Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டு புகைப்பட கலைஞருக்கு சர்வதேச விருது - யார் அவர்? எதை படம்பிடித்தார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புகைப்பட கலைஞர் விருது

பட மூலாதாரம்,SRIRAM MURALI/WPY

54 நிமிடங்களுக்கு முன்னர்

ஒரு வினோதமான மற்றும் குதிரைலாட நண்டின் படம், லாரன்ட் பாலேஸ்டாவுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வனஉயிர் புகைப்படக் கலைஞர் (WPY) என்ற விருதைப் பெற்றுத்தந்துள்ளது.

தங்க நிறத்தில் உள்ள இந்த நண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் பங்கடாலன் தீவில் தண்ணீருக்குக் கீழ் பகுதியில் அடிமட்ட சேற்றுக்கு மிக அருகில் தவழ்ந்துகொண்டிருப்பதை நாம் காணலாம்.

இந்த நண்டுக்கு அருகே சிறிய மீன்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன. நண்டின் அசைவுகள் காரணமாக வண்டலில் உள்ள மண் அசைவதன் மூலம் ஏதாவது உணவு வெளிப்படலாம் என்ற எண்ணத்தில் அந்த மீன்கள் அங்கே காத்திருக்கின்றன.

இந்தப் புகைப்பட விருது வழங்கும் நிறுவனத்தின் 59 ஆண்டு வரலாற்றில் இரண்டு முறை போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாவது புகைப்படக் கலைஞர் என்ற பெருமையை பலேஸ்டா பெற்றுள்ளார்.

2021 ஆம் ஆண்டில், மீன்கள் முட்டையிடும் காட்சியை படம்பிடித்ததற்காக அவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

புகைப்படக் கலைஞரும் கடல் உயிரியலாளருமான லாரன்ட் பாலேஸ்டாவுக்கு லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இரவு விருந்தின் போது இந்த விருது அளிக்கப்பட்டது.

வன உயிர்  புகைப்படக் கலைஞர் விருது

பட மூலாதாரம்,LAURENT BALLESTA/WPY

படக்குறிப்பு,

லாரன்ட் பாலேஸ்டாவின் குதிரைலாட நண்டின் படம் முதல் பரிசை வென்றது.

நடுவர் குழுவின் தலைவரான கேத்தி மோரன், வெற்றிபெறும் படத்திற்கு நான்கு குணாதிசயங்கள் தேவை என்று கூறினார். "அழகியல்", "கணம்", "விவரிப்பு" மற்றும் மிக அதிகமாகச் சொன்னால் "பாதுகாப்பு விளிம்பை" வெளிப்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும். பாலேஸ்டாவின் படத்தில் அந்த "ரகசியம்" இருந்தது.

"லாரன்ட்டின் படத்திற்கு ஒரு ஒளிர்வு உள்ளது," என மோரன் பிபிசி நியூஸிடம் கூறினார்.

"இது உண்மையில் ஒரு வேற்றுக்கிரகவாசி கடற்பரப்பில் மிதப்பது போன்ற காட்சியைக் காட்டுகிறது. ஆனால் நீங்கள் பின்வாங்கி, கடல் ஆரோக்கியத்திற்கும் மனித ஆரோக்கியத்திற்கும் இந்த உயிரினங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும்போது, இந்தப் படம் அனைத்தையும் உள்ளடக்கியது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதனால், அதை எங்களால் கடந்து செல்ல முடியவில்லை."

 
வன உயிர்  புகைப்படக் கலைஞர் விருது

பட மூலாதாரம்,CARMEL BECHLER/WPY

படக்குறிப்பு,

கார்மல் பெச்லர், 15-17 வயதுக்குட்பட்ட பிரிவில் கூடுதலாக ஜூனியர் கிராண்ட் பரிசை வென்றார்

ட்ரை-ஸ்பைன் குதிரைலாட நண்டு 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறது. ஆனால் இப்போது இந்த வகை நண்டுகளின் வசிப்பிடங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதுடன் உணவுக்காகவும், தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கு அதன் ரத்தம் பயன்படுத்தப்படுவதால் அதற்காகவும் இந்த வகை நண்டுகளைப் பிடிப்பது அதிகரித்துள்ளது. ஆனால் பங்கடாலன் தீவைச் சுற்றியுள்ள ஒரு சிறிய கடல் காப்பகத்தில், அதற்குத் தேவையான முழுபாதுகாப்பும் கிடைக்கிறது.

