Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
திருப்பத்தூர் ஆர்மா மலை
கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுஜாதா
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 ஜனவரி 2024

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் கரடுமுரடான பாதைகளைக் கொண்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது மலையாம்பட்டு கிராமம். இங்கு சமணர்கள் வாழ்ந்த ஆர்மா குகை உள்ளது.

மலைகளால் சூழப்பட்ட பகுதிகளைக் கொண்ட அப்பகுதியில் மலையடிவாரத்தில் இருந்து வாகனங்கள் செல்ல முடியாததால், சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆர்மா மலைக்குகை சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அங்குள்ள மக்களுக்கு இதுகுறித்த தகவல்கள் பெரிதும் தெரியவில்லை. மலைப்பகுதியில் இருப்பதால் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு அப்பகுதிக்கு செல்வதாக அங்கிருந்த மக்கள் சிலர் தெரிவித்தனர்.

இந்த சமணர் குகை குறித்து, தொல்லியல் துறை பேராசிரியர் பிரபுவிடம் பிபிசி தமிழ் பேசியது.

"ஆர்மாமலை என்று அழைக்கப்படும் இந்த மலை முன்பு ‘அருகர் மாமலை’ என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அருகர் சமணர்கள் வழிபடும் தெய்வமாகும். எனவே, அவர்கள் இம்மலையினை ‘அருகர் மாமலை’ என்று அழைத்திருக்க வேண்டும். பின்னர் காலப்போக்கில் அச்சொல் மருவி அருமாமலை, அர்மாமலை, ஆர்மா மலை என்றெல்லாம் அழைக்கப்பட்டு வருகிறது" என்றார்.

திருப்பத்தூர் ஆர்மா மலை

மூலிகைச் சாறு கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள்

இம்மலையின் நடுப்பகுதியில் இயற்கையாக அமைந்த குகையில் சமண முனிவர்கள் தங்குவதற்காக மண் மற்றும் பச்சை செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அறைகளும், வண்ண ஓவியங்களும் உள்ளன. பாறையின் மேற்பகுதியில் அழகிய பல்லவர் கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

அங்குள்ள ஓவியங்கள் மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்டு அழகிய வேலைப்படுகளுடன் சமணச்சமயக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்களுடன் வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்கள் கி.பி.8-ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வரையப்பட்டிருக்கலாம் என்று பிரபு தெரிவித்தார்.

கி.பி.1882-இல் ராபர்ட் சீவெல் (Robert Sewell) என்ற ஆங்கிலேய வரலாற்று அறிஞர் ஆர்மாமலை ஓவியத்தைத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 
திருப்பத்தூர் ஆர்மா மலை
படக்குறிப்பு,

பேராசிரியர் பிரபு

மண் சுவர்களை கொண்ட அறைகள்

இக்குகைத் தளத்தில் சமணத் துறவிகள் தங்குவதற்கும், வழிபாட்டுக்காகவும் மண் சுவர்களை ஏற்படுத்தி அறைகளாகப் பகுத்துப் பயன்படுத்தியுள்ளனர். அந்த அறைகளில் சமணத் துறவிகள் தங்கியுள்ளனர். இக்குகைத்தளத்தின் மேல் விதானத்தில் எண் சதுரம் வரைந்து, நடுவில் ஒரு சதுரம் அமைத்துத் தீட்டப்பட்ட ஓவியம் சிறப்பாக உள்ளது. இரண்டு சதுரங்களில் ஒன்றில் எட்டுத் திசைக் காவலர்களும், மற்றொன்றில் தாமரைத் தடாகமும் தீட்டப்பட்டுள்ளன.

எண்திசைக் காவலர்களில் அக்னி தேவன் ஆட்டின் மீது அமர்ந்து வருவது போன்ற காட்சியும், எருமை மீது எமன் வருவது போன்ற காட்சியும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. மற்றொறு பகுதியில் பூத்துக் குலுங்கும் தாமரைப்பூக்களுடன் இலைகளும் கொடிகளும் உள்ளன. அன்னப்பறவைகளும் காணப்படுகின்றன.

