Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் அட்டகாசம்?

adminJanuary 20, 2024
mannar.jpg?fit=1170%2C658&ssl=1

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (19.01.24) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவவற்துறையினர் சம்பவ இடத்தில் மக்கள் மீது கடுமையாக தாக்கி விபத்தை ஏற்படுத்திய பேருந்தையும்,அதன் சாரதியையும் காப்பாற்றிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு வைத்தியசாலையில் இல் இருந்து சற்று தொலைவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,

-சிறிய ரக பேருந்து –மன்னார் யாழ் பிரதான வீதியூடாக பயணித்த போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மீது குறித்த பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

-இதன் போது கோயில் குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற பகுதி அடம்பன் காவற்துறைப்  பிரிவுக் குற்பட்டதாக காணப்பட்ட போதும், இலுப்பைக்கடவை காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உண்மை நிலையை அறிந்து கொள்ளாது உயிரிழந்த மற்றும்,படு காயமடைந்தவர்களின் உறவினர்கள் அவ்விடத்தில் கூடிய போது அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதோடு,விபத்தை ஏற்படுத்திய தனியார் போரூந்தையும்,அதன் சாரதியையும் மீட்டு இலுப்பைக்கடவை காவல்  நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்ப இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

-இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அடம்பன் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்ற  இலுப்பைக்கடவை காவல்  நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இலுப்பைக்கடவை காவற்த்துறையினரின் நடவடிக்கை குறித்து விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவற்துறை  அத்தியட்சகர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட வில்லை எனவும்,இலுப்பைக்கடவை காவற்துறை பிரிவில் மணல் மண் கடத்தல் காரர்களிடம் பாரிய அளவில் லஞ்சம் பெற்று மணல் வியாபரத்திற்கு அனுமதியை இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க வழங்கி வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
https://globaltamilnews.net/2024/199945/

@Cruso அவர்களே, இந்த அட்டகாசத்தை இல்லாமல் செய்ய ஏதாவது வழிவகைகள் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் பள்ளமடு பிரதான வீதியில் விபத்து - ஒருவர் சம்பவ இடத்தில் பலி

20 JAN, 2024 | 11:15 AM
image
 
மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் . 

நேற்று  வெள்ளிக்கிழமை (19) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், 

சிறிய ரக பஸ்ஸொன்று மன்னார் - யாழ் பிரதான வீதியூடாக பயணித்த போது அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது . 

இதன் போது கோயில் குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அதே பகுதியை சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்தி பஸ் சாரதியை அயலவர்கள் தாக்க முயன்ற போது இலுப்பைக்கடவை பொலிஸார் அதை தடுத்து பஸ் சாரதியை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர் . 

அத்துடன் விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் . 

WhatsApp_Image_2024-01-19_at_10.32.34_PM

WhatsApp_Image_2024-01-19_at_10.32.38_PM

WhatsApp_Image_2024-01-19_at_10.32.35_PM

https://www.virakesari.lk/article/174373

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

@Cruso அவர்களே, இந்த அட்டகாசத்தை இல்லாமல் செய்ய ஏதாவது வழிவகைகள் உண்டா?

ஐயோ நான் ஒன்றும் அரசியல்வாதியும் இல்லை அரசாங்கத்திலும் இல்லை. என்னை மக்கள் தெரிவு செய்தால் நிச்சயமாக ஒரு முடிவு காட்டுவேன். இது அரசியல் வாதியான பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலத்தின் ஊர். அவரே இதெல்லாம் பார்த்து சிரித்துவிட்டு போகும்போது நான் என்ன செய்ய முடியும்.

