Jump to content

டி20 உலகக் கோப்பைச் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வீரப் பையன்26 said:

ந‌ட‌ராஜ‌ன் தெரிவு செய்து இருக்க‌லாம்

2022 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில்
ந‌ட‌ராஜ‌னை தெரிவு செய்யாத‌து பிழை என்று முன்னாள் இந்திய‌ன் க‌ப்ட‌ன் சுனில் க‌காஸ்க‌ர் தெரிவித்து இருந்தார்
இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ட‌ராஜ‌ன் ந‌ல்லா தானே ப‌ந்து போடுகிறார்..............................

உந்த‌ இந்திய‌ அணி கோப்பை தூக்க‌ போவ‌து கிடையாது

2007க்கு பிற‌க்கு எத்த‌னை 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையை நட‌த்தி விட்டின‌ம் ஆனால் இந்தியா 1முறை தான் கோப்பை தூக்கின‌து.................................

இம்முறை மேற்கிந்திய, அமெரிக்காவில்தான் உலகக்கிண்ண்போட்டிகள் நடைபெறுகிறது.  இங்கு சில மைதானங்கள் (Guyana,Trinidad உட்பட) சுழல் பந்துக்கு ஏற்ற மைதானங்கள். இதனால் chahal, Kuldeep yadav போன்றவர்களையும், Jadeja, Axar Patel போன்ற சகலதுறை ஆட்டக்காரர்களை தெரிவு செய்திருக்கிறார்கள். இதனால் 3 வேகப்பந்தாளர்களை மட்டுமே தெரிவு செய்திருக்கிறார்கள்.  அத்துடன் Hardick pandiyaa ( வேகப்பந்துடன் துடுப்பாட்டமும் கூடிய சகலதுறை ஆட்டக்காரர்) வையும் தெரிவு செய்திருக்கிறார்கள் . 3 வேகப்பந்தளர்களாக Bumrah,Siraj,Arshdeep Singh தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்  . இவர்கள் 3 பேரும் பல போட்டிகள் வெளிநாடுகளில் விளையாடிய அனுபவசாலிகள். ஐபிஎல் போட்டிகளை வைத்து இம்முறை பல நாடுகள் வீரர்களை தெரிவு செய்யவில்லை .  இந்தியாவில் உள்ள மைதானங்களும் , மேற்கிந்தியா மைதானங்களும் வேறுபாடான இயல்புகள் கொண்டன . இதனால்தான் Fraser McGurk ஆஸ்திரேலியா அணியில் தெரிவு செய்யப்படவில்லை . டேவிட் வார்னரினை தெரிவு செய்திருக்கிறார்கள்  .  Marcus Stoinis, Glenn Maxwell, Cam Green , Mitch Marsh போன்ற சகலதுறை ஆட்டக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கியிருக்கிறார்கள்  .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

இம்முறை மேற்கிந்திய, அமெரிக்காவில்தான் உலகக்கிண்ண்போட்டிகள் நடைபெறுகிறது.  இங்கு சில மைதானங்கள் (Guyana,Trinidad உட்பட) சுழல் பந்துக்கு ஏற்ற மைதானங்கள். இதனால் chahal, Kuldeep yadav போன்றவர்களையும், Jadeja, Axar Patel போன்ற சகலதுறை ஆட்டக்காரர்களை தெரிவு செய்திருக்கிறார்கள். இதனால் 3 வேகப்பந்தாளர்களை மட்டுமே தெரிவு செய்திருக்கிறார்கள்.  அத்துடன் Hardick pandiyaa ( வேகப்பந்துடன் துடுப்பாட்டமும் கூடிய சகலதுறை ஆட்டக்காரர்) வையும் தெரிவு செய்திருக்கிறார்கள் . 3 வேகப்பந்தளர்களாக Bumrah,Siraj,Arshdeep Singh தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்  . இவர்கள் 3 பேரும் பல போட்டிகள் வெளிநாடுகளில் விளையாடிய அனுபவசாலிகள். ஐபிஎல் போட்டிகளை வைத்து இம்முறை பல நாடுகள் வீரர்களை தெரிவு செய்யவில்லை .  இந்தியாவில் உள்ள மைதானங்களும் , மேற்கிந்தியா மைதானங்களும் வேறுபாடான இயல்புகள் கொண்டன . இதனால்தான் Fraser McGurk ஆஸ்திரேலியா அணியில் தெரிவு செய்யப்படவில்லை . டேவிட் வார்னரினை தெரிவு செய்திருக்கிறார்கள்  .  Marcus Stoinis, Glenn Maxwell, Cam Green , Mitch Marsh போன்ற சகலதுறை ஆட்டக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கியிருக்கிறார்கள்  .

 

2007 , 50ஓவ‌ர்  உல‌க‌ கோப்பை க‌ர்விய‌ன் தீவில் தானே ந‌ட‌ந்த‌து அதில் இந்தியா முத‌ல் சுற்றில் வெளிய‌ போன‌வை

2010 , 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையும் அங்கு தான் ந‌டந்த‌து இந்தியா அதிலும்  பெரிசா சாதிக்க‌ வில்லை....................

அமெரிக்கா மைதான‌ங்க‌ள் ஒன்றும் புதுசா க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து கிடையாது வெஸ்வோல் மைதான‌ங்க‌ளை தான் கிரிக்கேட் மைதான‌ங்க‌ளா மாற்றி அமைச்சு இருக்கின‌ம்
அதை பார்த்தால் கிரிக்கேட் மைதான‌ம் என்று சொல்ல‌ முடியாது அப்ப‌டியான‌ மைதான‌ங்க‌ளில் சுழ‌ல் ப‌ந்துக்கு சும்மா அடிச்சாலே சிக்ஸ்சுக்கு போகும்............................க‌ர்விய‌ன் தீவில் உள்ள‌ ஒன்று அல்ல‌து இர‌ண்டு மைதான‌ங்க‌ள் தான் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌ம்
வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் அவ‌ங்க‌ட‌ தீவிவு மைதான‌த்தில் யார் ப‌ந்து போட்டாலும் அடிச்சு ஆடுவின‌ம்

சுனில் ந‌ர‌னை வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு அணியில் இம் முறை சேர்க்காட்டி அணிக்கு தான் பின்ன‌டைவு

இந்த‌ முறை கோப்பை தூக்க‌ அதிக‌ வாய்ப்பு வெஸ்சின்டீஸ்சுக்கு இருக்கு அல்ல‌து இங்லாந் , ம‌ற்றும் அவுஸ்ரேலியா..........................இந்தியா வீர‌ர்க‌ள்  எதிர் அணியின‌ரிட‌ம் முக்கிய‌மான‌ போட்டியில் தோத்து நாடு திரும்பு வின‌ம் இதை தான் அவை ப‌ல‌ வ‌ருட‌மாய் செய‌லில் காட்டின‌ம்............................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

2007 , 50ஓவ‌ர்  உல‌க‌ கோப்பை க‌ர்விய‌ன் தீவில் தானே ந‌ட‌ந்த‌து அதில் இந்தியா முத‌ல் சுற்றில் வெளிய‌ போன‌வை

2010 , 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையும் அங்கு தான் ந‌டந்த‌து இந்தியா அதிலும்  பெரிசா சாதிக்க‌ வில்லை....................

அமெரிக்கா மைதான‌ங்க‌ள் ஒன்றும் புதுசா க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து கிடையாது வெஸ்வோல் மைதான‌ங்க‌ளை தான் கிரிக்கேட் மைதான‌ங்க‌ளா மாற்றி அமைச்சு இருக்கின‌ம்
அதை பார்த்தால் கிரிக்கேட் மைதான‌ம் என்று சொல்ல‌ முடியாது அப்ப‌டியான‌ மைதான‌ங்க‌ளில் சுழ‌ல் ப‌ந்துக்கு சும்மா அடிச்சாலே சிக்ஸ்சுக்கு போகும்............................க‌ர்விய‌ன் தீவில் உள்ள‌ ஒன்று அல்ல‌து இர‌ண்டு மைதான‌ங்க‌ள் தான் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌ம்
வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் அவ‌ங்க‌ட‌ தீவிவு மைதான‌த்தில் யார் ப‌ந்து போட்டாலும் அடிச்சு ஆடுவின‌ம்

சுனில் ந‌ர‌னை வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு அணியில் இம் முறை சேர்க்காட்டி அணிக்கு தான் பின்ன‌டைவு

இந்த‌ முறை கோப்பை தூக்க‌ அதிக‌ வாய்ப்பு வெஸ்சின்டீஸ்சுக்கு இருக்கு அல்ல‌து இங்லாந் , ம‌ற்றும் அவுஸ்ரேலியா..........................இந்தியா வீர‌ர்க‌ள்  எதிர் அணியின‌ரிட‌ம் முக்கிய‌மான‌ போட்டியில் தோத்து நாடு திரும்பு வின‌ம் இதை தான் அவை ப‌ல‌ வ‌ருட‌மாய் செய‌லில் காட்டின‌ம்............................................................

நான் குறிப்பிட்ட சில மைதானங்களை தவிர மற்றையவை வேகப்பந்துக்கு சாதகமானவை. மேற்கிந்தியா தீவுகளின் மைதானங்கள் , நியூசிலாந்து மைதானங்கள் போல சிறியவை. இதனால் 6 ஒட்டங்களை அதிகளவு எதிர்ப்பார்க்கலாம். 

சுனில் நரேன் உலகக்கிண்ண்ப்போட்டியில் விளையாடமாட்டார் என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கந்தப்பு said:

நான் குறிப்பிட்ட சில மைதானங்களை தவிர மற்றையவை வேகப்பந்துக்கு சாதகமானவை. மேற்கிந்தியா தீவுகளின் மைதானங்கள் , நியூசிலாந்து மைதானங்கள் போல சிறியவை. இதனால் 6 ஒட்டங்களை அதிகளவு எதிர்ப்பார்க்கலாம். 