மேலும், இங்கு சமணக் கோயிலுக்குரிய மானஸ்தம்பத்தின் அடிப்பகுதி மட்டும் காணப்படுகிறது. ஆதில், ‘ஸ்ரீ கனக நந்தி படாரர்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு துவாரபாலகர் சிலைகளும், தாமரை மலர் போன்ற பீடமும் காணப்படுகின்றது.

 
திருப்பத்தூர் ஆர்மா மலை

சமணத் துறவியர் வாழ்ந்ததற்கான சான்று

மேலும், இக்கல்லில் கி.பி. 8-ம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்களில் 'கடைக்கோட்டு ருத்த நந்தி படாரர் மாணாக்கர்’ என்று எழுதியுள்ளது.

இதுகுறித்து கூறிய பேராசிரியர் பிரபு, "இங்கு கடைக்கோட்டுருந்த நந்தி படாரர் என்ற சமணத் துறவியார் வாழ்ந்துள்ளார் என்பது தெரியவருகிறது. இவரது காலத்தில் இங்குள்ள ஒவியங்கள் வரையப்பட்டிருக்கலாம். இங்குள்ள ஓவியங்கள் சமண சமயம் தொடர்பான நம்பிக்கைகளையும் செய்திகளையும் அடையாளப்படுத்துகின்றன" என தெரிவித்தார்.

 
திருப்பத்தூர் ஆர்மா மலை

சித்தன்னவாசலுக்கு நிகரான ஓவியங்கள்

இவ்வோவியங்கள் தீட்டும் முன்னர், ஒழுங்கற்ற பாறைகளில் சுண்ணாம்புப் பூச்சு கொண்டு பூசி வரைவதற்கு ஏற்ற சமதளம் உருவாக்கிப் பின்னர் வண்ணங்கள் கொண்டு வரையப்பட்டுள்ளன.

பெரும்பாலான ஓவியங்கள் அழிந்த நிலையில் இருப்பினும் எஞ்சியுள்ள ஓவியங்கள் வண்ணம் மற்றும் வடிவமைப்பு ஒப்புமையில் சித்தன்னவாசல் ஓவியங்களைப் போன்றே காணப்படுவதாக பேராசிரியர் பிரபு தெரிவித்தார்.

திருப்பத்தூர் ஆர்மா மலை

எட்டு திசை காவலர்களின் உருவம்

இங்கு சமணம் தொடர்பான காட்சிகளும், எட்டு திசைக் காவலர்களான அக்னி, வாயு, குபேரன், ஈசானியன், இந்திரன், யமன், நிருதி, வருணன் போன்றவர்களும் தாமரை தடாகமும் காட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஓவியங்களில் ஆட்டின் மீது பயணிக்கும் இருவருடைய ஓவியமே தெளிவாக உள்ளது. ’

பச்சை, மஞ்சள், கருஞ்சிவப்பு, வெள்ளை போன்ற வண்ணங்களே பிரதானமாக உள்ளன. உருவங்கள் கருஞ்சிவப்பு வண்ணத்தால் கோட்டோவியமாக வரையப்பட்டு பின்னர் மஞ்சள், பச்சை போன்ற வண்ணங்களால் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஆபரணங்கள் குறைந்த அளவாகவும் அதேவேளையில் நுட்பமான கலைநயத்துடனும் வேலைப்பாட்டுடனும் காணப்படுகின்றது.

"ஆர்மாமலைப்பகுதி பல்லவர்களின் இறுதிக் காலகட்டங்களில் இராஷ்டிரகூடர், கங்கர்கள் ஆட்சிக்கு உட்பட்டுச் சில காலங்கள் இருந்தன. இருப்பினும் இவை பல்லவர்கள் காலத்தின் இறுதிப்பகுதியில் வரையப்பட்டிருக்கக்கூடும்" என பேராசிரியர் பிரபு அனுமானிக்கிறார்.

