Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
கத்தாரில் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கத்தாரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அல் தஹ்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 8 இந்திய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக முதல்கட்டத் தகவல் கிடைத்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், விரிவான தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகவும் வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

தண்டனைக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் தொடர்ந்து செயல்படுவதுடன், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், “இந்த வழக்குக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அது குறித்து நெருக்கமாகக் கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தூதரக மற்றும் சட்ட உதவிகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். கத்தார் அரசிடமும் இது குறித்து பேச்சு நடத்துவோம்,” என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரம், இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகள் ரகசியமாக இருப்பதால், தற்போது மேற்கொண்டு எந்தக் கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் ஏன் கத்தாரில் கைது செய்யப்பட்டனர்?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு, கத்தாரில் பணியாற்றி வந்த 8 முன்னாள் இந்திய கடற்படையினர், உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த திடீர் நடவடிக்கைப் பிறகு அவர்கள் அனைவரும் தோஹாவில் உள்ள சிறையில் மற்ற கைதிகளிடமிருந்து தனியாக வைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட இந்த இந்தியர்கள், கத்தார் கடற்படைக்காக வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் உயர் பதவிகளை வகித்தவர்கள்.

இந்த இந்தியர்களில் மூன்று பேர் ஓய்வு பெற்ற கேப்டன்கள், நான்கு பேர் கமாண்டர்கள் மற்றும் ஒருவர் மாலுமி. இவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 'கடும் குற்றவாளிகளைப்' போல தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று ஒரு முன்னாள் இந்திய தூதாண்மை அதிகாரி கூறினார்.

 
முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கத்தாரில் பணியாற்றிய இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் முக்கிய ரகசியங்களை இஸ்ரேலுக்கு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

ஆனால் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தோஹாவில் பணிபுரிந்த போது நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் குறித்து முக்கியமான தகவல்களை இஸ்ரேலுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கத்தாரில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் உள்ளது.

சிறையில் உள்ள இந்த இந்தியர்கள் தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீசஸில் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்காக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் பணியாற்றி வந்தது. ரேடாரை தவிர்க்கும் ஹைடெக் இத்தாலிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

கடந்த மே மாதம் இந்த நிறுவனத்தை மூட கத்தார் உத்தரவிட்டது. அதன் ஊழியர்களில் சுமார் 70 பேர் மே மாத இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடற்படையின் முன்னாள் பணியாளர்கள்.

இதுபோன்ற சர்வதேச விவகாரங்களில் இதற்கு முன்பு என்ன நடந்தது?

முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

குல்பூஷண் ஜாதவ் வழக்கு: பயங்கரவாதம் மற்றும் உளவு பார்த்ததாக பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட குல்பூஷணுக்கு பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

குல்பூஷண் ஜாதவ் இந்தியாவுக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. ஒரு பிஸினெஸ் பயணத்திற்காக சென்றிருந்த குல்பூஷண் ஜாதவ் இரானில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியது.

சர்வதேச நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய இந்தியா, பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றது. குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி மற்றும் சந்திப்பு வாய்ப்புகளை வழங்குமாறு பாகிஸ்தானை சர்வதேச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இராக்கில் பிணைக் கைதிகளாக இருந்த இரண்டு இந்தியர்களின் விடுதலை: ”1990களில் இராக்கில் இரண்டு இந்தியர்கள் கடத்தப்பட்டபோது, கத்தாரில் உள்ள ஷரியா நீதிமன்றத்தின் தலைவர் தலையிட்டு இரு இந்தியர்களையும் விடுதலை செய்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது” என்று கராச்சியில் இந்திய தூதரக அதிகாரியாக இருந்த ராஜீவ் டோக்ரா கூறுகிறார்.

பிரிட்டனின் செவிலியர்கள் நாடு திரும்பிய விவகாரம்: 1997ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய செவிலியர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக செளதி அரேபியாவில் இரண்டு பிரிட்டிஷ் செவிலியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் செளதி அரசு பிரிட்டிஷ் அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து செவிலியர்களை விடுவித்தது. அவர்கள் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் குடிமக்கள் தாயகம் திரும்புதல்: பிரச்னைகளின் போது தனது குடிமக்களை நாட்டிற்குத் திரும்ப அழைத்து வந்த இந்தியாவின் சாதனை பாராட்டுக்குரியது.

குவைத் மீதான இராக்கின் 1990-91 படையெடுப்பின்போது அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களாக இருந்தாலும் சரி அல்லது யுக்ரேனில் சிக்கித் தவித்த மாணவர்களாக இருந்தாலும் சரி அல்லது சமீபத்தில் சூடானில் சிக்கியவர்களாக இருந்தாலும் சரி, இந்தியா அவர்களை வெற்றிகரமாக தாயகம் அழைத்து வந்துள்ளது.

 
முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தூதரக மற்றும் சட்ட உதவிகளை அளிக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சட்ட உதவி மற்றும் தூதரக உதவி போதுமா?

நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க சிறையில் இருக்கும் தனது குடிமக்களுக்கு நல்ல வழக்கறிஞர்களை இந்தியா வழங்குவது முக்கியம் என்று தூதாண்மை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால் இதுமட்டும் போதாது. 27 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடான கத்தார், இந்தியாவுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக ஒரு சிறிய நாடுதான்.

ஆனால் இது பலவீனமானவர்களுக்கும் வலிமையானவர்களுக்கும் இடையிலான போட்டி அல்ல. செளதி அரேபியா போன்ற பெரிய மற்றும் சக்திவாய்ந்த அண்டை நாடுகளுடன் கத்தார் மோதியுள்ளது. செளதி அரேபியா அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இருந்தபோதிலும் கத்தார் தனது சக்திவாய்ந்த அண்டை நாட்டிடம் பயப்படவில்லை.

கடந்த 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் படையெடுப்பின்போது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், கத்தார் அரசின் ஆதரவு பெற்ற ஒரு கூட்டமைப்பால் இயக்கப்படும் அரபு தொலைக்காட்சியான 'அல் ஜசீரா' குறித்து கத்தார் அமிரிடம் (கத்தார் தலைவர்) புகார் செய்தார்.

இதற்கு பதிலளித்த கத்தார் அமிர், 'அமெரிக்க அதிபர் சி.என்.என் ஊடகத்தின் நிர்வாகத்தில் தலையிட முடியாததைப் போல், 'அல் ஜசீரா'-வின் நிர்வாகத்தில் தானும் தலையிட முடியாது எனக் கூறிவிட்டார்.

இந்தியாவிற்கு வேறு என்ன வழி இருக்கிறது?

இந்திய அரசு இரு முனை உத்தியைச் செயல்படுத்த வேண்டும். முதலாவது சட்டம், இரண்டாவது அரசியல். இந்த இரண்டையும் ஒன்றாகச் செயல்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது குறித்துக் கடந்த சில மாதங்களுக்கு முன் பிபிசியிடம் பேசிய முன்னாள் தூதரக அதிகாரி அச்சல் மல்ஹோத்ரா, "முதல் கட்டமாக சட்டம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தக் கட்டத்தில் சிறந்த சட்ட உதவியை வழங்கி அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க முயல வேண்டும்," என்றார்.

இதனுடன் ஏதாவது விஷயம் தொடர்பாக நாம் கத்தாருக்கு உதவ முடியுமா, எதற்காவது அவர்களுக்கு ஆதரவளிக்க முடியுமா என்பதைக் கண்டறிய வேண்டும். அப்படியானால், இந்த விருப்பவழியை நாம் கவனிக்க வேண்டும். ஏனென்றால் நாம் அதைச் செய்தால், அவர்கள் இந்தியர்களை விடுவிக்கக்கூடும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

"வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களின் விடுதலையைப் பெறுவதற்கு மாற்றாக அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யமுடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்."

கத்தார் தனது பெரிய அளவிலான வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பைப் பாராட்ட வேண்டும் என்றும் சிறையில் உள்ள இந்தியர்களின் விஷயத்தில் அதிக நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும் என்றும் முன்னாள் தூதரக அதிகாரி ராஜீவ் டோக்ரா விரும்புகிறார்.

"இந்தியா-கத்தார் உறவுகள், கத்தாரின் வெற்றிக்கு இந்தியர்களின் பங்களிப்பு ஆகியவற்றை முக்கியமாகப் பார்க்குமாறு கத்தார் தலைவர்களிடம் நான் பரிந்துரைக்கிறேன். கத்தார் இவற்றைப் புறக்கணிக்க முடியுமா, கத்தார் பிடிவாதமாக இருக்க முடியுமா?" என்று அவர் வினவினார்.

இந்த முழு அத்தியாயமும் இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளைக் கெடுக்கும் சதி என்று ராஜீவ் டோக்ரா சந்தேகிக்கிறார்.