"இந்தப் படத்தை எடுப்பதில் உள்ள தொழில்நுட்ப ரீதியான சவால் என்னவென்றால், சரியான வேகத்தைக் கண்டறிவதாகும். ஏனெனில் அமைதியான குதிரைலாட நண்டை அப்படியே ஒரே இடத்தில் உறைய வைக்க வேண்டும். ஆனால் உற்சாகமாக இருந்த சிறிய மீன்கள் உறைந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதுடன் அந்தக் காட்சியைக் காட்டவேண்டும் என்பதால் இந்த படத்தை எடுத்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது," என்று பாலேஸ்டா கூறினார்.

"அவற்றிற்கிடையேயான இந்த வேறுபாட்டை நான் காட்ட விரும்பினேன் - ஒன்று சக்தி வாய்ந்தது என்ற அதே நேரம் மிகவும் மெதுவாக இருந்தது. மற்றவை வேகமாக இருந்தாலும் மிகவும் பலவீனமாக இருந்தன."

இந்த ஆண்டின் இளம் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் என்ற பட்டத்தை இஸ்ரேலைச் சேர்ந்த கார்மல் பெச்லர் (17) பெற்றுள்ளார்.

பாழடைந்த கட்டிடம் ஒன்றின் ஜன்னலில் இரண்டு ஆந்தைகள் அமர்ந்திருந்த அவரது படம், அவரது தந்தையுன் காரில் சென்ற போது ஜன்னல் வழியாக படமாக்கப்பட்டது.

முன்புறத்தில் வேகமாக நகரும் வாகனத்தின் ஒளிக் கோடுகள் பறவைகளின் நிலையான பார்வைக்கு முரணாக உள்ளன.

"முதல் முயற்சியிலேயே இந்த காட்சி எனக்குக் கிடைத்துவிடவில்லை. ஒரு சில முயற்சிகளுக்குப் பின்னரே இந்த அழகான படம் கிடைத்தது," என பெச்லர் கூறினார். "விளக்குகளை சரியாகப் படமெடுப்பது மிகவும் கடினமான விஷயம். ஏனென்றால் அவை முழுக் காட்சியிலும் செல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். அதே நேரம் அவை மிகவும் பிரகாசமாகவும் இருக்கக்கூடாது. அது மங்கலாக்கப்படாமலும் இருக்கவேண்டும். இதற்காக நான் டைமரைப் பயன்படுத்தினேன். பின்னர் அந்த தருணம் கிடைக்கும் வரை தொடர்ந்து படங்களை எடுத்துக்கொண்டே இருந்தேன்."

இந்த ஆண்டு புகைப்படப் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற மற்ற வகை வெற்றியாளர்களில் சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

 
வன உயிர்  புகைப்படக் கலைஞர் விருது

பட மூலாதாரம்,JUAN JESÚS GONZALEZ AHUMADA/WPY

படக்குறிப்பு,

விருந்துண்ணும் தலைப்பிரட்டைகளை ஜுவான் ஜெசஸ் கோன்சலஸ் அஹுமடா காட்சிப்படுத்தினார்.

விருந்துண்ணும் தலைப்பிரட்டைகளை ஜுவான் ஜெசஸ் கோன்சலஸ் அஹுமடா காட்சிப்படுத்தினார்.

ஜுவான் ஜேசுஸ் கோன்சலேஸ் அஹுமடா, இறந்த குருவி ஒன்றை விருந்தாக உண்ணும் தேரைக் குட்டிகளைப் (தலைப்பிரட்டைகளைப்) பார்த்தார். அவரது புகைப்படம், நீர்வாழ்வன மற்றும் ஊர்வன பிரிவில் விருது வென்றது.

