Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆம்பளை அல்லது ஆண்மை என்றால் என்ன என்று யாருக்காவது தெரியுமா?

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்!

பெண்மை, பெண்ணியம், தாய்மை, தாய்க்குலம், கற்பு.. இப்படி பல்வேறு விதிகளை உருவாக்கி பெண்களை போட்டு வதைப்பவர்கள் ஏன் ஆம்பளை அல்லது ஆண்மை பற்றி பெரிதாக அலட்டுவது இல்லை என்று எனக்குள் ஒரு சிந்தனை. இதுபற்றி சிறிது நேரம் சிந்தித்தபோது கீழ்வரும் கேள்விகள் என் மனதில் ஓடின.. :unsure:

1. தாய்மை என்ற சொல்லிற்கு ஈடாக ஆண்களை பிரநிதித்துவம் செய்யும் ஏதாவது கனதியான சொல் இருக்கின்றதா? இல்லை என்றால் ஏன் இல்லை?

2. கற்பு என்ற சொல் ஆண்களுக்கும் பொருந்துமா? ஆண்களிற்கு கற்பு இருக்கின்றதா? ஆண்கள் கற்பழிக்கப்படமுடியுமா? ஆண்கள் கற்புடன் இருக்கத் தேவையில்லையா? பெண்கள் மட்டும் கற்புடன் இருந்தால் போதுமா?

3. ஆம்பளை என்றால் உண்மையில் யார்? ஆண்களிற்குரிய உடற்கூற்று அமைப்புக்களை கொண்டு உள்ளவர்கள் எல்லாம் ஆம்பளை என்று அழைக்கப்படமுடியுமா?

4. ஆண்மை என்பது என்ன? பிள்ளையை பெற்றுக்கொள்ள முடியாத ஒருவருக்கு ஆண்மை இருக்கின்றதா? வயது முதிர்ந்த கிழவனுக்கு ஆண்மை இருக்கின்றதா? :lol: ஒருவரால் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தாலும் அவர் உடல் ரீதியாக மிகவும் பலசாலியாக இருந்தால் அவருக்கு ஆண்மை இருப்பதாக கூறமுடியுமா? ஆண்மைக்கும் உடல் பலத்திற்கும், அல்லது வலிமைக்கும் தொடர்பு உள்ளதா?

5. பெண்களிற்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று ஏதேதோ குணங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு ஆண்களிற்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும்? அவை எவை? அல்லது அப்படி ஒன்றும் இல்லையா? அப்படி ஆண்களுக்கும் குணங்கள் இருந்தால் பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை பிரபலம் அடைந்ததுபோல் ஆண்களின் குணங்கள் ஏன் பிரபலம் அடையவில்லை? ஆண்களிற்கு இருக்கவேண்டிய குணங்களை ஏன் ஒருவரும் சுட்டிக்காட்டுவதில்லை? பெண்கள் பற்றி கதைக்க வெளிக்கிடும்போது எதற்கு எடுத்தாலும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று கோரசாக பாட்டு பாடுபவர்கள் ஆண்கள் பற்றி கதைக்க வெளிக்கிடும் போது இதற்கு ஈடாக ஏன் இவ்வாறு ஒரு சொற்பதங்களையும் பாவிப்பதில்லை?

6. நான் கற்பு இழந்துவிட்டேன் அல்லது பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுவிட்டேன் என பெண்கள் புலம்புவது போல் ஏன் ஆண்கள் நான் கற்பு இழந்துவிட்டேன் அல்லது பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு விட்டேன் என்று புலம்புவது இல்லை?