சுனில் நரேன் உலகக்கிண்ண்ப்போட்டியில் விளையாடமாட்டார் என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்

சுனில் ந‌ர‌ன் விளையாடாட்டி வெஸ்சின்டீஸ் அணி கோப்பை தூக்க‌ வாய்ப்பில்லை

 

2012 , 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை தூக்க‌ சுனில் ந‌ர‌ன் தான் முக்கிய‌ கார‌ண‌ம்.........................வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ளுக்கும் தேர்வுக்குழுவுக்கும் ஒத்து வ‌ராது

முர‌ன்க‌ள் தான் அதிக‌ம்....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

New York pitch installation underway ahead of T20 World Cup

Pitches arrive in New York one month out from the start of the ICC Men's T20 World Cup 2024.

 

A major milestone has been ticked off at Nassau County International Cricket Stadium ahead of June's ICC Men's T20 World Cup, with the successful delivery of the pitches that will be used at next month's event.

A total of 10 pitches arrived at the New York venue ahead of the first match at the ground between Sri Lanka and South Africa on 3 June, with work having already commenced on the installation of the pitches that have been prepared in Florida by Adelaide Oval Turf Solutions since the end of last year

 

Four of the 10 pitches will be prepared in the middle of the Nassau County International Cricket Stadium under the watchful eye of Adelaide Oval Head Curator Damian Hough, with the remaining six pitches to be laid at the neighbouring practice facilities.

A total of 20 semi-trailer trucks were used to transport the pitches from Florida to New York and Hough said there were no major hiccups with the delivery and everything was on track for the eight matches that will be held at the 34,000 seat stadium located at Eisenhower Park in Nassau County, east of Manhattan.

"We couldn't be happier," Hough said.

"Everything is going to plan, they (the pitches) are in real good condition and all of our benchmarks and measures that we take along the way are exceeding expectations."

Nine of the 20 teams at this year's T20 World Cup will play matches at the New York venue next month, with the most eagerly awaited contest at the ground coming on 9 June when arch-rivals India and Pakistan do battle in the next instalment of their ongoing rivalry.

Hosts USA, neighbours Canada, Ireland, South Africa, Sri Lanka, Netherlands and Bangladesh are the other teams that will feature at the venue that has been constructed for the tournament and Hough is expecting conditions at the ground to provide a good contest between bat and ball.

"We hope we have got a good T20 pitch, that has good pace, good bounce and (provides) value for shots," Hough said.

"You want the batters to be able to play shots all over the ground so that is our design and at the start our ambition was to produce pitches along those lines."

https://www.icc-cricket.com/news/new-york-pitch-installation-underway-ahead-of-t20-world-cup

 

இந்தப் போட்டி நடக்கும் இடம் எமது வீட்டிலிருந்து 10 மைல்கள் தொலைவிலேயே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

New York pitch installation underway ahead of T20 World Cup

Pitches arrive in New York one month out from the start of the ICC Men's T20 World Cup 2024.

 

A major milestone has been ticked off at Nassau County International Cricket Stadium ahead of June's ICC Men's T20 World Cup, with the successful delivery of the pitches that will be used at next month's event.

A total of 10 pitches arrived at the New York venue ahead of the first match at the ground between Sri Lanka and South Africa on 3 June, with work having already commenced on the installation of the pitches that have been prepared in Florida by Adelaide Oval Turf Solutions since the end of last year

 

Four of the 10 pitches will be prepared in the middle of the Nassau County International Cricket Stadium under the watchful eye of Adelaide Oval Head Curator Damian Hough, with the remaining six pitches to be laid at the neighbouring practice facilities.

A total of 20 semi-trailer trucks were used to transport the pitches from Florida to New York and Hough said there were no major hiccups with the delivery and everything was on track for the eight matches that will be held at the 34,000 seat stadium located at Eisenhower Park in Nassau County, east of Manhattan.

"We couldn't be happier," Hough said.

"Everything is going to plan, they (the pitches) are in real good condition and all of our benchmarks and measures that we take along the way are exceeding expectations."

Nine of the 20 teams at this year's T20 World Cup will play matches at the New York venue next month, with the most eagerly awaited contest at the ground coming on 9 June when arch-rivals India and Pakistan do battle in the next instalment of their ongoing rivalry.

Hosts USA, neighbours Canada, Ireland, South Africa, Sri Lanka, Netherlands and Bangladesh are the other teams that will feature at the venue that has been constructed for the tournament and Hough is expecting conditions at the ground to provide a good contest between bat and ball.

"We hope we have got a good T20 pitch, that has good pace, good bounce and (provides) value for shots," Hough said.

"You want the batters to be able to play shots all over the ground so that is our design and at the start our ambition was to produce pitches along those lines."

https://www.icc-cricket.com/news/new-york-pitch-installation-underway-ahead-of-t20-world-cup

 

இந்தப் போட்டி நடக்கும் இடம் எமது வீட்டிலிருந்து 10 மைல்கள் தொலைவிலேயே உள்ளது.

விளையாட்டை நேரில் போய் பார்க்கும் ஜ‌டியா இருக்கா.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, வீரப் பையன்26 said:

விளையாட்டை நேரில் போய் பார்க்கும் ஜ‌டியா இருக்கா.........................

காசு பணம் துட்டு

மணி மணி.

அந்தக் கிழமை நியூயோர்க் போகிறேன்.ரிக்கட் விலையைப் பார்த்தா ரொம்பவும் கூடுதலாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

காசு பணம் துட்டு

மணி மணி.

அந்தக் கிழமை நியூயோர்க் போகிறேன்.ரிக்கட் விலையைப் பார்த்தா ரொம்பவும் கூடுதலாக இருக்கிறது.

இப்ப‌ நீங்க‌ள் நீயூயோக்கில் இல்லையா.......................கிரிக்கேட் திக்கேட் மிஞ்சி போனால் 50அமெரிக்க‌ன் டொல‌ர் அப்ப‌டி தான் இருக்கும் வேறு மானில‌த்தில் நின்றால் நீங்க‌ள் சொல்வ‌து போல் விமா திக்கேட் விலை அதிக‌ம் தான்...............................

போய் பார்க்கும் ச‌ர்ந்த‌ப்ப‌ம் கிடைச்சா அன்ரியோட‌ போய் பாருங்கோ தொலைக் காட்சியில் பார்ப்ப‌துக்கும் நேரில் விளையாட்டை பார்ப்ப‌துக்கு நிறைய‌ வித்தியாச‌ம் தெரியும்..................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு ஸ்பின்னர்களை எதற்கு எடுத்திருக்கிறீர்கள்?
அணிச்சேர்க்கை பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனெனில், எதிரணிக்காரர்கள் எல்லாருமே இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை கவனித்துக் கொண்டிருப்பார்கள். நான் நான்கு ஸ்பின்னர்கள் வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தோம். காலை 10 அல்லது 10:30 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என நினைக்கிறேன். தொழில்நுட்பரீதியாக இதில் சில காரணங்களும் இருக்கிறது. என்னால் இப்போது அதைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாது. ஆனால், நான்கு ஸ்பின்னர்களை அழைத்து செல்வதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸில் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் உங்களை சந்திக்கும்போது அதைப்பற்றி விரிவாக பேசுகிறேன்.
- ரோஹித் சர்மா
- விகடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடராஜன் உள்ளிட்ட தமிழ்நாட்டு வீரர்கள் புறக்கணிப்பா? இந்திய கிரிக்கெட் அணி தேர்வில் என்ன நடக்கிறது?

நடராஜன்

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிவகுமார் ராஜகுலம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அதிர்ச்சி... ஆச்சர்யம்... உலகக்கோப்பைக்கு 140 கோடி இந்தியர்களின் கனவுகளை சுமந்து செல்லும் அணி அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் உலகில் தவறாமல் பேசப்படும் சொற்கள் இவை. எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

அதுவும், நாடெங்கும் ஐபிஎல் கிரிக்கெட் ஜூரம் உச்சத்தில் இருக்கும் வேளையில் டி20 அணி அறிவிப்பு வெளியாகியிருப்பது கூடுதல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. கிரிக்கெட் நேரலையில் பங்கேற்கும் வர்ணனையாளர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் உலகக்கோப்பை இந்திய அணித் தேர்வு குறித்து அலசி, ஆராய்ந்து வரும் வேளையில் சமூக ஊடகங்களில் ரசிகர்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணியில் தங்களது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இடம் பெறாதது வருத்தம் தருவதாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வரும் நடராஜனுக்கு வாய்ப்பு தரப்படாதது குறித்து அவர்கள் தங்களது அதிருப்தியை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்தின் கருத்து அதற்கு உரம் சேர்ப்பதாக அமைந்தது. தமிழ்நாட்டு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் பத்ரிநாத்தின் பேச்சைக் குறிப்பிட்டு, இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர் ஒருவர் கூட இடம் பெறாதது குறித்த ஏமாற்றத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்த ரசிகர்களின் சமூக ஊடக விமர்சனங்கள் இன்னும் ஓயாத நிலையில், அந்த அணியை தேர்வு செய்த பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கரும், அணி கேப்டன் ரோகித் சர்மாவும் செய்தியாளர் சந்திப்பில் சில விளக்கங்களை அளித்துள்ளனர். இந்திய அணி தேர்வில் அவர்கள் கடைபிடித்த அணுகுமுறை என்ன? உலகக்கோப்பையை வெல்வதற்கான எந்தெந்த உத்திகளின் அடிப்படையில் இந்திய அணியை அவர்கள் தேர்வு செய்தார்கள்? இந்திய அணி தேர்வில், குறிப்பாக நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காததில் ரசிகர்கள் விமர்சிப்பதைப் போல அரசியல் விளையாடியுள்ளதா? இந்திய அணி தேர்வு எவ்வாறு நடக்கிறது? விரிவாகப் பார்க்கலாம்.

