Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையை நெருங்கப்போகும் காற்று சுழற்சிகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக மூத்த வானிலை ஆய்வாளர் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சி, மேற்கு நோக்கி இலங்கையின் தெற்கு பகுதியினூடாக நகர்ந்து வருவதனால் இந்த நிலைமை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காற்று சுழற்சியானது எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கைக்கு தெற்காக வந்து, குமரிக் கடல் வழியாக மாலைத்தீவு, இந்தியாவின் லட்சஷதீவுக்கு இடைப்பட்ட பகுதியின் ஊடாக அராபிய கடல் பிராந்தியத்திற்கு செல்லும்.

அதேவேளை எதிர்வரும் 18, 19ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கையை நெருங்கி, அது எதிர்வரும் 21, 22, 23ஆம் திகதியளவில் மன்னார் வளைகுடா ஊடாக அரபிக் கடல் பிராந்தியத்தினுள் நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையை நெருங்கப்போகும் காற்று சுழற்சிகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Wind Circulatio After Nattar Festival

இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மழை

இதன் காரணமாகவும் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மழை காணப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது, எதிர்வரும் நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் அந்தமான் கடல் பிராந்தியத்தில் தெற்கு சுமத்திரா தீவை ஒட்டி மேலும் ஒரு காற்று சுழற்சி வங்க கடல் பிராந்தியத்தில் உருவாகும்.

அது படிப்படியாக வலுவடைந்து எதிர்வரும் 26, 27ஆம் திகதியளவில் இலங்கையை நெருங்கி, தமிழ்நாட்டை நோக்கி செல்லும்.

எனவே மேற்கூறப்பட்ட குறித்த காலப்பகுதிகளில் இலங்கையில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது, இந்த நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/wind-circulatio-after-nattar-festival-1702379801

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை..! பலத்த காற்று - வெளியாகியுள்ள எச்சரிக்கை

வடக்கில் கனமழை

வளிமண்டல குழப்பம் காரணமாக, அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் தற்காலிகமாக மழையுடன் கூடிய காலநிலை உருவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

பலத்த மழை

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..! பலத்தகாற்று - வெளியாகியுள்ள எச்சரிக்கை | Weather Today Sri Lanka

கிழக்கு, ஊவா, மேற்கு சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

எனவே ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

https://ibctamil.com/article/weather-today-sri-lanka-1702525427

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின

15 DEC, 2023 | 01:08 PM
image
 

கிளிநொச்சியில் நேற்று (14) பெய்த கடும் மழை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களிலுள்ள பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் பொது மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பலர் தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

அத்தோடு, தர்மபுரம் மத்திய கல்லுரி மற்றும் தருமபுரம் இலக்கம் ஒன்று பாடசாலைகளுக்குள்ளும் மழைநீர் உட்புகுந்தமையால் இன்று (15) இப்பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பாக கிராம சேவையாளர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலகங்கள் விபரங்களை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20231215-WA0052.jpg

IMG-20231215-WA0045.jpg

IMG-20231215-WA0042.jpg

IMG-20231215-WA0049.jpg

IMG-20231215-WA0040.jpg

IMG-20231215-WA0036.jpg

IMG-20231215-WA0034.jpg

IMG-20231215-WA0026.jpg

https://www.virakesari.lk/article/171771

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு பலத்த மழை பெய்யும்

weather-1.jpg

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் காற்று அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

https://thinakkural.lk/article/284832

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலியாறு பெருக்கெடுப்பு ! மன்னாரில் பல பகுதிகள் நீரில் மூழ்கின

16 DEC, 2023 | 10:43 AM
image
 

மன்னாரில் வியாழக்கிழமை (14) மதியம் முதல் நேற்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை  வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதுடன்  மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெருக்கெடுத்துள்ளது.

குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி மற்றும் மாந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள வயல் நிலங்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் கடும் மழை காரணமாக ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், சாந்திபுரம்  போன்ற கிராமங்களும் தீவுக்கு வெளியில் தேத்தாவட, தேவன் பிட்டி, மூன்றாம் பிட்டி போன்ற கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளது.

தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பட்சத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

4d535988-197c-4851-9283-204b2f3a3e10.jpg

https://www.virakesari.lk/article/171806

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டுக் குளத்தின் 4 வான் கதவுகள் திறப்பு; மக்களே அவதானம்

Published By: DIGITAL DESK 3    16 DEC, 2023 | 03:38 PM

image
 

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்துஐயன்கட்டு குள்ளத்திற்கான  நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையில், குளத்தின் நான்கு வான் கதவுகள்  இன்று சனிக்கிழமை (16) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

24 அடி கொள்ளளவு கொண்ட முத்துஐயன்கட்டுக்குளத்தில் 23 அடி 3  அங்குல நீர்மட்டம் காணப்படுகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் இரண்டு வான் கதவுகள் ஆறு  அங்குலத்துக்கும்  இரண்டு வான் கதவுகள் மூன்று அங்குலத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளன.

இன்றைய தினம் காலை முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர்  மஞ்சுளா ஜொய்ஸ்குமார் அழைப்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளம்பலம் உமா மகேஸ்வரன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி, மாகாண நீர்ப்பாசன  பணிப்பாளர் பொறியியலாளர் நவரட்ணம் சுதாகரன், ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் இ.றமேஸ், முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு வான் கதவுகளை திறந்து வைத்தனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் கருத்து தெரிவிக்கையில், 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் காணப்படுவதாகவும் அனைத்து குளங்களும் அதன் உச்ச கொள்ளளவை அடைந்துள்ளதாகவும் எனவே தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவித்தார்.

IMG-20231216-WA0014.jpg

IMG-20231216-WA0006.jpg

IMG-20231216-WA0008.jpg

IMG-20231216-WA0044.jpg

IMG-20231216-WA0016.jpg

IMG-20231216-WA0020.jpg

https://www.virakesari.lk/article/171836

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 19 வரை கனமழை தொடரும் : தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் சுழற்சிக் காற்று தோன்றவும் வாய்ப்பு!

16 DEC, 2023 | 06:19 PM
image
 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வருகிற மழையானது எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

மழை நிலைமை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கைக்கு கீழாக காணப்படுகின்ற காற்றடுக்கு சுழற்சி காரணமாக தற்பொழுது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

இந்த மழை எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடரக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது.

ஏற்கனவே இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தரை மேல் நீர்பரப்புக்கள், அவற்றின் உவர் நீரை வெளியேற்றுகின்ற இந்த சூழ்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ் நிலங்களில் வெள்ள அனர்த்தத்துக்கான அபாய நிலை தென்படுவதாக அறிய முடிகிறது.

எனவே, தொடர்ச்சியாக மழை பெய்யும் என்பதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமானதாகும்.

மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால் தொடர்ச்சியாகவும் மழை நீடிப்பதற்கான வாய்ப்புகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகிறது.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இந்த தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் மழைவீழ்ச்சி தொடர்பான அளவு தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமானதாகும் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/171848

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.