Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'காஸாவில் குழந்தைகளை கொல்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்' - பிரான்ஸ் அதிபர் பிபிசிக்கு பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
‘காஸாவில் குழந்தைகள், பெண்களை கொல்வதை நிறுத்துங்கள்’ – இஸ்ரேலை வலியுறுத்திய பிரான்ஸ் அதிபர்
54 நிமிடங்களுக்கு முன்னர்

காஸாவில் பெண்கள், குழந்தைகளைக் கொல்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிபிசியிடம் கூறியுள்ளார்.

எல்சி அரண்மனையில் ஒரு பிரத்யேக நேர்காணலில், அவர் குண்டுவெடிப்புக்கு ‘எந்த நியாயமும் இல்லை’ என்று கூறினார். மேலும், போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கு நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கும் அதேவேளையில், காஸாவில் “இந்த குண்டுவெடிப்பை நிறுத்துமாறு நாங்கள் அவர்களை வலியுறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.

ஆனால், ஹமாஸின் “பயங்கரவாத” நடவடிக்கைகளை பிரான்ஸ் “தெளிவாகக் கண்டிக்கிறது” என்று அவர் வலியுறுத்தினார்.

பிரான்ஸ் – இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளைப் போலவே – ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கருதுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மற்ற நாட்டின் தலைவர்கள் போர் நிறுத்தத்திற்கான அவரது அழைப்பில் இணையவேண்டுமா என்று கேட்டபோது, “அவர்கள் அதைச் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று பதிலளித்தார்.

இஸ்ரேலிய குண்டுவீச்சு நடந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இஸ்ரேல் ஒரு பெரிய தரைவழித் தாக்குதலை காஸாவுக்குள் தொடங்கியது. காஸாவின் ஹமாஸ் நடத்தும் ஆட்சியின் சுகாதார அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமையன்று 11,078 பேர் கொல்லப்பட்டதாகவும் 1.5 மில்லியன் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் கூறியது.

 
‘காஸாவில் குழந்தைகள், பெண்களை கொல்வதை நிறுத்துங்கள்’ – இஸ்ரேலை வலியுறுத்திய பிரான்ஸ் அதிபர்

பட மூலாதாரம்,EPA

சர்வதேச சட்டத்திற்கு இணங்க ராணுவ இலக்குகளைத் தாக்குவதாக இஸ்ரேல் கூறுகிறது. மேலும், தாக்குதல்களுக்கு முன்னதாக எச்சரிக்கைகளை வழங்குவது, மக்களை வெளியேற்ற அழைப்பு விடுப்பது போன்ற பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்க நடடிக்கை எடுப்பதாகவும் கூறுகிறது.

காஸா போர் பற்றி பாரிஸில் நடந்த மனிதாபிமான உதவி மாநாட்டைத் தொடர்ந்து அடுத்த நாள் பேசிய மக்ரோன், “முதலில் மனிதாபிமான இடை நிறுத்தத்தைச் செய்வதைத் தவிர வேறு தீர்வு இல்லை” என்பதே அந்த மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து அரசுகள் மற்றும் அமைப்புகளின் “தெளிவான முடிவாக” இருந்தது என்று கூறினார். “போர் நிறுத்தம் பயங்கரவாதிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத பொது மக்களைப் பாதுகாக்க அனுமதிக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“உண்மையில், இன்று பொதுமக்கள் குண்டுவெடிப்புக்கு ஆளாகிறார்கள். இந்தக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், குண்டுவீசிக் கொல்லப்பட்டனர். அதற்கு எந்தக் காரணமும் இல்லை. எனவே இஸ்ரேலை நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.”

சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா என்பதை முடிவு செய்வது தனது பணி இல்லை என்றும் மக்ரோன் கூறினார்.

‘இஸ்ரேலின் வலியை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம்’

‘காஸாவில் குழந்தைகள், பெண்களை கொல்வதை நிறுத்துங்கள்’ – இஸ்ரேலை வலியுறுத்திய பிரான்ஸ் அதிபர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மக்ரோனின் கருத்துகளுக்கு, உலக நாடுகள் ஹமாஸை கண்டிக்க வேண்டும், இஸ்ரேலை அல்ல என்று விரைவாகப் பதிலளித்தார்.

