Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து எம்.பி.க்கள் மீது மர்மப் பொருளை வீசிய இளைஞர்கள் - என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாடாளுமன்றத்தில் அத்துமீறல்

பட மூலாதாரம்,X/SENTHILKUMAR

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதேநாளில் மற்றும் ஒரு அசம்பாவிதம் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது.

மக்களவையில் இன்று அலுவல்கள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென தடுப்புகளை தாண்டி அவைக்குள் குதித்தனர்.

எம்.பி.க்கள் அமர்ந்திருந்த சேர் மற்றும் டேபிள்கள் மீது தாவிச் சென்ற அவர்கள் மர்மப் பொருட்களை வீசியெறிந்தனர். அதில் இருந்து வாயு வெளியேறியது. அந்த இளைஞர்கள் இருவரையும் எம்.பி.க்களே சுற்றி வளைத்துப் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. ராகுல்காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டு நின்றதை பார்க்க முடிந்தது. மக்களவை உடனடியாக ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் அறிவித்தார்.

மக்களவையில் அத்துமீறல்

பட மூலாதாரம்,SAMSAD TV

நாடாளுமன்றத்தில் அத்துமீறல்

பட மூலாதாரம்,X/SENTHILKUMAR

நாடாளுமன்றத்தில் அத்துமீறல்

பட மூலாதாரம்,X/SENTHILKUMAR

2 பேரும் உள்ளே நுழைந்தது எப்படி?

மக்களவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "பார்வையாளர் பகுதியில் இருந்து 2 இளைஞர்கள் திடீரென குதித்து உள்ளே வந்தனர். அவர்கள் ஏதோ ஒன்றை வீசினர். அதில் இருந்து வாயு வெளியேறியது.

அவர்கள் இருவரையும் எம்.பி.க்களே வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களை, பாதுகாப்புப் படையினர் வெளியே கொண்டு வந்தனர். சபை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இது நிச்சயமாக ஒரு பாதுகாப்பு அத்துமீறலாகும், ஏனென்றால் 2001ம் ஆண்டில் நடத்தப்பட்ட நாடாமன்றத் தாக்குதலில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களின் நினைவு தினத்தை இன்று அனுசரிக்கிறோம்" என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் அத்துமீறல்

பட மூலாதாரம்,SAMSAD TV

என்ன நடந்தது? சு.வெங்கடேசன் விளக்கம்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், "பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து முதலில் ஒருவர் தாவினார். அவர் தவறி விழுந்துவிட்டதாகதான் முதலில் நினைத்தோம். ஆனால், அவர் எழுந்து வேகமாக நாற்காலிகளுக்கு நடுவில் ஏறி குதித்து ஓடினார். மற்றொரு நபர் அவையில் குதித்த பிறகுதான், இரண்டு பேர் குதித்து உள்ளே வந்திருக்கின்றனர் என்பது புரிந்தது. அவர்களை பிடிப்பதற்கு முன்பாக ஷூவில் இருந்து கேஸை எடுத்து அடிக்க ஆரம்பித்துவிட்டனர். அவையில் காவலர்கள் யாரும் இல்லை. ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களும் அச்சத்தில்தான் இருந்தனர். 15 நிமிடங்களுக்கு பிறகு காவலர்கள் உள்ளே வந்தனர். இது முழுக்க பாதுகாப்பு குறைபாடுதான்" என்றார்.

உள்ளே குதித்த நபர்கள் கோஷம் எழுப்பினர் என்றும் உள்ளே நடந்த களேபரத்தில் அவை தமக்கு சரியாக கேட்கவில்லை என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.

கைதானவர்கள் யார்?

மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்.

அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான பெண்களில் ஒருவர் பெயர் நீலம் (42 வயது) மற்றும் இன்னொருவர் பெயர் அமோல் ஷிண்டே (25 வயது) என தெரியவந்துள்ளது.

‘சர்வதிகாரம் கூடாது’ என மக்களவைக்குள் நுழைந்த இருவரும் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் அத்துமீறல்

பட மூலாதாரம்,ANI

நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வழிமுறைகள் என்ன?

  • நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு 4 கட்ட பாதுகாப்பு சோதனைகளை கடந்துதான் உள்ளே செல்ல முடியும்.
  • பாதுகாப்பு படையினரின் 3 கட்ட சோதனைக்கு பிறகே ஒருவர் பார்வையாளர்கள் அரங்கிற்குள் நுழைய முடியும்.
  • ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்கேனர் மற்றும் மெடல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்படும்.
  • பார்வையாளர்கள் அரங்கில் நுழைவதற்கு எம்.பி ஒருவரின் பரிந்துரை கடிதம் தேவை.
  • நுழைவாயில் சோதனை, வரவேற்பறையில் புகைப்படம் எடுக்கப்படும்.

இந்திய நாடாளுமன்ற தாக்குதலின் 22வது நினைவு தினம்

2001-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதல் நடந்து 22வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் இந்த தாக்குதலில் உயிரிழந்த 9 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும் இந்த தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த தாக்குதலில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 8 வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

நாடாளுமன்றத்தில் அத்துமீறல்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் சீக்கிய குழு ஒன்று பாராளுமன்றில் தாக்குதல் நடாத்தப்படும் என சில வாரங்களுக்கு முன் கூறியதாம்.  Cmr.fm

இத்தாகுதலுக்கும் தாக்குதல் நடாத்தியவர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் யார்? அவர்களது பெற்றோர் கூறுவது என்ன?

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள்

பட மூலாதாரம்,ANI

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நாடாளுமன்றத்தின் உள்ளே அத்துமீறி நுழைந்ததற்காக, கைது செய்யப்பட்ட நான்கு நபர்களை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இவர்களில் இருவர் இன்று (புதன்கிழமை) கேள்வி நேரத்தில் அரங்கின் மாடியில் உள்ள பார்வையாளர் கேலரியில் இருந்து கீழே குதித்துள்ளனர். இந்தச் சம்பவம் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு நாளில் நடந்துள்ளது.

ஏஎன்ஐ செய்தி முகமையின் தகவல்படி, பார்வையாளர் கேலரியில் இருந்து குதித்தவர்களின் பெயர்கள் சாகர் ஷர்மா மற்றும் மனோரஞ்சன்.

"அவர்களது பின்னணி குறித்து தகவல்களைச் சேகரித்து வருகிறோம். சாகர் ஷர்மா மைசூரை சேர்ந்தவர். பெங்களூருவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் பொறியியல் படித்து வருகிறார். மற்றொரு நபரும் மைசூரை சேர்ந்தவர்," என்று ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் குறித்து மேலும் தகவல்களைப் பெற உளவுத்துறை மற்றும் உள்ளூர் காவல்துறையின் குழு அவர்களது வீடுகளுக்கு நேரடியாகச் சென்றுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்திருந்தார்.

“அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் எந்த அமைப்புடனாவது தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

அவர்களிடமிருந்து கிடைத்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பார்வையாளர் கேலரியை அடைவதற்கு முன்பு அவர்கள் கடந்து சென்ற அனைத்து சோதனைச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன," என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 

நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ணப் புகை மூட்ட என்ன காரணம்?

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள்

பட மூலாதாரம்,X/SENTHILKUMAR

நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே வண்ணப் புகை மூட்டம் ஏற்படுத்திய பெண்ணான நீலம் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபர் குறித்த தகவல்களை டெல்லி காவல்துறை பகிர்ந்துள்ளது.

அவர்கள் இருவரையும் டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை கூறுகிறது. அவர்கள் இருவரும், வண்ணப் புகை வெளியிடும் பொருட்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்படுவதற்கு முன்பாக, அந்தப் பெண் “அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுங்கள், சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்” என்று கோஷமிட்டுள்ளார். அவரது அந்த வீடியோ சமூக ஊடகங்களில், வைரலாகி வருகின்றன.

"நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த நீலம் மற்றும் அமோல் ஆகிய இருவர், செல்போன்களை எடுத்துச் செல்லவில்லை. அவர்களிடம் எந்தவிதமான பை அல்லது அடையாள அட்டையும் இல்லை. அவர்கள் தாங்களே நாடாளுமன்ற வளாகத்தை அடைந்ததாகக் கூறினர். எந்த அமைப்புடனும் தொடர்பு இல்லை என்றும் கூறுகின்றனர்," என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

அத்துமீறி சென்றது தவறு: கைது செய்யப்பட்டவரின் தந்தை கண்டனம்

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள்

பட மூலாதாரம்,ANI

மக்களவை அரங்கில் குதித்த நபரின் பெயர் மனோரஞ்சன். பிபிசி இணை செய்தியாளர் இம்ரான் குரேஷியின் தகவல்படி, மைசூரில் உள்ள மனோரஞ்சனின் தந்தை தேவராஜு கவுடா, தனது மகனின் செயலை 'கடுமையாகக் கண்டிக்கத்தக்கது' என விமர்சித்துள்ளார்.

தான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், தனது மகன் பொறியியல் படித்திருப்பதாகவும் தேவராஜு கவுடா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மனோரஞ்சன் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வந்ததாக அவர் கூறினார்.

"நாடாளுமன்றம் நம்முடையது. இப்படி நடந்தது கண்டிக்கத்தக்கது. நீங்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடலாம். ஆனால் இப்படி செய்யக்கூடாது," என்றார்.

"நாங்கள் பிரதாப் சிம்ஹாவின் தொகுதியில் வசிக்கிறோம். மனோரஞ்சன் ஒரு நல்ல மகன். நாங்கள் அவருக்கு நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுத்தோம். அவர் இன்று ஏன் இப்படி செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் விவேகானந்தரை நிறைய படித்துள்ளார்.

அவர் சமூகத்திற்கும், ஏழை எளிய மக்களுக்கும் நல்லது செய்ய விரும்பினார். இதை எங்கள் பகுதியில் யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம். அவரைப் பற்றி யாரும் ஒரு கெட்ட விஷயத்தைக் கூற மாட்டார்கள்," என்று மனோரஞ்சனின் தந்தை மேலும் கூறினார்.

பொறியியல் படித்த பிறகு, மனோரஞ்சன் யாரிடமும் வேலை செய்யவில்லை. கோழி, ஆடு மற்றும் மீன் வளர்த்தார். அவர் அடிக்கடி டெல்லி சென்று வந்ததாகவும், ஆனால் அவர் அங்கு என்ன செய்தார் என்று ஒருபோதும் சொல்லவில்லை என்றும் தேவராஜு கவுடா கூறினார்.

கர்நாடக காவல் உதவி ஆணையர் அந்தக் குடும்பத்தினருடன் பேச அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார்.

 

கோபத்துக்கு காரணம் வேலையில்லா திண்டாட்டமா?

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள்

பட மூலாதாரம்,ANI

இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே வண்ணப் புகை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நீலம் என்ற பெண்ணை பாதுகாப்பு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

அவரது குடும்பம் ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் வசிக்கிறது. நீலத்தின் தாய், தம்பி ஆகியோர் நீலம் டெல்லி சென்றது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர். வேலை கிடைக்காததால் தனது மகள் மிகவும் வருத்தமாக இருந்ததாக நீலத்தின் தாய் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

"வேலையில்லாத காரணத்தால் அவள் மிகவும் வருத்தப்பட்டாள். அவளிடம் பேசினேன். ஆனால் டெல்லி சென்றது பற்றி எதுவும் சொல்லவில்லை. இவ்வளவு படித்தும் வேலை இல்லை. ஆகவே இறந்துவிடுவதே மேல்’ என்று என்னிடம் கூறியதுண்டு," என்று நீலத்தின் தாய் கூறினார்.

"நீலம் கைது செய்யப்பட்ட தகவல் எங்களுக்கு எங்கள் அண்ணன் மூலமாகக் கிடைத்தது. அவர் எங்களை அழைத்து தொலைக்காட்சியை பார்க்கச் சொன்னார். நீலம் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்," என்று நீலத்தின் தம்பி கூறினார்.

