Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸா மீது தரைப்படை தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காஸா மீது தரைப்படை தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

spacer.png

வெள்ளிக்கிழமை மாலை இஸ்ரேல் ராணுவத்தினர் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் காஸாவில் இருந்த சில பகுதியில் பற்றி எரிந்தன.

27 அக்டோபர் 2023, 18:26 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸா மீது தரைப்படைகள் தாக்குதலை தொடங்கப் போவதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தரைப்படைகள் இரவோடுஇரவாக காஸாவிற்குள் நுழைந்து ஹமாசுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தும் என்று இஸ்ரேலின் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகரி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

காஸா நகரமக்களை தெற்கு காஸா பகுதிக்கு செல்லவும் அவர் அறிவுறுத்தினார். 

கடந்த சில வாரங்களாகவே, "ஹமாஸை ஒழித்துக் கட்டுவதே எங்கள் நோக்கம். அதற்காக, காஸாவுக்குள் தனது படைகள் நுழையும்" என இஸ்ரேல் கூறி வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, இதனை இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் டேனியல்கூறினார்.

மேலும், கடந்த சில மணி நேரங்களாக காஸா மீதான தங்களது தாக்குதலை அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் டேனியல்கூறினார். "வான்வழித் தாக்குதல் மூலம் நாங்கள் பெரும்பாலும் தீவிரவாதிகளின் கட்டமைப்பையும், பூமிக்கு அடியில் உள்ள இலக்குகளையும் தான் குறிவைத்து தகர்க்கிறோம்,"என்றார் அவர்.

மேலும்,"தரைப்படையினர் மாலை முதல் தங்களது செயல்பாட்டை விரிவாக்கம் செய்துள்ளனர். ராணுவத்தின் இலக்கை அடைய அனைத்து வகைகளிலும் தீவிரமாக செயல்படுகிறோம்," என்றார் டேனியல்.

அறிவிப்பிற்கு முன்பே தொடங்கிய தாக்குதல்

இஸ்ரேல் - காஸா

பட மூலாதாரம், AFP

பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்குவதற்கு முன், இந்திய நேரப்படி சுமார் 10.30 மணியளவில், தெற்கு இஸ்ரேலில் இருந்த பிபிசியின் குழுவினர் காஸாவில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாக கூறினர். அவர்கள் காஸாவிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தான் செய்ததாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்கு இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. 

காஸாவில் என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ராக்கெட்டுகளை ஏவினோம் என்று ஹமாஸ் கூறியதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கிடையில், காஸாவின் பெரும்பாலான பகுதியில் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் நடத்தப்படும் காஸா அரசு தெரிவித்துள்ளது.

'அடுத்து என்ன நடக்கும் என தெரியவில்லை'

இஸ்ரேல்- காஸா

பட மூலாதாரம், AFP

தெற்கு இஸ்ரேல் பகுதியில் செய்தி சேகரிப்பில் உள்ள பிபிசியின் செய்தியாளர் ஜெரிமி போவென், காஸாவிற்குள் நேரடியாகச் செல்ல முடியவில்லை என்றார்.

"காஸா மீதான இஸ்ரேலின் நடவடிக்கை கடுமையாகி உள்ளது. நிச்சயமாக உயிரிழப்பு அதிகரிக்கும்," என்றார் அவர். 

தொடர்ந்து பேசிய ஜெரிமி,"இஸ்ரேல் ராணுவம் தனது உளவுத்துறையின் தகவல்படி, இலக்குகளை மட்டுமே குறி வைப்போம் எனத் தெரிவித்திருந்தாலும், தரைவழியாக ராணுவத்தினரை உள்ளே அனுப்புகிறார்கள் என்றால், நிச்சயம், இந்த போரின் தன்மை மாறிவிட்டது என்றே அர்த்தம்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/czkezm7kkddo

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் இணையம், தொலைத்தொடர்பு சேவைகளை இஸ்ரேல் முடக்கியது ஏன்? அதன் திட்டம் என்ன?

இஸ்ரேல், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸாவில் உள்ள ஹமாஸ் குழுவைக் குறிவைத்துத் தனது தரைப்படை தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

காஸாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியதால், அங்கு பெரிய குண்டுவெடிப்புகள் காணப்பட்டன.

ஆனால், இது எதிர்பார்கப்பட்ட தரைவழிப் படையெடுப்பா என்பதைத் தெளிவுபடுத்த மறுத்துவிட்டது.