"அந்த நாடு பிரபலமடையத் தொடங்கிய காலத்தில் நான் கத்தார் நாட்டில் இந்திய தூதரக அதிகாரியாகப் பணியாற்றினேன். அது 80களின் பிற்பகுதியில் நடந்தது. ஷரியா நீதிமன்றத்தின் தலைவர் முதல் நாட்டின் தலைவர் (அமீர்) வரை அனைவரையும் என்னால் அணுக முடிந்தது.

அப்போது இரு நாடுகளுக்கிடையே வலுவான உறவுகள் இருந்தன. ஆனால் அந்த உறவுகள் இந்த அளவுக்குப் பலவீனமடைந்தது எப்படி என்று நான் ஆச்சரியப்படுகிறேன். இந்தியாவுக்கு எதிராக கத்தார் அமீரிடம் யாராவது ஏதாவது சொல்லியிருப்பார்களோ!,” என்று அவர் சந்தேகம் எழுப்பினார்.

"கத்தாரில் ஒரு முக்கியமான திட்டத்தில் இந்தியர்கள் வேலை செய்வதை விரும்பாதவர்கள் உள்ளனர். ஆகவே, இந்தியர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற கோணத்தைப் புறக்கணிக்க முடியாது."

https://www.bbc.com/tamil/articles/cxx6541436yo

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

கத்தாரில் பணியாற்றிய இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் முக்கிய ரகசியங்களை இஸ்ரேலுக்கு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

 

வாங்கிய சம்பளம் போதவில்லை போலும். 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெற்றிக்காசையே விட்டுவைக்காத இந்தியர்களிடம், டொலரையும், யூறோவையும் காட்டினால் விடுவார்களா என்ன? 

🤨

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் எட்டுபேருக்கு மரணதண்டனை

Published By: RAJEEBAN     27 OCT, 2023 | 05:07 PM

image

முன்னாள் இந்திய கடற்படையினர் எட்டுபேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கத்தாரில் பணியாற்றிய இவர்கள் கடந்த வருடம் வேவுபார்த்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டனர் என தகவல்கள் வெளியாகின்றன.

எனினும் கத்தார் அவர்களிற்கு எதிரான தெளிவான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை .

நீதிமன்ற தீர்ப்பு குறித்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள இந்திய அரசாங்கம் இது குறித்து கத்தார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது.

மிகவும் முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பினை முழுமையாக எதிர்பார்த்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாங்கள் குடும்பத்தவர்களுடனும் சட்டத்தரணிகளுடனும் தொடர்பு கொண்டுள்ளோம் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அல்டகரா என்ற நிறுவனத்தின் பணியாளர்களிற்கே மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ள போதிலும் அவர்கள் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் அவர்களை இந்திய கடற்படையினர் என குறிப்பிட்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/167895

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவில விட்ட விளையாட்ட அங்கையும் விட்டிருக்கினம் இனி என்ன ஒரு வெள்ளிக்கிழமை பாங்கு சொன்னவுடன் கோழிச்செவலை கவுணாவத்தையில வெட்டுறமாதிரி வெட்டிப்போடுவாங்கள் 

இந்தியனுக்கு எங்க போனாலும் கை நமநமக்கும்.

இங்கையும் இப்படித்தான் ஒரு டெலிபோண் ஒப்பிறேற்றர் கொம்பனிக்கு வந்து உங்கட பில்லுகளது விபரம் தாங்கோ உள்ளுக்குள்ள போறதுக்கு எங்களிடன் அட்மின் இருக்கு உங்கட பில்லை ஒண்டுமில்லாமல் செய்துவிடுகிறம் எண்டு சொல்லி எங்கடையளும் கொடுத்து பிறவிப்பயன் அடைந்ததுKஅல். பிறகு என்ன நடந்ததோ தெரியாது.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசயம் தெரியாதவர்கள் என்றாலும் பரவாயில்லை. இவர்கள் நன்கு கற்ற, அனுபவம் கொண்ட இந்தியர்கள். இது எல்லாம் தேவைதானா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நியாயம் said:

விசயம் தெரியாதவர்கள் என்றாலும் பரவாயில்லை. இவர்கள் நன்கு கற்ற, அனுபவம் கொண்ட இந்தியர்கள். இது எல்லாம் தேவைதானா?

பிறந்த இடம் அப்படி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

8 வீரர்களுக்கு மரண தண்டனை.., பின்னணியில் இஸ்ரேலா? பாகிஸ்தானா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகல சுகுணாகர்: கத்தாரில் 8 இந்தியர்கள் செய்த குற்றத்தையே கூறாமல் மரண தண்டனை விதிப்பதா?

பகல சுகுணாகர்

பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு,

பகல சுகுணாகர் உள்ளிட்ட இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேருக்கு கத்தாரில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
  • பதவி, பிபிசிக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் இந்திய கடற்படையின் எட்டு முன்னாள் ஊழியர்களுக்கு கத்தாரில் உள்ள கத்தார் முதன்மை நீதிமன்றம் அக்டோபர் 26 அன்று மரண தண்டனை விதித்தது. இவர்களில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பகல சுகுணாகரும் ஒருவர்.

கைது செய்யப்பட்டவர்களில், நவ்தேஜ் சிங் கில், சவுரப் வசிஷ்ட் மற்றும் பிரேந்திர குமார் வர்மா ஆகியோர் கேப்டன்களாகவும், பூர்ணேந்து திவாரி, அமித் நாக்பால், ராகேஷ் மற்றும் சுகுணாகர் ஆகியோர் தளபதிகளாகவும் பணிபுரிந்தனர்.

இவர்கள் அனைவரும் அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இத்தாலியிடமிருந்து மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் கத்தாரின் ரகசியத் திட்டத்தின் விவரங்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் கைது செய்யப்பட்டதாக பகல சுகுணாகரின் உறவினர் கபூர் கல்யாண சக்ரவர்த்தி பிபிசியிடம் தெரிவித்தார்.

கபூர் கல்யாண சக்ரவர்த்தியின் சகோதரி முன்னாள் இந்திய கடற்படைத் தளபதி பகல சுகுணாகரை மணந்தார்.

சுகுணாகரின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாகப் பதிலளித்து சுகுணாகரையும் மற்ற ஏழு பேரையும் சேர்த்து விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும் என்றும் கல்யாண சக்கரவர்த்தி கேட்டுக் கொண்டார்.

கத்தார் சிறையில் இருக்கும் சுகுணாகருடன் தனது சகோதரியைத் தவிர வேறு யாரும் பேச முடியாது என்றும் அவர் கூறினார்.

உண்மையில் பகல சுகுணகர் யார்? இந்த வழக்கின் மற்ற விவரங்கள் என்ன? இந்த வழக்கில் குடும்ப உறுப்பினர்களின் வாதம் என்ன? இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதத்தில் கல்யாண சக்கரவர்த்தி மற்ற விவரங்களை விளக்கினார். கீழே தொகுக்கப்பட்டுள்ள அனைத்தும் அவருடைய சொற்களில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன.

சுகுணாகர் இந்திய கடற்படையில் விசாகப்பட்டினம், மும்பை மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் பணியாற்றினார். கடந்த 2013ம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற சுகுணாகர், பின்னர் கத்தாரை சேர்ந்த அல் தஹ்ரா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தோஹாவில் கைது செய்யப்பட்டார்.

அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் 7 பேருக்கு அக்டோபர் 26ஆம் தேதி மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் சுகுணாகர் உள்ளிட்ட 8 பேருக்கும் அவர்கள் மீதான குற்றச்சாட்டையே பகிரங்கமாக கூறாமல் மரண தண்டனை என்று அறிவிப்பது எந்த அளவுக்கு நியாயம்?

 
பகல சுகுணாகர்

பட மூலாதாரம்,ANI

இந்த எட்டு பேரும் கத்தாரில் உள்ள அல் தஹ்ரா நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிறுவனம் கத்தார் கடற்படைக்கு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வந்தது. இத்தாலிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் ரகசியத் திட்டத்திற்காக அல் தஹ்ரா நிறுவனம் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரை பணியமர்த்தியிருந்தது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 30 அன்று கத்தாரின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அன்று இரவு அவர்கள் வீடுகளில் இருந்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து சில மின்னணு ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணை மார்ச் 29ஆம் தேதி உள்ளூர் நீதிமன்றத்தில் தொடங்கியது. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி 8 மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் நீதிமன்றம் அந்த மனுக்களை நிராகரித்தது. இதற்கிடையில், கடந்த 26ம் தேதி, 'கத்தார் முதன்மை நீதிமன்றம்' அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.

 
பகல சுகுணாகர்
படக்குறிப்பு,

அல் தஹ்ரா நிறுவனத்தின் பழைய இணையதளம் தற்போது செயல்படுவதில்லை.

