Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2024]


Recommended Posts

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன். எனும் திரியில் இருந்து பல தனிமனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

களவிதிகளை மீறும் கருத்துக்களை உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் அறியத்தந்தால்  உடனடியாக நடவடிக்கை எடுத்து யாழ் களத்தின் தரத்தைப் பேணமுடியும். இதற்கு கள உறுப்பினர்களின் ஒத்துழைப்பைக் கோருகின்றோம்.

 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

'கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்' என்ற தலைப்பிலிருந்து சக உறுப்பினரை விமர்சித்து எழுதிய கருத்துகள் மற்றும் அநாவசிய உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து? எனும் திரியில் தேவையற்ற கருத்தாடல்கள் நடைபெறுவதால் பல அரட்டைத்தனமான கருத்துக்கள் நீக்கப்பட்டதுடன், திரியும் பூட்டப்பட்டுள்ளது.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • 1 month later...

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல் எனும் திரியில் நீக்கப்பட்ட காணொளிகளை மீண்டும் மீண்டும் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

களவிதிகளை தொடர்ச்சியாக மீறும் வகையில் கருத்தாடல் புரிவோர் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள் உள்ள “கருத்துக்கள உறுப்பினர்கள்” பகுதிக்கு நகர்த்தப்படுவார்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுமந்திரனின் பேச்சிலிருந்து .......1951 ஆம் ஆண்டு சமஷ்ட்டிக் கட்சியின் தீர்மானத்தில் தமிழினத்தை தனியான கலாசாரமும், மொழியும், பூர்வீக தாயகமும் கொண்ட இனம் என்று கண்டுகொண்டிருந்தது. தமிழினம் சுயநிர்ணய உரிமை கொண்ட இனம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சிங்களக் கட்சிகளும் தமிழ் மக்கள் சமஷ்ட்டியைத்தான் வேண்டுகிறார்கள் என்பதை அறிந்தே இருக்கின்றன, அதனால் அதுகுறித்துக் கேள்வி கேட்பதில்லை. சமஷ்ட்டிக்குக் குறைவான எந்த தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 72 ஆம் ஆண்டு இறையாண்மை கொண்ட தமிழினம் தனியாகப் பிரிந்து செல்ல முடியும் என்றபோதும், அதனைச் செய்யாமல் சமத்துவ சமஷ்ட்டி முறையில் ஏனைய இனங்களுடனும் வாழ விரும்புகின்றனர்.  1977 ஆம் ஆண்டு தனிநாடு கோரி முன்வைத்த கோரிக்கையினை மக்கள் ஏற்றுக்கொண்டு ஆணை வழங்கினர்.  இவ்வளவும் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணை. சரி, இதற்குள் ரணிலை ஜனாதிபதியாக்குங்கள் என்றோ அல்லது சிங்களத் தலைவர் ஒருவரை ஜனாதிபதியாக்குங்கள் என்றோ கூறப்பட்டிருக்கிறதா? பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவது தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கிய ஆணையினை நிராகரிக்க வேண்டும் என்கிற நோக்கிலா? இல்லையே. தமிழ் மக்கள் அன்று வழங்கிய ஆதே ஆணையினை மீளவும் நிரூபிக்கத்தானே? மீளவும் நினைவுபடுத்தி தமிழ் மக்களை ஒன்றிணைக்கத்தானே? மக்கள் ஆணையினை மீளவும் புதிப்பது எப்படி அதே ஆணையினை நிராகரிப்பதாக மாறும்? இந்த ஆணையினை மீளவும் நினைவுபடுத்துவது யாருக்குத் தர்ம சங்கடமாக இருக்கப்போகிறது? தமிழர்கள் நிச்சயம் இதனை வரவேற்கத்தான் போகிறார்கள். ஆகவே, இதனை நினைவுபடுத்துவதால் கலவரப்படப்போவது சிங்கள தலைமைகள் தானே? அவர்களுக்குக் கூஜா தூக்கும் அடிவருடிகள் தானே?   சுமந்திரன் இந்த வாக்கெடுப்பு சமஷ்ட்டிக்கான வாக்கெடுப்பு இல்லையென்கிறார். ஆனால், 1977 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தல் மட்டும் தனிநாட்டிற்கான வாக்கெடுப்பா? இல்லையே. அத்தேர்தலை தமது தனிநாட்டிற்கான ஆணையாகத்தானே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாவித்து வெற்றி பெற்றது? அபோது மட்டும் அது சர்வஜன வாக்கெடுப்பு, இப்போது அது ஜனாதிபதித் தேர்தலா? யாரை ஏமாற்றுகிறீர்? ரணிலை ஆட்சிக்குக் கொண்டுவரமுடியாவிட்டால் தமிழரின் இருப்பு முற்றாக அழிந்துவிடுமாம். இறைமையும், சுயநிர்ணய உரிமையும் இல்லாது போய்விடுமாம். இப்போதுமட்டும் உங்களுக்கு இறைமையும், சுயநிர்ணய உரிமையும், சமஷ்ட்டியும் தருவேன் என்று ரணில் சொன்னாரா? யாருக்குக் கதை விடுகிறார் சுமந்திரன்? மக்கள் தந்த ஆணை தனிநாட்டிற்கானது. 1977 இல் அது நடந்தது. இன்றுவரை அதனை பெற்றுக்கொடுக்க சுமந்திரன் என்ன செய்திருக்கிறார்?  நீர் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டதே தமிழ் மக்களுக்கான தனி அரசிற்கான கோரிக்கையினை முன்வைத்துத்தான். அதில் அங்கம் வகித்துக்கொண்டே தமிழ் மக்கள் அதே தேசியத்தினை முன்னிறுத்தி பொதுவேட்பாளரை நிறுத்த எத்தனிக்கும்போது எதிர்த்துப் பிரச்சாரம் செய்வேன் என்கிறீர், நீர் யாருக்காக  வேலை செய்கிறீர் என்பது மிகவும் தெளிவாக இப்போது தெரிகிறது.  அரசியல்வாதிகள்,  தம்மைத் தெரிவுசெய்த மக்களின் நலன்களைக் கைவிட்டு, அம்மக்களின் எதிரிகளின் அரசியல் நலன்களைச் சார்ந்து முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும்போது, அம்மக்கள் கூட்டத்தின் நலன்களில் உண்மையான அக்கறை கொண்ட, அம்மக்கள் கூட்டத்தில் செயற்பட்டு வரும் சமூக அமைப்புக்கள் வெளியே வந்து அம்மக்களுக்கான அரசியல்த் தலைமையினை பொறுப்பெடுக்க முயல்வது நண்மையானதே. இதில் சுமந்திரன் கேள்விகேட்க எதுவும் இல்லை, அந்தத் தகுதியை அவர் இழந்து பல வருடங்கள் ஆகின்றன.   
    • நேபாள் உட்பட 19 நாடுகள் இலங்கையை T20 தொடருக்கு அழைத்துள்ளார்களாம்.....
    • 🫢..... மாடுகளை காப்பாற்றினதுக்கு பொன்னாடை....ஆடுகளை காப்பாற்றினதுக்கு ஒரு துவாயும் சேர்த்தே கொடுத்திருக்கலாம்... இலங்கையில் அவரவர் வேலையை செய்தால் பொன்னாடை கிடைக்கும் தருணங்களும் உண்டு.... ருத்ர சேனை, நீங்கள் எங்கேயப்பா...
    • கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்.... காதிற்கும் கண்ணிற்கும் இனிமை தரும்....
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.