 
நடராஜன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி

வரும் ஜூன் 2-ம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றிருந்தனர். ரோகித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் டாப் ஆர்டர் பேட்டிங்கில் இடம் பிடித்திருந்தனர். ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன் ஆகிய 2 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்களுடன், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்துவீச்சை கவனித்துக் கொள்ள ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருடன் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகிய இருவரும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக வாய்ப்பு பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் குறைக்கப்பட்டு, கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் மாற்று வீரர்களாக, சுப்மான் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 
ரோகித் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடராஜன் சேர்க்கப்படாததால் ரசிகர்கள் அதிருப்தி

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட அந்த விநாடியே, இந்தியா முழுவதும் அதுகுறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. அதுவும் ஐபிஎல் கிரிக்கெட் வேளையில் அறிவிப்பு வெளியானதால் அது இன்னும் கூடுதல் கவனத்தை பெற்றுவிட்டது. சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் இந்திய அணி தேர்வு குறித்த தங்களது பார்வையை பதிவிடத் தொடங்கிவிட்டனர்.

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே “நடராஜன்” என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

பத்ரிநாத் கூறியது என்ன?

காட்சி ஊடகங்களும், யூடியூப் சேனல்களும் தங்கள் பங்கிற்கு கிரிக்கெட் சேவையாற்றின. அவற்றில் தோன்றிய கிரிக்கெட் நிபுணர்கள் இந்திய அணியில் தேர்வான வீரர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்து வாய்ப்பு கிடைக்காமல் போன வீரர்களின் ஆட்டங்கள் குறித்த புள்ளிவிவரங்களுடன் தங்களது விமர்சனப் பார்வைகளை முன்வைத்தனர். அந்த வரிசையில், டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரரும், இன்றைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சுப்ரமணியம் பத்ரிநாத்தின் கருத்து, சமூக ஊடகங்களில் நடராஜனுக்காக களமாடிய தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலித்தது.

"இந்திய அணியில் நடராஜன் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்திய அணியில் இடம் பிடிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் ஏன் 2 மடங்கு சிறப்பாக விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது. தனிப்பட்ட முறையில் நானும் இதுபோன்ற சூழலை எதிர்கொண்டிருக்கிறேன். 500 விக்கெட் எடுத்த அஸ்வினின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். 65 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள முரளிவிஜய் இந்தியாவின் தலைசிறந்த 5 சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவர். அவர் 2 இன்னிங்ஸ் சிறப்பாக ஆடாவிட்டால் கேள்வி எழுப்புகிறார்கள், " என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும் நடராஜனுக்கு ஆதரவாக பத்ரிநாத் கருத்துப் பதிவிட்டிருந்தார். "அர்ஷ்தீப் அல்லது கலீல் அகமதுவுக்கு மேலாக நடராஜன் பெயர் இல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

ஐபிஎல் போட்டிகளில் நடராஜன் செயல்பாடு எப்படி?

நடராஜன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்த அதிருப்தியில் இருந்த தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் குமுறலை பத்ரிநாத்தின் கருத்து இன்னும் அதிகப்படுத்திவிட்டது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு நடராஜனின் செயல்பாட்டை பாராட்டு சமூக ஊடகங்களில் அவர்கள் எழுதத் தொடங்கிவிட்டார்கள்.

நாமும் ஐபிஎல் இணையதளத்தில் வீரர்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்தோம். அதன்படி பார்த்தோமானால், இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது நடராஜன், சன்ரைசர்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் ஆடி 13 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவர் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

அதேநேரத்தில், உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வாகியுள்ள முகமது சிராஜ் 9 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். ஓவருக்கு சராசரியாக 9.50 ரன்களை அவர் விட்டுக் கொடுத்துள்ளார். அணியில் தேர்வாகியுள்ள மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எகானமி ரேட் 9.68.

ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே நடராஜனை விட சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் என்று ஐ.பி.எல். புள்ளிவிவரம் கூறியது. அவர் 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கையை 15ஆக உயர்த்திக் கொண்டுள்ள நடராஜன், அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளருக்கான நீலத் தொப்பியை வசப்படுத்தியுள்ளார்.

 
ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹர்திக் பாண்டியா தேர்வு பற்றி ரசிகர்கள் கேள்வி

நடப்பு ஐ.பிஎல். தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் சஞ்சு சாம்ஸன், ஷிவம் துபே, சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். தற்போதைய இந்திய அணியில் சிறந்த கிளாசிக் பேட்ஸ்மேனாக கருதப்படும் லோகேஷ் ராகுல், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட ரிஷப் பந்த், சாம்ஸன் ஆகியோருடனான போட்டியில் பின்தங்கியுள்ளார். நடு வரிசையில் அதிரடி காட்டும் ரிங்கு சிங்கிற்கு மாற்று வீரராக மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் காயமடைந்து வெளியேறிய பிறகு இன்னும் ஒரு சர்வதேச போட்டியில் கூட ஆடாத, நடப்பு ஐ,பி.எல். தொடரிலும் பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன்சி என்று எதிலுமே பெரிதாக ஜொலிக்காத ஹர்திக் பாண்டியாவுக்கு அணியில் இடம் கிடைத்ததுடன், துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் புருவத்தை உயரச் செய்துள்ளது. பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவும் கூட, ஹர்திக் பாண்டியா தேர்வு குறித்த தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.

"மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியா மீது தேர்வுக்குழு வைத்துள்ள நம்பிக்கையையே இது காட்டுகிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

தமிழ்நாடு அமைச்சர் கருத்து

அதேநேரத்தில், நடப்பு ஐ.பிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது அதிர்ச்சி அளிப்பதாகவே ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். கிரிக்கெட் வர்ணனையாளர்கள், நிபுணர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு அமைச்சர் ஒருவருமே இதற்கு நேரடியாக கருத்துப் பகிர்ந்தார்.

தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சரான டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "இது விரிவாக விவாதிக்கப்படுவது சிறப்பான ஒன்று. தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு பலமுறை அவர்களுக்குரிய இடத்தைக் கொடுக்காமல் டெல்லி மறுத்துள்ளது. இது சமீப காலமாக அதிக அளவில் நடக்கிறது. இது ஆட்சிக்கெல்லாம் அப்பாற்பட்டது. பல விளையாட்டுகளிலும் டெல்லி இவ்வாறுதான் குறுகிய பார்வையுடன் செயல்படுகிறது. தென் மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த திறன் மிக்க விளையாட்டு வீரர்கள் குறித்து டெல்லி பெரும்பாலான நேரங்களில் பாராமுகமாகவே இருக்கிறது." என்று குறிப்பிட்டதுடன், பத்ரிநாத் தனது மனதில் பட்டதை பேசியதற்காக பாராட்டியும் இருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

"நடராஜனை தேர்வு செய்திருக்க வேண்டும்"

ஹர்திக் பாண்டியா தேர்வு, நடராஜனுக்கு அணியில் இடம் கிடைக்காதது, பத்ரிநாத் கருத்து மற்றும் ரசிகர்களின் விமர்சனம் குறித்து விளையாட்டு விமர்சகர் சுமந்த் சி.ராமன், பிபிசி தமிழிடம் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

பத்ரிநாத் ஆதங்கம் குறித்துக் கேட்ட போது, "பத்ரிநாத்தின் கருத்தை ஓரளவு ஏற்றுக் கொள்லாம். ஆனால், அத்துடன் அப்படியே உடன்பட முடியாது. தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கும் நடராஜனை இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். யார்க்கர் வீசுவதில் வல்லவரான நடராஜன், டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுகிறார். அவர் இந்திய அணிக்கு சிறந்த தேர்வாக இருந்திருப்பார்.

பும்ரா அல்லது முகமது சிராஜூக்குப் பதிலாக நடராஜனை சேர்க்க வேண்டும் என்று கூறவில்லை. அதற்கு அடுத்த இடத்தை நடராஜனுக்கு வழங்கி இருக்கலாம். அர்ஷ்தீப், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோரில் ஒருவருக்குப் பதிலாக நடராஜன் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கலாம்" என்றார்.

 
ரோகித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி தேர்வு எப்படி நடக்கிறது?

இந்திய அணியில் இடம் பெற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் 2 மடங்கு சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது என்ற பத்ரிநாத் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "அப்படி எல்லாம் சொல்ல முடியாது. சமீபத்திய ஆணடுகளில் இந்திய அணிக்காக முரளி விஜய், அஸ்வின், நடராஜன், வருண் சக்கரவர்த்தி, சாய் சுதர்சன் என பல வீரர்கள் விளையாடியுள்ளனர். அடுத்தடுத்து வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒரு காலத்தில் இந்திய அணியில் மும்பை, கர்நாடகா, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களே அதிகம் இடம் பிடித்து வந்தனர். அதுவே, சமீப காலமாக மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பிடிக்கின்றனர். தற்போதைய அணியிலும் கூட 8 அல்லது 9 வீரர்கள் மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்." என்றார் சுமந்த் சி.ராமன்.

