Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவை புறக்கணித்து சீனா பக்கம் சாய்கிறதா பூடான்? இந்தியாவுக்கு என்ன பிரச்னை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பூடான் சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எல்லை வரையறை குறித்த சீனா-பூடான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ராகேவேந்திர ராவ்
  • பதவி, பிபிசி நிருபர்
  • 17 நிமிடங்களுக்கு முன்னர்

பூடான் வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயும் பல வருடங்களாக இருந்துவரும் எல்லைப் பிரச்னை முடிவுக்கு வரலாம் என ஊகங்கள் எழுந்து வருகின்றன.

மேலும், சீனவுக்கும் பூடானிற்கும் இடையே விரைவில் தூதரக உறவுகள் (Diplomatic Relations) ஏற்படுவதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. இந்த இரண்டு விஷயங்களும் இந்தியாவிற்கு மேலும் தலைவலியைதான் தரப்போகின்றன.

சீனாவிற்கும் பூடானிற்கும் இடையேயான எல்லைப் பிரச்சனையில் சமரசம் ஏதும் ஏற்பட்டால் அது நேரடியாக டோக்லாம் எல்லையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

2017ம் ஆண்டு இந்திய மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே 73 நாட்களுக்கு மோதல் நிலவியது. பூடானால் தங்களது பகுதி என சொல்லப்படும் இடத்தில் சீனா சாலை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் இந்த மோதல் ஏற்பட்டது.

தற்போது பூடான் உடனான எல்லை பிரச்சனையில் சீனா தீர்வை எட்டிவிட்டால் இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்துடனும் சீனா நட்புறவில் உள்ளது என்ற சூழல் உருவாகிவிடும்.

சமீபத்தில், சீனா தனது அண்டை நாடுகள் தொடர்பாக வெளியுறவு கொள்கை குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், 12 அண்டை நாடுகளோடு தனக்கிருந்த தரை வழி எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொண்டதாக சீனா தெரிவித்தது. மேலும், 9 நாடுகளோடு நட்புறவில் இருப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திட்டுள்ளதாக சீனா தெரிவித்தது.

அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை.

 
இந்தியா சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தொடர்ந்து வரும் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை

சீனா - பூடான் இடையே அதிகமாகும் நெருக்கம்

கிழக்கு லடாக்கில் உள்ள இந்தியா-சீனாவின் எல்லைப்பகுதியில் இரு நாடுகளுக்கும் நடந்துவரும் மோதல் இன்னும் தொடர்கிறது.

இந்த நிலையில், சீனாவிற்கும் பூடானிற்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டால் கண்டிப்பாக அதை இந்தியா தீவிரமாக கண்காணிக்கும்.

தனது நலனுக்காக இராணுவ மற்றும் பொருளாதார பலத்தை பயன்படுத்தி சிறிய நாடுகளை கட்டுப்படுத்துவதாக சீனா மீது அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

பூடானிற்கும் சீனாவிற்கும் இடையே 25வது கட்ட எல்லைப் பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு சீனா தரப்பில் அதன் வெளியுறவு இணையமைச்சர் சுன் வீடாங்க் மற்றும் பூடானின் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் தண்டி டோர்ஜி தலைமை தாங்கினர். இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு பிரதிநிதிகளும் பூடான் - சீனா எல்லையை தீர்மானிப்பது குறித்த கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அக்டோபர் 23ம் தேதி தண்டி டோர்ஜியை சந்தித்த பின் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேசுகையில் சீனாவும் பூடானும் மலைகளாலும், நதிகளாலும் ஆழமான கலாச்சார நட்புறவால் பிணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜ தந்திர உறவுகள் பூடானின் நீண்டகால திட்டங்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

சீனாவின் உதவிக்கும் வலிமையான ஆதரவிற்கும் நன்றி தெரிவித்த பூடானின் வெளியுறவுத்துறை அமைச்சர் தண்டி டோர்ஜி, சீனா-பூடான் இடையே பாரம்பரியமான நட்பு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “சீனாவின் ஒரு பகுதிதான் தைவான் என்பதை வலியுறுத்தும் ‘ஒரே சீனா’கொள்கையோடு நாங்கள் முற்றிலும் உடன்படுகிறோம். சீனாவோடு விரைவாக இராஜ தந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

 
இந்தியா பூடான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இருநாட்டு உறவில் நெருக்கம் காட்டும் சீனா-பூடான்

சீனா - பூடான் எல்லைப் பிரச்னையின் பின்னணி என்ன?

