Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

விடுதலைப்புலிகளின் இலச்சினையை முதலில் வரைந்தது மோகண்ணா என்ற இராமதாஸ் மோகனதாஸ் தான்.

1974 ஓகஸ்டில் பெரியசோதியுடன் வேதாரணியத்தில் இருந்து சென்னைக்கு வந்த ‘தம்பி என்ற ழைக்கப்பட்ட பிரபாகரன்(தலை வர்) சந்தித்த போராளிதான் ஆ.இராசரெத்தினமாகும். கோடம் பாக்கம் ரஸ்டிபுரத்தில் இருந்துவரும் பிரபாகரனும் எக்மோர் C.I.T காலனியில் வாழ்ந்த இராசரத்தினமும் தொடர்சியாக சந்தித்து கலந்துரையாடும் இடம் கன்னிமாரா நூல்நிலையமாகும். இங்கி ருந்துதான் தமிழ் மொழியின்தொன்மை தமிழரின்வரலாறு ஈழத் தமிழரின்தனித்துவம் என பலதையும் தலைவர் ஐயம்திரிபற அறிந்துகொண்டார். இக்காலத்தில்தான் கரிகாலன் என தலைவர் பிரபாகரனும் எல்லாளன் என இராசரத்தினமும் தமது மாற்றுப் பெயர்களை தேடிக்கொண்டனர்.

தமிழீழத்தின் முதலாவது மாமனிதராக தலைவர் பிரபாகரனால்; பெருமைப் படுத்தப்பட்ட ஆ.இராசரெத்தினத்தால் ‘தாமிரபரணி தமிழ்ப்புலிகள்’ எனும்பெயரே தலைவரின் மனதில் ஆரம்பத்தில் விதைக்கப்பட்டிருந்தது. இதுவே 1975 யூலை 27இல் ‘புதிய தமிழ்ப் புலிகள்'(TNT) என பொன்னாலையில் துரையப்பா அழிப்பின் போது தலைவர் பிரபாகரனின் போராட்டக்குழுவின் பெயராக மாற்ற மடைந்தது. இதனைத் தொடர்ந்து 05.03.1976 நடந்த புத்தூர்வங்கி பணப்பறித்தெடுப்பின்பின் இயக்கத் தின் முதலாவது மத்தியகுழு உருவாக்கப்பட்டது. ஐந்துபேரடங்கிய இம்மத்திய குழுவில் நாலு பேர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என்பது எமக்கெல்லாம் வரலாற்றுபெருமையாகும். குறிப்பிட்ட தலைவர்பிரபாகரனின் குழுவான புதிய தமிழ்ப் புலிகள் 1976 மே 04 புளியங் குளத்தில் நடந்த கலந்துரையாடலின்பின் தமிழீழ விடுதலைப் புலிகள் என்றபெயரில் நிறுவனமயப்படுத்பட்டது.

இதைத்தொடர்ந்து இயக்கத்தின் இயங்குதிசையை தீர்மானிக்கும் இயக்கத்திற்கான கட்டுப்பாடுகளும் வரையறுக்கப்பட்டன. முதலாவது மத்தியகுழுவின் தீர்மானத்திற்கமைய தலைவர் பிரபாகரனின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மோகண்ணாவால் விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வமான முதலாவது இலச்சினையும் உருவாக்கப்பட்டது. பருத்தித்துறையில் அமைந் திருந்த மோகண்ணாவின் ‘மோகன் ஆட்ஸ்’ கலைக்கூடத்திற்கு வந்து குறிப்பிட்ட இலச்சினையை இயக்கத்திற்காக பெற்றுச் சென்றவர் முதலாவது மத்தியகுழு உறுப்பினர்களில் ஒருவராகிய திரு.குமரச்செல்வம் ஆவார். தாமிரபரணி தமிழ்ப்புலிகள் – புதிய தமிழ்ப்புலிகள் – என்பவற்றின் வழியாக தலைவர் பிரபாகரன் அவர்களின் போராட்ட இயக்கம் இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் என பெயர்மாற்றம் கண்டது.(இப்பெயரை முன்மொழிந்தவரின் பெயர்கூட இன்றுவரை உத்தியோக பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை) இதேபோல் விடுதலைப் புலிகளின் இலச்சினையும் ஒரேஎத்தனத்தில் இன்றுள்ள வடிவத்தை எடுக்கவில்லை.

