Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் இருந்து 41 கனடா தூதரக அதிகாரிகள் வெளியேறினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கனடா மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட கசப்பைத் தொடர்ந்து 41 கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்தியா இரண்டு வாரங்களுக்கு முன்பு கனடாவை அதன் தூதரக ஊழியர்களை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. அவர்கள் தங்கியிருந்தால் அவர்களுக்கான ராஜாங்க சட்ட விலக்குகளை நீக்கிவிடப் போவதாகவும் இந்தியா கூறியிருந்தது.

கனடா இதை "சர்வதேச சட்ட மீறல்" என்று கூறியது

ஜூன் 18 ஆம் தேதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து உறவுகளில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது. அவை "அபத்தமானது" என்று கூறியது.

 
இந்தியாவில் இருந்து 41 கனடா தூதரக அதிகாரிகள் வெளியேறினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கனடாவுக்கு விசா பெறுவதில் சிக்கல் ஏற்படுமா?

இதற்கிடையே கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, இந்தியாவில் உள்ள பல கனடா தூதரக அதிகாரிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்தினார்.

அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் "21 தூதரக அதிகாரிகளைத் தவிர மற்ற அனைவருக்கும்" ராஜாங்க சட்ட விலக்கு"தன்னிச்சையாக அகற்றப்படும்" என்று இந்தியா கூறியதாக அவர் தெரிவித்தார்.

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக பிபிசி கருத்து கேட்டிருக்கிறது.

மீதமுள்ள 21 தூதரக அதிகாரிகள் இன்னும் இந்தியாவில் இருப்பதாகவும், இருப்பினும் பணியாளர்கள் பற்றாக்குறையால் கனடா தனது சேவைகளை நாட்டில் குறைக்க வேண்டியிருக்கும் என்று ஜோலி கூறினார்.

பெங்களூர், மும்பை, சண்டிகரில் மக்கள் நேரில் வந்து பெறும் சேவைகளுக்கு தடையாக இருக்கும் என்று ஜோலி கூறினார். இந்தச் சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்த காலக்கெடு எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
இந்தியாவில் இருந்து 41 கனடா தூதரக அதிகாரிகள் வெளியேறினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாணவர்களுக்கு என்ன பாதிப்பு?

எனினும் டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் எனவும், மூன்றாம் தரப்பு மூலம் மேற்கொள்ளப்படும் சேவைகளும் தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பணியாளர்களின் குறைப்பால் குடியேற்ற விண்ணப்பங்களுக்கான செயலாக்கத்தில் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கனடா குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் கூறினார்.

முக்கியமாக கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2022 கணக்குப்படி கனடாவில் தற்காலிக, நிரந்தர குடியேற்றத்துக்கான விண்ணப்பதாரர்களில் இந்தியர்களே அதிகம்.

கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ளதை விட டெல்லியில் அதிகமான தூதரக அதிகாரிகள் இருப்பதாக இந்தியா கூறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், இந்த எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும் என்றும் இந்தியா கோரியது.

 
இந்தியாவில் இருந்து 41 கனடா தூதரக அதிகாரிகள் வெளியேறினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆயினும், ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைப் பட்டியலிட்டுள்ள உலகளாவிய விவகார இணையதளம், இந்த எண்ணிக்கை சம அளவிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கனடா தூதரக அதிகாரிகளுக்கான ராஜாங்க சட்ட விலக்குகளை நீக்குவதாக இந்தியா கூறுவது "சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்" என்று ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பின் போது ஜோலி கூறினார்.

இருப்பினும் இதற்காக கனடா பதிலடி கொடுக்காது என்றும் அவர் கூறினார்.

"ராஜாங்க சட்ட விலக்கு விதிமுறைகளை மீற நாம் அனுமதித்தால், உலகத்தில் எங்கும் எந்தத் தூதரக அதிகாரியும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்" என்று ஜோலி கூறினார்.

கனடாவைச் சுற்றிப்பார்க்க அல்லது குடியேற விரும்பும் இந்தியர்களை கனடா இன்னும் வரவேற்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
இந்தியாவில் இருந்து 41 கனடா தூதரக அதிகாரிகள் வெளியேறினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செப்டம்பரில் கூறியதையடுத்து, கனடா-இந்தியா உறவுகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமடைந்துள்ளன.