சீனா-பூடான் எல்லையானது 400 கிலோமீட்டருக்கும் அதிகமானது. இரு நாடுகளும் தங்களது எல்லைப் பிரச்சனையில் தீர்வு காண 1984ல் இருந்து தற்போது வரை 25 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

சீனாவிற்கும் பூடானுக்கும் இடையே பெரும் சர்ச்சைக்குரியதாக இருக்கும் இரண்டு பகுதிகளில் ஒன்று இந்தியா-சீனா-பூடான் முச்சந்திக்கு அருகில் உள்ள 269 சதுர கிலோமீட்டரிலுள்ள பகுதி, மற்றொன்று பூடானின் வடக்கே 495 சதுர கிலோமீட்டரில் உள்ள ஜகர்லுங் மற்றும் பாசம்லுங் பள்ளத்தாக்குகள்.

495 சதுர கிமீ பகுதியை பூடானிடம் விட்டுக்கொடுத்துவிட்டு 269 சதுர கிமீ பகுதியை எடுத்துக்கொள்ள சீனா விரும்புகிறது.

பூடானின் மேற்கு எல்லையில் சீனா சொந்தம் கொண்டாடும் இரண்டு பகுதிகளில் ஒன்று சும்பி பள்ளத்தாக்கு. இதற்கு அருகில்தான் உள்ள டோக்லாம் பகுதியில்தான் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மோதல் ஏற்பட்டது.

இந்த சும்பி பள்ளத்தாக்கை தான் வைத்துக்கொண்டு பூடானிற்கு அதைவிட பெரிய ஒரு பகுதியை வழங்க சீனா தயாராக உள்ளது.

இதில் இந்தியாவிற்கு என்ன பிரச்சனையென்றால், பூடானிடம் இருந்து சீனா கேட்கும் அந்தப்பகுதி இந்தியாவின் சிலிகுரி பாதை அல்லது ‘சிக்கன்ஸ் நெக்’ எனப்படும் பகுதிக்கு அருகே உள்ளது. இந்த சிலிகுரி பாதை வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதற்கு முக்கியமான வழித்தடமாக உள்ளது.

சிலிகுரி பாதைக்கு சீனா வந்துவிட்டால் அது வட கிழக்கு மாநிலங்களுக்கான தொடர்பிற்கு பெரும் ஆபத்தாகவும் இந்தியா வியூகம் அமைப்பதற்கு பெரும் சவாலாகவும் அமையும்.

சில வாரங்களுக்கு முன்பு தி இந்து ஆங்கில நாளிதழக்கு பேசிய பூடான் பிரதமர் லோடேய் ஷெரிங், “பூடான் எடுக்கக்கூடிய முடிவால் சீனாவும் இந்தியாவும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை உறுதி செய்வோம். சீனா உடனான பிரச்னையை முடித்துவிட்டு இந்தியாவுடன் புதிய பிரச்சனையை ஆரம்பிக்க பூடான் விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.

 
இந்தியா சீனா எல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சீனா - பூடான் உறவை உற்று நோக்கும் இந்தியா

சீனா - பூடான் உறவில் இந்தியாவிற்கு என்ன பிரச்னை?

புது தில்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் துணைத் தலைவராக உள்ள

பேராசிரியர் ஹர்ஷ் வி பந்த் கூறுகையில், “டோக்லாம் எல்லையில் (Tri-junction) ஏற்பட்ட நெருக்கடியை நாம் பார்த்தோம். அந்தப் பிரச்னைக்கான தீர்வு முத்தரப்பு வழியில் செய்யப்பட வேண்டும் என்பதே பூடானின் நிலைப்பாடு" எனத் தெரிவித்தார்.

பூடானிற்கு தனது நலன்களைப் பாதுகாக்க எந்தவொரு நாட்டுடனும் பேச்சுவார்த்தை நடத்த முழு உரிமை உள்ளது என்றும், அதை பகிரங்கமாக எதிர்க்க இந்தியா விரும்பாது என்றும் ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.

மேலும், "சீனாவிற்கும் பூடானிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளின் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதுதான் இந்தியாவின் கவலையாக இருக்கும்.” என அவர் தெரிவித்தார்.

பூடானின் பார்வையில் இருந்து பார்த்தால், இந்தியா-சீனா சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பூடான் பார்த்து வருகிறது, எனவே இந்தியா-சீனா மோதல்கள் மேலும் தீவிரமடைவதற்குள் இந்தப் பிரச்னையை பூடான் தீர்க்க முயற்சிப்பதாக பேராசிரியர் பந்த் கூறுகிறார்.

