Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் : ஆரம்பப் போட்டிகளில் தென் ஆபிரிக்கா, அயர்லாந்து வெற்றி : மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜுவெல் அண்ட்றூவின் சதம் வீண்

20 JAN, 2024 | 10:12 AM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமான 16 நாடுகளுக்கு இடையிலான 15ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண  கிரிக்கெட் ஆரம்பப் போட்டிகளில் தென் ஆபிரிக்காவும் அயர்லாந்தும் வெற்றிபெற்றன.

இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் ஜுவெல் அண்ட்றூ முதலாவது சதத்தைக் குவித்து அசத்தியபோதிலும்  தென்  ஆபிரிக்கா வெற்றிபெற்றதால்  அவரது முயற்சி வீண் போனது.

தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிற்தியத் தீவுகள் (பி குழு)

தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற பி குழு போட்டியில் தென் ஆபிரிக்கா 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென்ஆபிரிக்கா 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைக் குவித்தது.

1_Dewan_Marais_of_South_Africa_plays_a_s

மொத்த எண்ணிக்கை 145 ஓட்டங்களாக இருந்தபோது 3 விக்கெட்கள் தொடர்ச்சியாக சரிந்தன. ஆனால், டெவன் மராயஸ், அணித் தலைவர் யுவான் ஜேம்ஸ் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 131 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

டெவன் மராயஸ் 65 ஓட்டங்களையும் யுவான் ஜேம்ஸ் 47 ஓட்டங்களையும் டேவிட் டீகர் 44 ஓட்டங்களையும் லுவான் டி ப்ரிட்டோரியஸ் 40 ஓட்டங்களையும் பெற்றனர். உதிரிகளாக 37 ஓட்டங்கள் கிடைத்தது.

பந்துவீச்சில் நெதன் சோலி 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிற்தியத் தீவுகள் 40.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 254 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

2_Jewel_Andrew_of_West_Indies_celebrates

ஜுவெல் அண்ட்றூ மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 96 பந்துகளில் 14 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 130 ஓட்டங்களைக் குவித்தார்.

அத்துடன் 33 ஓட்டங்களைப் பெற்ற நெதன் சோலியுடன் 6ஆவது விக்கெட்டில் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சொற்ப நம்பிக்கை ஊட்டினார். ஆனால் அந்த நம்பிக்கை வீண் போயிற்று.

பந்துவீச்சில் க்வேனா மஃபாக்கா 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ரைலி நோட்டன் 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

 

அயர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (ஏ குழு)

ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக ப்ளூம்பொன்டெய்ன் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஏ குழு போட்டியில் அயர்லாந்து 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஐக்கிய அமெரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி 40.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

கியூஸ் பலாலா ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றார். இதுவே அமெரிக்க இன்னிங்ஸில் அதிகப்பட்ச தனிநபர் எண்ணிக்கையாகும்.

அவரை விட பாத் பட்டேல் (13), அமோக் ஆர்ப்பல்லி (11) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் ஒலிவர் ரைலி 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரூபன் வில்சன் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜோன் மெக்நலி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

3_John_McNally_of_Ireland_celebrates_the

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 22.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் ரெயான் ஹன்டர் 50 ஓட்டங்களையும் பிலிப்பஸ் லே ரூக்ஸ் ஆட்டம் இழக்காமல் 23 ஓட்டங்க்ளையும் கியான் ஹில்டன் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆரியா கார்க் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

சனிக்கிழமை போட்டிகள்

பங்களாதேஷ் எதிர் இந்தியா (குழு ஏ) - ப்ளூம்பொன்டெய்ன்

இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து (குழு பி) - பொச்சேஸ்ட்ரூம்

https://www.virakesari.lk/article/174366

  • Replies 69
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    இந்தியா பாக்கிஸ்தான் இங்லாந் தென் ஆபிரிக்கா   இந்த‌ அணிக‌ள் வ‌ர‌க் கூடும்........நியுசிலாந் அணியும் ந‌ல்லா விளையாடின‌ம்.............இதில‌ திற‌மையை காட்டினால் தான் அடுத்த‌ ஜ‌பி

