Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக மருந்து தட்டுப்பாடு குறித்த போலியான அச்சத்தை ஏற்படுத்தினார் கெஹெலிய – பிரதி சொலிசிட்டர் ஜெனரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   05 FEB, 2024 | 08:10 AM

image

மருந்து தட்டுப்பாடு குறித்த போலியான அச்சத்தை அமைச்சரவையில் ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அதனை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

2022 மே 30 ம் திகதி மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டின் சுகாதார துறை மூன்று வாரங்களிற்குள் வீழ்ச்சியடையும் என அமைச்சரவையில் அச்சத்தை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் அதனை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்துகளை அரசாங்க மருத்துவமனைக்கு விநியோகம் செய்தார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் உதவியில் எஞ்சியிருந்த நிதியை கூடிய விரைவில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை வகுக்குமாறு அவர் விடுத்த வேண்டுகோளை அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்ள மறுத்ததை தொடர்ந்தே சந்தேக நபர் இவ்வாறு நடந்துகொண்டார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தன்முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கருத்தில்எடுத்த நீதவான் இந்திய கடன் உதவியை பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து மருந்துகள் குறித்தும் உள்ளுர் மருந்து விற்பனையாளர் விநியோகித்த மருந்துகள் குறித்தும் (இந்த நிறுவனமே தரங்குறைந்த மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளது தரம்குறைந்த இம்யுனோகுளோபலின் மருந்தினால் பொதுமக்களிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/175576

  • கருத்துக்கள உறவுகள்

கெஹெலிய படுகொலையில் ஈடுபட்டுள்ளார் - அவருக்கு வழங்கப்படும் தண்டனை அரசியல்வாதியொருவருக்கு வழங்கப்பட்ட சிறந்த தண்டனையாக அமையவேண்டும்

Published By: Rajeeban

05 Feb, 2024 | 04:17 PM
image
 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் இம்யுனோகுளோபுளின்   மோசடி ஒரு படுகொலை நடவடிக்கை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனகரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தரம்குறைந்த இம்யுனோகுளோபுளினை இறக்குமதி செய்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் படுகொலையில் ஈடுபட்டுள்ளார் எனகருதவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் மருந்துகளை இறக்குமதிசெய்துள்ளதுடன் நாட்டின் அப்பாவி மக்களிற்கு அவற்றை வழங்கியுள்ளார் என ஜனகரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எத்தனை பேர் இதன்காரணமாக உயிரிழந்தனர் என்பது எங்களிற்கு தெரியாது ஆகவே இந்த விவகாரம் குறித்து நாங்கள் மேலும் ஆராயவேண்டும் இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லரின் படுகொலைகள் போன்றது இது என கருதவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிட்லரும் விசஊசியை செலுத்தி மக்களை கொன்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கெஹெலியவிற்கு வழங்கப்படும் தண்டனை இலங்கையில் அரசியல்வாதியொருவருக்கு வழங்கப்பட்ம மிகச்சிறந்த தண்டனையாக இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது நோய் அறிகுறிகளை பரிசோதிப்பதற்காக தடுப்புமருந்துகளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் செலுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக அரசியல்வாதிகள் மோசடி ஊழலில் ஈடுபடுவது குறித்து வெட்கப்படுவதில்லை சிறைக்கு சென்றபின்னரே அவர்கள் நோய்அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/175631

  • கருத்துக்கள உறவுகள்

கெஹெலிய இப்போது அரச மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் தனக்கு அந்த அரச மருந்துகள் வேண்டாம் என்றும் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கும்படியும் அடம் பிடிக்கிறாராம். இது எப்படி இருக்குது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹெலியவிற்கு எதிராக பொதுஜனபெரமுன நடவடிக்கை எடுக்குமா? சாகர தெரிவிப்பது என்ன?

Published By: RAJEEBAN   06 FEB, 2024 | 11:07 AM

image

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

தரம்குறைந்த இம்யுனோகுளோபிளின் மருந்தினை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர்  இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் இன்னமும் இறுதி தீர்ப்புகள் வெளியாகததால் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன எந்த நடவடிக்கையையும் எடுக்காது என சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விவகாரமாக மாறியுள்ளதால் கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல குற்றவாளியா இல்லை என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் அது இடம்பெறும்வரை கட்சி எதனையும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு முடிவிற்கு வரும்வரை நாங்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/175685

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

கெஹெலியவிற்கு எதிராக பொதுஜனபெரமுன நடவடிக்கை எடுக்குமா? சாகர தெரிவிப்பது என்ன?

Published By: RAJEEBAN   06 FEB, 2024 | 11:07 AM

image

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

தரம்குறைந்த இம்யுனோகுளோபிளின் மருந்தினை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர்  இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் இன்னமும் இறுதி தீர்ப்புகள் வெளியாகததால் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன எந்த நடவடிக்கையையும் எடுக்காது என சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விவகாரமாக மாறியுள்ளதால் கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல குற்றவாளியா இல்லை என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் அது இடம்பெறும்வரை கட்சி எதனையும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு முடிவிற்கு வரும்வரை நாங்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/175685

நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாடடார்கள். தலைமைக்கு எதிராகவே நீதிமன்ற குற்ற சாட்டு இருக்கும்போது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

எப்படி பாதுகாக்கலாம் , எப்படியான காரணங்களை சொல்லி சமாளிக்கலாம் என்று செயல்படுவார்களே ஒழிய எந்த எதிர் நடவடிக்கையும் இருக்காது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிவு செய்யப்பட்ட மருந்து நிறுவனங்களையும் விசாரணைக்குட்படுத்த முடிவு

10 FEB, 2024 | 08:39 PM
image

(நமது நிருபர்)

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருந்து விற்பனை  மற்றும் கொள்வனவு நிறுவனங்களையும் விசாரிக்கும் பணியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அண்மையில் மருந்து கொள்வனவு செய்த நிறுவனங்கள் மற்றும் அதனுடைய தொடர்புடையவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹியுமன் இம்யூனோகுளோபுலின் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மேற்படி கூட்டத்தில் ஆராயப்பட்டதோடு, பொலிஸார் சமீபத்தில் சட்டமா அதிபருடன் தங்களது விசாரணையின்போது முன்னெடுக்கப்பட்ட சட்ட ரீதியான விடயங்கள் சம்பந்தமாகவும் பகிரப்பட்டது.

ஹியுமன் இம்யூனோகுளோபுலின்  கொள்வனவின் போது நடைபெற்ற முறையகேடான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் பலர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/176060

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.