தேரைக் குட்டிகள் (தலைப்பிரட்டைகள்) பொதுவாக பாசிகள், தாவரங்கள் மற்றும் சிறிய நீர்வாழ் முதுகெலும்புள்ள பிராணிகளை உண்ணும் பழக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. அவை வளர வளர, பெரும்பாலும் மாமிசத்தை மட்டுமே சார்ந்திருக்கும் வகையில் மாறுகின்றன. எனவே இதுபோன்ற ஒரு விருந்து வரும்போது, அவை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

 
வன உயிர்  புகைப்படக் கலைஞர் விருது

பட மூலாதாரம்,BERTIE GREGORY/WPY

படக்குறிப்பு,

ஆழ்கடலுக்குள் அலைகளை உருவாக்கி, பனியின் பாதுகாப்பில் இருக்கும் கடல் யானைகளை வெளியே கொண்டுவருவதில் ஓர்க்கா திமிங்கலங்கள் கில்லாடிகளாக உள்ளன.

பெர்டி கிரிகோரி, பிபிசியின் ஒன் தொடரான ஃப்ரோஸன் பிளானட் II-க்காக சில காட்சிகளைப் படம்பிடித்தார். அண்டார்டிக் கடலில் பனிக்கட்டிகளுக்கு இடையே பதுங்கியிருக்கும் சீல்களை வெளியில் வரச்செய்ய ஓர்கா திமிங்கலங்கள் முயன்ற காட்சிகளைப் படம் பிடித்தார். இந்தப் படம் பாலூட்டிகள் பிரிவில் விருது வென்றது.

கடல்-பனியின் பாதுகாப்பில் இருந்து அகற்றுவதற்காக,

"ஒவ்வொரு கடல் யானையைக் காணும் போதும் வித்தியாசமான உத்தியைப் பயன்படுத்தி பல ஓர்கா திமிங்கலங்கள் ஒன்றிணைந்து தண்ணீரில் பெரிய அலையை உருவாக்கி அந்த சீல்களை இடம் மாற்றம் செய்யும் முயற்சியை மேற்கொள்ளும். அதில் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட வகை அலையை உருவாக்க அவை வெவ்வேறு தந்திரங்களைக் கையாளுகின்றன. அதைக் காண்பதே எலும்பை உறையவைக்கும் அச்சத்தை ஏற்படுத்தும்," என்று கிரிகோரி பிபிசி செய்தியிடம் கூறினார்.

 
வன உயிர்  புகைப்படக் கலைஞர் விருது

பட மூலாதாரம்,AMIT ESHEL/WPY

படக்குறிப்பு,

சண்டையின் இறுதியில் ஒரு மலையாடு பணிந்ததால் இரண்டும் சிறிய காயங்களுடன் வேறு வேறு பாதையில் பிரிந்து சென்றன.

இஸ்ரேலின் ஜின் பாலைவனத்தில் இரண்டு ஆண் மலையாடுகளுக்கு இடையிலான இந்த சண்டையை அமித் எஷெல் பார்த்தார். அந்த சண்டை சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் அவற்றில் ஒரு ஆடு பணிந்தது. இந்த மலையாடுகள் இரண்டும் இலேசான காயங்களுடன் பின்னர் பிரிந்து சென்றன. எஷெலின் இந்த புகைப்படம் விலங்குகள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் பிரிவில் விருது வென்றது.

 
வன உயிர்  புகைப்படக் கலைஞர் விருது

பட மூலாதாரம்,LENNART VERHEUVEL/WPY

படக்குறிப்பு,

ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் நோய் காரணமாக இறந்து கிடந்த ஓர்கா திமிங்கலத்தின் படமும் விருது பெற்றது.

லெனார்ட் வெர்ஹூவெல் கடற்பிரதேசங்களைப் பற்றிய படப்பிரிவில் விருது பெற்றார். அவரது படம் ஒரு துன்பகரமான காட்சியைக் காட்டுகிறது. நெதர்லாந்து-பெல்ஜிய நாடுகளின் எல்லையில் உள்ள காட்ஸான் கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்ட அவரது படத்தில் இறந்து கிடக்கும் ஓர்கா திமிங்கலம் இடம்பெற்றுள்ளது. அதன் உடலைப் பரிசோதனை செய்த போது, அது கடுமையான ஊட்டச் சத்து குறைவாடு மற்றும் நோய் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.