இது கனடா உளவுத் தகவல்களின் அடிப்படையிலானது என்று ட்ரூடோ கூறினார்.

இப்படிப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய போதிலும், இந்தியாவுடனான பிளவை கனடா அதிகரிக்க விரும்பவில்லை என்று ட்ரூடோ மீண்டும் மீண்டும் கூறினார்.

நிஜ்ஜாரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இந்திய அதிகாரிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c72lxy8v3dpo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலுள்ள துணைத்தூதரகங்களில் விசா சேவைகளை இடைநிறுத்தியது கனடா : 41 கனேடிய இராஜதந்திரிகள் வாபஸ்

Published By: DIGITAL DESK 3    21 OCT, 2023 | 10:12 AM

image

கனாடாவானது இந்தியாவில் பெங்களூர், சண்டிகர் மற்றும் மும்பாய் ஆகிய பிராந்தியங்களிலுள்ள தனது துணைத்தூதரங்களில் வழங்கப்பட்டு வந்த விசா மற்றும் நேரடி தூதரக சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளது.

இந்திய காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன்  மாதம் 18 ஆம் திகதி கனேடிய மண்ணில் வைத்துக் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ கடந்த மாதம் தெரிவித்தையடுத்து, இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் முறுகல் நிலையை அடைந்தன. 

இந்தியாவானது மேற்படி குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்து தீவிரவாதிகளுக்கும் குற்றச்செயல்களில் ஈடுப்படுபவர்களுக்கும் கனடா புகலிடம் அளித்து வருவதாக சாடியிருந்தது.

இந்நிலையில், புதுடில்லியிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் மட்டுமே மேற்படி சேவைகளை தொடர்ந்து வழங்கவுள்ளது.

கனடா அந்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளியிட்ட தனது இந்தியாவுக்கான மேம்படுத்தப்பட்ட பயண ஆலோசனையில் கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் அண்மையில் இடம் பெறும் விடயங்களுக்கு அமைவாக இந்தியாவில் கனடாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டு வருவதுடன் பாரம்பரிய ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் கனடா தொடர்பான எதிர்மறை மனோ பாவங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இராஜதந்திரிகள் வாபஸ் 

இந்தியாவிலிருந்து 41 கனேடிய இராஜதந்திரிகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கனேடிய வெளிநாட்டு அமைச்சர் மெலானி ஜோலி கனேடிய நேரப்படி நேற்று முன்தினம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

கனேடிய இராஜதந்திரிகளும் அவர்களில் தங்கி வாழ்பவர்களும் தற்போது இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்த அவர், அந்த இராஜதந்திரிகள் அனைவரதும் சிறப்புரிமை 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் ஒரு தலைப்பட்டசமான முறையில் நீக்கப்படவுள்ளதாக இந்தியா தெரிவித்திருந்ததாக கூறினார்.

https://www.virakesari.lk/article/167411

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - கனடா பிரச்னை என்ன? விசா சேவை மீண்டும் எப்போது தொடங்கும்? அமைச்சர் புது விளக்கம்

அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியா - கனடா இடையேயான இராஜதந்திர உறவு உடன்பாட்டிற்கு வரமுடியாத நிலையில் உள்ளது.

இந்தியாவில் பணியமர்த்தப்பட்ட 41 தூதர்களை திரும்பப் பெற்றுள்ளதாக கனடா சமீபத்தில் தெரிவித்திருந்தது. இது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது.

தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியாவின் ‘உள் விவகாரங்களில்’ கனேடிய தூதர்களின் ‘தொடர்ச்சியான தலையீடு’ காரணமாக, இந்தியா ராஜ தந்திர உறவுகளில் சமத்துவத்தை கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இருப்பினும், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் 'கடினமான காலங்களை' கடந்து வருவதாகவும், மிக விரைவில் கனேடியர்களுக்கான விசா சேவை மீண்டும் தொடங்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விசா சேவையை இந்தியா நிறுத்தியுள்ளதாக விமர்சித்திருந்தார்.

 

இது கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பிரச்னைகளை உருவாக்கும் என்றும், பயணம் மற்றும் வணிகம் தொடர்பான விஷயங்களிலும் பிரச்னைகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

'கனடாவிலும் இந்தியாவிலும் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்கியுள்ளது' என்றும் அவர் கூறியிருந்தார்.