 
திருப்பத்தூர் ஆர்மா மலை

சமணப்பள்ளிகள்

சமணத்துறவிகள் தங்கும் இயற்கையான குகைகளில் அவர்கள் படுப்பதற்காக கற்பாறையில் படுக்கைகள் வெட்டிக்கொடுக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததுதாகவும் அரசர்களும் செல்வந்தர்களும் இதை ஓர் அறக்கொடையாக செய்ததாகவும் பிரபு தெரிவித்தார்.

இந்த குகைகள் பள்ளிக்குகைகள் எனப்பட்டன. சமண வழிபாட்டுத் தளமும், சமண மெய்யியல் ஆசிரியர்கள் தங்கும் இடமும் அங்கே அமைந்திருக்கும். சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கி சமயக்கல்வியும் தவப்பயிற்சியும் பெறுவார்கள்.

அவ்விடத்தில் சமணமதத்தின் தூய்மை நெறிமுறைகள் பேணப்பட்டதாக பேராசிரியர் பிரபு தெரிவித்தார்.

சமணப் பள்ளிக் குகைகளுக்கு அருகே சுனைகள் அமைக்கப்பட்டிருந்தன.

 
திருப்பத்தூர் ஆர்மா மலை

சமண சொல்லிலிருந்து வந்த ’பள்ளிக்கூடம்’

"உணவு அளித்தல், கல்வி அளித்தல், அடைக்கலம் அளித்தல், மருத்துவ உதவி அளித்தல், அருளுரை அளித்தல் என்னும் ஐந்துவகைக் கொடைகளைச் சமயப்பணிகளாகச் சமணர்கள் செய்தனர். அவற்றில் முதன்மையாகக் கல்விப் பணியை அவர்கள் முன்னெடுத்தனர். சமணப் பள்ளிகளில் இலக்கணம், அறிவியல், மருத்துவம் ஆகியவை கற்பிக்கப்பட்டன" என்கிறார் அவர்.

தமிழகத்தில் கி.பி 2 முதல் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை சமண சமயம் செல்வாக்குடன் இருந்தது எனக்கூறும் அவர், கல்விக்கூடத்திற்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் சமணர்களின் ’பள்ளி’ என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டதுதான் என்றும் அவர் கூறுகிறார்.

 
திருப்பத்தூர் ஆர்மா மலை
படக்குறிப்பு,

குகையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

தொல்லியல் துறையினரின் ஆய்வு

அருகர் மாமலை என்ற ஆர்மாமலைக் குகை தொல்லியல் துறையால் 12.06.1978 அன்று பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத நிலையில், அழிவுறும் நிலையில் இருந்த இவ்விடத்தினை பாதுகாத்திட எழுந்த கோரிக்கையினை ஏற்று தொல்லியல் துறையினர் இந்த மலைக்குகையைக் கடந்தாண்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, சிதிலமடைந்து காணப்பட்ட ஆர்மா மலைக்குகையை ரூ.20 லட்சம் செலவில் புனரமைத்துள்ளதாக, தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர். மலைக்கு செல்லும் வழிப்பாதைகள், படிக்கட்டுகள், பக்கவாட்டு சுவர்கள், அறிவிப்புப் பலகைகள் என சுற்றுலா பயணிகள் வந்து ஆர்மா மலையின் அழகையும், பழங்கால மக்கள் வாழ்ந்த தடத்தையும் காண்பதற்கான ஏற்பாடுகளைத் தொல்லியல் துறையினர் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரே நினைவு சின்னமாக ஆர்மா மலைக்குகை உள்ளது.

