Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை பாராளுமன்றத்தில் பட்ஜெட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஆண்டுக்கான (2024) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்ட உரை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (13) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி நிதி அமைச்சராக வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (14) ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு (ஞாயிறு தவிர்ந்த) விவாதம் நடைபெறும் என பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார் .

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இம்மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இம்மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதி புதன்கிழமை வரை (ஞாயிறு நீங்கலாக) 19 நாட்களுக்கு பட்ஜெட் குழுவின் போது விவாதம் நடத்தவும் பாராளுமன்ற விவகாரக் குழு முடிவு செய்துள்ளது .

வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு (இறுதி வாக்கெடுப்பு) அடுத்த மாதம் 13ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

https://thinakkural.lk/article/281024

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அடுத்த ஆண்டுக்கான (2024) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்ட உரை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (13) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி நிதி அமைச்சராக வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறார்.

அடுத்த வருட தேர்தலுக்காக பல சலுகைகள் வழங்கப்படலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருவாயை அதிகரிக்கவும் வளர்ச்சிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன் வரவு - செலவுத் திட்டத்திற்கான 10 முன்மொழிவுகளை வெளியிடும் வெரிட்டே ரிசர்ச்  

Published By: VISHNU    12 NOV, 2023 | 06:32 PM

image

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (நவம்பர் 13) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, வெரிட்டே ரிசர்ச் இலங்கையின் வருவாயை அதிகரிப்பதற்கும் வளர்ச்சிக்கு புத்துயிர்  அளிப்பதையும் நோக்கமாகக் வடிவமைக்கப்பட்ட 10 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை வெளியிட்டுள்ளது. 

WhatsApp_Image_2023-11-12_at_16.53.22_6b

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பாதை குறித்த கலந்துரையாடலை எளிதாக்கும் வகையில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற 'வருவாய் மற்றும் வளர்ச்சிக்கான வரவு செலவுத் திட்டம்' என்ற கருத்தரங்கில் இந்த முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்டன. 

WhatsApp_Image_2023-11-12_at_16.53.34_06

இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் அபிவிருத்தி கற்கைகள் நிறுவகத்தின் பேராசிரியர் மிக் மூரே, ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்தா தேவராஜன், ஓபர்லின் கல்லூரியின் பேராசிரியர் உதார பீரிஸ் மற்றும் வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல், ஆராய்ச்சி பணிப்பாளர் சுபாஷினி அபேசிங்க, முன்னணி பொருளாதார நிபுணர் ராஜ்பிரபு ராஜகுலேந்திரன், முன்னணி பொருளாதார நிபுணர் மதீஷ அரங்கல மற்றும் முன்னணி தரவு பகுப்பாய்வாளர் அஸ்வின் பெரேரா ஆகியோரின் முன்வைத்தல்கள் இடம்பெற்றன.

WhatsApp_Image_2023-11-12_at_16.53.33_48

நிஷான் டி இ மெல் தனது முன்னுரையில், நிலையான பொருளாதார மீட்சிக்கு வருவாயை அதிகரிக்கும் அதே நேரத்தில் வட்டி செலவுகளைக் குறைப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.  வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்டுள்ள  2024 ஆம் ஆண்டிற்கான வட்டிச் செலவு தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்புத் திட்டத்தில் கணிக்கப்பட்டதை  விட 234 பில்லியன் ரூபா அதிகமாகவே உள்ளது என்று  அவர் குறிப்பிட்டார்.  அரசாங்க வருவாயில் வட்டி செலவினங்களின் உலகளவில் அதிகூடிய விகிதத்தை இலங்கை பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தற்போது அது 70% அதிகமாக உள்ள நிலையில், 2024 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் 60% க்கும் அதிகமாக இருக்கும் என்றே அவர் சுட்டிக்காட்டினார். 

WhatsApp_Image_2023-11-12_at_16.53.33_84

இக் கருத்தரங்கு வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஐந்து முன்மொழிவுகளை முன்வைத்தது:  

(i)  பிடித்துவைத்தல் வரி விகிதங்களை தற்போதுள்ள 5% இலிருந்து 10% ஆக உயர்த்துதல். - இம் முன்மொழிவினூடாக மேலதிமாக 90 பில்லியன்  ரூபாவை ஈட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

(ii)  சிகரெட் வரிகளை அட்டவணைப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட பகுத்தறிவு சூத்திரத்தை ஏற்றுக்கொள்ளல்  - இம் முன்மொழிவு 35 பில்லியனுக்கும் அதிகமான தொகையைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  .  

(iii) சர்க்கரை வரி குறைப்பை ரத்து செய்து, வரி மாற்றங்களைச் செய்வதில் நிர்வாக அதிகாரத்தை நீக்குதல்- சிறப்பு பண்டங்களுக்கான  வரிச் சட்டத்தின் மூலம் அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட நிர்வாக அதிகாரத்தின் அளவு, பொதுவாக 'சர்க்கரை ஊழல்' என்று அழைக்கப்படுவதற்கு வழிவகுத்தது, உடனடியாக அதை சரிசெய்தால் (இப்போது நடந்தது போல) 25 பில்லியனுக்கும் அதிகமான தொகையை ஈட்ட முடியும்.  

(iv)  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச ரீதியாக சுட்டெண்ணப்பட்ட சூத்திரத்திற்கு மேலாக அதிகரித்த விலையை அமுல்படுத்துவதற்குப் பதிலாக, முழு தொழிற்துறையின் மீதும் அதிகரிக்கப்பட்ட வரியின் ஊடாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஏற்படும் அதிகப்படியான செலவினங்களை மீளப்பெறுதல். - இந்த முன்மொழிவு போட்டி தயாரிப்புகளிலிருந்து வசூலிக்கப்படும் மேலதிக வரிகளில் சுமார் 25 பில்லியன் ரூபாயை ஈட்டிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(v) சொத்து வரிகளை மதிப்பிடுவதற்கும் வசூலிப்பதற்கும் விவரிக்கப்பட்ட முறையை அமுல்படுத்துதல்  - இந்த முன்மொழிவு  ஆரம்பத்தில்  வரி வசூலை குறைந்தபட்சம் 17 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும்.