இது இராஜ தந்திரத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் வியன்னா ஒப்பந்தத்தின் மீறல் என்றும் அவர் கூறினார்.

அதே சமயம், கனடா அரசியலில் பிரதமர் ட்ரூடோவின் முக்கிய போட்டியாளரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருமான பைரீ பொய்லிவ் (Pierre Poiliev) ட்ரூடோவை விமர்சித்துள்ளார். இந்தியாவுடன் தொழில்முறை உறவுகள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

ஜெய்சங்கர் என்ன சொன்னார்?

அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஞாயிற்றுக்கிழமை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கௌடில்யா எகனாமிக் என்கிளேவில் இந்தியா-கனடா உறவுகள் குறித்து பேசினார்.

அப்போது அவர், “இந்த முழுப் பிரச்னையும் ஒரு நாட்டில் எத்தனை தூதர்கள் இருக்க வேண்டும், மற்றொரு நாட்டில் எத்தனை தூதர்கள் இருக்க வேண்டும் என்பதில் உள்ள சமத்துவம் பற்றியது.

வியன்னா மாநாடு சர்வதேச சட்டத்தின் கீழ் பொருத்தமான சீரான தன்மையை வழங்குகிறது. ஆனால், கனேடிய ஊழியர்களின் தொடர்ச்சியான குறுக்கீடு குறித்து நாங்கள் கவலைப்பட்டதால், எங்கள் விஷயத்தில் நாங்கள் சமநிலையை பராமரிக்க முயன்றோம்.

இதை நாங்கள் அதிகம் பகிரங்கப்படுத்தவில்லை. காலப் போக்கில், இன்னும் பல விஷயங்கள் வெளிவரும் என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு என்ன வகையான அசௌகரியம் இருந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்,” எனப் பேசினார்.

"உறவுகள் இப்போது மிகவும் கடினமான நேரத்தை கடந்து செல்கின்றன, ஆனால் கனேடிய அரசியலின் சில பகுதிகளிலும் அதன் கொள்கைகளிலும் எங்களுக்கு சிக்கல் உள்ளது என்று நான் கூற விரும்புகிறேன்." என்றார்.

விசா சேவைகளை மீண்டும் வழங்குவது குறித்து பேசிய ஜெய்சங்கர், “அங்கு முன்னேற்றம் காணப்பட்டால், விசா தொடர்பான சிக்கல்களை களைய விரும்புகிறேன்.

அது போன்ற ஒன்று மிக விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். சில வாரங்களுக்கு முன்னர் நாங்கள் கனடாவிற்கு விசா வழங்குவதை நிறுத்தினோம், ஏனெனில் எங்கள் இராஜ தந்திரிகள் விசா வழங்கும் வேலைக்குச் செல்வது பாதுகாப்பானது அல்ல. எனவே, அவர்களின் பாதுகாப்பு தான் நாங்கள் விசா வழங்குவதை நிறுத்துவதற்கான முதல் காரணம்.

சூழ்நிலைகள் நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் வியன்னா மாநாட்டின் அடிப்படை அம்சம் இராஜ தந்திரிகளின் பாதுகாப்பு என்பது உங்களுக்குத் தெரியும்." என்றார்.

ராஜ தந்திரிகளின் பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்பட்டால், விசா சேவையை இந்தியா தொடங்கும் என்று ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

விரிசலுக்கான காரணம் என்ன?

காலிஸ்தானி தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் 18 அன்று கனடாவில் படுகொலை செய்யப்பட்டார்.

செப்டம்பர் 8 அன்று, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தக் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்தியாவின் உயர்மட்ட இராஜ தந்திரியை கனடா வெளியேற்றியது, அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமாக தொடங்கியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கனடாவின் உயர்மட்ட தூதரை ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்தியாவும் உத்தரவிட்டது.

நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்தது. இருப்பினும், இந்தியா எந்த 'குறிப்பிட்ட' விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக உள்ளது.

 

ட்ரூடோவை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்

பியர் பொய்லிவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்காக ட்ரூடோவை பியர் கடுமையாக விமர்சித்தார்.

