Jump to content

கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கெஹலியவின் விளக்கமறியலில் நீடிப்பு!

தரமற்ற ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/301022

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Published By: VISHNU

20 MAY, 2024 | 06:33 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் 20 ஆம் திகதி திங்கட்கிழமை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கிலேயே முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/184075

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

03 JUN, 2024 | 03:26 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரை ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று (3) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (3) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் 4 ஆவது சந்தேக நபர் 5 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/185209

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

14 JUN, 2024 | 06:28 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (14) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/186096

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2024 at 02:39, ஈழப்பிரியன் said:

அங்க வைத்து ஐயாவுக்கு பழுதான மருந்துகளை ஏற்ற வேண்டும்.

 

On 2/3/2024 at 01:56, ஏராளன் said:

அவரது உடல்நலக்குறைவு தொடர்பில் நீதிமன்றத்துக்கு போலியான தகவல்களை முன்வைத்த சிறைச்சாலை வைத்தியர்  தொடர்பில் கட்டளையை பிறப்பிக்குமாறும் குறிப்பிட்டார்.

மருந்தேதும் ஏற்றாமலேயே சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.  பலரை கொல்லும்போது மரண பயம் தெரிவதில்லை, அப்பாவிகளை சிறைக்கு அனுப்பும்போது அவர்களின் நோய்கள், கவலைகள், நிஞாயங்கள் புரிவதில்லை. தமக்கென்று வரும்போது அத்தனையும் வந்துவிடும் அரசியல்வாதிகளுக்கு. என்ன...... இத்தனை வாதிப்பிரதிவாதங்கள் நடந்து அவர்களை சிறைக்கு அனுப்பினாலும் நாளைக்கு எதுவும் நடவாததுபோல் நாட்டுக்காக சிறை சென்ற வீரர்களாக வரவேற்கப்பட்டு இன்னொரு அமைச்சு கொடுக்கப்பட்டு இன்று இழந்ததை நாளை மீட்டுக்கொள்வார்கள். நாட்டிலே அனர்த்தம், தட்டுப்பாடு, போராட்டம் இப்படி ஏதும் நடந்தாலே அரசியல் வாதிகளின் வங்கிக் கணக்குகளில் பணமழை பொழியும். இவருக்குப்பின்னால் மறைந்திருக்கும் முதலைகள் அகப்படுவார்களா அல்லது வெறும் நாடகந்தானா? இல்லை ..... இப்படி எத்தனையோ கொலை வழக்குகள் பிரபல்யமாக நடந்து தண்டனை அறிவித்து இன்று பதவி சுகத்தோடு இருக்கிறார்கள். வெறும்  காலம் சக்தி பண வாத விரையம்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 22 JUN, 2024 | 09:38 AM   யாழில்  இளைஞன் ஒருவரிடமிருந்து பதிவற்ற மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாள்களையும் நேற்று வெள்ளிக்கிழமை (21) யாழ்ப்பாணம் பொலிஸார் கைப்பற்றினர்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட  சோதனை நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் பொலிஸார்  சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் வாகனமொன்றினை வழிமறித்துச் சோதனையிட்ட நிலையில் வாகனப்பதிவின்றி வாகனம் பயணித்தமை தெரியவந்தது.  இதனையடுத்து குறித்த இளைஞரை கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்  சந்தேக நபரது வீட்டிலிருந்து 5 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/186674
    • Published By: VISHNU 21 JUN, 2024 | 11:51 PM   வவுனியா பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலைக்குச் செல்லும் குறித்த  வீதியில் நீண்டகாலமாக வாகன நெரிசல் ஏற்ப்பட்டுவருகின்றது,இதனால் அந்த வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததுடன் நோயாளர்காவு வண்டிகளும் சிரமத்துடனேயே பயணிக்கவேண்டியிருந்தது.   இந்நிலையில் குறித்த வீதியானது எதிர்வரும் வாரங்களிலிருந்து ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.  அந்தவகையில் வவுனியா கண்டி வீதி வழியாக வருகைதரும் பொதுமக்கள் வழமைபோல வைத்தியசாலை சுற்று வட்டத்தினை பயன்படுத்தி வைத்தியசாலை வீதியால் தமது பயணத்தினை மேற்கொள்ள முடியும். அத்துடன் பூந்தோட்டம் பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு வருகைதரும் பொதுமக்கள் கித்துள் வீதியினையோ அல்லது குளவீதியினை பயன்படுத்தி வைத்தியசாலைக்குச் செல்ல முடியும்.  இது தொடர்பான தீர்மானங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சிரமங்கள் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம், நகரசபை,பிரதேசசெயலகம், பொலிசார் ஆகியவை இணைந்து கலந்துரையாடி தீர்க்கமான முடிவினை எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/186664
    • இல்லை இணையவன் அது அரைவாசி தப்பு .......பெண் சிங்கங்கள் சும்மா சும்மா ஆண்சிங்கங்களை அதட்டி வெருட்டி அ சிங்கப் படுத்திக்க கொண்டிருக்கும் ......நம்ம வீடுகள் போலத்தான் அங்கேயும்......ஆனால்  வேட்டை என்று வந்துவிட்டால் ஆண் சிங்கம் சிங்கன்தான் .........!  😂
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.