“காசாவில் ஹமாஸ் இன்று செய்யும் குற்றங்கள் நாளை பாரிஸ், நியூயார்க் மற்றும் உலகெங்கிலும் செய்யப்படும்” என்று நெதன்யாகு அலுவலகத்தில் இருந்து வெளியான ஓர் அறிக்கை கூறுகிறது.

வருடாந்திர பாரிஸ் அமைதி மன்றத்தின் முதல் நாள் முடிவில் ஒரு பரந்த நேர்காணலில், அதிபர் மக்ரோனும் விவாதித்தார்.

  • மத்திய கிழக்கில் இருந்து பிரான்சுக்குள் பரவும் வன்முறை பற்றிய அச்சம், அனைத்து மதங்களைச் சேர்ந்த குடிமக்களையும் “யூத எதிர்ப்பு மனநிலைக்கு எதிராக ஒன்றுபட” வலியுறுத்துகிறது.
  • யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் யுக்ரேனுக்கு உதவுவது பிரான்ஸின் கடமை என்று கூறியதோடு, ஆனால், ரஷ்யாவுடன் “நியாயமான, நல்ல பேச்சுவார்த்தைகளுக்கு” ஒரு நேரம் வரலாம் என்றும் பரிந்துரைத்தார்.
  • பாரிஸ் அமைதி மன்றத்தில் ஒரு முக்கியத் தலைப்பாக மக்ரோங் இணைய பயங்கரவாதம் குறித்தும் விவாதித்தார். ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களைத் தனித்தனியாகக் குறிப்பிட்டு, அந்த நிறுவனங்கள் தங்கள் தளங்களில் வெறுப்புப் பேச்சுகளை மிதப்படுத்துவதாக அளித்த வாக்குறுதிகளை “வெறுமனே வழங்கவில்லை” என்று கூறினார்.
  • காலநிலை மாற்றத்தின் அபாயங்கள், உலகெங்கிலும் உள்ள மக்களை “பயங்கரவாதத்தை” நோக்கித் தள்ளுவதாகக் கூறினார்.
 
‘காஸாவில் குழந்தைகள், பெண்களை கொல்வதை நிறுத்துங்கள்’ – இஸ்ரேலை வலியுறுத்திய பிரான்ஸ் அதிபர்

காஸாவை பற்றி விவாதிப்பதன் மூலமாகத் தொடங்கி, போரைத் தூண்டிய இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்களை பிரான்ஸ் “தெளிவாகக் கண்டிக்கிறது” என்று மக்ரோன் கூறினார். ஹமாஸ் ஆயுதக்குழு அன்று நடத்திய முன்னறிவிப்பில்லாத எல்லை தாண்டிய தாக்குதலில் சுமார் 1,200 பேரைக் கொன்றது. மேலும், அவர்கள் 240 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்தனர்.

“நாங்கள் இஸ்ரேலின் வலியைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அவர்களின் எண்ணத்தை நாங்களும் பகிர்ந்துகொள்கிறோம். பயங்கரவாதம் என்றால் என்னவென்று பிரான்சுக்கு தெரியும்,” என்று கூறியவர், ஆனால் காஸாவில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் குண்டுவெடிப்புக்கு “எந்த நியாயமும் இல்லை” என்றார்.

“நம்முடைய கொள்கைகளின் காரணமாக, நம் அனைவருக்கும் இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், நாம் ஜனநாயக நாடுகளாக இருக்கிறோம். இஸ்ரேலின் பாதுகாப்புக்காகவும் அனைத்து உயிர்களும் முக்கியம் என்பதை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது,” என்றும் அதிபர் மக்ரோன் தெரிவித்தார்.

யூத எதிர்ப்புக்கு எதிராக உறுதியான கண்டனம்

'காஸாவில் குழந்தைகளை கொல்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்' - பிரான்ஸ் அதிபர் பிபிசிக்கு பேட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரான்சின் அரசியல் வகுப்பினரின் பெரும்பகுதி கலந்துகொள்ளும், அதிபர் மக்ரோங் ஞாயிற்றுக்கிழமை யூத எதிர்ப்புக்கு எதிரான அணிவகுப்புக்கு முன்னதாக, அதிபர் மக்ரோங் அனைத்து பிரெஞ்சு குடிமக்களுக்கும் “சந்தேகம் இன்றி” யூத விரோத செயல்களைக் கண்டிக்க அழைப்பு விடுத்தார்.