கனடாவில் நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக் கணிப்புகளில், கன்சர்வேடிவ் கட்சி 2025 பொதுத் தேர்தலில் வெற்றியை நெருங்கிவிட்டதாகவும், அதன் தலைவர் பியர் பொய்லிவ் பிரதமராவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்காக ட்ரூடோவை பியர் கடுமையாக விமர்சித்தார். தனது அரசு அமைந்தால், இந்தியாவுடன் தொழில் ரீதியிலான உறவை ஏற்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

நேபாள ஊடகமான நமஸ்தே வானொலி டொராண்டோவுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

"எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜஸ்டின் ட்ரூடோ எப்படி மதிப்பற்றவராக மாறினார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அவர்கள் உள்நாட்டில் கனேடியர்களை ஒருவரையொருவர் எதிர்க்கிறார்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள எங்கள் உறவுகளை சேதப்படுத்தியுள்ளனர்.

அவர் திறமையற்றவர் மற்றும் தொழில்ரீதியாக செயல்படும் திறனற்றவர். இதன் காரணமாக இந்தியா உட்பட உலகின் ஒவ்வொரு பெரிய சக்தியுடனும் நாங்கள் தற்போது பெரும் பிரச்னைகளில் சிக்கியுள்ளோம்.

இந்திய அரசாங்கத்துடன் நாம் தொழில்முறை உறவுகளை உருவாக்க வேண்டும். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பரவாயில்லை, அனைவருக்கும் பொறுப்புக் கூற வேண்டும். அதனால், நாங்கள் தொழில் ரீதியாக உறவு கொள்ள வேண்டும், நான் நாட்டின் பிரதமரானவுடன் இதை மீண்டும் செயல்படுத்துவேன்,” என்றார் பியர் பொய்லிவ்.

இது தவிர ட்ரூடோவின் வெளியுறவுக் கொள்கையையும் பியர் விமர்சித்தார். சீனா தனது நாட்டில் தலையிடுவதாகவும், கனேடிய பிரதமர் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சுற்றியே வருவதாகவும் அவர் கூறினார்.

"ட்ரூடோவின் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எங்கள் நற்பெயர் ஆபத்தில் உள்ளது," என்று அவர் கூறினார்.

“பெய்ஜிங் நம் நாட்டில் தலையிடுகிறது, கனடாவில் காவல் நிலையங்களைத் திறந்து நம் மக்களை மோசமாக நடத்துகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஜஸ்டின் ட்ரூடோ கேலிக்குரியவராக கருதப்படுகிறார். அமெரிக்க அதிபர் பைடன் எப்போதும் ட்ரூடோவை தவறாக நடத்துகிறார்," என்றும் பியர் கூறினார்.

 

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் நுழைவு

கனடாவின் வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

அமெரிக்கா மற்றும் பிரிட்டன், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான பிரச்னையில் கருத்து தெரிவித்துள்ளன

கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலோனி ஜோலி, அதன் தூதர்களில் 41 பேர் இந்தியாவை விட்டு வெளியேறியதாக கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

21 இராஜ தந்திரிகளைத் தவிர மற்ற அனைவரின் தூதாண்மை பாதுகாப்பு உத்தரவாதம் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ரத்து செய்யப்படும் என்று இந்தியா கூறியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

21 கனேடிய தூதர்கள் இன்னும் இந்தியாவில் உள்ளனர். ஆனால் மீதமுள்ளவர்கள் திரும்ப அழைக்கப்படுவதால் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இராஜ தந்திர பாதுகாப்பை திரும்பப் பெறுவது முன்னெப்போதும் இல்லாதது மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் விவரித்திருந்தார்.

கனடாவின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, வியன்னா ஒப்பந்தத்தை இந்தியா எந்த வகையிலும் மீறவில்லை என்றும், இந்தியாவில் கனேடிய தூதர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியது.

இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை, அமெரிக்கா மற்றும் பிரிட்டன், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான பிரச்னையில் கருத்து தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், இந்தியா மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து கனடா தீவிரம் காட்டி வருகிறது என்றார்.

வியன்னா உடன்படிக்கையை மேற்கோள் காட்டிய அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ, கனடாவின் இராஜதந்திர தூதரக உறுப்பினர்களுக்கு இந்தியா பாதுகாப்பை வழங்கும் என்று நம்புவதாகக் கூறியிருந்தார்.