இந்நிலையில், ஆர்மா மலைக்குகையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சமீபத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்கள் இது போன்ற நினைவுச் சின்னங்களைக் காண்பதோடு அவற்றைப் பாதுகாத்திட அரசுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஓவியங்கள் குறித்து கருத்து தெரிவித்த தமிழகத் தொல்லியல் துறையின் மேனாள் உதவி இயக்குநர் முனைவர் அர. பூங்குன்றன், “இந்திய ஓவியக்கலை மரபில் உன்னத நிலையை அடைந்த ஓவியங்களை வட இந்தியாவில் அஜந்தா, எல்லோரா போன்ற குகைகளில் காணமுடிகின்றது. தமிழகத்தில் இதேபோன்ற ஓவிய மரபு பிற்காலங்களில் வந்த பல்லவர், பாண்டியர் மற்றும் சோழர்கள் காலங்களில் இருந்துள்ளது. இவை எண்ணிக்கையில் மிகக் குறைவு. இம்மரபில் வந்த ஓவியத்தின் மிச்சமான ஒன்று தான் ஆர்மாமலையில் உள்ள ஓவியங்கள்” என்றார்.

 
திருப்பத்தூர் ஆர்மா மலைக்குகை

”பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது”

மேலும், இங்குள்ள ஓவியங்களில் பெரும்பான்மை அழிந்த நிலையில் இருப்பதனால் ஓவியங்கள் குறித்து முழுமையாக அறிய முடியவில்லை என்றும் அளவில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பினும் வடிவமைப்பு மற்றும் அழகியல் செய்நேர்த்தியில் இங்குள்ள ஓவியங்கள் மிக முக்கியமான கலை வரலாற்றுத்தலமாகக் கருதப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த இடம் பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வந்து பார்ப்பதற்கு அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இருப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முதன்முதலில் 1976-ஆம் ஆண்டு தான் ஆர்மாமலை கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் பேராசிரியர் பிரபு வலியுறுத்துகிறார்.

ஓவியங்களின் சிறப்பு குறித்து பேசிய அவர், ”முற்றிலும் மூலிகை சாறு கொண்டு கி.பி. 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில் வரையப்பட்ட வண்ண ஓவியத்தால் தீட்டப்பட்ட படங்கள் உள்ளன. சமண சமயத்தில் மூலிகைகளைக் கொண்டு பல விதமான வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஆனால், இங்கு60% ஓவியங்கள் அழிந்துவிட்டன.

நாகரீக வளர்ச்சி அடைந்த பிறகும் பல்லவர் காலத்தைச் சார்ந்த 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிபி ஆறு மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் மூலிகைச் சாறுகளை கொண்டு பல்வேறு விதமான வர்ணங்களை வைத்து ஓவியங்கள் தீட்டப்பட்டு உள்ளதாக பேராசிரியர் பிரபு தெரிவித்தார்.

இங்கு சித்தன்னவாசலில் இருக்கக்கூடிய அனைத்து ஓவியங்களும் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

 
திருப்பத்தூர் ஆர்மா மலை

"டிஜிட்டல்மயமாக்க வேண்டும்"

அங்குள்ள வண்ணங்கள் அனைத்தையும் டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

’வேர்கள்’ அறக்கட்டளையின் நிறுவனரும் சமூக ஆர்வலருமான வடிவேலு சுப்பிரமணி பிபிசியிடம் கூறுகையில், “சுடாத செங்கற்களை கொண்டு எழுப்பப்பட்ட சுவர்கள் இங்குள்ளன. சுட்ட செங்கல்லை விட சுடாத செங்கல் வலிமையான சுவர்களைக் கொண்டு காணப்படுகிறது. இங்குள்ள ஓவியங்களின் அருமை தெரியாமல் சிதைக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுகின்றனர். அதனை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

இன்னொரு சித்தன்னவாசல்

ஆட்சியர் என்ன சொல்கிறார்?

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பிபிசியிடம் இதுகுறித்து பேசுகையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c2xye02l1jpo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.