7. புருச லட்சனம் என்று சொல்லப்படுவது என்ன? இது கலியாணம் கட்டிய ஆண்களுக்கு மட்டுமா பொருந்தும்? ஏனென்றால், புருசன் என்று கூறப்படுவது கணவனை தானே? புருசன் என்பது முதலில் தமிழ் வார்த்தையா? அப்படி என்றால் பெண்சாதி லட்சனம் இப்படியும் ஏதாவது இருக்கிதா? ;)

8. ஆண்மையுடன் இருப்பது என்பது உண்மையில் என்ன? ஆண்மையுடன் இருப்பது எப்படி? வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் ஆண்மையுடன் இருக்கமுடியுமா? வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்காக ஒருவரை ஆண்மையுடன் இருக்கிறார் என்று கூறமுடியுமா? குடிகாரர், போதைப்பொருட்களிற்கு அடிமையானவர்களிற்கு ஆண்மை இருக்கின்றதா? திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், பெண்களை கற்பழித்தவர்கள் இவர்களிற்கு ஆண்மை இருக்கின்றதா? காதலில் தோல்வி அடைந்தவர்களிற்கு ஆண்மை இருக்கின்றதா? :D

9. ஆண்மைக்கும் தனிமனித ஒழுக்கத்திற்கும் சம்மந்தம் இருக்கின்றதா? ஒழுக்கம் அற்றவர்கள் ஆம்பளையாக அல்லது உண்மையான ஆண்மையுடன் இருக்கமுடியுமா?

10. ஆண்மை என்பது வெறும் உடல் சம்மந்தமானதா அல்லது உள்ளம் சம்மந்தமானதா? அல்லது இரண்டினதும் கலவையா?

11. ஆண்மையை அளவுகோலிட முடியுமா? ஒருவருக்கு ஆண்மை உள்ளதா என்று எப்படி கண்டுபிடிப்பது? :D இரண்டு பேரை ஆண்மையின் அடிப்படையில் ஒப்பீடு செய்யமுடியுமா? அதாவது இரண்டு பேரில் யாருக்கு ஆண்மை அதிகம் என்று? :P

12. பெண்களை எடுத்துக்கொண்டால் பல சமயங்களில் இவ்வாறு சொல்வார்கள், அல்லது சொல்லப்படுவார்கள்...

ஒரு பொம்பிளை இப்படி செய்யலாமா?

நான் ஒரு மொம்பிளை இப்படி செய்ய ஏலுமா?

அவ ஒரு பொம்பிளை இப்பிடி கதைச்சிருக்க கூடாது!

ஒழுங்கா பொம்பிளைப் பிள்ளை மாதிரி இரு!

இதேபோல் ஏன் ஆண்களிற்கும் இப்படி சொல்லப்படுவதில்லை அல்லது சொல்வதில்லை?

ஒரு ஆம்பிளை இப்படி செய்யலாமா?

நான் ஒரு ஆம்பிளை இப்படி செய்ய ஏலுமா?

அவன் ஒரு ஆம்பிளை இப்பிடி கதைச்சிருக்க கூடாது!

ஒழுங்கா ஆம்பிளைப் பிள்ளை மாதிரி இரு!

உங்கள் யாருக்காவது இவற்றுக்கு விடைகள் தெரிந்தால் இங்கே அறியத்தாருங்கள். :D

நன்றி!

பி/கு: இந்த கருத்தாடல் சற்று சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை இனியபொழுது பகுதியில் ஒட்டுகின்றேன். மேலும் சமூகச் சாளரம் பகுதியில் பந்தி, பந்தியாக எழுதி இதை விவாதம் செய்வது நல்லதாக படவில்லை. :P

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள பெண்கள் கற்பலிப்பது என்பது மிக குறைவு அதனால ஆண்கள் புலம்புவதில்ல...

அட பாவிங்களா யாழ் களத்த இப்படி ஆக்கிட்ங்களே..அங்க தொட்டு இங்க தொட்டு இப்ப இதுக்கும் ஒரு தலைப்பா...

இதுக்கும் வாக்கெடுப்பு நடத்தலாமே...

இதுல எத்தனை பேர் நீஙகள் ஆண் என்று நினைக்கிறீர்கள்?

இதுல எத்தன பேர் நீங்கள் கற்பளிக்க பட்டதா நினைக்கிறிங்க?;

ஆண்களுக்கான குணாசியங்கள் உங்கிடம் கானப்படுதா?

இப்படிலாம் போட்டு வாக்களிக்க சொல்லி கேளுங்கப்பா..

கலைஞன் கேட்கும் கேள்விகளை பார்த்தால் அவரின் நிலையினை ஊகிக்ககூடியதாக உள்ளது. என்ன செய்ய எல்லாம் அவன் செயல்.