நிறுவனத்தின் இணையதளம் செயல்படவில்லை

அல் தஹ்ரா நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதம் தோஹாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது. கத்தார் கடற்படைக்கு பயிற்சி, பராமரிப்பு மற்றும் தளவாட உதவிகளை வழங்குவதாக இந்நிறுவனத்தின் பழைய இணையதளம் கூறியுள்ளது. ஆனால், தற்போது அந்த இணையதளம் செயல்படுவதில்லை. புதிய இணையதளத்தில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரிகளின் விவரங்களும் அதில் இடம்பெறவில்லை. நிறுவனத்தின் பெயரும் தஹ்ரா க்ளோபல் (Dahra Global) என மாற்றப்பட்டுள்ளது. நான் எப்போதும் இந்த இணையதளத்தை கவனித்து வருகிறேன். அதனால்தான் என்னால் இவற்றைச் சரியாகச் சொல்ல முடிகிறது.

இந்த 8 பேரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். ஒரு மாதத்திற்குப் பிறகு இந்திய தூதரகத்திற்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 30 ஆம் தேதி, எட்டு பேருக்கும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் சிறிது நேரம் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.

மற்ற ஊழியர்களின் கைது குறித்து சுகுணாகர் கவலை தெரிவித்ததால், இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் அக்டோபர் 3ஆம் தேதி அவர்களைச் சந்தித்தார். அப்போதிருந்து, குடும்ப உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒரு முறை தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தோஹாவில் இருந்தால், அவர்கள் சிறைக்குச் சென்று அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இவர்கள் இஸ்ரேல் சார்பில் ரகசிய ஏஜென்டுகளாகச் செயல்பட்டதாக இந்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை.

 
பகல சுகுணாகர்
படக்குறிப்பு,

சுகுணாகர் விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்ததாக அவரது மைத்துனர் கல்யாண சக்கரவர்த்தி கூறுகிறார்.

உளவு பார்த்தாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் விசாகப்பட்டினம் பகல சுகுணாகர் ஒருவர் ஆவார். விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த அவர், அங்கு தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர், கொருகொண்டா சைனிக் பள்ளியில் பயின்றார். அதன்பின், கடற்படை பொறியியல் கல்லூரியில் படித்து, கடற்படையில் சேர்ந்தார். தனது கடும் உழைப்பால் பின்னர் தளபதி பதவிக்கு உயர்த்தப்பட்டார். அவரது பணிக்காலத்தில் ஒரு முறை, விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படையில் சில காலம் பணியாற்றினார். அதன் பிறகு ஓய்வு பெற்று தஹ்ரா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் சமீபத்தில் என் சகோதரி சிறைக்குச் சென்று சுகுணாகரைச் சந்தித்தார். அவர் சொன்ன விவரங்களின்படி, அங்கே உடல்நலம் குறித்த விஷயங்களைத் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது. அதற்கும் மிகக் குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்கப்படுகிறது. கல்யாண சக்ரவர்த்தி இதுகுறித்து கூறுகையில், ‘‘சுகுணாகருடன் பேச, சந்திக்க எனது சகோதரியைத் தவிர வேறு யாருக்கும் கத்தார் அரசு வாய்ப்பளிக்கவில்லை,” என்றார்.

 
பகல சுகுணாகர்

பட மூலாதாரம்,HINDUSTAN TIMES

படக்குறிப்பு,

மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற பிரதமர் மோதி கத்தார் எமிருடன் பேசவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பிரதமர் பேசினால் போதும்

முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்துக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், தங்களுக்கு முன் உள்ள அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

'அல் தஹ்ரா நிறுவனத்தில் பணிபுரிந்த எட்டு இந்திய ஊழியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். முழு தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்ட நிபுணர்களிடம் நாங்கள் தொடர்ந்து பேசிவருகிறோம். இது குறித்து கத்தார் அதிகாரிகளிடமும் பேசுவோம்” என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கத்தார் அரசிடம் பிரதமர் மோதி பேசினால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று கல்யாண சக்கரவர்த்தி கூறினார். இந்த வழக்கில் அரசு ஏற்கனவே தீவிரம் காட்டிவருவதாகவும், ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அரசை விட விரைவாக வேலை செய்ய விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்திய அரசின் பதில் என்ன?

இந்த வழக்கு தொடர்பாக சுகுணாகரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் விசாகப்பட்டினத்தில் பாஜக ராஜ்யசபா எம்.பி.யான ஜி.வி.எல். நரசிம்ம ராவை சந்தித்தனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க இந்திய அரசு கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் கத்தாருக்கான இந்திய தூதர் விபுலிடம் பேசியதாக ஜி.வி.எல். நரசிம்ம ராவ் தெரிவித்தார்.

கத்தார் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரத்தை அறிந்த எம்.பி ஜி.வி.எல். நரசிம்ம ராவ், இந்த உத்தரவின் இரண்டு வரிகள் மட்டுமே நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமைக்குள் முழு தீர்ப்பும் கிடைக்கும் என்றும் உள்ளூர் நீதிமன்றம் கூறியதாக தெரிவித்தார்.

15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கத்தாரில் அதிகாரம் மிக்க "கோர்ட் ஆஃப் கேசேஷன்" நடைமுறையும் இருக்கும் இருக்கும் என்றும் ஜிவிஎல் நரசிம்ம ராவ் நினைவூட்டினார். அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னாள் கடற்படை ஊழியர்களை விடுவிக்க “முயற்சித்து வருகிறோம்” என்றார் அவர்.

முன்னாள் கடற்படை வீரர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த இந்திய அரசு, குறிப்பாக வெளியுறவு அமைச்சகம் தேவையான உதவிகளை வழங்கும் என்று அவர் கூறினார். ஜி.வி.எல். நரசிம்மராவ், ராஜ்யசபா எம்பி மட்டுமல்லாது, வெளியுறவுத் துறைக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cjr0j1wre1ro

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கத்தாரில் மரண தண்டனைக்குள்ளான 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை: அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

30 OCT, 2023 | 12:40 PM
image

புதுடெல்லி: உளவு பார்த்த புகாரில் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரின் குடும்பத்தினரையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். அப்போது, "இந்த வழக்குக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அவர்களை விடுதலை செய்வதற்கு அனைத்து முயற்சிகளும் அரசு மேற்கொள்ளும் " என்று தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "கத்தார் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ள 8 இந்தியர்களின் குடும்பத்தினரை இன்று சந்தித்தேன். அப்போது, அரசு இந்த வழக்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை எடுத்துரைத்தேன். அந்தக் குடும்பத்தினரின் வலிகளைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். கூடவே 8 பேரையும் விடுதலை செய்வதற்கு அனைத்து முயற்சிகளும் அரசு மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேர் நீர்மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்களை, இஸ்ரேலுக்கு வழங்கி உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு இருந்தது.

இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை, கத்தார் உளவுத் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்ட 8 இந்தியர்களும் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமைச் சிறையில் இருந்து வந்தனர். இது தொடர்பான வழக்கு அக்.26 வியாழக்கிழமை கத்தார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கத்தார் நாட்டில் பணிபுரிந்த இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த தீர்ப்புக்கு இந்திய அரசு தனது அதிருப்தியை வெளிபடுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தத் தீர்ப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது. விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். 8 பேரின் குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். மேலும், அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். கத்தார் அதிகாரிகளுடனும் இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இந்த வழக்குக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்’’ எனத் தெரிவித்திருந்தது.

https://www.virakesari.lk/article/168062

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கத்தார்: முன்னாள் கடற்படையினர் மரண தண்டனை பற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய கடற்படை தளபதி

கத்தாரில் கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரிகள்: இந்திய கடற்படை தளபதி கூறியது என்ன?

பட மூலாதாரம்,ANI

4 மணி நேரங்களுக்கு முன்னர்

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.

இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்த இந்திய அரசு, இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இது குறித்து இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர். ஹரிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

கத்தார் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் இந்திய கடற்படை ஊழியர்களை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றுவது இந்தியாவுக்கு பெரிய ராஜ்ஜீய சவாலாகக் கருதப்படுகிறது.

 
Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சௌரப் வசிஷ்டா, கேப்டன் வீரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுக்னகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர்.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

இவர்கள் கடந்த ஆண்டு(2022) ஆகஸ்ட் 30ஆம் தேதி கத்தாரில் கைது செய்யப்பட்டனர். அன்றிலிருந்து அவர்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது.

அவர்கள் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டதற்கும் அவர்களுக்கு மரண தண்டனை விதித்ததற்கும் எந்தக் காரணமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியின்படி, முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை.

 

இந்தியர்களின் மரண தண்டனை குறித்து இந்திய கடற்படை தளபதி என்ன கூறினார்?

கத்தாரில் கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரிகள்: இந்திய கடற்படை தளபதி கூறியது என்ன?

பட மூலாதாரம்,ANI

கத்தாரில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற 8 இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர். ஹரிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் அவர் பேசுகையில் சட்ட நடவடிக்கைகள் மூலம் இந்திய அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், "சம்பந்தப்பட்ட 8 கடற்படை அதிகாரிகளும் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு என்னெவென்று இன்னும் கத்தார் பொதுவெளியில் தெரியப்படுத்தவில்லை.

கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 8 கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினரையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சந்தித்தார்.