கருத்தரங்கின் அடுத்த பகுதி பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஐந்து முன்மொழிவுகளை முன்வைத்தது:

அரசு நிதியுதவியுடன் மகப்பேறு விடுப்பு சலுகைகளை (எம்.எல்.பி)அறிமுகப்படுத்துதல் - தற்போது மகப்பேறு சலுகைகளின் முழு செலவையும் தனியார் துறை ஏற்கிறது, இதனால் பெண்களை வேலைக்கு அமர்த்துவது விலை உயர்ந்தது விடயமாகவே உள்ளது. அரசு நிதியுதவியுடன் கூடிய மகப்பேறு விடுப்பு வசதியூடாக ஆட்சேர்ப்பில் உள்ள பாகுபாட்டைக் குறைத்து மற்றும் பெண் தொழிலாளர் பங்கேற்பை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சிகள் எடுத்துக் காட்டுகிறது.

பணப்பரிமாற்றம் மற்றும் அரச மானியங்களை சீர்திருத்தம் செய்வதன் மூலம் ஏழைகளைப் பாதுகாத்தல் - சிறந்த இலக்குடன் கூடிய  பணப்பரிமாற்றங்கள் பாதிக்கப்படக்கூடியவர்களைக் காத்து, மானியங்களின் ஒதுக்கீட்டை மிகவும் திறமையாகவும், பயனுள்ளதாகவும் ஆக்குகின்றது.

இலங்கை தனது வர்த்தக நடவடிக்கைகளில் 69% வெளி உதவியை நாடியுள்ளது, இது குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்பட்ட சராசரியான 40% உடன் ஒப்பிடும் போது கணிசமான உயர் வீதமாகும். முன்முயற்சியுடன் செயல்படுத்துவதை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வர்த்தகமுத்திரை பதிவு குறித்த மாட்ரிட் நெறிமுறையை ஏற்றுக்கொள்வது - இது சர்வதேச வர்த்தக முத்திரைகள் பதிவின் வேகத்தையும் எளிமையையும் அதிகரிக்கும் என்பதால், ஏற்றுமதியாளர்களுக்கு அதிக பெறுமதி மற்றும் உயர் விளிம்புடைய  தயாரிப்புகளுடன் உலகளவில் செல்வதற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை வழங்குகிறது.

வங்கித் துறையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் - வங்கித் துறை அபாயங்களை நிவர்த்தி செய்ய வைப்பு உத்தரவாத வரம்பை உயர்த்துதல், வங்கி தோல்விகளின் போது பணப்புழக்கத்திற்கான நிதி ஸ்திரத்தன்மை நிதியத்தை நிறுவுதல் மற்றும் செயல்படாத கடன்களுக்கான சொத்து முகாமைத்துவ நிறுவனத்தை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த மத்திய வங்கி, அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.  

WhatsApp_Image_2023-11-12_at_16.53.32_21

வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து நிஷான் டி மெல், சுபாஷினி அபேசிங்க, பேராசிரியர் மிக் மூரே மற்றும் பேராசிரியர் சாந்த தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்ட குழு கலந்துரையாடல் இடம்பெற்றது. வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரின் மூலோபாய ஆலோசகர் இனோஷினி பெரேரா இந்த அமர்வை வழிநடத்தினார்.

WhatsApp_Image_2023-11-12_at_16.53.32_94

அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரத்தில் விருப்புரிமை அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவது உட்பட சிறந்த ஆளுகையின் அவசியத்தை வலியுறுத்தி, கடன் வாங்குவதற்கான செலவைக் குறைப்பதற்கு இலங்கையின் இடர் கண்ணோட்டத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்  இந்த கலந்துரையாடல் எடுத்துக்காட்டியது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு பொது செலவினங்களின் கலவையை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த குழு ஆலோசித்தது.

WhatsApp_Image_2023-11-12_at_16.53.31_cb

பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வது தொடர்பான குழு கலந்துரையாடலைத் தொடர்ந்து நிஷான் டி மெல், சுபாஷினி அபேசிங்க, பேராசிரியர் சாந்த தேவராஜன், பேராசிரியர் உதார பீரிஸ் மற்றும் எர்ன்ஸ்ட் மற்றும் யங் நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமைத்துவ பங்குதாரர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஹேமாஸ் கன்ஸ்யூமர் பிராண்ட்ஸ் – நிர்வாக பணிப்பாளர் சப்ரினா யூசுப் அலி தொகுத்து வழங்கினார்.

WhatsApp_Image_2023-11-12_at_16.53.30_4f

இலங்கை தனது ஏற்றுமதித் துறைகளை பன்முகப்படுத்தவும், சர்வதேச வர்த்தகத்திற்கான தடைகளைக் குறைக்கவும், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், துறைமுகங்கள் மற்றும் கப்பல் உள்கட்டமைப்பில் பொருளாதார வாய்ப்புகளை கைப்பற்றவும் வேண்டியதன் அவசியத்தை இக்குழு வலியுறுத்தியது. வரி வசூல் மற்றும் நிறுவன செயல்முறைகளில் உள்ள திறமையின்மைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் இந்த கலந்துரையாடல் எடுத்துக்காட்டியது. 

WhatsApp_Image_2023-11-12_at_16.53.31_32

கருத்தரங்கை  நிறைவு செய்த நிஷான் டி மெல்அவர்கள், இம் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு கூட்டு ஈடுபாடு மற்றும் உடனடி கவனம் தேவை  என்று வலியுறுத்தினார், மேலும் இதனூடாக இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பின் இரண்டாம் பகுதி  கடனை பெறுவதை தடுத்து தற்போதைய மீட்பு பாதையை பயனுள்ளதாகவும் நிலையானதாகவும் மாற்றலாம் என்று அவர் மேலும் கூறினார்.

