Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தால் கிறிஸ்தவ மதகுரு படுகொலை

Featured Replies

மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தால் கிறிஸ்தவ மதகுரு படுகொலை

[புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007, 18:06 ஈழம்] [தாயக செய்தியாளர்]

மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய தாக்குதலில் கிறிஸ்தவ மதகுருவான அருட்தந்தை ஜே.ஆர்.எஃப்.றஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் வெள்ளாங்குளத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே கிறிஸ்தவ மதகுருவான அருட்தந்தை ஜே.ஆர்.எஃப்.றஞ்சித் அடிகளார் உயிரிழந்தார். அவரது உதவியாளர் ஜூலின் படுகாயமடைந்துள்ளார்.

அருட்தந்தை ஜே.ஆர்.எஃப்.றஞ்சித் அடிகளாரும் அவரது உதவியாளரும், மன்னாரில் உள்ள சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக மன்னார்ப் பகுதிக்கு ஓமந்தை சோதனைச் சாவடியூடாக இன்று காலை சென்றபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உயிலங்குளம் சோதனைச் சாவடி மூடப்பட்டதனால் ஓமந்தை சோதனைச்சாவடியூடாக அருட்தந்தை ஜே.ஆர்.எஃப்.றஞ்சித் அடிகளாரும் அடிகளார் சென்றிருந்தார்.

http://www.eelampage.com/?cn=33580

  • தொடங்கியவர்

2ND LEAD (CORRECTION)

Catholic priest killed in DPU Claymore attack

frranjith03van64168435jq6.jpg[/

[TamilNet, Wednesday, 26 September 2007, 12:12 GMT]

Fr. Nocholaspillai Packiyaraj, the Mannaar district coordinator of Jesuit Refugee Service (JRS) was killed when Sri Lanka Army Deep Penetration Unit (DPU) attackers launched a Claymore attack on his Hiace vehicle, riding on Mannaar - Pooneryn (Poonakari) Road at Kalvi'laan in Ve'l'laangku'lam around 2:30 p.m. Wednesday, Tamileelam Police officials in Mallaavi said. The assistant of the paris priest, identified as Juliyan, was rushed to hospital with injuries, initial reports said.

Fr. Nicholaspillai was on his way to Vidaththaltheevu, via Mallaavi. He had entered the ** controlled area through Pu'liyangku'lam entry point to attend the needs of recently displaced people in the district.

frranjith0264162200cz9.jpg

The JRS is an international Catholic organisation with a mission is to accompany, serve and defend the rights of refugees and forcibly displaced people.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23382

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக்கணக்கான இந்து மதகுருமார்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு கிறிஸ்தவ மதகுருமார்களில் கை வைக்கப் பயந்திருந்தது. ஏனென்றால் மேற்கத்தியநாடுகளுக்கு அஞ்சி.

ஆனால் யாழ்பாணத்தில் கொல்லப்பட்ட பிரோனின் படுகொலைக்கு யாழ் ஆயரில் இருந்து உலகமே அக்காறைகொள்ளாத நிலையில் கிறிஸ்தவ மதகுரமார்களையும் கொல்ல ஆரம்பித்துள்ளது.

  • தொடங்கியவர்

இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுகுறித்து இராணுவத்தின் பேச்சாளராகிய பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்டபோது, இந்தச் சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்ததுடன், விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்றுள்ள அணியினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் அல்லது விடுதலைப் புலிகளே தவறுதலாக மதகுருவின் வாகனத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறவுகள்

மதகுரு நீக்கிலாப்பிள்ளை-பாக்கிரஞ்சித்தின் படு கொலைக்கு இந்து மத குருமார் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நேற்று புதன் கிழமை சிறிலங்கா ஆழஊடுருவும் அணியினரின் கிறிலஸ்தவ பாதிரியார் மீதான கிளேமோர் தாக்குதல் மூலமான படுகொலையைக் கண்டித்து இந்து மத குருமார் ஒன்றியம் கண்டனம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் நலன் கருதி மக்களின் வாழ்வுக்கும் அல்லும் பகலும் பாடுபடும் மதகுரமார்களையும் உறவுகளின் துயரைத் துடைத்து அவர்களின் பசியைப் பேக்க அன்றாடம் சேவை நலன் கருதிப்பாடுபடும் பணியாளர்களினதும் உயிரைக்காவுகொண்ட இராணுவத்தினரின் அட்டூலியழியத்தைக் கண்டித்து இந்து மதகுருமார் ஒன்றியம் மிகுந்த மனவருத்தத்துடன் இந்த அறிக்கையை தெரிவிக்கிறது.