1916இல்அமெரிக்காவின் கலிபோணியாவில் உருவாகிய GOLDWIN PICTURES நிறுவனமே பின்னாட்களில் METRO GOLDWIN MAYER எனும் பிரமாண்டமான MEDIA COMPANY யாக உருவாயிற்று. MGM எனும் இந்நிறுவனத்தின் TRAD MARK ஆக காணப்படுவது திரைப் பட சுருள்களுக்கிடையில் இருந்து கர்ஜிக்கும் சிங்கம் ஆகும். இதனை மூலமாகவைத்து 1975 இல் ‘வாசு சிகார்’ அட்டைப் பெட்டிக்காக மோகண்ணா ஆரம்பத்தில் உருவாக்கிய சித்திரமே ‘வாசு சிகார்’ அட்டைப்பெட்டியில் காணப்பட்ட ‘சுவரை உடைத்துக் கொண்டு பாயும் சிங்கமாகும். இச்சிங்கத்தின் மாதிரியே தலைவர் பிரபாகரன் அவர்களின் விருப்பத்திற்கமைய 1976இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுதிகொண்ட உத்தியோக பூர்வமான இலச்சினை வடிவத்தில் காணப்பட்ட புலியாக ஆரம்பத்தில் மாற்றப் பட்டது. குறிப்பிட்ட விடுதலைப்புலிகளின் சின்னத்திற் காக பின்னர் பண்டாரவன்னியனின் ஓவியத்தில் கேடயத்தின் குறுக்காக காணப்படும் வாள்கள் துப்பாக்கிகளாகவும் சோவியத் நாடு சஞ்சிகையில் வளைந்து ஓவல்வடிவத்தில் காணப்பட்ட நெற்கதிர்களின் நெல்மணிகளை துப்பாக்கியின் ரவைகள்(குண்டுகள் ) ஆகவும் மாதிரியாக கொண்டு இறுதியாக 1977ன் இறுதியில் மோகண்ணா உருவாக்கிய அவ்அடையாளச் சின்னமே விடுதலைப்புலிகளின் முதலாவது அடையாளச் சின்னமாகும். இவ்வாறே 1977இன் இறுதியிலேயே விடுதலைப்புலிகளின் அடையாளச் சின்னம் உருவாக்கப்பட்டுவிட்டது. – ஆதாரம் – விடுதலைத்தீப்பொறி(தலைவரின் வாக்குமூலம்)

ltte first logoltte first logo letter headltte first logo modified

1977 இறுதியில் உருவாக்கப்பட்ட விடுதபைபுலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதம் 1978 ஏப்ரல் 25 ந்திகதி வீரகேசரி பத்திரி கையில் வெளிவந்த விடுதலைப் புலிகளின் முதலாவது உரிமை கோரல் கடிதமாகும். இக்கடிதத்தில் தமிழீழம் என்பதன் ஆங்கிலப் பதம் THAMIL EALAM என குறிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும். இதுவே TAMILEELAM என முதலில் மாற்றத்திற்குள்ளாகியது. இதைத்தொடர்ந்து 1979 ஒக்டோபரில் ‘சோசலிச தமிழீழத்தை நோக்கி’ என்ற பிரசுரமும் பொதுமக்களிற்கு நேரடியாக விநியோ கிக்கப்பட்டிருந்தது. . தொடர்ந்து 1982இல் அமெரிக்காவில் நடைபெற்ற தமிழீழப் பிரகடனத்திற்கு எதிராக மக்கள்மத்தியில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்திலும் மேற்படி இலச்சினை பாவிக்கப்பட்டது. குறிப்பிட்ட மூன்று வெளியீடுகளிலும் முன்கூறிய புலிகளின் இலச்சினையே பாவிக்கப்பட்டது.

இதன் பின்னரே குறிப்பாக 1982ம்ஆண்டின் பின்னரைப்பகுதியிலேயே மதுரையில் தங்கியிருந்த தலைவர் பிரபாகரன் ஓவியர் நடரா சனை முதன்முதலாக சந்தித்திருந்தார். இக்காலத்தில்தான் மேற்படி இலச்சினையில் மேலும் சிலமாற்றங்களை தலைவர் ஏற்படுத்தியிருந்தார். குறிப்பாக புலியின் பார்கும்திசை வெளியி லிருந்து உட்பக்கம் பார்கும்திசைக்கு மாற்றப்பட்டது. இதுவே இன்று நாம்காணும் இலச்சினையாகும். விடுலைப்புலிகளின் இவ்இலச்சி னையை ஓவியர் நடராசனே வரைந்ததாக இன்று கூறுவோர் கவனிக்கத்தவறியது அது முதலில் பகிரங்கப்படுத்தப் பட்ட காலமாகும்.