 
வன உயிர்  புகைப்படக் கலைஞர் விருது

பட மூலாதாரம்,SRIRAM MURALI/WPY

படக்குறிப்பு,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட மின்மினிப் பூச்சிகளின் படத்துக்கு விருதுகிடைத்தது.

இந்தியாவின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் காடுகளில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த குறிப்பிடத்தக்க படம், மின்மினிப் பூச்சியைக் காட்டுகிறது. ஸ்ரீராம் முரளி என்பவர், பல்வேறு ஃபோக்கல் பாய்ன்ட்களுடன் 16 நிமிடங்களுக்கு மேல் மின்மினிப் பூச்சியின் காட்சிகளை படம்பிடித்தார். அவருடைய இந்தப் படம் முதுகெலும்பற்றவை பற்றிய படப் பிரிவில் விருது வென்றுள்ளது.

 
வன உயிர்  புகைப்படக் கலைஞர் விருது

பட மூலாதாரம்,LUCA-MELCARNE/WPY

படக்குறிப்பு,

பனிக்கட்டிகள் நிறைந்த இடத்தில் எப்போதும் போல தனது வேலையைச் செய்துகொண்டிருந்த மலையாட்டை மிகவும் சிரமமான முயற்சியின் மூலம் லூகா மெல்கார்ன் படம் பிடித்தார்.

பிரான்சின் வெர்கோர்ஸ் பிராந்திய இயற்கை பூங்காவில் உள்ள மலை வழிகாட்டியான லூகா மெல்கார்ன், ஒரு தற்காலிக தங்குமிடத்தில் கடுமையான குளிர் நிறைந்த இரவைக் கழித்த பிறகு, மலையாட்டைப் படம்பிடித்தார். அவர் முதலில் தனது கேமராவில் படிந்துள்ள பனிப்படலத்தை மூச்சுக்காற்றின் மூலம் கரைத்து விட்டுத் தான் ஒவ்வொரு முறையும் படம் பிடிக்கமுடியும். அவரது முயற்சியும் திறமையும் அவருக்கு ரைசிங் ஸ்டார் பிரிவில் விருதைப் பெற்றுத் தந்தது.

https://www.bbc.com/tamil/articles/cl59jxkqj44o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்மினிப் பூச்சிகளால் ஒளிரும் ஆனைமலை: விருது வென்ற அதிசய புகைப்படத்தின் பின்னணி

மின்மினிப் பூச்சிகளால் ஒளிரும் ஆனைமலை: விருது வென்ற அதிசய புகைப்படத்தின் பின்னணி

பட மூலாதாரம்,SRIRAM MURALI

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பி. சுதாகர்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் (NHM) மதிப்புமிக்க விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ள 19 உலகளாவிய திறமையாளர்களில் இந்திய புகைப்படக் கலைஞர்கள் ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர்.

உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆனைமலை மற்றும் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில், கோடை இரவில் அந்த அதிசயம் நடக்கிறது.

ஆண்டுதோறும், கோடையில் மழை பெய்தவுடன், டாப்சிலிப் மற்றும் நெல்லியாம்பதி காப்புக்காட்டில், இரவு நேரங்களில் கோடிக்கணக்கான மின்மினிப் பூச்சிகளால், மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் வனம் ஒளிர்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் முரளி ஆனமலை புலிகள் காப்பக பகுதியில், மின்மினிப் பூச்சிகளால் இரவில் ஒளிரும் வனத்தை, மனதைக் கவரும் வகையில் புகைப்படமாக எடுத்துள்ளார்.

இந்தப் புகைப்படம் ‘நடத்தை: முதுகெலும்பில்லாத’ பிரிவில் "உலகின் சிறந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞர்" என்ற விருதைப் பெற்றுத் தந்துள்ளது. 16 நிமிடங்களுக்கு மேல் மயக்கும் மின்மினிப் பூச்சிகளை 19 விநாடிகள் கொண்ட 50 காட்சிகளாக அவர் பதிவு செய்துள்ளார்.