  • நியாயம்
    நியாயம்

    இலங்கை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ் உடனான போட்டியில் உண்மையான பலம் தெரியவரும். 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    இந்த‌ உல‌க‌ கோப்பை 30வ‌ருட‌த்துக்கு மேலாக‌ ந‌ட‌த்தின‌ம்............இதில‌ திற‌மையை காட்டி தான் விராட்  கோலி இந்திய‌ அணியில் 2008க‌ளில் இட‌ம் பிடித்த‌வ‌ர்.........அதே ஆண்டு 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஹ்மத் பந்துவீச்சிலும் மெக்கின்னி துடுப்பாட்டத்திலும் அபாரம்; ஸ்கொட்லாந்தை கவிழ்த்தது இங்கிலாந்து

Published By: VISHNU   21 JAN, 2024 | 10:08 AM

image

(நெவில் அன்தனி)

ஸ்கொட்லாந்துக்கு எதிராக பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (20) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண பி குழு போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

ஸ்கொட்லாந்தை 174 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இங்கிலாந்து 23.4 ஓவர்கள் மீதம் இருக்க 3 விக்டெக்களை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பர்ஹான் அஹ்மதின் துல்லியமான பந்துவீச்சு, அணித் தலைவர் பென் மெக்கின்னியின் அபார துடுப்பாட்டம் என்பன இங்கிலாந்தின் வெற்றியை சுலபமாக்கின.

ஜேட்ன் டென்லி, பென் மெக்கின்னி ஆகிய இருவரும் 94 பந்துகளில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பென் மெக்கின்னி 68 பந்துகளில் 12 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 88 ஓட்டங்களையும் ஜேட்ன் டென்லி 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட நோவா தெய்ன் 22 ஓட்டங்களையும் லூக் பென்கின்ஸ்டீன் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் ஹம்சா ஷெய்க் ஆட்டம் இழக்காமல் 6 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இப்ராஹிம் பைஸால் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 174 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜெமி டன்க் (40), அணித் தலைவர் ஓவென் கல்ட் (48) ஆகிய இருவரே திறமையை வெளிப்படுத்தினர். அடுத்த அதிகப்பட்ச எண்ணிக்கையாக 26 உதிரிகள் கிடைத்தது.

பந்துவீச்சில் பர்ஹான் அஹ்மத் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் லூக் பென்கென்ஸ்டீன் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: பென் மெக்கின்னி

https://www.virakesari.lk/article/174427

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று சிம்பாவே அணிக்கு எதிரா விளையாடின‌ த‌மிழ‌ன் ஷ‌ருய‌ன் ச‌ன்முக‌னாத‌ன் மிக‌ சிற‌ப்பாக‌ விளையாடினார்

பெடிய‌னுக்கு கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு

இன்னும் சிற‌ப்பாக‌ விளையாட‌ வாழ்த்துக்க‌ள்.............. ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் வெற்றியை ஷாஸெய்ப் கான், உபைத் ஷா இலகுவாக்கினர் 

Published By: VISHNU   21 JAN, 2024 | 10:16 AM

image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஈஸ்ட் லண்டன் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (20) நடைபெற்ற டி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் ஷாஸெய்ப் கான் குவித்த அபார சதம், உபைத் ஷா பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன பாகிஸ்தானை 181 ஓட்டங்களால் அமோக வெற்றி அடையச் செய்தன.

Shahzaib_Khan_of_Pakistan_hits_a_six_as_

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 284 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர்  ஷாஸெய்ப்   கான் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்தார்.

இதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் பாகிஸ்தான் சார்பாக ஆரம்ப வீரராக சதம் குவித்த நான்காவது வீரரானார்.

இதற்கு முன்னர் பாபர் அஸாம் (2002இல் 2 தடவைகள்), இமாம் உல் ஹக் (2004), ஹசீபுல்லா கான் (2022இல் 2 தடவைகள்) ஆகியோர் ஆரம்ப வீரர்களாக பாகிஸ்தான் சார்பாக சதம் குவித்திருந்தனர்.