  • தொடங்கியவர்

நளன், இதுதானே கூடாத பழக்கம் எண்டு சொல்லிறது. உங்களுக்கு விடை தெரியாவிட்டால் இப்படியா சொல்வது? :D

சுண்டல், உங்கள் நியாயமான கோரிக்கையை பரிசீலனை செய்து கொண்டு இருக்கின்றோம். தேவைப்பட்டால் விரைவில் கருத்துக்கணிப்பு ஒன்றை ஆரம்பிக்கின்றோம். :P

:D:lol::lol::D ஆண்களே கதையுங்கோ.

இல்லை கலைஞன் நான் சும்மா தான் அப்படி கூறினேன். உங்களுடைய ஆக்கங்கள் மனிதரை சிந்திக்கத்தூண்டும் கருத்துக்களாகவே அமைகின்றது. இந்த கருத்தின் பின் எத்தனையோ பேர் தம்மைத்தானே சோதித்துப்பார்த்திருப்பர் என்பதில் ஐயம் இல்லை. நிச்சயமாக

1) எப்படி திருமணமான பெண்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர

  • கருத்துக்கள உறவுகள்

என்னமாச் சிந்திக்கிறீங்க! (சும்மா தான் :D ). ஆனால் ஏதோ சீர்திருத்தக் கருத்தைச் சொல்ல வாற மாதிரித்தான் தெரியுது மாப்பு. சில கேள்விகளுக்குப் பதில் பதியும் போது கள விதிகளை இலகுவாக மீறி எச்சரிக்கை வாங்க வேண்டிய நிலை வரும் போலவும் இருக்கு. எனக்குத் தெரிந்தவை இவை:

ஆண்மை என்பதும் பெண்மை என்பதும் மருத்துவ ரீதியாக வரையறுக்கப்பட்ட பதங்கள் அல்ல. அதனால் அவற்றை ஒப்ஜெக்ரிவாக அளவிட முடியாது என்றே நினைக்கிறேன். நளன் சொல்வது போல ஆண்மைக் குறைவு என்று தமிழில் நாம் சொல்வது மருத்துவ ரீதியில் ஆண்மைக்குறைவாக நோக்கப் படுவதில்லை. மலட்டுத்தன்மை வீரியமின்மை எனத் தனியான பதங்கள் பாவிக்கப் படுகின்றன.பாலியல் உறவு தொடர்பில் பெண்களுக்கும் உடற்குறை பாடுகள் ஆணைப் போலவே ஏற்படுகின்றன. அக்குறைபாடுகளை பெண்மைக் குறைவு என்று தமிழிலும் அழைப்பதில்லை. பெண்ணின் பாலியல் தேவைகளை நமது கலாச்சாரம் குறைத்து மதிப்பிடுவதால் அதைப் பெயரிடாமலே விட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.ஆக ஆண்மை பெண்மை என்பன சமூகவியல் சார்ந்த பதங்கள் என்றே நினைக்கிறேன். சமூகவியல் சார்ந்த பதமெனில் சமூக கலாச்சார ரீதியாக வெவ்வேறான வியாக்கியானங்களும் சாத்தியம். நமது நாட்டில் ஆண்மைக்கு அடையாளமாக இருக்கும் ஒரு விடயம் மேலை நாட்டில் மூடத் தனமாக இருக்கலாம்.பெண்மைக்கும் ஆண்மைக்கும் வெவ்வேறான முக்கியத்துவம் நம்மிடையே இருக்கக் காரணம் ஆணாதிக்க மனப் போக்காக இருக்கலாம். பெண்ணை அடக்கி வைக்கவும் ஆணைக் கட்டுகளின்றி விடவும் இந்த வேறு பட்ட முக்கியத்துவம் பயன் படுகிறது என்றே நினைக்கிறேன்.பாலியல் வல்லுறவு என்ற வார்த்தையே இப்போது வழக்கொழிந்து வரும் ஒன்று. பாலியல் துன்புறுத்தல் என்பதே சரியான பதம்.ஆணோ பெண்ணோ பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக முடியும்.குவான்டனோமோவில் அமெரிக்கப் படையினர் இதைச் செய்து காட்டியிருக்கிறார்கள்.

