Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 69
  • Views 4.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    இந்தியா பாக்கிஸ்தான் இங்லாந் தென் ஆபிரிக்கா   இந்த‌ அணிக‌ள் வ‌ர‌க் கூடும்........நியுசிலாந் அணியும் ந‌ல்லா விளையாடின‌ம்.............இதில‌ திற‌மையை காட்டினால் தான் அடுத்த‌ ஜ‌பி

  • நியாயம்
    நியாயம்

    இலங்கை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ் உடனான போட்டியில் உண்மையான பலம் தெரியவரும். 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    இந்த‌ உல‌க‌ கோப்பை 30வ‌ருட‌த்துக்கு மேலாக‌ ந‌ட‌த்தின‌ம்............இதில‌ திற‌மையை காட்டி தான் விராட்  கோலி இந்திய‌ அணியில் 2008க‌ளில் இட‌ம் பிடித்த‌வ‌ர்.........அதே ஆண்டு 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை!

26 JAN, 2024 | 12:00 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 16 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 'சி' குழுவில் இடம்பெறும் இலங்கை, சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

ஆபிரிக்க நாடுகளான ஸிம்பாப்வேயை டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 36 ஓட்டங்களாலும் நமிபியாவை 77 ஓட்டங்களாலும் வெற்றி கொண்டதன் மூலம் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை முன்னேறியுள்ளது.

இந்த இரண்டு போட்டிகளைத் தொடர்ந்து தனது குழுவில் இடம்பெறும் பலம்வாய்ந்த அவுஸ்திரேலியாவை கிம்பர்லியில் நாளை சனிக்கிழமை (27) நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில் இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

இரண்டு அணிகளும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெற்றுவிட்டதால் கடைசி லீக் போட்டி முடிவு இரண்டு அணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை.

இந்த வருட இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் றோயல் கல்லூரி வீரர் சினேத் ஜயவர்தனவின் தலைமையிலான இலங்கை அணி பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை.

spo3.gif

ஸிம்பாப்வே அணிக்கு எதிரான தனது ஆரம்பப் போட்டியில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான தினுர கலுபஹன (60), ஷாருஜன் சண்முகநாதன் (41 ஆ.இ.), ரவிஷான் டி சில்வா (31), ருசந்த கமகே (31) ஆகியோர் நிதானமாகத் துடுப்பெடுத்தாடியதன் பலனாக இலங்கை 204 ஓட்டங்களைப் பெற்றது.

மல்ஷா தருப்பதி 4 விக்கெட்களையும் ருவிஷான் பேரேரா, விஷ்வா லஹிரு ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றி ஸிம்பாப்வேயை 89 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர்.

நமிபியாவுக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில்  இலங்கை  பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட து. 

எனினும், சுப்புன் வடுகே மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்று இலங்கை 133 ஓட்டங்களை மொத்த எண்ணிக்கையாக பெற உதவினார்.

பந்துவீச்சில் ருவிஷான் பெரேரா, விஷ்வா லஹிரு ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் தினுர கலுபஹன 2 விக்கெட்களையும் கைப்பற்றி நமிபியாவை 56 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி இலங்கையை 77 ஓட்டங்களால் வெற்றிபெற உதவினர்.

spo2.gif

இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை இளையோர் அணியின் ஆட்டத்திறன்கள் திருப்திகரமாக அமையவில்லை.

இந் நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் இலங்கை அணி சகல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்த வேண்டிவரும்.

இக் குழுவில் ஸிம்பாப்வேயை 225 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா, 2ஆவது போட்டியில் நமிபியாவிடம் கடும் சவாலை எதிர்கொண்டு 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

எனவே, நமிபியாiவிட திறமையாக இலங்கை பந்துவீசினாலன்றி அவுஸ்திரேலியாவை வெற்றிகொள்வது இலகுவல்ல.

இது இவ்வாறிருக்க, ஏ குழுவிலிருந்து இந்தியாவும் பி குழுவிலிருந்து இங்கிலாந்தும், டி குழுவிலிருந்து பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளும் சுப்பர் சிக்ஸில் விளையாடுவதை உறுதி செய்துகொண்டுள்ளன.

https://www.virakesari.lk/article/174830

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்த சுற்றுக்கு செல்கின்றதோ?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயம் said:

மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்த சுற்றுக்கு செல்கின்றதோ?