முகிந்த சிந்தனையே மனித நேயப்பணியாளர்களின் படுகொலைகள்

துசுயு அகதிகளுக்கான சேவை நிறுவனத்தின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ந.பாக்கியராஞ்சித் அடிகளார் அவர்கள் சிறிலங்கா அரசின் ஆழஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் 26.09.2007 அன்று அவரது பணிவேளையின் போது வெள்ளாங்குளம் பகுதியில் கொலை செய்யப்பட்டமையானது கொலைவெறியின் உச்ச கட்டத்தை எடுத்துக்காட்டுகிறது.

பல்வேறு நெருக்கடிகளையும் இராணுவ அழுத்தங்களையும் பொருளாதாரத் தடையினையும் தொடர் குண்டு வீச்சுக்களையும் வன்னிப்பரப்பின் மீது நடாத்திக்கொண்டிருக்க அடிப்படை மனித நேயப்பணிகளை ஒரு சில அமைப்புக்களே செய்து வரும் நிலையில் இந்தத் தாக்குதலானது அந்த மனிதநேயப்பணிகளை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் செயலாகக் காணப்படுகிறது.

சிறிலங்கா அரசின் மனித நேயப்பணியாளர் மீதான படுகொலை அருட்தந்தை பாக்கியரஞ்சித் அவர்களுடையது மட்டும்தான் முதலாவதல்ல, இதற்கு முன்னரே திட்மிட்டு மனிதநேயப்பணியாளரை இனங்கண்டு படுகொலை செய்யும் நிலை காணப்படுகிறது.2006இல் மூதூரில் அக்ஸன்பெய்ன் நிறுவனப்பணியாளர் 17பேர் இராணுவத்தால் அவர்களது பணிமனையிலேயே வைத்துச்சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.

அதேபோல் மனித நேயப்பணியாளரான ஜிம்பி;றவுன் அடிகளார் மண்டதீவு அல்லைப்பிட்டிப் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் அவர்தொடர்பான எந்தத்தடையங்களையும் இதுவரை கண்டுபிடிக்க முடியாதபடி சிறிலங்கா இராணுவத்தால் மூடிமறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான படுகொலைகள் மனிதநேயப்பணியாளருக்கு எங்கும் பாதுகாப்பில்லை என்;பதைத் தெரிவிப்பதுடன் மனிதநேயப்பணிகளை முடக்கிவிடும் ஆபத்தனை ஏற்படு;த்தியுள்ளது.

உண்மையிலேயே அருட்தந்தை மீதான தாக்குதலானது சிறிலங்கா அரசின் இனவாதத்தனை மட்டுமின்றி மதவாத்தின் உச்ச நிலையினையும் எடுத்துக்காட்டுகிறது.

எனவே வன்னிமாவட்ட இந்து குருமார் ஒன்றியத்தினராகிய நாங்கள் அடிகளார் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன் திருச்சபையினர் சிறிலங்காஅரசுக்கு இவ்வாறான மனித நேயப்பணியாளர்கள் மீதான தாக்குதலை உடன் நிறுத்த அழுத்தம் கொடுக்கு வேண்டுகிறோம் இவ்;வாறான நிகழ்வுகள் தடுக்கப்படாவிடின் தமிழர் தாயகப் பகுதிகளில் மனிதநேயப் பணிபுரிய பணியாளர்களும் அருட்தந்தையர்களும் இல்லாது போகும் நிலை ஏற்பட்டு உண்மையாகவே அரச அடக்கு முறைக்குள் வாழும் மக்கள் கடும் துன்பங்களை அனுபவிக்கும் நிலை ஏற்படும் என்பதைத் தெரிவித்து இவ்வாறான தாக்குதலை நிறுத்த சிறிலங்கா அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்.

என மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 28-09-2007 05:14 மணி தமிழீழம் [செந்தமிழ்]

மன்னாரில் அருட்தந்தைக்கு ஆயிரக்கணக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி

வியாழன் மதியம் 1.10 மணியளவில் அருட்தந்தை நிக்கலஸ்பிள்ளை பாக்கியரஞ்சித் அவர்களுக்கு மன்னார் நகரமே திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இவரது உடலத்தை வவுனியாவில் இருந்து மன்னார் ஆயர் ராயப்பு ஜோசெப் அடிகளார் அவர்களது ஆயர் இல்லத்திற்கு எடுத்துச் செல்லும் போது முருங்கனில் இருந்து மன்னார் வரையான வீதியில் ஆயிரக்கணக்கில் மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

40 அகவையுடைய அருட்தந்தை ஏழை மக்களுக்கு இடைவிடாது பணியாற்றி அனைவரது மனங்களையும் வென்றவர் என்பது தெரிந்ததே. இவரது உடலமானது இறுதி மரியாதை செலுத்து முகமாக மன்னார் ஆயர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் மக்களின் அஞ்சலிக்காக வெள்ளி மாலை 4.30 மணியளவில் சென்.செபஸ்ரியான் தேவாலயத்தில் வைக்கப்பட்டு இவரது இறுதி வணக்கநிகழ்வுகள் சனிக்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது.

இதேவேளை ஆயர் இல்லத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அமைக்கலநாதன் அவர்கள் சென்று அருட்தந்தைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

நன்றி

பதிவு.

இடம்பெயர்ந்தோருக்கு உதவச் சென்ற கத்தோலிக்க மதகுரு படுகொலை: புலிகள் கடும் கண்டனம்

மன்னாரில் இடம்பெயர்ந்த மக்களுக்காக உதவச் செல்லும் வழியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் திட்டமிட்ட கிளைமோர் தாக்குதலினால் கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

அனைத்துலக கத்தோலிக்க அகதிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் மீது திட்டமிட்ட வகையில் கிளைமோர் தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளமையானது வன்மையாகன கண்டனத்துக்குரியது.

தமிழர் தாயகத்தில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக கத்தோலிக்க அருட்தந்தை பயணித்துக் கொண்டிருந்தார். அகதிகள் சபையின் இலட்சினையுடன் சென்ற அவரது வாகனம் குறிவைக்கப்பட்டுள்ளது.

அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாப்பதனையும் அவர்களுக்கு சேவையாற்றுதலையும் இலக்காகக் கொண்டு அகதிகள் சபை செயற்பட்டு வருகிறது.

சிறிலங்கா இராணுவத்தினரின் அண்மைய ஆர்ட்டிலறித் தாக்குதல்களால் 10 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இடம்பெயர்ந்திருந்த அந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக பயணித்துக் கொண்டிருந்த போதுதான் திட்டமிட்ட வகையில் அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் "இராணுவ" உத்தியின் குறியீடாக அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளாரின் படுகொலை உள்ளது. திட்டமிட்ட வகையிலான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி மக்களை இடம்பெயரச் செய்தலும் அவ்வாறாக இடம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு உதவ விரைகின்ற மனிதாபிமானப் பணியாளர்களை படுகொலை செய்வதும்தான் சிறிலங்கா அரசாங்கத்தின் "இராணுவ" உத்தியாகும். இந்த இராணுவ உத்தியை "இனப்படுகொலை" என்றுதான் கூற இயலும்.

மதகுருவுரும், மனிதாபிமானப் பணியாளருமான அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளாரின் மரணமானது எம்மை ஆழ்ந்த அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த படு பயங்கரமான நடவடிக்கையை நாம் கண்டிக்கிறோம்.

இப்படுகொலையையும் மனிதாபிமான பணியாளர்களுக்கு எதிரான சிறிலங்காவின் பிற கொடூரமான செயற்பாடுகளையும் அனைத்துலகம் வன்மையாகக் கண்டனம் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/

மன்னாரில் இடம்பெயர்ந்த மக்களுக்காக உதவச் செல்லும் வழியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் திட்டமிட்ட கிளைமோர் தாக்குதலினால் கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

சிறிலங்கா இர்ராணுவத்தினரால் கத்தோலிக்க மதகுரு படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டமைக்கு ஹரித்தாஸ் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் அணியினரால் அருட்தந்தை நிக்கலஸ் பாக்கியறஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மல்லாவியில் நேற்று கண்டனப் பேரணி நடைபெற்றது.

மேலும் வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.