அப்படி என்றால் வீரர்கள் தேர்வில் அரசியல் இருக்கிறது என்ற ரசிகர்களின் விமர்சனம் உண்மைதானா? என்று கேள்வி எழுப்பிய போது, "அது அப்படி அல்ல. இந்திய அணி தேர்வாளர்கள் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள கிளப்களுக்கும், அகாடமிகளுக்கும் அடிக்கடி செல்வார்கள். அங்கே, வீரர்களின் திறமையை நேரில் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. அதுதவிர, தேர்வாளர்களுடன் அறிமுகமாகி சில வீரர்கள் ஓரளவு பரிச்சயத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். சில வீரர்கள் தங்களது திறமையால் தேர்வாளர்களை நேரடியாக கவர்வதும் உண்டு.

அணி தேர்வு என்பது வெறும் ரன்கள், விக்கெட்டுகள் அடிப்படையில் மட்டும் நடக்காது. அணியில் உத்தி சார்ந்து சில தேவைகள் எழும் போது, திறமையான ஆட்டத்தால் நேரில் கவர்ந்த அல்லது பரிச்சயமான வீரர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்று தேர்வாளர்கள் கருதும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும். எல்லோரும் மனிதர்கள் தானே. புள்ளிவிவரங்களைக் காட்டிலும் நேரடி சந்திப்புகளும், திறமையால் ஏற்பட்ட ஈரப்பும் எப்போதும் அவர்கள் மனதில் இருக்கும் தானே. இதுவே, மும்பை மற்றும் டெல்லி வீரர்களுக்கு அனுகூலமானதாக இருக்கிறது. நான் சொல்ல வருவது மும்பை மற்றும் டெல்லியில் வசிக்கும் வீரர்களை. ரஞ்சி, ஐபிஎல் போன்ற உள்நாட்டு தொடர்களில் அவர்கள் வெவ்வேறு அணிகளுக்கு விளையாடுபவர்களாக இருக்கலாம்." என்று கூறினார்.

 
ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஹர்திக் பாண்டியா தேர்வு ஏன்?"

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு நாடெங்கும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாக இருக்கும் நிலையில், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரும், கேப்டன் ரோகித் சர்மாவும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எதிர்பார்க்கப்பட்டபடியே ஹர்திக் பாண்டியா தேர்வு குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். சர்வதேச போட்டிகளில் கடந்த அக்டோபருக்குப் பிறகு விளையாடாத, தற்போது நல்ல ஃபார்மிலும் இல்லாத ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்தது ஏன்?அவரை துணை கேப்டனாக நியமித்தது ஏன்? என்பனவற்றை நியாயப்படுத்த இருவருக்குமே சற்று நேரம் பிடித்தது.

"ஹர்திக் பாண்டியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளார்" என்ற அகார்கர், "மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடுகிறார். உலகக்கோப்பையில் எங்களது முதல் போட்டியில் ஆட இன்னும் ஒரு மாதத்திற்கும் அதிக காலம் உள்ளது. அதற்கு அவர் தனது பார்மை மீட்டுவிடுவார்" என்று குறிப்பிட்டார். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் போது, இந்திய அணிக்கு ஹர்திக் சேர்க்கும் வலிமையை, இப்போதைய நிலையில் குறிப்பாக பந்துவீச்சில் வேறு யாரும் தர முடியாது. அவரது உடல் தகுதி மிக முக்கியமானது. ஐ.பிஎல். இதுவரையிலும் அவருக்கு சிறப்பானதாகவே இருக்கிறது." என்று அகார்கர் கூறினார்.

அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழக வீரர்களில் யார் பெயர் பரிசீலிக்கப்பட்டது?

பந்துவீச்சு கூட்டணி தேர்வு குறித்துப் பேசிய ரோகித் சர்மா, "4 சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்துவிச்சாளகள் மற்றும் ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும் என்று விரும்பினேன். சுழற்பந்துவீச்சில் குல்தீப், சாஹல் ஆகியோருடன் ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய ஆல்ரவுண்டர்கள் பலம் சேர்ப்பார்கள். எதிரணியைப் பொருத்து ஆடும் 11 வீரர்களை இறுதி செய்வோம்" என்றார்.

இந்திய அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருந்தாலும் அவர்களில் ஒருவர் கூட ஆஃப் ஸ்பின்னர் இல்லை. அனைவருமே இடது கை பந்துவீச்சாளர்கள். ஆகவே ஆஃப் ஸ்பின்னரை ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த ரோகித், அதுகுறித்து அணி நிர்வாகம் நிறைய விவாதித்ததாக கூறினார்.

"துரதிர்ஷ்டவசமாக அதில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறவில்லை. அவர் சமீப காலமாக அதிக போட்டிகள் விளையாடவில்லை. ஆகவே, அஸ்வினா அல்லது அக்ஸர் படேலா என்பதாகவே விவாதம் இருந்தது. அஸ்வின் நீண்ட காலமாக சர்வதேச டி20 கிரிக்கெட் ஆடவில்லை. அதேநேரத்தில், கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 5 போட்டிகளில் விளையாடிய போது அக்ஸர் படேல் நல்ல ஃபார்மில் இருந்தார். அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அத்துடன், பேட்டிங்கிலும் நடு வரிசையில் இடது கை பேட்ஸ்மேனை களமிறங்க விரும்புகையில் அதற்கான சிறந்த தெரிவாக அக்ஸர் படேல் இருப்பார்" என்று கூறினார்.

அதேபோல், வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவும், ஷிவம் துபேவும் பந்துவீச்சிலும் அணிக்கு வலுசேர்ப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக ரோகித் சர்மா தெரிவித்தார்.

 
அக்ஸர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் ஏன்?

வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கக் கூடிய டி20 உலகக்கோப்பைக்கு 4 சுழற்பந்துவீச்சாளர்கள் ஏன் என்ற கேள்வி இந்திய அணி அறிவிக்கப்பட்டது முதலே இருந்து வருகிறது. நடராஜனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பத்ரிநாத் கூட, 4 சுழற்பந்துவீச்சாளர்கள் எதற்கு என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதே கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்த போது பதிலளித்த ரோகித் சர்மா, "அதுதொடர்பாக விரிவான தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் அனைத்து எதிரணி கேப்டன்களும் இதனை கேட்பார்கள். அதனால் சுருக்கமாக பதிலளிக்கிறேன். 4 சுழற்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன். அங்கே நிறைய போட்டிகள் விளையாடியுள்ளோம். அங்குள்ள சூழல் எங்களுக்கு நன்றாக தெரியும். போட்டிகள் காலை 10 அல்லது 10.30 மணிக்கு தொடங்கவுள்ளன. அதில் டெக்னிக்கலாக சில விஷயங்கள் உள்ளன. வெஸ்ட் இண்டீசில் எனது முதல் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கூடுதல் விவரங்களை பகிர்ந்து கொள்வேன். 4 சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்ததற்கு காரணம் உள்ளது. அதனை அங்கே நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் நிச்சயம் கூறுவேன்." என்று தெரிவித்தார்.

டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 2 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. அதில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வரும் 21-ம் தேதி அமெரிக்கா புறப்படுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி நியூயார்க் நகரில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cljd0rgdk4go

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி ரி20 உலகக் கிண்ண மத்தியஸ்தர் குழாத்தில் இலங்கையின் மடுகல்லே, தர்மசேன

Published By: VISHNU  03 MAY, 2024 | 06:40 PM

image

(நெவில் அன்தனி)

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு ஐசிசியினால் நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்கள் குழாத்தில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்லே, குமார் தர்மசேன ஆகியோர் அடங்குகின்றனர்.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.

ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மத்தியஸ்தம் வகிக்க 20 கள மத்தியஸ்தர்களும் 6 போட்டி தீர்ப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வருடாந்த ஐசிசி விருதுகளில் 2023க்கான வருடத்தின் அதிசிறந்த மத்தியஸ்தருக்கான டேவிட் ஷெப்பர்ட் விருதை வென்ற ரிச்சர்ட் இலிங்வேத், இலங்கையின் குமார் தர்மசேன, நியூஸிலாந்தின் கிறிஸ் கஃபானி, அவுஸ்திரேலியாவின் போல் ரைஃபல் ஆகியோரும் மத்தியஸ்தர்கள் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

இவர்கள் நால்வரும் அவுஸ்திரேலியாவில் 2022இல் நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கள மற்றும் 3ஆவது, தொலைக்காட்சி மத்தியஸ்தர்களாக கடமையாற்றி இருந்தனர்.

இதேவேளை ஐசிசி ரி20 உலகக் கிண்ண போட்டிக்கு நியமிக்கப்பட்டுள்ள 6 தீர்ப்பாளர்களில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்லேயும் ஒருவராவார்.

அவர், இருபாலாருக்குமான சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 780 போட்டிகளில் தீர்ப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

2022 ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் தீர்ப்பாளராக ரஞ்சன் மடுகல்லே கடமையாற்றி இருந்தார்.

ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் மத்தியஸ்தர்களாக கிறிஸ் ப்றவுண், குமார் தர்மசேன, கிறிஸ் கஃபானி, மைக்கல் கோ, ஏட்றியன் ஹோல்ட்ஸ்டிக், ரிச்சர்ட் இலிங்வேர்த், அலாஹுடின் பலேக்கர். ரிச்சர்ட் கெட்ல்பறோ, ஜெயராமன் மதனகோபால், நிட்டின் மேனன், சாம் நோகாஜ்ஸ்கி, அஷான் ராஸா, ரஷித் ராஸா, போல் ரைஃபல், லெங்டன் ரூசியர், ஷஹித் சய்க்காத், ரொட்னி டக்கர், அலெக்ஸ் வாஃப், ஜோயல் வில்சன், அசிப் யாக்கூப் ஆகியோர் கடமையாற்றவுள்ளனர்.