 
மின்மினிப் பூச்சிகளால் ஒளிரும் ஆனைமலை: விருது வென்ற அதிசய புகைப்படத்தின் பின்னணி

பட மூலாதாரம்,SRIRAM MURALI

கூகுள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர்

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் முரளி. இவரது தந்தை எலக்ட்ரானிக்ஸ் தொழில் செய்து வருகிறார். தாய் உமா இல்லத்தரசி. இரு சகோதரர்கள் இருக்கின்றனர். பொள்ளாச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின், திருச்சி ரீஜனல் பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு, அமெரிக்காவில் எம்.டெக் படித்துள்ளார். அதன் பிறகு கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இரு மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

விருது கிடைத்துள்ளது தொடர்பாக ஒளி மாசுபாடு மற்றும் மின்மினிப் பூச்சி வல்லுநர் ஸ்ரீராம் முரளி கூறும்போது, “வானியலின் மீது தீராத ஆர்வம் அமெரிக்காவில் படிக்கும்போது ஏற்பட்டது. லட்சக்கணக்கான நட்சத்திரங்களை ஓர் இரவில் பார்க்கும்போது, இரவின் வெளிச்சத்தை ரசிக்கவும், ஆராயவும் என்னைத் தூண்டியது. அதைத் தொடர்ந்து இரவில் அதிக நேரம் நட்சத்திரங்களோடு செலவிட ஆரம்பித்தேன். அதுவே மின்மினி பூச்சியின் ஆராய்ச்சிக்கு உதவியது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “உலாந்தி வனச்சரகத்திற்கு வன அதிகாரிகளோடு கடந்த 2022ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் மாலை 5 மணிக்குச் சென்றோம். ஒவ்வொரு நிமிடமும் மிகுந்த எதிர்பார்ப்போடு, மின்மினிப் பூச்சிகளைப் பார்க்க கிட்டத்தட்ட இரண்டறை மணிநேரம் காத்திருத்தோம்.

 
மின்மினிப் பூச்சிகளால் ஒளிரும் ஆனைமலை: விருது வென்ற அதிசய புகைப்படத்தின் பின்னணி

பட மூலாதாரம்,SRIRAM MURALI

மின்மினிகள் வருமா, வராதா என்ற கேள்விகளோடும், குழப்பத்தோடும் ஒவ்வொரு நிமிடமும் கடக்க, ஏழரை மணியளவில், காட்டில் வெளிச்சம் மெல்ல, மெல்ல பரவத் தொடங்கியது.

கீழே அமர்ந்திருக்கும் பெண் பூச்சிகளைக் கவர, ஆண் பூச்சிகள் வெளிப்படுத்திய ஒளி வெள்ளத்தில் காடே விழாக் கோலத்தில் இருப்பது போலக் காட்சியளித்தது. பல கிலோமீட்டருக்கு கிறிஸ்துமஸ் மரத்தில் அலங்கார விளக்குகள் போட்டால் எப்படி இருக்குமோ, அப்படி மின்மினிப் பூச்சிகளால் காட்டில் "உயிர் ஒளிர்வு" உண்டாகியது," என்று அந்தத் தருணத்தை விவரித்தார் ஸ்ரீராம் முரளி.

மேற்கொண்டு விவரித்தவர், "ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மரங்களில் அமர்ந்திருக்கும் ஆண் மின்மினி பூச்சிகள் இந்த உயிர் ஒளிர்வுகளை வைத்து, தங்களுக்கு ஏற்ற துணையைக் கண்டறிய இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்துகின்றன.

தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை லார்வாக்களாக கழிக்கும் அவை மென்மையான மண்புழு, நத்தை உள்ளிட்ட பூச்சிகளை உண்கின்றன.

வளர்ந்த மின்மினிப் பூச்சிகள் சில வாரங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவை தேன் மற்றும் மகரந்தத்தை உணவாக உட்கொள்கின்றன,” எனத் தெரிவித்தார்.