அதேவேளை காஸாவில் இணைய மற்றும் தகவல் தொலைதொடர்பு சேவைகள் முடக்கப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (சனிக்கிழமை, அக்டோபர் 28) அதிகாலையில் இந்தத் தாக்குதல்கள் தொடங்கின.

இஸ்ரேலிய ராணுவம், காஸாவில் தனது நடவடிக்கைகளை ‘விரிவாக்குவதாக’ கூறியிருக்கிறது. ஆனால் இது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட காஸா மீதான தரைவழிப் படையெடுப்பு தாக்குதலின் தொடக்கமா என்பதைத் தெளிவுபடுத்த மறுத்துவிட்டது.

 
இஸ்ரேல், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தரைவழிப் படையெடுப்பா என்பதை உறுதி செய்ய மறுப்பு

இஸ்ரேல், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேலிய தாக்குதலில் இடிந்து தரைமட்டமான காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள கட்டடங்கள்.

பிபிசியிடம் பேசிய இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் எய்லோன் லேவி இந்தத் தாக்குதல் இஸ்ரேலின் எதிர்பார்க்கப்பட்ட தரைவழிப் படையெடுப்பா என்பதைக் கூற மறுத்துவிட்டார்.

லேவி, "காஸா பகுதியில் இஸ்ரேல் தரைவழிச் செயல்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதற்கு அப்பால், செயல்பாட்டு விஷயங்கள் பற்றி நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

அதேபோல், நியூ யார்க் டைம்ஸ் இதழிடம் பேசிய இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் மஜ் நிர் தினார் இஸ்ரேலின் சில துருப்புகள் காஸா பகுதிக்குள் நுழைந்ததை உறுதிப்படுத்தினார். ஆனால் இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தரைவழிப் படையெடுப்பின் தொடக்கமா என்று கூற மறுத்துவிட்டார்.

"எங்கள் துருப்புகள் மற்றும் டாங்கிகள் காஸா பகுதிக்குள் உள்ளன. அவர்கள் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்," என்று தினார் கூறியிருக்கிறார். இதற்கு ஒருநாள் முன்னரும் இஸ்ரேலிய துருப்புகளும் டாங்கிகளும் காஸாவிற்குள் இருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், ஹமாஸின் ராணுவப் பிரிவு, வடக்கு காஸாவின் இரண்டு பகுதிகளில் அதன் போராளிகள் இஸ்ரேலிய படைகளுடன் மோதலில் ஈடுபட்டதாக முன்னர் கூறியிருந்தது.

 

இணைய, தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம்

இஸ்ரேல், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காஸாவில் இணைய சேவைகள் முடக்கப்பட்டிருப்பது அங்கிருக்கும் 23 லட்சம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் காஸாவில் இணைய சேவைகளும் தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இது அங்கிருக்கும் சுமார் 23 லட்சம் மக்களிடையே பெரும் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காஸாவில் இருக்கும் பொதுமக்களுக்கு உதவி வரும் மருத்துவ உதவி அமைப்புகள், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) அங்குள்ள இணையம் மற்றும் தொலைபேசி தொடர்புகள் செயலிழந்ததால், களத்தில் உள்ள தங்கள் குழுக்களுடன் பேச முடியவில்லை என்று கூறுகின்றன.

தொலைத்தொடர்பு மொத்தமாக முடக்கப்பட்டிருப்பது ‘மிகப்பெரும் அட்டூழியங்களை’ மறைக்க உதவக்கூடும் என்று மனித உரிமை கண்காணிப்பகம் என்ற அரசு சாரா அமைப்பு எச்சரித்துள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்த அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளரான டெபொரா பிரௌன், இந்தத் தகவல் இருட்டடிப்பு ‘பெருமளவிலான மனித உரிமை அட்டூழியங்களை மறைக்கவும், மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை கிடைக்காமல் தப்பிக்க வைக்கவும் உதவும்," என்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், இது காஸா பகுதி மக்களை உலகத்தோடு இணைக்கும் முக்கியமான வழியை அடைத்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 
இஸ்ரேல், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காஸாவில் மனிதாபிமானச் சிக்கல்கள் மிக வேகமாக மோசமடைந்து வருகின்றன

‘மத்தியக் கிழக்கு முழுவதும் பெரும் விளைவுகள் ஏற்படலாம்’

இந்நிலையில், தாக்குதல் மேலும் வலுவடைந்தால், அதன் விளைவுகள் மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதும் எதிரொலிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜெருசலேமில் இருக்கும் பிபிசியின் ராஜ்ஜீய செய்தியாளர் பால் ஆடம்ஸ், மேற்கத்திய ராஜதந்திரிகள் இஸ்ரேலிடம் ஒரே மூச்சில் காஸா மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் என்றார்.