WhatsApp_Image_2023-11-12_at_16.53.30_c7

WhatsApp_Image_2023-11-12_at_16.53.29_df

WhatsApp_Image_2023-11-12_at_16.53.28_22

WhatsApp_Image_2023-11-12_at_16.53.28_67

WhatsApp_Image_2023-11-12_at_16.53.27_5a

WhatsApp_Image_2023-11-12_at_16.53.26_4a

WhatsApp_Image_2023-11-12_at_16.53.25_b4

WhatsApp_Image_2023-11-12_at_16.53.25_3d

WhatsApp_Image_2023-11-12_at_16.53.25_5e

WhatsApp_Image_2023-11-12_at_16.53.24_69

WhatsApp_Image_2023-11-12_at_16.53.22_aa

WhatsApp_Image_2023-11-12_at_16.53.23_2e

https://www.virakesari.lk/article/169140

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் ஜனாதிபதி

Published By: PRIYATHARSHAN           12 NOV, 2023 | 04:42 PM

image

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நாளை  திங்கட்கிழமை (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில்  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு - செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு மற்றும் சமர்ப்பிப்பு தொடர்பாக தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இன்று (12) காலை  கலந்துகொண்டார்.

ranil-bud.jpg

நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்  ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சமன் அதாவுதஹெட்டி, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மதுஷங்க திசானாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட உரை நாளை நண்பகல் 12 மணிக்கு நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் நாளை திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் இது இரண்டாவது வரவு செலவு திட்டமாகும்.

இம்முறை வரவு - செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வசதி குறைந்த மக்களுக்கு  நிவாரண திட்டங்கள், தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வசதிகள் என பல முன்மொழிவுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன 

அத்துடன் அரசாங்கத்துக்கு வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வரி அதிகரிப்பும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வரவு - செலவுத்திட்ட விவாதம் செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் இடம்பெறவுள்ளது. 

அத்துடன், வரவு செலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

அதனையடுத்து, குழுநிலை விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி  புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. 

அதற்கமைய, 2024 ஆம் நியதியாண்டுக்கான வரவு - செலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 

இதேவேளை,  2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில்  சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தினால் சமர்ப்பிக்கப்பட்டது. 

சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கான 3இலட்சத்து 86084 கோடியே 6788000 ரூபா ஒதுக்கீட்டில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்காக மொத்தமாக  56445 கோடியே 8500000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளில் ஜனாதிபதிக்கான செலவீனம் மற்றும் அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளுக்கென மொத்தமாக 123711 கோடியே 6115000 ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமரின் செலவீனம் மற்றும்  அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கென  88726 கோடியே  5000000 ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஜனாதிபதிக்கான செலவீனமாக 660 கோடியே 1150000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் செலவீனத்துக்காக 115 கோடியே 5000000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று  பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சுக்கு 88611 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதில் வடக்கு மாகாணத்திற்கு 451 கோடியே 5000000 ரூபாவும் கிழக்கு மாகாணத்திற்கு 522 கோடியே 5000000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கான  3இலட்சத்து 86084 கோடியே 6788000 ரூபா ஒதுக்கீட்டில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்காக 1060 கோடி ரூபாவும் இதில் பௌத்தமதத்திற்காக 166 கோடி ரூபாவும் இந்து மதத்திற்காக 28 கோடியே 30 இலட்சம் ரூபாவும் கிறிஸ்தவ மதத்திற்காக 21 கோடி ரூபாவும்  இஸ்லாம் மதத்திற்காக 18 கோடி ரூபாவும் மிகுதி ஏனைய திணைக்களங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார  உறுதிப்பாடு, மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சுக்காக 72343 கோடியே 1495000 ரூபாவும் பாதுகாப்பது அமைச்சுக்காக 42372 கோடியே 5000000ரூபாவும் வெகுசன ஊடக அமைச்சுக்காக 255 கோடி ரூபாவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்காக 412 கோடியே 51000000 ரூபாவும் சுகாதார அமைச்சுக்காக  41028 கோடியே 9998000 ரூபாவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்காக 1961 கோடியே 2025000 ரூபாவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுக்காக 231கோடியே 9000000 ரூபாவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்காக 4036 கோடியே 84000000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கமத்தொழில் அமைச்சுக்காக 10042 கோடியே 3280000 ரூபாவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்காக 4298 கோடியே 3000000 ரூபாவும் சுற்றுலாத்துறை மற்றும் காணி  அமைச்சுக்காக 1917 கோடியே 4730000 ரூபாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்காக 4245 கோடி ரூபாவும் கல்வி அமைச்சுக்காக 23705 கோடி ரூபாவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்காக 1000 கோடி ரூபாவும் கைத்தொழில் அமைச்சுக்காக 910 கோடியே 8300000 ரூபாவும் கடற்றொழில் அமைச்சுக்காக 700 கோடி ரூபாவும் சுற்றாடல் அமைச்சுக்காக 213 கோடி ரூபாவும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 871 கோடியே 3000000 ரூபாவும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்காக 726 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்காக 7453 கோடியே  400000 ரூபாவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச்சேவைகள் அமைச்சுக்காக 707 கோடியே 5000000 ரூபாவும் தொழில் நுட்பம் மற்றும் முதலீட்டு அமைச்சுக்காக 542 கோடியே 6800000 ரூபாவும் முதலீட்டு மேம்பாடு அமைச்சுக்காக 339 கோடியே 7670000 ரூபாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 14073 கோடியே 3500000 ரூபாவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அமைச்சுக்காக 689 கோடியே 8000000 ரூபாவும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சுக்காக 1050 கோடி ரூபாவும் நீர்ப்பாசன அமைச்சுக்காக 8395 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/169129

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் மாகாண அரசாங்க ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபா கொடுப்பனவை எதிர்பார்ப்பதாக அரச மற்றும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

20,000 ரூபாவை வழங்குமாறு கோரி பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு உள்ளடக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அனைவருக்கும் கொடுப்பனவு கிடைக்கும் வரை பாரிய தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக பாராளுமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

https://thinakkural.lk/article/281041

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

Published By: DIGITAL DESK 3    13 NOV, 2023 | 11:29 AM

image

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நண்பகல் 12 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அதற்கான அங்கீகாரம் இன்று திங்கட்கிழமை (13) காலை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/169171

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

Budget2024 ஜனாதிபதி உரை : முழுமையான விபரம்.

  • கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அப்பால் 600 ஏக்கர் நிலம் சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஒதுக்கப்படும்.
  • பின்னவல – கித்துல்கல ஒரு சுற்றுலாப் பாதை, 03 வருட திட்டத்திற்காக 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
  • செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மையத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள். இதற்காக அடுத்த வருடத்திற்கு 03 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.
  • அரச ஓய்வு விடுதிகளை நவீனமயமாக்கி, சுற்றுலாவை மேம்படுத்த அவற்றைப் பயன்படுத்துவதற்கான திட்டம். அதற்காக 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
  • வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை நடவடிக்கையாக, இறக்குமதி செஸ், துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி உள்ளிட்ட சுங்க வரி அல்லாத இறக்குமதி வரிகளை நீக்க நடவடிக்கை
  • உள்கட்டமைப்பு கூட்டுத்தாபனத்தை அமைப்பதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
  • சுற்றுலாத்துறையை மேம்படுத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவங்களுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டு முதல் நீண்டகால வேலைத்திட்டம், 1 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், திருகோணமலை, பிங்கிரிய மற்றும் கண்டி ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு புதிய முதலீட்டு வலயங்கள் நிறுவப்படும் – ஜனாதிபதி
  • புதிய நிலச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும், புதிய சட்டங்கள் மற்றும் காலாவதியான சட்டங்கள் திருத்தப்படும் அதன்படி, 60 புதிய சட்டங்கள் மற்றும் திருத்தச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • கடன் பெறுவதற்கான வரம்பு 3900 பில்லியன் ரூபாயிலிருந்து 7350 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி
  • வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை தீர்ப்பதற்கு 3,000 பில்லியன் ஒதுக்கப்படும்.
  • 2032 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொதுக் கடன் 95 வீதமாகக் குறைக்கப்படும்
  • அரசுக்கு சொந்தமான இரண்டு வங்கிகளின் இருபது சதவீத பங்குகள் முதலீட்டாளர்கள் அல்லது பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
  • அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்
  • வெளிநாட்டு கடனை மறுசீரமைத்த பின்னர், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதிக்கான பணிகள் சீனாவுடன் இணைந்து ஆரம்பிக்கப்படும்
  • நாட்டின் பொதுக் கடன் 2022 இல் 128% இலிருந்து 2023 இல் 95% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மாகாண சபையின் வருமானத்தை மாகாணத்தின் அபிவிருத்திக்காக பயன்படுத்துவதற்கான முன்மொழிவு
  • நாட்டின் கலாசாரத்தை வளர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டம்.
  • 2025 லிருந்து, மாகாண சபை வருமானத்தில் சுமார் 50 வீதத்தை தொடர் செலவுகளாகப் பயன்படுத்துவதற்கும் மேலதிக வருமானத்தை மூலதனச் செலவுகளாகப் பயன்படுத்துவதற்கும் தீர்மானம்
  • புறக்கோட்டை, காலி, மாத்தறை, அநுராதபுரம், யாழ்ப்பாணம் போன்ற பெரு நகரங்களை அண்மித்த ரயில் நிலைய நகரங்களை நிர்மாணிப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அழைப்பதற்கான யோசனை
  • பாடசாலை மற்றும் மாகாண மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்ப 1.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு, பற்றாக்குறை உள்ள மாகாணங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி
  • பெண்கள் அதிகாரம் பெற புதிய சட்டங்கள்.
  • இளைஞர் சமூகத்தை வலுப்படுத்த 300 மில்லியன் ரூபா.
  • வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றத்திற்கு 2,000 மில்லியன்.
  • காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு. வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு மேலும் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி
  • யாழ்ப்பாணம் பூநகரி நகர் அபிவிருத்தி – 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • யாழில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு, யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி
  • வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு 2024 ஆண்டின் முதல் காலாண்டுக்குள் நிரந்தர தீர்வு
  • விவசாயத்தை நவீனமயமாக்கவும் நெல் உற்பத்தியை அதிகரிக்கவும் தீர்மானம்
  • சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த அரச வங்கிகள் ஊடாக இலகு வட்டி வீதத்திலான கடனுதவி, இதற்காக 30 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
  • திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்ய்யப்படும்
  • சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளை வழங்குவதற்காக ஹோட்டல்களில் உள்ளூர் ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களை நிறுவ 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • ஏனைய நாடுகளின் நிலைக்கு ஏற்ப மருத்துவ ஆராய்ச்சி, 75 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
  • 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும்
  • தொழிற்கல்வி நிறுவனங்களை மாகாண சபைகளுக்கு மாற்ற தீர்மானம்
  • தகவல் தொழில்நுட்ப பட்டதாரி பயிற்சி திட்டம்.
  • ஆங்கில மொழி கல்வியறிவுக்கான திட்டம்.
  • பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து அரச பல்கலைக்கழகங்கள் புதிய காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தல்
  • அரசு சாரா பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்த வலுவான சட்டங்கள் கொண்டு வரப்படும்
  • தனியார் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு சலுகை கடன் திட்டம். வேலை கிடைத்தவுடன் திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு – ஜனாதிபதி
  • நாட்டில் உள்ள பழைய கல்விமுறை நீக்கப்பட்டு நவீன உலகுக்கு பொருத்தமான கல்வி முறைமை ஏற்படுத்தப்படும் – ஜனாதிபதி
  • உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு
  • கிராமங்களில் வீதிகள் அபிவிருத்திக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் – ஜனாதிபதி
  • நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் எதிர்காலத்தில் மேலதிகமாக 4 பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்படும்
  • பல்கலைக்கழகங்களைத் தொடங்கும் அதிகாரம் தனியார் துறைக்கு
  • மலையக பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்திக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி
  • பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்கை, இதற்காக 4 பில்லியன் ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கீடு – ஜனாதிபதி
  • பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி
  • 2024 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமிருந்து வரி அறவிடப்படாது – ஜனாதிபதி
  • கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மாதக் கொடுப்பனவுகளுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி
  • அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக அடுத்த ஆண்டுக்கு 283 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – ஜனாதிபதி
  • ஓய்வூதியம் பெறுவோருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 2,500 ரூபாய் (விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்) அதிகரிக்க முன்மொழிவு – ஜனாதிபதி
  • 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தேர்தலுக்கானது அல்ல மாறாக எதிர்காலத்துக்கான திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
  • ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான வாழ்க்கைச் செலவுகளுக்கான நிலுவைத் தொகை அடுத்த ஆண்டு ஒக்டோபர் முதல் தவணை முறையில் வசூலிக்கப்படும் – ஜனாதிபதி
  • 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு – ஜனாதிபதி
  • ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளாகியுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கு மட்டும் ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
  • அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் / பணத்தை அச்சிட வேண்டும், கடன் பெற வேண்டும். – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
  • அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் / பணத்தை அச்சிட வேண்டும், கடன் பெற வேண்டும்.
  • ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்துவது சமவுடைமை கொள்ளைக்கு எதிரானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • பின்னடைவைச் சந்தித்த இலங்கையின் பொருளாதாரம், கடந்த ஆண்டில் வெற்றிகரமாக மீண்டுள்ளது. கடின உழைப்புக்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் இருந்தபோதிலும், நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் மற்றவர்கள் ஈடுபட்டனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
  • நாட்டின் நலனுக்காக அனைவரும் முழு மனதுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
  • பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கத்திற்கு வெற்றிகரமாகக் குறைத்தமையே நாட்டின் மீட்சிக்குக் காரணம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • https://athavannews.com/2023/1358455
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் Live Blog