இந்தியா-சீனா இடையேயான எல்லைப்பிரச்சனையில் மேலும் சிக்கிக்கொள்ள பூடான் விரும்பவில்லை என்றும் இந்தியா-சீனா இடையேயான எல்லைப்பிரச்னை பெரிதாவதற்கு முன்பே தங்களுக்கு சீனா உடன் இருக்கும் எல்லைப் பிரச்னையை முடித்துக்கொள்ள பூடான் விரும்புவதாகவும் பந்த் கூறுகிறார்.

 
இந்தியா பூடான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியாவிற்கு தலைவலியாகும் சீனா - பூடான் நட்பு

முச்சந்தி பிரச்னைக்கு முக்கோண தீர்வு

இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்பி அஸ்தானா, பாதுகாப்பு மற்றும் வியூக விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.

“பூடானின் வெளியுறவு அமைச்சரின் சீன பயணத்தை தொடர்ந்து சீனா-பூடான் இடையேயான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என அஸ்தான தெரிவித்தார்.

ஏனென்றால், இந்தியாவும் சீனாவும் கூட அவ்வப்போது தங்களது எல்லைப் பிரச்னைகளை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்துவார்கள் ஆனால் அதன் பின்பு பிரச்சனை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். எனவே சீனா-பூடான் விவகாரத்தில் பிரச்னை தீர்ந்துவிட்டதாக நாம் கூற முடியாது என அஸ்தானா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “சீனாவும் பூடானும் வெளியிட்ட கூட்டறிக்கையில் எல்லைப்பகுதியில் பிரச்னைக்குரிய நிலத்தை சீனாவிற்கு வழங்க பூடான் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்படவில்லை. சீனா அந்த கூட்டறிக்கையை தங்களுக்கு ஏற்ற மாதிரி திரித்துக்கொண்டது. 25 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போதுதான் சீனாவும் பூடானும் எல்லையை தீர்மானிப்பதை நெருங்கியுள்ளார்கள்” என அவர் தெரிவித்தார்.

அஸ்தானா கூறுகையில், கடந்த காலத்தில் இந்த முச்சந்தி விவகாரத்தை மூன்று நாடுகளும் சேர்ந்துதான் தீர்க்க வேண்டும் என்பதுதான் பூடானின் நிலைப்பாடு என்றும் இப்போதும் இந்தியாவை பகைத்துக்கொண்டு பூடான் எந்த முடிவையும் எடுக்காது என்றும் தெரிவித்தார்.

 
சீனா பூடான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கும் சிலிகுரி பாதை

பூடானோடு இராஜ தந்திர உறவு வைத்துக்கொள்ள சீனா விரும்புவது ஏன்?

தைவான் போல் அல்லாமல் சீனாவின் எந்த விதமான இருப்பும் இல்லாத நாடு பூடான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தவிர, பூடானுக்கும் இந்தியாவுடன் சிறப்பான உறவு உள்ளது. எனவே பூடானுடன் சீனா தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டால், அது சீனாவிற்கான ஒரு விளம்பரமாக இருக்கும்.

பேராசிரியர் பந்த் கூறுகையில், ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்புநாடுகள் எதனுடனும் பூடானிற்கு தூதரக உறவுகள் இல்லை. இந்த நிலையில் சீனாவோடு பூடான் தூதரக உறவு ஏற்படுத்திக்கொண்டால் அது நிச்சயம் இந்தியாவை பாதிக்கும். ஆனால், அந்த அளவிற்கு பூடான் செல்லாது.

மேலும் அவர் கூறுகையில், பூடான் சீனாவோடு மட்டும் உறவு வைத்துக்கொண்டால் நிச்சயம் அதை அமெரிக்க ஏற்றுக்கொள்ளாது. பூடானோடு வெளியுறவு சிக்கல்களையும் அமெரிக்கா உருவாக்கும் எனத் தெரிவித்தார்.

 
இந்தியா சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

“இந்தியாவை சீனா பகைத்துக்கொள்ளது”

பூடான் மீது சீனா அழுத்தம் கொடுக்கிறதா என்பதையும் பார்க்கவேண்டும். ஏனென்றால் தங்களோடு தூதரக உறவு வைத்துக்கொண்டால் அதற்கு பதிலாக எல்லைப் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம் என சீனா பூடானிடம் கூறுவதாக பேராசிரியர் பந்த் கூறுகிறார்.