"அவள் டெல்லி சென்றிருப்பது எங்களுக்குத் தெரியாது. ஹிசாரில் படிப்பதற்காகச் சென்றிருப்பது மட்டுமே எங்களுக்குத் தெரியும். அவள் நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்து நேற்று மீண்டும் திரும்பினாள். பிஏ, எம்ஏ, பி.எட், எம்.எட், எம்.ஃபில் படித்து, நெட் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். வேலையில்லா திண்டாட்டம் குறித்துப் பலமுறை குரல் கொடுத்துள்ளார். மேலும் விவசாயிகள் இயக்கத்திலும் பங்கேற்றுள்ளார்," என்று அவர் கூறினார்.

நீலத்தின் குடும்பம் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக அவரது தம்பி தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c802lrv42q0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14 எம்.பிக்கள் இடைநீக்கம்: மக்களவையில் என்ன நடந்தது? பாஜக அரசு கேள்வி கேட்கவிடாமல் தடுக்கிறதா?

15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் - என்ன காரணம்?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த நபர்கள் குறித்துக் கேள்வி எழுப்பிய 15 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த டெர்க் ஒ ப்ரனை முதல் நபராக மாநிலங்களவையில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஒழுங்கற்ற நடத்தைக்காக அவரை நீக்குவதாக மாநிலங்களவைத் தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். அவர் இதன் பிறகு, நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது.

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்திய மேலும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம்

பட மூலாதாரம்,X/SENTHILKUMAR

மக்களவையில் ஏற்பட்ட கூச்சலுக்கு இடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள், கனிமொழி (திமுக), எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக), சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), கே சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட), எஸ். ஜோதிமணி (காங்கிரஸ்), மாணிக்கம் தாக்கூர் (காங்கிரஸ்) இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அதேபோன்று கேரளாவை சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வி.கே.ஸ்ரீகந்தன் (காங்கிரஸ்), பென்னி பெஹனான் (காங்கிரஸ்), டீன் குரியகோஸ் (காங்கிரஸ்), ஹிபி ஈடன் (காங்கிரஸ்), டி.என்.பிரதாபன் (காங்கிரஸ்), ரம்யா ஹரிதாஸ் (காங்கிரஸ்) இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்கள் தவிர பிஹாரை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் முகமது ஜாவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

 

நேற்று(டிசம்பர் 14) நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்த இரண்டு பேர் திடீரென அவையில் குதித்து கையிலிருந்த பொருளைக் கொண்டு வண்ணப் புகை வெளியிட்டனர்.

இந்தச் சம்பவம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு வெளியே, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய அதே நாளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகவை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரையில் அனுமதி சீட்டு பெற்றவர்களே நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறிச் செயல்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மக்களவை உறுப்பினர்களுக்கு நேரடியாக வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனால் ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தின்போது 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் -

நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “உள்ளே வந்தவர்கள் வெளியிட்ட புகைகூட அடங்கவில்லை. அதற்குள், அவையின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் ஒன்றுமே நடக்காதது போல் நடத்தப்படுகின்றன. சம்பவம் குறித்து விளக்கம் கேட்ட நாங்கள் வெளியே அனுப்பப்பட்டுள்ளோம்.

அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கிய பாஜக எம்.பி இன்னும் அவையில் உள்ளார். இதுதான் உங்கள் நியாயமா?

இதேபோன்று வேறொரு சூழலில், எங்களை இடை நீக்கம் செய்துவிட்டு, அவையில் தொழிலாளர் விதிகள் (லேபர் கோட்) நிறைவேற்றப்பட்டது. திமுகவின் மற்றொரு நாடாளுமன்ற எஸ்.ஆர்.பார்த்திபன் இன்று அவைக்கு வரவே இல்லை. அவரையும் சேர்த்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினார் என்று இடைநீக்கம் செய்துள்ளனர்.

யாரை வெளியனுப்ப வேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்திருப்பார்கள். தென் மாநிலங்களைப் பார்த்தால் பொதுவாகவே பாஜகவுக்கு காழ்ப்புணர்ச்சி உண்டு. அவர்களால் கால் வைக்க முடியாத இடம் ஆயிற்றே,” என்றார்.