ஆண்மை = ''வீரம்காட்டுதல்'' ;) :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மை = ''வீரம்காட்டுதல்'' ;) :D

அப்ப நம்ம ஆனந்த சங்கரி, கறுனா, டக்கிளஸ், சித்தார்த்தன் இவர்களும்ஆம்பிளையாய்யா? என்னய்யா கதைக்கிறீங்க.... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞா,

தங்கள் கேள்வியில் தப்பேதும் இல்லை மிக ஆழமாக சிந்திக்கின்றீர்கள் என்பதைத் தவிர!

சரி நேரே விடயத்திற்கு வருகின்றேன்.

என்னைப்பொறுத்தவரை, ஆண்மை என்பது பெண்மையை மதிப்பது அதைப்போலவே பெண்மை எனப்படுவதும் ஆனால் தாங்கள் கேட்ட கேள்விக்கான விடை பெண்களுக்குரிய அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு என்பது போல்,வீரம்,சூரம்,தானம்,தியாகம

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை சீண்டி எழுதுவதற்கு ஏற்ற ஒரு தலைப்பு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில கலைஞன் நீங்கள் பயன்படுத்தியிருக்கிற கற்பழித்தல் என்ற சொல்லின் அர்த்தம் என்ன என நீங்கள் விளங்கி கொண்டிருக்கிறியள் ?

உடன்பாடற்ற பாலியல் உறவு இதைத்தான் நீங்கள் கற்பழித்தல் என்கிறீர்களா?

எங்கோ படித்த நினைவு - 2000 வருடங்களாக தமிழன் கற்பிளை பெண்களின் தொடையிடுக்கில்த் தான் வைத்து காப்பாற்றி வருகிறானாம்.

ஒரு பெண்ணுடனான பாலியல் உறவின் போது அவளின் கற்பு இல்லாது செய்யப்படுகின்றதா?

ஆமெனில்

மறுமணம் செய்யும் பெண்கள் கற்பிழந்தவர்களா?

தன் செயலொன்றின் மூலம் தனக்கும் கட்டாயமாக பிறருக்கும் எந்த பங்கமும் தீங்கும் வராமல் நடந்து கொண்டால் அதுவே போதும். மற்றபடி கற்பைத் தூக்கி குப்பையில போடுங்கோ.

கற்பென்பதே இல்லை.

பிறகெப்படி அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாய் முடியும்.

ஆண்மை எனப்படுவது பிறன்மனை நோக்காமை என வள்ளுவர் சொல்லியுள்ளார்.

வணக்கம் ஜெனரல் !!!

லேடிஸ் & ஜென்டில்மன்ஸ் என்ன பார்கிறீங்க நாம தான் அதே ஜம்மு பேபி தான் சரி ஜெனரல் இம்பொட்டன்ட் டிஸ்கசன் ஒன்று நடத்துகிறார்.........ஏதோ பேபிக்கு தெரிந்தளவிள விடை சொல்லுறேன்........

1. தாய்மை என்ற சொல்லிற்கு ஈடாக ஆண்களை பிரநிதித்துவம் செய்யும் ஏதாவது கனதியான சொல் இருக்கின்றதா? இல்லை என்றால் ஏன் இல்லை?

பேபி அறிந்தவகையில இல்லை என்றே சொல்லலாம் (சேம் சேம் பப்பி சேம் ஆண்கள் :lol: )

இல்லை என்று சொன்னா காரணம் சொல்ல வேண்டுமா இப்படி தெரிந்திருந்தா நான் ஆம் என்றே சொல்லி இருபேனல!! :P