ஏனெனில், ‘லெபனானில் உள்ள ஹெஸ்புலா, இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஷியா போராளிகள், மற்றும் ஏமனில் உள்ள ஹுத்திகள் போன்ற பிராந்திய வீரர்களின் இந்த மோதலில் நுழையாமல் இருப்பதறகாக இந்த அறிவுரை வழங்கப்பட்டது,’ என்கிறார் அவர்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாறாக, தாக்குதலை படிப்படியாக அதிகரிக்குமாறு அவர்கள் இஸ்ரேலை வலியுறுத்துகிறார்கள் என்கிறார் அவர்.

“மோதல் மத்தியக் கிழக்கு முழுவதும் பரவும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் மத்திய கிழக்கு முழுவதும் தென்படுகின்றன,” என்கிறார் அவர்.

மேலும், “இஸ்ரேலும் ஹெஸ்புலாவும் தினமும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேலும் அமெரிக்காவும் சமீப நாட்களில் சிரியாவில் இலக்குகளைத் தாக்கியுள்ளன. ஏமனில் இருந்து ஏவப்பட்டதாகக் கருதப்படும் ஏவுகணைகள், இரண்டு எகிப்திய செங்கடல் நகரங்களை வெள்ளிக்கிழமை தாக்கின. அவை நிச்சயமாக இஸ்ரேலை இலக்காகக் கொண்டிருந்தன,” என்கிறார்.

ஆனால், இஸ்ரேல் இந்த அறிவுரைகளுக்கு செவிசாய்க்கும் மனநிலையில் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c4nvr9vkkgdo

  • கருத்துக்கள உறவுகள்

காசாவின் வடக்கில் இஸ்ரேலிய படையினருடன் ஹமாஸ் மோதல்

Published By: RAJEEBAN   28 OCT, 2023 | 06:25 AM

image

காசாவின் வடபகுதியில் இஸ்ரேலிய படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

வடகாசாவில் உள்ள பெய்ட் ஹனோன் காசாவின் மத்தியில் உள்ள புரேஜ் போன்ற பகுதிகளில் மோதல்கள் இடம்பெறுவதாக ஹமாசின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதே வேளை காசாவில் ஹமாசை இலக்குவைத்து தனது நடவடிக்கைகள விஸ்தரித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசா மக்களை தென்பகுதி நோக்கி செல்லுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.

தொலைத் தொடர்புகள் செயல் இழந்துள்ளதால் பொதுமக்களை தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள பிபிசி இஸ்ரேல் விமானங்கள் தொடர்ந்தும் தாக்குதல்களில் ஈடுபடுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதே வேளை தங்களின் படையினரும் டாங்கிகளும் காசா பள்ளத்தாக்கிற்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேலிய பேச்சாளர் ஒருவர் நியுயோர்க் டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167914

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் தாக்குதலை முறியடிக்க முழுப்படைகளுடன் தயார்: ஹமாஸ்

ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க காசா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக வான்தாக்குதலுடன், தரைவழி தாக்குதலை மெல்ல மெல்ல விரிவுப்படுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் முழுமையாக தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் குதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்ள முழுப்படைகளுடன் தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அமைப்புகளுடன் சேர்ந்து முழுப்படையுடன் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதன் ஊடுருவலை முறியடிப்போம்.

நெதன்யாகு மற்றும் தோற்கடிக்கப்பட்ட அவருடைய இராணுவமும் எந்தவொரு இராணுவ வெற்றியையும் அடைய முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

நேற்று இஸ்ரேல் துருப்புகளுடன் காசாவின் வடகிழக்கு நகரான பெய்ட் ஹனௌன் மற்றும் அல்-புரெய்ஜின் மத்திய பகுதியில் சண்டையிட்டோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இதனால் வரும் நாட்களில் காசா பகுதி மிகப்பெரிய சேதத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஐ.நா. சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

https://thinakkural.lk/article/279002

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

இஸ்ரேல் தாக்குதலை முறியடிக்க முழுப்படைகளுடன் தயார்: ஹமாஸ்

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்ள முழுப்படைகளுடன் தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அமைப்புகளுடன் சேர்ந்து முழுப்படையுடன் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதன் ஊடுருவலை முறியடிப்போம்.

