Jump to content

கிளிநொச்சியில் அதிகாலை நடந்த கோர விபத்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் அதிகாலை நடந்த கோர விபத்து!

 

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து, விதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின் வேனுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில்  சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.samakalam.com/கிளிநொச்சியில்-அதிகாலை-ந/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விபத்து செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். அது ஒரு கோரக்காட்சி. 

பேருந்து ஓட்டுனர் கண் மண் தெரியாமல் வாகனத்தை ஓட்டினாரோ?

எட்டு மாடுகள் ஒரே நேரத்தில் பேருந்து முன்னால் வர வாய்ப்பில்லை. மாடுகள் சாரதியின் கண்களில் முன்கூட்டியே தென்படவில்லையோ. 

தெருவில் மிருகங்கள் காணப்பட்டால் வேகத்தை குறைத்து அவதானமாக வாகனத்தை ஓட்டவேண்டும் என பேருந்து சாரதிகளுக்கு தெரியாதோ அல்லது சொல்லிக்கொடுக்கப்படுவது இல்லையோ. 

வாகன சாரதிகள் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மீண்டும் பயிற்சி எடுக்கவும், வீதி பரீட்சை சித்தி அடையவும் வேண்டும் எனும் நடைமுறை கொண்டு வரப்படவேண்டும் அப்படி ஏதும் இல்லை என்றால். 

தவிர ஒரு வருடத்துக்கு ஒரு தடவையாவது வாகனம் ஓட்டுதல் சம்மந்தமான கல்வியூட்டல் வழங்கப்பட வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி - ஆனையிறவு விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

Published By: DIGITAL DESK 3   02 FEB, 2024 | 10:04 AM

image

கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் சதீஸ்குமார் (வயது 25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இருந்து இரணைமடுவுக்கு மாடுகளை கொண்டு சென்றுள்ளார். இதன்போது வீதியால் வந்த அரச பஸ் குறித்த நபரையும் அவரது 8 மாடுகளையும் மோதிவிட்டு, தவறான பக்கத்துக்கு சென்று, எதிரே வந்த ஹையேஸ் ரக வாகனத்தையும் மோதியது.

இதன்போது 8 மாடுகளும், இளம் குடும்பப்பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றையதினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். அரச பஸ் சாரதி அளவுக்கு அதிகமான மது போதையில் காணப்பட்டதாக, மரண விசாரணைகளின் போது பொலிஸார் தெரிவித்தனர். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/175356

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

அரச பஸ் சாரதி அளவுக்கு அதிகமான மது போதையில் காணப்பட்டதாக, மரண விசாரணைகளின் போது பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்சில்  பலரை ஏற்றிச் செல்லும் பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் சாரதி மது அருந்தலாமா?
மது தான்... முக்கியம் என்றால், ஏன் இந்த பொறுப்பு மிக்க பதவிகளுக்கு வருகின்றார்கள்.
இவர்களால்... பஸ்சில் பயணம் செய்ப்வர்களுக்கும் ஆபத்து, வீதியால் செல்லும் பொதுமக்களுக்கும், மற்ற வாகனங்களுக்கும் ஆபத்து. 😡

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பஸ்சில்  பலரை ஏற்றிச் செல்லும் பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் சாரதி மது அருந்தலாமா?
மது தான்... முக்கியம் என்றால், ஏன் இந்த பொறுப்பு மிக்க பதவிகளுக்கு வருகின்றார்கள்.
இவர்களால்... பஸ்சில் பயணம் செய்ப்வர்களுக்கும் ஆபத்து, வீதியால் செல்லும் பொதுமக்களுக்கும், மற்ற வாகனங்களுக்கும் ஆபத்து. 😡

பயணத்தின் நடுவே சிற்றுண்டிக்காக வாகனத்தை நிறுத்தும் இடத்தில் உள்ள உணவகங்கள், நடத்துனரையும் ஓட்டுனரையும் மகிழ்விப்பதற்காக தங்கள் உணவகங்களின் உள்ளே அவர்களைத் தனியே விசேடமாகக் கவனிப்பார்கள். அங்கேதான் இந்த திருவிளையாடல்கள் இடம்பெறுகிறது. 

  • Like 2
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.