சரி சொல்லுறேன் சரியா பிழையா தெரியாது எனக்கு தெரிந்தவகையில்.............ஒரு பிள்ளை பிறந்தவுடன் முதல் அம்மா என்று தான் கதறும் இது மனிதனா இருந்தாலும் சரி மிருகமாக இருந்தாலும் சரி பொருந்தும்..தாய்மை அடைய செய்வதில் வேண்டும் என்றா ஆண்கள் கெட்டிகாரங்களாக இருக்கலாம் :P ஆனால் 10 மாதம் தனது கருவில் சுமந்து பெறுகிறாள்...பெறுவதுடன் மட்டும் அவள் கடன் முடியவில்லை பிள்ளையை வளர்த்து ஆளாக்கும் வரை அவள் ஓய்வதில்லை...........பிள்ளை பிழை செய்தா தாய் வளர்த்த வளர்ப்பு சரியில்லை என்று தான் சொல்லுவார்கள் ஒருத்தரும் தந்தை வளர்த்த வளர்ப்பு சரியில்லை என்று சொல்வதில்லை...........தகப்பன் கூட "என்ன தான் வளர்த்து வைத்திருகிறாய்" பிள்ளையை என்று தாயை கண்டிப்பார் அதில் இருந்து தாய்மையை பற்றி சொல்ல வேண்டுமா!!அதை பற்றி சொல்ல வார்த்தை இல்லை........ :lol:

2. கற்பு என்ற சொல் ஆண்களுக்கும் பொருந்துமா? ஆண்களிற்கு கற்பு இருக்கின்றதா? ஆண்கள் கற்பழிக்கப்படமுடியுமா? ஆண்கள் கற்புடன் இருக்கத் தேவையில்லையா? பெண்கள் மட்டும் கற்புடன் இருந்தால் போதுமா?

நிச்சயமாக ஆண்களுக்கு பொருந்தும்

ஆமாம் நிச்சயமாக ஆண்கள் கற்பழிக்கபடமுடியும் யாழில் கூட பல செய்திகள் வந்திருந்தன "மாணவனை கற்பழித்த ஆசிரியர் என்று கூட செய்தி வந்திருந்தது" ஆகவே ஆண்களிற்கும் கற்பு என்பது இருகிறது.........

யார் சொன்னது பெண்கள் மட்டும் கற்புடன் இருந்தால் காணும் என்று...........ஒரு ஆண் தனக்கு வரபோகிறாவா கற்புள்ளவராக வரவேண்டும் என்று நினைகிறானோ அதை போல் அவனும் கற்புள்ளவானாக இருக்க வேண்டும் இல்லாட்டி வாறவள் எப்படிபட்டவள் என்று சிந்திக்க கூடாது!! :lol:

(இது இருபாலருக்கும் பொதுவான விடயம் தான் ஜெனரல்!!

3. ஆம்பளை என்றால் உண்மையில் யார்? ஆண்களிற்குரிய உடற்கூற்று அமைப்புக்களை கொண்டு உள்ளவர்கள் எல்லாம் ஆம்பளை என்று அழைக்கப்படமுடியுமா?

*ஆம்பிளை என்பவர்கள் தன்னை நம்பி வந்த மனைவியையும்,தன்னால உருவான குழந்தையும் கண்கலங்காம எவன் காப்பாற்றுகிறானோ அவன் தான் ஆம்பிளை!!உடற்கூற்றை வைத்து கூறமுடியாது உடலை பார்த்து எடைபோட கூடாது தன் உடலை தன் மனைவிக்கு மட்டும் தான் என்றிருப்பவன் ஆம்பிளை என்று கூறலாம்........

கொஞ்சநாளைக்கு முன் ஒரு கதை வாசித்தனான் அதில முகமதுநபி அவர்கள் கஜிதாநாயகியின் அழகை ரசித்துவிட்டார் உடனே தன் மனதை மாற்றி வீட்டிற்கு வந்து தன் மனைவியுடன் இன்பமாக இருந்தார் என்று வாசித்தேன் இது உண்மையோ அல்லது பொய்யோ தெரியாது ஆனா இந்த கதை பொருந்தும் எல்லாவற்றிகும் என்று நினைகிறேன்!!

4. ஆண்மை என்பது என்ன? பிள்ளையை பெற்றுக்கொள்ள முடியாத ஒருவருக்கு ஆண்மை இருக்கின்றதா? வயது முதிர்ந்த கிழவனுக்கு ஆண்மை இருக்கின்றதா? ஒருவரால் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தாலும் அவர் உடல் ரீதியாக மிகவும் பலசாலியாக இருந்தால் அவருக்கு ஆண்மை இருப்பதாக கூறமுடியுமா? ஆண்மைக்கும் உடல் பலத்திற்கும், அல்லது வலிமைக்கும் தொடர்பு உள்ளதா?