தீர்ப்பாளர்களாக  டேவிட் பூன், ஜெஃப் குறோ, ரஞ்சன் மடுகல்லே, அண்டி பைக்ரொவ்ட், ரிச்சி ரிச்சர்ட்சன், ஜவகல் ஸ்ரீநாத்  ஆகியோர் கடமையாற்றவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/182615

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணம் : அறிமுக அணியை கனடா குழாம் அறிவிப்பு : இலங்கையின் புபுது தசநாயக்க பயிற்றுநர்

04 MAY, 2024 | 10:13 AM
image
 

(நெவில் அன்தனி)

சிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக பங்குபற்றும் கனடா, 15 வீரர்களைக் கொண்ட பலம் வாய்ந்த கிரிக்கெட் குழாத்தை அறிவித்துள்ளது.

download__2_.png

சாத் பின் ஸபார் அணித் தலைவராக பெயரிடப்பட்டுள்ளதுடன் அனுபவம் வாய்ந்த வீரர்கள் கனடா கிரிக்கெட் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் டலாசில் எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இடம்பெறுகின்றன.

பம்பலப்பிட்டி புனித பேதுருவானர் கல்லூரியின் பழைய மாணவரும் கனடாவுக்காக ரி20 அணியில் 2019முதல் விளையாடி வருபவருமான 6 அடி உயரமான ஸ்ரீமன்த ஏட்றியன் விஜேரத்ன உலகக் கிண்ண அணியில் இடம்பெறும் வாய்ப்பை துரதிர்ஷ்டவசமாக இழந்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்க அணியின் தலைமைப் பயிற்றுநராக இலங்கையின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான புபுது தசநாயக்க செயற்படுகிறார்.

download__1_.png

கனடா குழாம்

சாத் பின் ஸபார் (தலைவர்), ஆரோன் ஜோன்சன், டிலொன் ஹேய்லிகர், டில்ப்ரீத் பஜ்வா, ஹார்ஷ் தக்கர், ஜெரெமி கோர்டன், ஜுனைத் சித்திக்கி, கலீம் சானா, கன்வர்பால் தத்குர், நவ்னீத் தாலிவல், நிக்கலஸ் கேட்டன், பர்காத் சிங், ரவிந்தர்பால் சிங், ரய்யன்கன் பத்தான், ஷ்ரேயாஸ் மோவா.

மாற்றுவீரர்கள்: தஜிந்தர் சிங், ஆதித்யா வரதராஜன், அம்மார் காலித், ஜட்டிந்தர் மதாரு, பர்வீன் குமார்.

download.png

https://www.virakesari.lk/article/182637

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்சின்டீஸ் அணியிட‌ம் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை

 

அதிர‌டியா அடிச்சு ஆட‌க் கூடிய வீர‌ர்கள் ப‌ல‌ர் இருக்கின‌ம்

ப‌ந்து போட‌ ந‌ல்ல‌ வீர‌ர்கள் இல்லை 

ரம்பவுல் எப்படி அணிய‌ வ‌ழி ந‌ட‌த்துகிறார் என்று பாப்போம்......................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தூதுவரை சந்தித்தனர் ரி-20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் இலங்கை வீரர்கள்

06 MAY, 2024 | 08:48 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்கா பயணிப்பதற்கு முன்னர் இலங்கை அணியினரை அமெரிக்க தூதரகம் உபசரித்துள்ளது.

'எக்ஸ்'இல் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், 'ஐக்கிய அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும்  இலங்கையின் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியினரை அமெரிக்க தூதரகத்தில் நாங்கள் வரவேற்றோம். ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களுக்கு இந்த அணி செல்வது விளையாட்டுத்துறை இராஜதந்திரத்திற்கு முக்கியமான சந்தர்ப்பமாக அமைகிறது. அவர்கள் தங்கள் ஆற்றல்கள் மற்றும் ஆர்வத்தின் மூலம் ஐக்கிய அமெரிக்கா முழுவதும் உள்ள இரசிகர்களை ஈர்ப்பார்கள் என்பது உறுதி' என குறிப்பிட்டுள்ளார்.

வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலன்க, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, குசல் பெரேரா, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, பெத்தும் நிஸ்ஸங்க, மதீஷ பத்திரண, சதீர சமரவிக்ரம, பிரமோத் மதுஷான், துனித் வெல்லாலகே, அகில தனஞ்சய, பானுக ராஜபக்ச, ஜெவ்ரி வெண்டர்சே, நுவன் துஷார, சாமிக்க கருணாரத்ன, து ன்மந்த சமீர, நிரோஷன் டிக்வெல்ல, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரை அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் சந்தித்து உரையாடினார்.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை கூட்டாக நடைபெறவுள்ளது.

sri_lankan_cricketers_at_the_us_embassy.

sri_lankan_cricketers_at_the_us_embassy.

அமெரிக்காவில் 3 மைதானங்களில் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ப்ளோரிடா, லவ்டர்ஹில் சென்ட்ரல் ப்ரோவார்ட் ரீஜினல் பார்க் விளையாட்டரங்கு, டெக்சாஸ் க்ராண்ட் ப்ரெய்ரி விளையாட்டரங்கு, நியூ யோர்க, ஈஸ்ட் மெடா நசவ் கன்ட்றி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய 3 விளையாட்டரங்குகளே ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அமெரிக்க மைதானங்களாகும்.

ரி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. பெரும்பாலும் இந்த வாரத்திற்குள் 15 வீரர்களைக் கொண்ட இறுதிக் குழாத்தை உப்புல் தரங்க தலைமையிலான இலங்கை அணித் தெரிவுக் குழுவினர் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/182844

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அமெரிக்க தூதுவரை சந்தித்தனர் ரி-20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் இலங்கை வீரர்கள்

 

வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலன்க, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, குசல் பெரேரா, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, பெத்தும் நிஸ்ஸங்க, மதீஷ பத்திரண, சதீர சமரவிக்ரம, பிரமோத் மதுஷான், துனித் வெல்லாலகே, அகில தனஞ்சய, பானுக ராஜபக்ச, ஜெவ்ரி வெண்டர்சே, நுவன் துஷார, சாமிக்க கருணாரத்ன, து ன்மந்த சமீர, நிரோஷன் டிக்வெல்ல, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரை அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் சந்தித்து உரையாடினார்.

அமெரிக்கா தூதுவரை  சந்தித்தவர்களில் விஜயகாந்த், நுவான் துசாரா, தீக்சனா போன்றவர்களின் பெயர்களும் இருக்கிறது .  ஆனால் இவர்கள் இந்தியாவில்  ஐபிஎல் விளையாடுவதற்காக இருக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திர வீரர்களைக் கொண்ட ரி20 உலகக் கிண்ண இலங்கை குழாம் : பயணிக்கும் பதில் விரராக வியாஸ்காந்த்

Published By: VISHNU    09 MAY, 2024 | 07:53 PM

image

(நெவில் அன்தனி)

இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு நட்சத்திர வீரர்களைக் கொண்ட பலம்வாய்ந்த கிரிக்கெட் குழாத்தை இலங்கை பெயரிட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கு சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை குழாத்தில் அனுபவசாலியும் முன்னாள் தலைவருமான ஏஞ்சலோ மெத்யூஸும் இடம்பெறுகிறார்.

ஏஞ்சலோ மெத்யூஸ் தனது 6ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடவுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

மூன்று வருடங்களாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த மெத்யூஸ் இந்த வருட முற்பகுதியிலேயே ரி20 அணிக்கு மீள அழைக்கப்பட்டிருந்தார்.

யாழ். மைந்தன் விஜயகாந்த் வியாஸ்காந்த் பயணிக்கும் பதில் வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை அணியில் தலைமைத்துவ அனுபவம் மிக்க வீரர்கள் இடம்பெறுவது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைகிறது.

ஏஞ்சலோ மெத்யூஸுடன் முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க, ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவர் குசல் மெண்டிஸ், டெஸ்ட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகியோரும் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை குழாம்

வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலன்க (உதவித் தலைவர்), குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, கமிந்து மெணடிஸ், சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மன்த சமீர, நுவன் துஷார, மதீஷ பத்திரண, டில்ஷான் மதுஷன்க.

பயணிக்கும் பதில் வீரர்கள்: அசித்த பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக்க ராஜபக்ச, ஜனித் லியனகே.

https://www.virakesari.lk/article/183093

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ உல‌க‌ கோப்பைக்கு நீயூயோக்கில் அமைக்க‌ப் ப‌ட்ட‌ புது மைதான‌ம் மிக‌ அழ‌காய் இருக்கு...........................

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம்

25 MAY, 2024 | 03:26 PM
image
 

(நெவில் அன்தனி)

வுஸ்திரேலியாவில் கடைசியாக 2022இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பாகிஸ்தான், இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்தை அறிவித்துள்ளது.

இந்த வருட முற்பகுதியில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் அணிகளின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட பாபர் அஸாம் உலகக் கிண்ண அணிக்கு தலைவராக தொடர்ந்து செயற்படுவார்.

download.png

சில காலம் காயம் காரணமாக ஓய்வுபெற்றுவந்த 30 வயதான ஹரிஸ் ரவூப் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

'இது ஒரு மிகத் திறமையான, சம பலம் கொண்ட அணியாகும். அனுபவசாலிகளும் இளையவர்களும் அணியில் இடம்பெறுகின்றனர். சில காலமாக அவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடி வருகின்றர். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர்' என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்ரார் அஹ்மத், அஸாம் கான், மொஹமத் அபாஸ் அப்றிடி, சய்ம் அயுப், உஸ்மான் கான் ஆகியோர் ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக விளையாடவுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலானவர்கள் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும்   சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகின்றனர்.

ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஏ குழுவில் இந்தியா, அயர்லாந்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் இடம்பெறுகிறது.

பாகிஸ்தான் தனது முதலாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை டலாஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி எதிர்த்தாடும்.

