Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, குமாரசாமி said:

உலகில் வாழும் ஒவ்வொரு மனித இனங்களும் தமக்குரிய இன மத கலாச்சாரங்களுடனேயே வாழ்கின்றன. பெரிய பிரித்தானிய மக்கள் தங்களுக்குரிய கலாச்சாரங்களுடனேயே வாழ்கின்றார்கள். இதே போல் பிரான்ஸ் நாட்டை பற்றி  சொல்லவே தேவையில்லை. உணவில் கூட கண்ணியமான கலாச்சாரம் வைத்திருப்பார்கள். இத்தாலியும் கலை கலாச்சாரங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இதே போல் ஜேர்மனி,போலந்து ரஷ்ய மக்கள் என தங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இதனால் தான் தாம் தம் மக்கள் கலாச்சாரம் என விட்டுக்கொடுக்காமல் வாழ்கின்றார்கள்.

உங்களைப்போன்ற கருத்தாளர்களால்  ஏற்கனவே நடுத்தெருவில் நிற்கும் தமிழினம் நடுத்தெருவே இல்லாமல் காணாமல் போகும்.

எனக்குத்தெரிய - நீங்கள் மேலே சொன்ன எந்த இனமும்….இன்னொரு இனத்தின் பண்பாட்டு கூறை வெறுத்தொதுக்குவதில்லை.

பிரான்சில், சர்வசாதாரணமாக அமேரிக்க பண்பாட்டை காணலாம்.

இங்கிலாந்தில் ஒரு ஆங்கில திருமணத்தில் இத்தாலிய உணவை பரிமாறினால் - யாரும்….ஐயோ எங்கே மீனும் கிழங்கும் என கூப்பாடு போடுவதில்லை.

சீனர்கள் இங்கிலாந்து கலாச்சாரத்தை அப்படி நேசிப்பார்கள்.

வெள்ளி கிழமைகளில் going for a curry என்பது கிட்டதட்ட இங்கிலாந்தின் கலாச்சாரமாகி விட்டது.

அதேபோல் chicken tikka எண்டு ஒரு புதிய கறி வகையையே இங்கிலாந்தில் உருவாக்கி உள்ளனர்.

டோனர் கெபாப் என புதிய வகை கெபாப் துருக்கியரால் ஜேர்மனியில் உருவாக்கப்பட்டது.

உலகம் எங்கும், எப்போதும் இதுதான் வரலாறு போகும் பாதை.

உங்களை போன்ற சிலர் தான் - காலத்தின் போக்குக்கு குறுக்கே விழுந்து தடுத்து விட முடியும் என பகல் கனவு காண்கிறீர்கள்.

  • Like 1
  • Thanks 1
  • Replies 56
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

ஒரு சாதாரண TV போட்டி ஒன்றின் வெற்றியை தலை மேல் வைத்து கொண்டாடி அந்த பிள்ளையின் எதிர்கால வளர்ச்சியை நாசமாக்க போகின்றனர்.  

Kapithan

அவருடைய வெற்றி யின் பின்னால் உள்ள  அவரது கடும் உழைப்பும் + இந்திய அரசின் அரசியல் நகர்வும் (ஈழத் தமிழரை தனது  வட்டத்திற்குள் கொண்டுவரும்)  இருக்கிறதாக பார்க்கிறேன்.  அவரது வெற்றியை நிதானமாகக் கொண்

குமாரசாமி

தமிழினத்தின் கலாச்சாரத்தை,மொழியை,பண்பாடுகளை,இருப்பிடத்தை,உரிமைகளை வேரோடு அழிக்க எதிரி கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றான். நாமோ ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பாடிக்கொண்டு திரி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

எனக்குத்தெரிய - நீங்கள் மேலே சொன்ன எந்த இனமும்….இன்னொரு இனத்தின் பண்பாட்டு கூறை வெறுத்தொதுக்குவதில்லை.

பிரான்சில், சர்வசாதாரணமாக அமேரிக்க பண்பாட்டை காணலாம்.

இங்கிலாந்தில் ஒரு ஆங்கில திருமணத்தில் இத்தாலிய உணவை பரிமாறினால் - யாரும்….ஐயோ எங்கே மீனும் கிழங்கும் என கூப்பாடு போடுவதில்லை.

சீனர்கள் இங்கிலாந்து கலாச்சாரத்தை அப்படி நேசிப்பார்கள்.

வெள்ளி கிழமைகளில் going for a curry என்பது கிட்டதட்ட இங்கிலாந்தின் கலாச்சாரமாகி விட்டது.

