனா வைரஸை விட 7 மடங்கு ஆபத்தானது. எக்ஸ் தொற்றுநோய் பரவுவதற்கு முன்னதாக, அதை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 25 வகையான வைரஸ்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

நன்றி – காமதேனு

https://thinakkural.lk/article/274738

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அண்ணை ஆய்வுகூட பாதுகாப்பு சம்பந்தமாகவே பலரும் கரிசனை கொண்டிருந்தனர். மேற்கு நாட்டு ஆய்வகங்களுடன் ஒப்பிடுகையில் வுகான் ஆய்வுகூடம் பாதுகாப்பற்றதா?

இந்த BSL-4 சீன ஆய்வு கூடம் பாதுகாப்பில் குறைந்தது என்று காட்டும் நிகழ்வுகள், ஆதாரங்கள் எவையும் நம்பிக்கையான மூலங்களில் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு அமெரிக்க தூதரக கேபிள், தாம் ஆட்களை அனுப்பிப் பரிசோதித்ததாகவும், வுஹான் ஆய்வக ஊழியர்களுக்கு மேலதிக பயிற்சி தேவை என்றும் கூறும் ஒரு தகவல் தான் 2020 இல் வெளிவந்து கோவிட் சதிக்கதையாடலுக்குப் பயன்பட்டது. அந்தக் கேபிளில் கூட இந்த ஆய்வகத்தில் ஏதும் பாதுகாப்புப் பிரச்சினை இருப்பதாக குறிப்பில்லை.

இந்த ஆய்வுகூடம் சீன பெரு நிலப்பரப்பில் முதலாவது BSL-4 ஆய்வுகூடமாக 2011 இல் திட்டமிடப் பட்டு, 2017 இன் பின்னர் செயல்பட ஆரம்பித்தது. இதன் ஊழியர்கள், விஞ்ஞானிகள் பிரான்சில் பயிற்றப் பட்ட பின்னர் தான் பணி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் NIH அரச நிதியும் இந்த BSL-4 ஆய்வகத்தில் நடந்த வௌவால் வைரசுகளின் ஆய்வுக்குப் பயன்பட்டிருக்கிறது. 2023 இல் தான் உத்தியோகபூர்வமாக இந்த நிதியை முடக்கினர் - காரணம் அரசியலேயொழிய பாதுகாப்புக் குறைபாடல்ல.  

https://www.nature.com/articles/nature.2017.21487

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 26/9/2023 at 19:03, ஏராளன் said:

கொரோனாவைவிட மிகக் கொடிய வைரஸ்கள் விரைவில் உலகைத் தாக்க வாய்ப்பிருப்பதாக சீனாவின் வூஹான் ஆய்வுக்கூட விஞ்ஞானி ஷி ஸெங்லி எச்சரித்துள்ளார்.

 எதுக்கும் இப்பவே ரொயல்ட் பேப்பர், சாப்பாட்டு சாமான்களை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி சேகரிச்சு வைப்பம்... :rolling_on_the_floor_laughing:

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகை அச்சுறுத்தும் புதிய கொரோனா உள்ளிட்ட 8 வைரஸ்கள்: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனாவால் லட்சக்கணக்கான வீடுகளில் மரண ஓலம் கேட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

2-வது அலை, 3-வது அலை என அலை அலையாய் வந்து அச்சுறுத்திய கொரோனா பின்னர் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. எனினும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை.

தற்போது இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா குறித்த அச்சம் மக்களிடம் இன்னமும் உள்ளது.

இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவலை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தெற்கு சீனாவில் அமைந்துள்ள வெப்பமண்டல தீவான ஹைனானில் இதுவரை கண்டிராத 8 வைரஸ்களை சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வை சீன மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இந்த வைரஸ் இனங்கள் பெருகினால் மனிதர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு காரணமான சார்ஸ்-கோவி-2 உடன் தொடர்புடைய வைரசும் இதில் அடங்கும். 341 வகையான பூச்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட 682 மாதிரிகளில் இந்த வைரஸ்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறும்போது “ஹைனானில் வசிக்கும் கொறித்துண்ணி பூச்சிகளிடமிருந்து 700-க்கும் மேற்பட்ட மாதிரிகளை நாங்கள் ஆய்வு செய்தோம், மேலும் 8 வைரஸ்களைக் கண்டறிந்தோம். வைரஸ்களில் ஒன்று, கொரோனா வைரஸின் அதே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ்கள் கொறித்துண்ணி பூச்சிகளில் காணப்பட்டன, இந்த வைரஸ் எப்போதாவது பரவத்தொடங்கினால் மனிதர்களை அதிகமாக பாதிக்கும் வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில், ஒன்று கோவிஎச்.எம்.யு-1 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டது. இது கொரோனாவுக்கு காரணமான அதே குழுவைச் சேர்ந்தது. மேலதிகமாக , பல புதிய நோய்க்கிருமிகள் வெவ்வேறு வைரஸ் வகைகளில் கண்டறியப்பட்டன. விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வைரஸ்களில் மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற வைரஸ்களுடன் தொடர்புடைய இரண்டு புதிய பூச்சி வைரஸ்கள், ஒரு புதிய ஆஸ்ட்ரோ வைரஸ், இது வயிற்றுப் பூச்சிகள் போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. 2 புதிய பார்வோ வைரஸ்கள், இது காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். 2 புதிய பாப்பிலோமா வைரஸ்கள், அவை பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் மனிதர்களில் சில புற்றுநோய்கள் போன்ற நிலைமைகளுடன் தொடர்புடைய வைரஸ்கள். ராட்சத எலி மற்றும் சிக்கிம் எலி ஆகிய 2 எலி இனங்களில் புதிய பூச்சி வைரஸ்கள் மற்றும் பார்வோ வைரஸ்கள் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

https://thinakkural.lk/article/279221

  • கருத்துக்கள உறவுகள்

கீழே இந்த செய்தியோடு தொடர்பான ஆய்வறிக்கை இணைப்பு, வேலை செய்யும் என நினைக்கிறேன்.

https://www.sciencedirect.com/science/article/pii/S1995820X23001013
சுருக்கமாக, இது வைரசுகளைக் கண்டு பிடித்த ஆய்வென்பதை விட, வைரசுகள் இருந்தமைக்கான ஆர்.என்.ஏ, டி.என்.ஏ (genomic) ஆதாரங்களை மட்டுமே கண்டு பிடித்திருக்கும் ஒரு குறுகிய ஆய்வு. அந்த Cov HMU 1 என்ற வைரஸ் கூட பெருச்சாளிகளில் இருக்கும் பல கொரனாவைரசுகளின் குடும்பத்தைச் சார்ந்தது. மனிதருக்குப் பாயுமா என்பது பற்றி எதுவும் இப்போது தெரியாது.

#அச்சத்தை அறிந்து கொள்வதால் வெல்வதே ஒரே வழி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.