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 13ஆவது ஓவரில் பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கை 48 ஓட்டங்களாக இருந்தபோது 2ஆவது விக்கெட் சரிந்தது.

ஆனால், ஆரம்ப வீரர் ஷாஸெய்ப் கான், அணித் தலைவர் சாத் பெய்க் ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

சாத் பெய்க் 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 55 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு விக்கெட் சரிந்தது. (151 - 4 விக்.)

இந்நிலையில் ஷாசெய்ப் கானுடன் ஜோடி சேர்ந்த ரியாஸ் உல்லா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அவர் 46 ஓட்டங்களைப் பெற்றார். (235 - 6 விக்.)

மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷாசெய்ப் கான் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைக் குவித்தார்.

பின்வரிசையில் உபைத் கான் 22 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் காலித் அஹ்மத 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பஷிர் அஹ்மத் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 26.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

நுமான் ஷா (26), சொஹெய்ல் கான் ஸுமாட்டி (20), ரஹிமுல்லா ஸுமாட்டி (20), ஹசன் ஈசாக்கில் (19) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் உபைத் கான் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் ஸீஷான் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஷாஸெய்ப் கான்

https://www.virakesari.lk/article/174428

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் : பங்களாதேஷை இலகுவாக வெற்றிகொண்டது இந்தியா

Published By: VISHNU   21 JAN, 2024 | 10:25 AM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக ப்ளூம்ஃபொன்டெய்ன் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியா 81 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

Maruf_Mridha_of_Bangladesh_bowls_during_

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்பத்தில் 2 விக்கெட்கள் குறுகிய நேரத்தில் சரிய இந்தியா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (31 - 2 விக்.)

ஆனால், ஆரம்ப வீரர் ஆதர்ஷ் சிங் 76 ஓட்டங்களையும் அணித் தலைவர் உதய் சஹரான் 64 ஓட்டங்களையும் பெற்று அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

Adarsh_Singh_of_India_hits_a_boundary_du

அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலப்படுத்தினர்.

மத்திய வரிசையில் சச்சின் தாஸ் (26 ஆ.இ.), ப்ரியன்ஷு மோலியா (23), அரவெல்லி அபினாஷ் (23) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் மாறுப் ம்ரிதா 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மொஹமத் ஷிஹாப் ஜமெஸ் 54 ஓட்டங்களையும்  அரிஃபுல் இஸ்லாம் 41 ஓட்டங்களையும் பெற்றதுடன் 5ஆவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் சவ்மி பாண்டே 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் முஷீர் கான் 35 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஆதர்ஷ் சிங்

ஞாயிற்றுக்கிழமை (21) போட்டிகள்

இலங்கை எதிர் ஸிம்பாப்வே (ஏ குழு - கிம்பர்லி)

நேபாளம் எதிர் நியூஸிலாந்து (டி குழு - ஈஸ்ட் லண்டன்)

https://www.virakesari.lk/article/174430

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினுர, ஷாருஜன், தருப்பதி ஆகியோரின் அபார ஆற்றல்களால் ஸிம்பாப்வேயை வென்றது இலங்கை

Published By: VISHNU  22 JAN, 2024 | 04:35 PM

image

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேக்கு எதிராக கிம்பர்லி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 39 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.

RUSAND_1.JPG

தினுர கலுகஹன குவித்த அபார அரைச் சதம், ஷாருஜன் சண்முகநாதனின் அபார துடுப்பாட்டம் மற்றும் விக்கெட் காப்பு, மல்ஷா தருப்பதியின் சிறப்பான பந்துவீச்சு என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தன.

RAVISH_1.JPG

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 48.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

விஷேன் ஹலம்பகே (0), புலிந்து பெரேரா (3), அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (7) ஆகிய மூவரும் ஆடுகளம் விட்டகல 5ஆவது ஓவரில் இலங்கை 3 விக்கெட்களை இழந்து 12 ஓட்டங்களைப் பெற்று  தடுமாறிக்கொண்டிருந்தது.