நெதன்யாகு மற்றும் தோற்கடிக்கப்பட்ட அவருடைய இராணுவமும் எந்தவொரு இராணுவ வெற்றியையும் அடைய முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

 

இவர்கள் சொல்லுவது சரி. இவர்கள்தான் யுத்தத்தை தொடங்கினார்கள். எனவே இஸ்ரவேல் ராணுவத்தை தோற்கடித்து யுத்தத்தை முடிக்க போகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்

காஸா மீது இஸ்ரேல் நடத்தும் மூன்று கட்ட தாக்குதல்கள் என்னென்ன?

காஸா போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

காஸாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ள நிலையில், இந்தப் போர் நீண்ட நெடியதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தரைவழி தாக்குதலை காஸாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்தப் போவதாக கடந்த பத்து நாட்களுக்கு முன்பே இஸ்ரேல் அறிவித்திருந்தது. தரைப்படைகள் இரவோடு இரவாக காஸாவிற்குள் நுழைந்து ஹமாசுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தும் என்று இஸ்ரேலின் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகரி வெள்ளிக்கிழமை இரவு பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

இதனால் காஸா நகரம் உள்ளிட்ட வடக்குப் பகுதியில் இருக்கும் மக்கள் தெற்கு நோக்கி நகர இஸ்ரேல் எச்சரித்தது. இந்நிலையில் காஸாவின் வடக்குப் பகுதியில் தற்போது தீவிரமான தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.

இஸ்ரேலின் மூன்று கட்ட தாக்குதல்கள் என்ன?

இது காஸாவுக்கு எதிரான போரின் இரண்டாவது கட்டம் என்றும் இது கடினமானதாக இருக்கும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

கடந்த வாரம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட், காஸாவுக்கு எதிரான போர் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மூன்று கட்டங்கள்,

  • முதல் கட்டத்தில் ஹமாஸின் கட்டமைப்புகள் தகர்க்கப்படும்
  • இரண்டாம் கட்டத்தில் ஹமாஸ் ஒழிக்கப்படும்
  • மூன்றாவது கட்டத்தில் காஸா மக்களின் உயிருக்கு இஸ்ரேல் பொறுப்பல்ல என்ற நிலை உருவாகி இஸ்ரேல் குடிமக்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
 

'தீய சக்திகளின் கோட்டைக்குள் இஸ்ரேல் நுழைந்துள்ளது'

தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய பிரதமர் நெதன்யாகு, காஸா பகுதி முழுவதும் இஸ்ரேலின் படைத் தளபதிகள் நிறுத்தப்பட்டிருப்பதை உறுதிபடுத்தினார். தரைவழித் தாக்குதல் தொடங்கியது முதலே காஸாவில் இதுவரை இல்லாத அளவிலான தொடர் குண்டு வீச்சுகள் நிகழ்ந்து வருகின்றன.

இஸ்ரேலின் தரைவழிப் படைகள், காஸாவில் நுழைந்ததை ‘தீய சக்தியின் கோட்டைக்குள்’ படைகள் நுழைந்துள்ளன என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.

ஹமாஸ் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து நெதன்யாகு ஆறுதல் கூறினார். அப்போது அந்தக் குடும்பத்தினர், தரைவழித் தாக்குதல் தொடங்கி, தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால் தங்கள் உறவினர்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தை அவரிடம் வெளிப்படுத்தினர்.

அவர்களிடம் பேசிய நெதன்யாகு, பணயக் கைதிகளை பத்திரமாக மீட்டுக் கொண்டு வருவது இந்தப் போரில் ராணுவத்தின் நோக்கங்களில் முக்கியமான ஒன்று என்றார்.

 

அழிவுக் காடாக மாறிய காஸா நகரம்

காஸா போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காஸா நகரில் இஸ்ரேலின் எச்சரிக்கை அறிவிப்புகளைக் கொண்ட பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் அந்தப் பகுதி தற்போது ‘போர்க்களமாக’ மாறியுள்ளது என்றும், அந்தப் பகுதியில் மக்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தெற்குப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வான்வழித் தாக்குதல் மூலம் பெரும்பாலும் தீவிரவாதிகளின் கட்டமைப்பும் பூமிக்கு அடியில் உள்ள இலக்குகளையும்தான் குறி வைத்து தகர்க்கிறோம் என இஸ்ரேல் கூறியிருந்தது. தற்போது தரைப்படையினர் வெள்ளிக்கிழமை மாலை முதல் தங்களது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளனர். ராணுவத்தின் இலக்கை அடைய அனைத்து வகைகளிலும் தீவிரமாகச் செயல்படுகிறோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தரைவழித் தாக்குதல் தொடங்கியது முதல் காஸாவில் உள்ள மக்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருக்கின்றனர். அந்தப் பகுதியில் தொலைபேசி இணைப்புகள் மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த தரைவழி தாக்குதலை துருக்கியின் அதிபர் ரெகப் தய்யிப் எர்டோகன் கண்டித்துள்ளார். இஸ்ரேல் போர் குற்றங்களை நிகழ்த்துவதாக அவர் கூறியிருந்தார்.