விருதுக்கு 50,000 பேர் விண்ணப்பிப்பு

மின்மினிப் பூச்சிகளால் ஒளிரும் ஆனைமலை: விருது வென்ற அதிசய புகைப்படத்தின் பின்னணி

பட மூலாதாரம்,SRIRAM MURALI

சிறந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞருக்கான விருதுக்கு 17 வயதிற்கு உட்பட்டோருக்கும், அதற்கு மேல் வயதானவர்கள் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 16 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் இந்த விருதுக்கு ஸ்ரீராம் முரளி விண்ணப்பித்துள்ளார். காட்டில் இரவில் ஒளிரும் மின்மினிப் பூச்சிகளின் படம் முதுகெலும்பற்ற உயிரினங்கள் பற்றிய புகைப்படப் பிரிவில் விருது வென்றுள்ளது. இந்த விருதுக்கு 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அதில் 1000 புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, போட்டோஷாப் மற்றும் கணிணியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதா, வண்ணம் இந்த போட்டோவில் கூட்டப்பட்டுள்ளதா என வல்லுநர்கள் ஆராய்ந்து இறுதியாக 100 படங்களை நடுவர்களின் சோதனைக்கு அனுப்புவார்கள். அதில் 16 பிரிவுகளுக்கான புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த புதன்கிழமை விருது வழங்கப்பட்டது.

இந்த விருது, காட்டைப் பாதுகாக்கவும், மக்களிடம் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பயன்படும் என்று ஸ்ரீராம் முரளி கூறுகிறார்.

மின்மினிப் பூச்சிகளால் ஒளிரும் ஆனைமலை: விருது வென்ற அதிசய புகைப்படத்தின் பின்னணி

பட மூலாதாரம்,SRIRAM MURALI

“மின்மினிப் பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சியை மேம்படுத்த அரசு நிதிகளை ஒதுக்கி, அவை வாழ உகந்த சூழலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை இந்த விருது விதைத்துள்ளது. நேரம் கிடைக்கும்போது செய்த ஆராய்ச்சிகளை, தற்போது முழுநேரமாகச் செய்ய, கூகுள் பணியை ராஜினாமா செய்துள்ளேன்,” என்றார்.

தன்னுடைய வைல்ட் அண்ட் டார்க் எர்த் தொண்டு நிறுவனம் மூலம் இரவாடி உயிரினங்களின் வாழ்விடங்களைப் பற்றிய ஆய்வு மற்றும் பாதுகாப்பு குறித்த பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்திய பூச்சியியல் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்ட இவரது ஆய்வு, மின்மினிப் பூச்சிகளின் ஒளிரும் வடிவங்களைப் பதிவுசெய்த ஒத்திசைவான ஆராய்ச்சியாளர்களின் சூழலியல் முக்கியத்துவத்தை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“மின்மினிப் பூச்சிகள் தங்கள் வயிற்றின் கீழே பிரத்யேக ஒளி உறுப்புகளைக் கொண்டுள்ளன. அவை ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கின்றன. சிறப்பு செல்களுக்குள், ஆக்ஸிஜன் லூசிஃபெரின் என்ற பொருளுடன் இணைந்து ஒளியை உருவாக்குகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு மின்மினிப் பூச்சிகளின் ஒத்திசைவு நடனம் நடந்துள்ளது. இது அமெரிக்காவில் உள்ள மின்மினிப் பூச்சி தொடர்பான விஞ்ஞானிகளுடனான தகவல் தொடர்புகள் மூலம் தெரிய வந்துள்ளது," என்றும் கூறுகிறார் ஸ்ரீராம் முரளி.