1978 இல் வெளியிடப்பட்ட இலச்சினையை 1982 இல் நடராசன் எப்படி வரைந்திருப்பார். குறிப்பிட்ட மூல இலச்சினையை வரைந்த ஓவியர் மோகண்ணாவும் மாற்றங்களை செய்த ஓவியர் நடராசாவும் மறைந்துவிட்டபோதும் இவர்களு டன் சம்பந்தப்பட்ட நெடுமாறன்போன்ற சிலர் இன்னும் உயிரோடு உள்ளார்கள் என்பதை யாரும் மறந்து விடமுடியாது.

குறிப்பாக விடுதலைப்புலிகள் இலச்சினையை மோகண்ணா வரையவில்லை என 10.12.2015 இல் சமூகத்தளமொன்றில் வந்து கருத்துக்கூறிய கிருஸ்ணா அம்பலவாணர் மற்றும் அவர் கருத்தினை ஆமோதித்த VALvettithurai.org இனரும் தெரிந்து கொள்ளவேண்டியது நீங்கள் பின்னூட்டமாக வெளியிட்ட பதிவுகளை மீண்டும் ஒருமுறை படியுங்கள். ,,,www.valvettithurai.org/

‘புலிக்கொடி வரைந்த தமிழ்நாட்டு ஓவியர்’ எனும் தலைப்பில் முதலாவது அடியே ‘தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடி உருவான வரலாற்றில் தமிழ்நாட்டு ஓவியருக்கும் முக்கியப்பங்கு இருக்கிறது’. என காணப்படுகின்றதே இங்கு கூறப்படும் பங்கு என்றசொல் எதனைக் குறிப்பிடுகின்றது. தலைவர் கூறவில்லை எனக்கூறுவோர்க்கு நாம்கூறுவது மகாவம்சத்தை மொழிபெயர்த்த வில்லியம் கெய்கர் இறுதியில் கூறியது இதுதான் ‘மகாநாம கூறியதைவிட கூறாமல் விட்டதே மிகஅதிகமான தாகும். ஆம் தலைவர் கூறவில்லை என்பதனால் எதுவும் நடக்கவில்லை என்பது கருத்தல்ல. அவர் கூறியவை மிகச்சிலவே. கூறாதவையோ மிகஅதிகம் என்பதனை அனைவரும் அறிவர்.

விடுலைப்புலிகளின் இலச்சினையை மோகண்ணா கீறவில்லை எனக்கூறவந்த கிருஸ்ணா அம்பலவாணர் மேலும் தனது கடிதத்தில் ‘அமரராகியுள்ள மோகனதாஸ் அவர்கள் முதற்களப் போராளியான சங்கர் மற்றும் சீலன் செல்லக்கிளி உட்பட சில போராளிகளின் உருவங்களை ஓவியமாக வரைந்தவர்’ எனக் கூறியுள்ளார். எதனை அடிப்படையாக வைத்து கிருஸ்ணா அம்பலவாணர் இவ்வாறு கூறவருகின் றார். விடுதலைப்புலி களின் உத்தியோகபூர்வமான எந்த வெளியீடுகளிலும் மேற் கூறியவர்களின் சித்திரங்களை மோகண்ணா என்ற மோகனதாஸ் வரைந்ததாக எங்கும் பதியப்படவில்லையே. முதற்களப் பலியாகிய சங்கருக்கு முன்பும் பல போராளிகளின் வரலாறுகள் உண்டு இவ்வாறிருக்க முதல் களப்போராளியென கிருஸ்ணா இவ்விடத்தில் சங்கரின் பெயரைக்கூறுவது ஏன்? களப்போரா ளியான சங்கரா அல்லது களப்பலியான சங்கரா என விளக்கவும். வரலாற்றுபதிவுகளில் தவறு ஏற்பட்டு விடக்கூடாது எனக்கூறும் கிருஸ்ணாஅம்பலவாணருக்கு நாம் கூறுவது உங்களிற்கு தெரிந்தவை மட்டும்தான் வரலாறுகள் இல்லை. இன்னும் ஏராளம் உண்டு. ஏற்றுக்கொள்ளுங்கள். வல்வெட்டித்துறையில் வித்தாகி வளர்ந்து மரமாகிய ஈழத்தமிழாகளின் ஆயுதப் போராட்டத்தின் வெளிவராத பக்கங்களும இன்னும் ஏராளம் உண்டு.