பிரான்ஸில் அநேகமாக ஐரோப்பாவின் மிகப் பெரிய முஸ்லிம் சமூகமும், ஒரு பெரிய யூத சமூகமும் இருக்கலாம் என்றும் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் மற்ற பகுதிகள் யூத எதிர்ப்புப் பெருக்கத்தைக் கண்டு வருவதால், அனைத்து பிரெஞ்சு குடிமக்களும் யூத விரோதத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டும் எனவும் கூறினார். மேலும், “பாலத்தீனர்களின் வலியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

பின்னர் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு வீச்சிலான படையெடுப்பு உட்பட மற்ற உலகளாவிய பிரச்னைகள் பற்றி மக்ரோங் பேசினார்.

ரஷ்யா தனது போரில் வெற்றிபெற அனுமதித்தால், ஐரோப்பாவில், “நீங்கள் ஒரு புதிய ஏகாதிபத்திய சக்தியைப் பெறுவீர்கள்,” அது ஜார்ஜியா, கஜகஸ்தான் போன்ற மற்ற முன்னாள் சோவியத் நாடுகளையும் முழு கண்டத்தையும் அச்சுறுத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.

'காஸாவில் குழந்தைகளை கொல்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்' - பிரான்ஸ் அதிபர் பிபிசிக்கு பேட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

“ஏனென்றால், நிச்சயமாக ஏகாதிபத்தியம் மற்றும் காலனித்துவத்தைத்தான் ரஷ்யா (யுக்ரேனில்) செய்து வருகிறது,” என்று அவர் கூறினார்.

யுக்ரேனின் பாதுகாப்பில் யுக்ரேனுக்கு ஆதரவளிப்பது தனது நாடு உட்பட அனைத்து நாடுகளின் கடமை என்று பிரான்ஸ் அதிபார் கூறினார். ஆனால், எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளில் இழந்த நிலத்தை மீட்பதற்குப் போராடுவதால், அடுத்த மாதம் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், பாரிஸ் அமைதி மன்றத்தில் ஒரு முக்கியத் தலைப்பாக மக்ரோங் இணைய பயங்கரவாதம் குறித்தும் விவாதித்தார். ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களைத் தனித்தனியாகக் குறிப்பிட்டு, அந்த நிறுவனங்கள் தங்கள் தளங்களில் வெறுப்புப் பேச்சுகளை மிதப்படுத்துவதாக அளித்த வாக்குறுதிகளை “வெறுமனே வழங்கவில்லை” என்று கூறினார்.

உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்னைகளால் அவர் எப்போதாவது மனச்சோர்வடைந்து இருக்கிறாரா என்று கேட்கப்பட்டபோது, மக்ரோன், "(அரசின் தலைவராக) பொறுப்புகளைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் மரியாதையாகவும்" அதைக் கண்டதாகக் கூறினார்.

"எங்களுக்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவை (உலகளாவிய பிரச்னைகளை சமாளிக்க) இதுவொரு தனித்துவமான வாய்ப்பு," என்று மக்ரோங் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cpvpw27142zo

  • கருத்துக்கள உறவுகள்

"Gallant warned the Hezbollah leadership that it is “close to making a grave mistake,” The Times of Israel reported. He added that it would be the people of Beirut who would suffer should skirmishes continue in Israel’s north.

“Hezbollah is dragging Lebanon into a war that may happen, and it is making mistakes,” Gallant said. “If it makes mistakes of this kind, the ones who will pay the price are first of all the citizens of Lebanon. What we are doing in Gaza we know how to do in Beirut,” the minister warned."

 

ஹிஸ்புல்லாவின் தவறுகளுக்கு காஸாவினைப் போன்று முதலில் பலியாகப்போவது லெபனானின் குடிமக்களே. 

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

"Gallant warned the Hezbollah leadership that it is “close to making a grave mistake,” The Times of Israel reported. He added that it would be the people of Beirut who would suffer should skirmishes continue in Israel’s north.

