Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவின் கதையைக் கேட்டால் நிலத்தால் மட்டுமல்ல

மொழியால் மட்டுமல்ல

சமயத்தாலும் அழிந்து கொண்டிருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இனம் எனும் விருட்ஷத்தை இலகுவாக அழித்து விட முடியாது, அப்படி வெளிக்கிட்டால் பல இழப்புகள், ஆபத்துகள் ஏற்படும். அதன் கிளைகளை, வேர்களை முதலில் அழித்து மரத்தை தனிமைப்படுத்தினால் அது தானாகவே  பட்டு வீழ்ந்துவிடும். எதிரி இவ்வளவு பலத்தோடும் வீரத்தோடும் எம்மை விழுத்துகிறான் என்றால்; அது அவனின் சமயோசிதம் எமது விலைபோகும் தன்மையும், விலகிப்போகும், அமைதிகாக்கும் தன்மையும் காரணம். யாழில் மத, சமூக விழாக்களுக்கு கண்டி நடனம், நம்மளால அவர்கள் விழாக்களில் இடங்களில் பரதநாட்டியம் ஆடமுடியுமா, விடுவார்களா? நமது பூர்வீக தனியார் நிலங்களில்  விகாரைகள் கேட்பாரின்றி எழுகின்றன, சைவ ஆலயங்கள் கேட்பாரின்றி முற்றுகை இடப்படுகின்றன, உடைத்தெறியப்படுகின்றன தடுக்க முடிந்ததா நம்மால்? பிறரால் நம்மவர் மதம் மாற்றப்படுகிறார்கள் என்று குறை கூறும் நாம், மற்றவர்களை மதம் மாற்றவேண்டாம், நம்மவர் மதம் மாறாமல் தடுக்க முயலலாமல்லவா? எமது கொள்கையில் உறுதியாய் ஒற்றுமையாய் நிற்கலாமல்லவா? முடியுமா நம்மால்?  நாம் எமது தலைவர்களை எமது சார்பாக அனுப்பிவைத்தால், அவர்கள் தங்கள் சொந்த நலன்களை பெற்றுக்கொள்வதோடு திருப்தியடைந்து விடுகிறார்கள். தாங்களும் செய்வதில்லை செய்பவர்களையும் விடுவதில்லை, தடைக்கற்களாக செயற்படுகிறார்கள். ஆங்கிலத்தில் கேட்டு அனுமதி பெற முடியுதென்றால், ஏன் அதை தமிழாக கேட்க முயற்சிக்கக்கூடாது? ஆங்கிலமாக கேட்டால் என்ன சிங்களமாக கேட்டால் என்ன அவர்கள் தானே பயனடைகிறார்கள், அதனடிப்படையில் ஆக்கிரமிக்கிறார்கள். இதற்குத்தானா இவர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பிவைக்கிறார்கள்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

நியாயமான ஆதங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் பகுதியைக் கேட்டேன்.

ஆனால், "தமிழர்களான எங்களிடையே ஒற்றுமையில்லை" என்ற முறைப்பாட்டை முன் வைக்கும் ஐயா, யாழ் பல்கலையிலாவது தமிழர்களின் ஒற்றுமையைக் கொண்டு வரும் முன் முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும் பல்கலைக் கழகப் பேரவையின் (Senate) உறுப்பினர் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். ஒரு உதாரணத்திற்கு, யாழ் பல்கலைக் கழகத்தின் தலைமைப் பதவிகளில் சைவர் அல்லாதவர்கள் அமர முடியாத நிலை இருக்கிறது - மூதவை மட்டத்தில் தீர்மானிக்கப் படும் இந்தப் பதவிகளுக்கு தமிழ் கிறிஸ்தவர்கள் இப்போது விண்ணப்பது கூட இல்லை, ஏனெனில் எழுத்தில் இல்லாத விதி திறந்த இரகசியம் போல எல்லோருக்கும் தெரியும். இதை விட வேறு பாகுபாடுகளும் இருக்கின்றன, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தோர், யாழ்ப்பாணத்திலும் ஒரு குறிப்பிட்ட மரபுடைய பாடசாலையில் இருந்து வந்தோர் என ஒரு பட்டியல் உத்தியோக பூர்வமற்ற வகையில் இருக்கிறது.

இப்போது வவுனியா வளாகம் ஏன் தனிப் பல்கலையாக உருவானது என்று ஊகிக்க முடிகிறதா? அதே போல, கிளிநொச்சி வளாகம் ஏன் தனியாகப் பிரிந்து போக முயல்கிறது என்று நோக்க முடிகிறதா?