அதேபோல் chicken tikka எண்டு ஒரு புதிய கறி வகையையே இங்கிலாந்தில் உருவாக்கி உள்ளனர்.

டோனர் கெபாப் என புதிய வகை கெபாப் துருக்கியரால் ஜேர்மனியில் உருவாக்கப்பட்டது.

உலகம் எங்கும், எப்போதும் இதுதான் வரலாறு போகும் பாதை.

உங்களை போன்ற சிலர் தான் - காலத்தின் போக்குக்கு குறுக்கே விழுந்து தடுத்து விட முடியும் என பகல் கனவு காண்கிறீர்கள்.

நான் ஏதோ சொல்ல விழைய நீங்கள் சாப்பாட்டில் வந்து நிற்கின்றீர்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, குமாரசாமி said:

நான் ஏதோ சொல்ல விழைய நீங்கள் சாப்பாட்டில் வந்து நிற்கின்றீர்கள்.

நான் எப்பவும் அப்படித்தான்🤣.

#சாப்பாட்டு இராமன்🤣

சாப்பாடும் பண்பாட்டின் ஒரு கூறுதானே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

எனக்குத்தெரிய - நீங்கள் மேலே சொன்ன எந்த இனமும்….இன்னொரு இனத்தின் பண்பாட்டு கூறை வெறுத்தொதுக்குவதில்லை.

பிரான்சில், சர்வசாதாரணமாக அமேரிக்க பண்பாட்டை காணலாம்.

இங்கிலாந்தில் ஒரு ஆங்கில திருமணத்தில் இத்தாலிய உணவை பரிமாறினால் - யாரும்….ஐயோ எங்கே மீனும் கிழங்கும் என கூப்பாடு போடுவதில்லை.

சீனர்கள் இங்கிலாந்து கலாச்சாரத்தை அப்படி நேசிப்பார்கள்.

வெள்ளி கிழமைகளில் going for a curry என்பது கிட்டதட்ட இங்கிலாந்தின் கலாச்சாரமாகி விட்டது.

அதேபோல் chicken tikka எண்டு ஒரு புதிய கறி வகையையே இங்கிலாந்தில் உருவாக்கி உள்ளனர்.

டோனர் கெபாப் என புதிய வகை கெபாப் துருக்கியரால் ஜேர்மனியில் உருவாக்கப்பட்டது.

உலகம் எங்கும், எப்போதும் இதுதான் வரலாறு போகும் பாதை.

உங்களை போன்ற சிலர் தான் - காலத்தின் போக்குக்கு குறுக்கே விழுந்து தடுத்து விட முடியும் என பகல் கனவு காண்கிறீர்கள்.

உங்கள் ஜதார்ததமான. கருத்தை வரவேற்கிறேன்.  உலகின் எல்லா இனங்களின் கலாச்சாரத்தை விட அனைத்து இன மக்களுக்கும் பொதுவான  மனித பண்பாடே உயர்வானது.  

கில்மிஷாவின் வெற்றியை தென்னிலங்கை சிங்கள  ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட போது சமூக ஊடகங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்ட பல்லாயிரம்  சாதாரண சிங்கள பொது மக்கள்  இதயபூர்வமாக  கில்மிஷாவை  வாழ்த்தி பின்னூட்டங்களை இட்டதை அவதானிக்க கூடியமாக இருந்தது.  அது எமக்கு பெருமையாகவும் இருந்தது. 

எமது இனம் ஏனைய இனங்களுக்கு எத்த வகையிலும் சளைத்தது அல்ல. உலகில் வாழும் எல்லா இனங்களுக்கும் இணையானவர்கள் நாம் என்பதை பல்வேறு துறைகளில் எமது வெற்றிகரமான  செயற்பாடுகள் மூலம் உலகிற்கு  காட்டுவதே எமக்கு பெருமை.  

அதை விடுத்து நாம் நாம் மூத்தகுடி, உலகத்திற்கே அறத்தை சொல்லி கொடுத்தவர்கள் நாம், உலகத்திற்கே தாய் மொழி எமது மொழிதான் என்று,  நாமே மேடை போட்டு  நாமே எமக்குள் மட்டும் காட்டு கூச்சல் இடுவது நிச்சயமாக எமக்கு பெருமையானது அல்ல.  அதை எவரும் திரும்பி கூட பார்ககப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, goshan_che said:

உங்களை போன்ற சிலர் தான் - காலத்தின் போக்குக்கு குறுக்கே விழுந்து தடுத்து விட முடியும் என பகல் கனவு காண்கிறீர்கள்.