2101_dinura_kalupahana.jpg

இந் நிலையில் ரவிஷான் டி சில்வா, ருசாந்த கமகே ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி தலா 31 ஓட்டங்களைப் பெற்றதுடன் 4ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதன் பின்னர் தினுர கலுபஹனவும் ஷாரஜன் சண்முகநாதனும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 71 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தினுர கலுபஹன 55 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைப் பெற்றார். ஷாருஜன் சண்முகநாதன் 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பின்வரிசையில் ரவிஷான் பெரேரா 12 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கோல் எக்ஸ்டீன் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெத்யூ ஷொன்கென் 36 ஓட்டங்களுக்கு 2  விக்கெட்களையும்   நியூமன் நியம்பூரி 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

205 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 13.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் மழையினால் தடைப்பட்டது.

சில மணித்தியாலங்களின் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது 22 ஓவர்களில் 129 ஓட்டங்கள் என டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் திருத்தி அமைக்கப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 21.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

அணித் தலைவர் மெத்யூ ஷொன்கென் மாத்திரம் ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 27 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.

பந்துவீச்சில் மல்ஷா   தருப்பதி  17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விஷ்வா ஹலம்பகே 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

விக்கெட் காப்பாளர் ஷாருஜன் சண்முகநாதன் 2 பிடிகளை எடுத்ததுடன் ஒரு ஸ்டம்ப்பையும் செய்தார்.

https://www.virakesari.lk/article/174540

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கோப்பையில் முதல் நான்கு இடங்களை எந்த அணிகள் பெறலாம் @பையன்26?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

இந்த கோப்பையில் முதல் நான்கு இடங்களை எந்த அணிகள் பெறலாம் @பையன்26?

இந்தியா

பாக்கிஸ்தான்

இங்லாந்

தென் ஆபிரிக்கா

 

இந்த‌ அணிக‌ள் வ‌ர‌க் கூடும்........நியுசிலாந் அணியும் ந‌ல்லா விளையாடின‌ம்.............இதில‌ திற‌மையை காட்டினால் தான் அடுத்த‌ ஜ‌பிஎல்ல‌ இள‌ம் வீர‌ர்க‌ளை போட்டி போட்டு கொண்டு வேண்டுவின‌ம்

 

இல‌ங்கை அணியில் ஒரு த‌மிழ‌ன் இட‌ம் பிடித்து இருக்கிறார்............என‌து பார்வையில் அவ‌ருக்கு கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு...............இந்த‌ உல‌க‌ கோப்பை இல‌ங்கையில் இந்த ஆண்டு ந‌டை பெற‌ இருந்த‌து அர‌சிய‌ல் கிரிக்கேட்டுக்குள்ளும் வ‌ர‌............உல‌க‌ கோப்பையை தென் ஆபிரிக்காவில் ந‌ட‌த்துகின‌ம் அண்ணா.................

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2024 at 20:12, பையன்26 said:

இந்தியா

பாக்கிஸ்தான்

இங்லாந்

தென் ஆபிரிக்கா

 

இந்த‌ அணிக‌ள் வ‌ர‌க் கூடும்........நியுசிலாந் அணியும் ந‌ல்லா விளையாடின‌ம்.............இதில‌ திற‌மையை காட்டினால் தான் அடுத்த‌ ஜ‌பிஎல்ல‌ இள‌ம் வீர‌ர்க‌ளை போட்டி போட்டு கொண்டு வேண்டுவின‌ம்

 

இல‌ங்கை அணியில் ஒரு த‌மிழ‌ன் இட‌ம் பிடித்து இருக்கிறார்............என‌து பார்வையில் அவ‌ருக்கு கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு...............இந்த‌ உல‌க‌ கோப்பை இல‌ங்கையில் இந்த ஆண்டு ந‌டை பெற‌ இருந்த‌து அர‌சிய‌ல் கிரிக்கேட்டுக்குள்ளும் வ‌ர‌............உல‌க‌ கோப்பையை தென் ஆபிரிக்காவில் ந‌ட‌த்துகின‌ம் அண்ணா.................