பாகிஸ்தான் குழாம்

துடுப்பாட்ட வீரர்கள்: பாபர் அஸாம் (தலைவர்), அஸாம் கான், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், மொஹமத் ரிஸ்வான், சய்ம் அயுப், உஸ்மான் கான்.

சகலதுறை வீரர்கள்: இமாத் வசிம், ஷதாப் கான்.

பந்துவீச்சாளர்கள்: அபாஸ் அப்றிடி, அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹமத் அமிர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி.

download__1_.jpg

https://www.virakesari.lk/article/184462

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடுத‌லா அணிக‌ள் க‌ர்விய‌ன் தீவுக்கு ம‌ற்றும் அமெரிக்காவுக்கு போய் விட்டின‌ம்

ஆனால் இங்லாந் அணியும் பாக்கிஸ்தான் அணியும் 20 ஒவ‌ர் தொட‌ர் விளையாடுகின‌ம் இங்லாந்தில்...................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: அட்டவணை, அணிகள் உள்பட அவசியம் அறியவேண்டிய முக்கிய தகவல்கள்

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜான்வி மூலே
  • பதவி, பிபிசி மராத்தி
  • 29 மே 2024

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை விரைவில் தொடங்கவுள்ளது, இந்த முறை அமெரிக்காவிலும் சில போட்டிகள் நடைபெறவுள்ளன. 2024 ஜூன் 1 முதல் 29 வரை நடைபெற உள்ள இந்தப் போட்டிகளை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து நடத்துகின்றன.

இது மார்கியூ கிரிக்கெட் போட்டியின் ஒன்பதாவது பதிப்பு. அது மட்டுமல்லாது 20 அணிகளைக் கொண்ட மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி.

இந்தப் போட்டியைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. போட்டிகள் எப்போது, எங்கு நடக்கின்றன, இந்தியா எங்கு விளையாடும் என்பன போன்ற தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

 

டி20 உலகக்கோப்பையின் வழிமுறை மற்றும் குழுக்கள்

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டி20 உலகக் கோப்பையுடன் அமெரிக்க கிரிக்கெட் அணியின் வீரர்கள்

இம்முறை டி20 போட்டிகள் மீண்டும் பழைய வழிமுறையைப் பின்பற்றி நடக்கிறது. அதன்படி மூன்று சுற்றுகளாக விளையாடப்படுகிறது, குழு நிலை (Group stage), சூப்பர் 8 மற்றும் நாக் அவுட் (அரையிறுதி மற்றும் இறுதி) (Knockout) ஆகிய மூன்று சுற்றுகளாக விளையாடப்படுகிறது.

இருபது அணிகளும் ஐந்து பேர் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் ரவுண்ட் ராபின் ஃபார்மட்டில் (Round Robin format) ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுவார்கள். நான்கு குழுக்களில் இருந்து இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குச் செல்லும்.

ஏ பிரிவில் பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியா இடம்பெற்றுள்ளது.

குரூப் A: கனடா, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா

குரூப் B: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து

குரூப் 😄 ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, உகாண்டா, மேற்கிந்திய தீவுகள்

குரூப் D: வங்கதேசம், நேபாளம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை

 

உலகக்கோப்பை போட்டிகளை எப்போது, எங்கே, எப்படி பார்ப்பது?

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டி20 உலகக்கோப்பை அறிவிப்பு நிகழ்வில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கேல்.

ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பையின் முதல் கட்டமாக, குரூப் ஸ்டேஜ், ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 18ஆம் தேதி வரை நடக்கும்.

இரண்டாம் கட்டமாக, 'சூப்பர் 8’ போட்டி ஜூன் 19 முதல் 25 வரை நடைபெறும். அரையிறுதிப் போட்டிகள் 27ஆம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதியும் நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் போட்டிகள் வெவ்வேறு நாடுகளில் நடப்பதால், சில போட்டிகள் உள்ளூர் நேரப்படி காலையிலும் சில போட்டிகள் மாலையிலும் நடைபெறும். எனவே அந்தந்த அணிகளின் ரசிகர்கள் போட்டிகளைப் பார்த்து ரசிக்க முடியும்.

இந்தியாவின் முதல் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கும் மற்ற மூன்று போட்டிகளும் இரவு 8 மணிக்கும் நடைபெறுகிறது. இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் இரண்டாவது போட்டியில் விளையாடும் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ ஊடக உரிமையை 'டிஸ்னி ஸ்டார்’ (Disney Star) பெற்றுள்ளது, மேலும் பிபிசி இணையதளத்தில் அவ்வப்போது போட்டிகளைப் பற்றிய தகவல்கள் வழங்கப்படும்.

போட்டிகளுக்கான கால அட்டவணை

ஐசிசி ஆடவர் டி20யில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியின் அட்டவணை பின்வருமாறு.

இந்திய அணி பங்குபெறும் போட்டிகள்

  • ஜூன் 5, புதன், இரவு 7:30 மணி: இந்தியா vs அயர்லாந்து, இடம் - நியூயார்க்
  • ஜூன் 9, ஞாயிறு, இரவு 8:00 மணி: இந்தியா vs பாகிஸ்தான், இடம் - நியூயார்க்
  • ஜூன் 12, புதன், இரவு 8:00 மணி: அமெரிக்கா vs இந்தியா, இடம் - நியூயார்க்
  • ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை, இரவு 8:00 மணி: இந்தியா vs கனடா, இடம் - லாடர்ஹில்
 

எந்தெந்த மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன?

டி20 போட்டிகள்

மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள 6 மைதானங்களிலும், அமெரிக்காவில் உள்ள 3 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்தியாவின் 'குரூப் ஸ்டேஜ்’ போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் மூன்று போட்டிகளும், ஃப்ளோரிடாவின் லாடர்ஹில்லில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் பார்க் மைதானத்தில் ஒரு போட்டியும் நடக்கிறது.

நியூயார்க்கில் உள்ள லாங் தீவில் நாசாவ் கவுண்டி மைதானம் அமைந்துள்ளது. டி20 போட்டிக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் தற்காலிக இருக்கை வசதியும் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆடுகளமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரையிறுதிப் போட்டிகளில் டிரினிடாட்டில் உள்ள பிரையன் மைதானத்தில் ஒரு போட்டியும் மற்றொன்று கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்திலும் நடைபெறும்.

இறுதிப்போட்டி பார்படாஸ், பிரிட்ஜ் டவுனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

 

2024 ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடக்கும் இடங்கள்

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நியூயார்க்கில் உள்ள லாங் தீவில் நாசாவ் கவுண்டி மைதானம் அமைந்துள்ளது. இந்த கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் தற்போது கட்டப்பட்டு வருகிறது.
  • நார்த் சவுண்ட், ஆன்டிகுவா & பார்புடாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம்.
  • பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானம்.
  • கயானாவின் பிராவிடன்ஸில் உள்ள பிராவிடன்ஸ் மைதானம்.
  • செயின்ட் லூசியாவின் க்ரோஸ் ஐலெட் அருகே டேரன் சமி மைதானம்.
  • கிங்ஸ்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானம், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
  • சான் பெர்னாண்டோ, டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியம்
  • அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள லாடர்ஹில் சென்ட்ரல் ப்ரோவர்ட் பூங்கா மைதானம்
  • அமெரிக்காவின் டல்லாஸ்-டெக்சாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானம்.
  • நாசாவ் கவுண்டி சர்வதேச அரங்கம், லாங் ஐலாந்து - நியூயார்க், அமெரிக்கா

ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்கான விதிகள் என்ன?

முதல்முறையாக, டி20 போட்டியில் 'ஸ்டாப்-கடிகாரம்' (stop-clock) பயன்படுத்தப்பட உள்ளது. பந்துவீவீசும் அணி முந்தைய ஓவர் முடிந்த 60 விநாடிகளுக்குள் அடுத்த ஓவரை வீசத் தயாராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு போட்டியும், 3 மணிநேரம் 10 நிமிடங்களில் முடிக்கப்பட வேண்டும், (ஒவ்வொரு இன்னிங்ஸிற்கும் ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும் மற்றும் 20 நிமிட இடைவெளி வழங்கப்படும்).

வெவ்வேறு ஃபீல்டிங் கட்டுப்பாடுகளுடன் இன்னிங்ஸின் முதல் ஆறு ஓவர்களுக்கு பவர் பிளே இருக்கும். ஒவ்வொரு அணிக்கும் இரண்டு மதிப்புரைகள் (reviews) கிடைக்கும்.

ஆட்டம் சமநிலையில் இருந்தால், சூப்பர் ஓவர் வெற்றி முடிவைத் தீர்மானிக்கும். அதாவது ஒவ்வொரு அணியும் ஆறு பந்துகளை எதிர்கொள்ளும். சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் வரை சூப்பர் ஓவர்கள் தொடரும்.

 

மழை பெய்தால் என்னவாகும்?

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

போட்டிக்கு நடுவில் மழை பெய்து இடையூறு ஏற்பட்டால், டிஎல்எஸ் (டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன், DLS) முறையானது முடிவுகளைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும்.

ஆனால் டிஎல்எஸ் நடைமுறைக்கு வர, ஒவ்வொரு அணியும் குரூப்/சூப்பர் 8 கட்டத்தில் குறைந்தது 5 ஓவர்கள் அல்லது நாக் அவுட் கட்டத்தில் 10 ஓவர்கள் விளையாடியிருக்க வேண்டும்.

முதல் அரையிறுதியில் ரிசர்வ் டே (Reserve day) இருக்கும் மற்றும் இறுதிப் போட்டிக்கும் ரிசர்வ் டே இருக்கும். இருப்பினும், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தை முடிக்க கூடுதலாக 250 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும்.