கிளிநொச்சி வளாகம், மிகவும் பயணச் சவால்கள் நிறைந்த , தண்ணீர் வினியோகம் தாங்கிகள் மூலம் செய்ய வேண்டிய ஒரு அமைவிடத்தில் இருக்கிறது. இதனாலேயே, குளு குளு பேராதனைக்கும், ஏனைய சிங்களப் பிரதேசங்களுக்கும் வட பகுதித் தமிழ் மாணவர்கள் போக, அங்கே போகாமல், வரண்ட மொனராகலையின் சிங்கள மாணவர்கள் கிளிநொச்சி வருகிறார்கள். இதைத் தடுக்கும் வழிகள் இலங்கையின் பல்கலைக் கழக அனுமதி முறையில் இல்லை.  

இப்படியாக, ஐயா சொல்லும் பல்கலையின் வளர்ச்சி பற்றிய ஒவ்வொரு பிரச்சினைக்கும் காரணங்கள் ஒன்று அல்ல, பல்வேறு. தமிழ் மூலம் படிப்பிப்பதால் மட்டும் இவற்றைத் தீர்க்க இயலாதென நினைக்கிறேன். மேலும், விவசாயம் போன்ற பாடங்களைத் தமிழில் படிப்பித்தால், பட்டதாரிகளால் தற்போதைய வேலை வாய்ப்புச் சூழலில் எப்படிச் சமாளிக்க முடியெமெனவும் யோசிக்க வேண்டும்.    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இதிலே சிலவற்றை நானும் யோசித்தேன்.

முழு விபரங்கள் தெரியாததால் எழுதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா  ஆர் எஸ் எஸ்,   அவருக்கு  கொடுத்த அசைன்மென்ட்ஐ  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்ற விழைகிறார்.  யுத்த காலத்தில் சைவக்கோவில் அறங்காவலர்கள் எல்லாரும் டக்லஸின் இந்த கலாச்சார அமைச்சு மூலம் கோவிலுக்கு உதவி தொகை பெற அவரிடம் முண்டியடித்துக்கொண்டிருந்த வேளையில் போது கிறிஸ்தவ பாதிரியார்கள்  அரச அடக்குமுறைகளை வெளிநாடுகளில் பர்ரபுரை செய்தும் மனித உரிமை நிறுவனங்களுக்கு அரச அடக்குமுறைகள் குறித்து ஆதாரங்களை திரட்டி அறிக்கையளித்ததையும் மக்களுடன் நின்று பல உதவிகள் செய்ததையும் மக்களை மெல்ல மெல்ல மறக்கச்செய்ய மெல்ல மெல்ல நோகமல் மெல்ல மெல்ல விஷ ஊசியை ஏற்றுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இதிலே சிலவற்றை நானும் யோசித்தேன்.

முழு விபரங்கள் தெரியாததால் எழுதவில்லை.

யாழ் . பல்கலை, என் அபிப்பிராயத்தின் படி, ஒரு கடினமான ஆமை ஓட்டுக்குள் தன்னை ஒளித்துக் கொண்ட ஒரு அமைப்பு.

வெளியே இருந்து வரும் செல்வாக்கு (சிங்களவர்கள், முஸ்லிம்கள், வெளிநாட்டவர்கள்) தம்மை மாற்றி விடக் கூடாது என்ற பயம் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இலங்கையின் உயர் கல்விச் சூழலில், கல்வி நெறிகள், பட்டதாரிகள் தரத்தில் உயர்வாக இருக்கும் பல்கலைக் கழகங்கள் எவையென்று பார்த்தால், வெளியுலகத்தோடு அதிக தொடர்புகளை உருவாக்கிக் கொண்ட கொழும்பு, ஜெயபுர, பேராதனை ஆகியவை தான்.

சிங்களப் பகுதிகளில் இருக்கும் ருகுணு, களனி ஆகிய பல்கலைகளும் கூட யாழ் பல்கலை போன்ற ஆமை ஓட்டுக் கேசுகள் தான். நவீன கல்வியில், குறிப்பாக தொழில் நுட்ப, விஞ்ஞானக் கல்வி நெறிகளில் இப்படி மூடி வைத்துக் கொண்டு தரமாக எதையும் உருவாக்கி விட முடியாது. 

தமிழர்களுக்கு ஒரு பல்கலை என்று அலங்காரக் குஞ்சம் போல வைத்திருக்கலாம், ஆனால் சமூகத்தில் பல்கலைக் கழகத்தின் பணி குஞ்சமாக/அடையாளமாக இருப்பது மட்டுமல்ல, குஞ்சத்திற்கு மக்களும் அரசும் பணத்தை வாரி இறைப்பதும் வீண் செலவு தான் என நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.