மேலும், இந்திய அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவத்தோடு இந்த விவகாரத்தைக் கவனித்து வருவதாகவும் இந்தக் கடினமான நேரத்தில் அதிகாரிகளின் அதிகாரிகளின் குடும்பத்தாருக்கு அரசாங்கம் ஆறுதலாக இருக்கும்," எனவும் அவர் தெரிவித்தார்.

 

இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?

கத்தாரில் கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரிகள்: இந்திய கடற்படை தளபதி கூறியது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேரை கத்தார் அரசு கைது செய்தது. கடந்த மார்ச் மாதம் அவர்கள் மீது உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளும் இந்திய குடிமகன்களுமான கைது செய்யப்பட்ட 8 பேரும் கத்தாரை சேர்ந்த ஜஹிரா அல் அலாமி எனும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்காக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இந்த திட்டத்தின் நோக்கமானது ரேடாரில் சிக்காத நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட இத்தாலிய நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது.

இந்தியாவைச் சேர்ந்த 75 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். அதில் பெரும்பாலானோர் இந்திய கடற்படையில் முன்னாள் அதிகார்கள். கடந்த மே மாதத்தில், 2022ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த நிறுவனத்தை மூடப்போவதாக நிறுவனம் சார்பில் தெரிவித்திருந்தனர்.

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு நிறுவனத்துடனான தொடர்பு என்ன?

கத்தாரில் கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரிகள்: இந்திய கடற்படை தளபதி கூறியது என்ன?

பட மூலாதாரம்,HINDUSTAN TIMES

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரான கமாண்டர் பூர்ணேந்து திவாரி இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2019இல் அவருக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டது.

அப்போது கத்தாருக்கான அப்போதைய இந்தியத் தூதரும், கத்தார் பாதுகாப்புப் படைகளின் சர்வதேச ராணுவக் கூட்டுறவின் முன்னாள் தலைவருமான பி.குமரன் மூலம் கௌரவிக்கப்பட்டார்.

இந்திய கலாசார மையத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் கவுசிக் விழாவில் கலந்துகொண்டார்.

தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர்.

குடும்பத்தினர் என்ன கூறுகின்றனர்?

எட்டு பேரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட பிறகு, ஒரு இந்திய இணைய ஊடகம் கமாண்டர் பூர்ணேந்து திவாரியின் சகோதரி மருத்துவர் மிது பார்கவா மற்றும் கேப்டன் நவ்தேஜ் சிங் கில்லின் சகோதரர் நவ்தீப் கில் ஆகியோரிடம் பேசியது.

அப்போது, கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோதி அரசுக்கு மிது கார்கவா வேண்டுகோள் விடுத்திருந்தார். தனது சகோதரர் வயது முதிர்ந்தவர் என்றும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

 
கத்தாரில் கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரிகள்: இந்திய கடற்படை தளபதி கூறியது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவர் 63 வயதில் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதைth தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று மிது தெரிவித்திருந்தார்.

பூர்ணேந்து திவாரி சிறையில் இருந்து தங்களின் 83 வயதான தாயுடன் பேசியதாகவும், மகனின் பாதுகாப்பு குறித்து தாயார் கவலைப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

கேப்டன் நவ்தேஜ் சிங் கில்லின் பிறந்த நாளான செப்டம்பர் 6ஆம் தேதி அவருக்கு வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து செய்தி அனுப்பியதாகவும் அதற்கு அவர் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்ததாகவும் அவரது சகோதரர் நவ்தீப் கில் கூறினார்.

பின்னர் அவருடனான தொலைபேசி தொடர்பு நின்றுபோனது. நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கத்தாரின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. நவ்தீப் கில், தனது சகோதரருக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகக் கூறினார்.

தனது சகோதரர் ஓய்வு பெறும் வரை இந்திய கடற்படையில் பணியாற்றியதாகவும் தனது அண்ணனை இந்தியாவுக்கு கொண்டு வருவது அரசின் பொறுப்பு என்றும் நவ்தீப் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கைது செய்யப்பட்ட இந்தியர்களை அழைத்து வருவதற்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியிருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/cn03vpzyzg2o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கத்தாரில் மரண தண்டனை: இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை காக்கும் வழிகள் என்ன?

இந்தியா - கத்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ராகவேந்திர ராவ்
  • பதவி, பிபிசி நிருபர்
  • 31 அக்டோபர் 2023

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அனைவரின் பார்வையும் இந்தியா அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதை நோக்கிதான் இருக்கிறது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை கூறுகையில் கத்தார் அரசின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும் இந்த விவகாரத்தில் சட்டரீதியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்திருந்தது.

கடந்த திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட இந்தியர்களின் குடும்பங்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சந்தித்தார். அதன்பின்பு பேசிய அவர், “முன்னாள் அதிகாரிகளின் குடும்பத்தினரின் வலியை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியர்களை விடுவிக்கும் அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும். அவர்களின் குடும்பங்களோடும் நெருங்கிய தொடர்பில் நாங்கள் இருப்போம்” என நம்பிக்கை தெரிவித்தார்.

 
இந்தியா கத்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி

பிரதமர் மோதியின் நம்பகமான அதிகாரியிடம் பொறுப்பு

8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை காப்பாற்றும் இந்திய அரசின் முயற்சிகளை தலைமை தாங்கும் பொறுப்பு பிரதமர் நரேந்திர மோதியின் நம்பிக்கைக்குரிய இராஜதந்திரியான (Diplomat) தீபக் மிட்டலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1998 ஆம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த இந்திய வெளியுறவுப் பணி (IFS) அதிகாரியான தீபக் மிட்டல் தற்போது பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிகிறார்.

அவர் கத்தாருக்கான இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். மேலும், அவர் கத்தார் அரசாங்கத்தில் உயர்மட்டத்தோடு நல்ல உறவுகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளுடனான வெளியுறவு பேச்சுவார்த்தைகளை கையாள்வதில் சிறந்த நிபுணராக தீபக் மிட்டல் அறியப்படுகிறார். 2019 ஆம் ஆண்டில் சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷன் ஜாதவ் வழக்கு விசாரணையின் போது, பாகிஸ்தானின் மூத்த அதிகாரி கைகுலுக்க கை நீட்டிய போது தீபக் மிட்டல் கைகளை கூப்பி 'நமஸ்தே' எனக்கூறி பதிலளித்தார். அந்தப்படம் உடனே வைரலானது. அதிலிருந்து மிட்டல் வெளிச்சத்திற்கு வந்தார்.

ஏப்ரல் 2020ல், மிட்டல் கத்தாருக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.

2021ம் ஆண்டில், கத்தாரில் இந்திய தூதராக பணியாற்றியபோது, உயர் தலிபான் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்சாயுடன் மிட்டல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்முறையாக இந்தியா நடத்திய முறையான இராஜதந்திர பேச்சுவார்த்தை அதுதான்.

 
இந்தியா கத்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மிட்டலின் இந்த புகைப்படம் வைரலானது.

8 பேரையும் காக்கும் வழிகள் என்ன?

இந்த நேரத்தில் அனைவரிடமும் இருக்கக்கூடிய முக்கியக் கேள்வி 8 இந்தியர்களையும் காப்பாற்றுவதற்கு இந்தியாவிடம் இருக்கக்கூடிய வாய்ப்புகள் என்ன என்பதுதான்.

நிபுணர்களை பொறுத்தவரை கத்தாரோடு இந்தியாவிற்கு இருக்கக்கூடிய நட்புறவை பயன்படுத்துவதுதான் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.

ஏ.கே. மஹபத்ரா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மேற்காசியத் துறையில் பேராசிரியராக இருக்கிறார்.

அவர் கூறுகையில், “முதலாவதாக, இந்தியாவிற்கு கத்தார் எதிரி நாடு கிடையாது. இந்தியாவோடு கத்தாருக்கு நட்புறவும் பொருளாதார உறவும் உள்ளது. இந்தியாவிற்கு கிட்டத்தட்ட 40 சதவீதம் எரிவாயு கத்தாரிலிருந்துதான் வருகிறது. 6 முதல் 7 லட்சம் இந்தியர்கள் கத்தாரில் பணிபுரிகின்றனர். இந்திய நிறுவனங்கள் கத்தாரில் முதலீடு செய்திருக்கிறார்கள். எனவே இந்த ஒரு விவகாரத்தால் இத்தனை விஷயங்களையும் இரண்டு நாடுகளும் பாழாக்கிக் கொள்ளமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

“இந்தியர்களின் கைது குறித்து கத்தார் எந்த ஒரு விவரத்தையும் தெரிவிக்காததால் இந்தியா முதலில் வெளியுறவின் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்க வேண்டும்” என மஹபத்ரா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் இந்த விவகாரத்தில் பிராந்திய அளவில் இந்தியா கத்தார் மீது அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம் எனத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “ஹமாஸ் அமைப்பின் அக்டோபர் 7ம் தேதி தாக்குதலுக்கு பிறகு மேற்கு ஆசியாவில் நாடுகள் மத்தியில் ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது. இரான், துருக்கி, கத்தார் மற்றும் ஒரு அளவிற்கு பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒரு பக்கமும் மற்ற அரபு நாடுகள் ஒரு பக்கமும் எனப் பிரிந்துள்ளனர்.”