பிள்ளை பெறுவது ஆண்மை இல்லை அதை எல்லாரும் தான் செய்வார்கள்..........மிருகங்கள் கூட தான் செய்கிறது அதை ஆண்மை என்று சொல்லமுடியுமா!!மனவலிமையுடன் எதையும் தாங்கி கொள்வதை ஆண்மை என்று எடுக்கலாம் என்று நினைகிறேன்!!இவ்வாறு இருக்கும் பெண்கள் கூட ஆண்மை கட்டகரிகுள் வரலாம் என்பது என் ஜோசனை தங்கள் யோசனை என்ன ஜெனரல்??

வயது முதிர்ந்த கிழவன் அந்த வயதிலும் தன்னால் வாழ்வில் போராட முடியும் என்ற வெறியுடன் தன்ட வாழ்கையை கொண்டு செல்லாவயின் அது ஆண்மை..............பிள்ளை கூட பெறமுடியும் ஏனெனில் சுண்டல் அண்ணா கடைசியா இணைத்த செய்தியில் 99 வயோதிபருக்கு பிறந்த குழந்தை என்று போட்டிருந்தார் அல்லவா!!

பிள்ளை பெறமுடியாதவனிற்கு அது தான் வாழ்வின் எல்லை என்று இல்லை ஆகவே அவனிற்கு ஆண்மை இல்லை என்று சொல்லமுடியாது!!

உடல்பலம் தற்போது பெண்களுக்கும் இருக்குது அப்ப அதை ஆண்மை என்று சொல்லமுடியுமா நிச்சயமாக இல்லை உடல் பலத்தை வைத்து சொல்ல முடியாது......பிற பெண்களை மதிக்க தெரிந்தவனிற்கு ஆண்மை இருக்குது என்று கூறமுடியும்!!

5. பெண்களிற்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று ஏதேதோ குணங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு ஆண்களிற்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும்? அவை எவை? அல்லது அப்படி ஒன்றும் இல்லையா? அப்படி ஆண்களுக்கும் குணங்கள் இருந்தால் பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை பிரபலம் அடைந்ததுபோல் ஆண்களின் குணங்கள் ஏன் பிரபலம் அடையவில்லை? ஆண்களிற்கு இருக்கவேண்டிய குணங்களை ஏன் ஒருவரும் சுட்டிக்காட்டுவதில்லை? பெண்கள் பற்றி கதைக்க வெளிக்கிடும்போது எதற்கு எடுத்தாலும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று கோரசாக பாட்டு பாடுபவர்கள் ஆண்கள் பற்றி கதைக்க வெளிக்கிடும் போது இதற்கு ஈடாக ஏன் இவ்வாறு ஒரு சொற்பதங்களையும் பாவிப்பதில்லை?

ஆண்களிற்கு சரி பெண்களிற்கு சரி எந்தவித குணமும் தேவை இல்லை வெளியால நடித்து கொண்டு உள்ளுகுள் வேறொன்று செய்வதை விடை மற்றவர்களுக்காக வாழாம தங்களிற்காக வாழ்வது சிறந்தது இது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி..........ஆகவே இத்தகைய குணங்கள் தேவையில்லை என்பது என் கருத்து!! :lol:

6. நான் கற்பு இழந்துவிட்டேன் அல்லது பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுவிட்டேன் என பெண்கள் புலம்புவது போல் ஏன் ஆண்கள் நான் கற்பு இழந்துவிட்டேன் அல்லது பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு விட்டேன் என்று புலம்புவது இல்லை?

பெண்கள் புலம்பினா அது மனிதாபிமானம் ஆனால் ஆண்கள் புலம்பினா கேவலமாக சமுதாயம் பார்க்கும் என்ற எண்ணம்!!ஆனால் இவ்வாறு பல இடங்களிள் நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைகிறேன்!