ஓம் அண்ணா

அவ‌ர்க‌ளின் குருப்பில் அவ‌ர்க‌ள் தான் முத‌ல் இட‌ம்

அப்கானிஸ்தான் விளையாடின‌ அனைத்து போட்டியிலும் தோல்வி.........உல‌க‌ கோப்பையில் இருந்து அப்கானிஸ்தான் வெளிய‌🙈............

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி ஆறு குழுக்களில் சிறிலங்காவும் உள் நுழைந்துள்ளதாம். 

நான் இத்தொடரை அதிகம் தொடரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ஓம் அண்ணா

அவ‌ர்க‌ளின் குருப்பில் அவ‌ர்க‌ள் தான் முத‌ல் இட‌ம்

அப்கானிஸ்தான் விளையாடின‌ அனைத்து போட்டியிலும் தோல்வி.........உல‌க‌ கோப்பையில் இருந்து அப்கானிஸ்தான் வெளிய‌🙈............

இல்லை செல்லவில்லை போல. அவர்கள் குழுவில் தென் ஆபிரிக்காவும், இங்கிலாந்தும் முன்னணியில் உள்ளன. சாரசரி ஓட்ட விகிதம் அடிப்படையில் இன்று தென் ஆபிரிக்கா முன்னணிக்கு வந்துள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நியாயம் said:

இல்லை செல்லவில்லை போல. அவர்கள் குழுவில் தென் ஆபிரிக்காவும், இங்கிலாந்தும் முன்னணியில் உள்ளன. சாரசரி ஓட்ட விகிதம் அடிப்படையில் இன்று தென் ஆபிரிக்கா முன்னணிக்கு வந்துள்ளது. 

ஒவ்வொரு குருப்பிலும் முத‌ல் மூன்று இட‌ங்க‌ள் பிடிக்கும் அணிக‌ள் 
உள்ள‌ க‌ட‌சி இட‌ம் பிடிக்கும் அணிக‌ள் வெளிய‌..........அதாவ‌து 4வ‌து இட‌ம் பிடித்த‌ அணிக‌ள் வெளிய‌ 

கிட்ட‌ த‌ட்ட‌ ஆர‌ம்ப‌ சுற்று முடிந்து விட்ட‌ன‌  தென் ஆபிரிக்கா அணி அனைத்து விளையாட்டிலும் மிக‌ சிற‌ப்பாக‌ விளையாடிச்சின‌ம்.........இவை 2014ம் ஆண்டு 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பையை முத‌ல் தூக்கின‌வை இந்த‌ முறையும் தூக்க‌ கூடும் சொந்த‌ நாட்டில் ந‌ட‌ப்ப‌தால் கூடுத‌ல் ப‌ல‌ம்............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இறுதி ஆறு குழுக்களில் சிறிலங்காவும் உள் நுழைந்துள்ளதாம். 

நான் இத்தொடரை அதிகம் தொடரவில்லை.

இந்த‌ உல‌க‌ கோப்பை 30வ‌ருட‌த்துக்கு மேலாக‌ ந‌ட‌த்தின‌ம்............இதில‌ திற‌மையை காட்டி தான் விராட்  கோலி இந்திய‌ அணியில் 2008க‌ளில் இட‌ம் பிடித்த‌வ‌ர்.........அதே ஆண்டு 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையை கோலி த‌ல‌மையிலான‌ இந்திய‌ அணி வென்றார்க‌ள்............அப்ப‌வே ர‌ன் மிசினின் திற‌மையை க‌ண்ட‌ ப‌டியால் அதே ஆண்டு தேசிய‌ அணியிலும் விளையாட‌ விட்ட‌வை..........வ‌ருங்கால‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ளை காண‌ ந‌ட‌த்த‌ப்ப‌டும் உல‌க‌ கோப்பை இது இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு ஒருக்கா ந‌ட‌க்கும்

தினேஸ் கார்த்திக் ம‌ற்றும் சுரேஸ் ரையினா இவ‌ர்க‌ள் 2004ம் ஆண்டு 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் விளையாடி திற‌னைய‌ நிருபிக்க‌ இவ‌ர்க‌ள் இருப‌ருக்கும் இந்திய‌ அணியில் உட‌ன‌ இட‌ம் கிடைச்ச‌து..........தினேஸ் கார்த்திக் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் 2004க‌ளில் அறிமுக‌ம் ஆனார்..........சுரேஸ் ரையினா 2005க‌ளில் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் அறினுக‌ம் ஆனார்...........சுரேஸ் ரையினா சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் அணிக்கு விளையாடின‌தை பார்த்து இருப்பிங்கள் என்று நினைக்கிறேன்...........19வ‌ய‌து உல‌க‌ கோப்பை இல்லை என்றால் தினேஸ் கார்த்திக்கும் ச‌ரி சுரேஸ் ரையினாவும்  இந்திய‌ அணியில் அந்த‌க் கால‌த்தில் இட‌ம் பிடித்து இருக்க‌ மாட்டின‌ம்...........வ‌ழ‌மை போல‌ கிழ‌டுக‌ளை தொட‌ர்ந்து அணியில் வைத்து இருப்பின‌ம்...........