முந்தைய வெற்றியாளர்கள் மற்றும் இந்தியாவின் பங்கீடு

இதுவரை, ஆறு அணிகள் முந்தைய டி20 போட்டிகளில் வென்றுள்ளன.

இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது மறக்க முடியாத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2014இல் இந்தியா மீண்டும் பட்டத்தை வெல்லும் சூழலில் இருந்தது. ஆனால் இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

பாகிஸ்தான் 2009இல் ஒருமுறை வெற்றி பெற்றது. அதன் பிறகு மூன்று முறை இறுதிப் போட்டி வரை வந்துள்ளது.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, 2010 மற்றும் 2022இல் போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, டி20 உலகக்கோப்பையில் மூன்றாவது பட்டத்தைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளனர். போட்டிகளை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 2012 மற்றும் 2016இல் இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளது. 2021இல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

 

அடுத்த டி20 பதிப்பை தொகுத்து வழங்கப் போவது யார்?

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து களமிறங்கும்

கோவிட் கால இடைவெளியைத் தவிர்த்து, ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடர்ந்து விளையாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் டி20 பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆடவர் டி20 உலகக் கோப்பை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

போட்டியின் அடுத்த பதிப்பை 2026இல் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும். 2028 பதிப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தும்.

ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இடம்பெற்ற வரலாற்று சாதனைகள்

  • அதிக ரன்கள்: விராட் கோலி (இந்தியா) 27 போட்டிகளில் 1,141 ரன்கள்
  • ஒரு போட்டித் தொடரில் அதிக ரன்கள்: விராட் கோலி (இந்தியா) 2014இல் 319 ரன்கள் எடுத்தார்
  • அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: 2012இல் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம் 123 ரன்கள் குவித்தார்.
  • அதிக சதங்கள்: கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) 2007 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இரண்டு சதங்கள் அடித்தார்
  • அதிக விக்கெட்டுகள்: ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) 36 போட்டிகளில் 47 விக்கெட்டுகள்
  • ஒரு போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுகள்: வனிந்து ஹசரங்க (இலங்கை) 2021 பதிப்பில் 16 விக்கெட்டுகள்
  • சிறந்த பந்து வீச்சாளர்: அஜந்தா மெண்டிஸ் (இலங்கை) 2012இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 8 ரன்களில் 6 விக்கெட்டுகள்.
  • அதிக ‘Dismissals’ (விக்கெட் கீப்பர்): எம்எஸ் தோனி (இந்தியா) - 33 போட்டிகளில் 32 விக்கெட்டுகள்
  • அதிக கேட்சுகள் (ஃபீல்டர்): ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா) - 30 போட்டிகளில் 23 கேட்சுகள்
  • அதிகபட்ச ஸ்கோர்: இலங்கை vs கென்யா - 2007இல் 260/6
  • குறைந்த ஸ்கோர்: நெதர்லாந்து vs இலங்கை - 2014இல் 39 (ஆல் அவுட்)

மகளிர் டி20 உலகக்கோப்பை எப்போது நடக்கும்?

கடந்த 2016இல் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் விளையாடப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு, மகளிர் டி20 உலகக்கோப்பை தனிப் போட்டியாக நடத்தப்படும்.

இது 2024 அக்டோபரில் வங்கதேசத்தில் நடைபெறும்.

https://www.bbc.com/tamil/articles/c8004xq5wg4o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக்கோப்பை: 22,000 கி.மீ. பயணம் செய்து அமெரிக்காவை அடைந்த கிரிக்கெட் ஆடுகளங்கள்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம்,ICC

9 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தாண்டு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்காவில் நடக்க உள்ளது என்பதே பலருக்கும் ஆச்சரியம் தரும் நிலையில், அதற்காக பயன்படுத்தப்படும் கிரிக்கெட் ஆடுகளங்கள் அதைவிட ஆச்சரியம் தருகின்றன.

ஆம், மற்ற ஊர்களில் நிலையாக கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் ஆடுகளங்களை போலன்றி ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ள அமெரிக்க கிரிக்கெட் ஆடுகளங்கள், கிட்டத்தட்ட 14000 மைல்கள் (22,500 கி.மீ) தாண்டி ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்டவை.

முதல்முறையாக அமெரிக்காவில் உலகளாவிய பெரிய கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் இருந்து புளோரிடா வழியாக கப்பல் மூலம் இந்த கிரிக்கெட் ஆடுகளங்கள் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

நியூயார்க், டெக்சாஸ் மற்றும் புளோரிடாவில் உள்ள பெஸ்போக் ஆடுகளங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

 

இதில் தொடக்க ஆட்டமான அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான ஆட்டம் மற்றும் குழு நிலை ஆட்டங்களில் முக்கியமான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி ஆகிய இரண்டும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்தமாக நடைபெற உள்ள போட்டிகளில் 16 போட்டிகள் அமெரிக்காவிலும், 39 போட்டிகள் மேற்கிந்திய தீவுகளிலும் நடைபெற உள்ளது.

இதற்காக அமெரிக்காவில் கிரிக்கெட் ஆடுகளங்களை தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதுவும் அதற்கான கிரிக்கெட் ஆடுகளங்களை உருவாக்கும் பணி சவால்கள் நிறைந்தது.

 
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்காவில் ஐசிசி டி20 ஆண்கள் உலகக்கோப்பை போட்டிக்கான ஆடுகளங்கள் தயாராகி வருகின்றன.

"எங்களது நோக்கமே வீரர்கள் நன்றாக விளையாடும் அளவிற்கான வேகம் மற்றும் நிலையாக பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்களை உருவாக்குவதாகும்" என்று அடிலெய்டில் ஆடுகளங்களை உருவாக்கும் டேமியன் ஹக் கூறுகிறார்.

இவர்தான் தற்போது அமெரிக்காவில் நடக்கவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான ஆடுகளங்களை தயார் செய்து வருகிறார்.

"நாங்கள் கிரிக்கெட்டை கொண்டாட விரும்புகிறோம். ஆனால், அதில் சவால்களும் உள்ளன."

அக்டோபர் 2023 இல் இருந்தே 10 டிராப்-இன் பிட்ச்களை உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு பிட்ச்களும் இரண்டு ட்ரேக்களாக(Trays) பிரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதன் நோக்கம் போட்டிக்கு தயார் நிலையில் இருக்கும் நான்கு ஆடுகளங்களை உருவாக்குவதும், 6 பயிற்சி ஆடுகளங்களை உருவக்குவதும் ஆகும்.

இந்த ஆடுகளங்களை உருவாக்க பயன்படுத்தப்படும் களிமண் போன்ற மண்வகை அமெரிக்காவில் உள்ள பேஸ்பால் ஆடுகளங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது வெப்பமான காலநிலைக்கு ஏற்றதும், ரோலிங் மற்றும் கடினமான பயன்பாட்டை தாங்கும் அளவிற்குமான ஒரு வகை புற்களுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.

இந்த பிட்ச் ட்ரேக்கள் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் இருந்து புளோரிடாவுக்கு கப்பல் வழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. அந்த சமயம் நியூயார்க்க்கில் உறைபனி சூழல் இருந்ததால், இவை வெப்பமான சூழல் உள்ள பகுதியில் வளர்க்கப்பட்டு, ஆடுகளம் தயார் செய்யப்படும் இடத்திற்கு சாலைமார்க்கமாக கொண்டு வரப்பட்டன.

வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக இரண்டு ஓட்டுனர்கள் மூலம் இந்த ஆடுகளங்கள் லாரிகள் வழியாக ஓய்வே இல்லாமல் கொண்டுவரப்பட்டன.

 
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மைதானத்தில் ஆடுகளத்தை தயார் செய்ய ஹக் மற்றும் அவரது குழுவுக்கு 12 மணிநேரம் தேவைப்படும்.

காரணம் ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பையின் முதல் கட்ட ஆட்டமான, குரூப் நிலை ஆட்டங்கள், ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 18ஆம் தேதி வரை நடக்கும். அதற்கு வேகமாக ஆடுகளத்தை தயார் படுத்த வேண்டும்.

மைதானத்தில் ஆடுகளத்தை தயார் செய்ய ஹக் மற்றும் அவரது குழுவுக்கு 12 மணிநேரம் தேவைப்படும். இந்த ஆடுகளங்களில் சில தொடங்கவுள்ள போட்டிக்காக தயார் செய்யப்படுகின்றன.

சமீபத்தில் பிபிசியிடம் பேசியிருந்த ஹக், “நான் கலவையான உணர்வுகளால் சூழப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்.

"நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், ஆனால் அதே நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாததால் கொஞ்சம் பதற்றமாகவும் இருக்கிறது.”

"இது ஒரு பெரிய வேலை. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், எங்களால் முடிந்தவற்றை செய்துவிட்டோம்.”

"இதில் என்னென்ன பிரச்னைகள் வரலாம், எங்களின் பணி என்ன மாதிரியான பலனைத் தரும் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நாங்கள் யோசித்துவிட்டோம். இவை நல்ல ஆடுகளங்களாக இருக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறினார் ஹக்.

 
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முதற்கட்ட போட்டிகளில் இந்தியா நான்கு அணிகளுடன் மோத உள்ளது.

இந்தியா பங்குபெறும் போட்டிகள்

முதற்கட்ட போட்டிகளில் இந்தியா விளையாடும் நான்கு ஆட்டங்களில் மூன்று போட்டிகள் நியூயார்க் நகரிலும், ஒரு போட்டி லாடர்ஹில் பகுதியிலும் நடைபெற உள்ளது.

அதன் விவரங்கள் பின்வருமாறு..