Published By: PRIYATHARSHAN   13 NOV, 2023 | 03:15 PM

image
 
  • 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2 மணித்தியாலங்கள் நின்றவாறு வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வரவு - செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்து.முன்மொழிவுகளை செயற்படுத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரினார்.

 

  • உலகில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் இந்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிறுவ அனுமதி வழங்கப்படுவதுடன், தனியார் பல்கலைக்கழகங்களை மேற்பார்வை செய்ய வலுவான சட்டவிதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 

Budget_2024_20231113__13_.jpeg

  • இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • 19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2024 ஆம் ஆண்டில் 01 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2 மணித்தியாலங்கள் நின்றவாறு வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வரவு - செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்து.முன்மொழிவுகளை செயற்படுத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரினார்.

 

  • பொருளாதாரம் மீட்சியடையாமல் லெபனான் நாட்டின் நிலைக்கு செல்வதா இல்லையா என்பதை எதிர்க்கட்சியினர் தீர்மானிக்க வேண்டும். ஒருகாலத்தில் பிரித்தானியாவுக்கு கடன் வழங்கிய நாம் இன்று முழு உலக நாடுகளிடமும் கையேந்துகிறோம் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • பொருளாதார நெருக்கடிக்கு கடினமான தீர்மானங்களை  செயற்படுத்தாவிட்டால் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவ எவரும் முன்வரமாட்டார்கள் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

 

  • நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு  கடினமான தீர்மானங்கள் இல்லாமல் போலியான அழகான விடையேதும் கிடையாது : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • எதிர்காலத்தை சிறந்த முறையில் வெற்றிகொள்ள வேண்டுமாயின் நிலைபேறான பொருளாதார கொள்கை செயற்படுத்த வேண்டும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Budget_2024_20231113__12_.jpeg

  • சுற்றுலா கைத்தொழில் துறையை மேம்படுத்த 8 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. சிவிட் ஸ்ரீ லங்கா திட்டத்தின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • அம்பாந்தோட்டை, பிங்கிரிய, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் புதிய முதலீட்டு வலயங்கள் ஸ்தாபிக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

 

  • இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நடைமுறையில் உள்ள சட்டங்களில் 60 சட்டங்கள் காலத்துக்கு ஏற்றாற் போல் திருத்தம் செய்யப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • 2024 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தைப் போன்று புரட்சிகரமான வரவு - செலவு திட்டத்தை எவரும் சமர்ப்பிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவிக்காமல் நாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்குங்கள் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • திருகோணமலை நகரம் இந்திய முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்யப்படும். இதற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • பொருளாதார நெருக்கடிக்கு தனித்து தீர்வுகாண முடியாது. அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவேன் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Budget_2024_20231113__7_.jpeg

  • வரவு - செலவுத் திட்ட  முன்மொழிவுகள் அமுலாக்கம், செலவு தொடர்பில் மாகாண சபைகள் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் தூய்மையான குடிநீர் பிரச்சினைக்கு 2024 ஆண்டின் முதல் காலாண்டுக்குள் நிரந்தர தீர்வு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • நட்டமடையும் அரச நிறுவனங்களினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே நட்டமடையும் அரச நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக எதிர்ப்பு தெரிவிப்பதை அரசியல் தரப்பினர் நாட்டுக்காக தவிர்த்துக்கொள்ள வேண்டும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

 

  • சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த அரச வங்கிகள் ஊடாக இலகு வட்டி வீதத்திலான கடனுதவி வழங்கப்படும். இதற்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Budget_2024_20231113__11_.jpeg

  • சிறு மற்றும் பெருங்குளங்கள் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும். வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்துறையை மேம்படுத்துவது பிரதான இலக்கு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • சகலருக்கும் ஆங்கிலம் 'திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 2034 ஆம் ஆண்டு  சகலருக்கும் ஆங்கிலம் என்ற இலக்கு வெற்றிபெறும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை  வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

