Jump to content

விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
dengu-1-300x200.jpg

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான வாரத்தை விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

டெங்கு நோயாளர்களின் கணிசமான அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு பரவும் அதிக ஆபத்துள்ள 70 வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை அதிகளவில் முன்னெடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முப்படையினர், பொலிஸார், சுகாதார அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் புள்ளிவிபரத்தின் அடிப்படையில், கடந்த வருடத்தில் 88 ஆயிரத்து 398 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டனர். கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், டெங்கு நோயினால் கடந்த வருடத்தில் மாத்திரம் 58 பேர் உயிரிழந்தனர்.

https://thinakkural.lk/article/287067

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதல் அமுலுக்கு வருகிறது விசேட டெங்கு ஒழிப்பு வாரம் - சுகாதார அமைச்சு 

Published By: NANTHINI  07 JAN, 2024 | 09:53 AM

image

நாட்டில் டெங்கு நோய் பரவி வரும் சூழலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) தொடங்கி விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க அறிவித்துள்ளார். 

அதன் அடிப்படையில் 70 சுகாதார வைத்திய பிரிவுகளை உள்ளடக்கி டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என அனோஜா தீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். 

நாட்டில் டெங்கு பரவுவதற்கான சூழல் காரணிகளை நீக்குவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/173308

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாளையுட‌ன் ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் முடியுது..........................
    • இது ஏற்க்கனவே நான் எழுதிய கருத்து.அதை ஆட்டையை போட்ட கவி அவர்களை மென்மையாக கன்டிக்கிறேன்.😀
    • பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழ்த்தலைமைகள் சுய இலாப அரசியலை மேற்கொண்டதால் அவை எமது மக்களுக்கு சாபக்கேடான விடயங்களை ஏற்படுத்தியிருந்தன. பல தமிழ்த்தலைமைகள் எமது பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனா். இதுவே அவா்கள் தமது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கும் துணைபுாிகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயா் தமிழா்கள் நன்றி தொிவிக்க வேண்டும். ஏனெனில் யுத்தத்தினால் புலம்பெயா்ந்தவா்கள் இன்று பல நாடுகளில் நன்றாக இருக்கின்றாா்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே  இலங்கைக்கு இந்திய இராணுவத்தினரை அனுப்பி வைத்ததுடன், தெற்கில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். அதனை குழப்பியடித்து , தும்பு தடியால் கூட அதனை தொடமாட்டோம் என கூறி குழப்பங்களை உண்டு பண்ணினார்கள். அதன் பின் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். அண்மையில் பழைய நண்பர் சுரேஷ் பிரேமசந்திரன் உடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது,  அதன்போது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 இனை அமுல் படுத்தி இருந்தால் , இன்றைக்கு தமிழ் மக்கள் எங்கேயோ இருந்திருப்பார்கள் என கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதை போல் இருந்தது. எமது பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும். சர்வதேச நாடுகள் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்குமே தவிர எமது பிரச்சனைகளை தீர்க்க முன் வராது. இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்லதொரு சந்தர்ப்பம். அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். மக்கள் நலன் சார்ந்து யாரும் சிந்திக்காததால் தான் அதனை தவறவிட்டோம். ஜனாதிபதித் தேர்தலுக்காக தெற்கில் இருந்து பலரும் வடக்கிற்கு வந்து தமிழ் பிரதிநிதிகள் என சிலரை சந்திக்கின்றார்கள். அவர்களிடம் இவர்களும் அரைவாசியை தா  முக்கால் வாசியை தா என கேட்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்க்களிடம் கோருகிறார்கள். ஆட்சி அமைக்கப்பட்டதும் , ஆட்சியாளர்களுடன் கூடி குலாவிய பின்னர், இறுதியாக அடுத்த தேர்தல் நெருக்கும் நேரம் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என தமிழ் மக்களிடம் கூறுவார்கள்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1388164
    • இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதைத் தவிர்க்க இயலாது – தமிழக மீனவா்கள்! தமிழக மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவது தவிர்க்க இயலாது என தமிழகத்தின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு போதும் பாதிக்கும் நோக்கம் தமிழக மீனவர்களுக்கு கிடையாது எனவும் அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து சகோதர மனப்பான்மையுடனேயே தாம் செயற்படுவதாகவும் இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து இயந்திர மயமாக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்துள்ளார். எனினும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என வடக்கு மாகாண மீனவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் இந்த கருத்து மீனவர்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. உறுதியாகவும் இறுதியாகவும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு மற்றும் மீன்பிடியை தடுக்க வேண்டும் என வட மாகாண மீனவ கூட்டுறவு சம்மேளனங்களின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் நுழைவது திட்டமிட்ட ஒன்றல்ல என்றாலும் அதை தவிர்க்க முடியாமல் உள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்பரப்பு மிகவும் குறுகியது எனவும் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளமை வட மாகாண மீனவர்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. https://athavannews.com/2024/1388173
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.