“ஓமன் மற்றும் குவைத் போன்ற அரபு நாடுகளுக்கு கத்தாரோடு நல்ல உறவு உள்ளது. எனவே இந்த நாடுகளோடு பேசி கத்தார் மீது இந்தியா அழுத்தம் தரலாம். மேலும், அமெரிக்கா மூலமாகவும் கத்தார் மீது இந்தியா அழுத்தம் தரலாம். கத்தாரில் இன்னும் அமெரிக்காவின் அதிகாரம் உள்ளது. அமெரிக்காவின் கடற்படை தளம் ஒன்று கத்தாரில் உள்ளது” என அவர் தெரிவித்தார்.

 
இந்தியா கத்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கத்தார் பிரதமர் ஷேக் அப்துல்லா பின் நாசர் பின் கலீஃபா அல் தானியுடன் பிரதமர் நரேந்திர மோடி (2016 புகைப்படம்)

இந்தியர்களுக்கு கத்தார் அரசரின் மன்னிப்பு கிடைக்குமா?

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எட்டு இந்தியர்களுக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. மேல்முறையீடு செய்வதில் இந்தியர்களுக்கு இந்திய அரசு முழு உதவியையும் வழங்கி வருகிறது. இந்த மேல்முறையீட்டில் என்ன முடிவுகள் வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சட்ட நடிவடிக்கைகள் மூலம் 8 இந்தியர்களையும் இந்திய அரசால் காப்பாற்ற முடியவில்லை என்றால் கத்தார் அரசரின் மன்னிப்பு மட்டும்தான் இந்தியர்களை காப்பாற்றும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளியுறவு நிபுணரும் எழுத்தாளருமான ப்ரம்ம செலானி கூறுகையில், “இந்த தண்டனையை எதிர்த்து இந்தியர்கள் அடுத்த நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டால் கத்தாரின் உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.”

“இந்த வழக்கின் அரசியல் தன்மையை பார்க்கும்போது, 8 இந்தியர்களின் தண்டனை ரத்து செய்யப்படுவது கத்தார் அரசரின் கையில்தான் உள்ளது. கத்தார் அரசரான ஷேக் தமிம் பின் ஹமத் அல் தனிக்கு எந்த ஒரு குற்றவாளியின் தண்டனையையும் ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது. கத்தாரின் தேசிய தினத்தில் நிறைய கைதிகளை கத்தார் அரசு விடுதலை செய்யும். ஒரு வேளை 8 இந்தியர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது இந்தியா-கத்தார் உறவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்.

 
இந்தியா கத்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹம்த் அல் தானி

பேராசிரியர் ஏ.கே. மஹாபத்ரா கூறுகையில், "கத்தாரில் நடப்பது ஜனநாயக ஆட்சி கிடையாது. அது முடியாட்சி. இந்த வழக்கில் கத்தாரின் ஆட்சியாளர்களும் மன்னிப்பு வழங்கலாம். அவர்கள் விரும்பினால், மரண தண்டனைக்கு பதிலாக சில ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கொடுக்கலாம். அதன்பின்பு 8 இந்தியர்களுக்கும் வரி விதிக்கப்பட்டு பிறகு அவர்களை இந்தியாவிற்கும் கொண்டு வரலாம்" எனத் தெரிவித்தார்.

ஜோர்டான் மற்றும் லிபியாவுக்கான இந்திய தூதராக அனில் திரிகுணாயத் பணியாற்றியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு ஆசியப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.

திரிகுணாயத்தும் இதை ஒப்புக்கொள்கிறார். அவர் கூறுகையில், "இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தை ஒரு வழி. கத்தாருடன் இந்தியா வைத்திருக்கும் உறவுகளை கருத்தில் கொண்டு, கத்தாரின் அரசர் இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கலாம். இது தான் கடைசிவழி மற்றும் இரு அரசாங்கங்களின் பேச்சுவார்த்தை மூலம்தான் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முடியும்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "கைதிகளை மாற்றிக்கொள்வது குறித்து கத்தாருடன் இந்திய அரசு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறது. கத்தார் அரசரின் இந்தியா வருகையின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், மேல்முறையீட்டு நீதிமன்றம் இவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு அவர்களை கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றுவது பற்றி இந்தியா பேச்சுவார்த்தை நடத்தலாம்” என அவர் தெரிவித்தார்.

இந்தியா கத்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தோஹாவில் கிரிக்கெட் விளையாடும் இந்திய இளைஞரின் படம். கத்தாரில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர்.

 

சர்வதேச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம்?

பேராசிரியர் மஹாபத்ராவின் கூற்றுப்படி, இந்த பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு காணப்படவில்லை என்றால், இந்தியாவுக்கு வேறு ஒரு வழி உள்ளது.

குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் செய்தது போல் சர்வதேச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தலாம் என்று அவர் கூறுகிறார்.

அனில் திரிகுணாயத் கூறுகையில், சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்வதே இந்தியாவிற்கான கடைசி வழியாக இருக்கும் என்றும் இந்த வழியை முயற்சி செய்து பார்ப்பதற்கான அவசியம் இருக்காது. அரசியல்ரீதியான பேச்சுவார்த்தையில்தான் எல்லாம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கத்தாரிடம் இருந்துதான் இந்தியா அதிக எரிவாயு இறக்குமதி செய்வதாகவும் இருநாடுகளுக்கும் பெரிய அரசியல் பிரச்சனையும் எதுவும் இல்லை. எனவே பேச்சுவார்த்தை மூலம் மட்டும்தான் இந்த விவகாரத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு கத்தார் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய எரிவாயு வளம் நிறைந்த நாடுதான் கத்தார். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக கத்தார் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஹமாஸுடன் ஆழமான உறவுகளை வைத்திருப்பதாக கத்தார் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

சமீபத்தில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் கத்தாரின் பேச்சுவார்த்தையினால்தான் இரண்டு அமெரிக்க பணயக்கைதிகளின் விடுதலை சாத்தியமானது.

எனவே இஸ்ரேலுடன் கத்தாருக்கு நல்ல உறவு இல்லை என்பது தெளிவாகிறது.

இந்த எட்டு இந்தியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து கத்தார் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. ஆனால் அவர்கள் கத்தாரில் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதனையடுத்து, இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கும் இஸ்ரேல் உடனான இந்தியாவின் அணுகுமுறைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதும் விவாதிக்கப்படுகிறது.

பேராசிரியர் மொஹபத்ரா கூறும்போது, "இஸ்ரேல்-பாலத்தீனம் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தங்களுக்கு பிடிக்கவில்லை என கத்தார் மறைமுகமாக கூற விரும்புகிறது. இந்தியாவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்வது கத்தாருக்கு எளிதானது அல்ல, ஏனென்றால் அவர்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை"

 
இந்தியா கத்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

8 இந்தியர்களின் மரண தண்டனைக்கும் இஸ்ரேல் உடனான இந்தியாவின் அணுகுமுறைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என விவாதிக்கப்படுகிறது.

அனில் திரிகுணாயத் கூறுகையில், "இந்த 8 பேர் மீதான வழக்கு ஒரு வருடமாக நடந்து வருவதால், இந்த இரண்டு விஷயங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இதுவரை வெளியான அறிக்கைகளில், தீவிரவாதம் குறித்த விவகாரங்களில் இந்தியா எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்றும் வன்முறையை எப்படியும் நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது”.

பல துறைகளில் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் நம்பியிருக்கும் நிலையில் கத்தாருடன் இந்தியா நேரடி மோதலில் ஈடுபடுவது விவேகமற்றது என்று பேராசிரியர் மஹாபத்ரா கூறுகிறார்.

அவர் கூறுகிறார், "தற்போதைய சூழலை மோசமாக்காமல் இந்திய அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cv232mkdzvko

Posted

கத்தார் தனது முடிவில் இருந்து பின் வாங்காது என நினைக்கிறேன்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்

கத்தார், இந்தியக் கடற்படையினர், மரண தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

மரண தண்டனை விதிக்கப்பட்டு கத்தார் சிறையிலிருக்கும் எட்டு இந்திய முன்னாள் கடற்படையினர் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

நான்கு நாட்களுக்கு முன்பு, கத்தார் சிறையில் உள்ள எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை இந்திய தூதர் சந்தித்தார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை (டிசம்பர் 7) தெரிவித்தார்.

இந்த எட்டு இந்திய அதிகாரிகளும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கத்தார் சிறையில் உள்ளனர். அக்டோபர் 26 அன்று, கத்தார் நீதிமன்றம் இந்த எட்டு இந்திய அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதித்தது.

இந்த முடிவால் இந்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இதற்கு தீர்வு காண அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

மரண தண்டனையை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் இந்த எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்திருந்தனர்.