 

  • உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த  ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Budget_2024_20231113__8_.jpeg

  • அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக  மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

 

  • நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் எதிர்காலத்தில் மேலதிகமாக 4 பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • பழமையான கல்வி முறைமை நடைமுறையில் உள்ளது. நவீன உலகுக்கு பொருத்தமான கல்வி முறைமை 2024 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

 

  • வீதி புனரமைப்புக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • மலையக பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் வரி 2024 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்படும். வீட்டு உரிமை முழுமையாக அவர்களுக்கு வழங்கப்படும். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்பார்ப்பார்களா ? : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Budget_2024_20231113__6_.jpeg

  • பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஆரம்பகட்டமாக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

 

  • எதிர்க்கட்சிகள் கடந்த காலங்களில் முன்வைத்த பரிந்துரைகளை வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கியுள்ளேன். ஆகவே வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மாதக் கொடுப்பனவுகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

  • சிரேஷ்ட பிரஜைகளுக்கான மாதக் கொடுப்பனவு 3000 ரூபாவால் அதிகரிப்பு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • 2024 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

 

  • தேர்தல் வெற்றியல்ல  நாட்டின் வெற்றியே எனக்கு  முக்கியம் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • ஓய்வூதியக்காரர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Budget_2024_20231113__5_.jpeg

  • அரச சேவையாளர்களுக்கான கொடுப்பனவு 10000 ரூபாவால் அதிகரிப்பு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • 2024 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் தேர்தல் வரவு செலவுத் திட்டம் அல்ல, எதிர்காலத்துக்கான வரவு செலவுத் திட்டம் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • பூச்சியமாக  வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு கையிருப்பு தற்போது 3.5 பில்லியன் டொலராக நிலைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம் - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

  • பொருளாதார பாதிப்பினால் 30 சதவீதமாக உயர்வடைந்த வட்டி வீதம் தற்போது 15 சதவீதமாக குறைவடைந்துள்ளது - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Budget_2024_20231113__2_.jpeg

  • சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட அரசியல்,பொருளாதார கொள்கை தோல்வி. நவீன யுகத்துக்கு இணையாக கொள்கைகளை வகுக்காவிட்டால் ஒருபோதும் முன்னேற முடியாது - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம் - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • சகல அபிவிருத்திகளையும் எதிர்த்து எதிர்காலத்தையும் கொள்ளையடிக்க வேண்டாம் - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • நட்டமடையும் அரச நிறுவனங்களை தேசிய வளம் என்று குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த சுமைகளையும் மக்கள் மீது சுமத்த முயற்சி - நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • புதிய மத்திய வங்கி  சட்டத்துக்கு அமைய எண்ணம் போல் நாணயம் அச்சிட முடியாது. ஆகவே எதிர்வரும் ஆண்டு அரச வருமானத்தை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும். - நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • 2023 ஆம் ஆண்டு  3415 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதும், 2410 பில்லியன் ரூபா மாத்திரமே திரட்டப்பட்டுள்ளது.ஆகவே வரி வருமான எதிர்பார்ப்பு இலக்கு தோல்வி - நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Budget_2024_20231113__4_.jpeg

  • 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

 

 

  • அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது நாணயம் அச்சிட வேண்டும்,கடன் பெற வேண்டும்.ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்துவது சமவுடைமை கொள்ளைக்கு எதிரானது  -நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • சம்பளத்தை அதிகரிக்குமாறு ஒரு தரப்பினர் போராடுகிறார்கள். அரச சேவையாளர்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். அரச சேவையாளர்களுக்கு ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

 

  • கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

Budget_2024_20231113__3_.jpeg

  • பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிலையை நன்கு அறிவோம். வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வது இலகுவானதொரு காரியமல்ல - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • பொருளாதார மீட்சிக்காக எடுத்துள்ள தீர்மானங்கள் சரி என்பதை கடந்த கால சமூக கட்டமைப்பு நிலைவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எமது பயணம், பாதை, சரியன கடினமானதாக இருந்தாலும் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம் - நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

 

387621305_315620911240365_85268649333690

  • போலியான வாக்குறுதிகள், அரசியல் நிவாரணங்கள் ஆகியவற்றால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.இதனை இனியும் தொடர முடியாது - நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

 

  • பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் துரிதகால திட்டங்களுக்கு அப்பாற்பட்டு நீண்டகால இலக்குகளை அடிப்படையாக கொண்டதாக எதிர்கால திட்டங்கள் அமையும் - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • எவரும் பொறுப்பேற்காத மரணப்படுக்கையில் இருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன். நாட்டை துரிதமாக மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம் - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 

  • அரசாங்கம் மாத்திரமல்ல அனைவரும் அரச நிதியை வீண்விரயம் செய்துள்ளோம். தவறான வாக்குறுதிகள், நிவாரணம் வழங்கல் பொருளாதார முன்னேற்றத்துக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

380614898_283329937438206_60141616271267

  • 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க சபைக்கு முன்மொழிந்தார்.

 

 

 

  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததுடன், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சற்று நேரத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

380614898_283329937438206_60141616271267

 

  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் இது இரண்டாவது வரவு - செலவு திட்டமாகும்.

 

  • வரவு - செலவு திட்ட உரை இன்று நண்பகல் 12 மணிக்கு நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

 

  • 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/169173

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பள அதிகரிப்பு மாத்திரம் போதாது பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன

13 NOV, 2023 | 04:06 PM
image

(எம்.மனோசித்ரா)

அரச உத்தியோகத்தர்கள் மாத்திரமின்றி ஏனைய மக்களும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும்.