அத்துடன் ஓவியர் மோகனதாஸ் தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ இலட்சினையை 1974 இல் ஆண்டில் வரைந்து 1976ம் ஆண்டில் மொருகூட்டிக் கொடுத்த விடயம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என திருவாளர் சிவாஜிலிங்கம் 22.11.2015 இல் வெளியிட்ட பகிரங்க அறிக்கையை சுட்டியே 10.12. 2015 இல் கிருஸ்ணா அம்பலவாணரின் குறிப்பிட்ட மறுப்பறிக்கை வெளிவந்திருந்தது. திரு.சிவாஜிலிங்கம அதற்கு பதிலளிப்பார் என பார்த்திருந்தேன். இன்றுவரை ஏனோ பதிலளிக்கவில்லை எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் இலச்சினையை முதலில் வரைந்தவர் மோகண்ணாதான் என்பதை 10.11.2015 இல் முதன் முதலில் வெளியிட் டவன் என்பதால் இதற்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கும் உண்டு.

தொடரும் விவாதங்களிற்கு தயாராக

வர்ணகுலத்தான்
15.DEC.2015

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பிரபாகரனும் நானும்…பழ.நெடுமாறன் | (மரக்காணம்பாலாவுக்குஅளித்தபேட்டி)

 

”1982-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி. சென்னை பாண்டி பஜாரில் தம்பி பிரபாகரனும், பிளாட் அமைப்பின் தலைவர் முகுந்தனும் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்டார்கள். அது துப்பாக்கிச்சண்டையில் முடிந்தது. இருவரும் கைதுசெய்யப்பட்டார்கள். அப்போது நான் மதுரையில் இருந்தேன். புலிகளின் அரசியல்பிரிவு பொறுப்பாளராக இருந்த பேபி சுப்பிரமணியம் என்னை உடனடியாக சென்னைக்கு வரும்படி அழைத்தார். நான் இல்லாத வேளைகளில் மயிலாப்பூரில் உள்ள எனது அறையில்தான் பேபி தங்கியிருந்தார். அவரோடு வேறு சிலபுலிகளும் இருந்தனர். கைது செய்யப்பட்ட பிரபாகரனையும் முகுந்தனையும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி சிங்களப்போலீஸ் உயரதிகாரிகள் சென்னை வந்திருந்தார்கள். நான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டினேன். ‘பிரபாகரன் முகுந்தன் ஆகியோரை எவ்விதநிபந்தனையும் இன்றி விடுவிக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் சிங்களபோலீஸாரிடம் ஒப் படைக்கக்கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருபதுகட்சிகள் ஒன்றுகூடி நிறைவேற்றிய இத்தீர்மானம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இருவரையும் நாடு கடத்துவது நிறுத்தப்பட்டது. இதன் பிறகு, நான் சிறையில் இருந்த பிரபாகரனையும் முகுந்தனையும் சந்திக்கச் சென்றேன்.

இந்த இடத்தில் ஓர் உண்மையைச் சொல்லியாக வேண்டும். அதுவரை நான் பிரபாகரனைச் சந்தித்தது இல்லை. எனதுஅறையில் தங்கும் பேபி மற்றும் அவரது தோழர்களிடம், ‘பிரபாகரனை நான் சந்திக்க வேண்டும்’ என்று பலமுறை கேட்டிருக்கிறேன். ஏதேதோ சாக்குகள் கூறி வந்தார்களே தவிர பிரபாகரனை அழைத்துவரவில்லை. சென்னைச்சிறையில் சிறைஅதிகாரி அறையில் நான் அமர்ந்திருந்தேன். பிரபாகரன், முகுந்தன் மற்றும் இருதோழர்கள் உள்ளே நுழைந்தார்கள். முகுந்தனை எனக்கு அடையாளம் தெரியும். எனவே பிரபாகரன் யாரென்று தெரியாமல் நான் திகைத்தேன். பிரபாகரன் முன்வந்து ‘அண்ணா! நான்தான் பிரபாகரன்’ என்றபோது… அந்தக் காட்சியை பார்க்கவேண்டுமே! எனக்குப் பேரதிர்ச்சி ஏனென்றால் பேபியோடு எனது அறையில் தங்கியிருந்தவர்களில் இவரும் ஒருவர். பலமுறை இவரை என்வீட்டில் பார்த்திருக்கிறேன். ‘எங்கய்யா உங்கதலைவர்?’ என்று கேட்டபோதெல்லாம் ‘அவரும் உங்களை பார்க்கனும்னுதான் விரும்பறார்’ என்று பதில்வரும். இவர் வாய்பேசாமல் உட்கார்ந்திருப்பார். புலிகளை மாதிரி ரகசியம் காப்பதற்கு இன் னொருவர் பிறந்துவர வேண்டும்.” என்றபடி மலரும் நினைவுகளில் வியப்பில் ஆழ்கிறார் தடைசெய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ.நெடுமாறன்.