 

‘கைதிகளைச் சந்திக்க அனுமதி கிடைத்தது’

டிசம்பர் 7-ஆம் தேதி வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இந்திய அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். “இது கைதிகளின் குடும்பம் சார்பாகச் செய்யப்பட்டது. அதன் பிறகு இரண்டு விசாரணைகள் நடந்தன. ஒன்று நவம்பர் 30-ஆம் தேதியும் மற்றொன்று நவம்பர் 23-ஆம் தேதியும் நடந்ததாக நான் நினைக்கிறேன்,” என்றார்.

மேலும், அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடக்கும் என்று நினைப்பதாகவும், வழக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அதற்கு அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

"இதற்கிடையில், டிசம்பர் 3 அன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள எட்டு பேரையும் சந்திக்க எங்கள் தூதருக்கு தூதரக அனுமதி கிடைத்தது," என்றார்.

‘தி டெலிகிராஃப்’ செய்தி இணையதளத்தின்படி, இதற்கு முன்பே இந்திய தூதரக அதிகாரிக்கு தூதரக அணுகல் கிடைத்தது.

கடந்த வாரம் துபாயில் நடந்த COP28 உச்சிமாநாட்டின் போது கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்தபோது பிரதமர் மோதி இந்த விவகாரத்தை எழுப்பினாரா என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாக்சியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு நேரடியான பதிலை அளிக்காமல், சமூக வலைதளமான X-இல் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவை பாக்சி குறிப்பிட்டார்.

அந்தப் பதிவில், “இந்தியா-கத்தார் இருதரப்பு உறவுகள் குறித்தும், கத்தாரில் உள்ள இந்திய சமூகம் குறித்தும் நாங்கள் உரையாடினோம்,” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 
கத்தார், இந்தியக் கடற்படையினர், மரண தண்டனை

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி

என்ன நடந்தது இச்சம்பவத்தில்?

2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கத்தார் அரசாங்கம் 8 முன்னாள் இந்திய கடற்படையினரைக் கைது செய்தது. அவ்வாண்டு மார்ச் மாதம் அவர்கள் மீது உளவு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்ட எட்டு இந்திய குடிமக்களும் முன்னாள் கடற்படை அதிகாரிகள். கத்தாரில் இருக்கும் ஜாஹிரா அல் அலாமி என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள்.

இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்காக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் பணியாற்றி வந்தது. ரேடாரைத் தவிர்க்கக்கூடிய இத்தாலிய உயர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

நிறுவனத்தில் 75 இந்தியப் பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரிகள். அந்நிறுவனம் 2022-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி நிறுவனத்தை மூடப்போவதாக கூறியிருந்தது.

 

நிறுவனத்தின் பின்னணி

அந்நிறுவனத்தின் இணையதளத்தில், அது கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் உள்ளூர் வணிகப் பங்காளி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தனியார் நிறுவனம் கத்தார் ஆயுதப்படைகளுக்கு பயிற்சி மற்றும் சேவைகளை வழங்கி வந்தது.

பாதுகாப்பு உபகரணங்களை இயக்குதல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் தன்னை ஒரு நிபுணராக இந்நிறுவனம் விவரிக்கிறது.

இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் பல இந்தியர்களும் அடங்குவர்.

"பாதுகாப்பு உபகரணங்களை இயக்குவதிலும் மக்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் இது கத்தாரில் முன்னணியில் உள்ளது" என்று நிறுவனத்தின் LinkedIn பக்கம் கூறுகிறது.

மேலும், "பாதுகாப்பு மற்றும் விண்வெளி விஷயங்களில் அல் ஜாஹிரா நிறுவனம் கத்தாரில் ஒரு சிறந்த நிலையில் உள்ளது," என்று கூறியிருக்கிறது.

ஊடக அறிக்கைகளின்படி, இந்நிறுவனத்தின் தலைவர் காமிஸ் அல் அஜாமி மற்றும் கைது செய்யப்பட்ட எட்டு இந்தியர்கள் மீதான சில குற்றச்சாட்டுகள் பொதுவானவை, சில தனித்துவமானவை.

உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு ஊழியர்களும் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது சம்பள பாக்கியும் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், கத்தார் நிறுவனத்தை மூட உத்தரவிட்டது மற்றும் அதன் சுமார் 70 ஊழியர்களை 2023-ஆம் அண்டு மே மாதத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

கத்தார், இந்தியக் கடற்படையினர், மரண தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கத்தாரின் உளவு நிறுவனம், இந்த உளவு வேலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மின்னணு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறது

உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு

கைது செய்யப்பட்ட ஊழியர்கள் இஸ்ரேலுக்கு முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய ஊடகங்கள் மற்றும் பிற உலகளாவிய ஊடகங்களின் அறிக்கைகளின்படி, இந்த முன்னாள் கடற்படையினர் மிகவும் மேம்பட்ட இத்தாலிய நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது தொடர்பான கத்தாரின் உளவுத் திட்டம் குறித்து இஸ்ரேலுக்கு தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதாவது இந்த மாலுமிகள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும் குற்றம் சாட்டப்படலாம்.

கத்தாரின் உளவு நிறுவனம், இந்த உளவு வேலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மின்னணு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறது.

கத்தாரின் தனியார் பாதுகாப்பு நிறுவனமான ஜாஹிரா அல் அலாமியில் பணியாற்றிய இந்த முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள், கத்தார் கடற்படைக்கு பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்து வந்தனர்.

இந்தியா மற்றும் கத்தார் இடையேயான ஒப்பந்தத்தின் கீழ் அவர்கள் நியமிக்கப்பட்டனர்.

 
கத்தார், இந்தியக் கடற்படையினர், மரண தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2015-ஆம் அண்டு கத்தாரின் மன்னருடன் பிரதமர் மோதி

இந்தியா-கத்தார் உறவுகள்

இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே நட்புறவு உள்ளது. ஆனால் இந்த உறவில் முதல் சவால் ஜூன் 2022-ஆம் ஆண்டு வந்தது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களை வெளியிட்டார்.

அந்த நேரத்தில், இந்தியாவிடம் 'பொது மன்னிப்பு' கோரிய முதல் நாடு கத்தார். கத்தார் இந்திய தூதரை அழைத்து தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இஸ்லாமிய உலகில் கோபம் பரவாமல் இருக்க, பா.ஜ.க உடனடியாக நுபுர் ஷர்மாவை நீக்கியது.

இப்போது எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை, இந்தியா-கத்தார் உறவுகளுக்கு இரண்டாவது பெரிய சவாலாக கருதப்படுகிறது. கத்தாரில் சுமார் 8-9 லட்சம் இந்தியர்கள் பணிபுரிவதால், அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க இந்திய அரசு முயற்சிக்கும்.

மேலும், இந்தியா கத்தாரில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. கத்தார், இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்வதில் மிகப்பெரிய நாடு.

காஸாவில் இஸ்ரேலின் குண்டுவெடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில், கத்தார் இஸ்ரேலுடனும் பாலத்தீனத்துடனும் மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்கும் நேரத்தில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cz92l1l3y44o

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கத்தார்: மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு தண்டனை குறைப்பு - முழு விவரம்

கத்தாரில் முன்னாள் கடற்படை அதிகாரிகளின் மரண தண்டனை: இந்திய அரசுக்கு உள்ள ராஜ்ஜீய சவால்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தீபக் மண்டல்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 28 அக்டோபர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்

கத்தாரில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களுடைய தண்டனை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் முழு விவரங்கள் கிடைப்பதற்காகக் காத்திருப்பதாகவும் செய்திறிவிப்பில் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

“கத்தாருக்கான இந்திய தூதர், ஏனைய அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்தனர். இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் இந்திய அரசு அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. மேலும் அனைத்து தூதரக, சட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்குவோம்.

இந்த வழக்கு குறித்த விவரங்கள் ரகசியமானது மற்றும் உணர்திறன் மிக்கது என்பதால், இந்த நேரத்தில் மேற்கொண்டு எந்தக் கருத்தையும் கூற இயலாது,” என்றும் அந்தச் செய்தியறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் யார்?

முன்னதாக, கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இந்திய அரசுக்குப் பெரும் சவாலாக மாறியது.

இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.

இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்த இந்திய அரசு, ஆனால் இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

கத்தார் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் இந்திய கடற்படை ஊழியர்களை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றுவது இந்தியாவுக்கு பெரிய ராஜ்ஜீய சவாலாகக் கருதப்படுகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களில் கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சௌரப் வசிஷ்டா, கேப்டன் வீரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுக்னகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர்.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

 
கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜெய்சங்கர் - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்

இவர்கள் கடந்த ஆண்டு(2022) ஆகஸ்ட் 30ஆம் தேதி கத்தாரில் கைது செய்யப்பட்டனர். அன்றிலிருந்து அவர்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது.

அவர்கள் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டதற்கும் அவர்களுக்கு மரண தண்டனை விதித்ததற்கும் எந்தக் காரணமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியின்படி, முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை.

