Jump to content

ஆலயங்களில் விதிக்கப்பட்டுள்ள புதியத் தடை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
kathirkaamam.jpg

கதிர்காமம் ஆலயம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் இருந்து பெறப்படும் தங்கம், பணம் உள்ளிட்ட அனைத்தையும் பூசகர்களால் எடுத்து செல்ல முடியாது எனவும் ஆலயங்களின் சகல பொறுப்பும் பஸ்நாயக்க நிலமேக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் கீர்த்தி சிறிபத்தன தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் மூலம் பெறப்பட்ட அதிகாரங்களின்படி ஆலயங்களின் அனைத்து பொறுப்பும் பஸ்நாயக்க நிலமேகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கதிர்காமம் ஆலயத்தில் பணம் மற்றும் தங்கப் பொருட்களுடன் பூசகர்களை சேவையில் இணைக்கும் அதிகாரமும் பஸ்நாயக்க நிலமேக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த விவகார ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/284672

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன புதுசாய்? இவ்வளவு காலமும் எப்படியான நடைமுறை நிலவியது?

பஸ்நாயக்க நிலமே என்றால் கோயில் முதலாளியோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் ஆபத்தான சட்டம். பெளத்த விரிவாக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.

அப்ப எனி நல்லூரானின் தங்கம்.. பணம் எல்லாம் பிக்குகளின் கையில் எண்டுங்கோ..?!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

இது மிகவும் ஆபத்தான சட்டம். பெளத்த விரிவாக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.

அப்ப எனி நல்லூரானின் தங்கம்.. பணம் எல்லாம் பிக்குகளின் கையில் எண்டுங்கோ..?!

நான் நினைக்கிறேன் இந்த சடடம் அரச நிர்வாகத்தின் கீழ் வரும் ஆலயங்களுக்குத்தான் செல்லுபடியாகும் என்று.

நல்லூர் ஆலயம் தனியாரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இது செல்லுபடியாகுமோ தெரியவில்லை.

இப்போது அரசாங்கத்துக்கு பணம் தேவைப்படுகின்றது. எனவே எதுவும் நடக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நந்தன் said:

கதிர்காமத்துக்கு மட்டும்

கதிர்காமம் உட்பட இலங்கையில் உள்ள எல்லா ஆலயங்கள் என்றல்லவா செய்தியில் இருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நிலமேக்களின் கீழ் வரும் கோவில்களுக்கு மட்டும் என நினைக்கிறேன். 

வைரவர் கோவில் உண்டியல் பூசாரிக்குத்தான் பதற வேண்டாம்🤣.

1 minute ago, Cruso said:

கதிர்காமம் உட்பட இலங்கையில் உள்ள எல்லா ஆலயங்கள் என்றல்லவா செய்தியில் இருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Cruso said:

கதிர்காமம் உட்பட இலங்கையில் உள்ள எல்லா ஆலயங்கள் என்றல்லவா செய்தியில் இருக்கின்றது. 

பூசகர்கள் எடுத்துச்செல்ல  நிர்வாகம் எங்கய்யா விடுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

வைரவர் கோவில் உண்டியல் பூசாரிக்குத்தான் பதற வேண்டாம்🤣.

இந்த உண்டியலுக்குள்ளும் தங்க நகைகள் போடுவார்களா? 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

பஸ்நாயக்க நிலமே என்றால் கோயில் முதலாளியோ?

நிலமே - சமூக பிரதானி (chieftain).

நிலமே, நில(ம்)வுடையார் இல் இருந்து வந்திருக்கலாம்.

அதேபோல், திசாவ, வளவ, அதிகாரம், மஹா அதிகாரம்  போன்றனவும் உள்ளன.

கண்டி பெரஹெராக்களில் உரிமைக்குரியவர் - தியவதன நிலமே. 

கதிர்காமத்தில் பஸ்நாயக்க நிலமே.

இவை பெளத்தர்களால் “தேவாலய” என அழைக்கப்படும் கோவில்கள்.

எமது ஆகம, சிறு தெய்வ கோவில்களில் நிலமே இல்லை. ஆகவே இந்த விதி செல்லாது என நினைக்கிறேன்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நந்தன் said:

பூசகர்கள் எடுத்துச்செல்ல  நிர்வாகம் எங்கய்யா விடுது.

இல்லை கோஷான் எழுதி இருந்தார் நிலமையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்கள் மட்டும் என்றும், வைரவர் உண்டியலுக்கு எல்லாம் இல்லை என்றும்.

வைரவர் உண்டியலுக்குள் தங்க நகைகள்போடுவார்களா என்றும் அவரிடம் கேட்டிருக்கிறேன். எனக்கு தெரிந்த சில உண்டியல் இருக்கின்றது அதுதான் அறிந்து வைத்திருந்தால் உதவும்தானே. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Cruso said:

இப்போது அரசாங்கத்துக்கு பணம் தேவைப்படுகின்றது. எனவே எதுவும் நடக்கலாம். 

திருடர் கூட்டம் நாட்டை சூரையாடி விழுங்கிவிட்டு இப்போது எப்படி திருட்டை தொடரலாம் என தினுசு தினுசாய் யோசித்து செயற்படுகின்றது. 

திருட்டு கூட்டம் அதிகாரத்தில் உள்ளவரை எப்படியான முயற்சியும் முழு பலனை தராது. 

நாட்டின் சொத்துக்களை தின்று ஏப்பம் விட்டவர்கள் இனியும் எப்படியெல்லாம் சுரண்டுவார்களோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நியாயம் said:

அபின் சாப்பிட்டு பழகினவன் இலகுவாக அதை விட மாடடான். அதே மாதிரிதான் இந்த கொள்ளைக்கூட்டமும் கொள்ளையடித்து பழகி விடடார்கள்.

இலங்கையில் உள்ள தேர்தல் முறையும் இந்த கொள்ளையர்களுக்கு வெள்வதட்கு இலகுவாக இருக்கிறது. இந்த தேர்தல் முறை மாற்றப்பட விடடாள் மீண்டும் கொள்ளையர்களின் ஆட்சிதான்.

முழு உலகுமே தெரியும் இந்த ராஜபக்சேக்கள் நாட்டிடை சூரையாடினார்கள் என்று. இருந்தாலும் என்ன, வெட்கம் மானம் ரோசம் இன்று நேற்று மீண்டும் மேடையேறி பிரசாரத்தை துவங்கி விடடார்கள். மக்கள் மாக்களாக இருக்கும் வரைக்கும் இவர்கள்பாடு கொண்டாட்டம்தான்.

என்ன இருந்தாலும் யார் ஆட்சிக்குவந்தாலும் தமிழ் மக்களுக்கு ஒன்றுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் கடவுளை காட்டி மக்களிடம் கொள்ளையடித்துவந்த  பூசகர்கள் நிர்வாகிகளுக்கு பதிலாக இனி அரசே கொள்ளையடிக்க போகின்றது.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.