“Hezbollah is dragging Lebanon into a war that may happen, and it is making mistakes,” Gallant said. “If it makes mistakes of this kind, the ones who will pay the price are first of all the citizens of Lebanon. What we are doing in Gaza we know how to do in Beirut,” the minister warned."

 

ஹிஸ்புல்லாவின் தவறுகளுக்கு காஸாவினைப் போன்று முதலில் பலியாகப்போவது லெபனானின் குடிமக்களே. 

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர். 

☹️

அதனால்தான் ஹிஸ்புல்லா அடக்கி வாசிக்குது. காசாவில் நடந்ததுதான் நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும். முஸ்லீம்நாடுகள் என்னதான் போர்க்கொடி தூக்கினாலும் யாரும் உதவி செய்யப்போவதில்லை. சூடு கண்ட பூனை  அடுப்பங்கரையை நாடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Cruso said:

அதனால்தான் ஹிஸ்புல்லா அடக்கி வாசிக்குது. காசாவில் நடந்ததுதான் நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும். முஸ்லீம்நாடுகள் என்னதான் போர்க்கொடி தூக்கினாலும் யாரும் உதவி செய்யப்போவதில்லை. சூடு கண்ட பூனை  அடுப்பங்கரையை நாடாது. 

நீண்டகால நோக்கில் இந்த யுத்தம் இஸ்ரேலுக்கும் மேற்கிற்கும்  தோல்விகரமா னது.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

நீண்டகால நோக்கில் இந்த யுத்தம் இஸ்ரேலுக்கும் மேற்கிற்கும்  தோல்விகரமா னது.

ஓம் ஓம் மேட்கில் இசுலாமியர்களை குடியேற்றினால் அது அவர்களுக்கு தோல்விகரமானதுதான். அங்கு நடக்கும் ஆர்ப்பாட்ட்ங்களில் இது தெரிகின்றது. நிச்சயமாக அவர்கள் மேட்குலகை ஒரு நாளைக்கு கைப்பற்றுவார்கள். அதனால்தான் இஸ்ரேல் அவர்களை  அகற்ற முயட்சிக்கிறது. மேட்குலகம் தோல்வியடைய நீண்ட  நாட்கள்  தேவைப்படாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் உடனடியாக யுத்தநிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் - தென்னாசிய பல்கலைகழக மாணவர் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

Published By: RAJEEBAN    13 NOV, 2023 | 11:36 AM

image

இஸ்ரேல் உடனடியாக யுத்தநிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தென்னாசிய நாடுகளின் பல்கலைகழக மாணவர்கள் சங்கங்கள் எதிர்ப்பதற்கும் சுதந்திரமாகயிருப்பதற்கும் தங்கள் பகுதிகளுக்கு திரும்புவதற்கும்  பாலஸ்தீனியர்களுக்கு உள்ள உரிமையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.

இலங்கை இந்தியா உட்பட தென்னாசியநாடுகளை சேர்ந்த பல்கலைகழகமாணவர் அமைப்புகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளன.

இலங்கையின் அனைத்து பல்கலைகழக மாணவர்கள் சங்கம் அனைத்து பல்கலைகழக பிக்குமார்கள் சம்மேளனம் புரட்சிகர மாணவர்கள் சங்கம் ஆகியன இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன-இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தன்மையை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கண்டித்துள்ளனர் என தெரிவித்துள்ள மாணவர் அமைப்புகள் உலகம் முழுவதிலும் உள்ள ஏகாதிபத்ய எதிர்ப்பு அமைதியை விரும்பும் மக்கள்  ஒன்றிணையவேண்டிய தருணம் இதுவென குறிப்பிட்டுள்ளன.

பாசிச இஸ்ரேலிய அரசாங்கத்தையும் அவர்களின் சகாக்களையும் எதிர்க்க முன்வருமாறும் பாலஸ்தீனியர்களை பாதுகாக்க முன்வருமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ள தென்னாசிய மாணவர் அமைப்புகள் பாலஸ்தீனிய மக்களிற்குஎதிரான சியோனிஸ்ட்களின் இனப்படுகொலையால் 12000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் காசாவில் நிலவரத்தை வெளிக்கொண்டுவரும்  பத்திரிகையாளர்களையும் அது இலக்குவைக்கின்றது என தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/169172

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.