  • ஜூன் 5, புதன், இரவு 7:30 மணி: இந்தியா vs அயர்லாந்து, இடம் - நியூயார்க்
  • ஜூன் 9, ஞாயிறு, இரவு 8:00 மணி: இந்தியா vs பாகிஸ்தான், இடம் - நியூயார்க்
  • ஜூன் 12, புதன், இரவு 8:00 மணி: அமெரிக்கா vs இந்தியா, இடம் - நியூயார்க்
  • ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை, இரவு 8:00 மணி: இந்தியா vs கனடா, இடம் - லாடர்ஹில்
 

இரண்டாவது வெற்றியை எதிர்நோக்கும் இந்தியா

இதற்கு முந்தைய டி20 போட்டிகளில் இதுவரை ஆறு அணிகள் வென்றுள்ளன.

இதில் 2007ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணி தனது வெற்றியைப் பதிவு செய்தது. அந்த சீரிஸின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது.

கடந்த 2014ஆம் ஆண்டு போட்டியிலும் இந்தியா வெற்றி பெறுவதற்கான சூழல் இருந்த போதிலும், இலங்கை அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் இடத்தை பிடித்தது இந்தியா.

இந்நிலையில், இந்தாண்டு தனது இரண்டாவது வெற்றியை எதிர்நோக்கி களம் இறங்கவுள்ளது இந்திய அணி.

 
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அடுத்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா நடத்த உள்ளது.

இந்தியாவில் டி20 போட்டிகள்

தொடர்ந்து நடைபெற்று வரும் டி20 போட்டிகள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது.

அந்த வரிசையில் இரண்டாண்டுகள் கழித்தே டி20 போட்டிகளின் அடுத்த பதிப்பு நடைபெற உள்ளது.

2026இல் நடைபெற உள்ள அடுத்த பதிப்பை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.

மேலும் அதற்கடுத்த 2028 பதிப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாக நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/crggqrnv9z4o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த‌ உல‌க‌ கோப்பையிலும் இப்ப‌டி ஒரு அசிங்க‌த்தை பார்த்த‌து இல்லை இன்னும் மூன்று நாள் தான் இருக்கு உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ ஆனால் பாக்கிஸ்தானும் இங்லாந்து அமெரிக்கா போகாம‌ தொட‌ர் விளையாட்டை விளையாடுகின‌ம்

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் எல்லா நாட்டு க‌ப்ட‌ன்க‌ளும் ஒன்னா நின்று ப‌ட‌ம் எடுக்கிற‌வை இந்த‌ முறை அது ந‌ட‌க்க‌ வில்லை😁..............................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி: அவுஸ்திரேலிய அணியில் வீரர்களுக்கு பற்றாக்குறை

Published By: VISHNU   27 MAY, 2024 | 06:36 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணியில் வீரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இண்டியன் பிறீமியர் லீக்கின் கடைசிக் கட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய வீரர்களுக்கு சில நாட்களை சொந்த நாட்டில் கழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாலேயே அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் விரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நமிபியாவுடன் 28ஆம் திகதியும் மேற்கிந்தியத் தீவுகளுடன் 30ஆம் திகதியும் பயிற்சிப் போட்டிகளில் அவுஸ்திரேலியா விளையாடவுள்ளது.

இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாடியபோது உபாதைக்குள்ளான அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் பந்துவீச்சில் ஈடுபட தெரியாதவராக இருக்கிறார். அவர் பூரண குணமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே பயிற்சிப் போட்டிகளில் அவர் துடுப்பாட்ட வீரராக மாத்திரம் விளையாடவுள்ளார்.

இதேவேளை, இண்டியன் பிறீமியர் லீக் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பாக விளையாடிய அணித் தலைவர் பெட் கமின்ஸ், ட்ரவிஸ் ஹெட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பாக விளையாடிய மிச்செல் ஸ்டார்க், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு சார்பாக நீக்கல் போட்டியில் விளையாடிய க்ளென் மெக்ஸ்வெல், கெமரன் க்றீன் ஆகியோர் சொந்த நாட்டில் சில தினங்களைக் கழிக்கச் சென்றுள்ளனர்.

மார்க்கஸ் ஸ்டொய்னிஸும் இன்னும் அவுஸ்திரேலியாவிலிருந்து கரிபியன் தீவுகளுக்கு செல்லவில்லை.

இவர்கள் ஆறு பேரும் ஓமானுக்கு எதிராக பார்படோசில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பதாக கரிபியன் தீவுகளை சென்றடையவுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காத டேவிட் வோர்னர் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றுவருகிறார்.

இந்த உலகக் கிண்ணம் அவரது பிரியாவிடை உலகக் கிண்ணமாக அமையவுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் மற்றொரு உதவிப் பயிற்றுநரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தலைமைப் பயிற்றுநருமான டெனியல் வெட்டோரியும் இன்னும் அவுஸ்திரேலிய அணியுடன் இணையவில்லை.

அடம் ஸம்ப்பா, ஜொஷ் இங்லிஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், ஏஷ்டன் அகார், மெத்யூ வேட், நேதன் எலிஸ் ஆகியோர் அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பெறும் மற்றைய வீரர்களாவர்.

இந்த வீரர்களுடன் பயிற்சிப் போட்டிகளில் அவுஸ்திரேலிய பயிற்சிக் குழாத்திலுள்ள தலைமைப் பயிற்றுநர் அண்ட்றூ மெக்டொனல்ட், ப்றட் ஹொஜ், தேசிய தெரிவாளர் ஜோர்ஜ் பெய்லி, உதவிப் பயற்றுநர் அண்ட்றூ போரோவெக் ஆகியோர் விளையாட அழைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/184643

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரி - 20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி: இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்தது நெதர்லாந்து

29 MAY, 2024 | 01:08 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக புளோரிடாவில் நேற்று (28) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய பயிற்சிப் போட்டியில் இலங்கையை 20 ஓட்டங்களால் நெதர்லாந்து வெற்றிகொண்டது.

இந்தத் தோல்வி இலங்கை அணிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இலங்கை பவர் ப்ளே நிறைவில் 4 விக்கெட்களை இழந்து வெறும் 30 ஓட்டங்களையே பெற்றிருந்தது.

மத்திய வரிசையில் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க (15 பந்துகளில் 5 தொடர்ச்சியான சிக்ஸ்களுடன் 43), தசுன் ஷானக்க (35 ஆ.இ.), தனஞ்சய டி சில்வா (31), ஏஞ்சலோ மெத்யூஸ் (15) திறமையாகத் துடுப்பெடுத்தாடியிராவிட்டால் இலங்கை இதனை விட மோசமான தோல்வியை சந்தித்திருக்கும்.

நெதர்லாந்து பந்துவீச்சில் ஆரியன் தட் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைல் க்லெய்ன் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைக் குவித்தது.

முன்வரிசை வீரர்களின் திறமையான துடுப்பாட்டங்கள் நெதர்லாந்து அணியை வலுவான நிலையில் இட்டது.

மைக்கல் லெவிட் 55 ஓட்டங்களையும் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 39 ஓட்டங்களுக்கு  2 விக்கெட்களையும் நுவன் துஷார, ஏஞ்சலோ மெத்யூஸ், துனித் வெல்லாலகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

களத்தடுப்பின்போது வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரண, துஷ்மந்த சமீர ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை தனது இரண்டாவது பயிற்சிப் போட்டியில் அயர்லாந்தை எதிர்வரும் 31ஆம் திகதி எதிர்த்தாடும். அப் போட்டி லௌடர்ஹில் மைதானத்தில் நடைபெறும்.

https://www.virakesari.lk/article/184770

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"     "உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே"   "சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று சொக்கி போகும் பேரழகு பெற்று சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?"   "ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?"   "அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு அலங்காரம் செய்து கண்டு களித்து அக்கினிக்கு இரையாக போனது ஏனோ?"   "கண்மணியே எம் குடும்ப தலைவியே கருத்துக்கள் கலந்து ஞானமாய் பேசுபவளே கடுகளவும் பாசம் குன்றாத குலமகளே கண்களில் இரத்தக்கண்ணீர் தந்தது எனோ?"   "கள்ளம்கபடம் இல்லாமல் சிரித்துப் பேசி கண்டவரையும் மயக்கும் வசீகர விழியாளே கடைசிவரை குடும்பம் தழைக்க வாழ்ந்தவளே கண்காணாத உலகம் சென்றது நீதியோ?"   "அவனியிலே குழந்தைகள் வாழ்வதை ரசிக்காமல் அவர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தாமல் அன்புடன் பேரப் பிள்ளைகளை அணைக்காமல் அவர்கள் முத்தம் சுவைக்காமல் மறைந்ததுஎனோ?"   "ஆட்டம் முடிந்ததுவென்று யாருக்கும் சொல்லாமல் ஆரவாரம் செய்யாமல் அமைதியாக பறந்தாயோ ஆடிஅசைந்து அழகுபொழிந்து வரும் உன்னுருவம் ஆரத்தியெடுத்து தினம் வணங்கும் தெய்வமானதோ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "என் உயிரோட்டமும் நீதானே"   "மின்னல் இடை கண்ணைக் குத்த   அன்ன நடை நெஞ்சை வருத்த  கன்னி இவள் அருகில் வந்தாள்  சின்ன சிரிப்பு செவ்விதழில் தவழ  கன்னக் குழியில் இடறி விழுந்தேனே!" "அன்பே  ஆருயிரே அழகு தேவதையே   இன்பம்  கொட்டும் வண்ணக் கிளியே  துன்பம் எனோ எனக்குத் தருகிறாயே      என் எந்திரவாழ்வை மாற்ற வந்தவளே    என் உயிரோட்டமும் நீதானே இன்று!!"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.