 

இலங்கை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ் உடனான போட்டியில் உண்மையான பலம் தெரியவரும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமிபியாவிடம் சவாலை எதிர்கொண்ட இலங்கை 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது

24 JAN, 2024 | 09:46 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவின் கிம்பர்லி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) நடைபெற்ற சி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தின் போது நமிபியாவிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட இலங்கை, பந்துவீச்சில் அசத்தி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் பெற்ற சுப்புன் வடுகே, துல்லியமாக பந்துவீசிய ருவிஷான் பெரேரா, விஷ்வா லஹிரு, தினுர கலுபஹன ஆகியோர் இலங்கைக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்து அதன் கௌரவத்தைக் காப்பாற்றினர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இணை அங்கத்துவ நாடாக இருக்கும் நமிபியா இந்தப் போட்டியில் அசாத்திய வெற்றி ஒன்றை ஈட்டும் என கருதும் அளவுக்கு இலங்கையின் துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 37.5 ஓவர்களில் 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஒரு கட்டத்தில் 20 ஓவர்கள் நிறைவில் முன்வரிசை வீரர் ஐவரை இழந்து 71 ஓட்டங்களை மாத்திரம்  இலங்கை  பெற்றிருந்தது.

புலிந்து பெரேரா (3), அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (10), ரவிஷான் டி சில்வா (2) ருசந்த கமகே (17) தினுர கலுபஹன (0) ஆகியோர் எதிரணியின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்கவில்லை.

மத்திய மற்றும் பின்வரிசையிலும் அதே கதிதான் தொடர்ந்தது.

ஷாருஜன் சண்முகநாதன் (13), மல்ஷா தருபதி (6), விஷ்வா லஹிரு (0), ருவிஷான் பெரேரா (0), கருக்க சன்கேத் (1) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

எனினும் மறு பக்கத்தில் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சுப்புன் வடுகே 79 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகளுடன் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவரது துடுப்பாட்டமே இலங்கைக்கு   100 ஓட்டங்களைக் கடக்க உதவியது.

பந்துவீச்சில் சச்சியோ வென் வூரென் 23  ஓட்டங்களுக்கு   4 விக்கெட்களையும் ஜொஹானஸ் டி வில்லியர்ஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 27 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

ஒன்பதாம் இலக்க வீரர் ஹன்ரோ பேடன்ஹோஸ்ட் (11), பீட்டர் டெனியல் ப்ளைனோட் (17 ஆ.இ.) ஆகிய இருவரே இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ருவிஷான் பெரேரா, தினுர கலுபஹன ஆகிய இருவரும் மிகவும் அற்புதமாக செயற்பட்டனர்.

ருவிஷான் பெரேரா 3 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 5 ஓவர்கள் 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் தினுர கலுபஹன 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 8 ஓவர்கள் வீசி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அவர்களை விட விஷ்வா லஹிரு 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன்: சுப்புன் வடுகே

1957088175.jpg

1956919129.jpg

supun_waduge.jpg

https://www.virakesari.lk/article/174747

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

 

இலங்கை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ் உடனான போட்டியில் உண்மையான பலம் தெரியவரும். 

ஒம் அண்ணா.........இல‌ங்கை அவுஸ்ரேலியா கூட‌ வென்றால் அவ‌ர்க‌ளின் பல‌ம் தெரியும்
ஆனால் இல‌ங்கை தொடக்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்கின‌ம் இல்லை............உப்பு ச‌ப்பில்லா விளையாட்டு...........கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கிடைச்சால் தான் அதிக‌ ர‌ன் அடிக்க‌ முடியும்
ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை மூன்று விக்கேட்டை ப‌றி கொடுத்தா அதிக‌ ர‌ன்ன‌ எதிர் பார்க்க‌ முடியாது..............