மோதி அரசு மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த விவகாரத்தில் மோதி அரசு தலையிட வேண்டும் என்று இந்தியாவில் அழுத்தம் எழுந்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக ஊடக பக்கத்தில், “கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் தொடர்பான விவகாரத்தில் மிகவும் மோசமான முன்னேற்றங்கள் இருப்பதை இந்திய தேசிய காங்கிரஸ் மிகுந்த வருத்தத்துடனும், வேதனையுடனும், உணர்ந்துள்ளது.

மேல்முறையீடு செய்வதில் அதிகாரிகளுக்குப் போதுமான ஆதரவு கிடைப்பதை உறுதி செய்ய இந்திய அரசாங்கம் கத்தார் அரசுடனான தனது ராஜஜீய மற்றும் அரசியல் செல்வாக்கை முடிந்தவரை பயன்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம். மேலும், அவர்களை விரைவில் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று பதிவிட்டிருந்தார்.

கத்தாரில் முன்னாள் கடற்படை அதிகாரிகளின் மரண தண்டனை: இந்திய அரசுக்கு உள்ள ராஜ்ஜீய சவால்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதேபோல், ஏஐஎம்ஐஎம் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தனது X சமூக ஊடக பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோதி முன்னாள் பணியாளர்கள் அனைவரையும் திரும்ப அழைத்து வர வேண்டும். கத்தாரில் சிக்கித் தவிக்கும் முன்னாள் கடற்படை அதிகாரிகளின் பிரச்னையை ஆகஸ்ட் மாதம், நான் எழுப்பினேன். இன்று அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடுகள் தன்னை எவ்வளவு நேசிக்கின்றன என்பதைப் பற்றி பிரதமர் மோதி பெரிதாகப் பேசுகிறார். அவர் முன்னாள் அதிகாரிகளைத் திரும்ப அழைத்து வர வேண்டும். அவர்கள் மரண தண்டனையை எதிர்கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” என்று கூறியுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் ஷீலா பட், “தனியார் நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு இந்திய அரசாங்கம் உதவ முயன்றபோது, கத்தார் ஒத்திசைய விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் இந்த வழக்கு மூலம் பேரம் பேச விரும்பினர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியாவுடனான இந்தியாவின் நிலையான இருதரப்பு உறவுகளை அது விரும்பவில்லை. ஆகவே, இந்தப் பிராந்தியத்தில் துருக்கி மற்றும் இரானுடன் இணைந்து கத்தார் ஒரு பெரிய அரசியல் ஆட்டத்தை விளையாடுகிறது,” என்று தனது சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் அல் டஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற பாதுகாப்பு சேவைகளை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள்.

 
கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

இந்த நிறுவனம் ஓமன் குடிமகன் காமிஸ் அல்-அஜ்மிக்கு சொந்தமானது. அஜ்மி ராயல் ஓமன் விமானப்படையின் படைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த எட்டு இந்தியர்களுடன் அவரும் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர் நவம்பர் 2022இல் விடுவிக்கப்பட்டார்.

நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ன?

நிறுவனத்தின் பழைய இணையதளம் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. கத்தார் அமிரி தேசியப் படைக்கு (QENF) பயிற்சி, தளவாடங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கியுள்ளது என்று நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய இணையதளத்தில் நிறுவனத்தின் பெயர் டஹ்ரா குளோபல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கத்தார் அமிரி தேசிய படைக்கு வழங்கப்பட்ட அதன் சேவைகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதன் தலைமைப் பொறுப்புகளில் இருந்த கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு கத்தார் அரசுக்கு இந்நிறுவனம் உதவுவதாக பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன. இருப்பினும், இதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

 
கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர்.

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு நிறுவனத்துடனான தொடர்பு என்ன?

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரான கமாண்டர் பூர்ணேந்து திவாரி இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2019இல் அவருக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டது.

அப்போது கத்தாருக்கான அப்போதைய இந்தியத் தூதரும், கத்தார் பாதுகாப்புப் படைகளின் சர்வதேச ராணுவக் கூட்டுறவின் முன்னாள் தலைவருமான பி.குமரன் மூலம் கௌரவிக்கப்பட்டார்.

இந்திய கலாசார மையத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் கவுசிக் விழாவில் கலந்துகொண்டார்.

தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர்.

 
கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இதை இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சியும் உறுதி செய்துள்ளார்.

எதற்காக, எப்படி இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன?

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளை கத்தாரின் உளவுத்துறை நிறுவனமான ஸ்டேட் செக்யூரிட்டி பீரோ கைது செய்துள்ளது.

அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் நடுப்பகுதியில் இந்திய தூதரகத்துக்கு தெரிய வந்தது.

செப்டம்பர் 30 அன்று, இவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் சிறிது நேரம் பேச அனுமதிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக அவர்களுக்கு தூதரக அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, இந்திய தூதரக அதிகாரி ஒருவர் இவர்களைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு, அடுத்த சில மாதங்களுக்கு கைது செய்யப்பட்ட இந்தியர்கள் ஒவ்வொரு வாரமும் தங்கள் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இதை இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சியும் உறுதி செய்துள்ளார்.

விசாரணையின் போதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார். முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்திய அரசோ அல்லது கத்தார் அரசோ பொதுவெளியில் தெரியப்படுத்தவில்லை.

 
கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தனது சகோதரர் ஓய்வு பெறும் வரை இந்திய கடற்படையில் பணியாற்றியதாகவும் தனது அண்ணனை இந்தியாவுக்கு கொண்டு வருவது அரசின் பொறுப்பு என்றும் நவ்தீப் கூறினார்.

குடும்பத்தினர் என்ன கூறுகின்றனர்?

எட்டு பேரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட பிறகு, ஒரு இந்திய இணைய ஊடகம் கமாண்டர் பூர்ணேந்து திவாரியின் சகோதரி மருத்துவர் மிது பார்கவா மற்றும் கேப்டன் நவ்தேஜ் சிங் கில்லின் சகோதரர் நவ்தீப் கில் ஆகியோரிடம் பேசியது.

அப்போது, கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோதி அரசுக்கு மிது கார்கவா வேண்டுகோள் விடுத்திருந்தார். தனது சகோதரர் வயது முதிர்ந்தவர் என்றும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அவர் 63 வயதில் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதைth தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று மிது தெரிவித்திருந்தார்.

பூர்ணேந்து திவாரி சிறையில் இருந்து தங்களின் 83 வயதான தாயுடன் பேசியதாகவும், மகனின் பாதுகாப்பு குறித்து தாயார் கவலைப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

கேப்டன் நவ்தேஜ் சிங் கில்லின் பிறந்த நாளான செப்டம்பர் 6ஆம் தேதி அவருக்கு வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து செய்தி அனுப்பியதாகவும் அதற்கு அவர் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்ததாகவும் அவரது சகோதரர் நவ்தீப் கில் கூறினார்.

பின்னர் அவருடனான தொலைபேசி தொடர்பு நின்றுபோனது. நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கத்தாரின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. நவ்தீப் கில், தனது சகோதரருக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகக் கூறினார்.

தனது சகோதரர் ஓய்வு பெறும் வரை இந்திய கடற்படையில் பணியாற்றியதாகவும் தனது அண்ணனை இந்தியாவுக்கு கொண்டு வருவது அரசின் பொறுப்பு என்றும் நவ்தீப் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கைது செய்யப்பட்ட இந்தியர்களை அழைத்து வருவதற்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியிருந்தார்.

  • கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்திய பிரதமர் நரேந்திர மோதி

இந்தியாவுக்கு இது எத்தகைய சவாலாக இருக்கிறது?

இந்த விவகாரம் இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய அரசியல் சவாலாக இருக்கிறது? இந்தப் பிரச்னையைத் தீர்க்கவும் தனது முன்னாள் கடற்படை அதிகாரிகளை விடுவிக்கவும் இந்தியாவால் என்ன செய்ய முடியும்?

இதைப் புரிந்துகொள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் முடாசர் கமரிடம் பிபிசி ஹிந்தி பேசியது.

ராஜஜீய மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படாவிட்டால், இந்த விவகாரம் எந்தத் திசையில் செல்லும் என்று கூறுவது கடினம் என்று அவர் கூறினார். மேலும், நிச்சயமாக இது இந்திய பொதுமக்களின் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆம், ஆனால் இது கண்டிப்பாக இந்தியாவில் பொதுமக்களின் கருத்தை பாதிக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்தியாவோ அல்லது கத்தாரோ வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதற்கு என்ன காரணம்?

“இதுவோர் உணர்வுப்பூர்வமான விஷயம். இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயம் தொடர்பாக பிரச்னை எழும்போது, நட்புறவு கொண்ட நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன.

இரு நாடுகளும் எந்த உடனடி எதிர்வினையும் தெரிவிக்காத விதத்தை வைத்தே இது மிகவும் முக்கியமான விஷயம் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படாததால், இதுவொரு முக்கியமான விஷயமாக இருக்காது என்று கூறிவிட முடியாது.