7. புருச லட்சனம் என்று சொல்லப்படுவது என்ன? இது கலியாணம் கட்டிய ஆண்களுக்கு மட்டுமா பொருந்தும்? ஏனென்றால், புருசன் என்று கூறப்படுவது கணவனை தானே? புருசன் என்பது முதலில் தமிழ் வார்த்தையா? அப்படி என்றால் பெண்சாதி லட்சனம் இப்படியும் ஏதாவது இருக்கிதா? ;)

குடும்பத்தை தலைமை தாங்கி கொண்டு செல்வதை புருசலட்சணம் ஆக பழையகாலத்தில் சொன்னார்கள் அது இன்றும் புலக்கத்தில் இருகிறது ஆனா இன்று அது தேவையில்லை என்று நினைகிறேன்........பென்ணாட்டி இலட்சினம் என்று இல்லை என்று நினைகிறேன் இவை யாவும் தற்போது தேவையில்லாத ஒன்றாகவே நான் நினைகிறேன்.......கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து விட்டு கொடுத்து நடந்தாலே அது எத்தனையோ இலட்சினதிற்கு சமன் என்பது என்னுடைய கருத்து............ :)

8. ஆண்மையுடன் இருப்பது என்பது உண்மையில் என்ன? ஆண்மையுடன் இருப்பது எப்படி? வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் ஆண்மையுடன் இருக்கமுடியுமா? வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்காக ஒருவரை ஆண்மையுடன் இருக்கிறார் என்று கூறமுடியுமா? குடிகாரர், போதைப்பொருட்களிற்கு அடிமையானவர்களிற்கு ஆண்மை இருக்கின்றதா? திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், பெண்களை கற்பழித்தவர்கள் இவர்களிற்கு ஆண்மை இருக்கின்றதா? காதலில் தோல்வி அடைந்தவர்களிற்கு ஆண்மை இருக்கின்றதா?

தோல்வி அடைந்தவர்கள் எல்லாம் ஆண்மை அற்றவர்கள் என்று கூறமுடியாது வெற்றி பெற்றவர்கள் எல்லாரும் சிறந்த ஆண்மை உள்ளவர்கள் என்று கூறவும் முடியாது ...............தோல்வி பெற்றவன் தோல்வி மூலம் வெற்றி பெற எத்தணிக்கிறான் என்றா அவனிடம் ஆண்மை உள்ளது..........வெற்றி பெற்றவன் சோம்பேறியாக இருக்காது அடுத்த வெற்றியை நோக்கி சென்றால் அவனிடம் ஆண்மை இருகிறது என்றே கூறலாம்....இது காதலோ அல்லது வேறேதுவிற்கும் பொருந்தும் என்று நினைகிறேன்!!

நிச்சயமாக கற்பழித்தவருக்கு ஆண்மை இல்லை என்றே சொல்ல முடியும்!!குடிகாரர்கள் மற்றும் போதை பொருள் மற்றும் திருடர்களிற்கு ஆண்மை இல்லை என்று சொல்லலாம் அது தான் இவ்வாறு தங்களை தானே அழித்து கொள்கிறார்கள்......ஆனால் எல்லா குடிகாரர்களையும் சேர்க்கவும் முடியாது சிலர் எல்லாவற்றிலும் கவனமாக இருப்பார்கள்........

9. ஆண்மைக்கும் தனிமனித ஒழுக்கத்திற்கும் சம்மந்தம் இருக்கின்றதா? ஒழுக்கம் அற்றவர்கள் ஆம்பளையாக அல்லது உண்மையான ஆண்மையுடன் இருக்கமுடியுமா?

நிச்சயமாக இருகிறது,ஒழுக்கமற்றவர்கள் பேச்சளவி மட்டும் தான் ஆம்பிளையாக கருதபடுவார்கள் என்பது என்னுடைய பதில்!!

10. ஆண்மை என்பது வெறும் உடல் சம்மந்தமானதா அல்லது உள்ளம் சம்மந்தமானதா? அல்லது இரண்டினதும் கலவையா?

ஆண்மை என்பது உடல் மற்றும் உள்ளம் சம்மந்தபட்டதாகவே நான் பார்கிறேன்.........

11. ஆண்மையை அளவுகோலிட முடியுமா? ஒருவருக்கு ஆண்மை உள்ளதா என்று எப்படி கண்டுபிடிப்பது? இரண்டு பேரை ஆண்மையின் அடிப்படையில் ஒப்பீடு செய்யமுடியுமா? அதாவது இரண்டு பேரில் யாருக்கு ஆண்மை அதிகம் என்று?