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நமிபியாவிடம் சவாலை எதிர்கொண்ட இலங்கை 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது

24 JAN, 2024 | 09:46 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவின் கிம்பர்லி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) நடைபெற்ற சி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தின் போது நமிபியாவிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட இலங்கை, பந்துவீச்சில் அசத்தி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் பெற்ற சுப்புன் வடுகே, துல்லியமாக பந்துவீசிய ருவிஷான் பெரேரா, விஷ்வா லஹிரு, தினுர கலுபஹன ஆகியோர் இலங்கைக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்து அதன் கௌரவத்தைக் காப்பாற்றினர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இணை அங்கத்துவ நாடாக இருக்கும் நமிபியா இந்தப் போட்டியில் அசாத்திய வெற்றி ஒன்றை ஈட்டும் என கருதும் அளவுக்கு இலங்கையின் துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 37.5 ஓவர்களில் 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஒரு கட்டத்தில் 20 ஓவர்கள் நிறைவில் முன்வரிசை வீரர் ஐவரை இழந்து 71 ஓட்டங்களை மாத்திரம்  இலங்கை  பெற்றிருந்தது.

புலிந்து பெரேரா (3), அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (10), ரவிஷான் டி சில்வா (2) ருசந்த கமகே (17) தினுர கலுபஹன (0) ஆகியோர் எதிரணியின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்கவில்லை.

மத்திய மற்றும் பின்வரிசையிலும் அதே கதிதான் தொடர்ந்தது.

ஷாருஜன் சண்முகநாதன் (13), மல்ஷா தருபதி (6), விஷ்வா லஹிரு (0), ருவிஷான் பெரேரா (0), கருக்க சன்கேத் (1) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

எனினும் மறு பக்கத்தில் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சுப்புன் வடுகே 79 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகளுடன் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவரது துடுப்பாட்டமே இலங்கைக்கு   100 ஓட்டங்களைக் கடக்க உதவியது.

பந்துவீச்சில் சச்சியோ வென் வூரென் 23  ஓட்டங்களுக்கு   4 விக்கெட்களையும் ஜொஹானஸ் டி வில்லியர்ஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 27 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

ஒன்பதாம் இலக்க வீரர் ஹன்ரோ பேடன்ஹோஸ்ட் (11), பீட்டர் டெனியல் ப்ளைனோட் (17 ஆ.இ.) ஆகிய இருவரே இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ருவிஷான் பெரேரா, தினுர கலுபஹன ஆகிய இருவரும் மிகவும் அற்புதமாக செயற்பட்டனர்.

ருவிஷான் பெரேரா 3 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 5 ஓவர்கள் 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் தினுர கலுபஹன 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 8 ஓவர்கள் வீசி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அவர்களை விட விஷ்வா லஹிரு 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன்: சுப்புன் வடுகே

1957088175.jpg

1956919129.jpg

supun_waduge.jpg

https://www.virakesari.lk/article/174747

இல‌ங்கை அணி தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் நிலைத்து நின்று விளையாடின‌ம் இல்லை அண்ணா...........இத‌னால் ந‌டு த‌ர‌ வீர‌ர்க‌ள் ஆமை வேக‌த்தில் விளையாடி மெது மெதுவாய் ர‌ன் எடுக்கின‌ம்.............இனி தான் ப‌ல‌மான‌ அணிக‌ளை ச‌ந்திக்க‌ போகின‌ம்................

கிரிக்கேட்டில் இல‌ங்கை அணி தூக்காத‌ ஒரே ஒரு க‌ப் அது 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பை...........இந்த‌ முறை தூக்க‌ வாய்ப்பு மிக‌ மிக‌ குறைவு..........வ‌ழ‌மை போல இந்தியா தான் தூக்கும்🙏.................

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நியாயம் said:

 

இலங்கை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ் உடனான போட்டியில் உண்மையான பலம் தெரியவரும். 

இன்று அவுஸ்ரேலியா சிம்பாவே கூட‌ விளையாடின‌ விளையாட்டை பார்க்க‌
இல‌ங்கை அணிய‌ சிர‌ம‌ம் இல்லாம‌ வெல்வார்க‌ள் அண்ணா.............இல‌ங்கை அவுஸ்ரேலியா கூட‌தோத்தாலும் அடுத்த‌ குருப்புக்கு போய் விடும் 
அதில் இல‌ங்கை அணி மிக‌ ப‌ல‌மான‌ அணிக‌ள் கூட‌ விளையாட‌னும்.............இந்திய‌ன் இள‌ம் வீர‌ர்க‌ளின் விளையாட்டு அந்த‌ மாதிரி🙏.............. 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.