இதனால் கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு , இஸ்ரேலில் உள்ள துருக்கி தூதர்களையும் அதிகாரிகளையும் வெளியே அனுப்பினார். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளை, “தார்மீக ராணுவம்” என்று அவர் குறிப்பிட்டார்.

 

இஸ்ரேலின் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது: ஐ.நா. பொதுச் செயலாளர்

காஸா போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 1,500 இறந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் காஸா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் காஸாவில் இதுவரை 8000 பேர் இறந்துள்ளதாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தப் போரில் மனிதநேய காரணிகளைக் கருத்தில் கொண்டு போர் நிறுத்தம் கொண்டு வரவேண்டும் என உலக சமூகம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், போரின் அடுத்த கட்டத்துக்கு இஸ்ரேல் சென்றிருப்பது அதிர்ச்சியாக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளார் அண்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

பொதுவாக போர் போன்ற சூழல்களில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காத சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் காஸாவில் பொறுத்துக் கொள்ள முடியாத அளவிலான துயரம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை இரவு வெளியிட்ட தனது அறிக்கையில், “இருபது லட்சம் மக்கள் குண்டு வீச்சுகள் மற்றும் ராணுவ முற்றுகைக்கு இடையில், வெளியே செல்ல முடியாமல் காஸாவில் சிக்கியுள்ளனர். இந்தப் பேரழிவை உலகம் பொறுத்துக் கொள்ளக்கூடாது,” என்று தெரிவித்தது.

 
காஸா போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஞாயிற்றுகிழமை X சமுக ஊடக தளத்தில் பதிவிட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், காஸாவுக்கான மனிதநேய உதவிகள் அமெரிக்கா மற்றும் எகிப்திடம் இருந்து விரிவுப்படுத்தப்படும் எனத் தெரிவித்தது.

ஆனால் இந்த உதவிகள் எப்போது எங்கு எப்படி வழங்கப்படும் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும் இஸ்ரேலுக்கு மக்கள் வாழும் பகுதி எது, ஹமாஸின் பகுதி எது எனத் தெரியும் என்பதால், மக்கள் வாழும் பகுதியில் மறைந்துகொண்டு, ஹமாஸ் மனித கேடயங்களைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியது.

காஸா மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாலத்தீனத்துக்கு ஆதரவான போராட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இஸ்தான்புல்லில் நடைபெற்ற பாலத்தீனத்துக்கு ஆதரவான மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் துருக்கியின் அதிபர் ரெகப் தய்யிப் எர்டோகன் பங்கேற்றார். அப்போது அவர், இஸ்ரேலை ஆக்கிரமிப்பாளர் என்றும் இந்த வன்முறைக்கு மேற்கு நாடுகள் பொறுப்பு என்றும் கூறினார்.

பிரிட்டன் தலைநகரான லண்டனில் நீண்ட பாலத்தீன கொடி ஒன்றை ஏந்தி ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். மலேசிய தலைநகரான குவாலா லம்பூரில் அமெரிக்க தூதரகம் வெளியே நூற்றுக்கணக்கானோர் பாலத்தீன கொடிகளுடன் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதே போன்று மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரிலும் பாலத்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலத்தீன கைதிகளை உடனே விடுவிக்குமாறு மேற்கு கரையில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

https://www.bbc.com/tamil/articles/c0dj3eld3g0o

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- இஸ்ரேல் பிரதமருடன் அமெரிக்க ஜனாதிபதி பேச்சு

காசா மீது நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் அதனை நிராகரித்த இஸ்ரேல் தனது போரை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது ஜோபைடன் அவரிடம் காசாவில் உள்ள பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மனிதாபிமான உதவியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றும் அங்குள்ள அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Capture-2-8.jpg

ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டோரியோ குட்டரெஸ் நேபாளத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் இறந்த 10 நேபாள மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முதன்மையானது.

மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும். மனிதாபிமான உதவிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என போர் விதிகள் கூறுகின்றன. அந்த விதிகளை யாருக்காகவும் மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் காசாவில் உள்ள மக்களுக்கு உதவிட உலக நாடுகள் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/279154

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்வதை உலகம் ஏற்றுக்கொள்ளாது- அவுஸ்திரேலியா

Published By: RAJEEBAN    30 OCT, 2023 | 12:26 PM

image

காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்வதை  உலகம் ஏற்றுக்கொள்ளாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தனது நண்பர்களை செவிமடுக்கவேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டு தரப்பிலும் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏபிசி ரேடியோவிற்கு இதனை தெரிவித்துள்ள பெனி வொங் இது பயங்கரமான சோகமான மோதல் உயிர் இழப்பை பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு பக்கத்திலும் பொதுமக்கள் கடும் வேதனையில் உள்ளதை நாங்கள் பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ள அவர் ஹமாஸ் பணயக்கைதிகளாக இஸ்ரேலியர்களை இன்னமும் பிடித்துவைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் என்ன தெரிவிக்கின்றேன் என்றால் பொதுமக்களை பாதுகாக்கவேண்டும் என இஸ்ரேலின் நண்பர்கள் வலியுறுத்தும்போது அதனை இஸ்ரேல் செவிமடுப்பது அவசியம் என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168061

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது: ஐ.நா. பொதுச் செயலாளர்

சரக்கை அடிச்சிட்டு சாப்பிட்டு விட்டு போய் படுக்கத்தானே?

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காசா வடக்கில் கார்மீது இஸ்ரேலிய டாங்கி தாக்குதல் -

Published By: RAJEEBAN     30 OCT, 2023 | 08:46 PM

image

காசாவின் வடக்கில் உள்ள சலா அல் டின் வீதியில் இஸ்ரேலிய டாங்கி கார் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்வதை காண்பிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

வடக்கு காசாவிலிருந்து தெற்கு காசாவை நோக்கி செல்லும் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கார் ஒன்று டாங்கி காணப்படும் பகுதியை நோக்கி செல்வதையும் பின்னர் அங்கிருந்து விலகிச்செல்ல முயல்வதையும் அதன்போது கார் மீது டாங்கி பிரயோகம் மேற்கொள்வதையும் காணமுடிகின்றது.

அந்த கார் வெடிப்பதை பார்த்து மற்றுமொரு கார் அங்கிருந்து விலகிச்செல்வதை காணமுடிகின்றது.

இந்த வீடியோவை ஆராய்ந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது இதன்போது இந்த சம்பவம் சலாட் அல் டின்னில் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்த முடிவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/168119

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் இஸ்ரேலிய படையினர் மீது டாங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் - ஹமாஸ்

Published By: RAJEEBAN    31 OCT, 2023 | 10:53 AM

image

காசாவில் முன்னோக்கி நகரமுயலும் இஸ்ரேலிய படையினர் மீது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவின் தென்பகுதிக்குள் ஊடுருவ முயலும் இஸ்ரேலிய படையினர் மீது இயந்திரத் துப்பாக்கிகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹமாசின் ஆயுதப்பிரிவு, அல்யாசின் 105 ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதாகவும் அறிவித்துள்ளது.

அல்யாசின் என்பது காசாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

காசாவின் வடமேற்கு பகுதியில் இஸ்ரேலின் புல்டோசர்களையும் டாங்கிகளையும் ஏவுகணைகளை பயன்படுத்தி இலக்கு வைத்ததாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இதனை உறுதி செய்ய முடியவில்லை என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது - இஸ்ரேல் இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.

பணயக்கைதிகள் விடுதலை குறித்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக இஸ்ரேலிய படையினர் மிகவும் மெதுவாகவே நகர்கின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/168134

  • கருத்துக்கள உறவுகள்

காசா சுரங்கப்பாதைகளிற்குள் ஹமாஸ் - இஸ்ரேலிய படையினர் மோதல்

Published By: RAJEEBAN     31 OCT, 2023 | 03:10 PM

image

காசாவில் சுரங்கப்பாதைகளுக்குள் இஸ்ரேலிய படையினருக்கும் ஹமாசிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன.

நீண்ட சுரங்கப்பாதைகளுக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதலை மேற்கொண்டதாக  இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ரொக்கட்டை ஏவுவதற்கான தளங்கள் ஹமாசின் சுரங்கப்பாதைகளிற்குள் உள்ள தளங்கள் போன்றவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என  இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இயந்திரதுப்பாக்கிகளை  பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டர் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் ஹமாஸ் அமைப்பினரை கொலை செய்துள்ளனா எனவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் காசாவின் வடக்கு தெற்கு வீதியை இரண்டு பகுதிகளில் இலக்வைத்தது இரண்டு திசைகளில் இருந்து காசாவை தாக்கியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/168164

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நோயாளியை காப்பாற்றுவது -எந்த நோயாளியை மரணிக்கவிடுவது - தார்மீக நெருக்கடியில் காசா மருத்துவர்கள்

Published By: RAJEEBAN    31 OCT, 2023 | 04:17 PM

image

எந்த நோயாளியை காப்பாற்றுவது என்ற தார்மீக நெருக்கடியில் காசாமருத்துவர்கள் சிக்குண்டுள்ளனர் .

மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக எந்த நோயாளியை காப்பாற்றுவது எந்த நோயாளியை மரணிப்பதற்கு அனுமதிப்பது  என்ற தார்மீக நெருக்கடியில் காசா மருத்துவர்கள் சிக்குண்டுள்ளனர்.

மெட்குளோபல் என்ற அமைப்பின் தலைவர் வைத்தியர் சாஹிர்  சஹ்லூல் இதனை தெரிவித்துள்ளார்.

gaza_cancer_hos.jpg

மருத்துவமனைகளில் மயக்கமருந்துகளும் வலிநிவாரணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் குருதி வெளியேறும் மற்றும் அதிர்ச்சியில் சிக்குண்டுள்ள நோயாளிகளிற்கு சிகிச்சை வழங்குவதற்கான பல மருந்துகளும் முடிவடையும் நிலையில் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அப்பால் குண்டுவீச்சு இடம்பெறுகின்றது சுத்தமான குடிநீர் எரிபொருள் தட்டுப்பாடுகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மருத்துவர் என்ற ரீதியில் எந்த நோயாளியை குறித்து கவனம் செலுத்துவது உயிர்களை காப்பாற்றுவது  எந்த நோயாளியை மரணிக்க விடுவது என தீர்மானிக்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168171

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் நான் கமராவின் பின்னால் நின்று அழுகின்றேன் - காசா ஊடகவியலாளர்

Published By: RAJEEBAN     01 NOV, 2023 | 11:23 AM

image

பிபிசி

சிக்னல் கிடைக்கும் இடங்களில் அவர் தொலைபேசி அழைப்பை மேற்கொள்கின்றார்- தனது போனை சார்ஜ் செய்வதற்கு போதுமான மின்சாரம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவர் தொலைபேசி  அழைப்பை மேற்கொள்கின்றார்.

உணவு கிடைக்கும்போது அவர் உண்கின்றார்- பாழடைந்த ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு  இடத்திற்கு அவர் பயணிக்கின்றார். பெட்ரோல் கிடைக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் வரை அவர் பயணிக்கின்றார்.

அதேவேளை மஹ்மூட் பாசம் தனது மனைவி, 11 மாத குழந்தை குறித்தும் கவலையுடன் உள்ளார், அவர் அவர்களை குண்டுவீச்சிலிருந்து காப்பாற்றவேண்டும், இதன் காரணமாக அவர் காலையில் பணிக்கு செல்லும் போது அவர்கள் தான் இரவு திரும்பி வரும் போது அதே  இடத்திலிருப்பதை உறுதி செய்கின்றார்.

gaza_jou1.jpg

அவரால் திரும்பி வரமுடிந்தால் மாத்திரமே  இரவு அவர்களை அவர் சந்திக்கலாம்- குண்டுவீச்சு  காரணமாக வீதிகள் சில இடங்களில் சேதமடைந்துள்ளன- அல்லது பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

காசாவில் இந்த நாட்களில் அவர் யுத்தத்தின் தயவில் வாழ்கின்றார்- யுத்தம் எந்த  பாதிப்பை ஏற்படுத்துகின்றது -அது எதனை கொண்டுபோகின்றது.

மஹ்மூட் மக்களின் வலிகளை துயரங்களை அர்ப்பணிப்புடன் பதிவு செய்பவர். யுத்தம் மூன்று வாரங்களிற்கு முன்னர் ஆரம்பித்ததில் இருந்து அவர் மருத்துவமனைகளுக்கும் அகதிமுகாம்களுக்கும் இடையில் அலைந்துகொண்டிருக்கின்றார். களைப்பை ஏற்படுத்தும் விதத்தில் அவர் தொடர்ந்து செல்கின்றார், குண்டுவெடிப்புகளின் நடுவில் அவர் அங்கு செல்கின்றார்.

பிபிசியின் காசா செய்தியாளருடன் இணைந்து பணியாற்றும் இவர் ஒரு சுயாதீன ஊடகவியலாளர் - 

தொடர்ச்சியான விமானதாக்குதல்களில் சிக்குண்டுள்ள மக்களின் துயரங்களை பிபிசி வெளிப்படுத்துவதற்கு இவர் போன்றவர்கள் உதவியுள்ளனர்.