மக்களவையை ஒத்தி வைப்பதற்கு முன்பாகப் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தச் சம்பவம் அனைவராலும் கண்டிக்கப்பட்டது என்றார்.

“நாம் அனைவரும் - ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் - நாடாளுமன்றத்துக்குள் நுழைய யாருக்கு அனுமதி வழங்குகிறோம் என்பது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் பழைய நாடாளுமன்ற கட்டடத்திலும் நிகழ்ந்துள்ளன,” என்றார்.

 
15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் -

பட மூலாதாரம்,JOTHIMANI SENNIMALAI / FACEBOOK

இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, “நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே இரண்டு பேர் நுழைந்த சம்பவம் இதுதான் முதல்முறை. 2001ஆம் ஆண்டு தாக்குதல் நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்தது.

இரண்டு சம்பவங்களின்போதும் பாஜகதான் ஆட்சியில் இருந்தது. நாங்கள் கேட்டதெல்லாம் பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் வந்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதுதான்,” என்றார்.

அனுமதிச் சீட்டை வழங்கிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரினர். அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை.

இதுகுறித்து இடைநீக்கம் செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பிபிசி தமிழிடம் பேசும்போது, “பிரதமர் விளக்கம் தரவேண்டும் என்று கேட்பது சட்டவிரோத செயலா? குறைந்தபட்ச நேர்மையாவது வேண்டாமா?

பதாகைகள் வைத்துள்ளதை குற்றமாகச் சொல்கிறார்கள். உரிய விளக்கம் அளித்தால் நாங்கள் ஏன் போராடப் போகிறோம்?

நாளை எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் உள்ளது. அதில் இது குறித்து ஆலோசிக்க உள்ளோம்,” என்றார்.

 
15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் -

பட மூலாதாரம்,@MKSTALIN TWITTER PAGE

“நாடாளுமன்றத்தில் விளக்கம் கேட்டால், இடைநீக்கம் செய்கிறார்கள். இதுபோன்ற கேள்விகளை எழுப்பும்போது பதில் சொல்வதற்காகத் தானே நாடாளுமன்றம் இருக்கிறது," என்றார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“மத்திய பாஜக அரசின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை கண்டனத்துக்குரியது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து உரிமையை நசுக்குவது நாடாளுமன்றத்தின் புதிய நடைமுறையா?

நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பியதற்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்? 15 உறுப்பினர்களும் மீண்டும் அவைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cx0jx25wg7wo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியநாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் ஊடுருவிய நபரின் பாஜக தொடர்பு’ - எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி

14 DEC, 2023 | 11:07 AM
image

இந்தியநாடாளுமன்றத்தின்மக்களவையில்  பாதுகாப்பு மீறல் நடந்துள்ள நிலையில் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர் மைசூரு தொகுதி பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

கைதான இரண்டு இளைஞர்களில் ஒருவரின் அடையாளம் சாகர் சர்மா எனத் தெரியவந்துள்ளது. மற்றொருவர் பெங்களூரு விவேகனாந்தா பல்கலைக்கழத்தில் கணினி அறிவியல் பட்ட பொறியாளர் மனோரஞ்சன் தாஸ் எனத் தெரியவந்துள்ளது. வெளியே கைதான பெண்களின் பெயர் நீலம் (42) அமோல் ஷிண்டே (25) எனத் தெரியவந்துள்ளது.

 - நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் பார்வையாளராக உள்ளே செல்வதற்கு குறிப்பிட்ட எம்பியின் பரிந்துரை கடிதம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே நுழைவுச் சீட்டு வழங்கப்படும். அவர்களுக்கு பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும் மேலும் அடையாள அட்டைகளை சரிபார்க்கப்படும் அதன்பிறகுதான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த அத்துமீறலில் ஈடுபட்ட இருவருக்கும் பரிந்துரை கடிதம் அளித்த மக்களவை உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில் சஹார் சர்மா என்பவருக்கு மைசூரு மக்களவையின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரை கடிதம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒருவருக்கு பரிந்துரை கடிதம் வழங்கிய மக்களவை உறுப்பினர் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இவர் மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் என்றும் இவர் ஒரு பொறியாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/171682

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.