”வழக்கறிஞர் என்.டி.வானமாமலைதான் பிரபாகரனுக்கு பிணை விடுதலை வாங்கிக்கொடுத்தார். ‘அவர் மதுரையில் தங்கி கையெழுத்திடவேண்டும்’ என்று உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைதான் பிரபாகரனை எனக்கு நெருக்கமாக்கியது. சுமார் ஏழுமாதங்கள் என் இல்லத்தில் அவர் தங்கியிருந்தார். அந்த காலகட்டத்தில், பிரபாகரனைப் பற்றியும் அவரது இயக்கத்தைப் பற்றியும் நிறையவே நான் அறிந்துகொண்டேன்.

மதுரையில் இருந்தபோதுதான் இயக்கத்துக்கான சின்னம் வடிவமைக்கப்பட்டது. ஓவியர் நடராசன் அதை வரைந்து கொடுத்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் பார்மஸிஸ்ட்டாக பணியாற்றியவர்.

எங்கள்வீட்டில் குடியிருந்த டைலர் தங்கராசுதான் சீருடையை வடிவமைத்துக் கொடுத்தார். தொப்பி மட்டும் மதுரை புதுமண்டபத்தில் இருந்த ஒருகடையில் தேர்வு செய்தார்கள். சீருடையை பார்த்துவிட்டு, ‘நூறு பேர் இந்த ராணுவ சீருடையோடு அணிவகுக்கவேண்டும். அதை நான் பார்க்கவேண்டும்’ என்றார் பிரபாகரன். அது ஆயிரம், பல்லாயிரம் என்று பெருக்கெடுத்தது. இவ்வளவு பெரிய ராணுவத்தை கட்டமைத்து அதற்கு திறம்பட பயிற்சியளித்த மாபெரும் தலைவன், யாரிடமும் பயிற்சி பெறவில்லை என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

பழ.நெடுமாறன்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் தேவர் அண்ணாவின் கருத்துகள்….

தேசியத்தலைவர் 81 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டில் வந்திறங்கினார். 82இல் தலைவர் மதுரையில் இருந்த காலத்திற்தான் ஓவியர் நடராஜாவுடன் சந்திப்பு ஏற்படுகின்றது.78 இலேயே விடுதலைப்புலிகளின் இலச்சினையோடு கூடிய உரிமைகோரல் கடிதம் சிறில் மத்தியூவின் அரசபணியில் என்ற என் வலப்புக்களில் இலங்கை பூராவுமே ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டதை கிருஷ்ணா அம்பலவாணர் அறிவாரா?அப்போது அவர் இயக்கத்தில் இருந்தாரா?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நன்னிச் சோழன் said:

விடுதலைப்புலிகளின் இலச்சினையை முதலில் வரைந்தது மோகண்ணா என்ற இராமதாஸ் மோகனதாஸ் தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
9 minutes ago, Kavi arunasalam said:

 

தகவலுக்கு மிக்க நன்றி ஐயனே.

இவர் இப்போதும் உயிருடன் உள்ளாரா?

(நான் கட்டுரையை வாசிக்கவில்லை)

 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
3 hours ago, நன்னிச் சோழன் said:

தகவலுக்கு மிக்க நன்றி ஐயனே.

இவர் இப்போதும் உயிருடன் உள்ளாரா?

(நான் கட்டுரையை வாசிக்கவில்லை)

 

இல்லை இறந்து விட்டார். 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இனப்பிரச்சினை என்பதே இல்லை, பொருளாதார பிரச்சினைதான் இருக்கு என சொல்வதனை கேட்டு  எல்லோரும் நம்புகிறார்கள், ஆனால் ஒரு சிலர் (நீங்கள் உட்பட) மட்டும் நம்ப மறுக்கிறீர்கள், ஆகையால் நீங்கள்தான் மாறவேண்டும்😁.
    • அது வேற ஒன்றுமில்லை இந்த இரண்டு தரப்பும் குளிர்காய நாங்கள் சாக வேண்டியிருந்தது, அதனால இந்த இரண்டு தரப்பினையும் கோர்த்டுவிடுவம் என்று ஒரு முயற்சிதான்.😁
    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
    • தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை.  எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் அப்படியல்ல.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.