நீங்கள் குறிப்பிட்ட அனைவருக்கும் சொந்த நாடு சொந்த நிலம் சொந்த கலாச்சாரம் பண்பாடு என அடித்தளம் இருக்கின்றது.சேறு கண்ட இடத்தில் மிதித்து குளம் கண்ட இடத்தில் கழுவி விட்டு போகலாம். ஏனெனில் அவர்களுக்கு சொந்த கூடாரம் இருக்கின்றது.செய்யும் விடயங்களில் சரி பிழை பார்த்து ஒதுங்கிக்கொள்ளலாம்.
ஆனால் எங்களுக்கோ சொந்த நிலமும் இல்லை.உரிமைகளும் இல்லை. நாடு நாடாக அகதியாய் அலைந்து திரிந்து கொண்டு யாதும் ஊரே யாவரும் கேளிர் என அலைந்து திரிய வேண்டியதுதான்.

உலகிலே ஒரே இனம் ஒரே நிறம் ஒரேமொழி ஒரே மனித பண்புகள் இருப்பதில்லை. இது இயற்கை சொல்லும் பாடம். சமிக்கை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

சொந்த இடம், நாடு உள்ள இனங்கள், நாடற்ற இனங்கள் என்ற வேறுபாடில்லை. 

மாற்றம் ஒன்றே மாறாதது.

அழுதாலும், தொழுதாலும், மிரட்டினாலும் யாழ்பாணத்தில் அம்மக்கள் சுய விருப்பில் செண்டை மேளம் அடிப்பதை, டிஜே பார்ட்டிக்கு போவதை யாராலும் நிறுத்த முடியாது. தொடரூந்து பாதையில் விழுந்து படுப்பதால் அதை நிறுத்த முடியாது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

சொந்த இடம், நாடு உள்ள இனங்கள், நாடற்ற இனங்கள் என்ற வேறுபாடில்லை. 

மாற்றம் ஒன்றே மாறாதது.

அழுதாலும், தொழுதாலும், மிரட்டினாலும் யாழ்பாணத்தில் அம்மக்கள் சுய விருப்பில் செண்டை மேளம் அடிப்பதை, டிஜே பார்ட்டிக்கு போவதை யாராலும் நிறுத்த முடியாது. தொடரூந்து பாதையில் விழுந்து படுப்பதால் அதை நிறுத்த முடியாது.

மாற்று கலாச்சாரங்களும், தேவையில்லாத பழக்க வழக்கங்களும், காற்றோடு கலந்து வருபவை அல்ல. ஏதோ ஒரு விதத்தில் திணிக்கப்படலாம்.கவர்ச்சியாக விளம்பரப்படுத்தலாம். சினிமா மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை நிர்மூலமாக்கலாம்.மதங்கள் கூட திணிக்கப்படுபவைதான். இதுதான் இன்று உலகில் நடக்கின்றது.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எரிக் சொல்கைமை அணுகி சத்தியமூர்த்தி அவர்களுக்கும் அர்ச்சனா அவர்களுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தையை நல்லெண்ண அடிப்படையில் ஆரம்பித்து வைக்க இயலாதா? ஆனானப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பிலேயே தனிநபர்களுக்கும், பிரிவுகளுக்கும் இடையில் பல்வேறு போட்டிகள், சச்சரவுகள் காணப்பட்டன. தமிழருக்கு தனிநாடு எல்லாம் சரிவராது. ஒருத்தனுக்கு கீழ் அடிமையாக வாழவேண்டும் என்பதுதான் தலைவிதி.
    • பனை ஓலையின் அடிப் பகுதிதான் கருக்கு  மட்டை.
    • தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசித் தொகையில் பாவனைக்கு பொருத்தமற்ற 3 கொள்கலன்களில் இருந்த பெருமளவான அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 75,000 கிலோ அரிசி இவ்வாறு பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்படும். அதன்படி, பரிசோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. அவற்றில் இரண்டு கொள்கலன்களில் உள்ள அரிசியில் வண்டுகள் இருந்ததாகவும், மற்றைய கொள்கலனில் இருந்த அரிசியில் உற்பத்தி திகதி அடங்கிய பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் ஒட்டப்பட்டிருந்ததால், அந்த கொள்கலன்களை சுங்கத்தில் இருந்து விடுவிக்க சுகாதாரத்துறை அனுமதி வழங்கவில்லை.  நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக கடந்த 4 ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி தற்போது இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் நேற்று (13) பிற்பகல் வரை தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 2,300 மெற்றிக் தொன் அரிசி சுங்கத்திற்கு கிடைத்துள்ளது. அவற்றில் 90% வீதமானவை சுங்கத்தில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=197299
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.