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கலாம் அல்லது அவர்கள் ஏதேனும் கடுமையான குற்றம் செய்திருக்கலாம்,” என்று கமர் கூறுகிறார்.

 
கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த விவகாரத்தில் இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும் என்கிறார் கமர்.

இந்தியாவுக்கு இது பெரிய ராஜதந்திர சவாலா?

“இதை ராஜதந்திர சவால் என்று அழைப்பது சரியாக இருக்காது. ஏனெனில் அங்கு சென்றவர்கள் இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள். ஆனால் அவர்கள் அரசு பணி நிமித்தமாகச் செல்லவில்லை. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்கள். எனவே இதை ராஜதந்திர சவால் என்று கூறுவது கடினம்.

இது அரசியல் ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் சில தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதை இப்போதே சொல்வது கடினம்,” என்கிறார் கமர்.

மேலும் பேசிய அவர், “இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருந்ததால், இது குறித்து பொதுவெளியில் எந்தத் தகவலும் பகிரப்படவில்லை. எனவே, வெளிவிவகாரக் கொள்கையின்படி நிதானமான முறையில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய அரசுக்கு முடிவு குறித்த விவரங்களை முதலில் தெரிவிக்க வேண்டும். இதில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை இந்திய அரசு ஆராயும். கத்தாரில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தால், அதிலிருந்து எவ்வளவு அதிகபட்ச பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்,” என்றும் கூறினார்.

“இந்த விவகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுமா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் பல அம்சங்களைப் பார்க்க வேண்டும். இதை இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்,” என்கிறார் கமர்.

 
கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கத்தாரில் சுமார் 8-9 லட்சம் இந்தியர்கள் பணிபுரிவதால், அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க இந்திய அரசு முயற்சிக்கும்.

இந்தியா- கத்தார் இடையிலான உறவு எப்படிப்பட்டது?

இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே நட்புறவு உள்ளது. ஆனால் இந்த உறவில் முதல் சவால் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வந்தது. பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துகளை வெளியிட்டார்.

அந்த நேரத்தில், இந்தியா 'பொது மன்னிப்பு' கோர வேண்டும் என்று கூறிய முதல் நாடு கத்தார். கத்தார் இந்திய தூதரை அழைத்து தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இஸ்லாமிய நாடுகளில் கோபம் பரவாமல் இருக்க, பாஜக உடனடியாக நூபுர் ஷர்மாவை நீக்கியது.

இப்போது எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை, இந்தியா-கத்தார் உறவுகளுக்கு இடையிலான இரண்டாவது பெரிய சவாலாகக் கருதப்படுகிறது. கத்தாரில் சுமார் 8-9 லட்சம் இந்தியர்கள் பணிபுரிவதால், அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க இந்திய அரசு முயலும்.

இந்தியா கத்தாரில் இருந்து இயற்கை எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறது. கத்தார் மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடு.

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அதிக அமெரிக்க பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று கத்தார் இஸ்ரேலுடனும் பாலத்தீனத்துடனும் மத்தியஸ்தம் செய்ய முயலும் நேரத்தில் இந்த விவகாரம் வெளிச்சம் பெற்றுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cn48ldyvjr8o

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கத்தார்: முன்னாள் கடற்படை அதிகாரிகளின் மரண தண்டனை சிறை தண்டனையாக குறைப்பு

கத்தாரில் 8 முன்னாள் இந்தி கடற்படை அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை ரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு தண்டனை

3 மணி நேரங்களுக்கு முன்னர்

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறுத்தப்பட்டு வெவ்வேறு அளவிலான சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இவர்கள் 60 நாட்களில் தங்களது சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.

கத்தார் அல்லது இந்தியா என இரண்டு நாடுகளுமே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்களை இதுவரை வெளியிடவில்லை.

ஆனால், ஃபினான்ஷியல் டைம்ஸ், ராய்ட்டர்ஸ் செய்தி முகமை ஆகியவை அந்த அதிகாரிகள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக அடையாளம் தெரியாத வழியிலிருந்து தகவல் கிடைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா, கத்தார் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இதுவரை இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கின் நீதிமன்ற ஆணையும்கூட பொதுவெளியில் பகிரப்படவில்லை. அரசின் ராஜதந்திர சோதனையாகப் பார்க்கப்பட்ட இந்த வழக்கின் முக்கியமான முன்னேற்றங்களை மட்டுமே இந்தியா வெளியிட்டு வந்தது.

வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மரண தண்டனையைக் குறைக்கும் நீதிமன்ற ஆணையைத் தற்போது அந்த 8 பேரின் சட்டக் குழு பெற்றுள்ளது என்றும், மேலும் அதுவொரு "ரகசிய ஆவணம்" என்றும் கூறியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்.

 
கத்தாரில் 8 முன்னாள் இந்தி கடற்படை அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை ரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

“இந்தியாவை சேர்ந்த 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, வெவ்வேறு கால அளவிலான சிறைத் தண்டனைகளாக மாற்றப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்துகிறோம்," என்று அவர் கூறினார். மேலும் தீர்ப்பை எதிர்த்து 60 நாட்களுக்குள்

மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், சிறைத் தண்டனையின் அளவு என்ன என்பதை அவர் வெளியிடவில்லை.

“அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தற்போது சட்டக்குழுவின் முடிவு” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 2023 அக்டோபர் மாதம், முதலில் கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றம் 8 பேருக்கும் மரணதண்டனை விதித்தபோது, இந்தியா “மிகவும் அதிர்ச்சி” அடைந்ததாகக் கூறியது.

அப்போது அனைத்து விதமான சட்டரீதியான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாகக் கூறிய வெளியுறவுத்துறை அமைச்சகம், பின்னர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தது.

நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்களை நமது நாட்டின் “முன்னாள்-படைவீரர்கள்” என்று குறிப்பிட்டார். அந்த 8 பேரின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அவர்களின் கடற்படை பணி குறித்த விவரங்களை உள்ளூர் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் யார்?

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களில் கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சௌரப் வசிஷ்டா, கேப்டன் வீரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுக்னகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர்.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.

இந்திய அரசு மரண தண்டனை செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தது. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும் வெளியுறவு அமைச்சகம் அப்போது தெரிவித்திருந்தது.

 
கத்தாரில் 8 முன்னாள் இந்தி கடற்படை அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை ரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு கத்தார் அரசுக்கு இந்நிறுவனம் உதவுவதாக பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ன?

நிறுவனத்தின் பழைய இணையதளம் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. கத்தார் அமிரி தேசியப் படைக்கு (QENF) பயிற்சி, தளவாடங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கியுள்ளது என்று நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய இணையதளத்தில் நிறுவனத்தின் பெயர் டஹ்ரா குளோபல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கத்தார் அமிரி தேசிய படைக்கு வழங்கப்பட்ட அதன் சேவைகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதன் தலைமைப் பொறுப்புகளில் இருந்த கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு கத்தார் அரசுக்கு இந்நிறுவனம் உதவுவதாக பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன. இருப்பினும், இதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

 
கத்தாரில் 8 முன்னாள் இந்தி கடற்படை அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை ரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர்.

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு நிறுவனத்துடனான தொடர்பு என்ன?

இந்த வழக்கில் சிக்கியுள்ள 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களில் ஒருவரான கமாண்டர் பூர்ணேந்து திவாரி இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2019இல் அவருக்கு பிரவாசி பாரதிய சம்மன் விருது வழங்கப்பட்டது.

அப்போது கத்தாருக்கான அப்போதைய இந்தியத் தூதரும், கத்தார் பாதுகாப்புப் படைகளின் சர்வதேச ராணுவக் கூட்டுறவின் முன்னாள் தலைவருமான பி.குமரன் மூலம் கௌரவிக்கப்பட்டார்.

இந்திய கலாசார மையத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் கவுசிக் விழாவில் கலந்துகொண்டார்.

தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர்.

 
கத்தாரில் 8 முன்னாள் இந்தி கடற்படை அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை ரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இவர்களை கத்தாரின் உளவுத்துறை நிறுவனமான ஸ்டேட் செக்யூரிட்டி பீரோ கைது செய்துள்ளது.

எதற்காக, எப்படி இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன?

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளை கத்தாரின் உளவுத்துறை நிறுவனமான ஸ்டேட் செக்யூரிட்டி பீரோ கைது செய்துள்ளது.

அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் நடுப்பகுதியில் இந்திய தூதரகத்துக்குத் தெரிய வந்தது.

அவர்கள் கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக அவர்களுக்கு தூதரக அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, இந்திய தூதரக அதிகாரி ஒருவர் இவர்களைச் சந்தித்தார்.

முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்திய அரசோ அல்லது கத்தார் அரசோ பொதுவெளியில் தெரியப்படுத்தவில்லை.

https://www.virakesari.lk/article/173236



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.