ஜெனரலே உங்கள் அம்மா உங்கள் மேல் கொண்ட பாசத்தை அளவிடமுடியுமா ...........அல்லது யாழ்களத்தில் பேபி மேல் (யாரை மாற்றலாம்) சரி நிலா அக்கா :P என் மேல் கொண்ட பாசத்தை அளவிட முடியுமா அல்லது டங்கு அண்ணா தான் என்மேல் கொண்ட பாசத்தின் அளவை :D அளவிடமுடியுமா அதை போல் தான் இதுவும் ஜெனரலே!!

12. பெண்களை எடுத்துக்கொண்டால் பல சமயங்களில் இவ்வாறு சொல்வார்கள், அல்லது சொல்லப்படுவார்கள்...

ஒரு பொம்பிளை இப்படி செய்யலாமா?

நான் ஒரு மொம்பிளை இப்படி செய்ய ஏலுமா?

அவ ஒரு பொம்பிளை இப்பிடி கதைச்சிருக்க கூடாது!

ஒழுங்கா பொம்பிளைப் பிள்ளை மாதிரி இரு!

இதேபோல் ஏன் ஆண்களிற்கும் இப்படி சொல்லப்படுவதில்லை அல்லது சொல்வதில்லை?

ஒரு ஆம்பிளை இப்படி செய்யலாமா?

நான் ஒரு ஆம்பிளை இப்படி செய்ய ஏலுமா?

அவன் ஒரு ஆம்பிளை இப்பிடி கதைச்சிருக்க கூடாது!

ஒழுங்கா ஆம்பிளைப் பிள்ளை மாதிரி இரு!

அது இயலாமையின் வெளிபாடாக தான் பார்கிறேன் எல்லாரும் இப்படி இல்லை சிலர் தான் இவ்வாறு கதைப்பார்கள் அவர்களை கண்டு கொள்ளாமவிடுவது தான் சிறந்தது என்று நினைகிறேன்!!

ஆண்மையை பற்றி பேபிக்கு தெரிந்ததை சொல்லி சென்றிருகிறேன் இந்த வாய்ப்பினை வழங்கிய ஜெனரலிற்கு மிக்க நன்றிகள்!!

குருவே எப்படி சொன்னது சரியோ அல்லது பிழையோ ஏதோ நமக்கு தெரிந்ததை சொல்லி பார்தேன் நீங்க தான் சோல்லி இருகிறீங்க போட்டியில வெற்றி பெறுறது முக்கியமில்லை பங்குபற்றுவது தான் முக்கியம் என்று..........

ஜம்மு பேபி பஞ்-

கண்ணா உடல் பலம் ஆண்மை இல்லை மனபலம் தான் ஆண்மை!!

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

எல்லாரது கருத்துக்களிற்கும் மிக்க நன்றி!

அதிலும் ஜெனரலின் விரிவான விளக்கங்களிற்கு ஸ்பெசல் நன்றி! ஜெனரல், நீங்கள் இப்படி எல்லாம் எழுதியபடியால் யாழ் பங்குச்சந்தையில் உங்கள் விலைச்சுட்டெண் திடீரென அதிகரித்து விட்டது போன்ற பிரமை எனக்குள் ஏற்படுகின்றது. :lol: :P

என்றாலும் நீங்கள் கூறிய பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை. பிறகு ஆறுதலாக அவற்றை விபரிக்கின்றேன்.

மேலும், இனியாவது நீங்கள் ஒரு ஆம்பளை என்று இங்கு உள்ளவர்கள் நம்புவார்கள். உங்களைப் போல் யாழில் வேறு ஒருவரும் துணிந்து இதுபற்றி விரிவாக கருத்துகூற முன்வராதது நீங்கள் எனக்கு அடுத்தபடியாக யாழில் ஒரு சிறந்த ஆம்பளையாக, ஆண்மகனாக ஆண்மையுடன் யாழில் இருக்கின்றீர்கள் என்று விளங்குகின்றது. :lol: :P வாழ்த்துக்கள்! :lol:

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.