பொலிஸாரின் அடடாகாசம் அங்கு மட்டுமில்லை எல்லா இடமும் தான் நடக்கிறது. நேற்று நாரம்மல என்னும் இடத்தில சும்மா போன ஒருவனை வாகனத்தை நிறுத்தி மணடயில் போட்டு விடடான் ஒரு  போலீஸ்காரன். அங்கு பெரிய குழப்பம். அதட்கு முதல் காலியில் ஒரு போலீஸ்காரனை சுட்டு தள்ளி விடடாரக்ள். எல்லா இடமும்தான் நடக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Cruso said:

உண்மைதான் ,ஐக்கிய இலங்கை என்றால் அப்படித்தான் இருக்க வேணும் ....ஆனால் வடபகுதியில் எக்கநாயக்க செய்த வேலையை தெற்கில் ஏகாம்பரம் அல்லது எட்வேர்ட் பஸ்டியாம்பிள்ளை செய்யும் நிலை இருக்க வேண்டும் ....முடியமா ? 
சைவக் கோவில்கள் தெற்கில் உண்டு
ஏன் பெள்த்த விகாரைகள் வத்கில் இருக்க கடாது என சொல்வது போல உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

அதாவது வடக்கில் ஏகாம்பரம் செய்ய வேண்டும் தேடகில் ஏக்கநாயக்க செய்ய வேண்டும் என்று சொல்ல வருகிறீர்கள். அது இப்போதைக்கு நடக்காது. சில வேளைகளில் ஈழம் கிடைத்த பின்னர் அப்படி நடக்கலாம்.

கோவில்கள்  பற்றி ஒப்பிட்டு பேசி இருந்தீர்கள். ஒப்பிட வேண்டாம் , அப்படிதான் இருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Cruso said:

கோவிலகளை ஒப்பிட வேண்டும் ....
ஆயுத படைகள் நிறுவும் கோவில்களும்,மக்கள் சொந்த பணத்தில் கட்டும் கோவில்களுக்கும் வித்தியாசம் உண்டு என நான் நினைக்கிறேன் ..ஆயுத பலத்தின் ஊடாக மக்களுக்கு மத அடையாளங்களையும் மதங்களையும் பரப்புதல் ஐக்கிய இலங்கைக்கு அழகல்ல....

ஒரு இனத்தின் மத நம்பிக்கையை அழித்து ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரத்தை பாவித்து மதங்களை பரப்புதல் ஏற்புடையது அல்ல...

ஐக்கிய இலங்கை  வேணும் என்றால் தெற்கில் ஏகாம்பர்ம் அட்டுழியம் செய்ய வேண்டும் வடக்கில் எக்கநாயக்க செய்ய வேண்டும் ...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

கோவிலகளை ஒப்பிட வேண்டும் ....
ஆயுத படைகள் நிறுவும் கோவில்களும்,மக்கள் சொந்த பணத்தில் கட்டும் கோவில்களுக்கும் வித்தியாசம் உண்டு என நான் நினைக்கிறேன் ..ஆயுத பலத்தின் ஊடாக மக்களுக்கு மத அடையாளங்களையும் மதங்களையும் பரப்புதல் ஐக்கிய இலங்கைக்கு அழகல்ல....

ஒரு இனத்தின் மத நம்பிக்கையை அழித்து ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரத்தை பாவித்து மதங்களை பரப்புதல் ஏற்புடையது அல்ல...

இதட்கு முன்னரும் இது பற்றி எழுதி இருந்தேன். எமது பிஷப் ராயப்பு ஜோசெப் அவர்களே ஒரு முறை கூறி இருந்தார் பெரும்பான்மையினருக்கு சிறு பான்மையினர் அடங்க வேண்டுமென்று. அது சிங்களவர்களுக்கு எதிராக தமிழர்கள் இருக்க வேண்டுமென்பதட்காக கூறவில்லை. மன்னாரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பெரும்பான்மையினருக்கு சிறுபான்மை கிறிஸ்தவர்கள் அடங்கி போக வேண்டு மென்று கூறினார். இது பற்றி நிறையவே எழுதி விடதேன். இனி எழுதப்போறதில்லை. இவர் ஒரு தீவிர தமிழ் ஈழ விடுதலை போராளி என்பதை மறந்து விட வேண்டாம். எனவே பெரும்பான்மை மக்கள் செய்வது ஏற்று கொள்ளுவோம். 

ஐக்கிய இலங்கை  வேணும் என்றால் தெற்கில் ஏகாம்பர்ம் அட்டுழியம் செய்ய வேண்டும் வடக்கில் எக்கநாயக்க செய்ய வேண்டும் ...

தமிழ் ஈழம் கிடைத்தாலும் அது நடக்காது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.