இந்த வரவு - செலவு திட்டம் மக்களுக்கு சிறப்பானதாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச உத்தியோகத்தர்களுக்கு மாத்திரமின்றி நாட்டு மக்கள் அனைவரும் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

எனவே அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதை விட பொருட்களின் விலைகளைக் குறைப்பது சிறந்ததாகும்.

அதனை விடுத்து சம்பளத்தை அதிகரிப்பதாயின் அரச உத்தியோகத்தர்களது சம்பளம் மாத்திரமின்றி, தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.

சரியாக நோயை இனங்கண்டு அதற்கு சிகிச்சையளிப்பதற்கான யோசனையையே நாம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.

எமது பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றோமே தவிர, பொதுஜன பெரமுன சார்பில் வரவு - செலவு திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் எவற்றையும் முன்னெடுக்கவில்லை. எவ்வாறிருப்பினும் இந்த வரவு - செலவு திட்டம் மக்களுக்கு சிறந்ததாக அமைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும் என்றார். 

https://www.virakesari.lk/article/169203

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டம் - ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

Published By: DIGITAL DESK 3    13 NOV, 2023 | 04:39 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

2024 ஆம் ஆண்டு ஏப்ரல்- ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ஜனாதிபதி தெளிவுப்படுத்தவில்லை. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை.

2024 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டம்  தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாக வெளிப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். அரச துறையை காட்டிலும் பல இலட்சம் பேர் தனியார் துறையில் சேவையாற்றுகிறார்கள். தனியார் துறை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.இதனை பிரதான குறைப்பாடாக கருத வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் அவர்  தெளிவுப்படுத்தவில்லை.மறுபுறம் சமூக பாதுகாப்பு அறவீட்டுத்தொகைக்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச வருமானத்துக்கும் அரச செலவினத்துக்கும் இடையில் காணப்படும் பற்றாக்குறையை  முகாமைத்துவம் செய்யும் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆகவே வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/169211

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரம் போதாது – இலங்கை ஆசிரியர் சங்கம்

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போதுமானதல்ல என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க ஊழியர்கள் 20,000 ரூபா சம்பள உயர்வை எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனினும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 10,000 ரூபா கொடுப்பனவு உயர்த்தப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/281132

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை?

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புக்களை இதில் பார்க்கலாம்.

வடக்கு கிழக்கில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்களுக்காக 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக கூறினார்.

மேலும் நன்னீர் மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது என்றும் யாழ்ப்பாணத்தில் நிலவும் நன்னீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

அதன்படி அதன் அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதேநேரம் யாழ்ப்பாணத்தை உள்ளடக்கி புதிய முதலீட்டு வலயம் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், திருகோணமலை, பிங்கிரிய , கண்டி ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வடக்கு கடற்றொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தனியார் துறையுடன் இணைந்ததாக திட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேவேளை மாகாண கடற்றொழில் சபைகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன என்றும் அரச மற்றும் தனியார் துறை சார்ந்த ஒன்றிணைந்த வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவித்தார்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க 1500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

விவசாய , மீன்பிடித்துறைகளை மேம்படுத்த விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் இதற்காக 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

பயிரிடப்படாத உலர் வலய காணிகளில் வேறு பயிர்ச்செய்கை மேற்கொள்ளவும் அதற்காக அரச காணிகளில் 300 ஏக்கர் ஒதுக்கவும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.

மீன்பிடித்துறை மேம்பாட்டிற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நன்னீர் மீன் வளர்ப்பு மேம்பாட்டிற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

பால்பண்ணையாளர்களுக்கு விசேட கடன் திட்டங்கள் வழங்கப்படும் என்றும் கட்டிட நிர்மாணத்துறைக்கு விசேட திட்டங்களும் அவர்களுக்கு அரச காணிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

துறைமுகங்களை அபிவிருத்தி செய்யவும் அதில் திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம் என்றும் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையும் இதற்கு ஆரம்பகட்டமாக 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் மலையக பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கவும் இதற்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

நுவரெலியாவில் பல்கலைக்கழகமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படவுள்ள அதேவேளை, அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள பொது வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

பதுளை பொது வைத்தியசாலைக்கு இருதயம் மற்றும் நுரையீரல் இயக்கமீட்பு பிரிவொன்றை நிறுவுவதற்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்பதனால் இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் என கூறினார்.

https://athavannews.com/2023/1358522

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரேயொரு வரவு செலவு திட்டத்தின் மூலம் தீர்வு காண முடியாது - ஜனாதிபதி

Published By: DIGITAL DESK 3   16 NOV, 2023 | 09:30 AM

image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரேயொரு வரவு செலவுத் திட்டத்தில் தீர்க்க முடியாது. நெருக்கடிக்கு ஏற்ப தீர்வு காணும் வழிகள் மாற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் தெரிவித்தார்.

முதலில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி அதன் பிறகு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின் பிடிப்பு பட்டதாரிகள்  சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2024  வரவு செலவுத் திட்டம் தொடர்பான  கலந்துரையாடலில் நேற்று புதன்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாறிவரும் சூழலில் மாற்றம் மூலம் நெருக்கடிக்கு வெற்றிகரமான தீர்வுகளைக் கண்டறிதல் சாத்தியமானது. இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அந்த முறை மிகவும் முக்கியமானது. புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையாக நலன்புரி நன்மைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை மூன்று மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான பின்னணியை இம்முறை வரவு - செலவு திட்டம் தயார்படுத்துகிறது. வெளிப்புற காரணிகளைப் பொறுத்து மதிப்பீடுகள் மாறுபடக் கூடும்.  ஏனெனில் காஸாவின் தற்போதைய மோதல் சூழ்நிலையும் கூட எதிர்காலத்தில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கலாம். அந்த நிலை இலங்கைக்கு மட்டுமே ஏற்படும் எனக்கூற முடியாது. இது உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கும் காரணியாகும். உலக வல்லரசுகள்  ஒன்று கூடி போர் நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.

கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். பின்னர் பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். நான் இரண்டு வரவு - செலவு திட்டங்களை சமர்ப்பித்திருக்கின்றேன். எனது முதலாவது வரவு - செலவு திட்டத்தில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. அடுத்த வருடத்துக்கான ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒரே பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தேர்தலை இலக்கு வைத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என சில தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் அது தேர்தலுக்கான பட்ஜெட் அல்ல. பொருளாதார அணுகுமுறையை உருவாக்க முன்வைக்கப்பட்ட பட்ஜெட்டாக, அரச ஊழியர்களின் ஊதிய உயர்வு, தனியார் துறை மாற்றங்கள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட சகல துறைகளையும் உள்ளடக்கியதாகவே தயாரிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட முக்கிய நாடுகளுடன் இணைந்து தனியார் முதலீட்டு திட்டங்களை ஊக்குவித்தல், கல்வி சீர்திருத்தங்கள், நவீன பொருளாதாரம் உள்ளிட்ட பல திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்களையும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும் சமாளிக்க தனியார் துறை, வெளிநாட்டு உதவி மற்றும் நிபுணர்களுடனான ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்பு இல்லாமல், அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து எதையும் செய்ய முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/169412

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்தாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது - ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவிப்பு

Published By: VISHNU   16 NOV, 2023 | 07:07 PM

image

(எம்.ஆர்.எம்.. வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. 

அத்துடன் புத்தர் தெரிவித்த சகவாழ்வு கதையை தெரிவித்த ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு கடந்த முறையைவிட அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தமீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த வரவு செலவு திட்டம் டிஸ்டி லேன் போன்றது என எரான் விக்ரமரத்ன தெரிவித்திருந்தார். இதற்கு ஜனாதிபதி கடந்த தினம் பதிலளித்திருந்தார். 

அதாவது டிஸ்டிலேனில்தான் இருப்பதாக எங்களை பயமுறுத்தி இருக்கிறார். நாட்டு மக்களை ஜனாதிபதி ராேலன்ஸ் கேஸ்டில் கொண்டு செல்கிறார். 

அது மேலே செல்லும் கீழே செல்லும். அவ்வாறே நாட்டு மக்களை ஜனாதிபதி மேலே கீழே கொண்டு செல்கிறார். ஆனால் அதன் சக்கரம் அங்குமிங்கும் செல்லும்போதுதான் மக்கள் அச்சப்படுகின்றனர். மக்களை அச்சுறுத்திக்கொண்டு செல்வதையே ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார்.

அத்துடன் ஜனாதிபதி தனது வரவு செலவு திட்ட உரையின்போது புத்த பெருமான் தெரிவித்த சகவாழ்வு போதனை ஒன்றை தெரிவித்திருந்தார். 

சிக்கனமாக வாழ்ப்பழகிக்கொள்ள வேண்டும் என்பதையே இதன் மூலம் அவர் தெரிவிக்க வருகிறார். ஆனால் வரவு செலவு திட்டத்தில்  ஜனாதிபதி செயலகத்திற்கு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்  அதிகமாகவே இந்த முறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் கல்விக்கு கடந்த முறையைவிட குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் கொள்கைக்கமைய நாட்டின் மொத்த வருமானத்தில் 5வீதம் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இம்முறை 2சதவீத்துக்கும் குறைவாகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நாட்டை அபிவிருத்தி செய்ய ஆரம்பமாக மோசடிகளை நிறுத்த வேண்டும். சீனி மோசடி தொடர்பாக  எந்த நடவடிக்கையும் இல்லை. 

கோத்தாபய ராஜபக்ஷ் அன்று சீனிக்கான வரியை ஒரு இரவில் 50 ரூபாவில் இருந்து 25 சதத்துக்கு குறைத்தார். குறிப்பிட்ட ஒருசில வியாபாரிகளுக்காகவே இதனை அவர் செய்தார். ஆனால் தற்போது ரணில் விக்ரமசிங்க 25 சதத்துக்கு இருந்த வரியை ஒரு இரவில் 50 ரூபாவாக அதிகரித்துள்ளார். இதனால் ஒரு சில சீனி இறக்குமதியாளர்கள் நன்மையடைகிறார்கள்.

அதேபோன்று சம்பிக்க ரணவக்க தலைமையிலான வழிவகை குழுவில்  பல மோசடிகள் தொடர்பில் வெளிப்பட்டிருந்தன. ஆனால் இந்த மோசடிகள் எதற்கும் நடவடிக்கை எடுக்காமல் எப்படி நாட்டை நாட்டை கட்டியெழுப்ப முடியும் என கேட்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/169490

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேறியது!

Published By: DIGITAL DESK 3    21 NOV, 2023 | 06:39 PM

image

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) மாலை  இடம்பெற்றது.

இதன்போது ஆதரவாக 122 வாக்குகளும்  எதிராக 77  வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதனையடுத்து 45 மேலதிக வாக்குகளால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம்  வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 25 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், ஏ.எச்.எம்.பௌசி  ஆகியோர்  இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில்  சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, நிமல் லன்ஷா, அலி சப்ரி ரஹீம், அனுர பிரதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரத்ன, அதாவுல்லா ஆகியோர் வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் நாளை புதன்கிழமை (22) முதல் 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளதுடன், வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/169905

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 68 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம் : தமிழ் பிரதிநிதிகள் எதிர்த்து வாக்களிப்பு

23 NOV, 2023 | 07:50 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 68  மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 142 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு  செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதம் இடம்பெற்றது.

விவாத முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்   பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு  மீது  வாக்கெடுப்பைக் கோரினார்.

இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் பாதுகாப்பு அமைசுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 68 மேலதிக வாக்குகளினால் ஒதுக்கீடு நிறை வேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அரச தரப்பினர் வாக்களித்திருந்த நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன் ஆகியோர் வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

https://www.virakesari.lk/article/170099

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

எதிரும் புதிருமாக இருந்தாலும் தமிழருக்கு எதிரான விடயங்களில் ஒன்றாகிறார்கள்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.