Jump to content

மின் கட்டணம் ஜனவரியில் குறைக்கப்படுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மின்சாரக் கட்டணங்களில் சாத்தியமான குறைப்புக்கான அறிவிப்பை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகரித்த நீர் மின் உற்பத்தி மற்றும் குறைந்த விலையில் நிலக்கரி கொள்வனவு என்பன மின் கட்டண குறைப்பிற்கான இரு முக்கிய காரணிகளாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த குறிப்பிட்டார்:

2023 இல் நிலக்கரி கொள்வனவுகள் முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைவாக இருந்ததாகவும், இது சாத்தியமான செலவினச் சேமிப்பிற்கு பங்களித்ததாகவும் அனுருத்த குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சரியான விலை மாற்றங்களை தீர்மானிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மின் கட்டண திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை எதிர்வரும் காலங்களில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்து, கட்டண மாற்றங்கள் குறித்து இறுதி முடிவை எடுக்கும்.

https://thinakkural.lk/article/285186

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.