அதேநேரத்தில், வியன்னா ஒப்பந்தத்தை இரு நாட்டினரும் பின்பற்றுவார்கள் என்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

 
வியன்னா மாநாடு

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

இந்திய வெளியுறவு அமைச்சகம், சமத்துவத்தை அமல்படுத்த முற்படும் தூதரக உறவுகளுக்கான வியன்னா மாநாட்டின் பிரிவு 11.1 இன் கீழ் இந்த நடவடிக்கை உள்ளது என்று கூறுகிறது.

 

வியன்னா ஒப்பந்தம் என்றால் என்ன?

வியன்னா ஒப்பந்தம் அல்லது வியன்னா மாநாடு இப்போது இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் இராஜதந்திர சிக்கலில் மேற்கோள் காட்டப்படுகிறது.

கனடாவில் இந்தியாவுக்கு 20 இராஜ தந்திரிகள் உள்ளனர், அதே எண்ணிக்கையிலான இராஜதந்திரிகள் இங்கும் இருக்க வேண்டும் என்று இந்தியா கூறுகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சகம், சமத்துவத்தை அமல்படுத்த முற்படும் தூதரக உறவுகளுக்கான வியன்னா மாநாட்டின் பிரிவு 11.1 இன் கீழ் இந்த நடவடிக்கை உள்ளது என்று கூறுகிறது.

1961 இராஜ தந்திர உறவுகளுக்கான வியன்னா மாநாடு என்பது ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தமாகும். இது நாடுகள் ஒருவருக்கொருவர் தூதரக பிரதிநிதிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான சில பொதுவான கொள்கைகள் மற்றும் விதிகளை நிறுவுகிறது. இதன் கீழ், இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்தவும், உரையாடல் வழியை ஏற்படுத்தவும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைகளில் மிக முக்கியமான உதாரணம் இராஜ தந்திரிகளின் பாதுகாப்பு. இதன் கீழ், தூதரக அதிகாரி எந்த ஆபத்தும், அச்சம் அல்லது மிரட்டல் இன்றி பணிபுரியும் வகையில், அவர் பணியமர்த்தப்படும் நாட்டின் சட்டங்கள் மற்றும் வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஏப்ரல் 1964 இல் பணிகள் தொடங்கப்பட்டு இன்று 192 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 1965-ம் ஆண்டில் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

வியன்னா ஒப்பந்தம் இராஜ தந்திரிகளுக்கு மட்டுமல்ல, மற்றொரு நாட்டின் இராஜ தந்திர பணிகளில் பணியமர்த்தப்பட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவத் துறையின் பொது ஊழியர்களுக்கும் பொருந்தும்.

https://www.bbc.com/tamil/articles/cv20zj2y8zzo

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கம் Discipline  இல்லாத இந்தியா வல்லரசாக வந்தால் இந்த உலகம் எப்படித் தாங்கும் ? 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kapithan said:

ஒழுக்கம் Discipline  இல்லாத இந்தியா வல்லரசாக வந்தால் இந்த உலகம் எப்படித் தாங்கும் ? 

எந்த வல்லரசு ஒழுக்கமாக இருக்கிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எந்த வல்லரசு ஒழுக்கமாக இருக்கிறது?

இன்றைய வல்லரசுகள் தம் நாட்டு மக்கள் நலனில் நூற்றுக்கு தொண்ணூறு வீதமாவது அக்கறையுடன் இருக்கின்றார்கள்.பசியுடன் தம் நாட்டு மக்களை நடு ரோட்டில் அலைய விடவில்லை. பிச்சை எடுப்பதையே குற்றம் என சட்டமாக வைத்திருக்கின்றார்கள். அகதியென வந்தவர்களை கூட அவர்கள் நடுத்தெருவில் விடவில்லை.

ஆனால் இந்தியாவில்.....??????
இலங்கை தமிழன் என்றால் ஹொட்டலில் கூட இடம் கொடுக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

எந்த வல்லரசு ஒழுக்கமாக இருக்கிறது?

இந்தியனின் Discipline ஐப்பற்றி கூறினேன், ஒழுக்கத்தைப்பற்றியல்ல...😀

மற்றைய வல்லரசுகள் (சரியோ பிழையோ) தீங்கை விதைத்தாலும் அதில் ஒரு ஒழுங்கு இருக்கும். 

இந்தியனுக்கு ஒழுக்கமும் இல்லை, ஒழுங்கும் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.