பல மணிநேரம் முயற்சி செய்த பின்னர் என்னால் அவரை தொடர்புகொள்ள முயன்றவேளை அவர் தனது ஊடகப்பணி தனக்கு எவ்வாறான மன உளைச்சல்களை ஏற்படுத்துகின்றது என்பதை தெரிவித்தார்.

நான் பார்க்கும் விடயங்களை பார்ப்பது எவ்வளவு கடினமாக உள்ளதோ அந்தளவிற்கு அந்த செய்தியை வெளி உலகிற்கு கொண்டு செல்வதற்கு நான் முயல்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

சில வேளைகளில் நான் கமராவின் பின்னால் நின்று அழுகின்றேன் - அமைதியாக இருப்பது ஒன்றை மாத்திரம் என்னால் செய்ய முடிகின்றது என்கின்றார் அவர்.

மனித உயிர்கள் தொடர்ச்சியான துயரத்தை அனுபவிக்கின்ற நிலையில்  காசாவில் பணியாற்றும் எனக்கு தெரிந்த பல பத்திரிகையாளர்கள் இயலாமையை உணர்கின்றனர்.

மிகப்பெரும் எண்ணிக்கையானவர்களிற்கு உதவவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்ற நிலையில் எவ்வாறு உதவுவது? உணவையும் முதலுதவியையும் வழங்கவேண்டிய நிலையிலிருந்தால் நீங்கள் உங்கள் ஊடகதொழிலில் எவ்வாறு ஈடுபடுவது.

gaza_255.jpg

நாங்கள் மனிதாபிமான பணியாளர்களோ அல்லது மருத்துவர்களோ இல்லை நாங்கள் மனிதர்கள்.

அந்த மண்ணில் பிறந்த மஹ்மூட் போன்றவர்களின் வலி இன்னமும் அதிகமானது - என்னை போன்ற வெளிநாட்டு செய்தியாளர்கள் விமானம் ஏறி ஊருக்கு செல்லலாம்,- யுத்தத்தின் நினைவுகள் எங்களை பின்தொடரலாம், நாங்கள் நேசிப்பவர்களை போல  எங்களிற்கும்  உடல்ரீதியான பாதுகாப்பு உள்ளது.

காசாபள்ளத்தாக்கு என்பது மிகவும் சிறிய நிலப்பரப்பு - 366சதுரகிலோமீற்றர் -இதன் காரணமாக தனக்கு தெரிந்த யாராவது ஒருவர்  யுத்தத்தில் சிக்குண்டிருப்பது மஹ்மூட் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நான் ஒரு பத்திரிகையாளான் நான் பார்ப்பதை தெரிவிப்பதே எனது தொழில் என அவர் என்னிடம் தெரிவித்தார்.

ஆனால் சிலவேளைகளில் நான் எனது பணியை நிறுத்திவிட்டு இந்த குழந்கைளுடன்  சிறிது நேரத்தை செலவிடவேண்டியுள்ளது அவர்களிற்கு குடிநீரை வழங்கவேண்டியுள்ளது அவர்களிற்கு உண்ண என்ன தேவை என அறிந்து அதனை வழங்கவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/168226

  • கருத்துக்கள உறவுகள்

காசா சுற்றிவளைக்கப்பட்டுள்ளது- இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு’

Published By: RAJEEBAN    03 NOV, 2023 | 06:12 AM

image

காசாவை சுற்றிவளைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கொண்ட தரைநடவடிக்கைகளின் பின்னர் காசாவை சுற்றிவளைத்துள்ளதாக இஸ்ரேலின் இராணுவபேச்சாளர் டானியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மையமாக உள்ள காசாநகரத்தை இஸ்ரேலிய படையினர் முழுமையாக சுற்றிவளைத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தநிறுத்தம் என்ற விடயம் குறித்து ஆராயப்படவேயில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய படையினர் காசாவிற்குள் உள்ளனர் காசா நகரை நான்கு திசைகளிலும் முற்றுகையிட்டுள்ளனர் ஹமாசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் ஆழமாக ஊடுருவுகின்றனர் என இஸ்ரேல் இராணுவத்தின் பிரதானி லெப்ஜெனரல் ஹேர்சி ஹலேவி தெரிவித்துள்ளார்.

ஈவிரக்கமற்ற எதிரியுடன் இஸ்ரேலிய படையினர் நேருக்குநேர் மோதலில் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168374

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.