 
சர்வதேச புகைப்பட விருது

"கோவை வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் 2012ஆம் ஆண்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மின்மினிப் பூச்சிகளின் ஒத்திசைவு நடனத்தைக் கண்டறிந்துள்ளனர். உலகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட மின்மினிப் பூச்சிகள் உள்ளன. ஆனால், ஒரு சில மட்டுமே ஒத்திசைவானவை.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காணப்படும் மின்மினிப் பூச்சிகள் அப்ஸ்கோண்டிடா (Abscondita) இனத்தைச் சேர்ந்தவை அல்லது புதிய இனமாகவும் இருக்கலாம். அதன் இனத்தைச் சரியாக அடையாளம் காண விரிவான ஆராய்ச்சி மற்றும் டி.என்.ஏ வரிசைமுறை தேவை. இவை கருப்பு நிற கோடுகளுடன் பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளன.

உலகம் முழுவதும் மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் இந்த மிக அரிதான இந்த ஆபூர்வ நிகழ்வு நமது எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று ஸ்ரீராம் முரளி கூறுகிறார்.

 
மின்மினிப் பூச்சிகளால் ஒளிரும் ஆனைமலை: விருது வென்ற அதிசய புகைப்படத்தின் பின்னணி

பட மூலாதாரம்,SRIRAM MURALI

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மின்மினிப் பூச்சி இனங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் பற்றிய ஆய்வு, ஒவ்வோர் ஆண்டும் கோடையில் அங்கு பார்க்கப்படும் கோடிக்கணக்கான பூச்சிகளின் கூட்டம், அவற்றின் ஒத்திசைக்கப்பட்ட உயிர் ஒளிர்வு ஆகியவை காணப்படுகின்றன.

ஆறு இந்திய புகைப்பட கலைஞர்களுக்கும் வெவ்வேறு பிரிவுகளில் விருது

இளம் புகைப்படக் கலைஞர் விஹான் தல்யா விகாஸ் எடுத்த, கர்நாடகாவின் நல்லூர் பாரம்பரிய புளியந்தோப்புக்கு அருகில் காணப்படும் ஓர் அலங்கார மரத்தின் சிலந்தியின் படம், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் விருது பெற்றுள்ளது.

இதேபோல நெஜிப் அகமது எடுத்த அசாமின் ஓராங் தேசியப் பூங்காவின் புறநகர்ப் பகுதியில் புலி மற்றும் அதை கிராம மக்கள் பார்ப்பது போன்ற புகைப்படம், விஷ்ணு கோபால் எடுத்த பிரேசிலிய காட்டில் உள்ள லோலேண்ட் தாப்பிர் என்ற உயிரினத்தின் புகைப்படம், வினோத் வேணுகோபாலின் சிலந்தி புகைப்படம் மற்றும் ராஜீவ் மோகனின் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பான கழுகுப் பார்வை புகைப்படம் ஆகியவையும் விருதுகளைப் பெற்றுள்ளன.‌

https://www.bbc.com/tamil/articles/cv249e24d1ro

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அருமையாக இருக்கின்றன........!  👍

நன்றி ஏராளன் .......!  

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

கீழே அமர்ந்திருக்கும் பெண் பூச்சிகளைக் கவர, ஆண் பூச்சிகள் வெளிப்படுத்திய ஒளி வெள்ளத்தில் காடே விழாக் கோலத்தில் இருப்பது போலக் காட்சியளித்தது. பல கிலோமீட்டருக்கு கிறிஸ்துமஸ் மரத்தில் அலங்கார விளக்குகள் போட்டால் எப்படி இருக்குமோ, அப்படி மின்மினிப் பூச்சிகளால் காட்டில் "உயிர் ஒளிர்வு" உண்டாகியது," என்று அந்தத் தருணத்தை விவரித்தார் ஸ்ரீராம் முரளி.

மனிதருக்குத் தான் இதில் பிரச்சனை என்றால்

மின்மினிப் பூச்சிகளுக்கு இதைவிட பிரச்சனை போல உள்ளதே.

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

இங்கு பல படங்களையும் பிடித்தவர்கள் எவ்வளவு படித்து நல்ல வேலை சம்பளம் என்று இருந்தாலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு துணிந்து வெற்றியோ தோல்வியோ எதையும் கணக்கிலெடுக்காமல் இறங்கி புகைப்பட கருவிகளோடு அலைகிறார்களே அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.