அவர் கூறுகையில், "இந்த விஷயத்தில் இந்தியா கண்டிப்பாக பூடானோடு பேசும். பூடானும் சீனாவுடன் தாங்கள் என்ன செய்கிறோம், செய்யவில்லை என்பதை இந்தியாவிற்கு தெரிவிக்கும்” எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மேஜர் ஜெனரல் அஸ்தானா கூறுகையில், "பூடான் இறையாண்மையும் ஜனநாயகமும் கொண்ட நாடு. அவர்கள் எந்த நாட்டுடனும் இருதரப்பு உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்வார்களா என்பதுதான் கேள்வி” எனத் தெரிவித்தார்.

பூடானின் பிரதமர் லோடேய் ஷெரிங்கின் அறிக்கையை குறிப்பிடும் அஸ்தானா, "கோட்பாட்டு அளவில் பூடான் சீனாவோடு எப்படி எந்த இருநாட்டு உறவும் வைத்துக் கொள்ளாமல் இருக்க முடியும். எப்போது மற்றும் எந்த விதத்தில் அந்த உறவை வைத்துக் கொள்ள போகிறோம் என்பதுதான் கேள்வி” என தெரிவித்தார்.

பூடானில் மன்னராட்சி இருந்தபோது ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஏதேனும் ஒருவருடன் பூடான் இருதரப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டால், மீதமுள்ள நான்கு நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பூடான் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பூடானில் ஜனநாயகம் வந்த பிறகு, பூடானின் அந்த நிலைப்பாட்டில் மாற்றம் வந்திருக்கலாம்.

https://www.bbc.com/tamil/articles/c727gegpjl0o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூடான் சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எல்லை வரையறை குறித்த சீனா-பூடான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

“பூடான் வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயும் பல வருடங்களாக இருந்துவரும் எல்லைப் பிரச்னை முடிவுக்கு வரலாம் என ஊகங்கள் எழுந்து வருகின்றன.

மேலும், சீனவுக்கும் பூடானிற்கும் இடையே விரைவில் தூதரக உறவுகள் (Diplomatic Relations) ஏற்படுவதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. இந்த இரண்டு விஷயங்களும் இந்தியாவிற்கு மேலும் தலைவலியைதான் தரப்போகின்றன.“

சாதாரணமாக பக்கத்துவீட்டுக்காறன் மகிழ்ச்சியாக இருந்தாலே தென்னாசியனுக்குப்  பிடிக்காது. இதில் பக்கத்து நாடு நன்றாக இருந்தால் அதெப்படி எமக்குப் பிடிக்கும்? 

அதிலும் இந்தியா என்றால் சொல்லவும் வேண்டுமா? 