பும்ரா , கார்ரிக் பாண்டியா எல்லாம் 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ வில்லை ஜ‌பிஎல்ல‌ திற‌மைய‌ காட்ட‌ உட‌ன‌ ச‌ர்வ‌தேச‌ போட்டியில் விளையாட‌ விட்ட‌வை தேர்வுக்குழு...............இப்ப‌ கில‌ப் விளையாட்டுக்க‌ள் நாளுக்கு நாள் அதிகம் ந‌ட‌ப்ப‌தால் அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ள் தேசிய‌ அணியில் இட‌ம் பிடிக்கின‌ம்.................

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

ஒவ்வொரு குருப்பிலும் முத‌ல் மூன்று இட‌ங்க‌ள் பிடிக்கும் அணிக‌ள் 
உள்ள‌ க‌ட‌சி இட‌ம் பிடிக்கும் அணிக‌ள் வெளிய‌..........அதாவ‌து 4வ‌து இட‌ம் பிடித்த‌ அணிக‌ள் வெளிய‌ 

கிட்ட‌ த‌ட்ட‌ ஆர‌ம்ப‌ சுற்று முடிந்து விட்ட‌ன‌  தென் ஆபிரிக்கா அணி அனைத்து விளையாட்டிலும் மிக‌ சிற‌ப்பாக‌ விளையாடிச்சின‌ம்.........இவை 2014ம் ஆண்டு 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பையை முத‌ல் தூக்கின‌வை இந்த‌ முறையும் தூக்க‌ கூடும் சொந்த‌ நாட்டில் ந‌ட‌ப்ப‌தால் கூடுத‌ல் ப‌ல‌ம்............

நீங்கள் சொல்வதின்படி பார்த்தால் 12 அணிகள் அல்லவா வரப்போகின்றது? அடுத்த சுற்று நொக் அவுட் சுற்று தானே? எட்டு அணிகள் தானே?

Edited by நியாயம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

நீங்கள் சொல்வதின்படி பார்த்தால் 12 அணிகள் அல்லவா வரப்போகின்றது? அடுத்த சுற்று நொக் அவுட் சுற்று தானே? எட்டு அணிகள் தானே?

https://www.espncricinfo.com/series/icc-under-19-world-cup-2023-24-1399722/match-schedule-fixtures-and-results

கிறிக்கின்போ அட்டவணையில் முதல் 3 அணிகளும் விளையாடுவதாகப் போட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த விளையாட்டை  அதிகம் பார்க்கவில்லை.........பையனின் விமர்சனத்தைப் பார்க்கும்போது விளையாட்டு செம்மையாய் இருக்கும் போல் இருக்கின்றது......பார்க்கலாம்......பார்ப்பம்......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, suvy said:

நான் இந்த விளையாட்டை  அதிகம் பார்க்கவில்லை.........பையனின் விமர்சனத்தைப் பார்க்கும்போது விளையாட்டு செம்மையாய் இருக்கும் போல் இருக்கின்றது......பார்க்கலாம்......பார்ப்பம்......!  😁

அண்ணை எதிர்கால கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தானே!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயம் said:

நீங்கள் சொல்வதின்படி பார்த்தால் 12 அணிகள் அல்லவா வரப்போகின்றது? அடுத்த சுற்று நொக் அவுட் சுற்று தானே? எட்டு அணிகள் தானே?

6 hours ago, ஏராளன் said:

https://www.espncricinfo.com/series/icc-under-19-world-cup-2023-24-1399722/match-schedule-fixtures-and-results

கிறிக்கின்போ அட்டவணையில் முதல் 3 அணிகளும் விளையாடுவதாகப் போட்டிருக்கிறது.