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவை சீன ரகன் நன்கு சுற்றி வளைக்கிறது. ஏலவே பாகிஸ்தானை.. சொறீலங்காவை.. மாலைதீவை கைக்குள் போட்டு விட்டது. எனி பூட்டான்.. மேலும் வங்கதேசம்.. பெருமளவு சீன முதலீடுகளை உள்வாங்கி உள்ளது. மியான்மார் அப்படி. மிஞ்சி இருப்பது நேபாளம் மட்டும் தான். அதனையும் கைக்குள் போட்டுக் கொண்டால்.. ரகன் ஹிந்தியா மீது நெருப்பைக் கக்குவது தான் மிச்சம். அதோடு ஹிந்தியா சுக்கு நூறாகனும். தமிழகம் சுதந்திர நாடாக விடுதலை அடைய வேண்டும். தமிழீழத்தில் அது நிகழ்ந்தால் மகிழ்ச்சி. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 MAY, 2024 | 01:18 PM இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர் என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் தெரிவித்தார். 2009 மே 18 ஆம் திகதியன்று இலங்கையின் உள்ளகப் போர் நிறைவடைந்து, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் பெருமளவான பொது மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த நினைவுதினத்தை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் அஞ்சலிசெலுத்திவிட்டு அங்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நிலவிய ஆயுதம் தாங்கிய உள்ளகப் போரில் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு தவறிய இலங்கைய அதிகாரத் தரப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் இணைந்த கவனயீனமான செயற்பாட்டை இன்றைய வருடபூர்த்தி நினைவூட்டுகின்றது. 15 வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தின் இறுதி நாட்களில் உயிரிழந்த பெருமளவான அப்பாவி பொது மக்கள் உயிர் நீத்த பகுதியில் இன்று நாம் மிகவும் துயரத்துடன் நிற்கின்றோம். இந்த நிகழ்வுக்கு முன்னதாக, யுத்தத்தின் போது தாம் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில் தமிழ் சமூகத்தார் முன்னெடுத்திருந்த முயற்சிகளை தடுக்கும் வகையில் கைதுகள், பலவந்தமாக தடுத்து வைப்புகள் மற்றும் வேண்டுமென்றே தவறான கருத்துகளை பரப்பியிருந்தமை போன்ற நினைவுகூரலை தடுக்கும் வகையிலான சம்பவங்களை நாம் அவதானித்திருந்தோம். உயிர்நீத்தவர்களை நினைவுகூரவும், தமது அன்புக்குரியவர்களுக்காக அமைதியான முறையில் ஒன்றுகூடி தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமைக்கு அதிகாரத்தரப்பினர் மதிப்பளிக்க வேண்டும். யுத்தத்தில் இரு தரப்புகளிலிருந்தும் சர்வதேச சட்டங்களுக்கமையவும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்களை மீறும் வகையிலான குற்றங்கள் புரியப்பட்டுள்ளமை தொடர்பில் போதியளவு ஆதாரங்கள் காணப்படுகின்றமையை ஐக்கிய நாடுகளின் விசாரணைகள் இனங் கண்டுள்ள போதிலும், அவ்வாறான பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற அல்லது சுயாதீனமான தேசிய விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் எவ்விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், யுத்தத்தின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் எஞ்சியுள்ள அங்கத்தவர்கள், தமது அன்புக்குரியவர்களை தொடர்ந்தும் தேடிய வண்ணமுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியை நீண்ட காலமாக தேடுவதை அவர்களிடமிருந்து அறிந்து கொள்வது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் சிறந்த தீர்வாக அமைந்திருந்த போதிலும், கடந்த 15 வருட காலப்பகுதியில் பொறுப்புக்கூரலுக்காக உள்ளகக் கட்டமைப்பை நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் வெறும் கண்துடைப்புகளாகவே அமைந்திருந்தன. இந்த வாரத்தின் முற்பகுதியில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், இலங்கையின் பொறுப்புக்கூரல் செயற்பாடுகளில் காணப்படும் இடைவெளிகள் காரணமாக, இந்த விடயம் தொடர்பான கறைகள் மாறாமல் காணப்படுவதை வலியுறுத்தியிருந்தது. உண்மை, நீதி மற்றும் இழப்பீடு போன்றவற்றுக்காக இன்றும் ஆயிரக் கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்கின்றனர். இன்று முள்ளிவாய்க்காலில் நாம் அவர்களுடன் உறுதியாக கைகோர்த்துள்ளோம் என்றார். இதேவேளை, போரின் இறுதிக் கட்டத்தின் போது குறிப்பாக 2009 மே மாத காலப்பகுதியில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதநேய சட்டங்களை மீறல்கள் போன்றன பெருமளவில் அதிகரித்திருந்தது. குறிப்பாக போர் நடைபெற்ற பகுதிகளில் சுமார் இடம்பெயர்ந்த சுமார் 300,000 பொது மக்கள் மனிதக் கேடயங்களாக அடைபட்டிருந்தனர். இலங்கையின் வட மாகாணத்தின், முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறிய கிராமமான முள்ளிவாய்க்கால் பகுதியில், இலங்கை படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக் கட்டப் போர் நடந்ததுடன், ஐக்கிய நாடுகளின் மதிப்பீடுகளின் பிரகாரம் சுமார் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வில், போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுகூடி, போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்வதுடன், நீதியையும் பொறுப்புக்கூரலையும் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இந்த வாரம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183864
    • 18 MAY, 2024 | 01:34 PM (நா.தனுஜா) மூன்று தசாப்தகாலப்போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (18 ) கொழும்பில் நடைபெற்றது. மூன்று தசாப்தகாலப்போர் மிகமோசமான மனிதப்பேரழிவுடன் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இன்றறையதினத்துடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவேந்தல் நிகழ்வுகள் வட, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததுடன், பிரதான நிகழ்வு இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் முற்றத்தில் நடைபெற்றது. அதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும் எனவும், கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் எழுச்சியடைந்த போராட்டங்களின் தளமாக அமைந்திருந்த காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம'வில் 2022 மே 18 ஆம் திகதியன்று எவ்வித இன, மதபேதமுமின்றி சகலரும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுட்டித்து போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர். அதன்படி, கடந்த ஆண்டைப்போன்றே இம்முறையும் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு இன்று சனிக்கிழமை (18) காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான ஷ்ரீன் ஸரூர், சுவஸ்திகா அருலிங்கம், சந்தியா எக்னெலிகொட, ராஜ்குமார் ரஜீவ்காந்த், கௌதமன், ரத்னவேல், நுவன் போபகே உள்ளிட்ட பலரும், கத்தோலிக்க மதகுருமாரும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் 'சிங்கள ராவய' அமைப்பினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறையும் பிற தரப்பினரால் இடையூறு ஏற்படுத்தப்படக்கூடும் என்ற சந்தேகம் நிலவியது. அதன்படி, நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கடற்கரைப்பகுதிக்கு அண்மையில் காலையிலேயே பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அதனையடுத்து 9.30 மணியளவில் அங்கு கூடியிருந்த அனைவரும் ஈகைச்சுடரேற்றி, அதில் வெண்ணிற மலர்தூவி போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்தனர். இந்நினைவுகூரல் இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில், பிறிதொரு குழுவொன்று கொடிகளை ஏந்தி கூச்சலிட்டவாறு கடற்கரைப்பகுதிக்குள் உட்பிரவேசித்து நினைவேந்தல் நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க முற்பட்ட வேளையில், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரால் அவர்கள் தடுத்துநிறுத்தப்பட்டனர். அதனைத்தொடர்ந்து நிகழ்வை விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து அனைவரையும் வெளியேறுமாறும், தாமதமேற்படின் அதன் பின்னர் நிகழக்கூடியவற்றுக்குத் தம்மால் பொறுப்புக்கூறமுடியாது எனவும் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணி ரத்னவேலிடம் எச்சரித்தார். இக்குழப்பங்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய சிவில் சமூக செயற்பாட்டாளர்களான சந்தியா எக்னெலிகொட, மிலானி மற்றும் ராஜ்குமார் ரஜீவ்காந்த் ஆகியோர் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரவேண்டியதன் தேவைப்பாட்டையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிப்பேசினர். அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகிப்பதற்கும், உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதற்கும் தடைவிதிக்கப்பட்டு, இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டமை குறித்து தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தினர். அதன்பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து வெள்ளை மலர்களை கடலில் தூவி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேவேளை, நினைவேந்தல் நிகழ்வுக்கு சற்றுத் தாமதமாக வருகைதந்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் ஆணையாளரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான மிராக் ரஹீம் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் தண்டவாளத்துக்கு அண்மையிலேயே பொலிஸாரால் தடுத்துநிறுத்தப்பட்டனர். நிகழ்வில் குழப்பம் விளைவிப்பதற்கென குழுவொன்று வருகைதந்ததாகவும், எனவே தாமதமாக வந்த செயற்பாட்டாளர்களை தாம் அறிந்திருக்காததன் காரணமாக அவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் பொலிஸார் விளக்கமளித்தனர். பின்னர் அனைவரையும் வெகுவிரைவாக அங்கிருந்து கலைந்துசெல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியதைத்தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.  (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/183867
    • முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு 18 MAY, 2024 | 03:30 PM முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு, தமிழினப் படுகொலை இடம்பெற்று இன்றுடன் (18) பதினைந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.  அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.   தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் தொடர்பான நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது.  அடுத்து, மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.  பின்னர், முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கணவனை இழந்த முள்ளியவளையைச் சேர்ந்த பெண்ணொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.  அவரை தொடர்ந்து, ஏனையவர்களும் தங்கள் உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தினர். அதன் பின்னர், தொடர்ச்சியாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என  பல்வேறு தரப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இந்நினைவேந்தலின் முக்கிய விடயம், முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் முற்றத்துக்குச் சென்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மக்கள் மத்தியில் உரையாற்றினார்.   https://www.virakesari.lk/article/183876
    • யாழில் பல்வேறு தரப்பினரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர் Published By: DIGITAL DESK 3 18 MAY, 2024 | 01:02 PM   யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அதனொரு அங்கமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் நயினாதீவு நாகவிகாரைக்கு 16 ஆம் திகதி சென்ற  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், நெடுந்தீவில் கடற்றொழில் அமைப்புக்களையும் சந்தித்து பேசினார். https://www.virakesari.lk/article/183860
    • முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அஞ்சலி  18 MAY, 2024 | 01:41 PM   முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று (18) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.  இதன்போது பொது மக்கள் மத்தியில் உரையாற்றிய சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம், இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருப்பதாக உணர்வு மேலிட தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/183866
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.