Screenshot-20240128-125039-Flashscore.jp

இதிலும் முத‌ல் மூன்று இட‌ங்க‌ளை பிடிக்கும் அணிக‌ள் தான் அடுத்த‌ சுற்றுக்கு போவ‌தாக‌ போட்டு இருக்கு அண்ணா.............ச‌கோத‌ர‌ர் நாய‌ம் த‌வ‌றாக‌ விள‌ங்கி விட்டார் போல் இருக்கு.................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நான் இந்த விளையாட்டை  அதிகம் பார்க்கவில்லை.........பையனின் விமர்சனத்தைப் பார்க்கும்போது விளையாட்டு செம்மையாய் இருக்கும் போல் இருக்கின்றது......பார்க்கலாம்......பார்ப்பம்......!  😁

கிரிக்கேட்டில் இந்த உல‌க‌ கோப்பை மிக‌ முக்கிய‌ம் சுவி அண்ணா............இதில‌ திற‌மையை காட்டின வீர‌ர்க‌ளுக்கு கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு..............
அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் அனைத்து விளையாட்டிலும் தோல்வி..........முன்னைய‌ 19வ‌ய‌து உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தான் இள‌ம் வீர‌ர்க‌ள் ந‌ல்லா விளையாடின‌வை அதில் திற‌மையை காட்டின‌ வீர‌ர்கள் தான் அப்கானிஸ்தான் தேசிய‌ அணியிலும் ம‌ற்றும் ஜ‌பிஎல்ல‌ க‌ல‌க்கின‌ம்..............இல‌ங்கை அணியில் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஒரு த‌மிழ‌ன் இட‌ம் பிடித்து இருக்கிறார்..........விளையாடின‌ மூன்று விளையாட்டில் இர‌ண்டு விளையாட்டில் ந‌ல்லா விளையாடினார்🙏🥰..............

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையா தமிழில் சிறிய விளக்கம் கொடுத்து இணையுங்கோ.
எந்தெந்த அணிகள் விளையாடுகிறார்கள் என்பது போன்ற விபரங்களை போட்டால் பார்க்க உந்துதலாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்போது பார்த்தேன். இரண்டாவது சுற்றில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். கால் இறுதி இல்லை.  

ஆனால், இரண்டு குழுக்களையும் பார்த்த அளவில் இரண்டும் சமநிலையில் காணப்படுவது போல தென்படவில்லை. 

இலங்கை அணி உள்ள குழு மிகவும் பலமானது. இங்கே போட்டியிட்டு அரையிறுதிக்கு செல்வது சாத்தியமா தெரியவில்லை. ஆனால் என்ன ஒரு காலத்தில் தேசிய அணிக்காக விளையாடப்போகும் எதிர்கால நட்சத்திரங்களுக்கு நல்ல பயிற்சி, அனுபவம் இங்கு கிடைக்கும்.   

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நியாயம் said:

அண்ணா முத‌ல் மூன்று இட‌ங்க‌ள் பிடித்த‌ அணிக‌ள்
சூப்ப‌ர் சிக்ஸ்சுக்கு போகின‌ம் 

அதில் இர‌ண்டு குருப் இருக்கு...........ஒவ்வொரு அணிக‌ளும் இர‌ண்டு த‌ர‌ம் ம‌ற்ற‌ அணிக‌ளுட‌ன்   விளையாட‌னும்.............அந்த‌ இர‌ண்டு குருப்பில் முத‌ல் இர‌ண்டு இட‌த்தை பிடிக்கும் அணிக‌ள்  சிமி பின‌லுக்கு போவின‌ம்...........

இப்ப‌ புரியுதா அண்ணா......................

Screenshot-20240129-204211-ESPNCricinfo.

ஆர‌ம்ப‌ சுற்றில் பெற்ற‌ புள்ளிக‌ள் சூப்ப‌ர் சிக்ஸ் ப‌ட்டிய‌லும் இருக்கும் அண்ணா...........உதார‌ண‌த்துக்கு சூப்ப‌ர் சிக்ஸ்சில் இந்தியா ஒரு  ம‌ச்சிலும் தோத்தா கூட‌ இந்தியா சிமிபின‌லுக்கு போகும் அள‌வுக்கு ஆர‌ம்ப சுற்று போட்டியில் அதிக‌ புள்ளிய‌  பெற்றுள்ளார்க‌ள்............இலங்கை சிமி பின‌லுக்கு போகுவில் க‌ண்டிப்பாய் இர‌ண்டு ம‌ச்சும் வெல்ல‌னும் ஏன் என்றால் அவுஸ்ரேலியாவிட‌ம் இல‌ங்கை தோத்த‌ ப‌டியால்.............

இந்தியா

பாக்கிஸ்தான்

இலங்கை

அவுஸ்ரேலியா.........இவ‌ர்க‌ள் சிமி பின‌லுக்கு போக‌க் கூடும்

ஒவ்வொரு அணியும் இர‌ண்டு முறை தான் விளையாட‌லாம் அதில் புள்ளி ப‌ட்டிய‌லில் முத‌ல் இர‌ண்டு இட‌ம் பிடித்த‌ அணிக‌ள் சிமி பின‌லுக்கு

சிமி பின‌லில் வென்ற‌ இர‌ண்டு அணிக‌ள் பின‌லில் விளையாடுவின‌ம்.....................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

அரை இறுதி விடயத்தில் இலங்கை, மேற்கிந்திய தீவுகளை விட  அவுஸுடன், தென் ஆபிரிக்கா/இங்கிலாந்து செல்வதற்கு வாய்ப்பு அதிகம் தானே? மற்றைய குழுவில் இந்தியாவுடன் பாகிஸ்தான்/நியூசிலாந்து/பங்களாதேஷ் போகும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத்தில் ஆஸி.யிடம் இலங்கைக்கு முதலாவது தோல்வி

Published By: DIGITAL DESK 3   29 JAN, 2024 | 11:15 AM

image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சி குழுவில் இடம்பெறும் இலங்கை முதலாவது தோல்வியைத் தழுவியது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கிம்பர்லியில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை தோல்வி அடைந்தது.

இலங்கை இதுவரை பங்குபற்றிய 3 லீக் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதுடன் 208 ஓட்டங்களையே (49.5 ஓவர்களில்) அதிகப்பட்ச மொத்த எண்ணிக்கையாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பெற்றது.

இலங்கை துடுப்பாட்டத்தில் ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒரு வீரர் மாத்திரமே 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெறுகிறார். ஏனையவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காதது இலங்கை அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.

அவுஸ்திரேலியாவுடனான போட்டியிலும் தினுர கலுபஹன மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார்.

ஆரம்ப வீரர் புலிந்து பெரேரா தொடர்ந்து துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காததுடன் இன்றைய போட்டியில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (16), சுப்புன் வடுகே (17) ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஓரளவு தெம்பை ஊட்டினர்.

தொடர்ந்து ரவிஷான் டி சில்வாவுடன் 4ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களையும் ருசந்த கமகேயுடன் 5ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களையும் தினுர கலுபஹன பகிர்ந்து அணியை ஒரளவு நல்ல நிலையில் இட்டார். ஆனால், இந்த மூவரும் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

ரவிஷான் டி சில்வா 30 ஓட்டங்களையும் ருசந்த கமகே 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

தினுர கலுபஹன 78 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 64 ஓட்டங்களைப் பெற்றனர்.

மத்திய வரிசையில் ஷாருஜன் சண்முகநாதன் 21 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் கெலம் விட்லர் 28 ஓட்டங்களக்கு 3 விக்கெட்களையும் மாஹ்லி பியடமன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டொம் கெம்பெல் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 48.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஹெரி டிக்சன் (49), சாம் கொன்ஸ்டாஸ் (23) ஆகிய இருவரும் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எனினும், அவர்கள் இருவரைத் தொடர்ந்து மேலும் இருவர் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (129 - 4 விக்.)

ஆனால், ரெயான் ஹிக்ஸ், டொம் கெம்பெல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

ரெயான் ஹிக்ஸ் 77 ஓட்டங்களுடனும் டொம் கெம்பெல் 33 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் விஷ்வா லஹிரு 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

2801_ryan_hicks_u_19_aus_vs_sl__2_.png

https://www.virakesari.lk/article/175030

  • கருத்துக்கள உறவுகள்

14 hours ago, நியாயம் said:

அரை இறுதி விடயத்தில் இலங்கை, மேற்கிந்திய தீவுகளை விட  அவுஸுடன், தென் ஆபிரிக்கா/இங்கிலாந்து செல்வதற்கு வாய்ப்பு அதிகம் தானே? மற்றைய குழுவில் இந்தியாவுடன் பாகிஸ்தான்/நியூசிலாந்து/பங்களாதேஷ் போகும். 

நியுசிலாந் இந்தியா கூட‌ ப‌டு தோல்வி
இல‌ங்கை பெரிய‌ ஸ்கோர் அடிச்சும் வெஸ் இண்டீஸ்  வென்று விட்டார்க‌ள்..............வெஸ் இண்டீஸ் வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌ ப‌டியால் இல‌ங்கையை வென்று விட்டின‌ம்...........கூட்டி க‌ழித்து பார்த்தால் இந்தியா தான் கோப்பையுட‌ன் நாடு திரும்பும்.............

  • கருத்துக்கள உறவுகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.